“அரசியின் பெயரில் அற்புத டீ”
☕️ 🫖 {நிலோஃபர்} ☕️ 🫖
சீஸனில் குற்றாலம் போயிட்டு அங்கு அருவிகளில் குளிக்காததும் ஒண்ணு! ஹைதராபாத் போயிட்டு நிலோஃபர் பேக்கரியில் டீயும் பிஸ்கட்டும் குடிக்காததும் ஒண்ணு! யாரிந்த நிலோஃபர் பேக்கரி? என்ன STD? அப்படி இங்க என்ன ஸ்பெஷல்? உப்பும் இனிப்பும் சேர்ந்த அற்புதக் கலைவையில் குக்கீஸ் தடிமனில் உஸ்மானியா பிஸ்கெட்டும், கடக் சாய் என்னும் அபார டீயும் இங்கு பிரசித்தம்!
1978இல் துவங்கப்பட்ட நிலோஃபர் இன்று ஹைதராபாத்தில் மட்டும் 4 கிளைகளை பரப்பி தனது பிஸ்கெட், பன், பஃப்ஸ், டீ வகைகளில் தனித்த அடையாளமாக ஒரு நம்பக பிராண்டாக மாறியிருக்கிறது! நிலோஃபரில் உஸ்மானியா பிஸ்கட் மட்டுமின்றி ஃப்ரூட் பிஸ்கெட், சாக்லெட் பிஸ்கெட், பட்டர் பிஸ்கெட், பாதாம் பிஸ்கெட், ஓட்ஸ் பிஸ்கெட் என ருசியான பலவகை பிஸ்கெட்ஸ்..
பன் வகைகளில் மலாய் பன், மஸ்கா பன் இரண்டும் படுபயங்கர ஃபேமஸ்! அதிலும் மலாய் பன் விடியற்காலை 4 மணி முதல் 9 மணி வரை தான் கிடைக்கும்! ஸ்பாஞ் போன்ற மிருதுவான பன்னும் அதற்கு தட்டில் தரும் மலாயும் சொர்க்கம்! 2 தலைமுறைகளை இந்த பன்னின் ருசிக்கு அடிமையாக்கி இருக்கிறார்கள்! மஸ்கா பன் இன்னொரு அற்புதம் எனது ஆச்சரியம் என்னவென்றால்..
அந்த பன்னை இரண்டாக அறுத்து அதன் நடுவே வெண்ணெய்யை இவ்வளவு மெலிதாக கோட்டிங் செய்து நான்காக அறுத்துத் தருகிறார்கள்! நான் ஒரு முழு டீ குடிப்பதற்குள் 3 பன்களை காலி செய்துட்டேன்! பஃப்சும் இங்கே அற்புத ருசியில் கிடைக்கிறது கடித்தால் வாயில் கரைகிறது! கடை ஆரம்பித்து 45 ஆண்டுகள் ஆகிறது! இன்றைய சாண்ட்விச், பர்கர், பீட்ஸாகளும் இங்குண்டு!
இந்தக் கடையின் உரிமையாளர் பாபுராவ்! இந்திய சினிமாக்களில் ஹீரோவின் அப்பாவை வில்லன் கொன்றுவிடுவது எப்படி நெடுநாள் வழக்கமோ அதே போல பிஸினஸ்மேன்களின் ஆரம்பகால வாழ்க்கையும் வறுமையில் தான் இருக்கும்! பிளாட்பாரத்தில் படுத்து, பொது குளியலறையில் குளித்து, ஜவுளிக் கடையில் வேலை பார்த்து, ஓட்டலில் வேலைக்கு சேர்ந்து என பாபுராவின்..
வாழ்க்கையும் சுவாரஸ்யங்கள் மிகுந்தது! ஓட்டலில் தொழில் கற்றுக் கொண்ட பின்பு தான் கூட்டாக நிலோஃபர் பேக்கரியை துவக்கி பின்பு கூட்டாளி விலக இவர் வசம் பொறுப்பு வந்தது! ஓனர் பேரு பாபுராவ் சரி அதென்ன கடைக்கு நிலோஃபர்னு பேரு மஸ்கா பன் போல அதுவும் ஒரு இனிய காரணம்! நிலோஃபர் தூருக்கி நாட்டு இளவரசி! ஹைதராபாத் நிஜாமின் மருமகள்!
இந்தியாவின் மருமகளாக ஹைதராபாத்தில் அடியெடித்து வைத்த பேரழகி! ஆம் அவரது காலத்தில் உலகின் தலை சிறந்த 10 அழகிகளில் நிலோஃபரும் ஒருவர்! நிறைய சமூக சேவைகள் செய்தவர், நிலோஃபர் மருத்துவமனை கட்டி அறக்கட்டளை மூலம் பல தொண்டுகள் செய்தவர்! இந்தியன் உமன் கான்ஃபெரன்ஸின் ஹைதராபாத் சமஸ்தான தலைவியாக பதவி வகித்தவர்!
ஹைதராபாத்தின் கோஹினூர் என்னும் அடை மொழி கொண்ட அழகிய அரசி! இவரது மேல் கொண்ட அபிமானத்தில் அரசியின் பெயரையே கடைக்கு வைத்தார்! கொரோனா காலத்தில் கடை மூடப்பட்ட போது நிலோஃபர் டீத்தூள் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று அந்த டீத்தூளும் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது! எப்படி திருநெல்வேலிக்கு போனா அல்வா வாங்கி வருவார்களோ..
அதே போல ஹைதராபாத் போனா நிலோஃபர் பிஸ்கட்டுகள், பன்கள், டீத்துள் வகைகள் வாங்கி வருவது இன்று சாதாரணமாகி விட்டது! ஹைதராபாத் நகரில் 3 கிளைகளும், ஏர்போர்ட்டில் 8ஆம் எண் தூண் அருகிலும் இவர்கள் கிளை உள்ளது! நிலோஃபர் என்றதும் கரக் டீயின் மணமும், பன்னின் மென்மையும், பப்ஸின் ருசியும், பிஸ்கெட்டின் கரகரப்பும், நாவில் நர்த்தனம் ஆடுகிறது!
நீங்க ஹைதராபாத் போனா ‘படக்’குன்னு போயி சூடாக ஒரு ‘கடக்’ சாயாவும், மலாய் பன்னும், உஸ்மானியா அல்லது ஃப்ரூட் பிஸ்கெட்டும் சாப்பிட மறக்காதீர்கள்! அல்லது உங்க நண்பர்கள் யாரேனும் போனா இதை வாங்கிவரச் சொல்லவும் மறக்காதிங்க! அட இப்போ நீங்க ஆன்லைனில் கூட ஆர்டர் போடலாங்க!
நிலோஃபர் ஆன் லைன் லிங்க் கீழே கமெண்ட்டில்👇
No comments:
Post a Comment