“உதய்பூர்”- 3
கலர்ஃபுல் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. தரையிலிருந்து பறந்து வந்த பலூனில் தலை கீழாக தொங்கியபடியே வந்த பெண்ணின் சாகசங்கள் மெய் சிலிர்க்க வைத்தது. திறந்த வெளி பார்ட்டிகளில் இந்த சாகஸ நிகழ்ச்சியை வைக்கலாம். பலூனில் பறந்து வந்து மணமக்கள் கையில் பூமாலைகள் / பூங்கொத்துகள் வழங்குவது போலவும் ஏற்பாடு செய்யலாம்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் சிதார் & டிரம்ஸ் ஜுகல் பந்தி.. இரண்டும் நீருற்றுக்கு இரு புறமும் அமைந்த பளிங்கு மண்டபத்தில் நடந்தது. இசை மழை பொழிந்தது எனலாம். திருமணத்தில் நிச்சயதார்த்தம் அல்லது ரிசப்ஷனுக்கு இந்த நிகழ்ச்சிகளை வைக்கலாம், நிகழ்வு யுனிக்காக இருக்கும்! அதன் பின்னர் நடந்தது வானில் ஒரு வண்ண மாயாஜாலம்.
ஆயிரக்கணக்கான டிரோன்கள் பறந்து வந்து வானில் வண்ணக் கோலங்களை வரைந்தன. முன்பு SKY WRITES என எழுத்துகளை விமானத்தின் மூலம் எழுதுவார்கள். தற்போது லேட்டஸ்ட் டிரோன்கள் மூலம் வானில் இந்தியா மேப் முதல் ஏராளமான உருவங்களை வடிவமைக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் டிரோன்கள் பறந்தாலும் கவலையில்லை.
குறுக்கும் நெடுக்கும் பறந்தாலும் அவை ஒன்றுடன் ஒன்று மோதுவதும் இல்லை! அத்தனை துல்லியமாக திட்டமிட்டு ப்ரோகிராம் செய்கிறார்கள். வானில் மணமக்கள் பெயர், அவர்கள் குடும்பப் பெயர் திருமணத்திற்கு வந்திருக்கும் வி.வி.ஐ.பிகளின் பெயர், அவர்கள் பிராண்டின் பெயர் என்று வானில் 15 நிமிட தீம் டிரோன்களால் க்ரியேட் செய்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு AV பிரசண்டேஷன் போல வானத்தில் டிரோன்கள் மூலம் ஒரு பிரசண்டேஷன். இந்த டிரோன் ஷோ அடுத்த 10 ஆண்டுகளில் உச்சம் தொடும் என்கிறார்கள். டிரோன் ஷோ நடை பெற்ற 20 நிமிடமும் மக்கள் தலை நிமிர்ந்து வானைத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த ஷோவில் பயன்படுத்திய டிரோன்கள் 2025 புது மாடலாகும்.
இந்த ஆகஸ்டில் தான் அறிமுகமானது! அந்த டிரோன்கள் மிக மிக தட்டையாக ஸ்லிம்மாக இருந்தன முதலில் பச்சை நிறப் புள்ளிகளாக அது வானில் பறந்து வந்த போது யாரும் இப்படி ஒரு ஷோவை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். அடுத்தடுத்து ஆயிரக்கணக்கில் காலகேயர்கள் படை போல வானில் திறண்டு வந்த டிரோன்கள் நிகழ்த்தி காட்டிய ஜாலம், வாவ்.
டிரோன் ஷோவிற்கு பிறகு நடந்த நடன நிகழ்ச்சிகள் இன்னும் டாப். இதெல்லாம் திருமணங்களில் மாலை நேர நிகழ்ச்சியாக வைக்க உகந்தவை. அந்த இடத்தின் அலங்காரம், விளக்குகள் லேசர், ப்ளாஷ், பவுன்சிங் லைட்ஸ் எல்லாமே லேட்டஸ்ட் வெர்ஷனாகும். அடுத்து பாப் பாடல்களும், பிறகு எல்லா மொழிப் பாடல்களையும் பாட நிகழ்ச்சியில் களை கட்டியது.
அடுத்து எனக்குப் பிடித்த சமையல் & உணவுகள். நிச்சயம் வாடகைக்கு நான்கு வயிறு வேண்டும். அத்தனை வகை உண்வுகள். அதைப் பற்றி தனியாக எழுதுகிறேன். இங்கு என்னைக் கவர்ந்த உணவு கடலை மாவில் செய்த கோபா ரொட்டியும், நெய் தடவிய மிஸ்ஸி ரொட்டியும் தான் இதற்கு மட்டன் ரோகன் ஜோஷ் அல்டிமேட்டாக இருந்தது.
சீஸ், வெண்ணெய்க்கு தனி கவுண்ட்டரே இருந்தது. லைவ் கிச்சனில் கிடைத்த தக்காளி மிளகு ஆம்லெட் ஒரு அற்புதம். லிச்சியில் ஒரு ஜுஸ் குடித்தேன், கிளாஸிக்! ஸ்டாட்டர்களில் முந்திரிப் பருப்புடன் வறுத்த சிக்கன் ஒரு புதிய அனுபவம். டிக்காவில் குடை மிளகாய், வெங்காயம், கத்திரிக்காயுடன் வதக்கிய சாலமன் ஃபிஷ் அல்டியோ அல்டியாக இருந்தது.
இரவு 9 மணிக்கு துவங்கிய நிகழ்வுகள் 12 மணிக்கு முடிய அதன் பின் சாப்பிட்டுவிட்டு அறைக்கு திரும்பும் போது 1 மணி காலையில் 2 விமானப்பயணம், மும்பையில் ஊர் சுற்றியது, கார் பயணம் என உடல் சோர்வாகவும் மனம் மகிழ்வாகவும் படுக்கப் போனோம். அதிகாலை 8 மணிக்கு ஜன்னல் வழியே தன் கதிர் கரங்களால் சூரியன் எங்களை எழுப்ப எழுந்தோம்..
அறையின் பின்பக்க கதவை திறந்தால்.. வாவ்.! அழகிய நீச்சல் குளம்…
குளிப்போம்..




No comments:
Post a Comment