“சர்க்கரைப் பொங்கல்”ன்னு சும்மாவாச்சும்சொல்லேன் நம்ம வெங்கடேசன்எங்கிருந்தாலும் ஓடி வந்துடுவான்” என்பாட்டி அடிக்கடிச் சொல்லும் வார்த்தைகள்இது. திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்குமட்டுமல்ல எனக்கும் மிகமிகப் பிடித்ததுசர்க்கரைப் பொங்கலே.
ஒரு வேளை எனக்கு வெங்கடேசன் எனப்பெயர் வைத்ததே இதற்கு தானோ எனஎண்ணுவதுண்டு. குழைவாக வேகவைத்தபச்சரியில் வெல்லத்தை தூளாக்கி சேர்த்துமணக்க மணக்க நெய்யும், முந்திரி, திராட்சையும், தட்டிப் போட்ட ஏலக்காயும்கலந்த பொங்கலை விரும்பாதவர்இருப்பார்களா.
அதிலும் சர்க்கரை பொங்கலை கொதிக்ககொதிக்க சாப்பிடுவது பேரானந்தம். பொங்கலை அள்ளும் விரல் நுனிகள் சுட, அதை ருசிக்கும் நாக்கும் சுட அதை உண்பது, அடடா பூலோக சொர்க்கம். வெல்லத்தின்நிறத்திற்கு ஏற்ப அடர்/ வெளிர் தங்கநிறங்களில் பொங்கல் காணப்படும்.
பெருமாள் கோவிலில் பிரசாதமாகபொங்கல் என்பது எப்போதும் ஏ கிரேடு. திருப்பதியில் தரப்படும் பொங்கலை பெரியஅண்டாகக்களில் வைத்திருப்பார்கள். அதனை கண்ணாலேயே சாப்பிட்டுமகிழலாம். அந்த அண்டாவில் இருந்து ஒருகரண்டி பொங்கலை அள்ளுவார்கள்.
அப்போது உண்டாகும் குழியினுள் சுற்றிலும்திரண்டிருக்கும் நெய்யானது ஒகேனக்கல்அருவி போல பாய்ந்து வந்து அந்தகுழிக்குள் நிரம்புமே ஆஹா.! காணக் கண்டிரில்லியன் வேண்டும். சர்க்கரைப்பொங்கலில் முழு முந்திரிப் பருப்புபோடுபவர்கள் இந்த பூமியில் வாழும்போதும் சரி..
எவ்வளவு பாவம் செய்து இறந்த பின்பும் சரி அவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் எனலாம். சில கிராமப்புறங்களில் வைக்கும்சர்க்கரைப் பொங்கல் எனக்கு ஏமாற்றத்தைதந்துள்ளது. ஒண்ணு களி போலிருக்கும், ஆஸ்தான சர்க்கரைப் பொங்கலின் நிறமானஅந்த அடர் தங்க நிறம் இருக்காது.
அது நெய்கலரில் இருக்கும் இல்லாவிட்டால்பெரிய மண்ணாங்கட்டி போல உயிரற்றுமல்லாக்க கிடக்கும். அந்தப் பொங்கலின்இனிப்பும் அசட்டு இனிப்பாக இருக்கும். அதிலிருக்கும் முந்திரி திராட்சையெல்லாம்தேட கீழடியில் இருந்துஆராய்ச்சியாளர்களை அழைத்துவரவேண்டும்.
கடைசியில் அவர்கள் அதெல்லாம் இதில்போடவே இல்லிங்க என்று அறிக்கைஅளிப்பார்கள். சர்க்கரைப் பொங்கலுக்குஎப்போதும் உயிர் உண்டு இலையில்போட்டால் மெதுவாக அது பரவணும் தொன்னையில் தந்தாலும் குறைகுடம்போல நாலாபக்கமும் ததும்பிக் குலுங்கிக்கூத்தாடணும்.
இப்படி உயிர்ப்பான சர்க்கரைப் பொங்கலைகட்டிக் கட்டியாக செய்பவர்களுக்குகருடபுராணத்தில் எழுதியுள்ள மொத்ததண்டனைகளையும் தந்துவிடலாம். சர்க்கரைப் பொங்கல் பொல பொலன்னுசோறு போல வடித்து இருக்கக்கூடாது, நன்கு குழைவாகத்தான் வடித்துஎடுக்கணும்.
சர்க்கரைப் பொங்கலில் சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்தால் இன்னும் திவ்யம். அடுத்து இதில் போடும் முந்திரி & திராட்சைகள். முழு முந்திரி மற்றும்திராட்சையை தனியாக நெய்யில் வறுத்துபிறகு சர்க்கரைப் பொங்கல் மீது தூவிச்சேர்ப்பது மிகவும் சிறப்பானவழிமுறையாகும்.
சூடான பொங்கலை ஸ்பூனில் சாப்பிட்டால்உலோகங்களால் செய்யப்பட்ட ஸ்பூனில்மட்டுமே சாப்பிடணும். மறந்தும் இதைபிளாஸ்டிக் ஸ்பூனில் சாப்பிடவேண்டாம். அப்படி பொங்கல் சாப்பிட்ட அனுபவம்உங்களுக்கு நிச்சயம் இனிக்காது. சர்க்கரைப் பொங்கலிற்கு அக்கார அடிசில்என்னும் ஒண்ணுவிட்ட தங்கை ஒன்றுஉள்ளது.
இதன் அத்தையாக கற்கண்டு சாதம் எனும்அமிழ்தம் உள்ளது. இவையெல்லாம் சிறந்தஇனிப்பு உணவுகள் தான் எனினும்.. பொங்கலின் தலைவன் அடர் தங்கநிறத்தில்மென் குழைவில் முந்திரி திராட்சைகள்மினுக்க செய்யும் சர்க்கரைப் பொங்கலே. சூடான அவனுக்கு ஈடு இணை எந்தபொங்கல் வம்சத்திலும் கிடையாது.
🙏 வெங்கட்ரமணா.. கோவிந்தா.. கோவிந்தா.. 🙏

