Wednesday, 23 September 2026

“சுண்டங்கோட்டை சூரர்” {பார்ட் -1}

டி.எஸ்.பாலையா


திருநெல்வேலிசுப்பிரமணியம் பாலையாஎன்கிற T.S.பாலையா ஒரு பேரற்புதமானஆற்றல் மிக்கக் கலைஞன்தமிழ்சினிமாவில் பல சாதனைகளை சத்தம்இல்லாமல் செய்த நிகரில்லா நடிகன்இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளசுண்டங் கோட்டை தான் இவர் பிறந்த ஊர்


பாலையா பிறந்தது 1914 ஆம் ஆண்டில்அப்போது சினிமா பேச ஆரம்பிக்கவில்லைமவுனப்படங்கள் தான் வெளிவந்தனபாலையாவின் காதல் சினிமா மீதல்லஅவர்காதலித்தது சர்க்கஸைமுதன் முதலாகஅவர் பார்த்த சர்க்கஸ் கலைஞர்கள்நிகழ்த்திய சாகசங்கள் அவரை சர்க்கஸ் மீதுகாதல் கொள்ளவைத்தது.


அந்த சர்க்கஸ் கலைஞர்களுக்கு கிடைத்தகைத் தட்டலும் பாராட்டும் அவருக்கு ஒருபோதையை தந்ததுமணந்தால் மகாதேவிபோல இணைந்தால் சர்க்கஸ் என்பதுஅவரது இள மனதில் விதையாக விழுந்துநாளடைவில் அது ஆலமரமாக வளர்ந்துவிழுதுகள் விட்டு பரந்து விரிந்து எழுந்துநின்றது


அவரது தீராத சர்க்கஸ் மோகத்தை தெரிந்துகொண்ட ஒருவன் அவருக்கு சர்க்கஸ்ஆசையை மேலும் தூண்டிமானாமதுரையில் நமக்கு தெரிந்த சர்க்கஸ்கம்பெனியிருக்கு என்று “எனக்கு ஐஜியைதெரியும் பாணியில் அடித்துவிட நம்ப்ப்பிவீட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு அவனுடன் கிளம்பினார்.


மானாமதுரைக்கு ரயிலில் வந்து  இரவுரயில்வே ஸ்டேஷனிலேயே தூங்கிவிட்டனர்விடிந்த போது வானில் வெளிச்சம்தோன்றியது அந்த ஃபிராடு பணத்தோடுமறைந்துவிட்டான்ஏமாற்றத்தோடுகலங்கிய பாலையா அங்கே ஒருஉணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார்


பிறகு ஒரு இறைச்சிக் கடையில் பணிதன்ரத்தத்திலும் சதையிலும் சர்க்கஸ் ஆசைஊறிக் கிடக்க.. ரத்தத்தையும் சதையையும்விற்கும் கறிக் கடையில் அவர் வேலைபார்த்தது தான் பெரும் சோகம்அப்போதுதற்செயலாக மதுரை ஒரிஜினல் பாய்ஸ்நாடகக் குழுவின் நாடகத்தை பார்த்தார்


பாலையாவின் மனம் என்னும் மங்கி.. சர்க்கஸ் ஆசையிலிருந்து நடிப்புக்குதாவியதுஏதோ ஒரு கலைத் துறை ஆனால்அந்தக் கைத்தட்டலும்புகழும்பணமும்தான் அவர் சம்பாதிக்க ஆசைப்பட்டதுபாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தார்


சிறிது காலத்திலேயே திமுகவில் இருந்துபிரிந்து அதிமுக ஆரம்பித்தது போல பாய்ஸ்கம்பெனி தனியாகப் பிரிந்ததுபாலமோஹன சபா என்னும் அதில் நடித்தவர்கள்அனைவருமே 15 வயதிற்கு உட்பட்டவர்களேதமிழகத்தின் அன்றைய ஸ்டார் நடிகர்களில்ஒருவர் தான் MKராதா


MK ராதாவின் தந்தை கந்தசாமி முதலியார்அவர்களால் துவங்கப்பட்ட நாடகக் குழு இதுஎம்.ஜி.ஆர்சிவாஜிகலைவாணர்பாலையாதங்கவேலுஎம்.ஆர்.ராதாபோன்றவர்களை அறிமுகம் செய்ததுகந்தசாமி முதலியார் தான்அவருக்குமிகப்பிடித்த நடிகரானார் பாலையா


அப்போது அவர்கள் நடித்த பதிபக்திஎன்னும் நாடகம் சூப்பர் டூப்பர் ஹிட்கிட்டத்தட்ட அதே போல ஒரு கதைஅன்றைய ஆனந்த விகடனில் தொடராகவந்து கொண்டிருந்ததுஇரண்டும் ஒரேகதை என்பதை விட இரு கதையின்நாயகிகள் பெயரும் லீலாவதிஅந்தக்கதையை படமாக்க முடிவு செய்தார்கள்.


பதிபக்தி நாடகத்தில் நடித்த அதே வேடம்சினிமாவிலும் பாலையாவிற்கு கிடைத்ததுஅந்தப் படம் தான் சதி லீலாவதிஆம்MGRக்கு மட்டுமல்ல பாலையா, NSK, தங்கவேலு மற்றும் அப்படத்தின்ஹீரோவான MKராதாவுக்கும் சதிலீலாவதிதான் முதல் படம்இயக்கியவர் எல்லீஸ்ஆர்.டங்கன்


இவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த இயக்குநர்முதல் படத்திலேயே வில்லனாக அறிமுகம்ஆனார்பின்னாளில் பல சூப்பர் ஸ்டார்கள்வந்த இந்த வழிக்கு பிள்ளையார் சுழிபாலையா போட்டதுஅதன் பிறகு பாலையாநடித்தது இரு சகோதரர்கள் இதையும்எல்லிஸ் ஆர்டங்கனே இயக்கினார்


1937 பாலையாவிற்கு மறக்கமுடியாதஆண்டுஆம் அன்றைய மெகா சூப்பர்ஸ்டாரான தியாகராஜ பாகவதருக்குவில்லனாக அம்பிகாபதி படத்தில் நடித்தார்இதுவும் டங்கன் இயக்கமேதமிழகம்முழுவதும் பாலையா புகழ் பரவ அன்றையஅடுத்த சூப்பர் ஸ்டாரான PUசின்னப்பாநடித்த உத்தம புத்திரன் படத்திலும் இவரேவில்லன்


ரஜினிகமல் இருவருக்கும் வில்லனாகநடித்த சத்யராஜ் போல பெரும் புகழ்அடைந்தார் பாலையா ஆம் சத்யராஜுக்கும்முன்னோடி இவர் தான்பம்பாய் மெயில்பூலோக ரம்பைஆர்யமாலாபிருதிவிராஜன்மனோன்மணிசாலி வாஹனன்ஜகதலப்பிரதாபன்பர்மா ராணிமீரா


முதலிய படங்களில் எல்லாம் அவர் நடித்தமுக்கியமான அன்றைய ஹிட் படங்களின்வரிசையாகும்புகழ்பெற்ற வில்லன்கதாநாயகன் ஆன வரலாற்றையும்பாலையாவே துவக்கி வைத்தார்ஆம் அவர்கதாநாயகனாக நடித்தபடம் சித்ரா! 1946 இல் வெளியானது


அதன் பிறகு மீண்டும் வில்லனாகவால்மீகியில் நடித்துவிட்டு 1947இல்மீண்டும் கதாநாயகனாகசெண்பகவல்லியில் நடித்தார்கிட்டத்தட்டஇன்றைய விஜய் சேதுபதி பாணிஇதையும்சினிமாவில் துவக்கியவர் பாலையா தான்.


அட எல்லாம் விடுங்கள் MGR என்றால்உங்களுக்கு வில்லன் நம்பியார் தான்நினைவுக்கு வருவார் ஆனால் MGR ஹீரோவான முதல்படம்  ராஜ குமாரியில்பாலையா தான் வில்லன்அவரே வில்லன்அவரே பிறகு ஒரு படத்தில் ஹீரோபிறகுமறுபடியும் வில்லன்அதுமட்டுமா?!


தமிழ் நாட்டின் மெகா ஸ்டார்களின் படத்தில்எல்லாம் வில்லன் எனப் பல படங்கள்நிறைய பணம்பேர்புகழ் பாராட்டுகள் எனசிறுவயதில் ஏங்கிய அனைத்தையும்பெற்றார் பாலையாஅவர் ஹீரோவாகநடித்தாரே சித்ரா என்னும் படம் அதில்நடித்த கதையே ஒரு சுவாரஸ்யம்


ஆம் அன்று திடீரென பாலையா சாமியாராகிகாணாமல் போய்விட்டார்அவரைத் தேடிப்பிடித்து மீண்டும் அவருக்கு நடிக்கவாய்ப்பளித்து அதுவும் ஹீரோவாக்கியபிரபலம் யார் தெரியுமா?


அது அடுத்தப் பதிவில்.. ❤️



No comments:

Post a Comment