Tuesday, 7 July 2026

​🇳🇴 நார்வே பாட்டுக்காரன் 🇳🇴

⛵️ பார்ட் 2 ⛵️


வைகிங்குகள் கடலில் அந்நியனாக வாழ்ந்தகாலங்களில் ஐரோப்பிய கடற்கரைநகரங்கள்கிராமங்கள் மீது திடீர்தாக்குதல்களை நடத்தி வென்ற பின்னர்அந்த நகரங்களை எரிப்பது இவர்களதுஹாபியாகும்


அரசியல் கட்சியே ஆரம்பிக்காமல்செல்வங்களை கொள்ளையடிப்பதுஎதிரிகளை மன்னித்து ஓட விடாதுகொன்றொழிப்பதெனஐரோப்பியமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவைத்திருந்தனர்.


ஸ்காண்டிநேவிய மொழியில் Víkingr என்றால் கடற் கொள்ளையர் என்றுஅர்த்தம்இவர்கள் புஜபலம் மிக்கவர்கள்கொந்தளிக்கும் கடலில் துடுப்பு வலிப்பதால்கிடைத்த வரம் அது.. 


இவர்களது டிராகன் வடிவ மரப் படகுகள் 30 மீட்டர்  நீளம் வரை இருந்தனஅதன் ஒருபக்கத்துக்கு 16 என மொத்தம் 32 துடுப்புகள்உண்டு இந்த அந்நியன் வாழ்க்கைக்கு முன்  இவர்கள்.. 


அம்பியாக இருந்த காலத்தில், “ சொர்க்கமேஎன்றாலும்” என்று ராமராஜன் போல ஆடிப்பாடியது  மட்டுமல்ல ஆடுமாடுபன்றிகளைமேய்த்துபால் கறந்து நார்வே பாட்டுக்காரனாக வலம் வந்தனர்


மலைச் சரிவுகள்பனிப் பள்ளத் தாக்குகள்காடுகள் போன்ற பல சூழல்களில்வாழ்ந்தனர்காலை விவசாயம்மதியம்வேட்டைமாலை மீன் பிடித்தல்இரவுதீயைச் சுற்றி அமர்ந்து கதைகள் பேசுவது..


என்று டைம் டேபிள் போட்டு வாழ்ந்தனர்காலை எழுந்ததும் விவசாயம்பின்புதுணிவு தரும் நல் வேட்டைமாலைமுழுவதும் மீன்பிடி நார்வேயில் பாரதிபிறந்திருந்தால் இப்படித் தான்எழுதியிருப்பான்


இதுவே இங்கு பல குடும்பங்களின்இயல்பான வாழ்க்கை முறையாகும்வெள்ளையா இருக்கவன் பொய்யேசொல்ல மாட்டான்னு நினைக்கிறா மாதிரிஒவ்வொரு வைகிங்கும் போர் வீரர் அல்ல


பெரும்பாலானோர் மீனவர்கள்விவசாயிகள்கைவினைஞர்கள் மற்றும்வணிகர்களாக இருந்தனர் கடற்பயணங்கள்அவர்களது வாழ்க்கையின் ஒரு பகுதிமட்டுமேகடல் வாழ்வில் தான் இவர்களின்..


உப தொழில்களாக மீன் பிடித்தலும் கப்பல்கட்டுவதும் மாறினஇவர்கள் அற்புதமாகமரக்கப்பல் செய்வதின் வரலாறு கலைநயம்மிக்கதுஇவர்கள் அற்புத தச்சுவேலைக்கலைஞர்கள்


ஆம்! “மரத்திலே கலை வண்ணம்கண்டான்” என்று நார்வேயின் மரத் தூண்சர்ச்சுகளின் அழகை கண்டால்  நாளெல்லாம் பாடலாம்இங்கே அழகியமரத் தூண்களால் அமைந்த சர்ச்சுகள் பலஉண்டு


இவை நார்வேயின் வாழ்வியல்கலாச்சாரம்பண்பாடுநாகரீகம்மரக் கட்டிடக் கலைமற்றும் அவர்களின் கைவினைத் திறனின்அழியாத சின்னங்களாக இன்றும் உள்ளன


⛵️ RO வலிப்போம் ⛵️



No comments:

Post a Comment