Saturday, 4 July 2026

காபோ வெர்டே

​ (Cabo Verde) 


2026 உலகக் கோப்பை கால்பந்து மூலம்உலகெங்கும் புகழ் வெளிச்சம் பெற்ற நாடு. ஐந்தரை லட்சம் மக்கள் மட்டுமே வாழும்இந்த குட்டி நாட்டின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், உணவு & சுற்றுலா பற்றியசுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோமா…


காபோ வெர்டே நாடு அட்லாண்டிக்பெருங்கடலில் அமைந்துள்ள பத்துஎரிமலைத் தீவுகளைக் கொண்ட ஒரு தீவுநாடாகும். இது செனகல் நாட்டின் மேற்கே600 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்தமக்களின் வாழ்க்கை மிகவும்அமைதியானது. “No Stress” என்பதுஅவர்களின் வாழ்க்கை தத்துவம். 


எளிமை, மகிழ்ச்சி மற்றும் குடும்பஉறவுகளுக்கு அவர்கள் அதிகமுக்கியத்துவம் கொடுக்கின்றனர். காபோவெர்டே மக்கள் இசையையும்நடனத்தையும் மிகவும் நேசிப்பவர்கள். உலகப் புகழ் பெற்ற பாடகி Cesária Évora மூலம் புகழ் பெற்ற Morna இசைஇந்நாட்டின் பாரம்பரிய இசையாகும். 


கொலடெய்ரா (Coladeira) எனும் இவர்களதுஇன்னொரு இசை வடிவமும் உலகப் புகழ்பெற்றது. இந்த நாட்டு திருமணம், திருவிழாமுதல் தெருக்களில் நடக்கும் நிகழ்ச்சிகள்வரை எல்லா நிகழ்ச்சிகளிலும் இந்தஇரண்டு இசையும் நடனமும் தவறாமல்இடம் பெறுபவை ஆகும். 


தமிழ்நாட்டில் அரிசிச் சோறு போல Cachupa எனும் உணவுதான் இங்கு தேசியஉணவாகும். காய்கறிகள் மக்காச்சோளம், பீன்ஸ், உருளைக் கிழங்கு, மீன் (அ) இறைச்சியுடன் சீராக வேக வைத்துதயாரிக்கப்படும் இந்த உணவு தான்பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும்சமைக்கும் உணவாகும். 


அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவுகள்என்பதால் இந்தத் தீவை கடல் உணவுகளின்சொர்க்கம் எனலாம். ஃப்ரெஷ்ஷான டூனாமீன், லாப்ஸ்டர், ஆக்டோபஸ், இறால்உள்ளிட்ட சுவை மிகுந்த கடல் உணவுகள்இவர்களின் அன்றாடச் சமையலில்தவறாமல் முக்கிய இடம் பெறுகின்றன.


Sal மற்றும் Boa Vista என்ற இரண்டுஉலகின் அழகிய கடற்கரைகள்அமைந்துள்ளது. வெண்மணல்கடற்கரைகள் & பச்சை-நீல நிறப் பரப்பில்கடல் இங்குள்ளதால் உலககெங்கும் இருந்துசுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. நீர்ச்சறுக்கு, ஸ்கூபா டைவிங் போன்ற..


நீர் சாகச விளையாட்டுகளும் இந்தத்தீவுகளில் புகழ்பெற்றவை. இந்தத் தீவுநாட்டில் ஒரு அதிசயமான கலாச்சாரம்செயல்படும் எரிமலை மீது குடியிருக்கும்மக்கள்! உலகில் மிக அரிதாகக் காணப்படும்வாழ்க்கை முறைகளில் இதுவும் ஒன்று. ஆம்! FOGO எனும் தீவுதான் அது.


அந்த எரிமலைச் சரிவுகளில் துளியும்அச்சமின்றி திராட்சைத் தோட்டங்கள்அமைத்து, அங்கு விவசாயமும் செய்துவாழ்ந்து வருகின்றனர். இங்கேஅதிகாரப்பூர்வ மொழி போர்ச்சுகீசியம், என்றாலும், பெரும்பாலான மக்கள் Cape Verdean Creole என்ற உள்ளூர்மொழியையே பேசுகின்றனர். 


ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பியகலாச்சாரங்கள் இணைந்த தனித் துவமானவாழ்க்கை முறை. காபோ வெர்டே உலகின்முக்கிய கடல் ஆமை இனப்பெருக்கமையங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும்ஆயிரக்கணக்கான கடல் ஆமைகள்இங்குள்ள கடற்கரைகளுக்கு வந்து..


முட்டையிடுகின்றன. அவற்றைப் பாதுகாக்கஇங்கே பல தகுந்த ஏற்பாடுகளும் சிறப்புதிட்டங்களும் உண்டு. காபோ வெர்டேவின்மிகப் பெரிய வருவாய் ஆதாரம் சுற்றுலாத்துறையாகும். சுற்றுலாவை மட்டுமேநம்பாமல், கடலை மையமாகக் கொண்டபொருளாதார வளர்ச்சிக்கு.. 


காபோ வெர்டே அதிக கவனம்செலுத்துகிறது. ஆண்டு முழுவதும் சீரானமித வெப்பமான இனிய கால நிலைநிலவுவதால், எந்த மாதத்திலும் சுற்றுலாசெல்ல ஏற்ற நாடாக காபோ வெர்டேகருதப்படுகிறது. இது உலகின் மகிழ்ச்சிநிறைந்த சிறிய நாடுகளில் ஒன்றாகும். பாதுகாப்பு மிக்க சூழல்..


நட்போடு பழகும் மக்கள், குறைந்த குற்றச்செயல்கள் & அமைதியான சூழல்உள்ளதால் ஆப்பிரிக்காவின் வாழத் தகுந்தநாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த உலகக்கோப்பைக்கு பின் காபோ வெர்டேவுக்குசுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Thursday, 25 June 2026

​ 🍖 அதுவொரு பொற்காலம் 🍗




ஆரஞ்சு பழத்தை உரிச்சா உள்ள ஒரு ஆரஞ்சு பழம் இருந்தா எப்படி இருக்கும்? அதே மாதிரி வெள்ளை பீங்கான் தட்டின் மேலே அந்த வெள்ளை நிறத்திலேயே இருக்கும் ஆப்பம் பார்த்திருக்கிங்களா சார்?!


அதன் மீது இருந்து வரும் ஆவி மட்டும் தெரியாமல் போனா கொஞ்சம் திணறித் தான் போவோம். சென்னை.. மன்னிக்க அன்றைய மெட்றாஸில் மிலிடரி ஹோட்டல்கள் இருந்த பொற்காலம்.


ஆப்பமும் பாயாவும் தான் அன்றைய மெட்றாஸின் அசைவ உணவின் ஐகான். கலைஞரின் மஞ்சள் துண்டு, மலராத தாமரையின் காவி, TVKயின் சிவப்பு & மஞ்சள், ஆழ்ந்த பழுப்பு, காக்கி, தேன் நிறம் என்று..


பாரதியாரின் தேசபக்தி பூனைப் பாடல் போல இங்கு பாயாக்களின் நிறங்கள் ஏராளம். அவை எதுவுமே தரத்தில் வேறுபட்டதே இல்லை. அன்று மட்டன் சிக்கன் குழம்புகள் எல்லாம் தனித்துவமாக இருக்கும்.


அப்போதெல்லாம் சிக்கன் குழம்பு அவ்வளவு ஃபேமஸ் கிடையாது. 1980களில் ஒரு கிலோ மட்டனே ₹35 தான் அப்போது ஒரு பெரிய முழுக் கோழி ₹20 என்று நினைவு. அன்றைய மிலிடரி ஓட்டல்களின்.. 


மெனுப் பட்டியலே ரசனையா இருக்கும். அப்போதெல்லாம் யாரும் சிக்கன்னு சொல்ல மாட்டாங்க, கோழி பிரியாணி, கோழிக் குழம்பு, கோழி மசாலா இப்படித்தான் சொல்லுவாங்க.


மட்டனில் தலைக்கறி, மூளைன்னு ஆரம்பிச்சு ஆட்டுக்கால் வரை எல்லா ஸ்பேரையும் பார்ட் பார்ட்டா சமைச்சு வச்சிருப்பாங்க. மிலிடெரி ஓட்டல்களில் அன்று ப்ளேட் டிஸ்ப்ளேன்னு ஒன்று இருந்தது.


தாம்பாளம் மாதிரி பெரிய தட்டில் தலைக்கறி, மூளை, வறுவல், சுக்கா, குடல், பாயா, சாப்ஸ், தொடை என்று சின்னச் சின்னக் கிண்ணங்களில் வைத்து நம் டேபிளுக்கு சர்வ் பண்ண எடுத்துட்டு வருவாங்க. 


சிலர் அப்படியே வாங்குவாங்க, சிலர் அதை Fry பண்ணி வாங்குவாங்க. சில ஓட்டல்களில் முயல், புறா, காடை எல்லாம் இருக்கும். அன்று கிரைண்டர் மிக்ஸி இல்லாததால் எல்லாம் கையால் அரைச்சது தான்.


அந்த மசாலாவுக்கு இருக்கிற வாசம் வெட்டி வேரு வாசம் போல நேசமாக வீசும். அந்த வாசத்தை வைத்தே மட்டன் குழம்பு எது, சிக்கன் குழம்பு எது, மீன் குழம்பு எதுன்னு நம் மூக்கு தரம் பிரித்துச் சொல்லிடும்.


கறிக் குழம்புகளின் மணத்தை குழம்பாமல் கண்டுபிடிக்கும் அளவுக்கு அன்றைய சமையல் முறையும் பக்குவமும் இருந்தது. தேங்காய் சில்லு போன்ற நெஞ்சு சாப்ஸில் கறியை சாப்பிட்டு மீதி..


எலும்பை இலையில் வைத்தால் சூபர்வைஸர் நம்மிடம் வந்து அண்ணா இந்த எலும்பை கடிச்சு சாப்பிடலாம், தேங்காய் மாதிரி தான் உடம்புக்கு நல்லது என்று டிப்ஸ் தந்து சாப்பிட வைப்பார்கள்.


சுக்காவை கொஞ்சம் தயிர் சோறுக்கு தொட்டுக்கோங்க.. விரால் மீன் ரசத்துக்கு நல்லா இருக்கும். மூளை ரோஸ்ட் மட்டன் குழம்புக்கு தொட்டுக்க நல்லா இருக்கும் போன்ற டிப்சுகளை..


இன்று எவ்வளவு டிப்ஸ் நீங்க தந்தாலும் கொடுக்க ஆளில்லை. அதே போல உணவில் எதாவது குறை சொன்னால் உடனே அதை எடுத்துட்டு போயிடுவாங்க (அது அன்று பெரும்பாலும் நடக்காது) 


இன்று இதுக்கு ஒரு குருஷேத்திரப் போரே நடத்த வேண்டியது இருக்கு. பீங்கான் தட்டில் தரும் இடியாப்பம், ஆப்பம், பாயாவாகட்டும், இலையில் பறிமாறும் சாப்பாடு ஆகட்டும் ஒன்றுக்கு ஒன்று சோடை போகாது.


இன்று கொல மாஸா இருந்துச்சு, டாப் நாட்ச், தட்டி காயப் போட்டாங்க, அல்டியா இருந்துச்சுன்னு சொல்லி கடைசியா வேற லெலவல்னு யூ டியூபில் சொல்ற ரிவ்யூஸ் எல்லாம் உண்மையில் மெகா காமெடி தான்.


ஓட்டலை சேவைத் தொழிலா பார்த்த காலம் அது. இன்று எல்லாம் வணிகமயம் தான், மீடியாக்கள் தரும் ஹைப்பில் ஆட்சியைக் கூட பிடிக்கலாம், ஆனா அறுசுவையில் அது என்றும் நடக்கவே நடக்காது.


🍖 மிலிடெரி ஓட்டல்களின் காலம் பொற்காலம் தான் 🍗❤️❤️



Friday, 19 June 2026

முருங்கை மட்டன் தொக்கு

​“5 நட்சத்திர ஓட்டலில் அம்மாவின்சமையல்”


எங்கள் தனம் அம்மாவின் கைப்பக்குவத்தைப் பற்றி இங்கே பல பதிவுகள்இட்டிருக்கிறேன். அம்மா வைக்கும்“முருங்கை மட்டன் தொக்கு” எனப்படும்க்ரேவி ஒரு அல்டிமேட் க்ரேவி வகையாகும். 


இளசான பிஞ்சு முருங்கைக்காயைஆட்காட்டி விரல் நீளத்திற்கு வெட்டி மட்டன்முதுகுக் கறியுடன் மசாலா பண்டங்களைபக்குவமாக சேர்த்து அம்மா சமைக்கும்அற்புதம் அது. முருங்கையே கறியாகிஇருக்கும்.


இரட்டை வேட ஹீரோக்கள் போல இதேமுருங்கைக்காயை தனியே வேக வைத்துஎடுத்து அதனுள் இருக்கும் ஜெல்லியைமட்டும் வழித்து எடுத்து செய்யும் முறையும்இருக்கு. இரண்டுமே தேவ லெவல்!


சில நேரங்களில் வெள்ளை சோயா, உருளைக் கிழங்கு சேர்த்தும் பிரமாதமாகசெய்வார்கள். மசாலா சேர்த்தமுருங்கையின் மணமும், கறியின் ருசியும், மென்மையும் நாவில் நின்று நாட்டியம்ஆடும்.


கெட்டியான தொக்கு போன்றகன்ஸிஸ்டன்சியில் சுடுசோறு, இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம் எனO+ ரத்தம் போல எல்லா உணவுகளுக்கும்மிக மிகப் பொருத்தமாக ஜோடி சேரும்.


ஜெல்லியாக வைக்கும் தொக்கில்முருங்கை இறைவன் போலமறைந்திருக்கும். முருங்கைக் காயைவெட்டிப் போட்டு செய்தால் மறுநாள் பழையசோற்றுக்கு அது அட்டகாசமானதொடுகறியாகும்.


அப்பாவிற்கு கொத்துக்கறி எனும் கைமாமீது அளவிலா காதலுண்டு. அதில் பூண்டுசேர்ப்பார் அப்பா. சில நேரம் அதோடுமுருங்கையும் சேர்ப்பாங்க, அது பழம் நழுவிபாதாம்பாலில் விழுவது போல. 


அம்மாவின் மட்டன் முருங்கை தொக்குபூலோகத்து அசைவ அமிர்தம் என்பேன். 2017இல் அம்மா இறந்தபின்பு தான் அதுஎனக்கு கிடைக்காமல் போனது. போனவாரம் அந்த ஏக்கம் தீர்ந்தது.


ஆம்! என் அம்மா வைப்பது போல இல்லைஎன்றாலும் டிட்டோ 75 மதிப்பெண்கள்வழங்கும் அளவுக்கு  “முருங்கை மட்டன்” ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் பூண்டு, முருங்கை & மொச்சைப் பயிரோடுகிடைத்தது. 


ராமனான அம்மாவின் முருங்கை மட்டன்தொக்கும், கிருஷ்ணனான அப்பாவின்கைமாவும் இங்கே ராமகிருஷ்ணனாகஇணைந்து கிடைத்தது. அப்படியே என்நினைவு 1990ல் பின்னோக்கி பயணித்தது. 


அப்பாவின் கைமாவுக்கு சூடான இட்லிகிடைத்தால் நான் ஸ்டாப்பாக சாப்பிடலாம். வீட்டில் இந்தத் தொக்கு வைக்கும்போதெல்லாம் அப்பா மதுரை “சமயசஞ்சீவி”  ஓட்டலில் புரோட்டா வாங்கிவருவார். 


அப்போது வீடெங்கும் அன்பும், மகிழ்ச்சியும்பிரவாகம் எடுத்து ஓடும்.  என் அப்பா போன்றரசனையான மாஸ்டரும், அற்புதமாய்சமைக்கும் என் தாயும், மொத்த உறவினர்கூட்டமும் சமையலில் வல்லவர்கள்.


இந்தச் சமையல் பின்னணி எனக்குஉணவை ரசிக்கவும், ருசிக்கவும், சமைக்கவும் கற்றுக் கொடுத்ததில்வியப்பென்ன இருக்க முடியும்! நெடுநாட்களுப்பின் ருசித்தேன் என்பெற்றோரின் கைமணத்தை.