Friday, 19 June 2026

முருங்கை மட்டன் தொக்கு

“5 நட்சத்திர ஓட்டலில் அம்மாவின்சமையல்


எங்கள் தனம் அம்மாவின் கைப்பக்குவத்தைப் பற்றி இங்கே பல பதிவுகள்இட்டிருக்கிறேன்அம்மா வைக்கும்முருங்கை மட்டன் தொக்கு” எனப்படும்க்ரேவி ஒரு அல்டிமேட் க்ரேவி வகையாகும்


இளசான பிஞ்சு முருங்கைக்காயைஆட்காட்டி விரல் நீளத்திற்கு வெட்டி மட்டன்முதுகுக் கறியுடன் மசாலா பண்டங்களைபக்குவமாக சேர்த்து அம்மா சமைக்கும்அற்புதம் அதுமுருங்கையே கறியாகிஇருக்கும்.


இரட்டை வேட ஹீரோக்கள் போல இதேமுருங்கைக்காயை தனியே வேக வைத்துஎடுத்து அதனுள் இருக்கும் ஜெல்லியைமட்டும் வழித்து எடுத்து செய்யும் முறையும்இருக்குஇரண்டுமே தேவ லெவல்!


சில நேரங்களில் வெள்ளை சோயாஉருளைக் கிழங்கு சேர்த்தும் பிரமாதமாகசெய்வார்கள்மசாலா சேர்த்தமுருங்கையின் மணமும்கறியின் ருசியும்மென்மையும் நாவில் நின்று நாட்டியம்ஆடும்.


கெட்டியான தொக்கு போன்றகன்ஸிஸ்டன்சியில் சுடுசோறுஇட்லிதோசைசப்பாத்திஆப்பம்இடியாப்பம் எனO+ ரத்தம் போல எல்லா உணவுகளுக்கும்மிக மிகப் பொருத்தமாக ஜோடி சேரும்.


ஜெல்லியாக வைக்கும் தொக்கில்முருங்கை இறைவன் போலமறைந்திருக்கும்முருங்கைக் காயைவெட்டிப் போட்டு செய்தால் மறுநாள் பழையசோற்றுக்கு அது அட்டகாசமானதொடுகறியாகும்.


அப்பாவிற்கு கொத்துக்கறி எனும் கைமாமீது அளவிலா காதலுண்டுஅதில் பூண்டுசேர்ப்பார் அப்பாசில நேரம் அதோடுமுருங்கையும் சேர்ப்பாங்கஅது பழம் நழுவிபாதாம்பாலில் விழுவது போல


அம்மாவின் மட்டன் முருங்கை தொக்குபூலோகத்து அசைவ அமிர்தம் என்பேன். 2017இல் அம்மா இறந்தபின்பு தான் அதுஎனக்கு கிடைக்காமல் போனதுபோனவாரம் அந்த ஏக்கம் தீர்ந்தது.


ஆம்என் அம்மா வைப்பது போல இல்லைஎன்றாலும் டிட்டோ 75 மதிப்பெண்கள்வழங்கும் அளவுக்கு  முருங்கை மட்டன்” ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் பூண்டுமுருங்கை & மொச்சைப் பயிரோடுகிடைத்தது


ராமனான அம்மாவின் முருங்கை மட்டன்தொக்கும்கிருஷ்ணனான அப்பாவின்கைமாவும் இங்கே ராமகிருஷ்ணனாகஇணைந்து கிடைத்ததுஅப்படியே என்நினைவு 1990ல் பின்னோக்கி பயணித்தது


அப்பாவின் கைமாவுக்கு சூடான இட்லிகிடைத்தால் நான் ஸ்டாப்பாக சாப்பிடலாம்வீட்டில் இந்தத் தொக்கு வைக்கும்போதெல்லாம் அப்பா மதுரை “சமயசஞ்சீவி”  ஓட்டலில் புரோட்டா வாங்கிவருவார்


அப்போது வீடெங்கும் அன்பும்மகிழ்ச்சியும்பிரவாகம் எடுத்து ஓடும் என் அப்பா போன்றரசனையான மாஸ்டரும்அற்புதமாய்சமைக்கும் என் தாயும்மொத்த உறவினர்கூட்டமும் சமையலில் வல்லவர்கள்.


இந்தச் சமையல் பின்னணி எனக்குஉணவை ரசிக்கவும்ருசிக்கவும்சமைக்கவும் கற்றுக் கொடுத்ததில்வியப்பென்ன இருக்க முடியும்நெடுநாட்களுப்பின் ருசித்தேன் என்பெற்றோரின் கைமணத்தை.