Wednesday 29 March 2017

டாலர் ப்ரஸ்

டாலஸ் நகரில் நண்பர் சவுந்தரிடம் இந்த ஊரில் சுற்றிப்பார்க்க முக்கியமான இடங்கள் என்னென்ன? எனக் கேட்டபோது அமெரிக்க டாலர் நோட்டு ப்ரிண்ட் பண்ற ப்ரஸ் இங்க தான் இருக்கு பார்க்குறிங்களா என்றார். கண்கள் விரிய அங்க எல்லாம் பப்ளிக் அலவ் பண்றாங்களா என்றோம் வியப்புடன்.! ஆம் என்றவர் அன்று காலையே நண்பர் நந்தாவுடன் எங்களை அனுப்பி வைத்தார். 

தீபாவளி பட்டாசை கையில் கொடுத்துவிட்டு சத்தமில்லாம வெடிங்க என்று சொல்வது போல வாசலில் இருந்த செக்யூரிட்டி முக்கியமாக உள்ளே காமிரா செல்போனுக்கு அனுமதி இல்லை என்றார்.. அந்தக் கட்டிடத்தின் நான்கு புறமும் இரும்பு வேலிகளில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்க மெயின் பில்டிங்கிற்கும் ரிசப்ஷனுக்கும் இடையே ஒரு சேப்பாக்கம் கிரவுண்ட்டே கட்டலாம்.. பேட்டரி கார் வசதி இருந்தது.

ரிசப்ஷன் மெட்டல் ஸ்கேனர் எங்களை கற்பழித்து புனிதமானவர்கள் என சான்றிதழ் அளிக்க உள்ளே அனுமதிக்கப் பட்டோம். உள்ளே சென்று ஒரு பஸ் ஸ்டாப்பில் நின்ற 35 விநாடி பேட்டரி கார் வந்தது.. வெளுத்த வெள்ளரிப்பழ நிறத்தில் போலீஸ்  சீருடையில் ஒரு இளம் பெண் கண்களாலேயே சிரித்து வரவேற்று வண்டியேற்றினார். 5 நிமிட பயணத்தில் மெயின் பில்டிங் வந்தோம் உள்ளே மீண்டும் செக்யூரிட்டி.

சீதையாக மெட்டல் யாக குண்டத்தில் இறங்கி எங்களை நிரூபித்து உள்ளே நுழைந்தோம்.. முதலில் இருந்தது இன்பர்மேஷன் சென்டர் அங்கு அந்த அச்சகத்தை பற்றிய விவரங்கள் உள்ள அழகிய ப்ரவுஷர்கள் இருந்தன.. அதை விட அழகாக பிரம்மன் அச்சிட்ட பெண்கள் வரவேற்பாளராக இருந்தனர்.. பிரவுஷர்கள் இலவசம் என்றவுடன் அப்போ நீங்க என்று மனதிற்குள் அல்பமாக கேட்டோம்.

நீ பார்க்க வந்தது பிரஸ்ஸை எங்களையல்ல என்னும் தொனியில் கோ திஸ் வே கைஸ் என டிராபிக் போலீசாய் கைகாட்டினார்கள் அண்ணா வழிப்படி நடக்கிறோமோ இல்லையோ அந்த அழகி காட்டிய வழியில் நடந்தோம்.. அங்கு டாலர்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் கரன்சிகளின் பிளாக்குகள் டாலரில் உள்ள வாட்டர் மார்க்குகள் டாலர் நோட்டின் சீரியல் எண்கள் இவற்றின் மாதிரிகளை...

அழகாக காட்சிப்படுத்தி இருந்தனர் சிலவற்றை டச் ஸ்க்ரீன்களில் டச் செய்து நாமே பார்க்கும் வசதி இருந்தது அடுத்து டாலர் நோட்டு பற்றிய விநோத செய்திகள் அரங்கு அங்கு நாங்கள் கேட்ட செய்திகள் மிகவும் விநோதமாக மட்டுமல்ல நம்ம நாட்டில் ஏன் இப்படி இல்லை என்ற கேள்வியையும் எழுப்பியது .. அந்த விநோதச் செய்திகள் பற்றி...

வரும்..

அமெரிக்காவில் மட்டுமே டாலர் நோட்டை கிழித்து தந்தாலும் செல்லும் ஒரு மாடு விவசாயியின் 6000 டாலர்களை தின்றுவிட அம்மாட்டை வெட்டி அதன் வயிற்றில் இருந்த நோட்டுகளை மாடு ஜீரணித்தது போக மீதியிருந்த..நோட்டுகளை கணக்கிட்டு அந்த விவசாயிக்கு 5000 டாலர்களை திருப்பித் தந்த செய்தியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.. மிக ஆச்சர்யமாக இருந்தது.

தீவிபத்தில் பாதி எரிந்த நோட்டுகள், முழுதும் கருகியவை, கரையான் அரித்த நோட்டுகள், மழை வெள்ளத்தில் ஊறிய நோட்டுகள் இப்படி எந்த நிலையில் பணம் தந்தாலும் அதற்கு நிகரான டாலராக மாற்றித் தருகிறார்கள்.. அவர்கள் பணம் எந்நிலையிலும் மதிப்பு மாறாத பணம் அடுத்து டாலர் ப்ரிண்ட்டிங் செய்யும் ப்ரஸ்.. இங்கு நுழைபவர்களுக்கு ஒரு வாக்கி டாக்கி தரப்படுகிறது அதில் ஆங்கிலம் ஸ்பானிஷ் சீனம்..

முதலான 8 மொழிகளில் அறிவிப்பு வரும் குறிப்பிட்ட இடத்தில் போய் நின்று அறிவிப்பு பலகையில் உள்ள எண்ணை வாக்கி டாக்கியில் அழுத்தினால் அந்த இடத்தைப் பற்றிய அறிவிப்பை வாக்கி டாக்கியில் கேட்கலாம். டாலர் ப்ரிண்ட் செய்யும் இடத்தை கழுகுப் பார்வையில் பார்க்கும் படி ஏற்பாடு..புல்லட் ஃப்ரூப் கண்ணாடிகள் வழியாக துல்லியமாக தெரிந்தது. உலகின் மதிப்பு மிக்க பணம் அங்கு...

ஷீட் ஷீட்டாக ப்ரிண்ட் ஆகி தனித் தனியாக கட் செய்து மிஷின் மூலம் கட்டுகளாகியது. ஒரு இடத்தில் இருந்த சிறிய குவியலில் நீங்கள் பார்க்கும் குவியல் 26 மில்லியன் என மேலிருந்து நாம் படிக்கும்படி எழுதியிருந்தனர்.. லட்சகணக்கில் அடிக்கும்கட்சி போஸ்டர்கள் போல பணம் அச்சடிக்கப்பட்டு குவியல் குவியலாக அடுக்கியிருந்தனர் அமெரிக்காவில் 2இடங்களில் மட்டுமே டாலர் அச்சிடப்படுகிறதாம்.

ஒன்று வாஷிங்டன் இன்னொன்று நாங்கள்  பார்த்த டாலஸ்.. பல விதமான வாட்டர் மார்க் நுணுக்கமான எண்கள் குறியீடுகள் எல்லாம் ஒவ்வொரு செக்ஷனில் பூர்த்தியாக இறுதியில் அவை கரன்சி கட்டுகளாகிறது.. அத்தனையும் சில விநாடிக்குள்.. பிறகு டாலர் பற்றி ஒரு திரைப்பட காட்சி உறுத்தாத ஏசியில் துல்லிய ஸ்பீக்கர் அனுபவத்தில் டாலர்புராணத்தை பார்த்து விட்டு.. வெளியேறினால்..