Friday, 20 February 2026

​“சங்கோத்யா ஆரண்யம்”



சரித்திர காலங்களுக்கு பல மில்லியன் ஆண்டுகளுக்குமுற்பட்ட வேத காலத்தில் இருந்தது தான் “சங்கோத்யாஆரண்யம்” எனும் பெருங் காடுஎண்ணிலடங்கா அறிவியல்மற்றும் விஞ்ஞான அற்புதங்களை இது தனக்குள் ஒளித்துவைத்துள்ளதுஅதையெல்லாம் தெரிந்து கொள்ள நாம் 56 கோடி ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும்பயணிப்போமா..


விந்தியமலைக்கு வடதெற்கே 5000 காத தூரத்தில் மேற்குநோக்கி அமைந்த கடலோரத்தில் அமைந்த மலைப்பாங்கானஅடர்ந்த கானகம் இதுஇந்த கானகத்தின் எந்தப் பகுதியிலும்கிழக்கு திசையே வராது இது ஒரு உலக அதிசயமாகும்இந்தக்காடு டைனோசர்கள் உலகில் உருவாகும் முன்பே பல வேதவிஞ்சாணிகள் பிறந்து வளர்ந்த பழம் பெருமை கொண்டகாடாகும்.


இந்த கானகத்தில் வசித்த ஒருவருக்கு கூட சூரியன் என்னும்ஒரு கோள் இருப்பதே தெரியாதுஆனால் இவர்கள் ஆரியன்என்ற கடவுளை வழி பட்டு வந்தனர்இவர்கள் பேசிய மொழிசங்கோத்ய கிருதம் என்னும் மொழி ஆகும்இதுதான் சமஸ்க்ருதத்தின் ஆதி மொழிஸ்ருங்கர பாஸ்கரசங்கோத்யாயா என்ற ஒரு ரிஷி அவர்களின் தலைமையில்தான் இந்த கானகம் இருந்தது


இந்த பாஸ்கர சங்கோத்யாயா பின்னாளில் விண் வெளிஆராய்ச்சியில் புகழ்பெற்ற இந்திய ரிஷியான பாஸ்கரரின்எள்ளுத் தாத்தா முறை ஆவார்புல்லரிக்கிறது அல்வாமேலும்உங்களை புல்லரிக்க வைக்கும் பல செய்திகள் இந்தக்கானகத்தின் ஒவ்வொரு மில்லி மீட்டர் புற்களுக்கும் அடியில்மறைந்துள்ளது.


அந்த அற்புதங்களைப் பற்றி கேட்டாலே தானாக உங்கள்காதுகள் ஆடும்லேசர் ஒளிஹாலோ கிராம் என்றால் இன்றுநமக்குத் தெரியும்ஆனால் அன்று இன்ஸ்டாகிராம் என்றால்எத்தனை கிலோ கிராம் என்று கேட்கும் காலத்தில் டெலிகிராம்மோனோ கிராம்போன்றவை பரவலாக புழக்கத்தில் APP ஆகவே இருந்துள்ளதாம்.


இதை தீவிரமாக ஆராய்ந்து தெளிந்த ஜெர்மன் விஞ்ஞானிகள்இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியைக் கண்டு மிகப்புழுக்கத்தில் இருந்தனராம்இதை அவர்களோடு நல்லபழக்கத்தில் இருந்த ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் வழக்கம் போலகுறிப்பு ஒன்றிலே எழுதி வைத்ததால் இன்று இந்தஉண்மையானது இந்த உலகிற்கு தெரிய வந்துள்ளது


மேலும் சங்கோத்யாயா வனத்தில் பல இடங்களில் சிசிடிவிகாமிராக்கள் வைத்திருந்தாராம்காட்டில் யாரும் வழிதவறிவிடக் கூடாது என்பதற்காக ஜிபிஎஸ்சும் கண்டுபிடித்தாராம்இந்தக் காட்டின் ஜியான எனக்கு எல்லாம்தெரியும் இனி நீ பேசாமல் சரி என்று சொன்னால் போதும்என்பதே (GPS) ஜி.பிஎஸ்ஸின் முழுமையான அர்த்தம்என்கிறார்கள் சர்வதேச விஞ்ஞானிகள்.


55 கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஏரோநாட்டிக்ரோபோட்டிக்ஜெனிடிக் மற்றும் பொட்டிக் பற்றிய ஆராய்ச்சிகள் இங்குநடந்துள்ளதுஇதை நீங்கள் எப்பாடு பட்டேனும் நம்பியேஆகவேண்டும் என்று சங்கோத்யாயா கெஞ்சிக் கதறி அழுதுஎழுதி வைத்துள்ளார்தென்னை ஓலைகளில் ராக்கெட்செய்வதுசுட்ட களிமண்ணில் கம்ப்யூட்டர் கோரை புல்லில்ரோபோ போன்றவற்றை தயாரித்தாராம்


இதை எல்லாம் நாஸாவே அதிர்ந்து போய் அச்சம் அடைந்தஅட்டகாசமான கண்டுபிடிப்புகளாகும்ஒரு கட்டத்தில்க்ரையோஜெனிக் தொழில் நுட்பத்தை முழுமையாககண்டறிந்த சங்கோத்யா ஏதோ ஒரு கோபத்தில் அதை மறந்துவிட்டாராம்அது முதல் முறை அல்ல எனவும் இதே போல அவர்பல முறை சினத்தில் அந்த நுட்பத்தை மறந்ததாகவும்ஆய்வாளர்கள் கூறுகின்றனர்


அதே போல சங்கோத்யாயாவிடம் எடுபிடிவேலை செய்தஎங்காத்யாயா என்பவர் AI டெக்னாலஜியை அன்றேகண்டுபிடித்து அதில் உருவாக்கியது தான் டைனோசர்இனமென்று கூறுகிறார்கள்அன்று பூமியில் சிங்கம்புலியானை போன்ற மிருகங்கள் தோன்றி இருக்கவில்லைஅப்போது உலகில் உயிர் வாழ்ந்த ஒரே மிருகம் யாளி மட்டும்தான்


யாளியை வைத்தே சிங்கம்புலியானைஒட்டகம் முதலானஅனைத்து மிருகங்களையும் AI மூலம் கண்டுபிடித்தது கானகஅறிஞர் எங்காத்யாயா தான்இதற்காக அவருக்கு 56 லட்சம்ஏக்கரில் ஒரு ஆய்வுக் கூடம் அமைத்துத் தரப்பட்டதாம்இவர்காலத்தில் தான் பல விஞ்ஞான அற்புதங்கள் இங்கு நடந்ததாம்அதை அவர் புத்தகமாக எழுதி புற்களுக்கு அடியில் ஒளித்துவைத்துள்ளாராம்.


ஒரு நாள் அறிவியல் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள கிழக்குதிசையில் பயணித்த சங்கோத்யாயா முதன் முதலில்சூரியனை கண்டு வியந்து போய் பத்து நிமிடத்தில்டெலஸ்கோப்பை கண்டுபிடித்துஅங்கேயே வானசாஸ்திரத்தில் பல கணக்குகளை போட்டு அதை சங்கோமொழியில் சுருக்கமாக எழுதி வைத்தாராம்அந்த மொழியில் ரே யா (ர்தும்கே ளிர்மே என்று எழுதியது தான்பின்னாளில் கணியன் பூங்குன்றனார்..


எழுதிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் பாடலுக்குஆதாரமாக இருந்தது என்றும்இதன் மூலம் சமஸ்கிருதத்தில்இருந்து தோன்றிய மொழியே தமிழ் என்பதும் புலனாகிறதுஅல்வாஆம் இந்த சங்கோத்யா காடு கண்ட அறிவியல்விஞ்ஞான முன்னேற்றங்களை அண்ட சாரசரங்கள் கூடவிளங்கிக் கொள்ள முடியாதது.


இப்போதும் சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி செய்த இடத்தில்ஆழமாக நன்றாகத் தோண்டினால் சங்கோத்யா காடு பற்றியஇன்னும் பல சுவாரஸ்யமான விஞ்ஞானஅறிவியல்உண்மைகள் கிடைக்கலாம்உலகளவில் இதைப் பற்றிமுழுமையான விவரம் அறிந்த அறிஞர்கள் இப்போதுசத்தமேயின்றி ஒரு விஞ்ஞானக் குழு அமைத்து அந்த ஆய்வில்தான் அல்லும் பகலும் ஈடுபட்டுள்ளனர்


ஆம்என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்.. ஏன் கையைஏந்த வேண்டும் வெளிநாட்டில்.. விரைவில் உண்மைகள் வெளிவந்தே தீரும்நமது வேத காலத்து பண்டைய பழம்பெருமைகொண்ட சரஸ்வதி நதிக்கரை ஆராய்ச்சி அந்த சரித்திரஉண்மையைச் சொல்லும்.. பாரதம் வெல்லும் 💪🏾🚩




No comments:

Post a Comment