அந்த அரங்கம் மிக மிக மிக ஆனந்தமாக இருந்தது.. அந்த அரங்கில் பல்வேறுஅறிவிப்புகள் வர மக்கள் உற்சாக மிகுதியுடன் முழக்கமிட்டுக்கொண்டிருந்தனர்..
திடீரென உலகளவில் இந்தியப் பங்கு சந்தை மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துஅமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு 0.50 பைசாவுக்கு வந்ததால் பல வரிகளைரத்து செய்து,ஒரு லிட்டர் பெட்ரோல் இனி 1 ரூபாய் தான் என்று அரசுஅறிவித்தது.
GST வரி இனிமேல் வசூலிக்கவே படாது என்றும் 0% GST நாளை முதல்கமலுக்கு வரும் என்றும்,மேலும் இது நாள் வரை மக்கள் கட்டிய மொத்த GST தொகையும் 56% வட்டியுடன் திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வந்தது.
இது எங்களால் கூட முடியாத சாதனை ஆகவே நாங்கள் உலக அரசியலில்இருந்து விலகுகிறோம் என்று டிரம்ப்பும், புதினும் கூட்டாக அறிக்கைவிடவடகொரியாவும் அதை ஆமோதிக்க..
அமெரிக்காவில் வசிக்கும் ஒட்டு மொத்த இந்தியர்களும் சுந்தர் பிச்சைதலைமையில் இனி அமெரிக்கா பக்கம் தலை என்ன கால் விரல் வைத்து கூடபடுக்க மாட்டோம் என்று இந்தியாவுக்கு திரும்பி வர..
இனி மேல் தமிழக மீனவர்களின் மீது தாக்குதல் நடத்தினால் இலங்கை மீதுபோர் தொடுப்போம்... இதே நிலை தான் சீனா & பாகிஸ்தான் எல்லைநாடுகளுக்கும் எனும் பிரகடனம் வர..
கலங்கிய இலங்கை கச்சத்தீவு மட்டுமல்ல அங்குள்ள மிச்சத் தீவுகளையும்இந்தியாவுக்கே என்று அறிவித்து மத்திய அரசிடம் வெற்று ஸ்டாம்ப் பேப்பரில்12 பிளாங்க் செக்குகளுடன் கையெழுத்து போட்டுத் தர..
அருணாசல பிரதேசம், முதல் இமயமலை வரை சீனா தான் ஆக்ரமித்தபகுதிகளை இனி இந்தியாவுடன் வாலாட்ட மாட்டோம் என தலை வணங்கிகூறிவிட்டு இதே போல பத்திரத்தில் கையெழுத்து போட்டு தந்துவிட்டுபத்திரமாக பீஜிங் திரும்பிட..
இனி எங்களால தனியா எதுவும் முடியலண்ணே நாங்க மறுபடியும்இந்தியாவுடன் வந்து இணைஞ்சிக்கிறோம்னு பாகிஸ்தான் கதறிக் கதறிகண்ணீர் விட..
ஆம் ஆத்மி கட்சியைக் கலைத்துவிட்டு கைலாசாவில் போய் குடியேறுகிறேன்என்று கெஜ்ரிவால் அறிவிக்க..
தேச ஒற்றுமைக்காக நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறேன் என்று ராகுல்காந்தி தெரிவிக்க..
காவிரியில் இருந்து எவ்வளவு நீர் வேண்டுமானாலும் தமிழ்நாட்டுக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என கர்நாடகா அரசு நம் காலில் விழுந்து கெஞ்ச..
அந்த விநாடியில் நாட்டு மக்கள் அனைவரின் மொபைலிலும் 15 இலட்சம்கிரெடிட் ஆகிய மெசேஜ் வந்து பலர் அதிர்ச்சியில் மூர்ச்சை ஆகி விழ..
தேர்தலில் எப்போதும் போட்டியிடவே மாட்டேன் என ரஜினி சூளுரைக்க, நாட்டுநலனுக்காக திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்து இனி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆள்வோம் இரு கட்சியிலும்..
சரிபாதி எண்ணிக்கையில் அமைச்சரவை அமையும் அதில் ஐந்தாண்டுகளுக்குமாற்றமே கிடையாது என்றும் இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் டாஸ்மாக்மூடப்படுகிறது என்று ஸ்டாலினும் எடப்பாடியும் கூட்டாக அறிவிக்க..
இனி எந்த கட்சியுடனும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என வீரமணியும், திருமாவும், பிரேமலதாவும் இணைந்து சபதமேற்க.. இனி காதல் திருமணம்செய்வோருக்கு புகலிடமே நாங்கள் தான் என அய்யா முழங்க, அன்புமணியும்அதை கைத்தட்டி வரவேற்க..
காங்கிரசில் இனி கோஷ்டிகளே இல்லை என கார்த்தி சிதம்பரம் அறிவிக்கஅதை திருநாவுக்கரசர் முன்மொழிய,வாசன் வழிமொழிய, பீட்டர் அல்போன்ஸ்உறுதியேற்க, ரவிக்குமார் செயல்படுத்த...
இனி ஒரு பைசா கூட வாங்காமல் IPL கிரிக்கெட் ஆடுவோம் என காம்பிர்தலைமையில் அனைவரும் சொல்ல.. நடிகர்கள் அனைவரும் ஒழுங்காகவரிசெலுத்த ஒப்புக் கொள்ள..
அம்பானி தலைமையில் தொழிலதிபர்கள் இனி கறுப்பு பணம் பதுக்கமாட்டோம்.. எந்த அரசியல் கட்சிகளுக்கும் நிதி வழங்க மாட்டோம் எனஉறுதியேற்க..
இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடைபெறும்என்ற அறிவிப்பை தொடர்ந்து மாஸ் பிஜீஎம் ஒலிக்க அந்த அரங்கம் அதிர நடந்துவந்தவரைப் பார்த்து கைத்தட்டல் சப்தம் காதைப் பிளந்தது…
அவன் கனவும் அத்தோடு கலைந்தது...
No comments:
Post a Comment