தமிழக தேர்தல் 2031
(வாக்குப் பதிவு நாள் 2031 ஏப்ரல் 24 வியாழன்)
பங்கு பெறுபவர்கள் : (தேர்தல் அதிகாரி, நம் கதை மாந்தரானமாறன்)
(மொபைல் வீடியோ கால்.. லேட்டஸ்ட் காலர் டியூன் ஒலிக்கமாறன் எடுக்கிறான்)
வணக்கம் நான் உங்கள் சட்டமன்ற தொகுதி எண் 148 வாக்குஅதிகாரி குணசீலன் பேசுகிறேன்.
இது வாக்குப்பதிவுக்கான KYC அழைப்பு. இன்று காலை 8 மணிமுதல் இரவு 8மணி வரை இந்த சேவை இருக்கும். நாங்கள்தான் உங்களை தொடர்பு கொள்ள முடியும்.. இன்று வாக்களிக்கநீங்கள் தயார் தானே?!
மாறன் : யெஸ் குணா நான் ரெடி..
இந்தியத் தேர்தல் கமிஷன் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த அழைப்பு முழுவதும் பதிவுசெய்யப்படுகிறது என்பதை உங்களுக்கு தெளிவுடன்நினைவூட்ட விரும்புகிறேன்.
மாறன் : எனக்கும் தெரியும் குணா..
நன்றி.. நான் திரு. அன்பழகன் மாறன் அவர்கள் இன்று அவரதுவாக்கினை செலுத்துவதற்கு உதவி புரியவேஅழைத்திருக்கிறேன்.
வணக்கம் மாறன் உங்கள் செல்போன் ஆப்பிள் மேக்ஸ் 22 மாடல் உங்கள் போனின் IMIE எண் xxxxxxxxxxxx2456 இதைஉங்கள் தொடு திரை கணிணியோடு இணைத்துள்ளீர்களா ?
மாறன் : ஆமாம் குணா இணைத்துள்ளேன்..
சரி உங்களது ஆதார் மற்றும் ஓட்டுரிமை அட்டைகளின்ஒரிஜினலை கைவசம் வைத்துள்ளீர்கள் அல்லவா?
மாறன் : ஆம்! இரண்டும் இருக்கிறது.
நன்றி நீங்கள் ரோபோட் அல்ல என்பதை நிரூபிக்க இப்போதுஉங்கள் திரையில் தெரியும் கேள்விக்கு சரியான பதிலை க்ளிக்செய்யவும்.
(மாறன் பதிலளிக்கிறார்)
குணா: மிக்க நன்றி நீங்கள் ரோபோட் அல்ல என்பதுநிரூபணமாகிவிட்டது. இப்போது உங்கள் கண் விழியைஸ்கேன் செய்து ஆதாரோடு சரி பார்க்க உள்ளோம். உங்கள்ஸ்கிரீனில் தெரியும் கண் வடிவ ஐகானை நீங்கள்கண்ணிமைக்காமல் பார்க்கவும்.
(கண் ஸ்கேன் முடிவடைகிறது) இப்போது உங்கள் மெய்யானவாக்காளர் அடையாள அட்டையின் முன் பின் பக்கங்களைகேமிரா முன்பு காட்டவும்.. அடுத்து ஆதார் கார்டினை காட்டவும்(இரண்டும் காட்டுகிறார்)
மாறன் அவர்களே இப்போது உங்கள் இடது கை பெரு விரலைஉங்கள் திரையில் தெரியும் தம்ப் ஸ்கேனரில் நான் சொல்லும்வரை எடுக்காமல் வைக்கவும்.
(மாறன் விரல் ஸ்கேன் செய்கிறார்) இப்போது உங்களுக்கு ஒருக்யூ ஆர் கோடு வாட்ஸப்பில் வந்திருக்கும் அது தான் உங்கள்வாக்குச்சீட்டின் code
உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின்சின்னங்கள் 16.. திரையில் அவையனைத்தும் உங்களுக்குத்தெரிகிறதா.. இல்லையெனில்..
அந்த 16 பேரின் பெயர்களும் சின்னங்களும் உங்களுக்கு ஒருதனி ஃபோல்டராக கீழே தெரியும் அதை க்ளிக் செய்து சரிபார்க்கவும். (மாறன் சரி பார்க்கிறார்)
இப்போது உங்கள் க்யூ ஆர் கோடுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளபாஸ்வேர்ட் எண்ணை காப்பி செய்யவும். அது தான் உங்களதுஓட்டுச் சீட்டு எண்.
அந்த எண்ணை நீங்கள் வாக்களிக்க விரும்பும் நபரின்சின்னத்திற்கு எதிரே டைப் செய்து சப்மிட்டட் மை வோட்என்பதை க்ளிக் செய்யவும்.
(மாறன் அவ்வாறே செய்து முடிக்கிறார்)
நன்றி மிஸ்டர் மாறன்.. வாக்களிப்பது ஒரு இந்தியனின் கடமை.. இன்று அதை திறம்பட நிறைவேற்றி இருக்கிறீர்கள். இந்தியதேர்தல் ஆணையத்தின் தமிழக தேர்தல் டிவிஷன் உங்களைவாழ்த்துகிறது.
நான் உங்கள் தேர்தல் அதிகாரி குணசீலன் ரோபோட் எண்TN58 யாஷியாமா மேக் 2030 ஆம் வருடத்திய ஜப்பான் மாடல்.. 200 அல்டிரா டெராபைட் மெமரி.. 500 டெகாபைட் ஸ்பீட்…
2031 இல் வாக்குப்பதிவு இப்படியும் இருக்கலாம் அல்லவா..
கருத்தும் கற்பனையும் : வெங்கடேஷ் ஆறுமுகம்✅

No comments:
Post a Comment