அதிமுகவிற்கு இரட்டை இலை போல சமையலில்தமிழ்நாட்டு அம்மாக்களுக்கு பருப்பு சோறு. தன்குழந்தைக்கு பருப்பு சோறு பிசைந்து ஊட்டாத தாய்இனிமேல் தான் இங்கு பிறந்து வளர வேண்டும்.
பருப்பு சோறு மிகவும் ருசியான எளிதில்சமைத்துவிடக் கூடிய சமச்சீர் சத்துகள் நிறைந்தஉணவாகும். இதனை ஒரே ஒரு சிறிய மாற்றத்தில்குழந்தைகளுக்கும், நமக்கும் பிடிக்கும்படிசமைக்கலாம்
வாங்க பருப்பு சோற்றை ரசித்து ருசிப்போம்..
டிவில்லியர்ஸ், சூர்யகுமார்யாதவ் போன்ற அதிரடிபேட்ஸ்மேன்களுக்கு வீசுகிற பந்துகளெல்லாம்ஃபுல்டாஸாக இருந்தால் ஆட்டம் எப்படி களைகட்டுமோ அது போல சோறு மட்டும் சிறிதுகுழைந்துவிட்டால் பருப்புக்கு கொண்டாட்டம் தான்.
குழைந்த சோற்றில் சூடாக ஒரு ஸ்பூன் நெய்விட்டுபருப்பை அதனுடன் சேர்த்து குழைத்துபிசைந்துவிட்டால் அடடா! அந்த வாசனைக்கேஐந்தாறு வாய் சோற்றை வெறுமெனசாப்பிட்டுவிடுவார்கள்.
குழந்தைகளுக்கு வெறும் பருப்பை தேவையானஉப்புடன் குழைய வேக வைத்தால் போதும். பெரியவர்களுக்கு நான்கைந்து வரமிளகாய் கடுகுஉளுந்து போட்டு தாளித்து சேர்த்தால் போதும்.
கன்னத்தில் மரு வைத்த மாறுவேடம் போல இந்தசிறிய மாற்றம் பருப்பை இன்னொரு ஹீரோவாகமாற்றிவிடும். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள்கூட பருப்பு சோற்றை சாப்பிடாமல் இருக்காது.
குழந்தைகளுக்கு இதை தயாரிப்பதே தனிக் கலை, சிலர் பருப்பை வேக வைத்து கடைவார்கள்.. சோற்றைகுழைவாக இல்லாமல் செய்து இருந்தால் அதைசூடான சோறாகவே கொஞ்சம் எடுத்து அதனைகரண்டியால் நன்கு மசிப்பார்கள்.
பிறகு அதில் நெய் ஊற்றி பருப்பு சேர்த்துபிசைவார்கள். சோறு பருப்பு இரண்டையும் சேர்த்துமசிப்பதுமுண்டு. என் அம்மா குழைந்த சோற்றில்சிறிது வடித்த சுடு கஞ்சியை சேர்த்து பிசைந்துதருவார்.
அது அத்தனை ருசியானது அதிக சத்துகள்நிறைந்தது. பருப்பு சோறு பிசையும் போது அவித்தமுட்டையின் மஞ்சள் கரு ஒன்றையும் மசித்து இதில்சேர்ப்பார். முட்டை பிடிக்காத குழந்தைகள் கூட இதைஆவலுடன் விரும்பி சாப்பிடுவார்கள்.
தமிழகக் குழந்தைகளின் மெனுவில் இன்றும் டாப் 3 இடத்தில் பருப்பு சோறு தான் உள்ளது. குழந்தைகளை கவர்ந்த இதே பருப்பு பெரியவர்களைஎப்படிக் கவர்கிறது என்ற மேஜிக்கை பார்ப்போமா.
நான் முன்பே சொன்னது போல தாளித்த வரமிளகாய்போட்ட செகண்ட் ஹீரோ பருப்புன்னு. கிரிஸ்பியாகப்பொரித்த வரமிளகாயைப் பருப்பில் நொறுக்கிப்போட்டு நன்கு கலந்து கிளறி சூடான குழைந்தசோற்றில் போட வேண்டும்.
அதன் பின் முருங்கையிலை போட்டு காய்ச்சியநெய்யோ அல்லது அதற்கு அடுத்த இடத்தில்இருக்கும் செக்கு நல்லெண்ணெய்யையோ ஊற்றிபிசைந்து சாப்பிடுவது சொர்க்கம். பருப்பு சோற்றிற்குஎப்போதும் பெஸ்ட் எது?
உருளைக் கிழங்கு காரக்கறி போல ஒரு சைடிஷ்ஈரேழு ஃபோர்டின் வேர்ல்டிலும் கிடையாது. உருளைக்கிழங்கை பொரித்து செய்யும் காரக் கறியும் மிகஅபாரமாக இருக்கும் மொறு மொறுன்னு வெந்தஉருளைக் கிழங்கின் உன்னத ருசி..
அதோடு பின்னிப் பிணைந்திருக்கும் காரம், கிழங்கோடு தாளித்த கடுகு, உளுந்து, நெய்யோடுகுழைந்த பருப்பு இது அத்தனையும் 9 கிரகங்களும்ஒரே நேர்க்கோட்டில் வருவது போல. அது நமதுநாவில் ஒன்றாகச் சேரும் அந்நேரம் தான்..
ஜோதிடர்கள் சொல்லுகிற அமிர்த யோகமாக இருக்கமுடியும். காரவறுவலில் கிழங்கிற்கு அடுத்துவாழைக்காய் வறுவல் இதனைச் சமைக்கும்விதத்தில் சமைத்தால் அதை பருப்பு சோற்றுடன்உண்ணும் அனுபவம் என்றும் சிறக்கும்.
உருளையின் மென்மை, வாழையின் மென்மைஇவ்விரண்டும் வேறு வேறு.. ஏற்கனவேமென்மையான பருப்பு சோற்றுடன் இது சேரும்போது.. இருக்கு ஆனா இல்ல என்பது போல மொறுமொறுன்னு வறுவலை சமைக்கணும்.
உருளையை விட வாழை கொஞ்சம் கிறிஸ்பியாஇருப்பது நல்லது. அதுக்காக அதை சிப்ஸ் ஆக்கிடவும்கூடாது, வாழை இப்படின்னா சேப்பங்கிழங்கு வறுவல்இருக்கே, அது நம் நாக்கிற்கு தரும் எரிச்சல் மட்டும்இல்லைன்னா..
பருப்பு சாதத்திற்கு முதல் ஜோடியா இருக்கும் எல்லாதகுதியும் படைத்தது. புளித் தண்ணீரில் கழுவியசேப்பங் கிழங்கு வறுவல் பருப்பிற்கு பர்ஃபெக்ட்ஜோடி. கார சாரமான எவ்வகைக் கூட்டுப்பொரியல்களும் பருப்புக்கு ஏற்றவை.
கத்திரிக்காயை நன்கு தீயில் வாட்டி அதன் பின்னர்நான்காக அதைக்கீறி மசாலா வைத்துநல்லெண்ணெய்யில் வதக்கிச் செய்கின்றஎண்ணெய் கத்திரிக்காய் மசாலா இருக்கேஅதெல்லாம் தேவலோக உணவுக்குஇணையானதொரு காம்போ.
இதென்ன பிரமாதம்.. இதைவிட பெசல் அயிட்டம்ஒண்ணு இருக்கு.. பருப்புக்கு வத்தக் குழம்பு அல்லதுபூண்டு புளிக் குழம்பு தொட்டுகிட்டு சாப்பிடுவது.எப்படிபாயாசத்தில் அப்பளத்தை நொறுக்கிப் போட்டுசாப்பிடுவதை கண்டறிந்தனரோ..
அதே விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது தான் இந்தப்பூண்டுப் புளிக் குழம்பு & பருப்பு சோறு காம்போ.. பிசைந்த பருப்பு சோற்றுக் கவளத்தின் நடுவே குழிசெய்து குழம்பில் வெந்த 2 பூண்டோடு ஒரு ஸ்பூன்குழம்பை எடுத்து அதில் விட்டு..
அதன் பிறகு ருசித்துப் பாருங்களேன். பருப்புக்கு நான்அடிமைன்னு எழுதித் தருவாங்க. பருப்பு சோறு & பூண்டு ஊறுகாய், மாங்காய் தொக்கு கூட நல்லகாம்போ தான். அசைவம் எனில் பருப்பு சோற்றுடன்தொட்டுக் கொள்ள..
சிக்கன் மசாலா, மட்டன் சுக்க, ஜிஞ்சர் ஈரல் ஃப்ரைஅட்டகாசமாக இருக்கும். எங்கள் வீட்டு ஸ்பெஷல்டிஷ்.. அவித்த முட்டையில் செய்யும் மசாலா.. அவித்தமுட்டை, வெங்காயம், மிளகு, சீரகத் தூள் போட்டுவதக்கி சேர்த்து செய்வார்கள் .
பருப்பு சோற்றிற்கு ஏற்ற சிக்னேச்சர் சைடிஷ்ஷாகும். அது இருந்தா நிச்சயம் ஒரு சட்டி சோறு தாராளமாஇறங்கும். பருப்பு சோற்றின் ஆருயிர்த் தோழன் ரசம். பருப்பு சோற்றுடன் எந்த வகையான ரசமும் சேர்த்துபிசைந்து சாப்பிடலாம்.
ருசி அற்புதமாக இருக்கும். இருவரும் குழைவுச்சோறு எனும் குருகுலத்தின் மாணவர்கள் அல்லவா! இந்த பருப்பு சோறு என்ற ராம்சரணும்.. தக்காளிரசமெனும் ஜுனியர் NTRம் நம் தட்டில் அலையடிக்கசேர்ந்துவிட்டால் போதும்.
நாட்டு.. நாட்டு.. நாட்டு என நம் நாவில் நடனமாடிநம்மை களிப்பில் ஆழ்த்துவர். இதோடு சின்னவெங்காயம் & பச்சை மிளகாய் போட்ட ஆம்லெட்டும்இருந்தா ரசத்தோடு பருப்பு தனது வெற்றிக்கொடியை நமது நாவிலேயே நாட்டிடும்.
பருப்பு ஒரு சுப உணவும் கூட, பருப்பு இல்லாதகல்யாணமா என்னும் சொலவடையே உண்டு.. விருந்து இலைகளில் முதலில் பறிமாறப்படும்உணவும் பருப்பு தான். முழு முதற் கடவுளான நமதுவிநாயகர் கூட..
பாகும் பருப்பும் தந்தால் சங்கத் தமிழ் மூன்றையும்நமக்கு தருவார் என்னும் போதே தெரிகிறது அல்லவாஇந்த பருப்பின் பெருமை. ஓகேங்க! அப்புறம்நாளைக்கு உங்க வீட்டில் பருப்பு சோறு தானேசமைக்கிறிங்க! ஹலோவ்வ்வ்…

No comments:
Post a Comment