Wednesday 27 September 2017

மீண்டும் மிசெளரி

#மீண்டும்_மிசெளரி

அமெரிக்காவில் ஒரு தமிழ்ச்சங்கத்திற்கு முதலாண்டு நிகழ்ச்சி செய்த பின்பு அடுத்த ஆண்டும் அதே கலைக்குழுவினர் அதே ஊருக்குச் செல்வது மிக மிக மிக அபூர்வம்.. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்த ஒரே கலைக்குழு நாங்கள் மட்டுமே.! இம் முறை ஈரோடு மகேஷிற்கு பதில் சுட்டி அரவிந்த், நான் (வெங்கடேஷ்) கிறிஸ்டோபர், மேலூர் சசி என மூவரும் ஏற்கனவே அங்கு நிகழ்ச்சி செய்த பழைய முகங்கள் தான்.. இம்முறை எங்கள் அமெரிக்க பயணத்தின் கடைசி நிகழ்ச்சியாக அமைந்தது மிசெளரி நிகழ்ச்சி.!

அதற்கு முன்பு நாங்கள் நிகழ்ச்சி செய்த ஊர் கான்ஸாஸ் அதே மாநிலம் தான் என்றாலும் நாங்கள் இருந்த கான்ஸாஸ் சென்னை என்றால் மிசெளரி திருவனந்தபுரம்.. மேலும் கான்ஸாஸ் நிகழ்ச்சி காலையிலேயே இருந்தது.. மாலை மிசவுரியில் இருக்கவேண்டும் கடந்த முறை விஸ்கான்சினுக்கு எங்களை மின்னசோட்டாவில் இருந்து அழைத்துச் சென்ற சிவானந்தம் சாரும் சுந்தரும் மீண்டும் இந்த ஆண்டும் உதவினார்கள் அவர்கள் போகும் பாதை வேறு..!

எங்களை இறக்கிவிட்டு சென்றால் 150 மைல்கள் அதிகம் இருப்பினும் அதை பொருட்படுத்தாது உதவினார்கள்.. கான்ஸாசில் நிகழ்ச்சி பெரு வெற்றியடைய அவர்கள் அன்புப்பிடியில் இருந்து விலகி கிளம்ப அரைமணிநேரம் தாமதம் இருப்பினும் 7 மணிக்கு மிசவுரியில் இருக்க வேண்டிய நாங்கள் இந்த தாமத்திலும் 7:15 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வந்தோம்.. வரும் போதே அமர்க்களமாய் தமிழர் பண்பாட்டுப்படி வாழையிலை விருந்து நடை பெற்றுக் கொண்டிருந்தது.. வந்த களைப்பில் உண்டோம்.!

அப்படியே தமிழகத்தின் பாரம்பரிய அறுசுவை உணவுகள் ஒரு விநாடி நாங்கள் இருப்பது செயிண்ட் லூயிசா சென்னையா என்ற குழப்பம் ஏற்பட்டது.. கடந்த ஆண்டே இங்கு வந்ததால் தமிழ்ச்சங்கத்தில் அனைவரும் வந்து அன்போடு விசாரித்தனர்.. அறுசுவை விருந்து முடிந்து நகைச்சுவை விருந்து துவங்கியது.. பெரும்பாலும் அமெரிக்க மண்ணில் நடக்கும் எந்த தமிழ்விழாக்களும் 8 மணிக்கே முடிந்து விடும் ஆனால் எங்கள் நிகழ்ச்சி துவங்க 8:30 மணி ஆகியும் கூட்டம் கலையாமல் அப்படியே இருந்தது.. எங்கள் பயணச் சிரமத்தை

நண்பர் விஜய் ஏற்கனவே அறிவித்து இருந்ததால் அனைவரும் எங்களுக்கு அன்பு செலுத்தும் விதமாக அங்கிருந்தனர் என்பதை பின்னர் தெரிந்து நெகிழ்ந்தோம்.. இம்முறை அரவிந்த் எங்களோடு சேர்ந்து கொள்ள அவரது புல்லாங்குழல் இசையில் துவங்கி கிறிஸ்டோபர் & சசியின் நகைச்சுவையில் அதிர்ந்து, நானும் அரவிந்தும் ஆடிய காம்பினேஷன் காதல் கதைக்கு குதூகலித்து, மிகச் சரியாக 10 மணிக்கு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நிறைவடைந்தது.

இரண்டாவது முறையும் செஞ்சுரி அடித்த பேட்ஸ்மேனின் பூரிப்பில் நாங்கள் நிற்க இரு முறையும் எங்களுக்கு வாய்ப்பளித்த கேப்டனாக விஜய் மணிவேல் பெருமிதப்பட மறுநாளே சிகாகோ செல்ல வேண்டும் என்பதால் விரைந்து விடை பெற்றுக் கொண்டு திரும்பினோம். அடுத்த நாள் காலையில் விஜய் வீட்டில் வழக்கம் போல மதுரை ஸ்டைல் சாப்பாடு.. மதிய உணவை அழகாக பேக்கிங் செய்து தந்து வழியனுப்பினார்கள்.. இவ்வளவு அவசர பயணத்திலும்..

கடந்த முறை போகாத செயிண்ட் லூயிஸ் ஆர்ச்சுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டிவிட்டு காரை கிளப்பினார் விஜய்.. அங்கு அந்த ஆர்ச் புதுப்பிக்கும் பணி நடந்துவருவதாக சொன்னார்.. சிலு சிலு காற்றடிக்கும் மிசெளரி ஆற்றங்கரையில் ஒரு வாக் போய்விட்டு கிளம்ப மனமின்றி காரில் ஏறியிருந்தோம்.. கார் மெல்ல ஒரு வளைவில் திரும்புகையில் வானவில் போல தெரிந்த செயிண்ட் லூயிஸ் ஆர்ச் எங்களை மிசெளரிக்கு வரவேற்கும் வரவேற்பு வளைவாக தெரிந்தது.

பை பை மிசெளரி மீண்டும் வருவோம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த எனச் சொல்லிக் கொண்டே இரண்டாம் முறையும் வெற்றியோடு திரும்பினோம் மிசெளரி தமிழ்ச்சங்கத்தினர் அனைவருக்கும் நன்றி!

Thursday 6 July 2017

வெங்கியின்..

1. எதெல்லாம் சொன்னால் வெட்கப்படுவாயோ
   அதெல்லாம் சொல்ல ஆசை...
   நீ வெட்கப்படும் அழகுக்காக ....

2. எனக்கான அரிசியிலும் உன்
    பெயரே எழுதப்பட்டிருக்கும் ...

3. உன் நகப்பூச்சு கூட பெருமூச்சு
    தந்து விடுகிறது எனக்கு..

4. சாபமிடுகிறவர்களை கெஞ்சி கேட்கிறேன்...
   அவள் அறை கண்ணாடியாய் மாற
    என்னை சபித்துவிடுங்கள்..

5. பெருமை என் முகத்தில் தெரிந்தால்
    உன் பெயர் உச்சரிக்கப்படுகிறது என அர்த்தம் ....

6. கோபித்து கொள்ளும் போது கோபமா?
    என்று கேட்பாய் கோபம் போன இடம் தெரியாது....

7. ஞானப்பழம் என்பது நீ கடித்து தருவதே...

8. உன்னிடம் தோற்று போவதற்காகவே
    சீட்டு விளையாடுகிறேன்... சூதாட்டம் ....

9. நடைபிணம் என்பதற்கு அர்த்தம் நீ
    விடுமுறைக்கு ஊர் சென்றபோது தெரிந்தது....

10. ஓடும் பேருந்தில் நெருக்கத்தில் நீ
      இருந்தாய் கிறக்கத்தில் நான் இருந்தேன் ...

11. நீ நாவல் பழம் சாப்பிட்ட அழகு ஊரில்
      எல்லோர் மனதிலும் படிந்தது....
      Bluetooth .....

12. நான் பார்க்காத போது நீ பார்த்ததை..
      நான் எப்போது பார்ப்பது......

13. உன் மோதிரத்தில் கல் இருந்தாலும்
     கடிகாரத்தில் முள் இருந்தாலும்
      உறுத்துகிறது எனக்கு ...

14. ஆற்றங்கரையில் நாகரிகங்கள் பிறந்தது..
      எனக்கென்னவோ உன் அருகில் தான்...

15. மாமரத்தை பார்த்துவிட்டு என்னை பார்த்தாய்....
     அத்தனை மாங்காயும் பறித்து தந்துவிட்டேன்...
      ஒரே கண்ணில் எத்தனை மாங்காய் !!!!

17. சில நேரங்களில் எனக்கான உத்தரவு
      உன் பார்வையிலேயே கிடைத்துவிடுகிறது....

18. ப்ளீஸ்...... என நீ கெஞ்சுவதும்
      கொஞ்சுவது போல் தான் இருக்கிறது ....

19. பிளேடினால் பென்சில் சீவுகிறாய்...
      நான் திகில் படம் பார்த்து கொண்டிருக்கிறேகன்...

20. உன் எரிக்கும் பார்வையில்
      அணைந்து விடுகிறது என் சிகரெட்.....

21. உன் விரல் கடிக்கும் குழந்தைகள்
     இனிப்பை விரும்புவதில்லை...

22. உன் மயிர் கற்றையை இழுத்து விளையாடுகிறது
      குழந்தை... ரசித்தேன் மழலையும்,குழலையும்

23. நீ சைக்கிள் ஓட்ட பழகினாய்
     தெருவுக்குள் வசந்தம் வீசியது...

24. சந்திரன் பகலில் வருவதில்லை என்பதை
       உனைக்காணும் வரை நம்பிக்கொண்டிருந்தேன்..

25. உன் தலையில் இருந்து உதிரும் பூக்களெல்லாம்
      தற்கொலை செய்து கொள்கின்றன...

26. நீ ஊதுவதாக இருந்தால் ஒவ்வொரு
      நொடியும் என் கண்ணில் தூசி விழவேண்டும்....

27. சதுரங்கம் ஆடும்போது நீ யோசிக்கும் அழகு
      என் எல்லா காய்களையும் வீழ்த்தி விடுகிறது ...

28. இராமருக்கு ... குல்லா...
      பாபருக்கு......... நாமம்...
      அயோத்தி......

29. சந்தோஷப்படுத்திய முகம் சலிப்பாகிவிடுகிறது......
      திருமணத்தில்.....

30. என்ன,ஏன்,எப்படி,எதுக்கு, எங்கே,எப்போ....
      இத்தனையையும் கண்ணால் கேட்டிட
      உன்னால் தான் முடியும்...

31. உன்னை கண்டுபிடித்தேன்
      என்னை தொலைத்துவிட்டேன்...

32. பனித்துளி அமர்ந்த ரோஜா நினைவுக்கு வருகிறது....
       உன் மேலுதட்டின் மேல் வியர்வைத்துளி...

33. உன்னைப்பற்றி தோன்றிய தெல்லாம் எழுதி விட்டாலும்
      புதிதாக தோன்றிக்ககொண்டே இருக்கிறது ....

34. அனேகமாக உன் தெருவில் குடியிருக்கும்
      அனைவரையும் நீ கவிஞர்களாக மாற்றி விட்டாய்...

35. என் உயிர் வரை இனிக்க
      உன் ஒரு முத்தம் போதும்..

36. செல்லச்சண்டையிலும் உன்னை வெல்ல
      துணிச்சலில்லை.. கொல்ல நினைத்திடுவேன்
      மெல்ல நீ அழுதால்...

37.நீ இளநீர் குடிப்பதை பார்த்தேன்.. இனி நீ
     இளநீர் குடிப்பதை மட்டுமே பார்ப்பேன்...

38. கோவிலுக்குள் நீ வரும் போது இறைவன்
      எனக்கு இரண்டாம் பட்சம் ஆகிறான்....

39. எனக்குள் குவிந்து கிடக்கிறது...
       நீ வீசி சென்ற பார்வைகள்....

40. உன் பார்வையில் பொருள் இருக்கிறதா தெரியவில்லை
      ஆனால் எனக்கான அருள் இருக்கிறது ...

41. உன் பற்களுக்கிடையே அரைபடும் போது
      மிக மிக மகிழ்ந்திருக்கும்.... கரும்பு

42. ரசனையான வாழ்க்கை வேண்டும்...
     அதை ரசித்து வாழ நீ தான் வேண்டும் ..

43. கண்களை கட்டிக்கொண்டு நீ கண்ணாமூச்சி
      ஆடுகையில் பட்டாம்பூச்சி பறப்பதைப் போல் உள்ளது...

44. நீ முகம் துடைத்து கொள்ளும் கைக்குட்டை
      மீது பொறாமை வருகிறது ..

45. நீ உதடு சுழிக்கையில் மச்சம் நகர்கிறது..
      என் உயிர் மலர்கிறது ....

46. எனக்கு நீ தாயாவாய் என்றால்..
      உனக்கு நான் நாயாவேன்...

47. கேள்விக்குறி போன்ற உன் காது மடல்களுக்கு
        நான் என்ன பதில் சொல்வது...

48. நீ பூ பறிக்கையில் பறித்த மலர் உயிர் பெற்றது..
      மற்றவை செடியிலேயே மூர்ச்சையுற்றது...

49. உன்னை வரவேற்கும் அலங்கார வளைவு.....
       நீ வந்த போது வானில் வானவில்...

50.என் ஆசை.. உன்னோடு நான்....
     பெரு மழையில்... ஒரு குடையில்....

51. நிலா பார்த்து வெகு நாட்கள் ஆகிறது...
     எனக்கு தான் நீ இருக்கிறாயே...

52. மலர்கள் சிரிக்கும் என்பதை நீ
      புன்னகைக்கும் போதுதான் நம்பினேன்....

53. அழகாய் நீ போட்ட கோலத்தை மழை வந்து
     அழித்தபோது மழையை வெறுத்தேன்...
     அடுத்த நிமிடம் அதை மறந்து மழையில் நீ
     நனைந்த போது மழையை ரசித்தேன் ...

54. அம்புலிமாமா கதைகளில் வருவது போல்
      என் உயிர் உனக்குள் இருக்கிறது ...

55. கொள்ளை அழகோடு ஒரு குழந்தையை தூக்கி வந்தாய்..
       நான் எந்த குழந்தையை ரசிப்பது!!!

56. உன் படுக்கையறையில் நீ தூங்குவது உனது கட்டில்..
      என்னை பொறுத்தவரை அது தொட்டில்......

57. வாயருகே எதை கொண்டு சென்றாலும் வாய் திறக்கும்
      குழந்தையைப்போல் உன்னைப் பற்றி எது சொன்னாலும்
      என் உள்ளம் திறக்கிறது.....

58. உன் மெளனத்தின் சப்தங்களை
     என் செவி மட்டுமே அறியும் ...

59. நீ இமைக்க மறந்தபோதெல்லாம்
      என் இதயம் நின்று ஓடுகிறது ...

60. நீ ஊசியில் நூல் கோர்த்த போதே
      என்னை தைத்து விட்டாய்....
.
61. வியக்க வைக்கிறாய்... 
      உன் புருவங்களால் பேசி...

62. உன் முகம் கண்டுதான்
      என் பொழுது விடிகிறது..

63. நீ பாவாடை தாவணி உடுத்தியதும் அது
      தேவதைகளுக்கான ஆடையானது...

64. எதெல்லாம் சொன்னால் வெட்கப்படுவாயோ
     அதெல்லாம் சொல்ல ஆசை...
      நீ வெட்கப்படும் அழகுக்காக ....

65.பெருமை என் முகத்தில் தெரிந்தால் உன் பெயர் 
      உச்சரிக்கப்படுகிறது என  அர்த்தம்.

உலகின் மிக சிறந்த இனிப்பினை முதலில் யார்
ருசிப்பது இது தான் அந்த போட்டி..! விமானம்
ஏறி பறந்தார் ஒருவர்..! ராக்கெட் ஏறி விரைந்தார்
ஒருவர்..! அவரவர் வசதிக்கேற்ப வேகமான வாகனங்களில்
விரைந்தனர் பலர்...! நான் மட்டும் உன் இதழை
சுவைத்து தட்டி சென்றேன் பரிசினை...!

நீ வந்து பார்க்கும் போது பரிசாக தருவதற்கு கொட்டும்
அருவியை மலை முகட்டில் நிறுத்தி வைத்து பூட்டி சாவி செய்தேன்..
மொட்டு மலராதிருக்க ஒரு சாவி, மழலை பேசாதிருக்க ஒரு சாவி,
தென்றல் வீசாதிருக்க ஒரு சாவி, வான்மதி வளராதிருக்க ஒரு சாவி,
வானவில் வளையாதிருக்க ஒரு சாவி... இயற்கை படைத்த அனைத்திற்கும்
சாவிகள் செய்து உன்னிடம் கொடுப்பதற்கு ஓடோடி வந்து காத்திருக்கிறேன்..
இதோ என்னிடம் வந்து நின்று எங்கே என் பரிசு என காதலுடன்
கேட்கிறாய்.! உன்னை பார்க்கும் ஆவலில் விரைந்து வந்த நான் சாவிகளை
எங்கோ தவற விட்டுவிட்டேன்..ஒரு கணம் தயங்கி பிறகு...
உன் பேர் சொன்னேன்... எல்லாம் திறந்து கொண்டன....

நீ என்னவனான பின் பூட்டிய அறைக்குள் நம் அந்தரங்கங்கள்..
அரங்கேறியது..! பின்னிப் பிணைந்த சர்ப்பங்களாய் முகிழ்ந்த
போதும் ஆரத்தழுவி ஆயிரம் முத்தங்கள் இட்ட போதும் எனக்கு
திருப்தி இல்லை...! காதலிக்கும் போது தெருமுனை இருட்டில்
அரைவினாடி தந்த முத்தத்தை போல்....

என் மார்பில் மெல்ல உன் தலையை சாய்த்து..
புரண்டு விழுகிற கூந்தலை புறந்தள்ளி
விரல் நுனிகளால் உன் காது மடல் வருடி உன்
பேச்சுக்கு செவி சாய்த்து, உன் சோகங்களை..
பகிர்ந்து, உன் காயங்களுக்கு மயிலிறகு சொற்களால்
மருந்திடும் சுகம் ஆயிரம் கலவியிலும் காணாத இன்பம்...

இனிப்பு துணுக்குகள் வாயோரம் ஒட்டியிருக்க..
நான் சாப்பிடவே இல்லை என அடம் பிடிக்கும்..
குழந்தையை போல் நீ உன்னை...
வெளிபடுத்துகிறாய் சில் நேரங்களில் ...

இரு கரங்களால்   உன் தலையில் நீயே
பூச்சூடிக் கொள்கையில் உன் இதழ்களில்
கவ்வி பிடித்திருக்கும் கொண்டை ஊசியாய்
நான் மாறிவிட ஆசை..

Monday 5 June 2017

🍷🍷 டிரங்கன் பிங்கிகள் 🍺🍺

ரவுண்ட் 1

ஏ.வி மீடியாவில் பணிபுரிபவன்.. திருமணமானவன் பெரிய அழகனெல்லாம் கிடையாது என்றாலும் ஆள் கிருஷ்ண பரமாத்மா ராசி உள்ளவன்.. அவ்வையார் இருந்திருந்தால் "ஏ.வி செல் போன் அடித்து ஆண்குரல் கேட்பதரிது" எனப் பாடியிருப்பார்.. எப்படிடா இவ்வளோ சிநேகம் என்றால் புன்னகை மட்டுமே பரிசாகக் கிடைக்கும்.. ஆனால் ஆள் சிறந்த படிப்பாளி வடை கட்டித் தரும் பேப்பர் முதற்கொண்டு வாசிப்பான்.. விஷய ஞானம் அதிகம்.

அவன் அறை எப்போதும் புத்தகங்களால் பிதுங்கி இருக்கும்.. எந்த சப்ஜெக்ட் என்றாலும் டக்குனு ஒரு அரைமணி நேரமாவது சுவாரஸ்யமா பேசுவான்.. அந்தளவு திறமைசாலி.. இது தான் எல்லாப் பெண்களையும் அவன் பக்கம் ஈர்க்கின்றது என்பார்கள். எல்லாப் பெண்களையும் பிங்கி என்று தான் அழைப்பான்.. ஏண்டா எல்லார் பேருமா பிங்கி என்றால் இல்லடா போனில் அழைக்கும் போது பேர் மாத்தி சொல்லிட்டா அப்புறம் ரிலேஷன் ப்ரேக் ஆகிடும்.

இதுவே பொதுவா எல்லாரையும் பிங்கி என்றழைத்தால் பிரச்சனை வராது.. என்பான் புத்திசாலி.! சரி.. பல் இருக்கவன் பட்டாணி சாப்பிடுறான் அதுக்கென்ன இப்போ என்கிறீர்களா? இனிமே தான் விஷயமே அவனது மங்கிகளில் சாரி பிங்கிகளில் சில டிரங்கன் பிங்கிகள் இருக்கிறார்கள்.. வாரே வாஹ் பெண்களுடன் அமர்ந்து மது அருந்தும் அரிய வாய்ப்பு பெற்றவன் ஏவி எனப் பொறாமை எழுகிறதா! உங்களுக்கு எல்லாம் ஜாலியாத் தாண்டா தெரியும் எனக்கு தான் தெரியும் நான் படும் கஷ்டம் என்பான்.. எப்படிடான்னு கேட்டதுக்கு..

டிரங்கன் பிங்கிகள் கிட்ட மிதவாதி, தீவிரவாதி, அதி பயங்கரவாதின்னு மூன்று வகைகள் இருக்குன்னு ஒரு நாள் சொன்னான்.. அப்படியே வரிசைப்படுத்து பார்ப்போம்ன்னு கேட்டதுக்கு அவன் மேல பாவமும் வந்தது பொறாமையும் வந்தது.. சரி இனி அவனைப் பேசவிடுவோம்

மிதவாத பிங்கி: நாம என்ன விஸ்கி, பிராந்தி, ரம்முன்னு என்ன குடிச்சாலும் அவங்க ஒயின் மட்டுமே சாப்பிடுவாங்க ஜஸ்டின் ஃபிபரில் ஆரம்பித்து ஜனதா சர்பத் வரை அலசுவார்கள் செலவெல்லாம் அவங்க செலவு தான்.. சில நேரம் உரிமையோடு நீ தான்பா இன்னிக்கு செலவுன்னு சொல்லி கூப்பிடுவாங்க.. நம்மோடு பேசும் சமயம் அவங்களோட கணவரோ / பாஃபிரண்டோ போனில் அழைத்தால் கூட "யா அயாம் டிரிங்கிங் ஒயின் வித் ஏவி என நேர்மையாகச் சொல்வார்கள்.. ஏன் உங்களவருடன் இதை அருந்தலாமே என அவர்களிடம் கேட்டதற்கு.. 

முறையே இப்படி பதில்கள் வந்ததாம்.. அய்யே அது ஃபுல்லா குடிச்சிட்டு மட்டையாயிடும்.. அவனுக்கு சப்ஜெக்ட் நாலேட்ஜே இல்லப்பா போட்டு அறுப்பான்.. நம்ம டேஸ்ட்டும் அவர் டேஸ்ட்டும் வேற வேற ஒத்தே வராது.. இத சாப்பிட்ட உடனே அய்யாவுக்கு ரொமான்ஸ் வந்துடும் மேல பாய்ஞ்சிருவான்.. இந்த ரீதியில் போகும் அவர்களது பதில்கள்.. பெரும்பாலும் கிளம்பும் போது ஒரு செல்ல அணைப்பு தந்துவிட்டு செல்வார்கள்.. சில நேரங்களில்..

கார்/ ஸ்கூட்டர் சாவியையோ மொபைல் போனையோ சின்ன பர்சினையோ டேபிளில் மறந்துவிட்டு சென்று திரும்ப வந்து அசட்டு புன்னகையுடன் இதுக்கே ஓவராயிடுச்சுடா என்று நம் கன்னத்தை தட்டி எடுத்துப் போவார்களாம். திடீர் என இவர்கள் பீருக்கு பிரமோஷன் ஆவார்கள் அதற்கு பின்னால் ஓவர் எமோஷன் ஏதேனும் இருக்கும்.. அவர்களே கேட்காமல் சொல்லும் வரை காத்திருக்க வேண்டும் நாமாகக் கேட்டால் ரிலேஷன் கட் ஆகிவிடும்.. 

இவ்வேளைகளில் பொறுமையாக இருந்து அவர்கள் பிரச்சனையை காது கொடுத்து கேட்டு ஆறுதல் சொல்லவேண்டும்.. நம் தோளில் சாய்ந்து "அவனுக்கு நான் அந்தளவு தேவையில்லாம போய்ட்டேனா" என புலம்புவார்கள் நமக்கு அதிர்ஷ்டமிருந்தால் சில முத்தங்கள் கூட கிடைக்கலாம். முக்கியமான விதி என்னவென்றால் நாம் அதற்கு முயற்சிக்க கூடவே கூடாது அது தானா நடக்கும்.. அவர்களைக் கன்னத்தில் தட்டலாம் தோளை அழுத்தலாம் நம் கைகள் வேறெங்கும் போய்விடக்கூடாது.! பீகேர்ஃபுல்..

அடுத்து தீவிரவாத பிங்கிகள்ன்னு ஆரம்பிச்சான் யோவ் செகண்ட் பார்ட் எழுது இவ்வளவு நீளமா எழுதுனா ஃபேஸ்புக்கில் படிக்கிறவங்க திட்டுவாய்ங்க என்றதும் சரிடா பார்ட்2 எழுதறேன் ஆனா அதோட முடிஞ்சிடுவேன் என்றான்.

பின் குறிப்பு : அந்த ஏ.வி நீங்க தானே என்னும் அசட்டுக் கேள்விகள் தடை செய்யப்படுகிறது..!

Thursday 25 May 2017

ஆனந்த தீபாவளி..

இந்த வறுமை காலத்தில் புண்பட்ட எங்கள் இதயத்தையும் பசி வாட்டும் வயிற்றையும் நாங்கள் சமாளித்தது ஒரு சுவையால்.. ஆம் அது தான் நகைச்சுவை.! என் அம்மா சரியான கிண்டல் பேர்வழி அலட்டிக் கொள்ளாது சட்சட்டென அவர் வாயில் இருந்து வரும் கமெண்ட்டுகள் அந்த காலத்தில் ஃபேஸ்புக் இருந்திருந்தால் ஒவ்வொன்றுக்கும் மினிமம் 2k லைக்குகள் வாங்கியிருப்பார் அந்தளவிற்கு குறும்பும் லொள்ளும் தெறிக்கும்.


என் பாட்டியே அவ்வளவு டைமிங்காக கவுண்ட்டர் கொடுப்பார்.. எங்கள் மணி மாமாவும் நக்கல் நையாண்டியில் டாக்டரேட் வாங்கியவர். அதிலும் எங்கள் சாந்தி சித்தி இருக்காங்களே அவர்கள் இமிடேட் மகாராணி.. ஒரு ஆளை பார்த்துவிட்டால் அவர் எப்படி நடப்பார் எப்படி பேசுவார் என்பதை எங்களுக்கு நடித்துக் காட்டுவார். பாட்டி வீடே கைத் தட்டித் தட்டி கண்ணில் நீர் வர சிரித்து அதிரும். 


அந்த சேலத்து ஃபார்முலாவைத்தான் மதுரையிலும் கடை பிடித்தோம்.  வறுமை மட்டும் போஷாக்காய் வளர்ந்து இருக்கும் எங்கள் வீட்டில் இந்த நோஞ்சான்கள் அடித்த லூட்டியில் தான்... வறுமை பாணபத்திரரைக் கண்ட ஹேமநாத பாகவதரைப் போல ஓடியிருக்கும். தம்பி பாலு பல்லைக் கடித்தபடி தேங்காய் சீனிவாசன் ஸ்டைலில் புதுப் புது வார்த்தைகள் சொல்லுவதில் கில்லி.. தங்கை உமா ஜுனியர் சித்தி. கடைக் குட்டித் தம்பி குமரன் சைலண்ட் டைனமிக் கமெண்டர்.


இவர்கள் எல்லாம் எனக்கு கற்றுக் கொடுத்ததில் தான் எனக்கு கொஞ்சமேனும் ஹ்யூமர் சென்ஸ் வந்திருக்கலாம்.. பாலு கம்சிலி கவுசிலி கக்கூசிலி.. என்னும் சொற்றொடரை அடிக்கடி சொல்லுவான் ஹவுஸ்மிங்கி, மங்கிஸ் த மேட் ஆஃப் த ஜிஞ்சர் பேர்ட், இவை எல்லாம் அவனது ஃபேமஸ் டயலாக்குகள்.. ஆண்டுகள் 20 ஆனாலும் இன்றும் நினைவில் வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசி போல பதிந்திருக்கிறது.


தீபாவளிக்கு வருவோம்.. புது சட்டை அப்போது குமார்ஸ் என்னும் கடை மதுரை அம்மன் சன்னதியில் இருந்தது 40 ரூபாய்க்கு சட்டை கிடைக்கும்.. அது மட்டும் தான் இருப்பதில் நல்ல பேன்ட்டாக துவைத்து வைத்துக் கொள்ளுவோம் அம்மாவுக்கு நூல் சேலை தங்கை வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் அவளுக்கு தாவணி பாவாடை செட் கிடைத்துவிடும்.. அப்பா ஒரு வேட்டியோடு திருப்தியாவார்.


364 நாட்களுக்குப் பின் காலை உணவாக இட்லி தோசை கிடைக்கும் ஒரே நாள் தீபாவளி.!அம்மா இரண்டு நாட்களுக்கு தேவையான அளவு மாவு ஆட்டி வைத்து விடுவார்.. வீட்டில் தங்கை உமா மட்டும் எப்போதும் அசைவம் பெரிதாக விரும்பி சாப்பிட்டதில்லை.. ஆனால் நான், தம்பி, அப்பா மூவரும் நன்கு சாப்பிடுவோம்.. அதிலும் பாலு தற்போது அசைவத்தை கைவிட்டு 10 ஆண்டுகள் ஆகிறது என்பது எட்டாவது அதிசயம்.


கோழி எடுக்க மாட்டார்கள்.. அம்மாவிடம் "வருஷத்துக்கு ஒரு நாளுடி பிள்ளைகளுக்கு ஆட்டுக்கறியே போடு" என்பார் அப்பா.. கடந்த காலத்தில் வாராவாரம் ஆரவாரம் என வாரம் 3 முறை அசைவம் எடுத்தவர் அல்லவா..! அந்த பழம் ஞாபகத்தில் அப்படிச் சொல்லுவார்.. அம்மா மட்டனில் ஒரு கால் கிலோவை குறைத்து ஒரு கிலோ சிக்கனும் வாங்கியிருப்பார் அப்பாவுக்கு தெரியாமல்..அது ஏன் தெரியுமா.? இருங்க தீபாவளிக்கு முன் தின இரவில் இருந்து வர்றேன்


தீபாவளி அன்று முதல் நாள் மழை பெய்தால் வீடு ஓழுகும் ஆங்காங்கே பாத்திரத்தை வைத்துவிட்டு அதில் விழும் நீரின் சத்தத்தை ஜலதரங்கம் போல பாவித்து விடிய விடிய பேசிக் கொண்டிருப்போம் மழை நின்று அதிகாலை ஆங்காங்கே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்கும்.. அம்மா நனைந்த விறகுகளோடு அடுப்படியில் ஐக்கியமானால் கிளம்பும் புகையும் தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டதால் எரிச்சலும்..


கண்களை எரிக்க நான் தம்பிகளுக்கு எண்ணெய் தேய்த்துவிட அவர்கள் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்களைப் போல போஸ் கொடுக்க வீடே சிரிப்பலையில் அதிரும்.. ஒரு வழியாக குளித்து புத்தாடை (சட்டை) அணிந்து அமரும் போது அப்பா ஸ்வீட் கடை சம்பந்தமாகத் தான் அலைபவர் என்பதால் எப்படியாவது முதல் நாள் இரவே அவர் நண்பர்களைப் பார்த்து ஒரு கிலோ ஸ்வீட் அரைக்கிலோ காரம் வாங்கி வந்திருப்பார்.


அதை பிரித்து கொடுக்க அதை சாப்பிடுவதற்குள் சூடாக இட்லிகள் தலைக்கு கறிக்குழம்பு ஊற்றி குளித்து வரும்.. அரட்டையோடு சாப்பிட அடுத்த கட்ட உற்சாகம் கரை புரளும்.. எல்லாருக்கு கறி கொஞ்சம் தந்தாலே முக்கால் கிலோ கறி ஒரு முறை தான் வரும்.. 2வது முறை நாம் இட்லிக்கு வெறும் குழம்பு தான்.. ஏக்கத்துடன் பார்ப்போம்.. அப்போது தான் அடுத்த ரவுண்ட் சிக்கன் வரும்.. இப்போ புரியுதா..என அம்மா அப்பாவை பார்க்க அப்பா கண்கலங்கி ஆமோதிப்பார்.


உதிரி வெடி இரண்டு பாக்கெட் தான் அது தான் அன்றைக்கு மொத்த வெடியும்.. வெளியே கிளம்பினால் தெருவெங்கும் சுற்றி வெடிக்க பயப்படும் வசதிபடைத்த பயந்தாங் கொள்ளிகளின் வெடிகளை வெடித்து மதியம் வீடு வந்து மீண்டும் தோசை கறிக்குழம்பு சாப்பிட்டு தூங்கி.. மாலை டூரிங் டாக்கிசில் ஏதாவது ஒரு செகண்ட் ரிலீஸ்..


ரஜினி அல்லது கமல் படம் பார்த்துவிட்டு இரவு வீடு திரும்பி தெருவில் வெடிக்காத வெடிகளை சேகரித்து வைத்து இருப்போம் அந்த வெடிகளை கொளுத்தி கை கழுவி அமர்ந்து மீண்டும் இட்லி குழம்புடன் உணவு.. தூங்கப் போகையில் மீண்டும் மழை வந்துவிட்டால் நான் தாளம் போட்டு பாட ஒழுகும் கூரை பின்னணி இசைக்க கச்சேரி களை கட்டும். அப்போது தம்பி தங்கைகளுக்காக பேசியது தான் என் முதல் மிமிக்ரி மேடை.. வசதிகள் ஏதுமில்லை தான் ஆனால் அந்த தீபாவளி தான் வசந்த காலம் அது தந்துவிட்டு போன இன்பம் எக்காலமும் வாராது.


நிறைந்தது..

டாஸ்மாக் கி.பி 2050

அந்த கட்டிடத்தின் எதிரே நீண்ண்ண்ண்டடடட கியூ நத்தையைப் போல நகர்ந்து கொண்டு இருந்தது.. கட்டிடத்தின் உச்சந்தலையில் டாஸ்மாக் என ஆங்கிலத்திலும் தமிழிலும் லேசர் போர்டு நிறங்களை உமிழ்ந்து கொண்டிருந்தது.. ச்சே என்ன பொழப்புடா இது எப்போ நம்ம முறை வந்து எப்போ வாங்கிகிட்டு எப்போ வீட்டுக்கு போவது??

ரவி அலுத்துக் கொண்டான்.. "சார் என்னமோ நீங்க மட்டும் தான் கஷ்டப்படுறா மாதிரி சொல்றிங்க அப்போ என்னை நினைச்சுப் பாருங்க" என்றான் பின்னாலிருந்தவன்.. "குவார்ட்டர் 450 ரூபா இருந்துச்சு இப்போ 600 ரூபா ஆயிடுச்சு ஒரு ஆளுக்கு ரெண்டு குவார்ட்டர் மட்டும் தான் அதுவும் ஆதார் கார்டு இருந்தாத் தான்"

அநியாயம் சார் என்றார் ரவிக்கு முன்னால் நின்றவர் தன்பங்கிற்கு.. இதுல கடைகளை வேற குறைக்கப்போறாங்களாம்... என்றார் இன்னொருவர் கவலையாக.. என் ஒய்ப் மகளிர் டாஸ்மாக்கில் நின்னு இருக்கா ஆனா உரிய ஸ்டாக் இல்லாததால் ஒரு குவார்ட்டர் தான் தந்தாங்களாம் அந்த ஏரியா பெண்கள் பூரா மறியல் பண்றாங்களாம்..

இப்படி ஆளாளுக்கு புலம்ப க்யூ வேகமாக நகர ஆரம்பித்தது.. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சிலர் கள்ளத்தனமாக நான்கு குவார்ட்டர்கள் பெற்றுக் கொண்டனர்.. ரவி சேல்ஸ் கவுன்ட்டரை நெருங்கி தன் ஆதார் கார்டையும் டெபிட் கார்டையும் நீட்டினான்.. ஸ்வைப் செய்து இரு குவார்ட்டர் பாட்டில்களை பில்லோடு தந்தார்கள்.. 

கிளிங் என மெசஞ்சர் ஒளிர பார்த்தான் அவன் மனைவி தான்.. "இப்போ தான் நானும் ரெண்டு குவார்ட்டர் வாங்கினேன் வந்து பிக்கப் பண்ணிக்க முடியுமா என லொகேஷன் மேப்போடு செய்தி அனுப்பியிருந்தாள்.. வர்றேன் என பதிலிவிட்டு.. குவார்ட்டர் பாட்டில்களை காரில் பத்திரமாக வைத்து காரை கிளப்பி மனைவி இருக்கும் இடம் போய் சேர்ந்தான்..

அவளும் 2 குவார்ட்டர் பாட்டில்களோடு வண்டி ஏறினாள்.. அப்பாடா இன்னிக்கு 4 குவார்ட்டர் கிடைச்சதே.. என்றான் பெருமிதமாக.. ஆமாம் நீங்களும் ஏதோ பெரிய கம்பெனி ஜெனரல் மேனேஜர்... ஏதாவது ஒரு அரசியல்வாதி மூலமா டெய்லி 2 ஃபுல் வாங்க துப்பில்ல 2 ஃபுல் இருந்தா நம்ம குடும்பமே குடிச்சு சந்தோஷமா இருக்கலாமே!

நான் என்ன உங்க கிட்ட நகை நட்டா கேட்டேன்.. 2 ஃபுல் தானே என்றாள் கோபத்துடன்.. இரும்மா தெரிஞ்ச சென்ட்ரல் மினிஸ்டர் பி.ஏ. கிட்ட பேசிட்டேன் அடுத்த வாரம் ஒரு சிபாரிசு மெயில் அனுப்பறாராம்.. அது கிடைச்சா நமக்கு டெய்லி 2 ஃபுல் கிடைச்சிடும் என்றான்.. ஹை நிஜமாவா சூப்பர்.. டியர் இந்த சந்தோஷத்தை செலிபரேட் பண்ண..

இப்பவே நாம ஒரு குவார்ட்டர் அடிச்சுடலாமா.. என்றாள்! ஏய் அதுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு.. அந்த ஃபுல் வந்ததும் கொண்டாடலாம் நாட் நவ்.. என்ற போது செல்லில் அழைப்பு கவுதம் என ஒளிர்ந்தது அவர்களது 12 வயது மகன் வீட்டில் இருந்து கூப்பிடுகிறான்.. எடுத்து பேசு என்றான் ரவி.. ஹலோ கவுதம் செல்லம் டாடி மம்மி ரெண்டு பேரும் வீட்டுக்கு..

வந்துகிட்டு இருக்கோம் என்ன கண்ணா வேணும்.? மம்மி குவார்ட்டர் வாங்கிட்டிங்களா நான் குடிக்கணும் சீக்கிரம் வாங்கம்மா" என்றான்.. தோ 5 மினிட்ஸ் கண்ணா.. வீட்டுக்கு வந்ததும் டாடி மம்மி நீ எல்லாம் சேர்ந்து குடிக்கலாம் என்றவள்.. போனை அணைத்ததும் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.. ரவி பதறினான்..

ஏய் என்னம்மா ஆச்சு பையன் என்ன சொன்னான்.. பாவங்க அவன் எப்போ குவார்ட்டர் வருமுன்னு ஏங்கி கேட்டான் வந்துடுறோமுன்னு சொல்லியிருக்கேன்.. பாவம் பிள்ளைக்கு எவ்வளவு தாகம் இருந்திருந்தா தவிச்சு போயி போன் பண்ணியிருப்பான் என்றாள்.. பின்சீட்டில் குவார்ட்டர் பாட்டில்களில் இருந்த குடிநீரும் தளும்பி ஆம் என்றது.

தண்ணீர் பற்றாக்குறையாலும் அரசுக்கு அதிக வருவாய் என்பதாலும் மதுவுக்கு பதில் டாஸ்மாக்கே குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் நிலை வந்தால் எப்படி இருக்குமென சிந்தித்ததன் விளைவே இப்பதிவு.

அமெரிக்க இடைத்தேர்தலில் அதிமுக அணியினர்..

முதல்சுற்று...

அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்ப் தன் கட்சியை ஜெயிக்க வைக்க தொப்பி ஆட்களின் திறமையை அறிந்து அழைக்க.. ஹிலாரி அணி மின்கம்ப ஆட்களை அழைக்க நம்ம ஆட்கள் அங்கு போய் தேர்தல் வேலை பார்த்து இருந்தால் எப்படி இருக்கும் என ஓர் நகைச்சுவை கற்பனை ஆர்.கே.நகர் போல ஆர்கென்சா தொகுதி இடைத்தேர்தல்!

டிரம்ப் : மிஸ்டர் தொப்பி லீடர் இந்த பிரச்சாரத்துக்கு உங்களுக்கு என்னென்ன வசதிகள் வேணும் சொல்லுங்க செஞ்சிடலாம்..

தொப்பி: சார் ஒரு 100 மெகா சூட்கேஸ் கொடுங்க மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்.

டிரம்ப் : அட வெறும் 100 சூட்கேஸ் இருந்தா போதுமா செலவு கம்மியா ஈசியா இருக்கே.!

தொப்பி : ஆஹா...சார் அது உங்க மண்டை மாதிரி காலியா இருக்கக் கூடாது உள்ள ஃபுல்லா உங்க டாலர் கரன்சி அதுவும் 100 டாலர் கட்டுகளா இருக்கணும் புரியுதா.!

டிரம்ப் : அய்யோ அப்போ 100 மில்லியன் ஆகிடுமே ஒரு தொகுதிக்கு இது டூமச் இல்ல..

தொப்பி : சார் நாங்க நடக்காத எலக்ஷனுக்கே 100 கோடி செலவழிச்சு இருக்கோம் தொப்பிகிட்ட வந்து கப்பித் தனமா பேசிகிட்டு இருக்கிங்க.!

டிரம்ப் : ஓ..அப்படியா சரி இந்த ரூபாயெல்லாம் யாருக்கு.?

தொப்பி : அப்படி கேளுங்க உங்க தொகுதியை வார்டு வார்டா பிரிப்போம் ஒரு வார்டுக்கு 8 பூத்

டிரம்ப் : வாவ் இண்ட் ரஸ்டிங்.. குட் வோட் கேன்வாஸிங் சிஸ்டம்

தொப்பி : சார் இது வோட் கேன்வாசிங் இல்ல நோட் டிஸ்டிரிப்யூட் சிஸ்டம்.!

டிரம்ப் : நோட் டிஸ்டிரிப்யூட்.? புரியலையே

தொப்பி : அந்த 8 பூத்திலில் ஒரு ஓட்டுக்கு 100 டாலர்ன்னு பணத்தை டிஸ்டிரிப்யூட் பண்ணுவோம்..

டிரம்ப் : மைகாட் அது சட்டப்படி குற்றமாச்சே.?

தொப்பி : அதுக்கு தான் டோக்கன் சிஸ்டம் வச்சு இருக்கோம் பகிரங்கமா பணம் கிடையாது டோக்கன் இருந்தா பணம்..

டிரம்ப் : டோக்கன் எப்படி கொடுப்பிங்க.?

தொப்பி : அது எங்க பகுதி செயலர்கள் பார்த்துக்குவாங்க.. அது மட்டுமல்ல நீங்க போற இடத்தில் எல்லாம் பூத்தூவி ஆரத்தி எடுப்பாங்க இல்ல அதுக்கும் பணம் உண்டு..

டிரம்ப் : ஆரத்தி.?

தொப்பி : ஆமாங்க எங்க ஊரில் உண்டு வேணுண்ணா உங்க ஊரில் பொக்கே கொடுக்கச் சொல்லுவோம்.. அப்படியே நாலஞ்சு குழந்தைகளுக்கு பேரு வச்சி அஞ்சாறு கிழவிகளைக் கட்டி பிடிச்சு..

டிரம்ப்: வாவ் பெண்களை கட்டிப்பிடிக்கலாமா..? அப்போ நானே ரிசைன் பண்ணிட்டு போட்டியிடுறேனே..

தொப்பி: அய்யே இத்தனை வயசாகியும் பெண்கள்ன்னு சொன்ன உடனே அலைகிறீர் பாரும்.. ஜெயிக்கிற நினைப்பு இல்லியா.?

டிரம்ப் : அய்யோ அது இருக்கு.. எக்ஸ்பர்ட் நீங்க.. அதுக்கு தானே உங்களை கூப்பிட்டு  இருக்கோம் சொல்லுங்க..

தொப்பி : வியாபாரிகள் சங்கம், மீனவர்கள் சங்கம் இப்படி 10 பேர் இருக்கிற சங்கமா இருந்தாலும் அவங்களை உங்களுக்கு ஆதரவு தரச்சொல்லுங்க முக்கியமா அது மீடியாவில் வரணும்..

டிரம்ப் : 10 பேரு இருக்குற சங்கம் ஆதரவு கொடுத்து என்ன ஆகப்போகுது.?

தொப்பி : சரிதான் அமெரிக்கா ஏன் வளர்ந்திருக்குன்னு இப்போ தான் தெரியுது இவ்வளோ வெள்ளந்தியா இருக்கிங்களே வெள்ளக்காரரே..
அதில 10 பேர் இருக்கானோ 1000பேர் இருக்கானோ.. அது நமக்குத் தான் தெரியும் மக்களுக்கு அது தேவையில்ல மீடியாவில் அந்தச் சங்கம் ஆதரவு இந்தச் சங்கம் ஆதரவுன்னு வரணும்.. சரி தெரிஞ்ச ஹாலிவுட்/ ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ் யாரும் இருக்காங்களா.?

டிரம்ப் : என்ன இப்படி கேட்டுட்டிங்க நானே ஒரு wwe ஸ்டார் தானே ஹாலிவுட்டில் நிறைய ஸ்டார் ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க..

தொப்பி : அப்போ கவலையை விடுங்க திறந்த ஜீப் ஒண்ணு ஏற்பாடு பன்ணிட்டு அதுல நாலு நடிகைகளோடு ஊர்வலம் ஏற்பாடு பண்ணுங்க பணப்பெட்டி ரெடின்னா ஓட்டுப் பெட்டி நம்மதுதான் ஓ.கே..

டிரம்ப் : டபுள் ஓ.கே.. பாஸ் ஒரு சந்தேகம் ஊர்வலம் போற ஜீப் மட்டும் திறந்திருக்கணுமா இல்ல நடிகைகளின் டிரஸ்சும் திறந்து இருக்கணுமா..?ஹி.ஹி.ஹி..

தொப்பி : நம்ம பண்ணப்போறது பிரச்சாரம்.. வேற தொழிலான ---சாரமில்ல.. வழியுற ஜொள்ளை தொடைச்சிட்டு பேச ரெடியாகுங்க..

இதே வேளையில் அங்கே ஹிலாரி கூடாரத்தில் ஆலோசனை...


இரண்டாம் சுற்று...

(ஹிலாரி வீட்டருகே மின்கம்ப அணியினர் பவ்யமாக நிற்க.. ஹிலாரி கார் போர்டிகோவுக்கு வர அத்தனை பேரும் காருக்கு முன் பாய்கின்றனர்)

நின்ற காரில் இருந்து பதறியபடி இறங்குகிறார் ஹிலாரி.. மை காட் இத்தனை பேரு சூசைட் பண்ணிக்கிற மனநிலையில் என் கார் முன்னால பாய்ந்து இருக்காங்களே.. என்ன ஆச்சு இன்னிக்கு.?

ஹிலாரி பி.ஏ: மேடம் அவங்க யாருன்னு தெரியலை நல்லா பாருங்க..

(ஹிலாரி அவர்களை பார்க்க அனைவரும் கார் டயருக்கு அடியில் கிடக்க..) ஓ.. கார் மெக்கானிக்குகளா..! ஒருத்தர் போதுமே எதுக்கு இத்தனை பேரு.?

ஹிலாரி பி.ஏ: அய்யோ மேடம் அவங்க மெக்கானிக் இல்ல நம்ம கட்சிக்காக இடைத்தேர்தலில் உதவி செய்ய தமிழ்நாட்டில் இருந்து வந்த மின் கம்பம் அணியினர்..

ஹிலாரி: ஓ அவங்களா அவங்க எதுக்கு என் கார் முன்னால விழுந்து கிடக்காங்க.!! மிஸ்டர்.. எல்லாரும் கொஞ்சம் எழுந்து நேரா நிற்கிறிங்களா.?

(அவர்கள் எழுந்தபடியே) அம்மா எந்திரிச்சு குனிஞ்சு வேணா நிற்கிறோம் நேரா நின்னு எங்களுக்கு பழக்கமில்லம்மா..

ஹிலாரி : ஏன்ப்பா.?

மின்கம்பம்: எங்க அம்மா எங்களை அப்படியே வளர்த்துட்டாங்கம்மா.. அமெரிக்காவுக்கு வந்ததே இங்க இருக்க அம்மா நீங்க கூப்பிட்டதால தான்.. நாங்க டிரம்ப்போட சூழ்ச்சிக்கு துணை போகமாட்டோம்.

ஹிலாரி: குட் இங்க பாருங்க டிரம்ப் ஆளுங்கட்சி அதனால அவர் அதிகாரத்தை பயன்படுத்துவார் நிறைய செலவும் செய்வார் நாம அவ்வளவு செலவு செய்யமுடியாது.. இந்த இடைத்தேர்தலில் ஜெயிக்க எங்க பட்ஜெட்டுக்குள்ள வர்ற மாதிரி  நல்ல ஐடியா இருக்கா.?

மின்கம்பம்: நிறைய இருக்கும்மா கவலைப்படாதிங்க இப்பதான் எங்க ஊரில் பணநாயகத்தை எதிர்த்து போராடி வந்துருக்கோம் இங்கேயும் அந்த பார்முலாவை ஃபாலோ பண்ணலாம்.

ஹிலாரி: இல்ல டிரம்ப் ஒரு ஓட்டுக்கு 100 டாலர் தரப்போறதா நியூஸ் வந்திருக்கு ஒட்டு மொத்த அமெரிக்காவும் அதே பேச்சா இருக்கு.. போன முறை அவர் ஜெயிச்சா மாதிரி இப்ப அவர் ஜெயிக்கக்கூடாது.

மின்கம்பம்: அம்மா உங்க வீட்டுக்காரர் கிளிண்டன் ஆதரவுன்னு ஒரு பேட்டி கொடுக்க சொல்லுங்க முதலில்..

ஹிலாரி: சில்லி.. அவர் எங்க கட்சி தானே அவர் ஆதரவு தந்து என்ன ஆகப்போகுது.?

மின்கம்பம்: இருந்தாலும் அவர் முன்னாள் அதிபர் தானே அவர் ஆதரவுன்னா ஒரு இமேஜ் வருமே.. இந்த நேரத்தில் யார் ஆதரவுன்னாலும் வாங்கிருங்கம்மா நாங்க வாசன் கிட்ட ஆதரவு வாங்கினா மாதிரி..

ஹிலாரி: இது ஒரு மேட்டர் இல்ல ஒரு அதட்டு அதட்டுனா அதுவா ஆதரவு கொடுத்துடும் வேற ஏதாவது நச்சுன்னு ஐடியா கொடுங்க..

மின்கம்பம்: சொல்றோம் அம்மா.. ஓட்டுபெட்டி நம் வசமாக நாமும் ஒரு பெட்டி கொண்டு வர்றோம்..

ஹிலாரி: என்ன பணமா.?! நெவர் நான் அந்த சீப்பான வழியில் இறங்க மாட்டேன்..

மின்கம்பம்: அய்யோ இது பணப்பெட்டி இல்லம்மா சவப்பெட்டி.!

ஹிலாரி: சவப்பெட்டியா.! என்ன உளர்றிங்க யாரு இங்க செத்து போனது.?

மின்கம்பம்: இப்ப சாகலை ஆனா முன்னாடி செத்துபோனாங்களே..

ஹிலாரி: நீங்க யாரைச் சொல்றிங்க.?

மின்கம்பம்: அம்மா அய்யா ஜான் கென்னடி இருக்காருல்ல..

ஹிலாரி : ஆமா அவர் நம்ம கட்சி சீனியர் தான்..

மின்கம்பம் : அவர் டெட்பாடி மாதிரி செய்யறோம் அதை ஒரு பெட்டி மேல வைக்கிறோம் அமெரிக்க கொடியை போர்த்துறோம் எல்லா ஓட்டையும் தூக்குறோம்.

ஹிலாரி: ஓ அனுதாப ஓட்டுகளா இந்த ஐடியா கொஞ்சம் முகம் சுளிக்க வைக்குதே.. மக்கள் ஏத்துப்பாங்களா.?

மின்கம்பம்: அம்மா.. எப்பவுமே மக்கள் கிட்ட செண்டிமெண்ட் தான் எடுக்கும்.. முதலில் இது கேவலமா இருந்தாலும் போகப்போக மக்கள் பழகிடுவாங்க.. நீங்க சரின்னா சவ ஊர்வலம் அடச்சே தேர்தல் ஊர்வலம் ஆரம்பிச்சிடலாம்

ஹிலாரி: நான் கொஞ்சம் யோசிக்கணுமே..

மின்கம்பம் : ரொம்ப யோசிக்காதிங்க அம்மா அது ஆபத்து..அமெரிக்க  மக்களுக்காக தன் உயிர் நீத்த அண்ணன் கென்னடி கட்சிக்கே உங்க ஓட்டுன்னு கேட்பதில் தப்பு ஒண்ணும் இல்லியே..

ஹிலாரி: அட இது நல்லாருக்கே அப்ப பிரச்சாரத்தை ஆரம்பிங்க

(அனைவரும் அம்மா என்று கத்தியபடி ஹிலாரி காலில் விழ ஆச்சர்யத்துடன் அங்கிருந்து நகர்கிறார்) நிறைந்தது.

பாட்டி வடை சுட்ட கதை (ஹாலிவுட் பதிப்பு)

சான்பிரான்சிஸ்கோவின் ஒதுக்குப் புறத்தில் அமைந்திருந்தது அந்த டோனட் கடை.. மெல்லிய அமெரிக்கக் குளிரை தாங்கிக் கொண்டு சோம்பல் நீட்டி முறித்தது சூரியன். கடை வாசலில் வந்து நின்ற அடர் நீல நிற ஃபோர்டு காரில் இருந்து இறங்கினாள் கிளாரா.! கிளாரா ஆண்டர்சன் வயது 67 அமெரிக்க இராணுவத்தில் நர்சாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவள்.. இரு முறை திருமணம் அமெரிக்க விவாகரத்து எல்லாம் இல்லை... முதல் கணவனை இராணுவத்தில் பணிபுரிந்த போது காதலித்து மணந்தார்.. அவர் ஒரு போரில் இறந்துவிட..

இரண்டாம் திருமணம் அவரும் கடந்த ஆண்டு ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.. பிள்ளைகள் ஏதுமில்லை இருப்பினும் தளராது சொந்தமாக இந்த டோனட் கடையை நடத்தி வருகிறாள் டோனட் சி என்பது அந்தக் கடையின் பெயர் அவள் கடையின் சுவையான டோனட்டிற்கு அந்தப் பகுதியே ஹேமநாத பாகவதர் பாண்டிய நாட்டுக்கு அடிமை என்பது போல சொக்கிக் கிடந்தது.. இன்று ஞாயிறு என்பதால் 8 மணிக்கே  கூட்டம் வந்துவிடும் கடையை திறந்தாள்.. விளக்குகளை போட்டுவிட்டு சிசிடிவி காமிராவை..

ஆன் செய்தாள் கடைக்கு பின் புறம் உள்ள கட்டிடம் தான் கிச்சன்.. கடையின் பின்வழியாக இணைக்கப்பட்ட வீடு அது அங்கிருந்து ஹாய் கிளாரா என கையாட்டினான் சார்லஸ்.. அவன் தான் பேக்கரி மாஸ்டர்.. கிளாரா ரெகுலர் & சாக்லேட் டோனெட்டுகள் ரெடி என்றான்.. வாவ் குட் ஜாப் சார்லஸ் ஐ அப்ரிஷேட் யூ..என்றபடி ஓவனில் இருந்து எடுக்கப்பட்ட சூடான டோனட்டுகள் பரப்பிய தட்டினை கிளவுஸ் அணிந்து அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டு பேக்கரியில் உள்ள ஸ்டாலில் அதை அடுக்கி வைக்க நடக்கலானாள்.!

அப்போது... எங்கிருந்தோ பறந்து வந்த காகம் அந்த அமெரிக்கப் பாட்டியிடம் இருந்து ஒரு டோனட்டை கவ்விக் கொண்டு பறந்தது.. டோனட்டை கவ்விக் கொண்டு பறந்த காகம் அப்படியே ஏர்போர்ஸ் ஒன் விமானம் போல ஒரு யூடர்ன் அடித்து அருகிலுள்ள சில்வர் ஓக் மரத்து கிளையில் லேண்ட் ஆனது.. சில விநாடிகளில் வெற்றி பெற்ற தன் " டோனெட் தெஃப்ட்" ஆபரேஷனை மெச்சிக் கொண்டது.!

மரக் கிளையில் கவ்விக் கொண்டு வந்த டோனட்டை வைத்து விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டது.. பகிர்ந்துண்ண கா கா வென அழைத்தால் அமெரிக்காவில் அது சவுண்ட் பொல்யூஷன் என்பதால் அந்த டோனட்டை அது மட்டுமே சாப்பிட முடியும்.. அந்த டோனட்டை இப்போது நன்கு பார்த்தது டோனட்டின் உடல் எங்கும் சாக்லெட் மேக்கப்... மேலே ஒயிட் நிறத்தில் சாக்கோ பவுடர் தூவப் பட்டு புள்ளி மான் முதுகு போல தெரிந்தது.. பஞ்சு போல சாஃப்ட் அதிலிருந்து எழும்பிய நறுமணம் காற்றில் பரவிக் கொண்டிருக்க..

ஒரு கணம் கண் மூடி அதை நுகர்ந்து ரசித்தது காகம்.. ஓகே லெட் ஸ்டார்ட் என தனக்கு தானே சொல்லிக்கொண்டு சாப்பிடப் போகையில் ஹாய் டூட் என்னும் குரல் காகத்தின் காலுக்குக் கீழ் கேட்டது.. யார் என பார்த்தால் ஜாக் நரி.! கண்ணில் தந்திரமும்.. வாயில் உமிழ்நீரும் வழிய நின்று கொண்டிருந்தது.. டோனட்டை கவ்விக் கொண்டிருந்த காகம் வாயைத் திறக்காது என்ன என தலையை ஆட்டி கேட்க.. டூட் நான் இப்போ Smule ஆப்பில்..

ஜாயின் பண்ணிட்டேன் வாயேன் நாம ஒரு பாட்டு சேர்ந்து பாடலாம் என்று வாயால் டோனட் சுட ஆரம்பித்தது... வேணாம் நீ அங்கிருந்து பாடு நான் இங்கிருந்தே பாடுறேன் என டோனட்டை தன் காலுக்கு கீழ் ஷிப்ட் செய்துவிட்டு ஜாக்கிடம் ஜாக்கிரதையாக பேசியது காகம்.. ஏமாற்றம் இருந்தாலும் நரி பாட காகமும் பாட இப்படியே சில பாடல்கள் பாடப்பட்டன.. திடீரென நரி..டேஞ்சரஸ் டேஞ்சரஸ் என மைக்கேல் ஜாக்சன் பாடலை பாடியபடி அந்த முன் வாக் ஸ்டெப்பை போட ஜாக்சனின் ரசிகரான காகம் மெய் மறந்து அதுவும் மூன் வாக்.. 

ஸ்டெப் போட காகத்தின் காலில் இருந்து டோனட் நழுவி நேரே நரியை நோக்கி விழலாயிற்று.. ஆர்வமாக நரி அதை கேட்ச் செய்ய மேல் நோக்கி பார்க்க ஸ்லோ மோஷனில் அந்த டோனட் கீழே வந்து கொண்டிருக்க.. நரிக்கும் அந்த டோனட்டிற்கும் ஒரு அடி இடைவெளி இருக்கும் போது பாயிண்ட் திசையில் டைவ் அடித்த ஜான்ட்டி ரோட்ஸ் போல ஒரு கை.. குறுக்கே வந்து அந்த டோனட்டை கேட்ச் செய்தது யார் என்று பார்த்தால் நம்ம குரங்கார்.!

தேங்ஸ் ஃபார் திஸ் டோனட் டூட்ஸ் என மரத்தில் தாவி ஏறி அங்கிருந்து அருகிலுள்ள ஒரு விளம்பர போர்டின் உச்சிக்கு தாவி வசதியாக அமர்ந்து கொண்டு டோனட்டை ருசிக்க ஆரம்பித்தது ஏமாந்த நரியையும் காகத்தையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்... விளம்பர போர்டில் இருந்த டிரம்ப்.!!