Friday, 9 January 2026

30 பாவை மொழி

30. வங்கக் கடல்..






இந்த 30ஆவது நாள் பாசுரத்தில் மாதவன் புகழோடு தன் சுய விவரத்தையும்பாடுகிறார் ஆண்டாள்ஆனால் பாசுரத்தில் சொல்லாத மெய்யானஆண்டாள்-பயோகிராஃபி இதுவே👇🏿


பெயர் : ஆண்டாள்இயற்பெயர் : கோதை


உத்தேசமான பிறந்த ஆண்டு : கி.பி.885 அல்லது கி.பி 886 


கண்டெடுக்கப்பட்ட நாள் & நட்சத்திரம் : கலியுகம் நள வருஷம் ஆடி மாதம்சனிக்கிழமை சுக்ல பட்சம் பூர நட்சத்திரம்


வளர்ப்பு தந்தை பெயர் : பெரியாழ்வார்


கணவரின் பெயர் : அரங்கன் ஶ்ரீரங்கம் 


இவரது பட்டப் பெயர்கள் : சூடிக் கொடுத்த சுடர் கொடிஆண்டாள்கோதைநாச்சியார்


எழுதியவை : திருப்பாவைநாச்சியார் திருமொழி


திருப்பாவை பாடல் இலக்கணம் : இயற்றர விணை கொச்சகக் கலிப்பா.


ஆண்டாளின் திருப்பாவை சங்கத் தமிழ்மாலை என போற்றப்படும் நூலாகும்திருப்பாவை என்பது பின்னர் வந்த பெயராகும்


இதில் இருக்கும் பாவை நோன்பு சங்க இலக்கியங்களிலும் வருகிறதுஶ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும்வடபெரும் கோயிலை நந்தகோபர்மாளிகையாகவும் அதிலுள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்துபாடினார் ஆண்டாள்


உன் மனதிலிருப்பது எந்த ஊரான்.? என திருமாலைப் பற்றி பெரியாழ்வார்கேட்டு பெருமாளின் திவ்ய தேசங்கள் அனைத்தையும் சொல்ல திருவரங்கன்பேர் கேட்டதும் ஆண்டாளுக்கு வெட்கம் வர.. அரங்கனோடு மணமாஎப்படிசாத்தியம் என சஞ்சலத்துடன் அவர் உறங்கப் போனார்.


கனவில் வந்த அரங்கன் அவளை அலங்கரித்து ஶ்ரீரங்கம் அழைத்து வாஎனச் சொல்கிறார்அவரும் கோதையை நன்கு அலங்கரித்து ஶ்ரீரங்கத்திற்குகூட்டிச் செல்ல அங்கு அரங்கனுடன் ஐக்கியமடைந்தார் ஆண்டாள்


தனது திருப்பாவையில் வான சாஸ்திரத்தையும்மழை பெய்வித்தலையும்ஆண்டாள் எழுதியது இன்றளவும் வியப்பானதுகண்ணன் மீது அவர்கொண்ட காதல் மிக மிக ஆழமானதுமார்கழி 30 நாட்களும் இந்த பாவைநோன்பை மேற்கொள்வது வைணவ மரபு.. இந்த 30 பாடல்களையும்மார்கழியில் படித்தாலும் அது நன்மையே.


இனி 30வது பாசுரம்..


பாற்கடல் கடைந்த மாதவனை சந்திர முகத்து சடகோபனைநம் பெண்கள் 30 நாட்கள் நோன்பிருந்துமனமுருகி வேண்டியது எல்லாம் கிடைத்தநிகழ்வுகளாக ஶ்ரீவில்லிப்புத்தூரிலே வாழ்வார்.. பெயரிலே பெரியாழ்வார்அவரின் செல்ல மகள் ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 30 பாசுரங்களையும் அருளியுள்ளார்.


இவற்றை தவறாமல் நோன்பிருந்து பாடினால் நான்கு தோள்களும்தாமரைக் கண்களும் கொண்ட திருமாலின் திருவருள் பெற்றுபேரின்பத்துடன் வாழ்வாங்கு வாழ்வார்கள்என்று கூறி பாவை நோன்பைநிறைவாக பாடி முடிக்கிறார் ஆண்டாள்ஒரு நாள் நீ யாரையம்மா மணம்செய்து கொள்வாய்எனப் பெரியாழ்வார் கேட்டபோது.. 


திருமாலுக்கென்றே படைக்கப்பட்டது என் உடல்அதை இந்தமானிடர்களுக்கு எனும் வார்த்தையை என் காதில் கேட்டாலே என்னால் வாழமுடியாது எனச் சொன்னவள்ஏனென்றால் அரங்கன் மேல் அவள் கொண்டகாதல் அப்படி 


ஆம்! "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.. அல்ல.. அல்ல.. அல்ல.. அதையும் தாண்டி புனிதமானதுபுனிதமானது”… புனிதமானது..



மார்கழி 30 ஆம் நாள் பாடல்...


வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்

கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


❤️💚 சுபம் ❤️💚




No comments:

Post a Comment