Sunday 31 August 2014

தீனா - செப்டம்பர்

"தீனா கொரலு"

மன்சுக்குள்ளாற கோவம் வர்சொல்லோ எவன் காண்டாகாம கீறானோ அவன் தான் கில்லி.. தான் இன்னா நென்ச்சானோ அத்த உடனே அடஞ்சுடுவான்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : வெகுளாமை : குறள் எண் : 309 ]


"தீனா கொரலு"

தெளிவான அறிவும் தடுமாறாம உறுதியா இர்க்குற மன்சும் இர்க்குறவங்கோ அவுங்களுக்கு ஆராச்சும் கெட்டது செஞ்சா கூடொ அத்த தாங்கிகினு இர்ப்பாங்ளே தவுரொ கேவலமா நட்ந்துக்கவே மாட்டாங்கோ.! சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.

[ பொருட்பால் : அதிகாரம் : வினைத்தூய்மை : குறள் எண் : 654


தீனா "கொரலு"

ஒர்த்தர் கிட்ட பேசிகினு இர்க்க சொல்லோ குறையே இல்யாம கொஞ்சமா வார்த்த பேசி தெளிவா புர்ய வைக்கணும்.! அந்த திறமை இல்யாத ஆளுங்க தான் தேவயே இல்லாம திர்ம்ப திர்ம்ப நெறியா பேசிகினே இர்ப்பாங்கோ.! சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.


[ பொருட்பால் : அதிகாரம் : சொல்வன்மை : குறள் எண் : 649 ]



தீனா "கொரலு"

யாருக்காச்சும் நீ கெடுதல நென்ச்சியானா அந்த கெடுதி உனுக்கே வந்து சேரும்.! மன்சன் வாழ்க்கிய நிம்மதியா வாழணும் இன்னா பண்ணணும் தெரிமா? யாருக்கும் கெட்டது நெனிக்காம வாழ்ந்தாலே போதும்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.


[ அறத்துப்பால் : அதிகாரம் : இன்னா செய்யாமை : குறள் எண் : 320 ]



தீனா "கொரலு"

ஒரு விஸ்யத்தை கரீட்டா செஞ்சி முடிக்கணுமின்னா நல்லா அல்சி ஆராஞ்சி அத்த ஆரு கைல கொட்த்தா சொம்மா கில்லியா நின்னு கரீட்டா கச்சிதமா முடிப்பானோ அவங்கைல கொட்த்துருணும்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

[ பொருட்பால் : அதிகாரம் : தெரிந்து வினையாடல் : குறள் எண் : 517 ]


தீனா "கொரலு"

நல்லா பெர்ய பெர்ய படிப்பெல்லாம் பட்ச்சி முட்ச்சி மன்சார ஆரு மேலியும் காண்டாகாம அடக்கமா ஒர்த்தன் வாழ சொல்லோ அவுன எதிர்பார்த்து அவன் போற வழியில நீதி வந்து குந்திகினு இர்க்குமாம்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

[ அறத்துப்பால் : அதிகாரம் : அடக்கமுடைமை : குறள் எண் : 130 ]


தீனா "கொரலு"

காதலிக்கிறவங்கோ ரெண்ட்யு பேத்துக்குமே ரொம்பொ புட்ச்ச விஸ்யம் இன்னா தெரிமா.? கட்டிபுடிச்சினு இர்க்க சொல்லோ நடுவால காத்து கூட நொழயாத மேறி இர்க்கமா கட்டி புட்சிகினு இருக்குறது தான்.! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.


[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புணர்ச்சிமகிழ்தல் : குறள் எண் : 1108 ]


தீனா "கொரலு"

மன்சுக்குள்ள வெக்கமே இல்யாத மன்சனுங்கோ அல்லாம் மன்ச ஜென்மே இல்ல.. அவுங்க அல்லாம் இந்த கயிற கட்டி ஆட்டுற மரப்பொம்மை மேறி தான் சும்மா உதார் வுடறது கணக்கா ஊருக்குள்ள ஆடிகினு திரிவாங்கோ..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி அற்று.

[ பொருட்பால் : அதிகாரம் : நாணுடைமை : குறள் எண் : 1020 ]

Sunday 10 August 2014

புத்தகங்கள் - 100

படிக்க வேண்டிய 100 புத்தகங்கள்....

1. என் சரித்திரம் -உ.வே.சாமிநாத ஐயர் .
2. புத்தரும் அவர் தம்மமும் – அண்ணல் பி.ஆர். அம்பேத்கர்
3. சுந்தர ராமசாமி சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]
4. வண்ணநிலவன் சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]
5. வண்ணதாசன் சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]
6. அம்மா வந்தாள் – திஜானகிராமன் .
7. ஜே.ஜே. சில குறிப்புகள் ..– சுந்தர ராமசாமி
8. சிந்தா நதி – லா.ச. ராமாமிருதம்
9. கல்லுக்குள் ஈரம் – ர.சு. நல்லெபருமாள்
10. பொன்னியின் செல்வன் – கல்கி
11. புதுமைப்பித்தன் கதைகள் [முழுத்தொகுப்பு]
12. வேடந்தாங்கல் – ம.வே.சிவகுமார்
13. எனது சிறைவாசம் – அரவிந்தர்
14. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே.செட்டியார் .
15. ஒற்றன் – அசோகமித்திரன்
16. ரத்த உறவு - யூமா.வாசுகி
17. தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரன் பிள்ளை.
18. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு
19. அவன் ஆனது – சாகந்தசாமி .
20. வனவாசம் – கண்ணதாசன்
21. நுண்வெளிக் கிரணங்கள் – சு.வேணுகோபால்.
22. பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை – அண்ணல் பி .ஆர்.அம்பேத்கர்
23. காமராஜைர சந்தித்தேன் – சோ
24. பள்ளிகொண்டபுரம் – நீல.பத்மநாபன் .
25. பாரதியார் வரலாறு – சீனி விசுவநாதன்
26. இந்திய சரித்திரக் களஞ்சியம் – ப.சிவனடி .
27. ஆதவன் சிறுகதைகள் [முழுத்தொகுப்பு]
28. சுப்பிரமணிய ராஜு கதைகள் [முழுத்தொகுப்பு]
29. பட்டாம்பூச்சி – ஹென்றி ஷாரியர் [மொழிபெயர்ப்பு :– ரா .கி. ரங்கராஜன்]
30. காந்தி – லூயி ஃபிஷர் மி : ரங்கநாதன்
31. பாரதியார் கட்டுரைகள்
32. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி
33. பண்டைக்கால இந்தியா - ஏ.கே.டாங்கே.
34. குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி
35. பயணியின் சங்கீதம் – சுகுமாரன்
36. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரேசகர்
37. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா.
38. மோகமுள் – தி ஜானகிரா .மன்
39. மதிலுகள் – பஷீர் [நீல.பத்மனாபன் மொழி பெயர்ப்பு மட்டும்]
40. எட்டுத் திக்கும் மதயானை  – நாஞ்சில் நாடன்
41. ஜனனி – லா.ச. ராமாமிருதம்
42. பஞ்சபூதக் கதைகள் – லா.ச. ராமாமிருதம்
43. கி.ராஜநாராயணன் கதைகள். [முழுத்தொகுப்பு[
44. அசோகமித்திரன் கட்டுரைகள் [இரண்டு பாகங்கள்]
45. இரா.முருகன் கதைகள் . [முழுத்தொகுப்பு]
46. ஜீரோ டிகிரி  – சாரு நிவேதிதா
47. பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயேமாகன்
48. ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வு – ஆர்.கார்த்திகேயன்
49. வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
50. குட்டியாப்பா – நாகூர் ரூமி
51. சார்லி சாப்ளின் கதை – என். சொக்கன் .
52. வைரமுத்து கவிதைகள்[முழுத்தொகுப்பு]
53. இரும்புக் குதிரைகள் – பாலகுமாரன்
54. மதினிமார்கள் கதை – கோணங்கி
55. காற்றில் கலந்த பேராசை– சுந்தர ராமசாமி
56. புலிநகக் கொன்றை  – பி.ஏ.கிருஷ்ணன் 
57. கொரில்லா - ஷோபா சக்தி
58. ஸ்... [அண்டார்டிகா [– முகில்
59. அங்க இப்ப என்ன நேரம் – அ.முத்துலிங்கம் .
60. முத்துலிங்கம் கதைகள் [முழுத் தொகுப்பு]
61. தீ - எஸ்.பி. பொன்னுத்துரை
62. சடங்கு - எஸ்.பி. பொன்னுத்துரை.
63. வரலாற்றில் வாழ்தல் – எஸ். பி.பொன்னுத்துரை
64. காந்திஜியின் இறுதி 200 நாட்கள் – வி.ராமமூர்த்தி .
65. பிரம்ம ரகசியம் – ர சு. நல்லெபருமாள் .
66. அதர்வ வேதம்
67. இலியட் – தமிழில்நாகூர் ரூமி :
68. புயலிலே ஒரு தோணி கடலுக்கு அப்பால் /– பசிங்காரம் .
69. (சந்திரபாபு )கண்ணரும் புன்னைகயும் :– முகில்
70. வெக்கை  - பூமணி
71.கடல் புரத்திலே - வண்ணநிலவன்
72. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
73. நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்
74. கிருஷ்ணபருந்து - ஆ.மாதவன்
75. ஒரு கடேலார கிராமத்தின் கதை -தோப்பில் முகமது மீரான்.
76. காகித மலர்கள் - ஆதவன்
77. என் பெயர் ராமேசஷன் - ஆதவன்
78. மாதொருபாகன் - பெருமாள் முருகன்
79. தொட்டால் தொடரும் - பட்டுக்கோட்டை பிரபாகர்
80. விசும்பு - ஜெயேமாகன்
81. சிலுவை ராஜ் சரித்திரம் –
82. ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்
83. அரசூர் வம்சம் - இரா.முருகன்
84. குறத்திமுடுக்கு - ஜி.நாகராஜன்
85. பொய்த் தேவு - கா.நா.சு
86. அசுரகணம் - கா.நா.சு
87. நகுலன் கவிதைகள் - காலச்சுவடு வெளியீடு
88. வட்டியும் முதலும் - ராஜு முருகன்
89. பாரீசுக்கு போ  – ஜெயகாந்தன்
90. கி.மு.கி.பி - மதன்
91. வந்தார்கள் வென்றார்கள் - மதன்
92. மூங்கில் மூச்சு - சு.கா
93. சுஜாதா சிறுகதைகள் & குறு நாவல்கள் (எல்லா தொகுப்பும்)
94. காமத்திலிருந்து கடவுளுக்கு – ஓஷோ
95. நாய்கள் - நகுலன்
96. கதாவிலாஸம் - எஸ்.ராமகிருஷ்னன்
97. தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
98. அபிதா - லா.சா.ராமமிர்தம்
99. மஞ்சள் வெயில் - யூமா.வாசுகி
100. சிதம்பர நினைவுகள் - வம்சி.வெளியீ

Friday 8 August 2014

தீனா - ஆகஸ்ட்

தீனா "கொரலு"

இந்த காதலிக்கிறவங்கோ அல்லாத்துக்கும் பொதுவா ஒரு கொணம் இர்க்குது.! அது இன்னா தெரிமா.? எங்கியாச்சும் பொது இட்த்துல பாக்க சொல்லோ இதுக்கு மின்னாடி ஒர்த்தர ஒர்த்தர் தெரியாத மேறியும் அப்பத்தான் பார்க்குற மேறியும் ஆக்ட் குடுப்பாங்க பாரு.. அடாஅடாஅடா இன்னா நடிப்புடா சாமி.! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : குறிப்பறிதல் : குறள் எண் : 1099 ]


தீனா "கொரலு"

கரீட்டான நேர்த்துல கரீட்டான இடத்துல இங்க இத்த செஞ்சா கரீட்டா இருக்கும்னு நல்லா அல்சி ஆராஞ்சு பாத்து... அதுக்கு ஏத்தா மேறி கில்லியா நட்ந்துகினினா இந்த ஒலகமே உன் கைக்குள்ள வந்துர்மாம்..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்.

[ பொருட்பால் : அதிகாரம் : காலமறிதல் : குறள் எண் : 484 ]


தீனா "கொரலு"

இந்த ஒலகத்துல நேர்மியா நாயமான வழியில நட்ந்து.. ஆ.. ஊன்னு சவுண்டுவுட்டு ஆர்ப்பாட்டம் பண்ணாம எப்யுமே நல்ல கொணத்தோட நல்ல மன்சோட இருக்குறவன் பெரிய மலைய வுட உசரமானவன்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

[ அறத்துப்பால் : அதிகாரம் : அடக்கமுடைமை : குறள் எண் : 124 ]


தீனா "கொரலு"

ஏ மனசே.. நீ நல்லாருப்ப.. ஓன் மேல தம்மாத்தூண்டு கூட அன்பே இல்யாத ஒர்த்தர்ட்ட போயி உன் கஸ்டத்தை சொல்லினு இர்க்குறதவுடொ.. பீச்சுக்கு போயி அந்த அம்மாம் பெர்ய கடலை தூர் வாருறது ரொம்ப ஈஸி.! குஜாலா சொல்லிக்கீரார்பா"தல"

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்

செறாஅஅய் வாழிய நெஞ்சு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : தனிப்படர்மிகுதி : குறள் எண் : 1200 ]



தீனா "கொரலு"

ஊரையே அட்ச்சிக்கினு போற வெள்ளம் கணக்கா கஸ்டம் வந்தாலும் அறிவாளிங்க ஒன்யும் கலங்க மாட்டாங்கோ.! ஏன்னா கஸ்டம் வர்ம்போதே அத்த கண்டுக்கினு மன்சு நெறியா தெம்பா நின்னு அந்த கஸ்டத்தை தொர்த்திடுவாங்கோ.! சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.

[ பொருட்பால் : அதிகாரம் : இடுக்கணழியாமை : குறள் எண் : 622 ]


தீனா "கொரலு"

இது போதாது இன்னும் வோணும் வோணும்ன்னு நென்ச்சிகினே இர்க்குற அந்த பேராசை கொணம் கீதே.. அத்த மட்டும் ஒரு மன்சன் ஒழிச்சிட்டான்னா இந்த உல்கத்துலியே அவன் வாழ்றது தான் சந்தோஸ்மான வாழ்க்கியாம்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : அவாவறுத்தல் : குறள் எண் : 370 ]


தீனா "கொரலு"

அவுரோட செல்லமா சண்ட இய்த்து கோச்சுக்கலாம்ன்னு தான் போனேன்.! ஆனா அது இன்னா மாயமோ தெரில.. அவுர பாத்தவுட்னே என் மன்சு என்பேச்ச கேக்காம அவர சேரணும்ன்னு நினைக்க சொல்லோ அப்டியே அவுர கட்டிபுட்ச்சிக்கினேன்.! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

கலத்தல் உறுவது கண்டு.

[இன்பத்துப்பால் : அதிகாரம் : நிறையழிதல் : குறள் எண் : 1259 ]


தீனா "கொரலு"

இன்னா தான் நீ எடுக்குற பசிய தாங்கிகினுகீற பெரிய உஸ்தாதா இர்ந்தாலும் உன் பசிய தாங்குறது பெர்சு கெடியாத்து.! வவுறு பசின்னு துடிச்சினுக்குற ஒர்த்தன் துண்றதுக்கு ஒரு வா சோறு நீ வாங்கி கொட்த்தா அதான் பெர்சு.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : ஈகை : குறள் எண் : 225 ]


தீனா "கொரலு"

நம்க்கு தோதான நேரம் வர வெரிக்கும் அவஸ்ரப்படாம பொர்மியா கொக்கு கணக்கா காத்துகினு சய்லண்ட்டா இர்க்கணும்.. அத்தே சான்ஸ் கிட்ச்ச வொடனே அந்த கொக்கு குறி தவுறாம கொத்துறா மேறி கபால்ன்னு குத்திட்ணும்.! சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.

[ பொருட்பால் : அதிகாரம் : காலமறிதல் : குறள் எண் : 490 ]


தீனா "கொரலு"

காதலிக்கிறவங்கோ ஒர்த்தர் மேல ஒர்த்தர் எந்த தப்புமே இல்யாம இர்ந்தா கூடொ.. அப்பப்ப சின்னுதா செல்லமா கோச்சிகினு சண்ட போட்றது.. அவுங்களுக்கு நடுவால வச்சிர்க்குற அன்பை நெரியா வளத்துகினே இர்க்குமாம்..! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்

வல்ல தவரளிக்கும் ஆறு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : ஊடலுவகை : குறள் எண் : 1321 ]


தீனா "கொரலு"

இந்த ஒலகத்துல நெலயா இல்யாத விஸ்யத்தை அல்லாம் இத்து நெலயா நெலிக்கும்ன்னு நம்புறான் பாரு அவன் தான் பெர்ய முட்டாளு.. அப்டி நம்புறவன் வாழ்க்க ரொம்ப கேவலமான வாழ்க்க..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

[ அறத்துப்பால் : அதிகாரம் : நிலையாமை : குறள் எண் : 331 ]


தீனா "கொரலு"

இன்னாதான் நீ மேல்சாதியோ கீழ்சாதியோ இஸ்கோலுக்கு போயி படிக்கலின்னா இஸ்கோலுல நல்யா பட்ச்சவனவுட நீ மட்டந்தான்.. பட்ச்சவனுக்கு இர்க்குற பெருமை படிக்காதவனுக்கு கெடியாத்து.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.

[ பொருட்பால் : அதிகாரம் : கல்லாமை : குறள் எண் : 409 ]


தீனா "கொரலு"

ஒரு பொண்ணை இவ மெய்யாலுமே பொண்ணுதான் அப்டின்னு பெருமயா சொல்றது எப்ப தெரிமா? அவ தன் மன்சுக்கு புட்ச்சவன் கிட்ட என் ஆசைய தீக்கணும்ன்னா நீ என் கூடவே இருக்கணும்ன்னு கண்ணாலியே கேப்பா பாரு, அடாடாடா..! அந்த வெக்கப்படுற அயகு ஒண்ணே போதும் அந்த பெருமைக்கு..! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : குறிப்பறிவுறுத்தல் : குறள் எண் : 1280 ]


தீனா "கொரலு"

அடக்கவே மிடியாத கோவத்துல இர்க்குற ஆளு உசுரோட இர்ந்தாலும் அவன் செத்ததுக்கு சமானம்..! அத்தே நீ கோவத்த அடியோட ஒழிச்சு கட்டுன ஆளா இர்ந்தா நீ தவம் இர்க்குற மினிவருக்கு சமானம்..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை.

[ அறத்துப்பால் : அதிகாரம் : வெகுளாமை : குறள் எண் : 310 ]


தீனா "கொரலு"

நீ இன்னாதான் அல்லா வகையிலியும் உறுதியானவனா இர்ந்தாலும்.. நீ செய்ற காரியத்துல உறுதி இல்லாங்காட்டி ஒன்னிய இந்த ஒலகம் மதிக்கவே மதிக்காது.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு.

[ பொருட்பால் : அதிகாரம் : வினைத்திட்பம் : குறள் எண் : 670 ]