Tuesday, 25 August 2026

​“மெய்யுருகும் நெய்”



“நெய் ரோஸ்ட்” இன்றைய ஜென்C காலத்திலும் உணவகங்களில் மகுடம்வைத்தது போன்ற ஒரு பெருமை பெற்றது. மன்னர்களின் மகுடம் போன்ற நெய்ரோஸ்ட்டின் தோற்றமே அதற்குசாட்சியாகும். நெய்ரோஸ்ட்டின் வடிவம்ஊருக்கு ஊர் மாறுபடும்.


பாய் போல சுருட்டி நீளமான பைப்போலவும், இரண்டாக மடித்து எதிர் புறமாகவைத்த ஆங்கில D எழுத்து போலவும், படுக்கை வச முக்கோண வடிவத்திலும் பலதோற்றங்களில் நெய்ரோஸ்ட் கிடைக்கும். அதில் மிகச்சிறந்தது மன்னரின் க்ரீடம்போல் கம்பீரமாக எழுந்து நிற்கும் கூம்புவடிவமே. 


இந்தத் தோற்றம் தான் நெய்ரோஸ்ட்டின்மவுசு குறையாது மக்கள் மனங்களில்இன்றும் இடம் பிடித்திருக்க காரணம்என்பேன். இன்றும் ஓட்டல்களில்ஆசையுடன் அந்த கூம்பு வடிவ க்ரீடதோசையை எப்படி சாப்பிடுவது எனத்தெரியாமல் கையை மட்டுமல்லதோசையையே பிசைவதை பார்த்துவருந்துவேன்.


அப்பளம் போல அதை கைகளால் நொறுக்கிசாம்பார் கிண்ணத்தை குபீர்னு அதன் தலைமேல் கவிழ்த்து, 3 வகை சட்னிகளையும்குழைத்து ராஜ்கிரண் பிசையும் கறிச்சோறுபோல நெய் ரோஸ்ட் சாப்பிடுபவர்களைபார்த்துள்ளேன். 


என் கண்களில் ‘ரத்தக் கண்ணீர்’ மட்டுமல்ல‘பாகப்பிரிவினை’ கூட வழியும். பழையதமிழ் படங்களில் ரேப் சீன் முடிந்து தலைகலைந்து, பூ வாடி சேலை ஜாக்கெட் கிழிந்துபொட்டழிந்து அலங்கோலமாக நிற்கும்கதாநாயகிகள் ஏனோ என் நினைவிற்குவருவார்கள். 


அடேய் அது பூப்போல கையாள வேண்டியபதார்த்தம்டா என்று எதார்த்தமாகஅவர்களிடம் போய் எப்படிச்சொல்ல,  அதைஇங்கு சொல்லப் போகிறேன். சுருட்டியவடிவம், மடித்தது, தட்டை முக்கோணவடிவங்களை விட்டு விடுங்கள்.


இந்த கூம்பு தோசையை சாப்பிடும் விதத்தைகூறுகிறேன். முதலில் நெய் ரோஸ்ட்டைரொம்ப முறுகலாக ஆர்டர் செய்யாதீர்கள். நான் முதல்வராக இருந்திருந்தால் 110 விதியின் கீழ் அதற்கு தடைவிதித்திருப்பேன். முறுகல் தோசை அப்பளம்சாப்பிடுவதற்கு சமம். 


லேசான முறுகலும் மென் பதமும் சேர்ந்தாதான் அது நெய்ரோஸ்ட். அப்பதான் அதுபார்க்க மட்டும் கும்முன்னு இல்லாமல்சாப்பிடவும் ஜம்முன்னு இருக்கும். ஆகவேஅதிமுறுகலா கேட்காது கம்முன்னுஇருப்பதே நல்லது. கூம்பு வடிவ தோசை மிகசீக்கிரம் ஆறிடும்.


கூம்பு வடிவ தோசையை அப்படியே தூக்கிபடுக்கை வசமாக தட்டில் கிடத்தி இரண்டாமடிக்கணும். இதை ஜல்லிக்கட்டில் மாடுபிடிப்பது போல ஆவேசமாகச் செய்யாமல்ஒரு நான்கு மாத குழந்தையை தூக்குவதுபோல தூக்கணும். 


வீட்டுப் பெரியவர்கள் கீழே அமர்ந்து இருகால்களையும் நீட்டி கால்களுக்கு மேலேநான்கு மாதக் குழந்தையை கவனமாககிடத்தி குளிப்பாட்டுவார்கள் பார்த்துஇருக்கிங்களா? அதுபோல நெய்ரோஸ்ட்டை கவனமாக தூக்கணும். 


தோசையை நம் கையால் அதிகமாநசுக்கவோ நொறுக்கிடவோ கூடாது. கூம்புவடிவத்தில் அடிப்புறம் ஆறி இருக்கும். அதில் பரவலாக சூடான சாம்பாரை  ஊற்றவும். நடுப்புறம் சூடாக இருக்கும்அதில் சாப்பிடத் துவங்கவும். 


க்ரீட நெய்ரோஸ்ட் நம் டேபிளுக்கு வரும்போதே 25% சூடு ஆறியே வரும். ஏன்னாஅதன் வடிவம் எளிதில் ஆறக்கூடியது. சூடுகுறைவான அடிப்புறம் சாம்பார்ஊற்றுவதால் அதன் முறுகல் பகுதிகளும்சாம்பாரில் ஊறி நல்ல பக்குவமாகமாறிவிடும்.


நடுப்புற தோசையை விண்டு தேங்காய்சட்னியுடன் ஒன்று, தக்காளி சட்னியுடன்ஒன்று, புதினா சட்னியுடன் ஒன்று என தனித்தனியே சாப்பிடவும். அப்போது தான்நெய்ருசி தெரியும். எல்லா கட்சியையும்சேர்த்த கூட்டணி போல சட்னிகளைசேர்க்கக்கூடாது. 


நெய்ரோஸ்ட்டுக்கு தேவையில்லா ஆணிஇட்லிபொடி. மைசூர் நெய் தோசையில்சேர்க்கும் பொடி வேறு வகை. நம்ம ஊர்தோசைக்கு அது சரிப்பட்டு வராது. சாம்பாரில்ஊறிய தோசை ஒருபுறம் காத்திருக்கட்டும்.


மேலும் ஒரு கப் சூடான சாம்பார் கேட்டுரோஸ்ட்டின் ஓரங்களை நனைத்துசாப்பிட்டால் உங்களை ஐன்ஸ்டீன் என்றுஇந்த உலகம் அழைத்தாலும் அழைக்கும். உளுந்துவடை, சாம்பார் வடைபோன்றவற்றை எல்லாம் இதோடு சேர்த்துசாப்பிடக்கூடாது.


நாம் திருப்பதிக்கு போனால் தலையாயதரிசனம் வெங்கடாஜலபதி மட்டும் தானே. அது போலத்தான்  நெய் ரோஸ்ட்சாப்பிடுவதும். சிலர் நெய் மசால்தோசை, நெய் ஆனியன் தோசை என்பார்கள், அவையும் தேவையில்லாத ஆணிகளே.


கடப்பா, குருமா என சில அரிய காம்போக்கள்இதற்கு நன்றாக இருக்கும் என்றாலும், அரைத்து வச்ச சாம்பார் இதற்கு நல்லஇணை. சட்னிகளும் தேங்காய், தக்காளி, புதினா போன்றவை மிகச் சிறப்பு.


எங்கள் பாட்டி வீட்டில் செய்யும் அடைஅவியல், மோர்க் குழம்பு, வத்தக் குழம்புபோன்றவை அவர்களது மேதமை நிறைந்தசமையல் பக்குவங்களால் நெய்ரோஸ்ட்டுடன் சில படங்கள் நடித்தஹீரோயின்கள் போல ஜோடிசேர்ந்துள்ளன.


இப்போது அதெல்லாம் சரிவராது. பாட்டிவீட்டில் மோர் கடைந்து வெண்ணெய்எடுத்து அதை நேர்த்தியாக உருக்கிமுருங்கையிலை தாளித்து போட்டு காய்ச்சும்நெய்யின் மணம் அந்த தோசையின்  ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் வீசும்.


ஆகவே இனி நெய்ரோஸ்ட்டை எங்குசாப்பிட்டாலும் ராஜ்கிரண் போலசாப்பிடாமல் அதற்கு ராஜமரியாதை தந்துசாப்பிடுங்கள். அப்படி ருசித்தால் உருகுவதுநெய் மட்டுமல்ல உங்களது மெய்யும் தான்.❤️👌🏿


Tuesday, 7 July 2026

​🇳🇴 நார்வே பாட்டுக்காரன் 🇳🇴

⛵️ பார்ட் 2 ⛵️


வைகிங்குகள் கடலில் அந்நியனாக வாழ்ந்தகாலங்களில் ஐரோப்பிய கடற்கரைநகரங்கள், கிராமங்கள் மீது திடீர்தாக்குதல்களை நடத்தி வென்ற பின்னர்அந்த நகரங்களை எரிப்பது இவர்களதுஹாபியாகும். 


அரசியல் கட்சியே ஆரம்பிக்காமல்செல்வங்களை கொள்ளையடிப்பது, எதிரிகளை மன்னித்து ஓட விடாதுகொன்றொழிப்பதென, ஐரோப்பியமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவைத்திருந்தனர்.


ஸ்காண்டிநேவிய மொழியில் Víkingr என்றால் கடற் கொள்ளையர் என்றுஅர்த்தம். இவர்கள் புஜபலம் மிக்கவர்கள்கொந்தளிக்கும் கடலில் துடுப்பு வலிப்பதால்கிடைத்த வரம் அது.. 


இவர்களது டிராகன் வடிவ மரப் படகுகள் 30 மீட்டர்  நீளம் வரை இருந்தன. அதன் ஒருபக்கத்துக்கு 16 என மொத்தம் 32 துடுப்புகள்உண்டு இந்த அந்நியன் வாழ்க்கைக்கு முன்  இவர்கள்.. 


அம்பியாக இருந்த காலத்தில், “ சொர்க்கமேஎன்றாலும்” என்று ராமராஜன் போல ஆடிப்பாடியது  மட்டுமல்ல ஆடு, மாடு, பன்றிகளைமேய்த்து, பால் கறந்து நார்வே பாட்டுக்காரனாக வலம் வந்தனர். 


மலைச் சரிவுகள், பனிப் பள்ளத் தாக்குகள், காடுகள் போன்ற பல சூழல்களில்வாழ்ந்தனர். காலை விவசாயம், மதியம்வேட்டை, மாலை மீன் பிடித்தல், இரவுதீயைச் சுற்றி அமர்ந்து கதைகள் பேசுவது..


என்று டைம் டேபிள் போட்டு வாழ்ந்தனர். காலை எழுந்ததும் விவசாயம், பின்புதுணிவு தரும் நல் வேட்டை, மாலைமுழுவதும் மீன்பிடி நார்வேயில் பாரதிபிறந்திருந்தால் இப்படித் தான்எழுதியிருப்பான். 


இதுவே இங்கு பல குடும்பங்களின்இயல்பான வாழ்க்கை முறையாகும். வெள்ளையா இருக்கவன் பொய்யேசொல்ல மாட்டான்னு நினைக்கிறா மாதிரி, ஒவ்வொரு வைகிங்கும் போர் வீரர் அல்ல. 


பெரும்பாலானோர் மீனவர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும்வணிகர்களாக இருந்தனர் கடற்பயணங்கள்அவர்களது வாழ்க்கையின் ஒரு பகுதிமட்டுமே. கடல் வாழ்வில் தான் இவர்களின்..


உப தொழில்களாக மீன் பிடித்தலும் கப்பல்கட்டுவதும் மாறின. இவர்கள் அற்புதமாகமரக்கப்பல் செய்வதின் வரலாறு கலைநயம்மிக்கது. இவர்கள் அற்புத தச்சுவேலைக்கலைஞர்கள். 


ஆம்! “மரத்திலே கலை வண்ணம்கண்டான்” என்று நார்வேயின் மரத் தூண்சர்ச்சுகளின் அழகை கண்டால்  நாளெல்லாம் பாடலாம். இங்கே அழகியமரத் தூண்களால் அமைந்த சர்ச்சுகள் பலஉண்டு. 


இவை நார்வேயின் வாழ்வியல், கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், மரக் கட்டிடக் கலை, மற்றும் அவர்களின் கைவினைத் திறனின்அழியாத சின்னங்களாக இன்றும் உள்ளன. 


⛵️ RO வலிப்போம் ⛵️



Monday, 6 July 2026

​🇳🇴 நலமான நார்வே 🇳🇴 1


⛵️ பார்ட் 1 ⛵️

ரெகுலரா பார்க்குற ஃபேஸ்புக் பதிவுகளில் இருந்து டைவர்ட் ஆகி லெஃப்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்பாமல், யூடர்னும் அடிக்காமல், நேராகவும் செல்லாமல்.. 

வண்டியை ஒரு ஓரமா நிறுத்திவிட்டு இந்தப் பதிவை படிக்கவும். நான் பார்த்ததை.. கொஞ்சமா படிச்சதை ஏதோ எனக்குக் தெரிந்த அளவில் பதிவாக எழுதியிருக்கேன்.. வாங்க..

ஊருக்குள்ள போயி என்னைப் பத்தி கேட்டா, அவரா! அவர் படுபயங்கரமான ஆளாச்சேன்னு நடிகர் சேஷுவின் காமெடி போலின்றி உண்மையாவே நார்வே பற்றியத் தகவல்கள் இது👇🏿

பாட்ஷாவுக்கு மாணிக்கம்னு ஒரு பேர் இருக்குறா மாதிரி நார்வே மக்களுக்கு ஸ்காண்டிநேவியர்கள் என்றும்  வைகிங் என்றும் 2 பெயர்கள் இருக்கு ரெண்டா மாமின்னு வடிவேலு மாதிரி..

கேட்காதிங்க ஏன்னா இவங்களுக்கு இன்னும் சில பெயர்கள் இருக்கு! அதுக்கு முன்னால யார் இந்த வைகிங் மக்கள் என்று பாத்துடுவோம். அப்போ இந்த ஸ்காண்டிநேவியா எங்கிருக்கு? 

அதை தெரிஞ்சிக்காம வரலாற்றை சொல்லமுடியுமா? இன்றைய சுவீடன், டென்மார்க், நார்வே பகுதிகள் தான் அன்றைய ஸ்காண்டிநேவியா. இங்கு வாழ்ந்த  இனக் குழுவினருக்கு.. 

‘நார்ஸ்மேன்’ அதாவது வடக்கிலிருந்து வந்தவர்கள் என்ற பெயரும் உண்டு. அண்ணன் சீமான் அவர்கள் சொல்றா மாதிரி சொன்னா இவங்க தான் அந்த ஆதி நிலத்தின் பூர்வ குடிகள். 

நார்வே மலைகளைக் கொண்ட நிலப் பரப்பு, சுவீடன் அடர்ந்த காடுகளைக் கொண்டது. டென்மார்க் வளமான நிலமுள்ள பகுதி. விவசாயமும், கால் நடைகள் வளர்ப்பும் தான் இங்கே..

முக்கியத் தொழில்கள். தமிழ்நாட்டில் விவசாயம் பொய்த்த போது மில் வேலைக்கும், கட்டிட வேலைக்கும் நாம போனது போலவே இவங்களும் விவசாயம் மிகவும் நலிந்த போது.. 

செலக்ட் பண்ண தொழில் என்ன தெரியுமா? கடற் கொள்ளை அடிப்பது. ஏண்ணே கொள்ளையடிக்கிறது எல்லாம் ஒரு தொழிலா? ஆனால் அன்று அவர்களுக்கு அது ஒன்றே வழி.

வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் போல இவங்க நிலத்தில் போர் அடிக்கும் விவசாயிகள்..நீரில் போர் புரியும் கொள்ளையர்கள்.. இப்படி எம்ஜிஆர் மாதிரி இரட்டை வேடத்தில்..

9ஆம் நூற்றாண்டு முதல் 11ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல பகுதிகள் மீது கடல் மார்க்கமாக படை எடுத்துப் போயி ஜெயிச்சிட்டு.. பிறகு  அங்கேயே குடியேற ஆரம்பிச்சாங்க. 

வக்காலி எந்தப் பக்கம் போனாலும் அணை கட்றானுங்களே சொல்றா மாதிரி, இவங்க கடல் வழியா மட்டும் இல்ல அதே கப்பலில் ஆறுகள் வழியா ஊருக்குள் வந்து போர் செய்வாங்க. 

சுந்தர்.சி. கிட்ட சவால் விட்டா மாதிரி வாடா! என் ஏரியாவுக்கு வாடான்னா நிச்சயம் வந்துடுவாங்க. அவங்களோட நீளமான “Longship” கப்பல்கள் அதிக ஆழமில்லாத நீரிலும் போகும். 

ஒரே நேரத்தில் துடுப்பாலும் பெரிய பாய்மரத்தாலும் இதை இயக்கலாம். சில கப்பல்கள் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் போன ஆதாரத்த இவங்க சேதாரமில்லாம வச்சிருக்காங்க.

அந்த நீளக் கப்பல்களோட முன்னாடி டிராகன் / பாம்பு போன்ற தலைகள் செதுக்கியது எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் உளவியல் யுக்தியாகவும்.. தீய சக்திகளை விரட்டும் (DMK அல்ல) 

நம்பிக்கையாகவும் கருதப்பட்டது. ஊருக்குள் கொள்ளையடிச்சு முடிச்ச விநாடி அடிச்ச பணத்தோட மல்லையா மாதிரி உடனடியா கடலுக்குள் தப்பிச் செல்வது அவர்களின் முக்கிய யுக்தி! 

RO வலிப்போம்..