‘தூத்பேடா’ என்று அழைக்கப்படும் இந்த ஸ்வீட் மில்க்ஸ்வீட் சாம்ராஜ்யத்தின் முதல் மன்னனாவான். இவனது மென்மையான வரலாற்றை இந்தப் பதிவில்ருசிப்போமா..
இரும்புச் சட்டியில் பாலும் சர்க்கரையும் சேர்த்துஎம்ஜிஆர் & நம்பியார் கத்திச் சண்டை போடுவதுபோன்ற லாவகத்தில் கரண்டியால் கிளறிக் கொண்டுஇருப்பார்கள் எங்கள் கடை மாஸ்டர்கள்.
சிலநேரங்களில் என் அப்பாவே இந்த கத்திச்சண்டையில் ஈடுபட்டு இருப்பார். இந்த பால் சர்க்கரைகலவைக்கு “கோயா” என்றும் “கோவா” என்றும்பெயர். இது தான் நிஜ பால் கோவா என்பார் அப்பா.
தூத்பேடா, கலாகந்த், ஶ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, எல்லாம் திக, திமுக, அதிமுக, மதிமுக போல வேர்ஒன்று தான். இதன் சிறு சிறு செய்முறை மாற்றத்தால்அதன் டெக்ஸ்ச்சர் மாறும்.. ருசியும் மாறும்.
ஆனால் அனைத்திலும் 75 சதவீதம் அந்தகோவாவின் ருசி அதே தான். இந்த தூத் பேடாக்களில்குறிப்பிட்ட சில புகழ் பெற்ற பேடா வகைகள் உண்டு. கர்நாடகாவில் தர்வாத் பேடா ரொம்ப பிரசித்தமானது.
அந்த பேடா பிரவுன் (அ) பழுப்பு நிறத்தில் இருக்கும். தமன்னா நிறத்தில் பால் பேடா தெரியும், அதென்னடாயோகிபாபு நிறத்தில்னு நீங்கள் நினைக்கலாம், ஆனாதர்வாத் பேடாவின் ருசி வேறு ரகம்.
நியாயமா பார்த்தா பாலில் எடுக்கும் லாக்டோ பிரவுன்நிறமே. பேடாக்களின் பேரரசன் என தர்வாத்பேடாவை கூறலாம். கர்நாடக மண்ணில் இதைருசிக்கும் யாவரும் “பேடா” என்று சொல்லாமல்..
‘பேக்கு’ என்று கேட்டு வாங்கி ருசிப்பார்கள் அடுத்துஉத்திர பிரதேசத்தின் மதுரா பேடா, இது நம் ஸ்கூல்நோட்டுக்கு அட்டை போடும் அசட்டு பிரவுன் கலரில்இருக்கும். இதுவும் தனித்த ருசியில் இருக்கும்.
அடுத்து கண்டி பேடா.. சட்டுன்னு பார்த்தா உருளைக்கிழங்கை கொட்டி வச்சா மாதிரியே இருக்கும்மகாராஷ்டிராவின் சதாரா நகர சிறப்பு பலகாரம் இது, இதுவும் பழுப்பு அல்லது அடர் பச்சை நிறமுள்ளது.
வட இந்திய பேடாக்கள் பெரும்பாலும் பசுஞ் சாணபழுப்பு நிறத்தில் இருப்பது என்ன குறியீடு என்பதுசத்தியமா எனக்குத் தெரியாது. அடுத்தது மலாய்பேடா, இதன் நிறம் பளிச்னு எ(தெ)ரியும்.
ஆம் ப்ளோரசண்ட் பச்சை (அ) எலுமிச்சை பச்சையில்இருக்கும். இந்த நிறம் நம் கண்ணைப் பறித்தால் இதன் ருசி நம் நாவைப் பறிக்கும். அடுத்ததாகவருவது கேசர் பேடா குங்குமப்பூ கலந்து செய்வது.
இது மங்களகரமான மஞ்சளில் இருக்கும்.. சாக்லெட்பேடா, பிஸ்தா பேடான்னு கலர் கலரா இருந்தாலும்வெண்ணிற தூத் பேடா தான் மனதிற்குஅமைதியைத் தரும் அமைதியின் நிறமே வெள்ளைதானே.
இதன் மேலே பிஸ்தா, முந்திரி, பாதாம் பருப்பைதுருவித் தூவி தருவதும் உண்டு. அதெல்லாம் தெய்வலெவல் ருசியாகும். இருந்தாலும் கோவா அடித்துஇறக்கி அதை உருண்டையாக்கி அப்பா போட..
நானும் தம்பியும் அதை பேடா அச்சில் வைத்துஅழுத்தி அதற்கு அழகிய வடிவம் கொடுப்போம். இப்போது நினைத்தாலும் இனிக்கிறது. எந்த ஒருஉணவுப் பொருளின் தயாரிப்பாக இருந்தாலும் சரி..
அதன் பக்கா டீடெயிலை நம்ம வடிவேலு “நாங்களும்கீழ்மட்டம் வரைக்கும் டீப்பா போயி அலசுவோம்னு” சொல்வாரே, அதுபோல அப்பா பொறுமையாகச்சொல்வார் சிறிதும் தயங்கவே மாட்டார்.
அவர் சொன்னதைப் பற்றி நம்மிடம் என்ன புரிந்துகொண்டாய் என திரும்பவும் கேட்கமாட்டார். ஆனால்எங்களிடம் எதையும் சொல்லாமல் இருக்கமாட்டார். அது அவரது கடமை போல சொல்வார்.
அப்பா என் தம்பிக்கு அவரது உணவுத் தொழிலையும்எனக்கு அந்த உணவின் உணர்வுகளையும் சொல்லித்தந்தவர் அதெப்படி அன்றே எங்களை கணித்தார்இன்றைக்கும் எனக்கு அது ஆச்சரியமே!
ஆம் அப்பா பேடாக்களை மட்டுமல்ல தனது“பேட்டாக்களை” பற்றியும் நன்கு புரிந்து கொண்டவர். அந்த பால்கோவா நிறம் போலவே வெள்ளைமனமுள்ளவரால் தானே இதெல்லாம் முடியும் 💜💜🥛

No comments:
Post a Comment