Dumpling
கடைஞ்செடுத்த கஞ்சப் பயலுக்கு தர்மப்பிரபுன்னு பேரு வச்சா மாதிரி பெரும்பான்மை மக்கள் ஸ்லிம்மா வாழுற சீனாவில் உருவான ஒரு உணவுக்கு கொழுக்கட்டைன்னு யாரும் பேரு வைப்பாங்களா பாஸ்?
ஆனா நாம அப்படித்தானே வச்சி இருக்கோம். எதே கொழுக்கட்டை சீன உணவா? தமிழ்நாட்டு உணவு இல்லியா? ஆம்.! அதன் தாயகம் சீனா தான். இன்றல்ல நேற்றல்ல, இது கி. மு 206 இல் தோன்றியது!
அப்படியே ஒரு டைம் மிஷின் ஏறி சீனப் பெருஞ்சுவர் கட்டுவதற்கு முன்பு இருந்த சீனாவுக்குள் போலாமா? கி.முவில் தோன்றிய ஜியாவோஸி (Jiaozi) . பின்பு கிபி 25ல் சீனாவெங்கும் பிரபலமானது.
கி.பி 25 - 206 இல் கிழக்கு ஹான் வம்சகாலத்தில் புகழ்பெற்ற சீன மருந்தியல்அறிஞர் ஜாங் ஜோங் ஜிங் என்பவரால் ஜியோவோஸி “மென்மையான காதுகள்” என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டது.
ஒரு கடும் குளிர்காலத்தில் ஜாங் ஜோங்ஜிங்தனது சொந்த ஊருக்கு போகும் வழியில்பல ஏழை மக்கள் நல்ல உணவும் குளிர்உடைகளும் இல்லாததால் காதுகள்உறைந்து துன்பப்படுவதை அவர் கண்டார்.
அவர்களுக்காக ஆட்டிறைச்சி, கரு மிளகுமற்றும் உடலைச் சூடாக்கும் மூலிகைமருந்துகளை ஒன்றாக வேக வைத்து, அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிசிறிய மாவு உறைகளுக்குள் நிரப்பினார்.
அவற்றை கொதிக்கும் நீரில் வேக வைத்து, சூடான ரசத்துடன் சீனப் புத்தாண்டு வரும்வரை மக்களுக்கு வழங்கினார். இந்தஉணவு பலரது உடல்நிலையும், உறைந்து போன காதுகளையும் குணப்படுத்தின.
அதன் பின்னர் ஜியோவோஸி சீனப் புத்தாண்டின் முக்கிய உணவானது. நமது ஊரில் பூரணம் போல அங்கு காய்கறி, இறைச்சி, முட்டை, கீரை என உள்ளே நிரப்பி வைத்து அதை வேக விட்டு பரிமாறுகிறார்கள்.
அங்கு ஜுன் மாதம் நடக்கின்ற டிராகன் திருவிழாவின் முக்கிய உணவு இது. இதற்கு Dim Sum, Dumpling போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. நம்மூர் அட்சய திருதியை போல அங்கு புத்தாண்டு.
புத்தாண்டு நள்ளிரவில் இதை குடும்பத்தினரோடு சேர்ந்து சாப்பிடுவதுசெல்வமும் வளமும் பெருகும் என்றநம்பிக்கை இன்றும் சீன மக்களிடம்நிலவுகிறது. நம்மூர் இட்லி போல சீனாவில் கிடைக்கும்.
காலை, மாலை, இரவு என எல்லா நேரத்திலும் இதை சீனர்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள். தெருவோரக் கடைகள் முதல் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் வரை நீக்கமற நிறைந்து இருக்கும் உணவு இந்த டம்ப்லிங்.
ஒரு பிளேட்டில் 10 டம்ப்லிங்குடன் ஒருருசியான டிப்பிங் சாஸ் வழங்கப்படும். அதில் வினிகர், சோயா சாஸ், பூண்டு, இஞ்சி, அரிசிஒயின், காரச் சாஸ், ந.எண்ணெய்
போன்றவை முக்கியமானவை.
இன்று செல்வத்தின் சின்னமாக உள்ள டம்ப்லிங் சீன மக்களின் கலாச்சாரம், குடும்பஒற்றுமை மற்றும் புத்தாண்டு மகிழ்ச்சியைபிரதிபலிக்கும் ஒரு அற்புதமான உணவாகவிளங்குகிறது.

No comments:
Post a Comment