“பெசரட் தோசை”
பெத்தராயுடுகள் வாழும் அக்கட தேசத்து உணவு. சிவப்பான ஆந்திர காரத்தையே பார்த்து பழகியகண்ணுக்கு பச்சை நிறத்தில் ஒரு பதார்த்தத்தைப்பார்த்து இச்சை வருவது யதார்த்தம் தானே.
ஆந்திராவில் முதன் முதலில் பெசரட் தோசையின்பச்சை நிற மேனியில் லயித்து ஆர்டர்செய்துவிட்டேன். சிறிது நேரத்தில் தட்டில் கொதிக்ககொதிக்க உப்புமா எடுத்து வந்தார் வொக தம்புடு.
வந்த கோபத்தில் ஓட்டலே அதிரும்படி கத்திவிட்டேன். ஏமிரா இதி தோசை கேட்டு சப்பாத்தி கொண்டு வந்தாகூட பரால்ல.. இக்கட ஏமிரா உப்மா வொஸ்துன்னதி? என எனது சுந்தரமில்லாத தெலுங்கில் கூவ..
கடைக்குள்ளிருந்து தெலுங்கு சுந்தரி ஒருவர் வந்துசார் நீங்க பெசரட் தோசை ஆர்டர் பண்ணிங்களா? என்றாள் தமிழில். நான் பேசிய தெலுங்கில்என்னைத் தமிழன்னு கண்டு கொண்டாள் போல.
கோபம் குறையாமல் “ஆமாங்க இப்படியாசெய்விங்க? என்றதும் “சார் இங்க உப்மா பெசரட்தோசைக்கு தொட்டுக்க தான்” என்றாள். அடதோசைக்கு தொட்டுக்க உப்புமாவா? எனது ஆச்சரியம்பெருகியது.
“அவுனே பாபு” ஈ உப்மா தோசைக்கு பேரு எம்.எல்.ஏபெசரட்டு என்றார் தம்புடு. எனது உருவத்தை பார்த்துநம்மை ஒரு ஆந்திர MLAனு நினைச்சுட்டான் போல. சரி வரட்டும் தோசைன்னு காத்திருந்தேன்.
பெயர்க் காரணத்தை சுந்தரி சொன்னார் நீண்ட நேரம்சட்டசபை நடக்கும் காலத்தில் சீக்கிரம் பசிக்காமல்இருக்க இது ஒரு MLA சொன்ன செய்முறையாம். ஹைதராபாத் எம்.எல்.ஏ கேண்டீனில் உருவானதாம்.
தோசை வந்தது.! தோசைக்குள்ளும் நம்ம மசால்தோசை போல உப்புமாவை ஸ்டஃப்செய்திருந்தார்கள். தொட்டுக்க அல்லம் பச்சடி எனும்இஞ்சி சட்னியும், தேங்காய் சட்னியும் கொண்டு வந்துவைத்தனர்.
முழுக்க முழுக்க பாசிப் பயறு ஊற வைத்து அதில்இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மாவாகஅரைத்து இந்த தோசையை வார்க்கிறார்கள். உப்புமாஇல்லாத கவுன்சிலர் பெசரட்டும் உண்டு.
அப்படியே நம்ம ஊர் இட்லி கடைகள் போலவேஆந்திராவில் பெசரட் கடைகள். உப்புமாவின் குழைவு, ஊற வைத்து மாவு அரைத்த பக்குவம், பாசிப்பயறின்தரம் இதை பொருத்து பெசரட்டின் தரமும். சுவையும், விலையும் மாறுபடுகிறது.
ஒரு முறை விஜயவாடாவில் பெசரட்டுக்கு ஏதோ ஒரு புலுசு என்று ஒரு மீன் தொக்கு தந்தாங்க. தேவாமிர்தம் மட்டுமில்லை இளையராஜாமிர்தம்போலவும் இருந்தது. பெசரட்டுக்கு மாவு பக்குவம்வேண்டும்.
அதுதான் பெசரட்டின் தரத்தை ருசியைதீர்மானிக்கிறது. நமது ஹைதராபாத் தோழி ஒருவர்உப்புமாவோடு முட்டைப் பொரியல் போல செய்துபெசரட்டுக்கு தந்தார். அடடா! அப்படி ஒரு ருசி அது.
சட்னிகள் விரும்பும் கலாபக் காதலன் தான் பெசரட்.. பச்சடிக்கு புகழ் பெற்ற பாகுபலி ராஜ்ஜியத்தில்காளகேயப் படைகள் போல ஏராளச் சட்னிகள் தொடுகறியாக உள்ளது, உங்களால முடிஞ்சா தொட்டுப்பாருங்க..
🔥 நிம்தா.. தூஸ்ரத் தெல்மி.. அர்த்தபுஷ்.. க்ராக் வைக்.. நிம்பும்ல.. மொய்ன சுக்கு..🔥
அட! பெசரட்டு சட்னிகள் பத்தி ஒரு தனிப் பதிவுவிரைவில் என்பதை தான் காலகேய மொழியில்சொல்லியிருக்கேன்😜🔥


No comments:
Post a Comment