பாட்ஷ, மாணிக்கம், மாணிக் பாட்ஷா கேரக்டர்கள்போல நமது தமிழ்நாட்டில் ஆமவடை, பருப்பு வடை, மசால் வடை என்று பல்வேறு பெயர்களில்அழைக்கப்படும் மசால்வடையின் ருசி மிகவும்தனித்துவமானது.
எட்டத்துல பார்த்தா தாண்டா காமெடியா இருப்பேன்.. கிட்டத்துல பார்த்தா டெரரா இருப்பேண்டான்னு நம்மவடிவேலு சொல்ற மாதிரி இதை சூடா சாப்பிட்டா ஒருருசியிலும் ஆறிப்போய் சாப்பிட்டா இன்னொருருசியிலும் இருக்கும்.
நம்ம ஊர்களில் உள்ள லோக்கல் You Tuber விடியோமுதல் ஹாலிவுட்டின் பிரம்மாண்ட அவதார் படத்தயாரிப்பு வரை இருக்கும் வித்யாசம் போல இந்தமசால்வடை கோலி குண்டு சைசில் துவங்கிடோனெட் சைஸ் வரை இருக்கு.
இன்றும் மதுரையில் ₹10க்கு ஐந்து வடைகள் கோலிசைசிலும் கிடைக்கிறது. 1 வடை ₹12 என டோனட்சைஸிலும் கிடைக்கிறது. வடை அளவை பொறுத்துருசியும் மாறுபடும். பொதுவா இந்த மசால்வடைக்கான மாவை நறநறன்னு அரைக்கணும், அதான் பெஸ்ட்.
சிலர் கொஞ்சம் இரக்கம் காட்டி துவையல் பதத்தில்ஆட்டிவிடுவார்கள். அது சூடா சாப்பிட்டா மட்டுமேநல்லா இருக்கும். ஆறிட்டா கல்லு போல ஆகிடும்மொறு மொறுன்னு மேற்புறமும் உள்ளேமென்மையாவும் இருப்பதால் தான் ஆமவடைன்னுபேரு வந்துச்சாம்.
இந்தப் பெயர்க் காரணம் இன்று வரை மதுரைவடைப்பிரியர்களின் நடுவே அசைக்க முடியாதநம்பிக்கையாக இருந்து வருகிறது. மதுரையில்மட்டும் தசாவதாரம் கமலை விட அதிகமானகெட்டப்புகளில் மசால்வடையானது பல“பாத்திரங்களில்”வீற்றிருக்கும்.
பொதுவாக சட்னி வகைகள் வைத்து சாப்பிடதேவையில்லாத வடை மசால் வடை. இருப்பினும் சிலகடைகளில் இதற்கென்றே சில பிரத்யேக சட்னிகள்வைத்திருப்பார்கள். பச்சை மிளகாய், இஞ்சி புதினாபோன்ற சட்னிகள்..
பாம்பே குருமான்னு மசால் வடையோடு குழம்பிஅடிக்கும் பகாசூரர்களை மதுரையின் சாலைஓரங்களில் மானாவாரியாக காணமுடியும். அசால்டாகஆறு வடைகளை சாப்பிட்டு ஒரு டீ சொல்லும் கண்கொள்ளா காட்சிகள் இங்கு மட்டுமே கிடைக்கும்.
தேங்காய் சட்னி இதற்கு ஓரளவு ஏற்றது. அதிலும்ஹார்பிக் கம்பெனிக்கே முன்னோடியாக சிவப்புமிளகாய் பச்சை மிளகாய்னு 2 வித நிறங்களில்தேங்காய் சட்னி கொடுத்து அசத்தும் மசால் வடைநேசர்களும் மதுரையில் மட்டுமே உண்டு.
அண்ணா பஸ் ஸ்டாண்ட் சங்கர் காபி கடையின்மசால்வடை ஒவ்வொன்றும் டோனட் சைசில்இருக்கும் 1 வடை 1 டீ சாப்பிட்டாலே 3 மணி நேரம்பசிக்காது. ப்ரீத்திக்கே நான் தராத கேரண்டியைத்நான் இந்தக்கடை வடைக்குத் தருவேன்.
90களில் அழகப்பன் நகர் பாண்டியன் தெருவில்இருந்த பார்வதி அக்கா டீக்கடை மசால் வடைக்கு படுஃபேமஸ். அவர் கடை மசால் வடை ஒவ்வொன்றும்பாகுபலி போல் பிரம்மாண்டமானவை இன்றைக்குபெரிய ஓட்டல்களில் கிடைக்கும் மசால்வடையின்அளவை விட கிட்டத்தட்ட 4 மடங்கு பெரிதானவை.
எனவே தான் பார்வதி கடைக்கு கால கேயர்களாய்பலர் (ப) வடையெடுத்தனர். கிருஷ்ணாபுரம் காலனி, கூடல் நகர், மேலமாசி வீதியில் கோலி குண்டுசைஸிலும், மதுரை வடை ஃபேக்டரிகளில் பலசைசிலும் மசால்வடைகள் தினமும் லட்சக்கணக்கில்சுட்டுத் தள்ளுகின்றனர்.
மதுரையைத் தாண்டி சிவகாசி, விருது நகர், அருப்புக்கோட்டையிலும் இதே போலத்தான். நெல்லை மாநகர் அல்வாவின் பிடியில்சிக்குண்டதால் அங்கு மசால்வடை மதுரை அளவுஃபேமஸ் இல்லை! அப்படியே நாரோயில் பக்கம்போனா அங்கு நவரசமும் மிளிரும்.
இதே வடையை கொஞ்சம் மென்மையாக அரைத்துஅதை ரசத்தில் ஊற வைத்து ரசவடையாகத்தருவார்கள். நாஞ்சில் நாட்டு மிளகின் காரமும், குடம்புளியின் புளிப்பும் கலந்த சூடான ரசத்துடன்வடை வாய்க்கு ருசியாக அருமையாக இருக்கும்.
சேலம்,கோவை, ஈரோடு பக்கமெல்லாம் பூண்டு தட்டிப்போட்ட மசால்வடைக்கு உயிரையும் தருவார்கள். தமிழகத்தில் பல உடுப்பி ஓட்டல்களின் ஃபேவரைட்ரெஸிபி இந்த மசால்வடை. புளியோதரை, தயிர், எலுமிச்சை, போன்ற சிற்றான்னங்களுக்குபொருத்தமான ஜோடியாகும்.
சேலத்தில் குகை எனும் பகுதியில் இருந்த எங்கள்ஓட்டலில் தயிரில் மசால்வடையை ஊற வைத்துதருவோம். அன்று அதை சாப்பிட ஒரு பெரும் சிங்கக்கூட்டமே குகை வாசலில் காத்திருந்தன. அதன் தயிர்வடையின் செய்முறை ஃபார்முலா எங்கள் தொழில்ரகசியமாகும்.
நல்ல மழை பெய்யும் ஒரு மாலை நேரத்தில்ஜன்னலோரம் அமர்ந்து ஏலக்காய் மணக்க சூடானஒரு மசாலா டீ அல்லது சிக்கரி மணக்கும் அற்புதமானஃபில்டர் காபி இதோடு இஞ்சி, புதினா, மல்லிசட்னிகளை வைத்துக்கொண்டு..
சுடச்சுட மொறு மொறுப்பான பூண்டு தட்டிப் போட்டமசால்வடையை கடித்துக்கொண்டு நமக்குப் பிடித்தபாடலை கேட்கும் சுகம் இருக்குதே அதுதான் சார்சொர்க்கம் என்பது. மசால்வடை மசால்வடைதான்யா..

No comments:
Post a Comment