Monday, 6 July 2026

​🇳🇴 நலமான நார்வே 🇳🇴 1


⛵️ பார்ட் 1 ⛵️

ரெகுலரா பார்க்குற ஃபேஸ்புக் பதிவுகளில் இருந்து டைவர்ட் ஆகி லெஃப்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்பாமல், யூடர்னும் அடிக்காமல், நேராகவும் செல்லாமல்.. 

வண்டியை ஒரு ஓரமா நிறுத்திவிட்டு இந்தப் பதிவை படிக்கவும். நான் பார்த்ததை.. கொஞ்சமா படிச்சதை ஏதோ எனக்குக் தெரிந்த அளவில் பதிவாக எழுதியிருக்கேன்.. வாங்க..

ஊருக்குள்ள போயி என்னைப் பத்தி கேட்டா, அவரா! அவர் படுபயங்கரமான ஆளாச்சேன்னு நடிகர் சேஷுவின் காமெடி போலின்றி உண்மையாவே நார்வே பற்றியத் தகவல்கள் இது👇🏿

பாட்ஷாவுக்கு மாணிக்கம்னு ஒரு பேர் இருக்குறா மாதிரி நார்வே மக்களுக்கு ஸ்காண்டிநேவியர்கள் என்றும்  வைகிங் என்றும் 2 பெயர்கள் இருக்கு ரெண்டா மாமின்னு வடிவேலு மாதிரி..

கேட்காதிங்க ஏன்னா இவங்களுக்கு இன்னும் சில பெயர்கள் இருக்கு! அதுக்கு முன்னால யார் இந்த வைகிங் மக்கள் என்று பாத்துடுவோம். அப்போ இந்த ஸ்காண்டிநேவியா எங்கிருக்கு? 

அதை தெரிஞ்சிக்காம வரலாற்றை சொல்லமுடியுமா? இன்றைய சுவீடன், டென்மார்க், நார்வே பகுதிகள் தான் அன்றைய ஸ்காண்டிநேவியா. இங்கு வாழ்ந்த  இனக் குழுவினருக்கு.. 

‘நார்ஸ்மேன்’ அதாவது வடக்கிலிருந்து வந்தவர்கள் என்ற பெயரும் உண்டு. அண்ணன் சீமான் அவர்கள் சொல்றா மாதிரி சொன்னா இவங்க தான் அந்த ஆதி நிலத்தின் பூர்வ குடிகள். 

நார்வே மலைகளைக் கொண்ட நிலப் பரப்பு, சுவீடன் அடர்ந்த காடுகளைக் கொண்டது. டென்மார்க் வளமான நிலமுள்ள பகுதி. விவசாயமும், கால் நடைகள் வளர்ப்பும் தான் இங்கே..

முக்கியத் தொழில்கள். தமிழ்நாட்டில் விவசாயம் பொய்த்த போது மில் வேலைக்கும், கட்டிட வேலைக்கும் நாம போனது போலவே இவங்களும் விவசாயம் மிகவும் நலிந்த போது.. 

செலக்ட் பண்ண தொழில் என்ன தெரியுமா? கடற் கொள்ளை அடிப்பது. ஏண்ணே கொள்ளையடிக்கிறது எல்லாம் ஒரு தொழிலா? ஆனால் அன்று அவர்களுக்கு அது ஒன்றே வழி.

வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் போல இவங்க நிலத்தில் போர் அடிக்கும் விவசாயிகள்..நீரில் போர் புரியும் கொள்ளையர்கள்.. இப்படி எம்ஜிஆர் மாதிரி இரட்டை வேடத்தில்..

9ஆம் நூற்றாண்டு முதல் 11ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல பகுதிகள் மீது கடல் மார்க்கமாக படை எடுத்துப் போயி ஜெயிச்சிட்டு.. பிறகு  அங்கேயே குடியேற ஆரம்பிச்சாங்க. 

வக்காலி எந்தப் பக்கம் போனாலும் அணை கட்றானுங்களே சொல்றா மாதிரி, இவங்க கடல் வழியா மட்டும் இல்ல அதே கப்பலில் ஆறுகள் வழியா ஊருக்குள் வந்து போர் செய்வாங்க. 

சுந்தர்.சி. கிட்ட சவால் விட்டா மாதிரி வாடா! என் ஏரியாவுக்கு வாடான்னா நிச்சயம் வந்துடுவாங்க. அவங்களோட நீளமான “Longship” கப்பல்கள் அதிக ஆழமில்லாத நீரிலும் போகும். 

ஒரே நேரத்தில் துடுப்பாலும் பெரிய பாய்மரத்தாலும் இதை இயக்கலாம். சில கப்பல்கள் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் போன ஆதாரத்த இவங்க சேதாரமில்லாம வச்சிருக்காங்க.

அந்த நீளக் கப்பல்களோட முன்னாடி டிராகன் / பாம்பு போன்ற தலைகள் செதுக்கியது எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் உளவியல் யுக்தியாகவும்.. தீய சக்திகளை விரட்டும் (DMK அல்ல) 

நம்பிக்கையாகவும் கருதப்பட்டது. ஊருக்குள் கொள்ளையடிச்சு முடிச்ச விநாடி அடிச்ச பணத்தோட மல்லையா மாதிரி உடனடியா கடலுக்குள் தப்பிச் செல்வது அவர்களின் முக்கிய யுக்தி! 

RO வலிப்போம்..

No comments:

Post a Comment