#பீச்சே_மூட்
நான்காம் வகுப்பில் பயிலும் போது பள்ளியில் ஸ்கவுட் என்றசாரணர் இயக்கத்தில் சேர ஆசிரியர்கள் பரிந்துரைத்ததில்எனது பெயரும் இருந்தது. 10 வயது வரை குருளையர் (ஸ்கப்) என்றும் அதற்கு மேல் சாரணர் (ஸ்கவுட்) என்றும் நமது நிலைஉயரும்.
நான் ஸ்கவுட்டில் சேர முதல் காரணம் அந்த காக்கிச் சீருடை. வெள்ளைச் சட்டை, நீல டவுசர் என தினமும் அணியும் பள்ளிச்சீருடைக்கு மத்தியில் காக்கி உடை அழகாகத் தெரிந்தது. கழுத்தில் கட்டும் ஸ்கார்ப், அதற்கான வோகுல், தொப்பி, அந்தமஞ்சள் நிற துணி பெல்ட்..
(அனைத்திலும் ஸ்கவுட் சிம்பல்) பிரவுன் கேன்வாஸ் ஷு எனஅனைத்தும் ஒரு போலீஸ் சீருடை போலவே இருக்கும். எனதுவகுப்பாசிரியர் திரு. அர்ஜுனன் அவர்கள் தான் எங்கள் ஸ்கவுட்ஆசிரியரும் கூட. அவருடன் இராமலிங்கம் சார் ஸ்கப்பிற்குஆசிரியர்.
சாரணர் இயக்க வரலாறு அதன் நிறுவனர் பேடன் பவுல் பற்றியஅரிச்சுவடியை ஆரம்பித்து பிறகு சாரணர் சின்னம், சாரணர்கொடி பாடல்கள் இந்தி மற்றும் தமிழில் பாடப்படும். இராமலிங்கம் சாரின் ஸ்கப்பில் இருந்த போது நிறையபாடல்கள், விளையாட்டுகள் சொல்லித் தருவார்.
“முட்டையிலிருந்து வரும் போது முட்டையிலிருந்து வரும்போது என்ன தான் சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு” பாடல்துவங்கி “இந்தப் பெட்டி தெரியுமா? தெரியுமா? முத்தில் செய்தபெட்டியும் இதுதான், இதுதான்”.. இந்த ரொட்டித் தெரியுமா? தெரியுமா?
முத்தில் செய்த பெட்டியில் வைத்த நல்ல ரொட்டியும் இதுதான், இதுதான்.. இந்த எலி தெரியுமா? தெரியுமா? முத்தில் செய்தபெட்டியில் வைத்த நல்ல ரொட்டியை தினம் தின்ற எலியும்இதுதான், இதுதான், எனப் பாடும் இந்தப் பாடல் நம் ஞாபகம்சக்தியை வலுப்படுத்தும் பாடல்.
பெட்டி, ரொட்டி, எலி, பூனை, நாய், பசு என தொடர்ந்து இதைவரிசையாக நினைவில் வைத்துப் பாடவேண்டும் 45 ஆண்டுகள் கடந்து இப்போதும் முழுதாக இந்தப் பாடல் என்நினைவில் இருக்க இந்தப் பாடலைப் பாடி கிடைத்த பயிற்சியேகாரணம். “தவளைகளாம், தவளைகளாம் தஞ்சாவூருதவளைகளாம்”
“பரம்பொருள் ஞான பக்தி தா பரமேஸ்வரனே தூய்மை தா” (தயாக்கர் தான்) போன்ற பாடல்கள் எனக்கு நன்றாகநினைவில் இருக்கிறது. ஸ்கப் பீரியட் வாரம் 2 தினங்கள்இருக்கும். பள்ளி முழுவதும் வெள்ளை, நீலச் சீருடையில்இருக்க, எலுமிச்சை பழங்களின் குவியலில் வைத்த ஆப்பிள்போல நாங்கள் தனித்து தெரிவோம்.
ஸ்கப்பில் பாடல், விளையாட்டு என்று கழிந்த காலம் சாரணர்ஆன பின்பு, விதவிதமான முடிச்சுகள், கூடாரம் அமைத்தல், தோட்ட வேலை, சிறு சிறு மெக்கானிக் வேலைகள் என்றுசொல்லித் தந்தனர். ஸ்கவுட் சல்யூட் (மூன்று விரல்) ஸ்கவுட்கிளாப்ஸ் போன்றவை மிகுந்த சுவாரஸ்யமான பயிற்சிகளாகஇருந்தன.
ஸ்கவுட் கேம்ப் என்று எங்களை சேஷன் சாவடி, கந்தாஸ்ரமம், குமரகிரி போன்ற குட்டி மலைகளுக்கு அழைத்துச் சென்றுபயிற்சி அளிப்பார்கள். அப்போது தரப்படும் பொட்டல உணவுகள்மிக அற்புதமாக இருக்கும். காலையில் சுடச்சுட இட்லி & உப்புமாவை வாழையிலை வைத்து பொட்டலம் கட்டி எடுத்துவந்து தருவார்கள்.
அபார சூட்டில் வாழை இலையோடு வெந்து மணக்க மணக்கஇருக்கும். அதற்கு தரப்படும் சாம்பாரும் சட்னியும் அத்தனைஅற்புதமாக இருக்கும். மதியம் இதே போல எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்றவை இலை மணத்துடன் கிடைக்கும். இந்தஉணவுக்காகவே விரும்பி ஸ்கவுட் கேம்ப் வந்தவர்களும்உண்டு.
இதன் தொடர்ச்சியாக 9ஆம் வகுப்பில் NCCயில் சேர்ந்தேன். அந்த அனுபவங்கள் தனி. ஆனாலும் அதிகாலையில் எழுந்துவந்து ரைட் டர்ன், லெஃப்ட் டர்ன், மார்ச், என டிரில் வாங்கிவியர்க்க விறுவிறுக்க கிரவுண்டில் பயிற்சி முடிக்கும் போதுசைக்கிள் ரிக்ஷாவில் எங்கள் காலை உணவு அட்டைப் பெட்டிவந்திறங்கும்.
NCC மாஸ்டர் அபவுட் டர்ன் சொல்லும் முன்பே நாங்கள் டர்ன்அடிக்க காத்திருப்போம். பட்டாலியன் டிஸ்போஸ் என்றகமெண்ட் ஒலித்த அடுத்த மைக்ரோ விநாடி கை கழுவும்இடத்திலிருப்போம் பந்தி போல வரிசையாக கீழே நாங்கள்அமர எங்கள் பொட்டலம் விநியோகிப்படும். பார்சலின் சூடேஎங்கள் பசியைத் தூண்டும்.
செல்வம் & பத்ரி இருவரும் தான் சாம்பார், சட்னி ஊற்றும்பணியாளர்கள், சில சமயம் நானும், கண்ணனும் இந்தபணியைச் செய்வோம். ஆகவே மற்றவர்களை காட்டிலும்எங்களுக்கு சற்று தாராளமாக அவை கிடைக்கும். NCCயில்துப்பாக்கி சுடும் பயிற்சி இருக்கும் நாளில் ஒரு பொட்டல உணவுநம் பசிக்கு பற்றாது.
அன்றைக்கு மட்டும் 2 பொட்டலங்கள் ஆர்டர் செய்திருப்பார்கள். இட்லி& பொங்கலா? இட்லி& பூரியா? உப்புமா& பூரியா? என்றுஎங்களுக்குள் பந்தயம் நடக்கும். ஜெயித்தால் 1 இட்லி அல்லதுபூரி வெல்வோம். இது போன்ற உணவுகளை சமைக்கவும்கற்றுக் கொண்டது எனது ஸ்கவுட்& NCC பயிற்சிகளுக்குஇணையானது.
மல்லூரில் நடந்த 3 நாட்கள் NCC கேம்ப் தான் என்னை முழுநேர மேடைக் கலைஞனாக மாற்றியது. அந்த மூன்று தினங்கள்என் வாழ்வின் இன்றைய இந்த நிலைக்கு உயர்த்திய மிகமுக்கியமான தினங்களாகும். வாழ்க்கை சீராக நேர்க்கோட்டில்சென்றாலும் அவ்வப்போது அதை திரும்பி நின்று பார்ப்பதும்ஒரு இன்பம் தானே..
அதான் சொல்றேன் “பீச்சே மூட்”

