Tuesday 31 December 2013

அம்பரமே தண்ணீரே.....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 17 ஆம் நாள் பாடல்...



அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்

எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே

எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்

அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த

உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா

உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை: 


போட்டுனுக்கிற சொக்கா, துண்றதுக்கு சோறு, தாகம் எட்த்தா குடிக்க தண்ணி இந்த அல்லாத்தியும் மன்சாளுக்கு கொட்த்து அருள்ற எங்ய பெருமாளே ! நந்த கோபரே ! எயுந்துருங்க சாமி!

எங்ய குல கொயுந்து! கொடி கண்க்கா இர்க்குறவங்கோ ! பொர்ந்த வூட்டுக்கும் புவுந்த வூட்டுக்கும் குல விள்க்கா வெளங்க வக்கிற பெரிவங்கோ! எங்க எசோதாம்மாவே!
தூங்கினது போதும் எயுந்திரிங்கோ...

ஆகாஸ்த்தை கிழிச்சிகினு வான்த்துக்கும் பூமிக்குமா ஓங்கி உசரமா வள்ந்து இந்த உல்கத்தியே ஒரு கால்ல அளந்தவரு ! தேவாதிதேவரு !சாமி நீங்ய துங்கிகினு இல்லாம எயுந்திரிக்க மாட்டிங்களா !

செவுப்பு பொன்னால செஞ்ச வீர கயல போட்னு இருக்குற் செல்வமே ! பல்ராமரே ! நீயும் உன் தம்பி கண்ணனும் தூங்கிகினு அல்லாம ரெண்ட்யு பெரும் எயுந்திரிங்கோ கண்ணுங்களா.


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்.... வர்ட்டா...

Monday 30 December 2013

நாயகனாய் நின்ற....


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....



மார்கழி 16 ஆம் நாள் பாடல்...



நாயகனாய்நின்ற நந்தகோ பன்உடைய

கோயில்காப் பானே கொடித்தோன்றும்

தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ

வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.



ஆண்டாளு உரை : 


அல்லா உலகத்துக்கும் தலிவிரா இர்க்குற நந்தகோபரோட்ய மாளிக கணக்கா இர்க்க பெர்ய வூட்ட காத்துகினு இர்ப்பவரே ! பறந்துகினு கீற கொடி தோர்ணமா இர்க்குற வாசலயும் காத்துகினு இர்ப்பவரே ! 

அம்மாம் அயகாகீற கதவொட தாப்பாள தொற! பாலு கறக்குற கொலத்துல பொர்ந்த சின்னஞ்சிறுசுங்க கேக்குறோம்....நாங்கோ இர்க்குற விர்தத்துக்கு மோளம் ஒன்யு சத்யமா தர்ராதா நேத்திக்கு சொன்னாரு மாய கண்ணரு... மணிவண்ணரு...

அவுரு தூங்கிகினு இர்க்க சொல்லோ அவுர எயுப்ப பாட்டு பாடிகினு நாங்கோ உள்ளாறயும் வெள்யேயும் சுத்தபத்தமா இர்ந்துகினு இங்க வந்துக்கிறோம்..இந்த நல்ல கார்யத்த வோணாம்ன்னு  சொல்லாம வாசக்கதவோட நெலயில சேத்து போட்னு இர்க்குற தாப்பாள தொர்ந்து வுடு கண்ணு..


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா...




Sunday 29 December 2013

எல்லே இளங்கிளியே...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 15ஆம் நாள் பாடல்...


எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ

சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்

வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.



ஆண்டாளு உரை :


இந்த பாட்ட ரெண்டு பேர் பாடினு இர்க்கா மேறி பாக்குலாமா!

எயுப்புறவங்கோ : இந்தாம்மே கிளி கணக்கா இர்க்குற பொண்ணே ! எம்மாம் நேர்ந்தான் தூங்கிகினு இர்ப்ப?

படுத்துனு இர்க்கற பொண்ணு: ஏ.. இன்னா அல்லாரும் கீச் கீச்னு கொரல் வுடுறீங்க? கம்முனு கிடங்கோ த்தா வந்துர்யேன்....

எயுப்புறவங்கோ : நீ மெய்யாலுமே படா கில்லாடி தாம்மே நீ இன்னா பேஸ்வன்னு  எங்க அல்லாருக்கும் மின்னாடியே தெர்யும்.. வுன் வாய்ல இர்ந்து இன்னா வரும்ன்னும் தெர்யும்..

படுத்துனு இர்க்குற பொண்ணு : ஆரு நானா கில்லாடி.... நீங்க தாம்மே படா கில்லாடிங்கோ!  உங்க அல்லாரையும் கண்டு தான் நான்யே கத்துகினு இருக்கேன்.....

எயுப்புறவங்கோ : எயுந்து வர்றாம பட்த்துகினே பேசினு இர்க்கே! சுகுரா எயுந்துரும்மே!  விர்தம் இர்க்குறத வுட அப்டி உனுக்கு இன்னா பெர்ய வேல கீது?.

படுத்துனு இர்க்குற பொண்ணு : அல்லாரும் வந்துகினாங்களா?

எயுப்புறவங்கோ : அக்காங் ! அல்லாரும் வந்துகினாங்கோ!வோணும்ன்னா நீயே வந்து கரீட்டா கீதான்னு எண்ணிக்கோ....
 மதுரா புரியில பெர்ய ஆனையவே பூன மேறி மிறிச்சி கொன்னவரு... எதுக்குரவன் நெஞ்சுல இர்க்குற மஞ்சா சோத்த எட்த்து அவன் ஆணவித்த உண்டுல்லைன்னு ஆக்குறபரு..அவர பத்யே பாடினு இர்ப்போம் வா கண்ணு...


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல.... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா...


Saturday 28 December 2013

உங்கள் புழக்கடை...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 14 ஆம் நாள் பாடல்...


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.




ஆண்டாளு உரை :


உன்வூட்டு பின்னாடி இர்க்குதே தோட்டொம் அங்க இர்க்குற குளத்தாங்கரயில செங்கழ்னி பூவு பூத்துருச்சி ; ஆம்ப்லு பூவு மலராம மொட்டுங்க மேறி மூடின்னு இர்க்குது ; 

சிர்ச்சா வெள்ள கலர்ல பல்லு தெர்யற காவி வேஸ்டி கட்ன சாமிங்கோ அவுங்க பொர்ப்பா இருக்குற கோயில தொர்க்க சொல்லோ சுகுரா புறப்ட்டு போய்க்கினாங்கோ: 

அல்லாத்துக்கும் மின்னாடியே எயுந்து வந்து உங்க அல்லாரையும் எயுப்புவேன்னு வாயால முயம் போட்டு பேஸ்ன பொண்ணே ! நீயே தூங்கிக்கினு இர்ந்தா எப்டி எயுந்துரு! ஒன்க்கு வெக்கமா இல்ல...ஒன் நாக்குனால கன்னம் வரிக்கும் கியியுது வாய்துடுக்கு !

நாம கம்முனு கிடக்காம நீளமான கய்யில சங்கும் சக்கரமும்  வச்சினுகிராரே அவுர...  அவ்ரோட கண்ணு தாமுர பூ கணக்கா இர்க்குற அயக பாடினு இர்ப்போம்.... எயுந்து வா கண்ணு.


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்.... வர்ட்டா....





Friday 27 December 2013

புள்ளின்வாய்...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

வண்டு வந்து குந்தினிக்குதே தாமிரப்பூவு அதுங்கணக்கா கண்ணு வச்சுக்கிற பொண்ணே! நம்ம பெர்மாளு இர்க்காரே அவரு பர்வை மேறி வேசங்கட்டிகினு அரக்கனா வந்து பேஜார் காட்ன பகாசுரன் வாய பொள்ந்தவரு;

அத்த விட பெர்ய பிஸ்தா ராபணனோட பத்து தலியையும் கிள்ளி எர்ஞ்சு கில்லியா நின்னவரு; அப்டியா பட்டவரோட பெர்மய பாடிக்கினே பொண்ணுங்க அல்லாரும் விர்தம் இர்க்குற இட்த்துக்கு பூட்ச்சிங்க ; 

வான்த்துல வெள்ளி முள்ச்சிடுச்சி ! விசாளன் மர்ஞ்சிடுச்சி ! பர்வைங்க அல்லாம் மர்த்துல இர்ந்து கொரலுடுதுங்கோ ! இந்த மார்களி மாசம் நல்ல நாள்ல நீ எங்க அல்லாரோடவும் சேந்து குளுர குளுர குளிக்றத வுட்டுட்டு தூங்குறா மேறி ஆக்ட் குடுத்துனு இர்க்கியா பொண்ணே!


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல.... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா....

 

Thursday 26 December 2013

கனைத்து இளம்....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 12 ஆம் நாள் பாடல்.....


கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்

அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.



ஆண்டாளு உரை :


காலங்காத்தால வுட்ல இர்க்குற எரும் மாடுங்க அல்லாம் அத்தோட குட்டிங்கள 

நென்ச்சிகினு அப்டியே பீல் ஆகி குரல் கொட்க்க சொல்லோ.. அப்டியே பாசத்துல்ல மெல்ட் 

ஆயி அதுங்கோ மடில இர்ந்து பால் சொர்ந்து வூடு முயுக்கா அப்டியே காவா கண்க்கா ஓடி 

சேறா ஆய்ட்ச்சி... இப்டியாப்பட்ட மாடுங்க நெர்ய வச்சினு இர்க்க பெர்ய சீமானோட 

தங்காச்சியே.... மார்களி மாசொம் கொட்டினு இர்க்குற பனி அப்டியே தலயில உயுந்து எங்க 

மண்ட மேல்யே ஒட்டினுருக்க உன் வூட்டாண்ட வந்து நின்னுக்கினு இர்க்குறோம்... பத்து 

தல இராவ்ணன் மேல காண்டாகி அவுன குளோஸ் பண்ண இராமர நெஞ்சில நென்ச்சுக்கினு 

குஜாலா பாட்டு எட்த்துவுட்றோம்... கதவ தொற கண்ணு ! இம்மா நேரமா தூங்கினு இர்க்க? 

உன் வூட்டாண்ட நின்னு நாங்க குரல் உடறது அக்கம் பக்கம் அல்லா வூட்டுக்கும் தெர்ஞ்சு 

போச்சும்மே... சுகுரா எயுந்து வா கண்ணு....


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்...வர்ட்டா....







Tuesday 24 December 2013

வையத்து வாழ்வீர்காள்...

திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 2 ஆம் நாள் பாடல்.....


வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்

செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.



ஆண்டாளு உரை : 


இந்த நெல்த்து மேல்ய வாயுற அல்லாரும் கேளுங்கோ.! பொண்ணுங்க அல்லாமே விர்தம் இர்க்க சொல்லோ இன்னா வோணுமோ அத்த கேளுங்கோ.. பால் கடல்ல தூங்கிக்கினு கீராரே பெரிவரு அவுரு கால் அடிய பாடுவோம்...

 விர்தம் இர்க்க சொல்லோ நெய்யி துண்ணமாட்யோம், பால குடிக்க மாட்யோம், கார்த்தால எயுந்து குள்ச்சுடுவோம்: மைய எட்த்து கண்ல பூஸ்மாட்யோம், கொண்டியில பூவ வச்சிக்க மாட்யோம், இன்னாத்த செய்ய கூடாத்தோ அத்த செய்ய மாட்யோம், 

ஆரப்பத்தியும் வம்ப்பா பேஸ்மாட்யோம், கோள் மூட்டினு இர்க்க மாட்யோம்,வய்சுல பெர்ய மன்சங்கள மதிச்சு அவுங்களுக்கு இன்னா தேவயோ அத்த கொடுப்பொம், தர்மமா கேட்னு வர்ற இல்லாதவங்களுக்கு இல்லின்னு சொல்லாம முட்ஞ்ச அள்வுக்கு கொடுப்பொம்... 

இதெல்லாம் நாம செய்ற புண்யத்துல போயி சேந்துடும்ன்னு நென்ச்சு சந்தோஸ்மா இர்ந்துடுவோம்...

மார்கழித்திங்கள்...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 1ஆம் நாள் பாடல்.....



மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரா யணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

சீரும் செறப்புமா கண்ணன் கொலத்துல பொர்ந்த பொண்ணுகளா! கயுத்துல மூஞ்சில கைல அல்லாம் அயகயகா நகிய போட்டுகினு வர்ற சீமான் வூட்டு செல்லங்களா! கூரான வேல் எட்த்து கடிமிய்யான தொயில் செய்ற நந்தகோபரு பெத்த புள்ள தான் நம்ப நாராயணரு. 

அயகான கண்ணு வச்சினுருக்குற யசோதாம்மா பெத்த சிங்கக்குட்டி...கரு மேகொம் கண்க்கா நெறமும் சூரியன் மேறி சூடும் நெலா கணக்கா ஜில்லுன்னு குளிர்ச்சியும் அல்லாமே அவுரு ஒர்ரே மொகத்துல கீது!

 உனுக்கு விர்ப்பமானத்து இன்னா வோணும்ன்னாலும் அத்த கேட்டா கொட்ப்பாரு, இன்னிக்கு மார்களி மாசொம் பவ்ர்ணமி நாளு! ரொம்ப நல்ல நாளு! ஒலகமே அல்லாத்தயும் புகய்ந்து பேஸ்றா மேறி குள்ச்சிடலாம் வாங்க கண்ணுங்களா....


 

 

கற்றுக்கறவைக் கணங்கள்...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 11ஆம் நாள் பாடல்.....


கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே

புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.



ஆண்டாளு உரை:


கறவ பசுவோட கன்னுங்களும் கூட்ட கூட்டமா இர்க்க சொல்லோ அங்கியே பால கர்ந்துக்கினு இர்ப்பாங்கோ.. அதே நேர்த்துல எவுனாவுது ராங் காட்னா அவுனயும் போயி வூடுகட்டி அட்ச்சி ஜெயிச்சுனு வருவாங்கோ....

ஏன்னா இவுங்க அல்லாரும் நம்ம கோபால்ரு கொலத்துகாரங்கோ, அப்டியாப்பட்ட கொற இல்லாத கொல்த்துல பொர்ந்த தங்க கொடி மேறி இர்க்குற பொண்ணே ! புத்துக்குள்ள இர்க்குற நாகொம் கணக்கா மர்ஞ்சி இருக்குற இட்ப்பு ஒன்க்கு! 

காட்டாண்ட ஆடுகினு இர்க்குதே அயகான மயிலு அத்தும் உன்ன மேறியேவா இர்க்குமாம் ! எயுந்து வா கண்ணு! உன் தோஸ்த்துங்க அல்லாரும் உன் வூட்டுக்குள்ள வந்து மின்னாடி இர்க்குற வர்ண்டால நின்னு கார்மேகொம் கணக்கா இர்க்குற கண்ணன் பேர பாடிகினு இர்க்கோம்...

சீமான்பெத்த செல்வுமே,செல்லமான பொண்ணே...எதுக்யுமே அசஞ்சி கொட்க்காம இன்னாத்துக்காக இப்டி தூங்கினுக்குற? இதுக்கு இன்னாம்மே மீனிங்கு? சொல்லு கண்ணு.



எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளக்கி பாக்கலாம்.... வர்ட்டா.....



நோற்றுச் சுவர்க்கம்...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 10 ஆம் நாள் பாடல்..


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால்

பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த

கும்ப கருணனும் தோற்றும் உனக்கே

பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற

அனந்தல் உடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.



ஆண்டாளு உரை....

விர்தமிர்ந்து சொர்க்கதுக்கு உள்ளாற போற அம்மோ... வாசக் கத்வு தான் தொர்க்கலை ஒரு கொரலாவது உட்டு பதில் பேஸ்னா இன்னா? சோக்கா வாஸ்னை வர்ற துள்சி மாலிய கயுத்துல போட்டுனு இர்க்கறவரு நம்ம நாராயண்ரு..

 நம்மால பெர்மையா ஊரே பேஸ்ரா மேறி விர்தம் இருக்க சொல்லோ அத்த பாராட்டி பேரின்ப்பமாமே அப்படி ஒரு குஷிய அவரு நம்க்கு தர்வாராம்... மின்னாடி ஒரு காலத்துல யமங்கிட்ட வாய் உள்றி யமன் வாய்ல வுயுந்து சாபம் வாங்கிக்கினானே கும்பொகர்ணன்...

இன்னா அவனுக்கும் உனுக்கும் போட்டியா நட்க்குது? இல்ய அவன் உன்னாண்ட தோத்து ஜகா வாங்கிகினான் போல...  அவன் தூக்கத்தை நீ பரிசா வாங்கிக்கினியா?அதான் அட்ச்சி போட்டது கண்க்கா தூங்கினு இருக்கியா? என் காசு மாலையே, ஒட்டியாணமே, என் தங்கமே எயுந்துரு கண்ணு... தூங்கினது போதும் வந்து கதவொ தொற தங்கம்...


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம் வர்ட்டா....

முகநூல் நண்பர்களின் வெடி...

Murali Munus... பட்டாசு வெடிக்கிறார்....

என்ன பட்டாசுல எல்லாம் லட்சுமி ஸரஸ்வதி படம் இருக்கு எனக்கு வேணாம்....!

ஏங்க.. உங்களுக்கு எப்படி வேணும்?

எனக்கு ரோஜாப்பூ படம் போட்ட பட்டாசு தான் வேணும்... இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே.. ரோஜாப்பூ நீட்டுகிறார்...

(நாமும் நீட்டுகிறோம்) சரி இந்தாங்க வெடிங்க.....

"மழைக் காத்து வீசுர போது வண்ண மயில் ஆடாதா...

என்னங்க பாடுறீங்க?

எனக்கு பாடுனாத்தான் மூடு வரும்...

சரி பாடுங்க....

மத்தாப்பு சுட்டு சுட்டு போடட்டுமா".....

இது மத்தாப்பு இல்லிங்க வெடி.....

அப்ப... நானும்.... குண்டு ஒண்ணு வச்சுருக்கேன்" வெடிகுண்டு ஒண்ணு வச்சிருக்கேன்"

(திடீர்னு feel ஆகிறார்)

நண்பனோட பட்டாசு கடையில தீபாவளிக்கு பட்டாசு வாங்க போனேன் எங்கிட்ட காசு வாங்கி எண்ணி பாக்குறான்... இது எனக்கு மட்டும் தானா... (எண்ணிப் பார்க்கிறார்)

இனி வெடிச்ச மாதிரி தான்.....விடு... ஜூட்.....


Chelli Srinivasan.... பட்டாசு வெடிக்கிறார்....

எல்லா வெடியும் இருக்கா?

இருக்குங்க....

ம்ம்.. அப்ப சரி... இதுல என்ன திரியே இல்ல எப்படி வெடிக்கிறது?

இது வெங்காய வெடிங்க... திரி இருக்காது...

எனக்கு தெரியும்.... உங்களுக்கு தெரியுதான்னு டெஸ்ட் பண்ணேன்...

சரி வெடிக்க ஆரம்பிங்க....

வெங்காய வெடிக்கு ஏன் அந்த பேரு தெரியுமா?

ஏன் செல்லி திடீர்னு கேள்வி?

நீங்க தானே வெடிக்க ஆரம்பிங்கன்னு சொன்னீங்க அதான்... ஹா ஹா ஹா..பதில் சொல்லுங்க

தெரியலைங்க...

ஏன்னா.... வெங்காயம் உரிச்சா கண்ணுல தண்ணி வரும்... இது வெடிச்சா கண்ணுல தண்ணி வரும்...புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ஆமா இப்ப உங்க கண்ணுல இருந்து ஏன் தண்ணி வருது..

இது ஆனந்த கண்ணீருங்க....

யார் அந்த ஆனந்த்?

ஐயைய்யோ... நீங்க வேற எதாவது வெடிங்க...

என் பிரண்ட் நித்யாவுக்கு பட்டாசு வெடிக்க போகும் போது கையெல்லாம் ரத்தம் தெரியுமா?

அது எப்படிங்க... பட்டாசு வெடிச்சா தீக்காயம் தான வரும்! ரத்தம் எப்படி வரும் ?

அவங்க வெடிக்க எடுத்தது ஊசிப்பட்டாசு ....அது கைய குத்துனா ரத்தம் தான வரும்... யாரு கிட்ட.........(வெங்கி எங்க ஒடுறிங்க அது உங்களால முடியாது....)

நான் ஓட்டம் எடுக்கிறேன்... விடு ஜூட்....


உமர் சித்தப்பு பட்டாசு வெடிக்கிறார்.........

ஏய்... எல்லா வெடியும் வந்தாச்சா ஒரு அட்டண்டெண்ட்ஸ் போடுங்க... (ஒரு பல்டி அடிக்கிறார்) என்ன சத்தத்தையே காணோம்...

சித்தப்பு வெடி வெடிச்சாதான் சத்தம் வரும்... வாங்க வந்து வெடிங்க..

பேக் பண்ண வெடில சத்தம்... ஃபேக் ஐ.டின்னா முத்தம்... யோவ் சாகுல் ஒன் அன் ஒன்லி நோட் பண்ணுய்யா.....

இந்தாங்க சித்தப்பு ஆனை வெடி...

யோவ் வெங்கடேசு உன் உருவத்துக்கு ஏத்தமாதிரி வெடியா தர்ற... ஏதோ குஜிலி வெடியாமே அத கொண்டா...

ஐயோ சித்தப்பு அது பிஜிலி வெடி உதிரியா இருக்கும்...

அப்படியா சரி சங்குசக்கரம் இருக்கா... அது தான் என்னை மாதிரியே சுத்தும்... (கர கர வென அதுபோல சுற்றுகிறார்)

பாத்து... பாத்து சித்தப்பு கால் சுளுக்கிக்க போகுது.....

கால்... கால்... யோவ் பட்டாசு மட்டும் தானா லெக் பீஸ் சாப்பிட இல்லையா?

இருக்கே உங்களுக்கு என்ன வேணும்?

மட்டன் பிரியாணி,பட்டர் சிக்கன், விரால்மீன் ரோஸ்ட், ஃபுரூட்சாலட் ஐஸ்க்ரீம், பீடா, கிங்ஸ்... ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

சித்தப்பு நீங்க சொன்னவுடனே 200 லைக் விழுந்துருச்சு...

லைக் விழுகலாம் பிகர் முன்னாடி பைக்குல விழக்கூடாது... ( சிறுவன் ஒருவன் வருகிறான்)

அங்கிள்.. பொட்டு கேப் வெடிக்க "சுத்தி" கிடைக்குமா?

(சித்தப்பு காதில் "சித்தி" என விழுக பேக் பல்டி அடித்து மறைகிறார்)

நாமும் விடு ஜூட்........


ரா.புவன் பட்டாசு வெடிக்கிறார்......

பட்டாசு வெடிக்கலாமா புவன்.....

பிரியாணி வரட்டும் பட்டாசு வெடிக்கிறேன்...

அடடே பிரியாணி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலியே புவன்!

அண்ணே மொக்கை போட்டதிங்க நான் சாப்பிடுற பிரியாணிய சொன்னேன்....

இதோ சமையல் ஆகிகிட்டே இருக்கு முதல்ல வெடிக்கலாம்...

ஆமாண்ணே பிரியாணி வேணும்... அதுவும் "இலையில" தான் வேணும்... (இன்னோவா...)

கண்டிப்பா உண்டு வா வெடிக்க ஆரம்பிக்கலாம்...

ஆரம்பம்... சூப்பர் இது தான் தல" தீபாவளி... ஆனா ரெண்டாவது தடவை பாக்க கூடாது..

அதுசரி முதல் தடவை பாத்துட்டேன் மறுபடியும் நான் போவனா?

போவனா... அண்ணே நீங்க இதை சொன்னதும் பாவனா ஞாபகம் வந்துருச்சு...

ஐயைய்யோ அது வரக்கூடாதேப்பா...

மனசு சரியில்லைண்ணே ஒரு கவிதை...."உன் இதழ்கள் கொண்டு என் விழிகள் மூடுகிறாய் தூங்கச் சொல்லி... 

தம்பி பட்டாசு வெடிக்கலை...தூங்கிடப்போற....

ஈழத்து கொடுமை கண்டு கண்மூடி நின்று விட்டோம்...ஐயகோ....

தம்பி பிரியாணி ரெடியாம் சாப்பிட போகலாமா?வெடிக்க வேணாம்

(Feeling பண்ணி பேசுகிறார்)
நம்பிக்கை வைத்து பல முறை ஏமாந்து விட்டேன்... நட்பு என்று துரோகம் செய்தார்களே அப்போதே என் இதயம் வெடிச்சுருச்சு... அதுக்கு மேல ஒரு வெடியா....

இனி நான் நிப்பேனா......விடு ஜூட்......


நித்யா கந்தசாமி வெடிக்கிறார்.....

ஏய் என்னா ஒரே கம்பி மத்தாப்பு சாட்டைன்னு குழந்தைங்க வெடியா இருக்கு....

இல்லிங்க அது வந்து....

இங்க பாரு நல்ல வெடியா குடு... நான் ஆங்கூர் பூந்தி,மகிதானா லட்டு செய்யறதை விட்டுட்டு வந்துருக்கேன்....

இந்தாங்க 10தவுசண்ட் வாலா.....

இதெல்லாம் சிறுசுங்க வெடிக்கிறது வேற தா .....

அப்ப பெருசுங்க வெடிக்கிற வெடி தரட்டுமா.....

ஏய்..... யாரை பாத்து பெருசுன்னு சொன்னே....என் பெரிசு கிட்ட சொன்னேன் உனக்கு  ஊசி தாண்டி....

சரி இந்தாங்க அணு குண்டு..

ரமேஷ் மாம்ஸ்க்கு அதிரடியா ஒரு கிப்ட் கேட்டா நீ இதையா குடுக்குற...

அய்யோ இது அதுக்கு இல்ல நீங்க வெடிக்க...

தோடா... நான் வெடிச்சா தாங்க மாட்ட நாலு வருசம் தூங்க மாட்டே...

சரி உங்களுக்கு என்ன தான் வேணும்....

ம்ம்...எண்ணை வேணும் பலகாரம் செய்வேன் இல்லை பாயா செய்வேன்....

சரிங்க அப்ப பட்டாசு?.

யாருக்கு வேணும் உன் பட்டாசு நான் எல்லாம் ஸ்டேட்டஸ் போட்டாலே பட்டாசு தான்...

அது எப்படிங்க?

அது... எப்படியா???? பிரண்ட்ஸ் நான் சொன்னதுக்கு "சிரிச்ச" மாதிரி கருப்பு வெள்ளை போட்டோ போட்டிங்க...

இப்ப தீபாவளிக்கு "வெடிச்ச" மாதிரி போட்டோ வர்ற 4ம் தேதி போடுங்க.......

நான் தனி ஆள் இல்லை என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு.... 

இந்த 30 பேரையா சொல்றிங்க....

ஏய் என்ன கிண்டலா...

(சட்டென கவலை ஆகி)

எனக்கு மூடு அவுட் யாராவது என்னை சிரிக்க வைங்களேன்...

நான் விடு ஜூட்.....


மோகனசுந்தரம் மீனாட்சிசுந்தரம் பட்டாசு வெடிக்கிறார்.......

எனக்கும் உங்களுக்கும் 444 மியூட்சுவல் பிரண்ட்ஸ்..... எனக்கு 4 தாய்..... 

சரி.... பட்டாசு வெடிங்க.....

என் முதல் தாய்க்கு பட்டாசு பிடிக்காது......

அப்ப வெடிக்க மாட்டிங்களா?

என் இரண்டாம் தாய்க்கு பட்டாசு பிடிக்கும்...

அப்ப வெடிங்க.....

என் மூன்றாம் தாய் எழுந்து விடுவாளே......

சரி... மெதுவா வெடிங்க....

என் நான்காம் தாய்க்கு அது பிடிக்காது....

ஏங்க ஏதாவது வெடிங்க.....

இதோ வெடிக்கிறேன்..... எங்கே ராக்கெட்?...

இந்தாங்க பத்த வைங்க....(பத்த வைக்கிறார்)

(பறக்கிறது,, ) சரி ஏன் வெடி வெடிச்சிங்க?

உதடு தான் மேலே அங்க வந்தா நிக்கணும்....

இல்லிங்க நீங்க பத்த வச்சது மேல போச்சு... 

மேலே போனா கீழே வரணும்.... கொடுக்குற தெய்வம் ஏன் கூரையை பிச்சிகிட்டு கொடுக்குது தெரியுமா? ( பக்கத்து வீட்டு குரல்) எல்லாமே பிஞ்சிடுச்சு....யார்ரா ராக்கெட்டை என் கூரைல விட்டது ......

இருவரும் ஓடுகிறோம்..... விடு ஜூட் ...........


கிருத்திகா தரன்.... பட்டாசு வெடிக்கிறார்...........

நீளமா இருக்குற பட்டாசு நீண்ட நேரம் வெடிக்குமா?டவுட்டு டானியா கேக்குறா?

டானியா டவுட்டுக்கு பதில் சொல்ல முற்படுவதற்குள்.... எல்லாம் வெடித்து விடுகிறது.....

சரி.... இது வெடிச்சா வெடிக்கட்டும் வேற வெடி இருக்குல்ல?

இருக்குங்க கிருத்திகா... இந்தாங்க செங்கோட்டை வெடி.....

செங்கோட்டைன்ன உடனே எனக்கு ஞாபகம் வர்றது இதை எப்படி செய்யறது?

அது எனக்கு எப்படிங்க தெரியும்!,,

தெரியணும்...தெரிஞ்சு வைச்சுக்கணும் இல்லாட்டி அஞ்சலைய கேளுங்க... (அஞ்சலையை கூப்பிட அவர் வருகிறார்)

யக்கோவ்.....வூட்ல செய்யாத வெடியும் கடையில வாங்கின பொடியும் சீக்கிரம் கெட்டு போயிடும்... அக்காங்...

குட்... அஞ்சலை.. கரெக்டா சொன்ன... ஓஜுக்கு கதை சொல்லு.. இந்தாளு கதைய நான் பாத்துக்குறேன்......

ஆமாம்மா தீவாளிக்கு நிறைய வேலை இருக்கு சட்டுன்னு "இதை"அனுப்பிட்டு வேகமா வா....

என்னங்க என்னை இதுன்னு மரியாதை இல்லாம சொல்றாங்க அஞ்சலை....

இருங்க வெங்கி,,, எது மரியாதை?.... பெங்களுர் வந்த உங்களுக்கு காவிரி தண்ணி கொடுத்து உபசரிச்சு இருக்கனே இது மரியாதை...

இது எங்க ஊர்லயே கிடைக்குதுங்களே.....

அப்பிடின்னு நீங்க தான் சொல்றிங்க நான் சொன்னேனா?

இல்லிங்க நீங்க பட்டாசு வெடிங்க....

இருங்க பட்டாசு வெடிக்க போயி எங்கமாமா கை கிழிஞ்சு தொங்குன கதை உங்களுக்கு தெரியுமா?

இல்லிங்க தெரியாது....

சரி இப்ப தெரிஞ்சுக்கோங்க... அதாவது லஷ்மி வெடியை எடுத்து...

வேணாங்க நீங்க வெடிக்கவே வேணாம்.... நான் கிளம்பறேன்

சரி...இருங்க வீடு தேடி வந்துட்டிங்க  காபி சாப்பிட்டு போங்க... அஞ்சலை... அஞ்சலை...

(யாரும் வரவில்லை).    என்னங்க அஞ்சலைய காணோம்?

ஹி...ஹி...ஹி...அவளுக்கு வெடின்னா பயம் அதான்..... 

சரி... அவங்க எங்க?

நல்லா பாருங்க (கொல்லைப்புறம் வழியாக காட்டுகிறார் ...தூரத்தில் அஞ்சலை..)

அங்க நிக்குறா அஞ்சலை..... 

நான் விடு ....... ஜூட்.......


Daisy Edwin பட்டாசு வெடிக்கிறார்......

இந்தாங்க டெய்சி வெடிங்க....

சிலருக்கு உறக்கம் வருகிறது எனக்கு நீயும் உன் காதலும்...

அய்யய்யோ என்னாச்சுங்க? 

காதலா ...காதலா...

டெய்சி ஆர் யூ ஆல் ரைட்?

உலக தமிழ் வானொலி வரலாற்றில் முதன் முறையாக ஃபேஸ்புக் கலாட்டா...

வெடிக்கலையா டெய்சி?

இருங்க கே.வி மகாதேவன் பாட்டு போடுறேன்.....

சரிங்க நான் கிளம்புறேன்....

இருங்க நீங்க இப்ப தமிழ் குஷி டாட் காம் கேளுங்க....

நீங்க வெடிப்பிங்களா இல்லையா...

நானா மொக்கை போட்டா வெடிப்பேன்... எதாவது மறைச்சு பேசுனா வெடிப்பேன்... எனக்கு பிடிக்காதவங்க கிட்ட பேசுனா வெடிச்சு சிதறுவேன்... போதுமா...

அய்யய்யோ சாரிங்க ஹேப்பி தீபாவளி...

ஓ.கே இப்ப இதை கேளுங்க அதிகாலை சூரியன் ......வெங்கி ஓடாதிங்க

நான் விடு ஜூட்.....


ஹன்ஸா பட்டாசு வெடிக்கிறார்........

என்னப்பா பட்டாசு எல்லாம் பெட்டியில இருக்கு?

ஆமாக்கா பின்ன எப்படி இருக்கணும்?

எனக்கு கட்டு தான் பிடிக்கும்.. சரி இதெல்லாம் எங்க வாங்கினே?

சிவகாசிக்கே போயி வாங்கினேன் 10 ஆயிரம் ரூபா ஆச்சு...

பில் வாங்கிட்டியா? நாளைக்கு ஏதாவது பிரச்சனைன்னா கேஸ் போடலாம்...

அது சரி ....... அக்கா இப்ப வெடி போடலாம்...

இருப்பா ஏன் அவசரம் பையன் வர்றதுக்கு முன்னால பலகாரம் செய்யணும்...

வெடிச்சிட்டு செய்யுங்க அக்கா...

இன்டர்நெட்லயே பாதுகாப்பு வந்துருச்சு வெடிக்கு பாதுகாப்பு இருக்கா?

புரியலைக்கா?

சினேகிதனே பத்திரிக்கையில் வழக்காடுவோம்ன்னு எழுதுறேன் அதை படிங்க புரியும்..

சரிக்கா படிக்கிறேன்... நீங்க வெடிங்க..

இந்தாப்பா சும்மா வெடி வெடின்னே அப்புறம் கடிச்சு வைச்சுடுவேன்..

அய்யய்யோ நீங்க கடிப்பிங்களா?

நம்பலையா ? நான் எப்படி கடிப்பேன்னு என் கூட ரெண்டாம் கிளாஸ் படிச்ச பிரகாஷை கேளு...

சாரிக்கா ....இப்ப கம்பி மத்தாப்பு எடுக்கவா?

எடு அதுக்கு முன்னால பாக்கெட்ல MFD Date இருக்கா பாரு... இல்லாட்டி வழக்கு போடுவோம்....மத்தாப்பு காரனை கம்பிக்குள்ள போடுவோம்...

அதெல்லாம் இருக்குக்கா...( ஆனால் கம்பி மத்தாப்பு பெட்டிக்குள் சாட்டை இருக்கிறது)

பாத்தியா இது ஆள்மாறாட்டம் போர்ஜரி மத்தாப்புன்னு சொல்லி சாட்டைய வச்சு இருக்கான்... இப்ப சுழட்ட போறேன் என் சட்ட சாட்டையை...

அக்கா அது நான் பிரிக்கும் போது தப்பா வச்சுட்டேன் கம்பெனிகாரன் தப்பில்லை...

ஓ... இருந்தாலும் நாளைக்கு இது உண்மையிலுமே நடந்துட்டா.... ம்...ம்ம். ஓகே நுகர்வோர் நலன்கள்ன்னு ஒரு தொடர் எழுத போறேன் புது பரம்பரை புக்குல சரியா?

அக்கா வந்ததுல இருந்து எதுவுமே வெடிக்கலை...

இரு.. இரு... செருப்பு ஏ.சி.ஷோரூமிலே.... காயி மொட்ட வெயிலிலே... எப்பூடி! லைக் பட்டனை அமுக்கு தம்பி....

அக்கா நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன்...

நூடுல்ஸ்... தம்பி அந்த நூடுல்ஸ் பதிவு பாத்திங்களா வழக்கு போடப் போறேன்...

அக்கா நான் கிளம்புறேன் நீங்க வக்கீல் வாயிலயே வெடிக்கிறிங்க.. பட்டாசு வெடிக்க மாட்டேங்குறிங்க..

ஹா..ஹா... இதோ அபினவ் வந்துட்டான் அவன் வெடிக்கணும்ன்னு தான் உன்னை வெட்டி வம்பு இழுத்துகிட்டு இருந்தேன்...

இத அப்பவே சொல்லி இருக்கலாமேக்கா.......அவ்வ்வ்வ்வ்வ்

எந்த கேள்விக்கும் தற்கொலை பதிலாகாது...! ஒன்றைத் தவிர... தம்பி... என்ன மாயமா மறைஞ்சுட்ட.....

விடு...ஜூட்......


டாக்டர் ஹரிஹரன் பட்டாசு வெடிக்கிறார்......

டாக்டர் இந்தாங்க எல்லா வெடியும் இருக்கு...

ம்ம்...இது என்ன உங்களை மாதிரியே உருண்டையா இருக்கு?

இது அணுகுண்டு டாக்டர்...

யெஸ் கரெக்ட்... குண்டா இருந்தா வெடிச்சிடும் நீங்களும் அப்பிடிதான் இனி டெய்லி காலைல 3கிமீ வாக்கிங் போங்க...

நடந்தேவா டாக்டர்?

ஏன் ஒரு ஆல்டோவுல போங்களேன்.... சரி இதென்ன?

இது ஆட்டம் பாம் டாக்டர்..( ஸ்டெதஸ் வைத்து பார்க்கிறார் )

டாக்டர் என்ன இதுக்கு போயி ஸ்டெதஸ் வைக்கிறிங்க?

இல்ல இது டைம்பாமா இருந்தா சத்தம் வருமே அதான் பாக்குறேன்.. ஹி.. ஹி...

சரி இந்தாங்க மத்தாப்பு ....

(வாங்கி விளக்கில் பற்ற வைக்கிறார் அது எரிய வில்லை) என்னங்க இது மத்தாப்பு எரியவே மாட்டேங்குது இன் நேரம் ஒரு அண்டா வென்னீரே வைச்சு இருப்பேன்...

ஐயோ டாக்டர் அங்க பாருங்க அது மத்தாப்பில்ல உங்க தெர்மாமீட்டர்...

அட ஆமாம் ... நர்ஸ் இந்த மாசம் உனக்கு சம்பளமில்ல....

அதுக்கு அவங்க என்னங்க பண்ணுவாங்க

ஒழுங்கா துடைச்சி ஸ்டெரிலைஸ் பண்ணாமல் மத்தாப்பு கலர்ல வைச்சதுக்கு தான்... ஓகே வேற என்ன வெடி...

புதுக்கோட்டை...ச்சீ......செங்கோட்டை வெடி....

அது வேணாம் காஸ்ட்லியா இருக்கும்.. வேற...

காஸ்ட்லி எல்லாம் இல்லை டாக்டர்...

ஷ்..ஷ்..ஷ்..சும்மா இருங்க எனக்கு தெரியாதா அந்த காலத்துலயே புதுக்கோட்டை to மதுரைக்கு 60ஆயிரம் ஆச்சு செங்கோட்டை ரொம்ப தூரம்.....வேற...

பென்சில் இருக்கு பரவால்லையா?

என் கையெழுத்து புரியாது அது பரவால்லையா....

சரி இந்தாங்க மாத்திரை..

ஹலோ டாக்டருக்கே மாத்திரையா?

ஐயோ டாக்டர் இது பாம்பு மாத்திரை....

அப்ப அதை பாம்புகிட்ட குடுங்க.... 

உங்களுக்கு பிடிக்காதா?

நர்ஸ் மாலதிய கூடத்தான் பிடிக்கலை அவங்க கிட்ட குடுங்க...

சங்கு சக்கரம் விடலாமா?

நான் என்ன பெருமாளா?

நீங்க எதுவும் வெடிக்க மாட்டிங்க ....சரி டாக்டர் நான் கிளம்புறேன்...

ஹலோ நான் வெடிக்கறது இல்ல படிக்கிறது மட்டும் தான் விகடன்ல முத்துக்குமார் தொடரை படிங்க...

சரிங்க வரேன்..

ஹலோ இருங்க ஏன் அவசரம் முதல்ல கன்சல்டிங் பீஸ எடுங்க...!!

கன்சல்டிங் பீஸா????????? எதுக்கு டாக்டர்?

இப்படி கேட்டதுக்கு இன்சல்ட்டிங் பீஸும் உண்டு.... பேச்சு வாக்குல உங்க உடம்பை குறைக்க யோசனை சொன்னனே அதுக்கு.....

(நான் ஓடுகிறேன்)

ஹலோ என்ன இப்பவே நான் சொன்ன ஜாகிங் ஆரம்பிச்சுட்டிங்களா..இருங்க நான் நடந்து வந்தே உங்களை புடிக்கிறேன்...

புடு ஜூட் ........



Kamali Panneerselvam பட்டாசு வெடிக்கிறார்.....

இந்தாங்க வெடிகள் வெடிங்க கமலி...( தேடுகிறார் )

என்ன தேடுறிங்க கமலி?

என் கண்ணாடியைத் தான்....  செல் வைச்ச இடம் மறந்தா மிஸ்டு கால் குடுத்து கண்டுபிடிக்கிறா மாதிரி கண்ணாடிக்கு ஏதாவது வழி இருக்கா?

( கண்ணாடியை  நாம் எடுத்து தருகிறோம்) முதலில் ராக்கெட் வெடிங்க....

(பற்ற வைப்பதற்கு முன் மேலே பார்த்து உணர்ச்சி வசப்படுகிறார்)

என்னாச்சுங்க கமலி?

அங்க அந்த மரத்துல பாருங்க மைனா பறவை வெடிசத்தத்துல ஒடுங்கி நிக்குது எனக்கொரு புழுவை கண்டாலே பாவமா இருக்கும் சாரி இந்த வெடி வேணாம்...

ஏங்க உங்களுக்கு கண்ணாடியை எடுத்து கொடுத்தது தப்பா போச்சே...மைனாவுக்கு எல்லாம் பாத்தா வெடி வெடிக்க முடியுமா?

இங்க பாருங்க தவறு செய்வது பெரிய விஷயமில்லை... உங்கள் தவறுகளை நியாயப்படுத்துறிங்க அதான்... நிறைய படிப்பிங்களோ...

சரி... கூல் கமலி... இந்தாங்க மத்தாப்பு இது சத்தம் வராது.....ஓகேவா...

எனது செயல்களின் உள் நோக்கம் உன்னை காயப்படுத்த வேண்டும் என்பதில்லை...

அடடா நீங்க வெடிங்க...

வெங்கி பாலகுமாரனின் புருஷ விரதம் புத்தகத்தில் ஒரு வரி நடிப்பவர்களை நடிப்பவர்களால் தான் நேசிக்க முடியும்... சூப்பர் இல்ல...

ஏங்க வெடின்னு சொன்னேன் படின்னு சொன்னனா?...

(மத்தாப்பு வெடிக்கிறார்) வேணாம் வெங்கி பட்டாசு வெடிக்குற வயசை தாண்டியாச்சு..

அப்ப என்ன செய்ய போறிங்க?

பழைய போட்டோ தேடி எடுக்கப்போய் கிழே விழுந்த மாதிரி மனசும் விழுந்துடுச்சு...இருங்க ஒரு கவிதை,... பிடிபட்ட மீனின் கண்களில் நிரம்பி வழிகிறது உயிர் போகும் பயத்தை விட சிறு புழுவுக்காக ஏமாந்த.... ஏன் வெங்கி உங்க கண்ல நீர் நிரம்பி வழியுது...

(நான் துடைத்தபடி)இல்லிங்க கண் வேர்க்குது.....

இருங்க நான் செஞ்ச தீபாவளி ஸ்வீட்ஸ் சாப்பிடுங்க...

(நான் சுதாரித்து) உங்களுக்கு எதுக்கு சிரமம் கமலி அப்புறம் எனக்கு கண் வேர்த்து கிட்டே இருக்கும்...

நோ...இருங்க நாளைக்கு Expiry Date போட்டு ஒரு கோதுமை பாக்கெட் இருக்கு 2 தோசை அவ்வளவு தான்...

(மனதிற்குள்) யாரு நானா!,,,

கமலி சமையலறைக்குள்ளே போக... நான் வெளியே எஸ்கேப்......விடு ஜூட்....



ஸ்ரீதேவி செல்வராஜன் பட்டாசு வெடிக்கிறார்....

ஏன் பட்டாசெல்லாம் கிழே வைச்சு இருக்கிங்க?

பின்ன எங்க வைக்கிறது?

அதுக்கு ஒரு டேபிள் தரக்கூடாதா?எங்க ஆபிஸ்ல வந்து பாருங்க....

எப்படி பட்டாசுக்கு டேபிள் கொடுத்து இருக்காங்களா?

ஆமா.. எனக்கு தந்து இருக்காங்க ஏன்னா நான் ஒரு கண்ணி வெடி...

அப்ப யாராவது மிதிச்சா தான் வெடிப்பிங்களா?

ஹலோ.. என்ன பேசறிங்க தீபாவளிக்கு அட்வான்ஸ் கேக்கலாம் அட்வான்ஸா தீபாவளிய கேக்க கூடாது...

நீங்க என்ன சொல்ல வர்றீங்க?

சொல்றத புரிஞ்சுகோங்க கிழவி புருசன் மாதிரி புரியாம பேசாதிங்க.......

சரி வெடி வெடிக்கலையா?

இப்ப என் தலைலதான் தலைவலி வெடிக்குது.. ஒரு டீ கிடைக்குமா?

அடடா .. இங்க கடை இல்லிங்களே...

ஏன் ஆபிஸ் பாய் இல்லையா?

இன்னைக்கு தீபாவளிங்க ஆபிஸ் லீவு...

ஓ...அப்ப முரட்டுத்தனமா பலகாரம் சாப்பிட்டா நாளைக்கு கொசு தொல்லை இருக்காது கரெக்ட்.....

அந்த வெடி நாளைக்கு... இப்ப மத்தாப்பு ஆவது பத்த வைங்க...

இங்க பாருங்க வெங்கி எனக்கு யாரையும் பத்தவச்சு பழக்கமில்லை...ஆனா என்னை பத்தி பத்த  வைக்குறவங்க ஆபிஸ்ல இருக்காங்க....

அய்யோ ஆபிஸ் ஆபிஸ் ஆபிஸ் அதைத்தவிர வேற எதுவும் தெரியாதா?

எப்படிங்க சம்பளம் கொடுத்து தடையில்லா நெட் வசதி கொடுத்து வேலைக்கு வச்சு இருக்கறவங்களை மறக்க முடியமா?!!!

ஆஹா... இத படிச்சா உங்க MDக்கு நெஞ்சு வெடிக்குமே... ஒரு வெடின்னாலும் அருமையா வெடிச்சிங்க ஸ்ரீ

ச்சே.. பொய்ய்யை போல நன்றாக இருப்பதில்லை நிஜம்..சரியா வெங்கி...

(ஏன் தலை தெறிக்க ஓடறாரு)

நான் விடு ஜூட்......


Jaishree palani பட்டாசு வெடிக்கிறார்.....

என்னங்க ஜெய் ரொம்ப நேரமா வெடிய கையில வச்சு இருக்கிங்க வெடிக்கலை...

இருங்க வெங்கி யாராவது ரோட்டுல கிட்ட வரும் போது வெடிய போடுவோம்... ஹா.. ஹா,,

அய்யோ அவங்க பயந்துட போடறாங்க..

ஆமா யாரையாவது பயமுறுத்திகிட்டே இருக்கணும்...நான் எப்பவும் டெரரா இருப்பேன்...

அதுசரி நீங்க ஒரு டீச்சர் அத மறந்துடாதிங்க...

அடபோங்க வெங்கி... என் ஸ்டூடண்ட்ஸ் கிட்டயே நான் தான் சந்திரமுகின்னு சொல்லி பயமுறுத்தி வைச்சுருக்கேன்...

( சட்டென்று தலையை விரித்து கண்களை உருட்டி லக லக போஸ் தருகிறார்... மேலே மரத்தில் ஒரு காக்கா கக்கா போகிறது)

சரி சரி... இந்த மத்தாப்பு வெடிக்கலாமா?

நோ... வெங்கி... மத்தாப்பு, புஸ்வாணம் எல்லாம் வேணாம்... அணுகுண்டு, எலக்ட்ரிகல் பாம், ஃபயர் பிளாஷ்.... இப்படி அதிரடியா குடுங்க....

சரி இந்தாங்க...( வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் போக முற்படுகிறார் )

ஏங்க வெடிக்காம வீட்டுக்கு போறீங்க?

ஓ.. அதுவா.. இப்ப எல்லாரும் வெடிக்கிறாங்க இப்ப வெடிச்சா எனக்கு மரியாதை இல்ல எல்லோரும் தூங்குனவுடனே வெடிப்போம்...சத்தம் கேட்டு அலறி அடிச்சுகிட்டு எழுந்திரிப்பாங்க பாக்க டெரரா இருக்கும்... (விழியை உருட்டுகிறார் நமக்கே டெரரா இருந்தது )

சரிங்க இந்த மத்தாப்பு,சங்குசக்கரம்,புஸ்வாணம்,ஆனைவெடி இதெல்லாம் வாங்குனது வேஸ்ட்டா?

யாரு சொன்னா அதை வெடிக்க என் செல்லங்கள் இருக்கே...!

யாருங்க உங்க பசங்களா?

பசங்க மாதிரி... (கீச்சு குரலில் கூப்பிடுகிறார்)செல்லங்களா வாங்க.....

(4 பூனைக்குட்டிகள் வருகிறது) இதோ வந்துருச்சு என் செல்லங்கள்....இப்ப வெடியை கொடுங்க..

ஏங்க பூனை எப்படிங்க வெடிக்கும்?!!!!!!!!!

என் பூனை அம்மான்னே கத்தும் கேளுங்க (அம்மா என இவர் கத்த அதுவும் அம்மா?! என்கிறது.. )    (பாவம் எவ்வளவு கொடுமைய அனுபவிச்சதோ அந்த பூனை..)

உங்க பூனை மட்டும் பெங்களுர்ல இல்லாம தமிழ் நாட்டுல இருந்துச்சி நீங்க பெரிய ஆளா ஆகிருப்பீங்க....

சரி.. மத்தாப்பை கொடுங்க..(.வாங்கி பற்ற வைத்து பூனை வாயில் வைக்கிறார்) இந்தாங்க வெங்கி என் மொபைல் அப்பிடியே ஒரு விடியோ எடுங்க என் செல்லங்கள் வெடி வெடிக்கிறதை FB யில் போடணும்...

( நான் எடுத்து கொண்டிருக்கும் போது டமார் என்று என் காலுக்கு கிழே வெடிக்க நான் அலறி ஓடுகிறேன்)

ஹா... ஹா.. ஹா,, வெங்கி... எப்படி பயமுறுத்திட்டேனா....என் பூனை தான் உங்க காலுக்கு கிழே ஒரு யானை வெடிய வெடிச்சுச்சு.... உலகத்துலேயே யானை வெடி வெடிச்ச பூனை என் பூனை தான்...

( நான் ஓடிக்கொண்டே) யானையை விரட்டுன பூனையும் உங்களுது தான்... விடு..ஜூட்....


லால்குடி நாராயணன் பட்டாசு வெடிக்கிறார்....

இந்தாங்க மத்தாப்பு ....( பற்ற வைக்கிறார் ) 

அப்பாடா வெடிச்சாச்சு ஒரு நிமிஷம் (லேப்டாப் எடுத்து) 2-11-2013 காலை 10 மணிக்கு எனக்கு 1222 Friends ....அடுத்த வெடி கொடுங்க....

இந்தாங்க புஸ்வாணம்..... (பற்ற வைக்கிறார்)

ஹை... இதுவும் வெடிச்சாச்சு... ஒரு நிமிஷம் (லேப்டாப் எடுத்து) 2-11-2013 10:15 மணிக்கு எனக்கு 1230 Friends.... அடுத்த வெடி கொடுங்க.....

இந்தாங்க சரவெடி..... (பற்ற வைக்கிறார்)

சூப்பர் வெடி வெங்கி... ஒரு நிமிஷம் (மீண்டும் லேப்டாப்) 2-11-2013. 10:30 மணிக்கு எனக்கு 1235 Friends.... அடுத்த வெடி கொடுங்க....

ஹலோ ஸார் என்ன இது இங்க வெடிக்கிறிங்களா இல்ல ஃபேஸ்புக்குல வெடிக்கிறிங்களா?

ஓ அதுவா நாம கடவுளுக்கு ஏன் வாழைப்பழம் படைக்கிறோம் தெரியுமா?

ஸார் அதைஅப்புறம் பாக்கலாம் முதல்ல லேப்டாப்பை வையுங்க ஓகே... (மனமின்றி வைக்கிறார்)

சரி வெங்கி அடுத்து என்ன வெடி?

இந்தாங்க இது புது வெடி...(பற்ற வைக்கிறார்... புஸ்ஸ் ஆகிறது)

அய்யே என்ன வெங்கி எங்க வாங்குனிங்க வெடி நல்லா இல்லையே?

சாரிசார் இது தெரிஞ்ச ஒரு நண்பர் கடையில வாங்கினேன் ...

ஹா..ஹா.. இப்ப என் ஜோக் ஒண்ணு ஞாபகம் வருது... ஏப்பா ஜெயில் வாசல்ல பட்டாசு கடை வச்சு இருக்கே வியாபாரம் ஆகுதா?! நீங்க வேற ஜாமீன் கிடைச்சா தொண்டர்கள் நிறைய வாங்குறாங்க வியாபாரம் சூப்பர்...ஹா,,,ஹா,,, எப்புடி..

நல்லா இருக்கு ஸார்... இருங்க நான் போயி பட்டாசை மாத்திட்டு வந்துடுறேன்...

ஓ...அப்ப சரி போயிட்டு வாங்க... (லேப்டாப் எடுக்கிறார்) 2-11-2013 11:00 மணிக்கு எனக்கு 1255 Friends.....

நான் விடு ஜூட்.....



























Monday 23 December 2013

அட்டாக்ஸ்


கொய்யாப்பழம் என்பது கொய்த பழமே...

நாவல் பழத்தில் கதைகள் இருக்காது...(விதைகள் இருக்கும்)

தர்பூசணியை திருஷ்டிக்கு உடைக்கக் கூடாது...

சப்போட்டா என்பது ஆதரவு தருவதல்ல...

வாழைப்பழத்தில் சுளைகள் இருக்காது...


அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.

அண்டர்ஸ்டேண்டிங் என்றால் அடியில் நிற்பது இல்லை...

அவுட்ஸ்டேண்டிங் என்றால் வெளியில் நிற்பது இல்லை...

அமேசிங் என்று எந்த சீக்கியரும் கிடையாது...

பகலில் பிறந்தவருக்கும் ராவ் என்று பெயர் வைக்கலாம்...

யானை தூங்கும் போது குறட்டை விடாது...

தொடரும்....




அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5

வைக்கோல் போர் என்பது யுத்தமல்ல...

எத்தனை சென்ட்டில் வீடு கட்டினாலும் வாசனை வராது...

ஜெராக்ஸ் காப்பியை கப்பில் ஊற்ற முடியாது...

டேபிள் லாம்பை தரையிலும் வைக்கலாம்...

செருப்பு கடிக்க காரணம் ஹ"வாய்" என்ற பேர் தான்...

தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.

திருவள்ளுவர் ட்விட்டரில் குறள் எழுதியதில்லை...

ஒளவையார் தன் வாழ்நாளில் செல்போன் பயன்படுத்தியதே இல்லை...

மகாத்மா காந்திக்கு பேஸ்புக் அக்கவுண்ட் இல்லை...

ராஜேந்திர சோழன் கடல் கடந்த போது GPRS வசதி இல்லை...

பாரதியார் ஒரு கிரிடிட் கார்டு கூட வைத்துக் கொண்டதில்லை...


தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்...


அரிய தகவல்கள் - 5.

காதில் மாட்டும் போனைத்தான் ஹெட்போன் என்கிறோம்...

கால் குலேட்டருக்கு தொடை இருக்காது...

ப்ளூ டூத்தால் கடிக்க முடியாது...

இண்டர்நெட்டிலும் டென்னிஸ் விளையாடலாம்...

என் ஐ போனை நீங்கள் எடுத்தாலும் அது யூ போன் ஆகாது...


தொடரும்....




அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.


தண்ணீர் குடித்தவுடன் தாகம் அடங்கிவிடும்...

டீ கோப்பையில் காபியும் ஊற்றலாம்...

படம் எடுப்பதால் பாம்பு புரொடியூசர் ஆகாது...

தோசைக்கல்லில் இட்லி ஊற்ற முடியாது...

குரங்கு பேஷியல் செய்தாலும் குரங்கு போலவே இருக்கும்...

தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.


கம்பர் என்பவர் கம்பு விற்பவரில்லை...

மாணிக்கம் என்று வாசிப்பவரெல்லாம் மாணிக்கவாசகரல்ல...

அப்பர் என்பது ரயிலில் உள்ள பெர்த்திலும் இருக்கும்...

சேக்"கிழார் என்பவர் அரபு நாட்டவர் அல்ல...

ஒட்டக்கூத்தர் என்பவர் ஒரு கூத்தாடி இல்லை...


தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.

பூமி எந்நேரமும் சுற்றுவதால் அது ஊதாரி அல்ல...

வானில் உள்ள பால் வீதிகளில் பால் கிடைக்காது...

கடல் கொந்தளிப்பது ஆத்திரத்தால் அல்ல...

கம்பத்தில் பூ வைப்பது பூகம்பம் அல்ல...

வானவில்லுக்கு அம்புகள் கிடையாது...

தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.


கேஸ்கட்டு குக்கரில் மட்டுமல்ல வக்கீலிடமும் உண்டு...

சைட்டுக்கு போறேன் என மனைவியிடமே கூறுவார் இஞ்சினியர்...

கலெக்டர் என்பவர் பணம் வசூலிப்பவர் அல்ல...

மனிதருக்கு வைத்தியம் பார்ப்பவரும் "டாக்"டரே...

போலிகளை போலீஸ் என்று கூற முடியாது...


தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.


சாதிமல்லிக்கு எந்த சாதியும் கிடையாது...

கனகாம்பரம் கனகா மட்டும் வைத்து கொள்ளும் பூ அல்ல...

குண்டு மல்லி என்பது வெடிக்கவே வெடிக்காது...

டிசம்பர் பூவை நவம்பரிலும் வைத்துக் கொள்ளலாம்...

சா"மந்தி" என்பது குரங்கு வைக்கும் பூ அல்ல...


தொடரும்.....



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.

உளுத்தம் பருப்பு என்பது உளுத்துபோன பருப்பல்ல...

பாசிப் பருப்பை கழுத்தில் மாட்டிக் கொள்ள முடியாது..

துவரம் பருப்பு எந்த வரமும் தருவதில்லை...

கடலைப் பருப்பு கடலில் விளைந்தது இல்லை...

பிஸ்தா பருப்பு என்பது ரவுடி விற்கும் பருப்பல்ல...

தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.


"ஒற்றை" மாட்டு வண்டியும் ஒரு டூவீலரே...

"மெக்கானிக் என்பவர் "மெக்கா"வில் வசிப்பவரல்ல...

பைக்கில் இருந்தாலும் அது கார்"ப்ரேட்டரே...

வாட்டர் சர்வீஸ் என்பது தண்ணீர் சப்ளையல்ல...

வீல்"என்று கத்தவும் செய்யலாம்...

தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.


இஞ்"செக்ஷன்" என்பது ஒரு பிரிவு அல்ல...

தெர்மா மீட்டர் சில சென்ட்டி மீட்டர் நீளமே இருக்கும்...

பைபாஸ் சர்ஜரி என்பது பைபாஸ் ரோட்டை அறுப்பதல்ல...

ஐசியு என்றால் நான் உன்னை பார்க்கிறேன் என்றும் அர்த்தம்...

பாஸ் செய்த பிறகு தான் டெஸ்ட்டே நடக்கும்..! யூரின் டெஸ்ட்...

தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.

அர்ஜென்டினா என்பது அவசரமான நாடு இல்லை...

பாறை மீது ஈ அமர்வதற்கு பெயர் ஈராக் அல்ல...

ஹா"லந்து"என்பது கிண்டலடிப்பதை குறிக்காது...

ஸ்பெயின் என்பது வலியுள்ள நாடல்ல...

லாஸ்ஏஞ்சல்ஸ் என்பது நஷ்டமான தேவதைகள் அல்ல...

தொடரும்...




அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.

செக் புக்கில் கதை எழுத முடியாது...

சேவிங் அக்கவுண்ட் என்பது பார்பர் ஷாப்பில் வைப்பதல்ல...

கரண்ட் அக்கவுண்ட் என்பது மின் வாரியத்துடையதல்ல...

DD தருவது என்றால் திவ்யதர்ஷினியை தருவதல்ல...

ஃபெயில் ஆனவர் கணக்கு ஆரம்பித்தாலும் பாஸ் புக் தான் தருவார்கள்...

தொடரும்.....



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.


தங்கத்தில் உள்ள காரட்டை சமைக்க முடியாது...

சே"தாரம் என்பது சேகுவாரா மனைவியல்ல...

வளையல் என்பது வளைந்திருக்காது...

அட்டிகைக்கு விரல்கள் கிடையாது...

ஒட்டியாணம் எதிலும் ஒட்டாது...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.


சுக்கா வருவலில் சுக்கு இருக்காது...

பொரியல் என்பது பொரியால் செய்வதில்லை...

கொழுக்கட்டை என்பது மரம் அல்ல...

பாயா" என்று பையனைப் பார்த்தும் சொல்லலாம்...

ரோஸ்ட் என்பது ரோஸ் கலரில் இருக்காது...

தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.


மடப்பள்ளி என்பது மடையர்கள் படிக்கும் பள்ளி அல்ல...

பிர"சாதத்திற்கு" கூட்டு, பொரியல் தரமாட்டார்கள்...

கோவில் கொடி மரத்தில் காய்கள் காய்ப்பதில்லை...

பக்த கோடிகள் எல்லோரும் கோடீஸ்வரர்கள் அல்ல...

கோபுர விமானம் எந்த ஊருக்கும் பறக்காது...

தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்...
அரிய தகவல்கள் - 5.

முகநூலை ஊசியில் கோர்க்க முடியாது...

பிளாக் செய்வது என்பது கருப்பு செய்வதல்ல...

இன்பாக்சுக்கு பூட்டு கிடையாது...

FBயில் ஷேர் செய்வது ஷேர் மார்க்கெட்டில் தெரியாது...

நாம் செய்யும் Tag இல் விலை குறிப்பிட்டு இருக்காது...

தொடரும்....



என் போட்டோ போட்டுருக்கேன் பாருங்க ... நான் தாங்க அட்டாக் ஆறுமுகம்.!


அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.

கடல் அலைக்கு நன்றாக நீந்தத் தெரியும்...

பூமியில் இருந்து குனிந்து பார்த்தால் வானம் தெரியாது...

கண்களை மூடிக் கொண்டாலும் தெரியும் நிறம் கருப்பு...

கல்லைக் கட்டிவிட்டால் பஞ்சு பறக்காது...

கர்ப்பமான மீன்களை முழுகாம இருக்குன்னு சொல்ல முடியாது...


தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


பொம்மை பஸ்சையும் மினி பஸ் என்று சொல்லலாம்...


ஷேர் ஆட்டோ என்பது பங்கு சந்தை காரர்கள்  வைத்திருப்பதல்ல...


கிராமத்துக்கு போனாலும் அது டவுன் பஸ் தான்...


வால்வோ பஸ்ஸில் வால் இருக்காது...


செமி ஸ்லீப்பர் என்றால் அரை தூக்கம் அல்ல...


தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.

வத்தல் குழம்பு என்பது ஒல்லியாக இருக்காது...

பீர்"க்கங்காய் டாஸ்மாக்கில் கிடைக்காது...

உளுந்த வடை என்று கீழே விழுந்த வடையையும் சொல்லலாம்...

மசால் வடையில் மசாலா இருக்காது...

அதிரசம் என்பதை சோற்றில் ஊற்ற முடியாது...

தொடரும்.....


அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


கேப் போட்ட எல்லோரும் கேப்டன் அல்ல...

விக்கெட் விழுவதற்கு ஆசைப்படுவர் பெயர் விக்கெட் கீப்பர்...

டாஸ் போட்டும் ஆடலாம்.! டாஸ்மாக் போட்டாலும் ஆடலாம்...

நோ பால் என்பது பந்தை ஒளித்து வைத்து சொல்வதில்லை...

"ஸ்லிப்" என்பது ஒரு கூப்பன் அல்ல...

தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


ஆண்கள் வீசினாலும் அது மெய்டன் ஓவரே...

சில்லி பாயின்ட் என்பது சிக்கன் கடை அல்ல...

Third அம்ப்பயர் என்பவர் 3ஆம் வகுப்பு படிப்பவரல்ல...

கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் என்பது தொழில் அல்ல...

"பிட்ச்"என்பது கெட்ட வார்த்தையும் கூட...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


மோட்டார் படகுக்கு துடுப்பு தேவை இல்லை...

எந்த படகுக்கும் நீச்சல் தெரியாது...

போட் ஹவுஸில் பெட் ரூம் இருக்காது...

நடுவில் நின்ற படகை இறங்கித் தள்ள முடியாது...

கப்பலுக்குள் படகு இருக்கும் படகுக்குள் கப்பல் இருக்காது,,,


தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


சேசிங் என்பது எதிர் அணியினரை விரட்டுவதல்ல...

பவர் ப்ளே என்பது கரண்ட் விளையாடுவதை குறிக்காது...

டக் அவுட் என்பது வாத்து இறந்ததை சொல்வதல்ல...

மேன் ஆஃப் த சீரியஸ் என்றால் அவர்  ICUவில் உள்ளவரல்ல...

ஃபாலோ ஆன் என்றால் தொடர்ந்து வருவது கிடையாது...


தொடரும்..



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் -5


கடிகார முள்ளில் ரோஜா பூக்காது...

கடிகாரம் நேரம் காட்டாது நாம தான் பார்க்கணும்...

வால் கிளாக்கை பஸ்சிலும் மாட்டலாம்...

கடிகாரம் கெட்ட நேரத்தையும் காட்டும்...

கடிகாரம் என்றுமே ஓடியதில்லை ஒரே இடத்தில் தான் இருக்கும்...


தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5


கிரிக்கெட் ஸ்பின்னருக்கு நெசவு தெரியாது...

கிரிக்கெட் ஓபனரை வைத்து பாட்டிலை திறக்க முடியாது...

பவுண்ட்ரி லைன் என்பது நாட்டின் எல்லை அல்ல...

கிரிக்கெட் பேட்டில் டிரைவ் செய்வதால் அது டிரைவர் அல்ல...

பேட்ஸ் மேன் அவுட் என்று அவர் இறந்த போதும் சொல்லலாம்...

தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


"விண்டோ"போனில் காற்று வராது...

கண்ணீரை "ஐஸ்"வாட்டர் என்று சொல்ல முடியாது...

"கப்ப"கிழங்கு வரி கட்டாது...

"டிரஸ்ஸிங்" டேபிள் டிரஸ் போட்டிருக்காது...

"தார்" பாலைவனத்தில் மணல் தான் இருக்கும்...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


சில்க் சேலை என்பது சிலுக்கு அணிந்ததல்ல...  

டேபிள் வெயிட் இல்லாவிட்டாலும் டேபிள் பறக்காது...

டி-சர்ட் என்பது டீக்கறை படிந்த ஆடையல்ல...

லிப்ட்டுக்காக காத்திருப்பது லிப்ட் கேட்பதாகாது...

ஃபேஸ்புக்கில் கமெண்ட்ஸ் போடுபவர் கமாண்டர் அல்ல...



தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


ஜல்லிக்கட்டு என்பது ஜல்லி கற்களை கட்டுவதல்ல...

மாட்டுப் பொங்கல் எப்போது என்று மாடுகளுக்கு தெரியாது... 

பொங்கலோ ஓ பொங்கல் என்பதால் பொங்கலின் இனிஷியல் O ...

பொங்கலை பார்ப்பது காணும் பொங்கல் ஆகாது...

கரும்பு தின்னத் தரப்படும் கூலி... சுகரே...


தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


"போகிப்"பண்டிகை என்பது ரயிலில் கொண்டாடப்படும் விழா அல்ல...

பொங்கல் பானையில் குழம்பும் வைக்கலாம்...

தோகைவிரித்து ஆட கரும்புக்கு தெரியாது...

மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை விரட்டுவதே...

பொங்கலன்று பூரியும் சாப்பிடலாம்...


தொடரும்.....



அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


விசிட்டிங்கார்டில் போட்டோ போட்டாலும் அது ஐடிகார்டு ஆகாது...

கால்குலேட்டரில் கால் பண்ண முடியாது...

டெலிபோன் மணியடிப்பதை காலிங்பெல் என சொல்வதில்லை...

பயர் சர்வீஸ் என்பது நெருப்பை சர்வீஸ் செய்வது அல்ல...

Ms word என்பது மகேந்திரசிங் தோனி சொன்னதல்ல...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


ரீஃபில் பேனா என்றாலும் ரீஃபிலில் ரீஃபில் பண்ண முடியாது...

ஜாமிண்ட்ரி பாக்ஸில் ஜாம் இருக்காது...

பேனா மூடி தானா மூடாது...

ஷார்ப்னரை சாணை பிடிக்க முடியாது...

பென்சில் பாக்ஸில் பேனாவும் வைக்ககலாம்...

தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.


கொசு முட்டையில் ஆம்லேட் போட முடியாது...


(குளம்)குட்டை என்பது ஆழமாகவும் இருக்கும்...


ஏடிஎம் மிஷினில் கோன் ஐஸ்கிரீம் வராது...


சாவிக்கொத்து எதையும் கொத்தாது...


டிபன் பாக்சில் சாப்பாடும் எடுத்து செல்லலாம்...


தொடரும்.....



அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.


வத்தலக்குண்டில் ஒல்லியானவரும் உண்டு...

திருச்செங்கோடு என்பது கையில் வரையும் கோடல்ல...

பள்ளிப்பாளையத்தில் கல்லூரிகளும் உண்டு...

வில்லிவாக்கம் என்பது வில்லி வாக்கப்பட்ட இடமல்ல...

கும்பகோணம் என்பது கணித பாடம் அல்ல...


தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.


அம்பாசமுத்திரத்தில் அலை அடிக்காது...

ஏர்வாடி என்பது காற்றடிக்கும் இடம் அல்ல...

மேட்டுப்பாளயத்தில் பள்ளமும் இருக்கும்...

வால்பாறையில் எந்த பாறைக்கும் வால் இல்லை...

புளியங்குடியில் இனிப்பும் கிடைக்கும்...


தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


ஈ"ரோட்டில் கொசுக்களும் உண்டு...

பல்லில்லாதவர்களும் பல்லடத்தில் வசிக்கிறார்கள்...

பொள்ளாச்சி என்பது ஒரு ஆச்சியின் பெயர் அல்ல...

காஞ்சி" புரத்தில் ஈரமான இடமும் உண்டு...

நெய்வேலியில் டால்டாவும் கிடைக்கும்...


தொடரும்.....


அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் -5. 


காட்டு யானை முன்னே சாவு மணி ஓசை பின்னே...

ஆடுற மாடோ பாடுற மாடோ காளை மாட்டில் கறக்கவே முடியாது...

தாழப்பறந்தாலும் கழுகு ஊர்க்குருவி ஆகாது...

நாய் வாலை நிமிர்த்த மட்டுமல்ல படுக்க வைக்கவும் முடியாது...

பசித்தால் புல்லை திங்கும் ஆட்டை புலி பசித்தால் தின்னும்...


தொடரும்.....


அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


நடிப்பதற்கு முன்பே கிளாப் கிடைப்பது ஷூட்டிங்கில் மட்டுமே...

சின்ன பையன் ஒளிப்பதிவு செய்தாலும் அவர் பேரு கேமிரா மேன் தான்...

சவுண்ட் இன்ஜினியருக்கு வீடு கட்ட தெரியாது.....

டான்ஸ் மாஸ்டர் ஸ்டண்ட் மாஸ்டர்களிடம் படித்தால் டிகிரி கிடைக்காது...

டூப் போட்டு நடிப்பவரே  ட்ரூ...ஆனவர்.....


தொடரும்.....



அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


கழுதை கெடாவிட்டாலும் குட்டிச்சுவர் தான்...

பன்றியோடு சேர்ந்த கன்று கலப்பட கறிக்கடையில் கிடைக்கும்...

பிடிச்ச முயலை சமைத்து சாப்பிடும் போது மூன்று கால் சாப்பிடலாம்...

முதலைக்கண்ணீர் வடிப்பது சீரியல் பார்த்து அல்ல...

சிங்கம் இளைச்சுதுன்னா எலிக்கு முன்னாடியும் மூச்சிரைக்கும்...


தொடரும்.....


அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


புதுக்கோட்டையில் உள்ளது பழைய கோட்டையே...

ஓரத்த நாடு என்பது ஓகுரூப் ரத்தம் உள்ளவர்கள் மட்டும் வசிக்கும் ஊர் அல்ல...

பரமக்குடி என்பது குடிகாரர்களின் பூர்வீக ஊர் கிடையாது...

அழகர் கோவிலில் இருக்கும் குரங்கு அழகாக இருக்காது...

இராசிபுரத்தில் அதிர்ஷ்டமில்லாதவர்களும் இருப்பார்கள்...

தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.


ரெக்கார்டிங் தியேட்டரில் பாடுவது கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெறாது...

தியேட்டர் ஃபுல் ஆனாலும் ஹவுஸ் ஃபுல்னு தான் போடுவாங்க...

நடிகர்களுக்கு கொடுக்கும் பட்டம் பறக்காது...

மெட்டுக்கு மட்டும் பாட்டெழுதுவதில்லை துட்டுக்கும் தான்...

வெற்றிப்பட கேடயங்கள் போருக்கு உதவாது...


தொடரும்.....



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5.


கிளிய வளர்த்து யானை கையிலும் குடுக்கலாம்...

கொடுக்குற தெய்வம் கான்கீரீட் கூரையை பிச்சிகிட்டு கொடுக்காது...

கொல்லன் பட்டறையில் கீழே டீ சிதறி இருந்தால் அங்கு "ஈ"க்கு வேலை இருக்கும்...

காக்கா உக்கார எச்சமும் விழும்...

யானைக் கண்ணை மூடினாலும் உலகம் இருட்டு தான்...


தொடரும்....



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5.


தேக்கடி என்ற ஊர் யாரையும் கடிக்காது...

கன்னியாகுமரியில் கிழவிகளும் உள்ளார்கள்...

நாமக்கல்லில் பட்டையும் போடலாம்... 

தர்மபுரியிலும் கஞ்சர்கள் உண்டு...

விழுப்புரத்தில் விழாதவர்களும் இருக்கிறார்கள்...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5.


மேக்கப் மேன் முகத்தில் மேக்கப் இருக்காது...

டைரக்டர் கட் சொன்னாலும் எதையும் வெட்ட தேவையில்லை...

குரூப் டான்ஸர்கள் தனியாகவும் ஆடுவார்கள்...

பின்னணி பாடகர்கள் என்பவர்கள் முதுகுக்கு பின்னாடி இருந்து பாடமாட்டார்கள்...

சவுண்ட் இன்ஜினியருக்கு வீடு கட்ட தெரியாது...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.

கிழிந்த ரூபாய் நோட்டை தையல் மிஷினில் தைக்க முடியாது...

சட்டையில் வைக்கப்படும் காஜா"ஒர் இஸ்லாமியர் இல்லை...

கர்சீப்பில் ஜிப் வைத்து தைப்பதில்லை...

நன்றாக தையல் தெரிந்தாலும் ஆபரேஷன் தியேட்டரில் போய் தைக்க முடியாது...

பேச்சை "சட்டை" செய்பவர்கள் அனைவரும் டெய்லர் அல்ல...

தொடரும்.....


அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.

அட்டாக் 5


திருக்குறளை நாம் எழுதினால் யாரும் நம்மை திருவள்ளுவர் என சொல்ல மாட்டார்கள்...

காட்டுக்குள் சிங்கம் சிங்கிளாக வந்தாலும் அதை யாரும் சிவாஜி என்று அழைப்பதில்லை ...

நடிகர்கள் எவ்வளவு விசிறிகள் வைத்திருந்தாலும் அதனால் அவர்களால் காற்று வராது...

யானையை போல பெரிய மிருகம் இன்னொரு யானையே...

எத்தனை கலர் மாறினாலும் ஒரு கலர் பெயர்கூட பச்சோந்திக்கு தெரியாது...


தொடரும்....

அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.

பாம்பு தன் சட்டையை கழற்ற காரணம் அதுக்கு வேர்த்து கொட்டுவதால் கூட இருக்கலாம்...

கிளிக்கு பேச தெரிந்தாலும் அது இன்னொரு கிளியிடம் "க்கீ" என்றே பேசும்...

ஒற்றை பனைமரத்துக்கு பின்னால் ஒட்டகச்சிவிங்கியை ஒளித்து வைக்க முடியாது...

ஓட்டகத்தால் மல்லாக்க படுக்க முடியாது...

கரப்பான் பூச்சி மீசையை ட்ரிம் செய்யாது...

தொடரும்......

அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.


கதவில் எழுதிய pull ஐ மாடு தின்ன முடியாது....

ஆட்டுக்கு தாடி காதல் தோல்வியால் வந்தது இல்லை..

சேவல் தன் கொண்டையில் பூ வைக்காது...

ஆண் மீனும் இந்த இனத்தில் "வஞ்சி"ரம் என்றே அழைக்கப்படும்...

டாபர் "மேன்" என்பது மனிதனல்ல... நாய்....




அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.


ஷேக்ஸ்பியர் என்பவர் பியர் குடிக்கும் அரபு நாட்டு ஷேக் அல்ல...

ஹாம்லேட் என்பவர் முட்டையில் உருவானவர் அல்ல...

பைரன் என்பவர் கிரிக்கெட்டில் ஓடும் பை- ரன் அல்ல...

ஷெல்லி என்பவர் ஓடுக்குள் இருப்பவர் அல்ல...

பிளாட்டோ என்று போதையில் மட்டையானவரையும் சொல்லலாம்...


அட்டாக் ஆறுமுகத்தின்...

அரிய தகவல்கள் - 5.

இஞ்சி"னியர் என்பவர் இஞ்சி விற்பவர் இல்லை...

அமர்"நாத் என்ற பெயர் உள்ளவரும் நிற்கலாம்...

சதுரமாக தோசை ஊற்ற முடியாது...

கண்ணாடிக்கு கண் இல்லை...

கட்டில் கால்களால் நடக்க முடியாது...



அட்டாக் ஆறுமுகத்தின்... 

அரிய தகவல்கள் - 5.


ஆப"ரேஷனில்"மண்ணெண்ணெய் கிடைக்காது...

ஹாஸ்பிடல் வார்டுக்கு கவுன்சிலர் கிடையாது...

ஸ்டெதஸ்கோப்பில் படம் தெரியாது...

நர்சின் தங்கையும் அவருக்கு சிஸ்டரே...

ஹாஸ்பிடலில் ஓ.பி.என்பது பன்னீர் செல்வத்தை குறிப்பது அல்ல...


அட்டாக் ஆறுமுகத்தின்....

அரிய தகவல்கள் - 5.

நிலவில் மின்சாரம் கிடையாது...

வால் நட்சத்திரத்தால் அதை ஆட்டிக்காட்ட முடியாது...

சிவகாசியில் தயாரான ராக்கெட்டுகள் எதுவும் விண்வெளியில் இல்லை...

விண்மீன்களை சமைத்து சாப்பிட முடியாது....

நெப்டியூன் என்பது இசையமைப்பாளர்கள் யாரும் போட்ட டியூன் இல்லை...

தொடரும்......








தூமணி மாடத்து...

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....


 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நம்ம தீனா அண்த்தே இங்க வந்து டெய்லி ஏத்தோ கொரலு உட்தாம்...தங்காச்சி நான்யும் வந்து மார்களி பாட்ட எட்த்து வுட்றேன்.பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எதும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....

மார்கழி 9 ஆம் நாள் பாடல்..


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.


ஆண்டாளு விளக்கம்:

சுத்தப்பச்ச கலர்ல்ல மாணிக்க கல்லுங்களப் பதுச்சு விள்க்கு வக்கிற மாட்த்த சுத்தி அயகயகா விள்க்குங்கள பத்த வச்சு நெல்லா அல்ங்காரமா எர்யாவுட்டு... சொம்மா நின்னு வாஸ்னை காட்ற சாம்ராணி புகய வூடு பூரா மண்க்கவுட்டு... 

வாங்கி வச்சினு இர்க்குற எல்வம்பஞ்சு மித்தை மேல பட்த்துகினு இம்மாம் நேர்மா தூங்கினு இர்க்க மாமங்காரன் மவளே.... உன் மணியான வூட்டு கதவு தாப்பாள தொர்ந்து உடு கண்ணு...இதப்பாருங்கோ மாம்யாரே... 

இன்னா ஓன் மருமவள எயுப்ப மாட்யா? அத்து வாய் தொர்ந்து பேசாத பொண்ணா? அல்ல காது டமாரமா பூட்ச்சா?தூக்கித்தில மயங்கி கெடக்கா? அல்ல ஆராச்சும் மாயம் மந்த்ரம் போட்டு கட்டி வச்சிகினாங்களா? 

மாயனுக்கு அல்லாம் பெர்ய மாய்வரு நம்மொ மாதவரு வைகுந்தரு அவ்ரோட அல்லா பேரயும் இம்மாம் நேரம் சொல்லிக்கினே இர்க்கோம்..ராஜாத்தி இன்னுமா எயுந்துருக்கலை...அவங்கள எயுப்பு வுடுங்கோ கண்ணுகளா....


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல.... நாளிக்கு பாக்கலாம் வர்ட்டா....

கீழ்வானம் வெள்ளென்று...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நம்ம தீனா அண்த்தே இங்க வந்து டெய்லி ஏத்தோ கொரலு உட்தாம்...தங்காச்சி நான்யும் வந்து மார்களி பாட்ட எட்த்து வுட்றேன்.பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எதும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....

மார்கழி 8 ஆம் நாள் பாடல்....


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்

கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

விர்தொம் இர்க்குறதுன்னாலே ரொம்ப இஷ்டாமாயிருக்குற பொண்ணே...கியக்குல வானொம் வெள்த்துருச்சு... பால கர்ந்து முட்ச்ச உட்னேயே அவுத்துவுட்ட எர்ம மாடுங்கோ புல்லுமேய கிள்ம்பி பரவலா அல்லா இட்த்துலயும் உலாத்திகினு இர்க்குதுங்கோ... விர்தம் இர்க்குற இட்த்துக்கு நிறியா பேரு பூட்டாங்கோ... 

மிச்யம் மீதி இர்க்கறவங்களும் அங்க போர்த்துக்கு புறப்ட்டுகினு இர்க்காங்கோ.... 
அவுங்கோ அல்லாத்தயும் தட்த்து நிர்த்தி உன்னியவும் இட்னு போர்துக்கு வந்து ஒன் வுட்டாண்ட நின்னுகினு இர்க்கோம்...எயுந்து வா கண்ணு... குதுர மேறி வேசம் கட்டிகினு வந்த அர்க்கன் கேசின்ற கேடியோட வாய பொள்ந்தவரு நம்ம கண்ணன்... 

அத்து மட்டுமில்ய... மாமங்காரன் கம்ச்ன் அவுர வூடு கட்டி அடிக்க அன்ப்புன குஸ்தி பயில்வானுங்கோ சாணூரன் முஷ்டிகன் அல்லாத்தயும் மண்ண தின்ன வச்சபரு நம்மோ கண்ணன்...அவருதான் பெர்ய பெர்ய சாமிக்கில்லாம் சாமி..அவுர போய் கண்டுக்கினு அவர் பெர்மய பாடி கும்பிட்டுகினா... 

அவுருயே நென்ச்சிகினு இர்ந்தா ஆ" அப்டின்னு வாய தொர்ந்து நம்ம மேல பாஸ்த்தோட வா" அப்டின்னு கூப்ட்டு நாம அவுரு கிட்ட வேண்டிக்கினுத அல்சி ஆராஞ்சு நல்தயே கொடுப்பாராமாம்...பொண்ணே.


எம்மாம் அயகா சொல்லிக்கிராங்க இல்ல... 

நாளக்கி பாக்கலாம் ....வர்ட்டா....

கீசு கீசு என்று...

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....


 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நம்ம தீனா அண்த்தே இங்க வந்து டெய்லி ஏத்தோ கொரலு உட்தாம்...தங்காச்சி நான்யும் வந்து மார்களி பாட்ட எட்த்து வுட்றேன்.பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எதும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....

மார்கழி 7ஆம் நாள் பாடல்....


கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ

நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ

தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை: 

கண்ணன பேய் மேறி நென்ச்சுகினு இருக்குற பொண்ணே...ஆனசாத்தான் அப்டின்னு 

அல்லாரும் சொல்ற செம்போத்து வலியங் குர்விங்கோ ஒன்யோட ஒன்யா சேந்து குஜாலா 

பேசிக்கினு இர்ந்த பேச்சு நீ கேட்டியா இல்லியா? ஆய்ச்சிமாருங்களோட வாஸ்ன வர்ற 

தலமுட்யும் கயுத்துல போட்ட அயகான காஸ் மாலயும் அத்தோட இர்க்குற தாலி கவுறும் 

கல்கல்னு சில்ரய அள்ளி போட்டது கணக்கா ஒன்யோட ஒண்யு உரசுர சவுண்ட்டும்..... 

மத்தெட்த்து தய்று கடிய சொல்லோ கய்யி மின்னாலயும் பின்னாலயும் போற நேர்த்துல வர்ற 

சவுண்ட்டும் நீ கேக்கலியா? நீ தான் அல்லாத்துக்கும் மூத்த பொண்ணு..... அந்த நாராயண 

மூர்த்திய,கேசவர நாங்க பாடிகினு இர்க்கோம்...நீ கேட்டுகினு இர்க்கியா   

இல்லியா? தெர்யல...... வெள்ச்ச்மா இர்க்குற பொண்ணே.... கதவ தொறடி தங்கொம்...

புள்ளும் சிலம்பின காண்...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....


 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நம்ம தீனா அண்த்தே இங்க வந்து டெய்லி ஏத்தோ கொரலு உட்தாம்...தங்காச்சி நான்யும் வந்து மார்களி பாட்ட எட்த்து வுட்றேன்.பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எதும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....

மார்கழி 6 ஆம் நாள் பாடல்....


புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை.....

பர்க்குற பரவைங்க அல்லாம் கொரல் உடுதுங்கோ...கயுகுக்கு தலீவரான நம்ம பெர்மாளோட 

கோய்ல்ல இர்ந்து வெள்ள சங்குல கொடுக்குற பெர்ய சவுண்ட்டு ஒன் காதுல வுயுலயா? 

பூதொம் கண்க்கா வந்த பேய்யோட மார்ல தட்வுன விஷத்த குட்ச்சவனே...டகால்டி  

காட்டிகினு வந்த சனியன் சகடைய கால தூக்கி அழ்ச்சவனே... பால்கடலு மேல பாம்போட 

பட்த்து கிட்ந்தவனே... இந்த ஒல்கத்துக்கே நீ தான் மொத ஆளு.... பெர்ய பெர்ய 

மினிவருங்கோ அல்லாம் உன்ய மன்சுல நென்ச்சிக்கினு மொள்ளமா எயுந்து "அரி" அப்டின்னு 

சொல்லோ சொல்லோ அதுல வர பெர்ய சவுண்ட்டு நம்ம மன்சுல நுள்ஞ்சு அப்டியே நம்மள 

கூல் ஆக்கி பச்ச புள்ள கண்க்கா ஆக்கிரும்..... ஜல்தியா எய்ந்துரு கண்ணு....

















மாயனை மன்னு

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....


 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நம்ம தீனா அண்த்தே இங்க வந்து டெய்லி ஏத்தோ கொரலு உட்தாம்...தங்காச்சி நான்யும் வந்து மார்களி பாட்ட எட்த்து வுட்றேன்.பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எதும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....

மார்கழி 5 ஆம் நாள் பாடல்......


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

அவ்ரு மாயமான்வரு... நெல்ச்சு நிக்கும் வட மதுர ஊர்ல பொர்ந்தவரு...கலீஜ் இல்லாம க்ளீனா ஜபர்தஸ்தா ஓட்ற யமுன ஆத்தை கட்ந்தபரு... ஆயருபாடில எசோதா அம்மாவுக்கு மவனா வளந்து அந்த ஆயரு கொல்த்துக்கே அயகான கொல விள்க்கு ஆனபரு... தான் பெத்த தாய் வய்த்த பரிசுத்தமாக்குனபரு... எசோதாம்மாவால கய்த்தால கட்டி போடபட்ட தாமோதரரு...அவுரை நாமொ உட்ம்பு,மன்சு, அல்லாத்தயும் சுத்தமா வச்சிகினி அத்த விட சுத்தமேன பூவ எட்தாந்து அவரு பேர சொல்லி கும்பிட்டுக்குவோம்... அவர்ரோட பெர்மைய பாடிகினு இருப்போம்... மன்சால அவரோட தன்மியான கொண்த்த நின்ச்சுக்குவோம்.. இப்டி அல்லாம் செய்ய சொல்லோ நாம யார்க்கோசரமாவது மின்னாடி செஞ்ச தப்பும் இனிமேட்டி அத்து மேறி செஞ்சாலும் கூட அத்தெல்லாம் நெர்ப்புல போட்ட பஞ்சு கணக்கா பொசுக்குன்னு பொஸ்ங்கி போய்டும்..அதனால அவரு கீர்த்திய அவரு பெர்மய பேசிகினே இருப்போம் கண்ணுங்களா....

எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா...


ஆழிமழைக்கண்ணா...

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....


 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நம்ம தீனா அண்த்தே இங்க வந்து டெய்லி ஏத்தோ கொரலு உட்தாம்...தங்காச்சி நான்யும் வந்து மார்களி பாட்ட எட்த்து வுட்றேன்.பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எதும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....

மார்கழி 4 ஆம் நாள் பாடல்......

ஆழிமழைக்கண்ணா!ஒன்று நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியம் தோளுடைய பற்பநா பன்கையில்

ஆழி போல் மின்னி,வலம்புரி போல நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய்,நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


ஆண்டாளு உரை.....

கடலு மேறி பெத்த பேரும் பெர்மய்யும் வச்சினிருக்குற மழ மேக கண்ணா! நீ ஒன்யயும் மர்ச்சி வக்காத்தே! கட்லுக்குள்ள போயி நெர்யா தண்ணிய நீ எட்த்துகினு சொம்மா பெர்ய சவுண்ட் ஓட மேல எய்ந்திரு ! நம்மள காத்துனு இர்க்குற கடவுளு பெர்மாளு மேறி உர்வத்துல கருப்பாய்டு ! படா சோக்கா பெர்மயா அயகான தோளு இர்க்கும் பத்ம நாபனோட கய்ல  தக தகன்னு மின்னிலு கணக்கா மின்னினு கீதே சக்ரம் அந்தொ வெள்ச்சத்த காட்டிகினு அவர்ரோட இன்னுரு கய்ல கீதே வலொம்சங்கு அத்து மேறி சொம்மா நின்னு பெர்சா ஊது ! அந்த பெர்மாளோட்ட வில்லு சாரங்கொம் அப்டின்னு ஒண்ணு இர்க்குதெ அத்துல இர்ந்து புர்ப்பட்ட அம்புங்கோ எப்டி அம்பு மழயா பெய்தோ அதே மேறி  இந்த ஒல்கம் நல்லா இர்க்கவும் நாங்க குஷியா இந்த மார்களி மாசம் குள்ச்சிடவும் ஒன் அருள மழயா பொழ்ஞ்சிரு.....


எம்மாம் அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா....




ஓங்கி உலகளந்த....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

அறிமுகம்:

அல்லார்க்கும் சலாம் உட்டுக்கிறேன்.. நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால 
நம்ம தீனா அண்த்தே இங்க வந்து டெய்லி ஏத்தோ கொரலு உட்தாம்...தங்காச்சி நான்யும் இப்ப வந்து மார்களி மாசொம் பாட்ற பாட்ட எட்த்து வுட்றேன்..

ஏற்கனியே ரெண்டு நாளு பூட்ச்சாமாம்... செரி அத்த கண்டுக்காதிங்கோ கண்ணுங்களா... இன்னில இர்ந்து ஆர்ம்பிக்கலாம் குப்பத்து பொம்னாட்டி நானு பெர்ய பெர்ய பட்ப்பு பட்சதில்ல ஏத்தோ எனிக்கு தெரிஞ்சா மேறி தான் சொல்வேன் ராங்கா எதுனும் இர்ந்தா மன்ச்சிக்கோங்கப்பா...

மார்கழி 3 ஆம் நாள் பாடல்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி 

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து

ஓங்கு பெருங் செந்நெல் ஊடு கயலுகளப்

பூக்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்.


ஆண்டாளு உரை...

வான் த்துக்கும் பூமிக்குமா அப்டியே எம்மாம் பெர்ய உசரமா வள்ந்து இந்த ஒல்கத்தியே அள்ந்தாரே நாராயணரு.. அவரு பேர் சொல்லி பொம்னாட்டிங்க அல்லாரும் மார்களி விர்தம் இர்க்கர்த்துக்கு குள்ச்சிடுவோம்..அப்டி குளிக்க சொல்லோ இன்னா நல்லது நட்க்கும் தெரிமா!!! சொல்றன் கேட்டுக்கோங்கோ..... ஊர்ல அல்லா கெட்டதும் அளிஞ்சு மாசாமாசம் மூணு தபா மய பெய்மாம்... நெல்லு பய்று அல்லாம் நல்லா புஷ்ட்டியா வள்ருமாம்... அந்த வயலாண்ட இர்க்குற காவால கெண்டி மீனு துள்ளி வெளாடுமாம்... பாக்கர்த்துக்கு சோக்கா இர்க்கற கர்நெய்தல் அப்டின்னு ஒரு பூவு அத்து மேல ஒட்ம்புல புள்ளி புள்ளியா டிசின் போட்ட வண்டுங்கோ தேன குட்ச்சினு இர்க்குமாம்... வூட்ல பால் கர்க்கறவங்கோ தயங்கிகினு இல்லாம அவங்க க்ய்ய வச்ச உட்னேயே தன்க்குன்னு வச்சிக்காம பெர்ய மடி வச்சினிருக்குற மாடு அத்தோட பால எப்டி வள்ளல் கணக்கா கொட்த்து பால் கொடத்த ரொப்புதோஅப்டி மாடுங்களோட நெர்யா துட்டும் வூட்ல நெர்ஞ்சு இர்க்குமாம்... 

எம்மாம் அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம் வர்ட்டா....



















Tuesday 17 December 2013

திருப்பாவை - 2

மார்கழி 20 ஆம் நாள் பாடல்....

பாடலுக்குள் செல்வதற்கு முன்... எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆண்டாள் பாசுரத்தை பற்றி எழுதியதை பகிர்ந்து கொள்கிறேன்.... 

ஆண்டாள் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும் அழகான தமிழ்ச்சொற்கள் கிடைக்கும். அதிலுள்ள பக்தியை புறக்கணித்துவிட்டு தமிழுக்காக ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.முதலில் தமிழால் உங்களை உள்ளிழுக்கும் பின் பக்தி எனும் வலை விரித்து காத்திருக்கும். .அதன் சுழற்சியிலிருந்து தப்ப முடியாது என்கிறார் கோதை.

பட்டாம்பூச்சி, வண்ணத்துப்பூச்சி என்றெல்லாம் இன்று சொல்லப்படும் ஜந்துவுக்கு ஆண்டாளின் காலத்தில் இந்திர கோபம் என்று பெயர்..இது எப்படி? ஒரு வேளை இந்திரனின் கோபத்து வண்ணமோ? திருமாலிருஞ்சோலையில் ஆண்டாள் பார்த்த பட்டாம்பூச்சிகள் அத்தனையும் சிவப்பு. ஒரே சமயத்தில் குப்பென்று எழுந்து பறந்து செல்கின்றன. நாச்சியார் திரு மொழியில் இப்பாடலைப் பாருங்கள்.....

சிந்தூரச் செம்பொடிப் போல் திருமாலிருஞ்சோலை எங்கும்

இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்

மந்தரம் நாட்டி அன்று மதுர கொழுஞ்சாறு கொண்ட

சுந்தரத் தோளுடையான் சுழலையினின்று உய்துங் கொலோ?

( இந்திரகோபம் - பட்டுப்பூச்சி : மந்தரம் - பாற்கடலைக் கடைந்த மந்தர மலை : சுழலை - விரித்த வலை : உய்துகொலோ - தப்பிக்க முடியாமல் )

விளக்கவுரை:
சிவப்பான பொடியிரைத்தது போல திருமாலிருஞ்சோலையெங்கும் பட்டுப்பூச்சிகள் பறந்து விரிந்தன. அன்று மந்தர மலையை மத்தாக வைத்து பாற்கடலைக் கடைந்து இனிப்பான அமுதம் எடுத்த அழகான தோள் கொண்டவன் விரித்த வலையிலிருந்து தப்பிக்க முடியுமா? 

நமக்கும் தினவாழ்வில் காதல், பாசம், சம்சாரம், பதவி, மோகம்,துவங்கி இன்டர்நெட் வரை எத்தனையோ விரித்த வலைகள் காத்திருக்கின்றன. கடைசியில் திருமாலின் வலையில் வந்து விழுந்தால் சரி.

நன்றி : எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (29) புத்தகத்திலிருந்து......


இனி மார்கழி 20 ஆம் நாள் பாடல்.....


தேசி ராகம் ...............                        ஆதி தாளம்................


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்

செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.


விளக்க உரை : 

தானாக முன் சென்று முப்பத்து மூவராகிய தேவர்களின் நடுக்கத்தை நீக்கிய மகா தீரனே! 

துயில் எழுவாயாக! ஒப்புரவு உடையவனே! துணிவு உடையவனே! விரோதிகளுக்கு காய்ச்சல் 

உண்டு பண்ணும் நிர்மலனே! துயில் எழுவாயாக! செப்பு ஒத்த மென்மையான 

கொங்கைகளையும், சிவந்த வாயினையும், சிறிய இடையினையும் உடையவளாகிய 

நப்பின்னை நங்கையே! திரு மகளே!துயில் எழுவாயாக! நோன்புக் குரிய ஆலவட்டத்தையும் 

(விசிறி) கண்ணாடியையும் தந்து , உன் மணவாளனையும் ,எங்களையும் இப்பொழுதே நீராட்டு வாயாக !


அயிலு குப்பம் ஆண்டாளு உரை : 


(குப்பத்து பொம்ன்னாட்டி நானு... ஏதோ என்க்கு தெர்ஞ்சா மேறி சொல்லிக்கிறன்.. )


தான் ஒண்டியா போயி வான்த்துல இர்க்குற அல்லா தேவரியும் ஆரும் மெர்சலாகாதிங்கோ 

நான் இர்க்கேன் அப்டின்னு தில்லா சொல்லிக்கின வீரன் நீ! எயுந்துரு கண்ணு! சமாத்தான்மா 

போறவன் நீ! படா தில்லானவன் நீ! உன் கைல ஆராச்சும் ராங் காட்னா அவங்களுக்கு 

ஜொரம் வர் சொல்லோ பாக்குறவன் நீ! படுக்கெல இர்ந்து எய்ந்திரு ராஜா! 

செப்பு கல்க்காத சுத்த தங்கொம் கண்க்கா பஞ்சு மேறி மார் ரெண்டயும், வெத்தலி போட்டு 

செவந்தா மேறி செவ்ப்பா வாயும், சின்னதா இடுப்பும் அயகா வச்சினு இர்க்குற நப்பின்ன பொண்ணே!

எங்க வூட்டு மவாலச்சுமியே! எயுந்துரு கண்ணு ! விர்தம் இர்க்க சொல்லோ வச்சினு இர்க்க 

விசிறி கண்ணாடி அல்லாம் எட்தாந்து உன்ய கண்ணாலம் கட்டிக்க போற கண்ணனையும்

எங்களியும் இப்பியே குளிக்க உட்று....

  ( இது வட்டார மொழியில் வந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இது... திருப்பாவையை கேலி செய்யும் நோக்கமில்லை....)


English Translation

Wake up, O warrior who leads the hosts of thirty-three celestials and allays their fears! Wake up, O strong One, Mighty One, Pure One, who strikes terror in the hearts of the evil. Wake up, O full breasted lady Nappinnai with slender waist and coral lips! Give us your fan and your mirror, and let us attend on your husband now


பதவுரை :

முப்பத்து மூவர் அமரர்க்கு

முப்பத்து முக்கோடி தேவர்கட்கு

முன் சென்று

(துன்பம் வருவதற்கு) முன்னமே எழுந்தருளி

கப்பம்

(அவர்களுடைய) நடுக்கத்தை

தவிர்க்கும்

நீக்கியருளவல்ல

கலியே

மிடுக்கையுடைய கண்ணபிரானே!

வெப்பம்

(பயமாகிற) ஜ்வரத்தை

கொடுக்கும்

கொடுக்கவல்ல

விமலா

பரிசுத்தஸ் வபாவனே!

துயில் எழாய்-’

செப்பு அன்ன

பொற்கலசம் போன்ற

மென் முலை

விரஹம் பொறாத முலைகளையும்

செம் வாய்

சிவந்த வாயையும்

சிறு மருங்குல்

நுண்ணிதான இடையையுமுடைய

நப்பின்னை நங்காய்

நப்பின்னைப் பிராட்டியே!

திருவே

ஸ்ரீ மஹாலக்ஷ்மியே!

துயில் எழாய்-’

துயில் எழாய்

படுக்கையினின்றும் எழுந்தருள்

செப்பம் உடையாய்

(ஆச்ரிதாக்ஷணத்தில்) ருஜுவாயிருக்குந் தமையை யுடையவனே

திறல் உடையாய்

பனிசுவர் மண்ணுன்னும் படியான வலிமையுடையவனே!

செற்றார்க்கு

சத்துருக்களுக்கு

(துயிலெழுந்த பின்பு.)

உக்கமும்

(நோன்புக்கு உபகரணமான) ஆலவட்டத்யும (விசிறியையும்)

தட்டொளியும்

கண்ணாடியையும்

உன் மணாளனை

உனக்கு வல்லபனான கண்ணபிரானையும்

தந்து

கொடுத்து

எம்மை

(விரஹத்தால் மெலிந்த) எங்களை

இப்போதே


இந்த க்ஷணத்திலேயே

நீராட்டு

நீராட்டக் கடவாய்’