Saturday, 4 July 2026

காபோ வெர்டே

 (Cabo Verde) 


2026 உலகக் கோப்பை கால்பந்து மூலம்உலகெங்கும் புகழ் வெளிச்சம் பெற்ற நாடுஐந்தரை லட்சம் மக்கள் மட்டுமே வாழும்இந்த குட்டி நாட்டின் வாழ்க்கை முறைகலாச்சாரம்உணவு & சுற்றுலா பற்றியசுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோமா


காபோ வெர்டே நாடு அட்லாண்டிக்பெருங்கடலில் அமைந்துள்ள பத்துஎரிமலைத் தீவுகளைக் கொண்ட ஒரு தீவுநாடாகும்இது செனகல் நாட்டின் மேற்கே600 கி.மீ தூரத்தில் உள்ளதுஇந்தமக்களின் வாழ்க்கை மிகவும்அமைதியானது. “No Stress” என்பதுஅவர்களின் வாழ்க்கை தத்துவம்


எளிமைமகிழ்ச்சி மற்றும் குடும்பஉறவுகளுக்கு அவர்கள் அதிகமுக்கியத்துவம் கொடுக்கின்றனர்காபோவெர்டே மக்கள் இசையையும்நடனத்தையும் மிகவும் நேசிப்பவர்கள்உலகப் புகழ் பெற்ற பாடகி Cesária Évora மூலம் புகழ் பெற்ற Morna இசைஇந்நாட்டின் பாரம்பரிய இசையாகும்


கொலடெய்ரா (Coladeira) எனும் இவர்களதுஇன்னொரு இசை வடிவமும் உலகப் புகழ்பெற்றதுஇந்த நாட்டு திருமணம்திருவிழாமுதல் தெருக்களில் நடக்கும் நிகழ்ச்சிகள்வரை எல்லா நிகழ்ச்சிகளிலும் இந்தஇரண்டு இசையும் நடனமும் தவறாமல்இடம் பெறுபவை ஆகும்


தமிழ்நாட்டில் அரிசிச் சோறு போல Cachupa எனும் உணவுதான் இங்கு தேசியஉணவாகும்காய்கறிகள் மக்காச்சோளம்பீன்ஸ்உருளைக் கிழங்குமீன் (இறைச்சியுடன் சீராக வேக வைத்துதயாரிக்கப்படும் இந்த உணவு தான்பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும்சமைக்கும் உணவாகும்


அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவுகள்என்பதால் இந்தத் தீவை கடல் உணவுகளின்சொர்க்கம் எனலாம்ஃப்ரெஷ்ஷான டூனாமீன்லாப்ஸ்டர்ஆக்டோபஸ்இறால்உள்ளிட்ட சுவை மிகுந்த கடல் உணவுகள்இவர்களின் அன்றாடச் சமையலில்தவறாமல் முக்கிய இடம் பெறுகின்றன.


Sal மற்றும் Boa Vista என்ற இரண்டுஉலகின் அழகிய கடற்கரைகள்அமைந்துள்ளதுவெண்மணல்கடற்கரைகள் & பச்சை-நீல நிறப் பரப்பில்கடல் இங்குள்ளதால் உலககெங்கும் இருந்துசுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றனநீர்ச்சறுக்குஸ்கூபா டைவிங் போன்ற..


நீர் சாகச விளையாட்டுகளும் இந்தத்தீவுகளில் புகழ்பெற்றவைஇந்தத் தீவுநாட்டில் ஒரு அதிசயமான கலாச்சாரம்செயல்படும் எரிமலை மீது குடியிருக்கும்மக்கள்உலகில் மிக அரிதாகக் காணப்படும்வாழ்க்கை முறைகளில் இதுவும் ஒன்றுஆம்! FOGO எனும் தீவுதான் அது.


அந்த எரிமலைச் சரிவுகளில் துளியும்அச்சமின்றி திராட்சைத் தோட்டங்கள்அமைத்துஅங்கு விவசாயமும் செய்துவாழ்ந்து வருகின்றனர்இங்கேஅதிகாரப்பூர்வ மொழி போர்ச்சுகீசியம்என்றாலும்பெரும்பாலான மக்கள் Cape Verdean Creole என்ற உள்ளூர்மொழியையே பேசுகின்றனர்


ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பியகலாச்சாரங்கள் இணைந்த தனித் துவமானவாழ்க்கை முறைகாபோ வெர்டே உலகின்முக்கிய கடல் ஆமை இனப்பெருக்கமையங்களில் ஒன்றாகும்ஆண்டுதோறும்ஆயிரக்கணக்கான கடல் ஆமைகள்இங்குள்ள கடற்கரைகளுக்கு வந்து..


முட்டையிடுகின்றனஅவற்றைப் பாதுகாக்கஇங்கே பல தகுந்த ஏற்பாடுகளும் சிறப்புதிட்டங்களும் உண்டுகாபோ வெர்டேவின்மிகப் பெரிய வருவாய் ஆதாரம் சுற்றுலாத்துறையாகும்சுற்றுலாவை மட்டுமேநம்பாமல்கடலை மையமாகக் கொண்டபொருளாதார வளர்ச்சிக்கு.. 


காபோ வெர்டே அதிக கவனம்செலுத்துகிறதுஆண்டு முழுவதும் சீரானமித வெப்பமான இனிய கால நிலைநிலவுவதால்எந்த மாதத்திலும் சுற்றுலாசெல்ல ஏற்ற நாடாக காபோ வெர்டேகருதப்படுகிறதுஇது உலகின் மகிழ்ச்சிநிறைந்த சிறிய நாடுகளில் ஒன்றாகும்பாதுகாப்பு மிக்க சூழல்..


நட்போடு பழகும் மக்கள்குறைந்த குற்றச்செயல்கள் & அமைதியான சூழல்உள்ளதால் ஆப்பிரிக்காவின் வாழத் தகுந்தநாடுகளில் ஒன்றாக உள்ளதுஇந்த உலகக்கோப்பைக்கு பின் காபோ வெர்டேவுக்குசுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment