பரோட்டா பற்றி பல்வேறு நிபுணர்களின்பதிவுகள் ஃபேஸ்புக் எங்கும் நீக்கமறநிறைந்திருந்தாலும், வீச்சு புரோட்டா பற்றிபெரிதாக எவரும் எழுதவே இல்லை. இதற்குபிறகும் நான் சும்மா இருந்தால் ஹிஸ்டரிஎன்னை ஃபர்கிவ்வாது அல்லவா.
வீச்சு புரோட்டாவின் வரலாறையும் அதன்வீச்சு ஏன் இந்த சமூகத்தில் பரவலாகபேசப்படவில்லை, வீச்சு புரோட்டா எப்படிமாறினால் மீண்டும் தனது ஆட்சியைப்பிடிக்கலாம் என்பதை எல்லாம் ஆராய்ந்துஅது தொடங்கிய வரலாற்றைப் பார்ப்போமா.. வாங்க..
நான் அறிந்த வகையில் வீச்சு பரோட்டாஇராவண தேசத்து கண்டுபிடிப்பு. பரோட்டாமாவை சேலை முந்தானை போல பரந்தஅளவில் நன்கு வீசி பொன்னாடைபோர்த்துவது போல கல்லில் கிடத்தி பிறகுஅதன் 4 பக்கத்தையும் உட்புறம்மடிக்கணும்.
நான்கு புறமும் சம அளவுள்ள சதுரம் போலதாராளமாக இடமிருக்கும் இந்த “பிஸ்கொயர்” உள்ளே வீடே கட்டமுடியும்என்னும் போது இதற்குள் முட்டையைகொண்டுவந்து குடி வைத்தனர். ஆம் ஆரம்பகாலத்திய “முட்டை பரோட்டா” இதுதான்.
சிலோன் பரோட்டா என்று இதற்குப் பெயர். செழுமையாக பரோட்டா மாவை வீசி அதைபரப்பி நடுவில் 2 முட்டைகளைகலக்கியடுத்தி ஊற்றி, அதை உட்புறமாகமடித்து தங்கப்பாளம் போல தகதகவெனகல்லில் வேக வைத்துத் தருவார்கள்.
சாண்ட்விச் போல தடிமனான இதைசாப்பிடுவதற்கு ஒரு கோர்ஸே வைக்கலாம். இதன் டெக்ஸ்ச்சர் முறுகலும், பதமும்கலந்தது. இதன் மேலே குழம்பு ஊற்றி ஊறவைத்து சாப்பிடுவது தவறு. கையால்பிய்த்து சாப்பிடுவது சிறிது சிரமம்.
அதன் அபார சூடு நாம் சாப்பிட்டு முடிக்கும்வரை இருப்பதே அதன் காரணம். ஆகவேஇதை கை சூடு பொறுக்க நமக்குதேவையான சைஸில் விண்டு க்ரேவியில்தோய்த்து சாப்பிடணும். இன்று நீளமாஃபேமிலி தோசைன்னு ஓட்டலில்கிடைக்கிறதே.
அது போல இந்த முட்டை பரோட்டா அன்றுகடைகளில் காஸ்ட்லியான ஒருபண்டமாகும். ஒரே ஒரு புரோட்டா சாப்பிட்டாபோதும் வயிறு திம்னு நிறையும். ஓட்டலில்வேறெந்த உணவும் சாப்பிட முடியாது. நம்மமக்களுக்கு இது ஒன்று போதாதா.
இந்த வடிவ முட்டை பரோட்டா பெரியஅளவில் ஃபேமஸ் ஆகாமல் போக இது ஒருகாரணம். இன்னொரு காரணம் கல்லில்இதற்கான இட ஒதுக்கீடு. பெரும்பான்மைஇடம் இதுக்கே போயிடும், தோசை, ஊத்தப்பம், சப்பாத்தி போன்ற..
பிற சமூகத்து உணவுகள், ஆம்லெட், ஆஃபாயில், மட்டன், சிக்கன் ஃப்ரை போன்றஅசைவ மதத்து உணவுகளுக்கும், பிற்படுத்தப்பட்ட சாதா புரோட்டாசமூகத்திற்கும் பரோட்டா வேகும் கல்லில்இடம் கிடைக்காது. அன்று சாதா பரோட்டாபுதிய கட்சி.
சிலோன் பரோட்டா தன் புகழ் வெளிச்சத்தைஇழக்க இலங்கைத் தமிழர் பிரச்சனையும்ஒரு காரணம். தமிழுணர்வு பொங்க நாம்சிலோன் மனோகர் முதல் சிலோன்பரோட்டா வரை ஒதுக்கி வச்சிட்டோம், இப்பசாதா பரோட்டா கட்சி சிந்தித்தது.
சிலோன் பரோட்டாவில் என்னென்னபிரச்சனை இருக்கு, அதிலிருந்து எதைமாற்றணும், எதை சேர்க்கணுமுன்னுயோசிக்க ஆரம்பிச்சு பழைய ஃபைல்களைஎல்லாம் புரட்டிப் பார்க்க ஆரம்பிச்சதுகடைசியா 3 ஃபைல் அதோட மேசைக்குவந்தது.
முக்கியமான பிரச்சனை என்ன தான்சூடாகவே இருந்தாலும் அந்த சூட்டைபொறுத்துகிட்டு அதை பிய்த்து சாப்பிடுவதுகடினம். ஒரு முழு பீட்ஸாவை கட் செய்யாதுகையால் பிய்த்து சாப்பிடுவது போலசாப்பிடணும். இதை கரெக்டாகண்டுபிடிச்சாங்க.
இந்த முட்டையும் புரோட்டா மாவும் செம்புலப்பெயர் நீர் போலில்லாது தாமரை இலைதண்ணீர் போல சில இடங்களில் கழண்டுவந்துடும். இருடா உன்னை புரோட்டா கூடபின்னிப் பிணைக்குறேன் என்றுகண்டுபிடிச்சது தான் கொத்து பரோட்டா.
சாதா பரோட்டாவை பிச்சிப் போட்டு, வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்த்துபெப்பர் தூவி கொத்துக் கரண்டியால்கொத்து போட்டு தரும் ஐடியா உதித்தது யார்தலைக்குள் என்பது தெரியாது. ஆனால்அதுதான் வீச்சின் வீழ்ச்சிக்கு காரணம்
புது சூப்பர் ஹீரோ ஆகிவிட்ட சாதாபரோட்டாவுக்கு ஜோடி சேர விதவிதமானசால்னா ஹீரோயின்கள் களம் இறங்கினர். முட்டை கொத்தில் சால்னாவும் இடம்பிடித்தது. இந்த வேளையில் வாய்ப்பில்லாபழைய ஹீரோ வீச்சுக்கு புதிய வாய்ப்புவந்தது.
கவுரவமான சித்தப்பா, தாய்மாமன், நண்பன்போன்ற வேடங்கள் தருவது போல சாதாவீச்சு ஆனது வீச்சு புரோட்டா. அதென்னசாதா? முன்பு அகலமாக புடவை முந்தானைசைஸில் வீசிய மாவை ஒரு பெரிய கர்சீஃப்சைஸில் வீசணும்.
அதை நான்காக மடிக்காமல் அப்படியேகல்லில் போடுவாங்க. பாகுபலி சைஸில் ஒருஅமீபா இருப்பது போல அதன் வடிவம்இருக்கும். இதிலும் முட்டை வீச்சு வந்தது. ஆனால் இந்த வீச்சு, சிறிது ஏமாந்தால்நன்கு அப்பளம் போல முறுகிவிடும்.
இந்த முறுகலையும் வாங்கி நொறுக்கிப்போட்டு சால்னாவை ஊற்றி ஊற வைத்துசாப்பிடும், சிறு சமூகம் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் இவை எல்லாம்கொத்து புரோட்டா சாப்பிடும் அந்தசுகானுபவத்தை தரவில்லை.
இந்நேரத்தில் பன் பரோட்டா, பர்கர் பரோட்டா, கேக் பரோட்டா, காயின் பரோட்டா, நூல்பரோட்டா, ஒயிட் எக் பரோட்டா, சிக்கன்/மட்டன் பரோட்டா, நூடுல்ஸ் பரோட்டா, சாண்ட்விச் பரோட்டா, என்று தசாவதாரம்மட்டுமின்றி விக்ரமும் எடுத்தது சாதாபரோட்டா.
அப்புறமென்ன கேட்பாரற்று போனது வீச்சுபுரோட்டா. ஒரு காலத்தில் பரோட்டா கல்லில்பெரும்பான்மை இடத்தை ஆண்டு, முட்டையில் குளித்து, சதுரமாய் மடித்துபோஷாக்காக வலம் வந்து.. பிறகு சாதாவீச்சாக மெலிந்து உடைந்து..
வாய்ப்பில்லாத நடிகையாகிப் போனது வீச்சுபரோட்டா. இடைப்பட்ட காலத்தில் தம்புரோட்டா என்று வேறு ஒரு வடிவம் எடுத்ததுவீச்சு. ஆனால் அதை ஆர்டர் சொல்லிவிட்டுரயில்வே ஆன் லைன் போய் கூட டிக்கெட்எடுத்துவிடுவது எளிது.
அந்த தம் பரோட்டா ரெடியாகி நம் மேசைக்குவரும் போது நம் வயதில் சில மாதங்கள்கூடியிருக்கும். ஆனாலும் அதன் சுவைஅபாரமாக இருக்கும். வீச்சு பரோட்டாவுக்குமட்டன் குருமா ஆகச் சிறந்த இணையாகும். சால்னா இதற்கு செட்டாகாது.
பழைய என்ஃபீல்டு பைக்குள் திரும்பமோட்டார் மார்க்கெட்டுக்கு வந்தது போலஇப்போது வீச்சு பரோட்டா லாப்பா என்றபெயரில் வந்திருக்கிறது. முந்தைய முழுபீட்ஸா அனுபவங்களை களைந்து இப்போதுஅதை நான்காக அறுத்து தருகிறார்கள்.
எடுத்து சாப்பிட எளிதாக இருக்கிறது. முட்டை/சிக்கன்/மட்டன்/ மீன் என இதிலும்வெரைட்டிகள் வந்துவிட்டன. பனீர்/காளான்/ஆலு/கோபி/கார்ன் என சைவத்திலும்லாப்பா கிடைக்கிறது. சமீபத்தில் இறால்மசாலா சேர்த்த லாப்பா ருசிக்க கிடைத்தது.
வீச்சின் வடிவத்தை எளிதாக்கிஇருக்கிறார்கள். இன்றைய மெகா பரோட்டாசந்தையை அது வீழ்த்த வாய்ப்பில்லை. ஆனால் அதில் ஒரு அங்கமாக வீச்சுநீடிக்கும் அளவு அதன் வீச்சு இருக்குமாஎன்பது டிரிலிய்யன் டாலர் கேள்வி.
நிறைந்தது😜

No comments:
Post a Comment