இந்த வார்த்தையை உச்சரிக்கும் போது ஒரு இனிப்புப் பண்டத்தின் பேரை உச்சரித்த உணர்வே வராது. தலக் கறி, வடகறி, எலும்புக்கறி என்று அசைவக் கறிகளின் ஞாபகமே வரும். இடையில் ஜிலேபின்னு ஒரு பேரு குறுக்கே வரும், ஆனா ஜாங்கிரி வேறு, ஜிலேபி வேறு.
என்ன சொல்றிங்க? உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்குது. ஆம் ஜாங்கிரியும், ஜிலேபியும் ஒரே குடும்பம் தான் என்றாலும் இரண்டுக்கும் நிறைய வித்யாசம் உண்டு. ஜாங்கிரி முழுவதும் உளுந்து உபயோகித்து செய்வது, ஜிலேபியானது மைதாமாவில் செய்வது.
மைதா மாவை குழைத்து எண்ணெய்யில் முறுக்கு போல க்ரிஸ்பியா சுடுவது ஜிலேபி. உளுந்தில் மாவு அரைத்து பதமாக ஸ்பாஞ்ச் போல சுடுவது ஜாங்கிரி. இரண்டுமே பொரித்த பின்பு சர்க்கரை பாகு சேர்த்துத் தரணும். ஜிலேபிக்கான பாகில் புளிப்பு சேர்ப்பார்கள்.
ஜிலேபியை அந்தப் பாகில் நனைத்தாலே போதும், ஆனால் ஜாங்கிரியில் சர்க்கரைப்பாகு நன்கு இறங்கும்படி ஊற வைக்கணும். ஜாங்கிரியில் கோலம் போல சுற்றும் முறையை கண்டறிந்தவர் அநேகமா ஒரு ஆந்திரக் காரரா இருந்திட வாய்ப்புகள் இருக்கு.
ஏன்னா ஜிலேபியை பிச்சிப் போட்டா அப்படியே தெலுங்கு எழுத்துகள் மாதிரியே இருக்கும். இதில் ஏலக்காய், குங்குமப்பூ, கிராம்பெல்லாம் சேர்ப்பாங்க. எப்படி சாதா தோசையும், கோதுமை தோசையும் ஒன்றாகாதோ அப்படித்தான் ஜிலேபியும், ஜாங்கிரியும்.
ஜாங்கிரிக்கு ஜாங்கிரின்னு பேரு வச்ச முகலாய பாதுஷா யாருன்னு நீங்க ஈஸியா சொல்லிடலாம். மன்னர் ஜஹாங்கீர் தான் இந்தப் பெயரை வைத்தவர். ஜாங்கிரிக்கே ஜஹாங்கிர் என்றொரு பேருண்டு. ஆனா அவருக்கு ஏன் பாதுஷான்னு பேரு வச்சாங்களோ!?
முகலாய மன்னர்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல வகையான உணவுகள் தான் இன்றும் இந்தியக் கலாச்சார உணவுகளாக இருக்கின்றன. உ.பியில் உள்ள கோரக்பூர் தான் ஜாங்கிரிக்கு புகழ் பெற்ற ஊர். ஜாங்கிரி & ஜிலேபியின் தாயகம் ஈரான் நாடாகும்.
நம்ம ஊரில் அம்மனுக்கு ஆடிமாதம் கூழ் ஊற்றுவது போல ஈரானில் இன்றைக்கும் ரம்ஜான் நோன்பு திறக்க வரும் ஏழை மக்களுக்கு ஜிலேபியை இலவசமாக தினமும் விநியோகிக்கிறார்கள். பாரசீக மொழியில் சோல்பியா என்று ஜிலேபி அழைக்கப்படுகிறது.
நம்ம ஊரு டீக்கடையில் டீயோடு நாம வடை, பஜ்ஜி, போண்டா சாப்பிடுற மாதிரி குஜராத்தில் டீயோடு ஜிலேபி, டில்லியில் தயிரோடு ஜிலேபின்னு வெரைட்டியா சாப்பிடுவதை இன்றும் காணலாம். ஜிலேபி தான் இதில் அதிக நாடுகளில் கிடைக்கும்.
ஜாங்கிரி மட்டும் தமிழ்நாட்டு ஸ்டைலுக்கு மாறி விட்டது. ஈசியா இதை நினைவில் வச்சிக்க ஜிலேபி புளிப்பா இருக்கும், ஜாங்கிரி இனிப்பா இருக்கும்னு வச்சுக்கலாம். இனி இந்த சந்தேகம் இல்லாம ஜிலேபி & ஜாங்கிரியை ரசித்து ருசித்து சாப்பிடுங்க.. ஓகே 💜



No comments:
Post a Comment