Tuesday, 25 August 2026

​“மெய்யுருகும் நெய்”



நெய் ரோஸ்ட்” இன்றைய ஜென்காலத்திலும் உணவகங்களில் மகுடம்வைத்தது போன்ற ஒரு பெருமை பெற்றதுமன்னர்களின் மகுடம் போன்ற நெய்ரோஸ்ட்டின் தோற்றமே அதற்குசாட்சியாகும்நெய்ரோஸ்ட்டின் வடிவம்ஊருக்கு ஊர் மாறுபடும்.


பாய் போல சுருட்டி நீளமான பைப்போலவும்இரண்டாக மடித்து எதிர் புறமாகவைத்த ஆங்கில D எழுத்து போலவும்படுக்கை வச முக்கோண வடிவத்திலும் பலதோற்றங்களில் நெய்ரோஸ்ட் கிடைக்கும்அதில் மிகச்சிறந்தது மன்னரின் க்ரீடம்போல் கம்பீரமாக எழுந்து நிற்கும் கூம்புவடிவமே


இந்தத் தோற்றம் தான் நெய்ரோஸ்ட்டின்மவுசு குறையாது மக்கள் மனங்களில்இன்றும் இடம் பிடித்திருக்க காரணம்என்பேன்இன்றும் ஓட்டல்களில்ஆசையுடன் அந்த கூம்பு வடிவ க்ரீடதோசையை எப்படி சாப்பிடுவது எனத்தெரியாமல் கையை மட்டுமல்லதோசையையே பிசைவதை பார்த்துவருந்துவேன்.


அப்பளம் போல அதை கைகளால் நொறுக்கிசாம்பார் கிண்ணத்தை குபீர்னு அதன் தலைமேல் கவிழ்த்து, 3 வகை சட்னிகளையும்குழைத்து ராஜ்கிரண் பிசையும் கறிச்சோறுபோல நெய் ரோஸ்ட் சாப்பிடுபவர்களைபார்த்துள்ளேன்


என் கண்களில் ‘ரத்தக் கண்ணீர்’ மட்டுமல்லபாகப்பிரிவினை’ கூட வழியும்பழையதமிழ் படங்களில் ரேப் சீன் முடிந்து தலைகலைந்துபூ வாடி சேலை ஜாக்கெட் கிழிந்துபொட்டழிந்து அலங்கோலமாக நிற்கும்கதாநாயகிகள் ஏனோ என் நினைவிற்குவருவார்கள்


அடேய் அது பூப்போல கையாள வேண்டியபதார்த்தம்டா என்று எதார்த்தமாகஅவர்களிடம் போய் எப்படிச்சொல்ல அதைஇங்கு சொல்லப் போகிறேன்சுருட்டியவடிவம்மடித்ததுதட்டை முக்கோணவடிவங்களை விட்டு விடுங்கள்.


இந்த கூம்பு தோசையை சாப்பிடும் விதத்தைகூறுகிறேன்முதலில் நெய் ரோஸ்ட்டைரொம்ப முறுகலாக ஆர்டர் செய்யாதீர்கள்நான் முதல்வராக இருந்திருந்தால் 110 விதியின் கீழ் அதற்கு தடைவிதித்திருப்பேன்முறுகல் தோசை அப்பளம்சாப்பிடுவதற்கு சமம்


லேசான முறுகலும் மென் பதமும் சேர்ந்தாதான் அது நெய்ரோஸ்ட்அப்பதான் அதுபார்க்க மட்டும் கும்முன்னு இல்லாமல்சாப்பிடவும் ஜம்முன்னு இருக்கும்ஆகவேஅதிமுறுகலா கேட்காது கம்முன்னுஇருப்பதே நல்லதுகூம்பு வடிவ தோசை மிகசீக்கிரம் ஆறிடும்.


கூம்பு வடிவ தோசையை அப்படியே தூக்கிபடுக்கை வசமாக தட்டில் கிடத்தி இரண்டாமடிக்கணும்இதை ஜல்லிக்கட்டில் மாடுபிடிப்பது போல ஆவேசமாகச் செய்யாமல்ஒரு நான்கு மாத குழந்தையை தூக்குவதுபோல தூக்கணும்


வீட்டுப் பெரியவர்கள் கீழே அமர்ந்து இருகால்களையும் நீட்டி கால்களுக்கு மேலேநான்கு மாதக் குழந்தையை கவனமாககிடத்தி குளிப்பாட்டுவார்கள் பார்த்துஇருக்கிங்களாஅதுபோல நெய்ரோஸ்ட்டை கவனமாக தூக்கணும்


தோசையை நம் கையால் அதிகமாநசுக்கவோ நொறுக்கிடவோ கூடாதுகூம்புவடிவத்தில் அடிப்புறம் ஆறி இருக்கும்அதில் பரவலாக சூடான சாம்பாரை  ஊற்றவும்நடுப்புறம் சூடாக இருக்கும்அதில் சாப்பிடத் துவங்கவும்


க்ரீட நெய்ரோஸ்ட் நம் டேபிளுக்கு வரும்போதே 25% சூடு ஆறியே வரும்ஏன்னாஅதன் வடிவம் எளிதில் ஆறக்கூடியதுசூடுகுறைவான அடிப்புறம் சாம்பார்ஊற்றுவதால் அதன் முறுகல் பகுதிகளும்சாம்பாரில் ஊறி நல்ல பக்குவமாகமாறிவிடும்.


நடுப்புற தோசையை விண்டு தேங்காய்சட்னியுடன் ஒன்றுதக்காளி சட்னியுடன்ஒன்றுபுதினா சட்னியுடன் ஒன்று என தனித்தனியே சாப்பிடவும்அப்போது தான்நெய்ருசி தெரியும்எல்லா கட்சியையும்சேர்த்த கூட்டணி போல சட்னிகளைசேர்க்கக்கூடாது


நெய்ரோஸ்ட்டுக்கு தேவையில்லா ஆணிஇட்லிபொடிமைசூர் நெய் தோசையில்சேர்க்கும் பொடி வேறு வகைநம்ம ஊர்தோசைக்கு அது சரிப்பட்டு வராதுசாம்பாரில்ஊறிய தோசை ஒருபுறம் காத்திருக்கட்டும்.


மேலும் ஒரு கப் சூடான சாம்பார் கேட்டுரோஸ்ட்டின் ஓரங்களை நனைத்துசாப்பிட்டால் உங்களை ஐன்ஸ்டீன் என்றுஇந்த உலகம் அழைத்தாலும் அழைக்கும்உளுந்துவடைசாம்பார் வடைபோன்றவற்றை எல்லாம் இதோடு சேர்த்துசாப்பிடக்கூடாது.


நாம் திருப்பதிக்கு போனால் தலையாயதரிசனம் வெங்கடாஜலபதி மட்டும் தானேஅது போலத்தான்  நெய் ரோஸ்ட்சாப்பிடுவதும்சிலர் நெய் மசால்தோசைநெய் ஆனியன் தோசை என்பார்கள்அவையும் தேவையில்லாத ஆணிகளே.


கடப்பாகுருமா என சில அரிய காம்போக்கள்இதற்கு நன்றாக இருக்கும் என்றாலும்அரைத்து வச்ச சாம்பார் இதற்கு நல்லஇணைசட்னிகளும் தேங்காய்தக்காளிபுதினா போன்றவை மிகச் சிறப்பு.


எங்கள் பாட்டி வீட்டில் செய்யும் அடைஅவியல்மோர்க் குழம்புவத்தக் குழம்புபோன்றவை அவர்களது மேதமை நிறைந்தசமையல் பக்குவங்களால் நெய்ரோஸ்ட்டுடன் சில படங்கள் நடித்தஹீரோயின்கள் போல ஜோடிசேர்ந்துள்ளன.


இப்போது அதெல்லாம் சரிவராதுபாட்டிவீட்டில் மோர் கடைந்து வெண்ணெய்எடுத்து அதை நேர்த்தியாக உருக்கிமுருங்கையிலை தாளித்து போட்டு காய்ச்சும்நெய்யின் மணம் அந்த தோசையின்  ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் வீசும்.


ஆகவே இனி நெய்ரோஸ்ட்டை எங்குசாப்பிட்டாலும் ராஜ்கிரண் போலசாப்பிடாமல் அதற்கு ராஜமரியாதை தந்துசாப்பிடுங்கள்அப்படி ருசித்தால் உருகுவதுநெய் மட்டுமல்ல உங்களது மெய்யும் தான்.❤️👌🏿


No comments:

Post a Comment