Monday 20 June 2016

மழைடா


☔☔ மழையதிகாரம் ⚡⚡

☔பள்ளிகள் அடைத்திட பிள்ளைகள் குதித்திட

துள்ளி வருகுதே மழை. ⚡

☔அடகுவைத்து லோன்வாங்கி கட்டிய வீட்டிற்கு

படகுவைத்து போகவிடும் மழை.⚡

☔ பசுவளர்த்து வாழ்ந்த நற்றமிழர் வாழ்வை

கொசுவளர்க்க விட்டதாம் மழை. ⚡

☔ தேங்கிய மழைநீரில் கழிவுகள் தான்கலந்து

வாங்கித் தருவது நோய். ⚡

☔ மண்ணள்ளி நிரப்பி வீட்டுமனையான ஏரியால்

புண்ணள்ளித் தருமே மழை. ⚡

☔ வான்மழை நீரதைச் சேமிக்கா விட்டால்

வீணாய் கடலிலே விடும். ⚡

☔ கூவம்நீரினை ஊருக்குள் அனுப்பி மக்களைப்

பாவத்தில் விட்ட மழை. ⚡

☔ கரை புரண்டு வெள்ளம் சீறிப் பாய்ந்து

தரைப்பாலங்கள் அழித்த மழை. ⚡

☔ வடியும் வெள்ளநீர் சிலநாளில் இருந்தாலும்

விடியுமா இந்த நிலை. ⚡

☔ ஏரியா கவுன்சிலர் கால்படா தெருவுக்குள்

ஏரியாய் நுழையும் மழை. ⚡


☁⚡மழைச் செய்திகள் 💻

☔வேளச்சேரியில் சுறா மீன் தாக்கி இருவர் பலி..☔

 ☔ தாம்பரம் அருகே கரை ஒதுங்கிய 2டன் எடையுள்ள திமிங்கலம்.☔

☔ போரூர் அருகே அதிசய வகை ஆக்டோபஸ்கள்..☔

☔ பிசி மீன் பண்ணை நிறுவனத்தார் அறிமுகப் படுத்தும் வீட்டுக்கு வீடு டால்ஃபின் திட்டம்.." டால்ஃபின் வளர்த்துங்க டாப்பா சம்பாதிங்க" ஏராளமானோர் முதலீடு ☔

☔ வேளச்சேரி to தாம்பரம் கப்பல் போக்குவரத்து சேவை ஊலலாலா நிறுவனம் துவக்கியது.☔

☔ மடிப்பாக்கம் பகுதிக்கு நீர் மூழ்கி கப்பல் விட வேண்டும் மாநகராட்சி அலுவலகம் முன் ஏராளமானோர் படகில் வந்து முற்றுகைப் போராட்டம்.☔

☔ அடையாறு போட் கிளப் அடையாறு ஷிப்பிங் கிளப்பாக பெயர் மாறியது.☔

☔ ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் அனைத்திலும் ஸ்விம்மிங் பூல்கள் மூடப்பட்டன.☔

☔ சென்னைக்கு அருகே ஆற்றில் தண்ணீர் ஓடிய அதிசயம்.. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கண்டுகளித்தனர்.☔

☔ நெடுஞ்சாலைத் துறை நீர்வழித்துறையாக மாற்றப்பட்டது முதல்வர் அறிவிப்பு.☔

☔ அந்தமான் முடிச்சூர் விரைவு கப்பல் சேவை நாளை பிரதமர் துவக்குகிறார்.☔

☔ தமிழகத்தின் கல்வித்துறை மந்திரியாக்கப் பட்டார் வானிலை ரமணன்..மகிழ்ச்சி 'வெள்ளத்தில்' தமிழக மாணவர்கள்.☔

☔☔ மழை பெய்தால்🚿 செய்திகள்  தொடரும்..😭😭🙏

✏ வெங்கடேஷ் ஆறுமுகம் 🏄

#மழைப்_பாக்கள்

மெல்லமாய் குளிர்விலகி கதிரவனொளி பட்டு
செல்லமாய் சோம்பலதை முறித்தனுப்பி விட்டு
கள்ளமாய் கண்மூடி உறங்குவதாய் பாவித்து 
என்னமாய் ஓர்சுகம் இவ்வதிகாலை வேளையிலே.

ஆற்றுப் பெருக்கெடுத்து சூழ்ந்திட்ட இந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் ஊர் மூழ்கித் தள்ளாடும்
ஏற்றவர்க்கு சொந்தவீடே என்றாலும் புறநகரில்
மாற்ற முடியாதிந்த மானங் கெட்டப்பிழைப்பு.

பேய்மழைக் காற்றுடன் சோவெனப் பெய்ய
நாய்நரி எல்லாம் பதுங்கிய தெருவில்
காய்கறி வாங்கிட வழியெதும் இன்றி
பாய்தனிலமர்ந்து பதிவுகள் இட்டேன்.

தெருவிலே ஓடிடும் தேங்கிய நீராம்
உருவிலே அதுவோர் சிறிய ஆறாம்
கருவிலிருக்கும் சுருண்ட சிசுபோல்
மருகினார் மக்களி வ்வூரில்.

இடியது முழங்கும் சத்தத்தில் நடுங்கி
தடியதால் தாக்குண்ட அரவமாய் நசுங்கி
விடியலில் கதிரவன் காட்சிக்கு ஏங்கி
கொடியது இந்த அடைமழை நன்னாள்.

காரிருள் சூழ் மழை அவனியில் பெய்ய 
ஊரினுள் சாலையில் ஏரியும் தேங்க
தேரதுபோல் மெல்ல வாகனம் ஊர
நாறுது வாழ்விங்கு மாநகர்தனிலே.

சீர்மிகு சென்னையில் மேவிய சாலைகள்
நீர்மிகு நதியாய் ஓடிடும் வேளைகள்
நேர்மிகு மனிதர்கள் இம்மழைக் காலையில்
பார்புகு(ந்து) போதையில் பணிந்தன ரன்றோ.

மும்மாரி பெய்த மாதங்கள் இல்லை
அம்மாரி ஒருநாளில் பெய்வதே தொல்லை
எம்மாரி பெய்தாலும் மக்களின் வாழ்க்கை
அதுமாறிப் போகா என்பதே இயற்கை.

வங்கக்கடல் சீற்றம் கண்டேன் இப்புயலில்
அங்கம் நடுங்கியது அப்பெரும் மழையில்
தங்கம் போல் விடுமுறை நாளது ஒன்று
சிங்கம் போல் சோம்பலில் கழிந்த தின்று.

புயல் அடிக்கும் இந்நாளில் நானும்
கயல் சமைத்து உண்கிறேன் வாரும்
முயல் அதுபோல் விரைந்தோடி
பயலிவன் கவிக்குப் பரிசு பல கோடி.

முன்னைப் பிறவியில் செய்திட்ட நற்பயன்
என்னை அழைத்திங்கு குடிபுக வைத்தது
சென்னை நகர்தனில் அமைந்திட்ட வாழ்வினை 
மொண்ணை யென்றாக்குதே பெய்கிற தொடர் மழை.

புள்ளின் வாய்மொழி கீழ்திசைக் கேட்க
வள்ளென ஞமலியின் போர்க்குரல் முழங்க
கள்ளென போதையாய் வந்ததோர் சேதி
நில் இன்று பணியில்லை விடுமுறை என்றால்.

#சென்னையைப் பத்தி என்னவோ ஒருப் பா.

1. 
சிற்றாறு சுழித் தோடுமந்த சிந்தாதிரியில்
காட்டாற்று வெள்ளமது பாய்கின்ற சைதை
அருவிகளைக் காண அசோக நகராம்
கேணிகள் பல காண் கே.கே.நகராம்
சுனைகள் குளங்கள் ஏரிகள் குட்டைகள்
மூழ்கியே போனது சென்னையின் பேட்டைகள்
நிலவிலே காணும் முழுவட்டக் குழிகள்
நிஜத்திலே பார்க்கலாம் சாலைகள் மீதே 
சிலநாள் மழைக்கே சிங்காரச் சென்னை
Sink ஆகிவிட்டதே அதுதான் உண்மை.

2. 
ஊறிய நெகிழிகள் ஊரெங்கும் மிதக்க
நிலத்தடிக் கழிவுகள் ஊர்வலம் நடத்த
வைகுந்த கைலாய லோகங்கள் அடைந்திட
சாக்கடை மூடிகள் அடைப்பது இல்லை 
சாலையில் தேங்கிய மழைநீர் அலைகள்
கழிவுநீர் கலந்து புரியுது கொலைகள்
பசுக்களை வளர்த்து வாழ்ந்த நற்றமிழர் 
கொசுக்களை வளர்த்து வீழ்ந்தன ரிங்கு
தலைநகர் இதுவென பெருமிதம் கொள்ள
எதுவொன்றுமில்லை என்னத்தைச் சொல்ல.



#வெளிவராத_நாளிதழ்_செய்திகள்

+தமிழகத்தில் கனமழையால் பாதிப்பு எங்கும் இல்லை அரசு எடுத்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு...

+மழையால் சாலைகளில் நீர் தேங்காது நிலத்தடிக்கு நீர் திருப்பிவிடும் திட்டம் மூலம் 50 டி.எம்.சி நீர் சேமிப்பு.

+தமிழகம் எங்கும் கன மழையால் கொஞ்சம் கூடசாலைகள் சேதமாகவில்லை நெடுஞ்சாலைத் துறையினருக்கு பாராட்டு குவிகிறது.

+புறநகர் பகுதிகளில் நீர் புகாமல் நீர் நிலை ஆதாரங்களை தூர் வாரியதால் அந் நீர் சேகரிப்பு திட்டம் வெற்றியடைந்துள்ளது..

+பாதாள சாக்கடைகள் ஒழுங்கு படுத்தப்பட்டதால் மழையில் எங்கும் அது நிரம்பி வழியவே இல்லை அனைத்து மாநகராட்சி நகராட்சி நிர்வாகங்கள் சாதனை.

+அடுத்த 5 ஆண்டுகளுக்கு உடையாத ஏரிக்கரைகளை பலப்படுத்திய பொதுப் பணித்துறையினர் தேசிய விருது பெறுகிறார்கள்.

+தமிழகத்தில் அணைகள் ஏரிகள் நிரம்பின.. பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.. வெள்ள அபாய எச்சரிக்கை முறைப்படி அறிவிக்கப்பட்டு உயிர்சேதம் பொருட்சேதம் தடுக்கப்பட்டது.

+எவ்வளவு மழை வந்தாலும் இனி கடலூர் தாங்கும்.. கடலூர் கலெக்டர் பெருமிதம்.

+அடுத்த 1 ஆண்டுக்கு தேவையான தண்ணீர் தேவை இருப்பில் உள்ளது.

+மழையால் எங்கும் நிற்காமல் பழுதின்றி ஓடியும் ஒரு சொட்டு தண்ணீர் கூட உட்புறம் வராத அளவிற்கு நல்ல வசதியுடன் அரசுபேருந்துகள் இயங்கியன மக்கள் நெகிழ்ச்சி.

+சாலைகளில் நீர் தேங்கியதை பார்த்து 25 வருடங்கள் ஆயிற்று 85 வயது மூதாட்டி ருசிகர பேட்டி.

+மத்திய அரசின் வெள்ள நிவாரண நிதி வாங்காத மாநிலம் என்னும் பெருமையை தொடர்ந்து 10 வது ஆண்டாக தக்க வைக்கிறது தமிழகம்.

+தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளும் இணைக்கப்பட்ட பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.. தைப் பொங்கலன்று திறந்து வைக்கிறார் முதல்வர்.

+கன மழை வந்தால் எப்படி அதை எதிர்கொள்வது.. அதை தமிழகத்தில் கற்றுக் கொள்ளுங்கள் ஐ.நா.சபை அறிவிப்பு.

+நீர் மேலாண்மை பற்றி கற்றுக் கொள்ள தமிழகம் வருகிறார்கள் அமெரிக்க பல்கலைக் கழக மாணவர்கள்.

+தமிழகம் முழுவதும் 7894 புதிய நீர் நிலைகள் ஏற்படுத்தப்பட்டது.. பழைய நீர் நிலைகள் 8956 கண்டுபிடிக்கப்பட்டு தூர் வாரப்பட்டன.

+ஒரே நாளில் 300 செ.மீ மழை பெய்தாலும் பாதிப்பின்றி தாங்கும் உலகின் ஒரே இடம் தமிழ்நாடு தான்.. சர்வதேச பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவர் நற்சான்றிதழ்.

+எங்களுக்கு தண்ணீர் தாருங்கள் ஆந்திரா, தெலுங்கானா,கேரளா அரசுகள் தமிழகத்திடம் கெஞ்சல்.

+காவிரி நீர் இனித் தேவைப்படாது... நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் கர்நாடக அரசிடம் தமிழகம் திட்டவட்ட அறிவிப்பு.

+இவ்வாண்டும் தேசிய அளவில் வேளாண்மையில் முதலிடம் பிடித்தது தமிழகம்.

Back up 3

20066709238 SBIN0012764

பெண்கள் பட்டாம் பூச்சியாய் பிறந்திருந்தால் தங்கள் உடல் நிறத்திற்கு ஏற்ற மலரில் தான் அமர்ந்திருப்பார்கள்.... #Matching

#என்றோ ஒரு நாள் கிடைக்கும் "பிரியாணி" யை விட தினசரி கிடைக்கும் "பழைய சோறு" பெரிது.....

அறிஞர் அண்ணாவும் ஃபேஸ்புக்கும்.......

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்... "ஃபேக் ஐ.டி"

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு.. "காப்பி&பேஸ்ட்"

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்..
"நச்" நகைச்சுவை பதிவு"

கடமை... கண்ணியம்.. கட்டுப்பாடு..
ஃபேஸ்புக் வருவது... நல்ல ஸ்டேட்டஸ் இடுவது... இன்பாக்ஸில் வழியாமல் இருப்பது...

சட்டம் ஒரு இருட்டறை..
துஷ்டரை ப்ளாக் பண்ணிடு..

தீ விபத்து நடந்த அதே நேரத்தில் அதற்கு மறு நாள் பெய்யும் மழைக்கு பெயர் தான் "துரதிர்ஷ்டம்" 

சாட் உள்ளபோதே தூற்றிக்கொள்... ஃபேஸ்புக்கில் சண்டை.

அழகான பெண்ணை காதலிப்பவனுக்கு செக்யூரிட்டி ஆபிசராகும் அனைத்து தகுதிகளும் வந்துவிடுகிறது.

உள்ளே நிறைய இருக்கும் வெளியே யாருக்கும் தெரியாது... "சுவிஸ் பேங்க் அக்கவுண்ட்"

உள்ளே ஒன்றும் இருக்காது வெளியே எல்லோருக்கும் தெரியும்... "ஃபேஸ்புக் அக்கவுண்ட்"

காதலி "தொடர்பு" எல்லைக்கு வெளியே இருந்ததையே தாங்கிக் கொள்ள முடியாதுன்னு சொன்னவர்கள் எல்லாம்  "தொடர்பே" இல்லாது போகும் போது தாங்கிக் கொள்கிறார்கள். #நிதர்சனம்

இலவசமாய் கிடைப்பதை பணம் கொடுத்தும், பணம் கொடுத்து கிடைப்பதை இலவசமாகவும் பெற்றுக் கொள்ளும் ஒரே இடம் #இந்தியா

குடும்பத்தோடு "ஷாப்பிங்" செல்லும் போதும் வருகிறது 
#பொருளாதார வீழ்ச்சி.

கோபத்தில் காதலி "கன்னிவெடி"
கோபத்தில் மனைவி "கண்ணிவெடி"

குடிக்க தண்ணீர் கிடைக்கிறதே ரொம்பக் கஷ்டங்க என புலம்பும் ஊர்களில் நடைபெறும் திருமணங்களில் கலந்து கொள்கையில்  அது பொய்யோ எனத் தோன்றுகிறது வரவேற்பில் சந்தன கிண்ணத்தை பார்த்து.... 

#எவ்ளோ_தண்ணி

தந்தை பெரியார் சொன்ன போது வராத கடவுள் வெறுப்பு தானாக வந்து விடுகிறது சில கடவுள் சிலை "ஊர்வலங்களில்"

உலகின் மின்னல் வேக வீரர் உசேன் போல்ட்டாம்.. எங்கே அவர் இந்தியா ரூபாய் மதிப்புச் சரிவுடன் போட்டியிடத் தயாரா.! ₹

எதை அப்பாவிடம் கேட்கலாம் எதை அம்மாவிடம் கேட்கலாம் என திட்டமிட்டு காரியம் சாதித்து கொள்ளும் நம் பிள்ளைகளை நாம் "குழந்தை" என தவறாக நினைத்து விடுகிறோம்.

மறதி என்பது மட்டும் இல்லாமலிருந்தால் மனிதர்கள் அனைவரும் மனநோயாளிகளாக மாறியிருப்பார்கள்.!

- சர் மைக் ஆர்தர் டேவிட் 

புத்தம் புதுசு 1

தன் மீது கல்லை நடும் போது இதுவும் ஒரு நாற்று என நம்பியது விவசாய பூமி.

ஒவ்வொரு கோழியும் தன் எஜமானர் வீட்டில் காகம் கரைந்து விடக்கூடாது என்றே வேண்டிக்கொள்கின்றன.. (காக்கா கத்துனா விருந்தாளி வருவாங்களாம்..!)

என்னை அன்ஃபிரண்ட் பண்ணுங்க என்று சொல்வதற்கு பதிலாகத் தான் கேம் ரெக்வெஸ்ட் அனுப்புகிறார்கள் பலர்..!

டாஸ்மாக் பாரிலும் இருக்கும் ப்யூட்டி பார்லரிலும் இருக்கும் வெள்ளரிக்காய் ஸ்லைஸ்...!

ஃபேஸ்புக்கிற்கு அடுத்து நிறைய ஃபாலோயர்கள் வைத்திருப்பது ஸ்கூட்டிகளே..!

நாசூக்காக சாப்பிட நினைப்பவர் நல்லி எலும்பு சாப்பிடக்கூடாது..!

மனிதன் குறையவே கூடாது என்று நினைப்பது பேங்க் பேலன்சும், செல்போன் பேட்டரி சார்ஜும், ஆனா ரெண்டுமே நடப்பதில்லை.!

ஒரு பைசா கூட குறைக்காத Fixed price என்பது தற்போது கல்வி நிலையங்களில் மட்டுமே..!

பெண்களுக்கு செல்லில் சார்ஜ் இருந்தாலும் ஆண்களுக்கு குடிக்க லார்ஜ் இருந்தாலும் பேசிக்கொண்டே இருப்பார்கள்..!

மனைவி ஃபுட்பால் ரசிகை என்றால் சொன்ன வேலையை அப்படியே செய்வது நலம் இல்லாட்டி பெனால்டி கிக் தான்..!

பேங்குக்கு செல்லும் போது மறக்காமல் மறந்துவிட்டு செல்வது பேனாவைத்தான்..!

ஏமாத்துற அரசியல்வாதிக்கு பதவியும் அழகான பொண்ணுக்கு உதவியும் மக்கள் யோசிக்காம கொடுப்பாங்க..!

யூபிஎஸ்சுக்கு பேக்அப் இல்லைன்னாலும் பொண்ணுங்களுக்கு மேக்கப் இல்லைன்னாலும் ரொம்ப நேரம் தாங்காது..!

ராத்திரியில கரண்ட்டு போறதும் ரவுடி தங்கச்சிய காதலிக்கறதும் ரெண்டுமே ஒண்ணு தான் நிம்மதியா தூங்க முடியாது..!

கணவன் முகத்தில் தொலைத்த"நகை"மனைவி கழுத்துக்கு இடம் மாறிவிடும்..!

கஷ்டத்தில் உனக்கு உதவுபவன் உயிர் நண்பன்.. அந்த கஷ்டத்தையே உனக்கு தருபவன் ஆருயிர் நண்பன்..!

மொய் எழுதும் இடத்தில் 100 ரூவா மொய் எழுதும் கூட்டத்திற்கு நடுவே சென்று 500 ரூபா எழுதிட்டா அப்ப நீ தான் அங்க வி.ஐ.பி..! (அப்ப யாரும் 1000 எழுதிடக்கூடாது)

ஷேர் ஆட்டோவில் நாம் இறங்கும் இடத்தில் தான் அழகா ஒரு பொண்ணு ஏறும்..!

சில நேரங்களில் குழந்தையாவே இருந்திருக்கலாம்ன்னு தோணுது..! அந்த பொண்ணு குழந்தையை கொஞ்சுறத பாக்கும் போது..!

செல்போனில் ஒரு ராங் நம்பர் வந்தது தவறாக அழைத்து விட்டீர்கள் சார் என்றேன் பரவாயில்லை உங்களைப் பத்தி சொல்லுங்கன்னார்.! பொழுது போகலியாம்..இருடி உனக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பிச்சு தர்றேன்.!

நாயர் ஒருத்தர் மேயர் ஆயிட்டா அவர் பொண்ணை நாயர் பொண்ணுன்னு கூப்பிடுறதா? இல்லை மேயர் பொண்ணுன்னு கூப்பிடுறதா..?

பக்கத்து வீடுகளில் புதிதாக வாங்கப்படும் பொருட்கள் விரைவில் நம் வீட்டிற்கும் வாங்க(வைக்க)ப்படும்..!

நான் சொன்னா எங்க வீட்டுக்காரர் சரின்னு சொல்லிடுவாரு என மனைவி இன்னொரு பொண்ணுகிட்ட சொல்ல.. அந்த பொண்ணு அது எப்படின்னு கேட்டா..? அடுத்து அந்த பொண்ணுக்கு கோச்சிங் கிளாஸ் தான்.. பாவம் அந்த தம்பி..! #என்னைப்போல்_ஒருவன்.

ஃபேக் ஐடிக்கு கடன் தந்தவனே ஆகச்சிறந்த இளிச்சவாயன்..!

மருந்து சாப்பிடுகிறார்கள் நோய் வருவதற்காக..! #டாஸ்மாக்


கவிதையாய் தெரிந்த காதலியின் பெயர் கெட்ட வார்த்தையாய் தெரியும் அவள் மனைவியான போது..!

காயா பழமா தான் முகநூலில் Un Friend & Add Friend.

- சர் மைக் ஆர்தர் டேவிட்....


20வது முறையாக நேற்று இடிந்து விழுந்த சென்னை விமான நிலைய கூரைக்கு சமர்ப்பணம் இந்த #மீள்பதி

நானும் அமிர்தாவுல சாரி சென்னை அமிர்தாவுல சேர்ந்து படிக்கலாம்ன்னு இருக்கேன்..! சினேகா அங்கனதான் படிக்குதாம்.!


வெளியூர் செல்ல டிராவல் பேக்கில் துணிமணிகள், ஷேவிங் செட், சோப்பு, பேஸ்ட், ப்ரஷ் உட்பட குளியல் சாதனங்கள் எல்லாம் நிரப்பி விட்டேன்.. ஒரே ஒரு டிசர்ட் மட்டும் வைக்க வேண்டும்  இடமில்லை திணித்து தான் வைக்க முடியும்...ஆனால் அந்த டிசர்ட்டில் எழுதியிருந்ததை பார்த்ததும் என் முடிவை மாற்றிக் கொண்டேன்.. ஆம் அதில் ஹிந்தி என எழுதியிருந்தது.!

#இந்தியை_திணிக்கக்கூடாதில்ல

@venkatapy: காதலியோடு இரவில் போன் பேசுபவன் பக்கத்தில் தூங்குவதும் நைட் வாட்ச்மேன் வேலை பார்ப்பதும் ஒன்றே..!தூங்க முடியாது..!

@venkatapy: வீடு அழுக்கா இருந்து வாழ்க்கை அழகா இருந்தா பிரம்மச்சாரி... வீடு அழகா இருந்து வாழ்க்கை அழுக்கா இருந்தா சம்சாரி...

@venkatapy: களை பிடுங்கும் போது எசப்பாட்டு கேட்கும்... கரண்ட் பிடுங்கும் போது வசப்பாட்டு கேட்கும்...

@venkatapy: வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துருவேன்னு சொல்லி வராமல் இருந்தது ரஜினிகாந்தும் மின்சாரமும் தான்...


போதும் என்ற மனதுடையவனே உலகின் மிகப் பெரும் கோடீஸ்வரன்..

புக்குல சமையல் குறிப்பு படிச்சிட்டு அதை அப்படியே பண்ணாம நான் கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணி சமைச்சு இருக்கேன் எப்படி இருக்குங்க இந்த பலகாரம்..?

பிரமாதம் போ.. இந்த மாதிரியெல்லாம் இப்ப யாரு சமைக்குறா.. சூப்பர்..

நடித்ததில் பிடித்தது...

தங்களுக்கு உணவளித்த வயல் "வானவில் நகர்" பிளாட்டுகளாகி விட்டது பறவைகளுக்கு தெரியாது..!

நாயை வாக்கிங் கூட்டிச் செல்லும் பழக்கம் அன்று மாட்டை தண்ணி காட்ட அழைத்து சென்றதன் பரிணாம வளர்ச்சியே..!

எப்படிடா இப்படி யோசிக்கிறிங்க..!!!!  #அமேசான்_நகர் ....ரியல் எஸ்டேட் விளம்பரம்

அம்மாக்கள் தங்கள் மகன்களை தூக்கு தூக்குன்னு தூக்கி தாங்குவது பேரப்பிள்ளைகளின் முன் டமாரெனப் போடுவதற்காகத்தான்..! ( அப்ப உங்கப்பன் என்ன செஞ்சான் தெரியுமா )

புவனாவின் புது மொழிகள் -->

ஸ்டேட்டஸ் வரும் பின்னே நோட்டிபிகேஷன் வரும் முன்னே..!

@risevenki: காப்பி பேஸ்ட் தேங்காய எடுத்து உன் wall ல உடைக்காதே.... #புதுமொழி .....

@risevenki: நாள் முழுக்க உக்காந்து ஸ்டேட்டஸ் போட்டாலும் விழுகிற லைக்கு தான் விழுகும்...#புதுமொழி...

@risevenki: ஸ்டேட்டஸ் போட்டு லைக் வாங்க தெரியாதவன் ப்லாக்ல எழுதி ஃபேமஸ் ஆக போறானாம்..#புதுமொழி...

@risevenki: மத்தவன் tag செஞ்சா மண்சட்டி நாம tag செஞ்சா பொன்சட்டி... #புதுமொழி

@risevenki: ஃபேக்ட்ஸ் ஐ.டி.அன்று கொல்வான் குரூப் சாட் நின்று கொல்லும்...#புதுமொழி...

@risevenki: லைக் விதைத்தவன் லைக் அறுப்பான்...# புதுமொழி...

@risevenki: ஸ்டேட்டசின் அழகு லைக்கில் தெரியும்...# புதுமொழி...

@risevenki: துஷ்டனை கண்டா ஷ்யூரா ப்ளாக் பண்ணு...# புதுமொழி...

@risevenki: ஒரு ஃபேக் ஐ.டி.யோட மனசு இன்னொரு ஃபேக் ஐ.டி.க்கு தான் தெரியும்..# புது மொழி....

@risevenki: ஒரு ஃபேக் ஐடியோட "இன்பாக்ஸ்" எவ்வளவு ஆழம்ன்னு யாருக்கும் தெரியாது... #புதுமொழி...

@risevenki: மியூச்சுவலாக நம்மை பற்றி அறியாதவர்களே நம் மியூச்சுவல் லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.....

@risevenki: வெற்றிலையை மென்று கொண்டு திண்ணையில் பேசிக் கொண்டிருந்த பாட்டிகளின் பரிணாம வளர்ச்சியே FB குரூப்புகள்..

@risevenki: விடிந்துவிட்டது என கோழி கூவியது... விருந்தாளி வருவார் என காகம் கூறியது.. மறு நாள் கோழிக்கு விடியாது போனது...

@risevenki: இன்றைய உலகில் இரண்டே பெரும் பிரச்சினைகள் ஒன்று "சொல்லால்" மற்றொன்று "செல்லால்" ...

@risevenki: மனைவி வாந்தி எடுக்க இன்னொரு காரணம் கணவனின் சமையலாகவும் இருக்கலாம்..

@risevenki: டேய்ய்ய்ய்ய்.. என்று தெருவில் இறங்கி கத்துவதன் விஞ்ஞான வளர்ச்சியே ஸ்டேட்டஸ்...

@risevenki: காதலிக்கும் போது பொய் கசக்கும்..!கல்யாணத்திற்கு பின் அது இனிக்கும்..!

@risevenki: எந்த எடிட்டோரியலும் இல்லாத பத்திரிக்கை,வானொலி &தொலைக்காட்சி...#ஃபேஸ்புக்...

@risevenki: Wall இல் ஒட்டிய போஸ்டர் கிழிக்கப்பட்டது அந்த காலம்...

Wall இல் போட்ட போஸ்ட்டை கிழி கிழின்னு கிழிப்பது ஃபேஸ்புக் காலம்...


<{AV}>

பிறந்த குழந்தை பேசும் மொழி - அழுகை.

எப்போதும் அதிகாரமாக அன்பு செலுத்துபவர் - மனைவி.

விடுமுறை தினங்களில் வீட்டிலேயே இருப்பது கணவனுக்கும் வெளியே போக நினைப்பது மனைவிக்கும் மிகப்பிடிக்கும்.

#பலநேரங்களில்_மனைவி_வென்றுவிடுவார்

பிறருக்கு தெரியாமல் நாம் செய்கின்ற தவறுகளுக்கு தெய்வம் மட்டும் சாட்சியல்ல நம் செல்போனும்.. #அதுல_மாட்டிக்கிறாய்ங்க

காமம் ஒரு உல்டா நெருப்பு அணைத்தால் தான் பற்றிக்கொள்ளும்.

உங்கப்பா கிட்ட கேட்டு செய் என்று மனைவி பிள்ளைகளிடம் சொன்னால் அதற்கு கணவன் தான் செலவழிக்க வேண்டும்.

பொய் சொல்லி மனைவியிடம் மாட்டிய போது தான் "விசாரணை கைதி"க்கு அர்த்தம் தெரிந்தது.

"இந்த பணம் திரும்பி வரவே வராது" - கணவனின் சகோதரனுக்கு தரும் போது..

"ஒரு மாசத்துல திருப்பி தந்துடுவாங்க" - மனைவியின் சகோதரனுக்கு தரும் போது..

பெற்ற தாயின் எண்ணை போனில் அழைக்க Amma என்று contacts இல் தேடுகிறோம்


@venkatapy: அலைபேசி வழியாக கேட்கப்படும் கடன்களுக்கு பெரும்பாலும் பதிலாக வருவது. "நீங்க பேசறது ஒண்ணும் கேட்கலைங்களே".

முத்தங்களை மொழி பெயர்க்கத் தேவையில்லை..!

பதவியை "லைக்" செய்யும் அரசியல்வாதிகள் அதை "ஷேர்" செய்ய விரும்புவதில்லை..!

- சர் மைக் ஆர்தர் டேவிட்...

@venkatapy: நிற்கும் சைக்கிளை ஓட்டுவது பைத்தியகாரனும் பணக்காரனும்.!

@venkatapy: தன் வாழ்வின் கடைசி நாள் தெரிந்தவை காலண்டர்களே....

@venkatapy: "நாய்"வளர்க்க அனுமதிக்கும் சில வீடுகளில் "தாய்" வசிக்க அனுமதிப்பதில்லை...

@venkatapy: நம்ம "மிஸஸ்" கொடுத்து கட் பண்ணாலும் அது "மிஸ்"டு கால் தான்.

@venkatapy: #ரெஃப்ரிஜிரேட்டர் வந்தபோதே வந்தது தான் #உணவு பாதுகாப்பு மசோதா"

@venkatapy: ஃபேன் சுவிட்ச் போட்டுட்டு காத்து வருதான்னு பாத்தா நீ இந்தியன் அது சுத்துதான்னு பாத்தா நீ தமிழன். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா


@venkatapy: பிரிடேட்டர்,கிளாடியேட்டர் போன்ற படங்கள் தமிழ்நாட்டில் 100 நாட்கள் ஓடியது ஆனால் வருடக் கணக்காக ஓடுவது "ஜெனரேட்டர்"....


@venkatapy: சங்க காலத்தில் அரசை புகழ்ந்து "பாணர்" பாடினார்.. இன்று "பிளக்ஸ்பேனர்" பாடுகிறது....

@venkatapy: சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியே ஆனாலும் தாய்க்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் சண்டையில் தீர்ப்பு சொல்ல திணறுவார்.....

@venkatapy: தமிழ்நாடு.... மின் "மறை" மாநிலம் ....

@venkatapy: வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துருவேன்னு சொல்லி வராமல் இருந்தது ரஜினிகாந்தும் மின்சாரமும் தான்...

@venkatapy: ஊதாரிப் பிள்ளையும் கரண்ட்டும் ஒண்ணு ரெண்டுமே வீட்டுல இருக்காது எப்ப வரும்ன்னும் சொல்ல முடியாது....

@venkatapy: AVM வழங்கும் "மின்சாரமே கனவு" AVM- Amma Vin Manilam...

@venkatapy: தமிழகத்தில் வீட்டுக்கு விளக்கேற்ற வந்த மருமகள்களுக்கு இப்போது அதுவே வேலையாகிப் போனது.

@venkatapy: களை பிடுங்கும் போது எசப்பாட்டு கேட்கும்... கரண்ட் பிடுங்கும் போது வசப்பாட்டு கேட்கும்...

@venkatapy: மொத்த மணிரத்னத்தின் ரசிகர்கள் வேலை பார்க்கும் இடம்... தமிழக மின் வாரியம்...

@venkatapy: எந்தக் கூட்டணியிலும் சேர்த்துக் கொள்ளாமல் கழட்டி விடப்பட்டவர்கள் ஆரம்பிப்பதே மூன்றாவது அணி!

@venkatapy: அரசு பற்றியும் ஆட்சி பற்றியும் அக்காலத்தில் "கல்வெட்டு"மூலமும் இக்காலத்தில் "மின்வெட்டு"மூலமும் அறியலாம்.

@venkatapy: காலிங்பெல் அடித்து கதவு திறந்தால் அது தமிழ் நாடு அல்ல.....

@venkatapy: இப்போதெல்லாம் நல்ல விஷயம் பேசும் போது பவர்கட்டில் லைட் ஆஃப் ஆவதை யாரும் அபசகுனமாக  கருதுவதில்லை....


புத்தம் புதுசு 2

பாடி ஸ்பிரே அடிச்சா பொண்ணுங்க எல்லாம் ஏன் பின்னால வர்றாங்கன்னா.. அவங்க பயப்படுற ஒரே இனமான கரப்பான் பூச்சியவும் ஸ்பிரே அடிச்சு கொல்றமே அந்த மரியாதைக்குத் தான்.!

புளி, காரம், மசாலா எல்லாம் பேஸ்ட்டா ஆச்சு.. இதுக்கு வழியில்லாத உப்பு டூத் பேஸ்ட்டுக்கு போச்சு.!

பாடிஸ்ப்ரே அடிச்சா இத்தனை பொண்ணுங்க பின்னாடி வர்றாங்கன்னா.. சினிமாவில் மயக்க மருந்து அடிச்சு பொண்ணை கடத்துறது எதுக்கு.?

வெள்ளை ஆடைகள் பளீரென மின்னுவது விளம்பரத்தில் மட்டுமே..!

நடிகைகளுக்கு காஸ்ட்யூமராக இருப்பவர் அனைவரும் யூசூப் பாய்களே..!

சிவப்பானவர்களும் இது கருப்பாக இருப்பதைத்தான் விரும்புகிறார்கள் #தலைமுடி

11வது ஸ்கின் ப்ராப்ளம் வந்தா எந்த சோப் போடுவது..!

கோல்கேட் டூத் பேஸ்ட் நல்லா இருக்குன்னு மளிகை கடை அண்ணாச்சி சொன்னாரு..! ஒரு வேளை அவரு டெண்ட்டிஸ்ட் ஆயிட்டாரோ.!

--------- ரே போனாலும் கவலை இல்லை என்று சொல்லுபவர்கள் தான் முடி உதிரும் விளம்பரம் பார்த்து அதிருகிறார்கள்.!

விளம்பரத்துல #நாங்க_இருக்கோம் அப்படின்னு தானே சொல்றாய்ங்க... நீங்க இருப்பிங்கன்னு சொன்னாங்களா.!?

எலிகள் வாழும் வயல்மேடு.. வயல்கள் அழித்து ஹெலிபேடு.. இவை இரண்டும் இருந்தால் அது தமிழ்நாடு.!

அம்மா பேச்சை மதிக்காது தட்டிவிட்டா அது தாய் வீடு.. அம்மா பேச்சை மதிச்சு மேஜையை தட்டி விட்டா அது தமிழ்நாடு.!

"மீனவர்கள் பிரச்சனை தீராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்"என எவரும் இங்கு சொல்வதில்லை.!

பேனாவை மூடலாம், மூடியை கழட்டலாம்,சட்டையில் வைக்கலாம், பேகில் வைக்கலாம், நூலில் கட்டி தொங்கவிடலாம், பென் ஸ்டாண்டில் வைக்கலாம், மேஜையில் வைக்கலாம்... என்னாச்சுங்க இவருக்கு..! 18 வகையான பயன்பாடுகளை பத்தி சொல்றாருங்க.!

தன்னம்பிக்கையின் உச்சகட்டம் தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடை துவக்குவது..!

ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருவது நிலத்தடி நீர் தான்..!

கர்நாடகா காரனுக்கு காது கேக்காது..! நாம எந்தத் தண்ணிய கேட்டா அவன் எந்த தண்ணிய கொடுக்குறான்..!

ஃபுட்பால் சைஸ்ல இருந்த திருப்பதி லட்டு கிரிக்கெட் பால் சைசுக்கு ஆயிடுச்சு.! அது பணம் கொழிக்கிற விளையாட்டுன்னு பாலாஜிக்கும் தெரிஞ்சுடுச்சு..!

சுவிஸ் பேங்க்கும் ஃபேமஸ்.. சுவிஸ் சாக்லெட்டும் ஃபேமஸ்.. ஓ அதான் அப்படி சொல்றாங்களா..! #ஸ்வீட்_எடு_கொண்டாடு

அஞ்சு பெண்களை பெற்ற அரசன் மட்டுமல்ல அஞ்சு தங்கைகள் உள்ள அண்ணனும் ஆண்டியாவான்..!

ஆஸ்திரேலியாவுல வேலை கிடைக்குமான்னு தெரியாது.. கண்டிப்பா உனக்கு கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு கிடைக்கும்..! #கேட்டரிங்_படிங்க

உலகில் பெரும் விபத்துகள் நடக்கும் காலமே இத்தொழிலுக்கு சீசன்.. #இன்சூரன்ஸ்

திடீரென்று மனைவி "இன்னிக்கு என்னா விசேஷம் சொல்லுங்க"என்பது தான் கணவனுக்கு திகிலூட்டும் கேள்வி..!

டெலி மார்க்கெட்டிங்கில் பேசும் பெண்களுக்கு FM இல் ஜாக்கி ஆகும் தகுதியுள்ளது.! FMஇல் ஜாக்கியாக இருக்கும் பெண்களுக்கு மார்க்கெட்டில் காய் விற்கும் தகுதியுள்ளது.!

முன்னாள் காதலியை பொது இடத்தில் பார்த்தும் பார்க்காதது போல் நடிப்பது ஆஸ்கருக்கு சமம்..!

இப்போதெல்லாம் பொய் சொல்பவர்களும் "சத்தியமா சொல்றேன்" என்று ஆரம்பிக்கிறார்கள்..!

பெண்கள் வீட்டில் நிற்கும் போது ஸ்கூட்டியையும்... சாலையில் ஓட்டும் போது தங்களையும் ஃபுல்லா கவர் பண்ணிக்கிறாங்க..!

ஜீன்ஸ் போட்ட பெண்ணுக்கு பீன்ஸ் வாங்கத் தெரியுமாடா..!

கால் டாக்சிகளில் இருப்பதை விட இப்போது காதலில் தான் அதிகம்..! #பிக்கப்பும்_டிராப்பும்

கரண்ட் கம்பியில் அடிபட்டு காக்காய்கள் இறந்தது அந்தக்காலம்..!

சில டாக்டர்கள் புதிய வியாதியை வரவழைக்க தங்களது ஆஸ்பத்திரி பில்லையே பயன் படுத்துகிறார்கள்..!

விரைவில் கொத்தனார் வேலைக்கும் இன்ஸ்ட்டிட்யூட் வரும் என எதிர்ப்பர்க்கப்படுகிறது..!

உணவுக்கு அடுப்பு பிறந்த வீடு..! ஃபிரிட்ஜ் புகுந்த வீடு..!

வீட்டுக்கு வாசலில் படி வைத்துக் கட்டி படிப்படியாக உயர்ந்தோம் இப்போ பிளாட்டு வாசலில் படி இல்லை.. ஒரே பிளாட்டா இருக்கு.. வாழ்க்கையும்..!

மனைவி ஊருக்கு போகும் போது "நான் எப்ப வேணா திரும்ப வந்துடுவேன்"னு சொல்லிட்டா கணவர் ஒழுங்கா இருப்பாராம்..!

டச் ஸ்கிரீன் போனின் ஸ்கிரீன் சேவரில் மனைவி படம் வைப்பது தினமும் அந்த முகத்தில் கை வைப்பதற்காகவே..! 

மனைவியை ஓங்கி அறைந்தான் கை கிழிந்துவிட்டது..!!! போட்டோவில் உள்ள கண்ணாடி உடைஞ்சி கைல குத்திடுச்சாம் :-(

இக்காலத்தில் உண்மை உளறலாகத் தான் வெளிப்படுகிறது..!

குடித்துவிட்டு வீடு திரும்புபவன் தான் அப்ரூவர்..! எல்லாவற்றையும் அவனே ஒப்புக்கொள்வான்..!
சர் மைக் ஆர்தர்..

இன்றைய இசையமைப்பாளர்களின் பல பாடல்களை கேட்ட போது தோன்றியது.. "ஈட்டிங் பழையசாதம் வித் ஸ்பூன்&ஃபோர்க்"

முகநூலில் சிலர் களமாடுகிறார்கள்.. பலர் களவாடுகிறார்கள்.!

கரகாட்டக்காரன் படத்தில் கேட்ட கேள்விக்கு இப்போது பதில்..! அந்த இன்னொரு பழம் எங்க இருக்கு.? நம்ம ஊரு அரசியல்வாதிங்க கிட்ட.!

"எதுவா இருந்தாலும் நாலு சுவத்துக்குள்ள தான் நடக்கணும்"ன்னு சொன்னவன்.. முதன்முதலில் அடி வாங்குன புருஷனா இருப்பான்.

நேர் வழியில் அடையும் வெற்றி வரலாறு.. குறுக்கு வழியில் அடையும் வெற்றி அவதூறு.!

முற்றும் துறந்தவர் அக்காலத்தில் முனிவர் என்றும் இக்காலத்தில் கணவர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இருக்கும் இடத்தைக் காட்டாது இல்லாத இடத்தில் போய் மனிதனை தேட வைப்பது காசும் கடவுளும்.!

என்னை முதல்வராக பார்க்க என் தொண்டர்கள் விரும்புகிறார்கள் - சரத்குமார்.

அப்ப உடனே ஒரு காலேஜ் ஆரம்பிங்க சார்.!

OLD
ஃபேஸ்புக் வந்த 10 வருடங்களில் தான் அந்த உண்மை தெரிந்தது.! தமிழகத்தில் லட்சகணக்கான ஸ்பீல்பெர்க்குகள் பிறந்து வளர்ந்து இருக்கிறார்கள் என்று.

மக்கள் துடைப்பகட்டையோட வேட்பாளரை வரவேற்றா சந்தோஷப்படுறது ஆம்ஆத்மி காரங்களாத்தான் இருக்கும்!

குழந்தை எங்கு ஒளிந்திருக்கிறது என்பது தெரிந்த பிறகும் தேடுவது போல நடித்து பாருங்கள் வாழ்க்கை பிடித்துப்போகும்

மதுரைடா,கோவைடா,நெல்லைடா ட்வீட் போட்டுக் கொண்டிருந்தவன் தன்னை கடந்த பிற மாநில நண்பனிடம் கேட்டான் "மாப்ள நான் கைமாத்தா கேட்ட ஆயிரம் ரூவா..."இப்ப தமிழன்டா"

"கருப்பு பணத்தை மீட்பேன்"

"மைக்கை அவர்ட்ட கொடுங்க"

நாம் அதிகம் கேட்கும் வார்த்தைகள்.!

எவ்ளோ பெரியமனுஷனையும் நடுத்தெருவில் வைத்து அசிங்கப்படுத்துற தைரியம் நாய்களுக்கு தான்பா இருக்கு.

கொள்ளைக் கூட்டத்தினர் ஏன் கல்வி நிறுவனங்களில் கொள்ளை அடிப்பதில்லை? ஒரே இடத்தில் 2கொள்ளை எப்படி அடிப்பது என்பதாலோ..!?! 

தப்பா அட்ரஸ் சொல்றவங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து இதை கண்டுபிடிச்சு இருப்பாங்களோ! "கூகுள் மேப்"

கொள்ளைக் கூட்டத்தினர் இப்போதெல்லாம் அதிகம் தென்படுவதில்லை..! எல்லோரும் கல்வி நிறுவனம் நடத்த போய்விட்டதால்.!

உனக்காக உயிரையே கொடுப்பேன் என்று இன்னொருவனிடம் சொல்லிக் கொண்டிருந்த மனிதனை பார்த்து நக்கலாக சிரித்தன ஆடு கோழிகள்.!

தனக்கு பிடித்ததை அவ்வளவு சீக்கிரம் மாற்ற மாட்டான் தமிழன்,அன்னைக்கு பழைய சோறுக்கும், இன்னைக்கு பிராந்திக்கும் சைட் டிஷ் ஊறுகாய்.!


OLD..

கல்யாணத்திற்கு முன் காதல் வழியும்.. கல்யாணத்திற்கு பின் அசடு வழியும்.!

மார்க்கெட் போன நடிகைக்கும் மார்க்கெட் போகும் கணவனுக்கும் மதிப்பே இல்லை.

இன்று வீடு தேடுபவர்கள் வீடுகளில் அதிக ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருக்கிறதா என்று பார்ப்பதை விட அதிக ப்ளக் பாயிண்ட்டுகள் இருக்கிறதா எனப் பார்க்கிறார்கள்.

பெண்கள் காதலனை இதான் என் ஆளு என பிறரிடம் சொல்வதில் இரு அர்த்தங்கள் உள்ளது.! திருமணத்துக்கு முன் அவளுக்கு "அடியாள்"திருமணத்துக்குப் பின் அவளுக்கு"பணியாள்"

திருட்டுத் தனமா லவ் பண்றவன் லவ்வரோட தியேட்டர்ல போய் படம் பாக்குறான்.! ஊரறிய கல்யாணம் பண்ணவன் குடும்பத்தோட திருட்டு விசிடில படம் பாக்குறான்.!

நீங்க உலகத்தை நினைச்சி வேணா சிரிக்கலாம்.. அதே உங்களை நினைச்சு பாருங்க..! அழுகை தான் வரும்.

நானும் பல தடவை சொல்லிட்டேன் கேக்க மாட்டேங்குறாங்க என்று சொல்வது அக்கறையல்ல.. பின்னாடி பிரச்சனை வந்தா நான் அன்னிக்கே சொன்னேனில்ல என்று பீற்றிக் கொள்வதற்கு.

"என் சொல் பேச்சு கேக்கவே மாட்டா" என்பதன் டீசண்ட் வெர்ஷன் "என் மனைவி எனக்கு இன்னொரு குழந்தை மாதிரிங்க"

அடித்து நொறுக்கப்பட்ட சேதாரம்ன்னு சொல்றாய்ங்களே, அடிச்சு நொறுக்குனாலே சேதாரம் தானேய்யா.!

ஊரறிய அடித்து நொறுக்குனா நகைக்கடை சேதாரம்.. உள்ள வச்சு அடித்து நொறுக்குனா அவனவன் சம்சாரம்.

எப்படா விடியும்ன்னு காத்திருப்பவர்களில் நைட் ஷிப்ட் காரர்களும் அடக்கம்.!

இடிதாங்கி கண்டுபிடிக்க இன்ஸ்பிரேஷனா இருந்தவங்க..! #கணவர்கள்

கணவன் மனைவியிடம் ஏன் நடிக்கிறான்.? மனைவி அவனை இயக்குவதால்.

பல பேர் சாப்பிட்ட சோத்துக்கு ஊறுகாயா இருந்தது நிலா மட்டும் தான்!

காதலியைப் பார்க்க கோவிலுக்கு வந்து தன்னை தரிசிக்காதவனை தெய்வம் பழி வாங்குகிறது.. தன்னைத் தேடி வர அவளையே அவனுக்கு மணமுடித்து வைத்து.!

கெட்டது அனைத்தும் தெரிந்து கொள்வதற்கும் ஒரு நல்ல மொபைல் போன் தேவைப்படுகிறது.

புதியவர்கள்..

சார்ஜரை கண்டா சார்ஜை காணோம்.. சார்ஜைக் கண்டா சார்ஜரைக் காணோம்..

நெருப்பில்லாம புகையாது...நெட்டில்லாம விடியாது..

ஓராயிரம் பதிவுக்கு ஒரு பதிவு பதம்...

லைக்கை வைச்சு லைஃப் இல்லை ஆனா லைஃப் மேல லைக் வைக்கணும்..

கனவுல கண்டதை காப்பி பண்ண முடியுமா..?

அழைப்பார் அழைத்தால் நெட் பேக்கும் கரையும்...

கறையான் புற்று பாம்புக்கு போல தான் காப்பி பேஸ்டும்..

கலகம் பிறந்தால் கமெண்ட் பறக்கும்..

பேஸ்புக் கணக்கு கறிக்கு உதவாது...

கெட்டிக்காரன் ஃபேக் ஐடியும் எட்டு நாளில் தெரிந்துவிடும்...


பஞ்ச் பாஸ்கர்..

பாஸ்போர்ட் இருந்தா தான் ஃபாரீன் போகணும்... பாத்ரூம் போயி தான் நீ யூரின் போகணும்..

டிரெயின்ல அடிபட்டு சாக.. டிரெயினிங்காடா எடுக்க முடியும்..

லூப் இருந்தா அது பேன்ட் பெல்ட்டு...  சேஃப் இருந்தா அது சீட் பெல்ட்டு...

ஹாரன் அடிச்சு நகந்தவனும் இல்ல.. அலாரம் அடிச்சு எழுந்தவனும் இல்ல...

கமர்கட்டுன்னா கடிக்கணும்.. பஸ் டிக்கெட்டுன்னா கிழிக்கணும்...

லாரியை மேல ஏத்திட்டு சாரியாடா கேக்குறிங்க..!

ஆஃப் அடிச்சு பழகுனவனுக்கு ஆப்பு நிச்சயம்ண்டா..!

தலைக்கு மேல சுத்துனா ஃபேனு.. தலையிலேயே சுத்துனா பேனு..

அடி வாங்கிட்டு அலட்டிக்காம இருக்கவன் தாண்டா அஞ்சாத சிங்கம்..!

தேடிப்போயி மோதுறவனை விட ஓடி போயி ஒளியுறவன் தான் கில்லாடி..!

பார்ல இருந்து வந்தாலும் பார்லர்ல இருந்து வந்தாலும் ஒரு மிதப்போட தான் வருவாங்க..!

நாங்க பஞ்சத்துல இருந்தாலும் லஞ்சத்த வாங்க மாட்டோம்..

பசியே எடுக்காம இருக்கறதுக்கு பாலிசியா இருக்கு..!

புலி புல்லைத்தான் திங்காது.. ஆனா ஒரு மானை ஃபுல்லா தின்னும்..!

தங்கத்தை வச்சுகிட்டு சிங்கம் என்னடா செய்யும்..




ஆம்லேட்...

I talk to you.                      

You talk to me

No other middle talk



Yesterday I saw sea 

one bottle on sea water 

oh..sesaa..!


A girl sit in bus

I guess she is miss

I ask to her you miss?

She say yes.. finally 

I know she is school miss..!


Good Friendship is strong

But bad friendship is wrong

This is best line of my song..!


If u know act became you actor

If you know agriculture you need tractor..!


A country end called border

a saree end also called border

So don't cross the 1st border 

And Don't followed 2nd border..!


Last week I went to tour 

time is morning four

I sleep my room in ground floor

Somebody knock the door

Who is that? I am not sure

So I don't open the door..!


One day crow is fly

It's travel on the sky

Crow's throat is dry

It Saw water pot guy

But water level not high

Crow make drink to try

It's failed all time try

But Crow don't cry

Again it's fly..!


Lion is the ever forest king

But it's don't know to sing

All birds are having wing

When in sky wings is swing..!


How to tell my love to you 

I saw you but you don't see me

You saw me but I don't see you

Please dear stop this sports..!


I tell your name

All are telling

It's a poem..!


Your eyes like a fish

Your smile like coin fall sound

Your lips like orange

Your cheek like rose

Totally I am lose..! 

 
You are looking very nise

How to catch me in your eyes..? 

Tell the secret.. I am wondered.!


My love is excitement 

It's not entertainment 

Pls give one appointment

If you not give appointment

Suicide is my commitment...!




சுஜாதா

சிரிக்காமல் கிடைக்கும் தமாஷ்களில் சிறந்தது - செக்ஸ்.
   - உடி ஆலன்.

தினமும் நான் செய்தித்தாள் படிக்கிறேன் அது ஒன்று தான் நான் விரும்பிப் படிக்கும் தொடர்கதை - அனாய்ரின் பெவான்.

நான் தான் கடவுள் என்பது எனக்குத் தெரிகிறது..காரணம் நான் பிரார்த்தனையின் போது எனக்குள் பேசிக் கொள்கிறேன் - பீட்டர் பார்ன்ஸ்.

மகப்பேறு.. மனைவியாய் இருப்பதின் அபாயங்களில் ஒன்று - இங்கிலாந்து இளவரசி ஆன்.


சிரிக்க வைக்கும் சில புத்தகங்களின் தலைப்புகள்:

மெல்ல நடவுங்கள், என் ஜோக்குகளை மிதித்து விடுவீர்கள் - மால்கம் மக்கரிட்ஜ்.

இரண்டு வழுக்கை ஆசாமிகள் ஒரு சீப்புக்கு போட்டுக் கொண்ட சண்டை - ஜார்ஜ் லூயி போர்ஜெஸ் (ஃபால்க்லண்டு போரைப்பற்றி)

தன்னைப்பற்றி பேசவில்லை என்றால் கவனிக்காத ஆசாமி - மார்லன் பிரண்டோ (ஒரு நடிகன் என்பவன் யார் என கேட்ட போது)

நிஜவாழ்வில் முயல் தான் வெற்றி பெறுகிறது.. ஈஸாப் எழுதியது ஆமைகளின் மார்க்கெட்டுக்கு. முயல்களுக்கு படிக்க நேரமில்லை அவை ஜெயிப்பதில் சிரத்தையாக இருக்கிறது - அனிதா புக்னர்

எவனும் தன் மாமியாரை எல்லா செலவுக்கும் பணம் கொடுத்து ஒரு மாதம் அனுப்ப வேண்டிய தேசம் - இயான் போத்தம் (பாகிஸ்தானைப் பற்றி)

நன்றி : சுஜாதா அவர்களின் 21 ஆம் விளிம்பு..

ஹைர ஹைர ஐரோப்பா..

ஐரோப்பா...

டென்மார்க் என்றவுடன் பால் பண்ணைகள் நம் நினைவுக்கு வரும்.. இந்த நாட்டில் ஏராளமான பால் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்த்துள்ளது.. பால் பொருட்கள் தயாரிப்பில் நவீன தொழில்நுட்பம், கால்நடை வளர்ப்பு மற்றும் அவற்றின் ஆரோக்கியத்திற்கான நிறுவனங்களும் நிறைந்து உள்ளது.  

உலகில் சிறந்த பால் பண்ணைகள்  டென்மார்க்கில் அமைந்ததற்கு முக்கிய காரணம் நகர பகுதிகளை விட கிராமங்கள் மிக அதிகம்.கால்நடை வளர்ப்பு, மேய்ச்சல் நிலங்கள், தீவனங்கள் தயாரிப்பு இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து கிராம புறங்களை, நிலங்களை அக்கறையோடு  பாதுகாத்து வருகிறார்கள். 

முறையான ஆவணங்கள் இருந்தால் பால் பண்ணை அமைக்க 1மணி நேரத்தில் வங்கிக்கடன் கிடைக்கும்.. அதே ஒரு நட்சத்திர ஓட்டலோ, ஷாப்பிங் மாலோ அமைக்க என்ன முறையான ஆவணங்கள் இருந்தாலும் குறைந்தது 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும் கிராமங்களை போற்றுகின்றனர்.

இங்குள்ள "வாம்ப்பர்ட்" என்ற ஊரில் எங்கள் நிகழ்ச்சி..ஓஸ்லோவில் இருந்து பண்டிலா ஏர்போர்ட்டை அடைந்து அங்கிருந்து 1மணிநேர கார்ப் பிரயாணம் இரவுப்பயணம் என்பதால் ஒன்றும் தெரியவில்லை.. விடிந்ததும் வெளியே வந்து பார்த்தால்..ஆஹா.. அழகான ஐரோப்பிய கிராம வாழ்க்கை.

பசுமை வயல்களுக்கு நடுவே அழகிய பண்ணை வீடு நாங்கள் போனது கடும் பனி காலமனதால் அந்த காலத்தில் விளையும் ஒரு வகையான புற்களை பயிரிட்டு இருந்தார்கள்.. யூகலிப்டஸ் மரம் போன்ற ஒரு குட்டிச் செடி.. பண்ணை வீடுகள் என அந்தப்பகுதியே ரம்மியமாக இருந்தது.

அங்குள்ள பசுக்களை பார்க்க ஆவலாக இருந்தது குளிர் காரணமாக மாடுகளை வேறு கதகதப்பான கூடத்திற்கு மாற்றி விட்டதால் காண முடியவில்லை. வெளியே கிராமமாக இருந்தாலும் உள்ளே ஹைடெக் வசதி வீடு..200 தமிழ்க் குடும்பங்கள் வழக்கம்போல் அதே அன்பு உபசரிப்பு.

டென்மார்க்கில் நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு உறைய வைத்த குளிரான அனுபவம். அங்கிருந்து கோபன்ஹேகன் விமான நிலையம் சென்று மீண்டும் ஜெனீவாவில் இறங்கவேண்டும்.. அதிகாலை 3 மணிக்கு டிரெயின் நாங்கள் இரவு ஒருமணிக்கே அங்கு போய்விட்டோம்.

அந்த ரெயில் நிலையம் ஒரு 18 ஆம் நூற்றாண்டு கட்டிடம் மலைப் பகுதிகளில் உள்ளது போல கல்லால் கட்டப்பட்ட கட்டிடம்.. அடித்த குளிர் அப்படியே உள்ளே இறங்கியது அதிகபட்சம் அரைமணி நேரத்துக்கு மேல் தாங்க முடியவில்லை வெயில் தாங்கியது போல குளிர் தாங்க முடியவில்லை.

உல்லன் கிளவுசுகளுக்குள் விரல்கள் விறைத்ததை உணர முடிந்தது.. பற்கள் இறுகிக் கொண்டன.. உடல் நடுங்க ஆரம்பித்தது..எங்களை இறக்கி விட்டுவிட்டு நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவர் மட்டும் எங்களுடன் இருக்க மற்றவர்கள் போய்விட்டனர்.. இருந்தது ஒரே கார் நாங்கள் 13பேர்.

அதில் நான்கு பேர் பெண்கள் அவரது காரில் ஹீட்டரை போட்டுவிட்டு முதலில் ஒரு 6 பேர் 10 நிமிடம் அடுத்த 10 நிமிடத்தில் அடுத்த 6 பேர் இப்படி மாறி மாறி அமர்ந்து எங்களை வெப்பப் படுத்தி கொண்டோம். இப்படி ஒரு ஒரு மணிநேரம் திடீரென அய்யோ என்றார் அமைப்பாளர்.!

என்னங்க என்றோம் வண்டியை ஆன் செய்து ஹீட்டர் உபயோகித்ததால் பெட்ரோல் அளவு குறைந்திருந்தது இங்கிருந்து அடுத்த பெட்ரோல் பங்க் போக 35 கி.மீ தூரம் அவர் சுமார் 100 கி.மீ பயணிக்க வேண்டும்.. இப்போது இருக்கும் பெட்ரோல் அதிகபட்சம் 40 கி.மீ தான் வரும் ஆகவே..

வண்டியை அணைத்து விட்டு மீண்டும் குளிர் குகைக்கு திரும்பினோம். மணி 2 இனி அடுத்த ஒரு மணிநேரம் மீண்டும் குளிர் அரக்கனின் பிடி இறுகியது.. அப்போது தான் ஒரு யோசனை வந்தது பீட்ஸா அட்டைப்பெட்டிகள் காரில் இருந்தது ரயில் நிலைய குப்பைக்கூடையிலும் நிறைய காகிதங்கள்..!

ஆளுக்கு ஒரு கை அள்ளி ரயில் நிலையத்திற்கு வெளியே எடுத்து வந்து கொட்டி தீமூட்டினோம்... பற்றாக்குறைக்கு எங்கள் பெட்டியில் எங்களது அழுக்கு ஆடைகளும் அங்கு போடப்பட்டன அந்நிய துணிகளை எரித்து வெள்ளையரை எதிர்த்தது அன்றைய சுதந்திர போராட்டம் வெண்பனிக் குளிரை எதிர்த்து சொந்தத்துணிகளையே எரித்தது எங்கள் தந்திர போராட்டம். 

இப்போது மணி 2:45 ரெயில் 20 நிமிட தாமதம் என்றார்கள் கடும் பனிப் பொழிவு காரணமாக என்றார்கள்.. ஒரு வழியாக ரயிலில் ஏறியதும் தான் குளிர் அடங்கியது.. 3 மணிநேர பயணத்திற்கு பின் கோபன்ஹேகன் விமானநிலையத்திற்கு உள்ளேயே டிரெயினில் இருந்து இறங்கினோம்.

லட்சகணக்கான வெண் இறகுகள் பறப்பது போல பனி பெய்து கொண்டிருந்தது ஏதோ தேவர்கள் பூமாரி பொழிந்தது என்பார்களே அது போல் விமானமும் 3 மணிநேர தாமதம் என்றார்கள் ஆனால் கதகதப்பான அந்த அழகிய விமான நிலையத்தின் எழிலில் குளிரை மறந்தோம்.

விமானம் தாமதமானதால் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவு.. டென்மார்க்கின் பாலினால் தயாரிக்கப்பட்ட பல வகை உணவுகளை கேட்டு வாங்கி சாப்பிட்டோம்.. செமி ஸ்லீப்பர் இருக்கைகள் கொண்ட லாஞ் தந்தார்கள் நன்கு தூங்கினோம். டென்மார்க்கிற்கு கனவில் 100 மார்க் போட்டேன்.

Bergen... உலக உருண்டையின் கழுத்துப்பகுதி.. இதற்கு மேலே க்ரீன்லாந்து அதன் பிறகு ஆர்டிக் பனிப்பிரதேசம் நார்வே நாட்டின் முன்னாள் தலை நகரம்.. ஸ்காண்டிநேவிய அரசு ஆட்சி புரிந்த இடம்.. நார்வேயின் உச்சியில் அமைந்த்துள்ள பழம் பெருமை வாய்ந்த அழகான நகரம்..

பனிச்சிகரங்கள், உறை பனிக் கடல், பழம் பெருமை வாய்ந்த கட்டிடங்கள், சிலைகள், அருங்காட்சியகங்கள் நிறைந்த நகரம்... உலகத் தரம் வாய்ந்த பனிச் சறுக்கு மைதானங்கள் இங்கு உண்டு.. மிகப்பெரிய கப்பல் துறைமுகமும் விதவிதமான நவீன படகுகளும் உள்ள அழகிய துறைமுகம்.

பனி மலைகளை குடைந்து போடப்பட்ட வெகு நீளமான மலைக் குகை பயணம் சிலிர்ப்பூட்டும் .. தற்போதைய தலை நகரான ஓஸ்லோவிலிருந்து 7 மணி நேர ரயில் பயணம். பசுமை புல்வெளிகள், அழகிய பனிமலைகள் என கண்கொள்ளாக் காட்சி.. கோ" படத்தில் என்னமோ ஏதோ பாடல் படமாக்கப்பட்ட இடம் என்றால் திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு புரியும்...

அங்கு ymca விடுதியில் உள்ள டார்மெட் ரி என்னும் வகை அறைகளில் தங்கியிருந்தோம்.. ஒரு அறையில் நான்கு பேர் இரட்டைக் கட்டில் அப்பர் பெர்த் உடன் இதற்கே 200 டென்மார்க் ரூபாய்கள்.. (டேனிஷ் டாலர்) கிட்டத்தட்ட நம்ம ஊர் காசுக்கு 10 ஆயிரம் ரூபாய்..! (2010இல்)

சாக்லெட் தூவப்பட்ட பன்.. கொய்யாப்பழ ஃபேளவரில் Fanta, மெகா சைஸ்களில் பீட்ஸா என எங்கள் பயணம் முழுவதும் (ஒரே டைப்) சாப்பிட்ட எங்களுக்கு YMCA வில் காலை ஆச்சரியம் காத்திருந்தது.. உணவு ஹாலுக்குள் நுழைந்ததும் பிரமிப்பானோம்.

சுடச்சுட இட்லிகள், தோசைகள், பூரிக்கிழங்கு, சட்னி, சாம்பார், ஈழத்து சிறப்பான சம்பல், ஆம்லெட்டுகள், இடியாப்பம் தேங்காய்ப் பால், அசைவர்களுக்கான பெப்பர் மட்டன் பாயா, தர்பூசணி&லெமன் ஜுஸ் என பிரமாதப்படுத்தியிருந்தார்கள். நெகிழ்ந்து புகுந்து விளையாடினோம்.

ஏனெனில் இங்கு வந்து 7 ஆம் நாளில் நாங்கள் சாப்பிட்ட முதல் தமிழ்நாட்டு உணவு இது.. மதியம் பருப்பு சாதம், சாம்பார், ரசம், தயிர்,கூட்டு, பொரியல், அவியல், அப்பளம் வடை, பாயாசம் என ஒரு நாள் சைவமும், மறுநாள் மட்டன் சிக்கன் மீன் என ஒவ்வொன்றிலும் 3 அயிட்டங்களில் விருந்து..!

அதிலும் ஒடியங்கூழ் எனப்படும் அரிசி மற்றும் மீன் இறால் உள்ளிட்ட பல வகை மீன்களில் தயாரான ஒரு கூழ் கொடுத்தார்கள் அசுராமிர்தம்... (தேவர்கள் அசைவம் உண்பதில்லை என்பதால்) அதற்கு தொட்டுக்கொள்ள ஒரு இஞ்சித் துவையல் வேறு.. 5 ஆண்டுகள் ஆனாலும் நினைவிலிருக்கிறது.

கிட்டதட்ட 2000 தமிழ்க் குடும்பங்கள் வசிக்கின்றனர் இனிய விருந்தோம்பல் மிகுந்த அன்பில் எங்களை குளிப்பாட்டி விட்ட அன்பு நெஞ்சங்களை என்றும் மறக்க இயலாது -6 டிகிரி உறைய வைக்கும் குளிரில் டிசம்பர் மாதத்தில் நடுக்கத்துடன் சென்று வந்தது இனிய நினைவுகளாய்.

சுவிஸ்

சுவிஸர்லாந்து... உலகின் அழகு மிக்க நாடு இங்குள்ள லுசான் நகரம் ... அழகிய நதிக்கரையில் அமைந்த நகரம். ஜூரிச்சில் இருந்து 60 கி.மீ வெறும் 20 நிமிட கார்ப் பயணம் ஸ்விஸில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஊர்களில் ஒன்று இந்த ஊரிலிருந்து பாராளுமன்றத்திற்கு ஒரு தமிழ் எம்.பியே இருக்கிறார்.

ஜூரிச், பேர்ன்,பேசில், லுசான், லெளசான், ஃபிரிட்பெர்க், இவையெல்லாம் தமிழர்கள் நிறைந்த ஊர்கள்..லுசானில் உள்ள ஏரியானது அமைதியான கடல் போல் இருக்கும் அவ்வளவு பெரிது.. நதிக்கரையில் புராதன கட்டிடங்கள், சிலைகள்,பாலங்களும் உண்டு.

அருமையான ரெஸ்ட்டாரண்டுகள் இசைக்கலைஞர்களின் நிகழ்வுகள்,பூங்காக்கள் என இதன் சுற்றுப் புறம் வண்ண மயமாய் இருக்கும்அதிலிருந்து அடுத்த சுற்றில் துணிக் கடைகள், சுவிஸ் வாட்சுகள், சாக்லேட்டுகள், ஆபரணங்கள்,கைப்பைகள் வாசனை திரவியங்கள், சர்வதேச உணவகங்கள், பொம்மைகள் என பெரிய தி.நகரே இருக்கிறது.

டிசம்பரில் இந்த ஆறு உறைந்து பனிக்கட்டி ஆகிவிடும் அந்த நேரத்தில் பனி சறுக்கி விளையாடுவது அதன் மேலே திறந்த வெளி உணவகங்கள் நடத்துவது எல்லாம் உண்டு அவர்களது தேசிய நாளை இந்த நதிக்கரையில் தான் கொண்டாடுவார்கள். பனிக் காலத்தில் கார்கள் பயன்படுத்தும் இம் மக்கள் கோடையில் சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

அழகான சாலை, வண்ண மலர் மரங்கள், பசுமை மிளிரும் பூங்காக்கள் என்று எங்கு பார்த்தாலும் அழகு.. அழகு... பனிக்காலத்திலும் கோடை காலத்திலும் இரு முறை நான் சென்ற ஒரே ஊர் லுசான் தமிழகத்தில் எனக்கு எவ்வளவு நண்பர்களோ அதே அளவிற்கு ஏராளமான நண்பர்களும் அங்கு இருக்கிறார்கள் மறக்க முடியாது லுசானை..

ஜெர்மனி..... வரலாற்று சிறப்பு மிக்க நகரம் என்று சொன்னால் நீங்கள் ஹிட்லர் ஆகிவிடுவீர்கள்.. உலகிற்கு தெரிந்த உண்மை அது.

எனது பயணத்தில் மொத்தம் ஒரு 18 மணி நேரமே அங்கு இருக்க முடிந்தது.. முதலில் நார்வே செல்ல பெர்லின் விமான நிலையத்தில் சில மணி நேரங்கள்..

பிறகு பயணத்தின் கடைசி தினத்தின் முதல் நாள் ஜெர்மனியில் நிகழ்ச்சி.. அங்கு எசன் என்ற ஊரில் எங்கள் நிகழ்ச்சி... சுவிஸ் நாட்டின் ஃபிட்பெர்க் என்ற இடத்திலிருந்து கிட்டதட்ட 900 கி.மீ சாலை வழிப்பயணம். 

கொட்டும் பனியில் இரவு 8 மணிக்கு தொடங்கிய பயணம்... மறு நாள் காலை 8மணிக்கு முடிந்தது... ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு சாலை வழிப்பயணம் என்பது புதிய அனுபவமாக இருந்தது.. 

எல்லை நெருங்கும் போது நாங்கள் காரில் அயர்ந்து தூங்கிவிட்டோம். ஆனால் நாங்கள் கலை நிகழ்ச்சிக்கு வந்த கலைஞர்கள் என்று தெரிந்ததும் எங்களை எழுப்பாமல் நிகழ்ச்சி அமைப்பாளரிடம் மட்டும் தகவல்களை பெற்றுக் கொண்டு அனுமதித்த ராணுவத்தினர் பண்பு எங்களை கவர்ந்தது.

இதே நம் ஊராக இருந்தால்.. என்ற எண்ணம் வந்து போனது.. ஒரு வழியாக எஸன்" அடைந்தோம் அழகான நகரம் டென்னிஸ் வீராங்கனை  ஸ்டெபி கிராஃப் பிறந்த ஊர்... சுற்றி பார்க்கவெல்லாம் நேரமில்லை... கடும் பனி பெய்து கொண்டிருந்தது..

முகம் கழுவும் போது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து எங்களை பயமுறுத்தியது.. போட்டிருந்த 5கிலோ ஆடையை மீறி குளிர் ஊடுருவி நடுங்கவிட்டது.  மதியம் 2மணிக்கு நிகழ்ச்சி .. ஆம் ஏனெனில் அடுத்த நாள் காலை எங்களுக்கு விமானம்.. 

அதுவும் ஜூரிச் நகரில்..மீண்டும்900 கி.மீ  சுவிஸ் வரவேண்டும்... மறு நாள் காலை 9 மணிக்கு விமானம் காலை 6 மணிக்கு அங்கு இருத்தல் அவசியம்.. மதியம் 3 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி 6 மணிக்கு முடிந்தது.. 

சரி போக சரியாக இருக்கும் என்று நினைத்த போது அங்குள்ள சிலர் எங்களோடு புகைப்படம் எடுக்க வந்தார்கள்.. சரி ஒரு 10 நிமிடம் தானே என்று சம்மதித்த வேளை வெளியே கடும் பனிப் பொழிவுடன் காற்று என்பதால் நிகழ்ச்சியில் இருந்து வீட்டுக்கு செல்ல இருந்த மக்கள் அனைவரும் அரங்கம் திரும்பினர்.. 

உள்ளே புகைப்படம் எடுப்பது பார்த்தவுடன் அனைவரும் எடுக்க வேண்டும் என வரிசை கட்டி நின்றுவிட்டார்கள்... ஏறத்தாழ 2 மணி நேரம்.. இனி சாப்பிடாமல் கிளம்பினாலும் காலை 8 மணி ஆகிவிடும்...

சிவா அண்ணன் கூலாக இருந்தார்.. அவர் தான் எங்கள் ஓட்டுனர்.. வரும் போது கடும் பனிப்பொழிவில் அவர் சொன்னது பனி இல்லாவிட்டால் வேகமாக போகலாம் என்றார்.. ஆனால் தற்போது அதை விட அதிகமாக ஏன் மோசமாக இருந்தது..

வாங்க சாப்பிட போகலாம் என்றார்.. வேணாம் சிவாண்ணே நேரமாகிவிடும் என்ற சொன்னதை கேளாமல் மெக்டொனால்ட் அழைத்து சென்று சாப்பிட வைத்தார்.. நேரம் 9:30 மணி.. அண்ணே போய் விமானத்தை பிடித்துவிட முடியுமா? வாங்க அதே கூலான புன்னகை... 

காரில் நம்பிக்கை இல்லாமல் ஏறினோம்... சில கிலோமீட்டர் சென்ற பிறகு Express ways என்ற பலகை கண்ணில் பட்டது.. ஜெர்மனியில் மட்டுமே குறிப்பிட்ட சாலைகளில் வாகன வேகத்திற்கு எல்லை கிடையாது.. 

ரேஸ் பிரியர்களுக்கும் மோட்டார் கார் தயாரிப்பாளர்களுக்கும் மிகப் பிடித்த சொர்க்க (!!?) சாலை...  எவ்வளவு வேகத்திலும் பறக்கலாம்.. எடுத்தவுடன் 140கி.மீ வேகம் சில நேரம் 200 கி.மீ நம்ப மாட்டீர்கள்...

விடியற்காலை 6:30க்கு ஜூரிச் விமான நிலையம் வந்துவிட்டோம்.. இதில் இடையில் எல்லை தாண்டும் போது சோதனை இரண்டு இடங்களில் இளைப்பாற... வெறும் 9 மணி நேரத்தில் 900 கி.மீ அசுர வேகம்... மறக்கவே முடியாது ஜெர்மனியையும் சிவா அண்ணணையும்.

Fb போராளி

#ஃபேஸ்புக்_போராளிகள்_பள்ளி_ஆரம்பித்தால்

👍🏽 மொத்தம் 5000 பேருக்கு தான் அட்மிஷன் 🎓
👍🏽 அட்மிஷன் ரெக்வஸ்ட் மூலமே சேர்க்கப்படும்🎓
👍🏽 பள்ளியைப் பற்றி தேவையில்லாத கமெண்ட் கூடாது 🎓
👍🏽 ஒழுக்கமில்லாத மாணவர்கள் பள்ளியிலிருந்து பிளாக் செய்யப்படுவர் 🎓
👍🏽 மாணவர்கள் ஆசிரியர்களை போக் செய்யக்கூடாது 🎓
👍🏽 ஸ்கூல் ஃபீஸை பெற்றோர் நிச்சயம் லைக் செய்யவேண்டும் 🎓
👍🏽 பள்ளி விதிமுறைகளை ஃபாலோ செய்ய வேண்டும் 🎓
👍🏽 பிள்ளைகள் மார்க் குறைந்தால் ரீ ஆக்ட் செய்யக் கூடாது 🎓
👍🏽 லஞ்ச் பள்ளியில் தருவதால் தனியாக டிபன் பாக்ஸ் தரக் கூடாது மீறி இன்பாக்ஸில் உணவு இருந்தால் ரிப்போர்ட் செய்யப்படும் 🎓
👍🏽 மாணவர்கள் காலை 8 மணிக்குள் பள்ளிக்குள் லாகின் ஆகவேண்டும் 🎓
👍🏽 மாணவர்கள் அடிக்கடி லீவு எடுத்து லாக் அவுட் ஆகக்கூடாது 🎓
👍🏽 ஒழுக்கமில்லாத மாணவர்கள் பள்ளியிலிருந்து டி ஆக்டிவேட் செய்யப் படுவார்கள் 🎓

#ஃபேஸ்புக்_பள்ளிப்_பாடமானால்

பரிட்சையில் கொஸ்டீன் பேப்பர் எப்படி இருக்கும்.! ஒரு கற்பனை...

ஃபேஸ்புக் பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக.?

ஃபேக் ஐடி என்றால் என்ன அவை எத்தனை வகைப்படும்?

மார்க் ஜுகர்ஸ்பெர்க் பற்றி ஐந்து வரிகளுக்கு மேல் மிகாது எழுதுக?

உன்னைக் கவர்ந்த பிரபலங்கள் பெயரை குறிப்பிடுக?

இன்பாக்ஸ் சாட்டிங் பற்றி சிறு கட்டுரை எழுதுக?

மியூச்சுவல் ஃபிரண்டால் மியூச்சுவலாக கிடைக்கும் பலன் என்ன?

லைக்கை வைத்து என்னென்ன வாங்கலாம்.?

மேற்க்கண்ட ஸ்டிக்கர்களைக் கண்டு அவற்றின் பெயரைக் கண்டுபிடி?

இவர்களுள் போட்டோ கமெண்ட்டில் அதிகம் வரும் நடிகர் யார்? 
a.கவுண்டமணி b.செந்தில் c.வடிவேலு d.தம்பி ராமையா

காப்பி பேஸ்ட்டின் நன்மை தீமைகளை விளக்கு?

நீ சமீபத்தில் சென்று வந்த க்ரூப் சாட் பற்றி குறிப்பு வரைக?

மிடில, அவ்வ்வ்வ், எச, இவற்றின் அருஞ்சொற்பொருள் யாது.?

லைக் சிம்பல் படம் வரைந்து பாகங்களை குறி..?

ஹேஷ் டாக்கின் முக்கியத்துவம் பற்றி ஒரே வார்த்தையில் விடையளி?

நண்பர்களே இனி நீங்க கொஸ்டின் எடுக்கலாமே...

இவர்கள் முகனூலில் இருந்தா எப்படி Like கேப்பாங்க...
போலீஸ் : டியர் ஃபிரண்ட்ஸ் "மாமூலா"போடற லைக்கை போடுங்க..
குறளி வித்தைக்காரர் : லைக் போடாம போனிங்க ரத்தம் கக்கி சாவீங்க..
கழைக்கூத்தாடி : இந்த லைக்கை நம்பித்தான் சாமி இந்த அரை ஜாண் வயிறு இருக்குது..
வக்கீல்: லைக் போடறதுக்கு யாரும் வாய்தா கேட்கக் கூடாது..
இன்ஜினியர்: நல்லா"பிளான்" பண்ணி லைக் போடுங்க..
டீ மாஸ்டர் : நல்லா ஸ்ட்ராங்கா லைக் போடுங்க..
சமையல்காரர்: உங்க லைக்கை உப்பு சப்பில்லாம போடாதிங்க..
சர்வர்: வந்து உங்க லைக்குகளை பரிமாறுங்க..
பெளலர்: உங்க லைக்கை ஃபாஸ்ட்டா போடுங்க..
பேட்ஸ்மேன்: குறைஞ்சது ஒரு செஞ்சுரி லைக்காவது போடுங்க..
டாக்டர்: இந்த ஸ்டேட்டசுக்கு காலைல ஒண்ணு மத்தியானம் ஒண்ணு நைட் ஒண்ணுன்னு லைக் போடுங்க..
வட்டிக்கடைக்காரர்: போடுற லைக்கை கரெக்டா எண்ணி எண்ணி குடுங்க..
கண்டக்டர்: நல்லா உள்ள வந்து சில்லறையா லைக் போடுங்க..

நாகூர் அனீபா

#இசைமுரசு_நாகூர்ஹனீபா

சேலத்தில் சிந்தி இந்து நடுநிலைப் பள்ளியில் தான் படித்தேன்.. பள்ளி கேட்டின் எதிரில் நின்று இருகை விரித்தால் இடதுபக்கம் மாப்ஸ் Murali Munus வீடு.. வலதுபக்கம் திருமணி முத்(மூத்திர)தாறு.! ஆறு என்னும் பெயர் இருந்தாலும் ஒரு 8 அடி அகல ஓடை.. ஆற்றின் அந்தப்பக்கம் இஸ்லாமிய நண்பர்கள் வாழும் பகுதி துவங்குகிறது.! 

அந்த சாக்கடை நாற்றத்தை கடக்கும் எம் மதத்தவரும் மூக்கைப் பிடித்துக் கொண்டு தான் அப்பகுதியைக் கடப்பார்கள். அந்த ஆற்றுக்குள் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் செய்தி அப்போது ஒளிந்திருந்ததை இப்போது அறிகிறேன்..ஆனால் அங்கு விசேஷங்கள் நடக்கும் போது யாரும் காதுகளை மூடுவதில்லை..!

இயல்பிலேயே எனக்கு பாடல்கள் கேட்கப் பிடிக்கும்.. அதுவும் அங்கு திருமண விழா, இஸ்லாமிய பண்டிகைகள் நடக்கும் போது ஸ்பீக்கர் கட்டி பாடல்கள் ஒலிக்கும்.. அவையெல்லாம் காதுகளில் கேட்டு வளர்ந்தவன் நான்.. அதுமட்டுமின்றி எனது பள்ளியில் என்னுடன் படித்த நண்பர்கள்...

சையத் இர்பான், ஷாபுதீன், முகமத் ரஃபி, ரபீக் பாஷா, ஜாஹிர் ஹுசைன், நூருல்லா, அப்துல் ரஹீம், சுல்தான், போன்றோர்.. இன்னும் சொல்ல மறந்த பெயர்கள் பல இருக்கின்றன. இவர்களைப் பார்க்க போகும் போது அப்பகுதியைக் கடக்கும் போது காதுகளில் ஒலித்தது தான் இசை முரசு நாகூராரின் குரல் அவர் மறைந்த இந்நாளில் அவரது நினைவாக பலர் இறைவனிடம் கையேந்துங்கள் பாடலை முகநூலில் குறிப்பிட்டு இருந்தார்கள்.!

ஆனால் இன்றும் என் மனதிலும் செவியிலும் இருக்கும்.. அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே... திருமறையின் அருள் மொழியில் ஒளிந்திருப்பதென்ன.. அல்லாவை நாம் தொழுதால்.. ஈச்ச மரத்து இன்பச் சோலை... தமிழகத்து தர்காகளை பார்த்து வருவோம்... லப்பை லப்பை அல்லாஹு லா லப்பை.. இது போல இன்னும் பல பாடல்கள்... பிறகு திமுக பிரச்சார பாடல்களும் கேட்டதுண்டு .. அதில் எனது ஃபேவரைட் வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா.. தன் வெண்கலக் குரலால் பல இதயங்களைக் கொள்ளைகொண்ட குரலழகர்.!

குரலால் உருகி,குழைந்து, தொனித்து, கர்ஜித்து, கொள்கையை விளக்கி, உணர்ச்சியூட்டி, எழுச்சியூட்டிய பாடகர் அவர்.. பல மத நல்லிணக்க கூட்டங்களில் அவரது உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் பாடலே இன்றளவும் தேசிய கீதம்.. அவரது இனிய குரலை விட்டுவிட்டு உடலாலும் உயிராலும் மட்டுமே பிரிந்துள்ளார்.. ஈடில்லாத இழப்பு தான் எனினும் அவர் குரலால் என்றென்றும் வாழ்வார் இதை எழுதும் போது முகவை சீனிமுகமது பாடிய ஒரு பாடலை அய்யா அவர்கள் ஒரு முறை பாடக் கேட்டேன் அவ்வரிகள் இன்றும் காதில் ஒலிக்கிறது...

இந்தியா எங்கள் தாய்நாடு 
இஸ்லாம் எங்கள் வழிபாடு 
தமிழே எங்கள் மொழியாகும் 
தன்மானம் எங்கள் வழியாகும்
யாரடா சொன்னது நம்மை
அந்நியன் என்று யாரடா சொன்னது..

கண்ணீர் அஞ்சலி ஐயா....

சேலத்தில் சிந்திஇந்து பள்ளியில் படித்தேன்.. இஸ்லாமிய பெருமக்கள் மிகுதியாக வாழும் பகுதி அது..அவர்கள் வீட்டு விசேஷம் என்றாலோ அல்லது இஸ்லாமிய பண்டிகை என்றாலோ.. இஸ்லாமிய பாடல்கள் ஒலிக்கும் மாதத்தில் ஒரு 10 முறையாவது இந்த பாடல்களை கேட்டு இருக்கிறேன்.. பெரும்பாலும் நாகூர் ஹனீபா பாடியவை..தமிழகத்து தர்காகளை பார்த்து வருவோம்.....திருமறையின் அருள் மொழியில் ஒளிந்திருப்பது என்ன.. அல்லாவை நாம் தொழுதால்....அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே.. லப்பை லப்பை அல்லாஹூ லா லப்பை.. இறைவனிடம் கை ஏந்துங்கள் ஆஹா ஒவ்வொன்றும் கல்கண்டு இதற்கு இணையான பாடல்கள் இதுவரை இல்லை..
------
பொதுவாக கட்டிட வேலை பார்க்கும் தொழிலாளர்களை கடின உழைப்பாளிகள் என்று சொல்வோம்.. அவர்கள் அனுபவிக்கும் பெரிய பிரச்சனை... கை ,கால் பொத்து போவது..... சிமெண்ட்கரைசல் கை கால் களில் பட்டு பட்டு தோலில் ஒட்டை  ஏற்படுத்தும்..சாப்பிட உணவை அள்ள முடியாது,தட்டு செங்கல் தூக்க முடியாது கால்களில் செருப்பில்லாமல் நடக்க முடியாது.சும்மா இருந்தாலும் கையில் மின்சாரம் பாய்வது போல வேதனை இருக்கும்.இது குணமாக ஒரே வழி 4 நாள் வேலைக்கு போகாமல் இருப்பது..ஆனால் யாரும் விடுமுறை எடுப்பதில்லை அந்த வேதனையோடு வேலை பார்க்கிறார்கள்.அவர்களைஅடுத்தமுறை சந்திக்க முடிந்தால் அவர்கள் கைகளை பாருங்கள் ஒட்டைகள் தெரியும்.. அது ஒட்டைஅல்ல அவர்கள் வாழ்க்கை...

பாரதி

பாரதி நினைவலைகள் - 2

எட்டயபுரத்து சமஸ்தானத்தில் காந்திமதி நாதன் என்ற புலவர் இருந்தார்... அப்போதைய புகழ் பெற்ற கவி அவர்தான். பாரதி அப்போது சிறுவனாக இருந்த போதும் சமஸ்தானத்தில் அவரது பாடல்கள் வெகு வேகமாக புகழ் பெற்றிருந்தது...காந்திமதிநாதனுக்கு பாரதியின் மீது பொறாமை இருந்தது.

அரசரும் பாரதி மீது மிக்க அபிமானம் கொண்டிருந்தார். இதுவும்கூட காந்திமதி நாதனுக்கு பிடிக்கவில்லை அவர் பாரதியை மட்டம் தட்ட காத்திருந்தார். அதற்கு ஒரு வாய்ப்பும் வந்தது அரசவையில் ஒருநாள் புலவர்களுக்கு ஒரு போட்டி நடந்தது... (ஈற்றடி) கடைசி வரி மட்டும் சொல்லி விடுவார்கள் பாடலை அந்த வரியில் முடிக்க வேண்டும்..

பாடலை பாடுபவர்களுக்கு வேறொருவர் தான் கடைசி வரி தர வேண்டும், பாரதிக்கு கடைசி வரி சொல்லும் வாய்ப்பு காந்திமதி நாதனுக்கு கிடைத்தது நல்ல வாய்ப்பை பயன் படுத்தாமல் இருப்பாரா! காந்திமதிநாதன் பாரதியாருக்கு கொடுத்த ஈற்றடி "பாரதிசின்னப்பயல்" அவையில் கொல் என்ற சிரிப்பு. இதை சிறுவனான பாரதி எப்படி பாட போகிறார் என்று அரசரும் ஆவலுடன் இருக்க.. பாரதி பாடினார்...

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதிநாதனைப்
பாரதி சின்னப்பயல்.

தன்னை விட வயதில் இளையவன் நான் என்ற அகந்தையால் என்னை இகழ்ந்து ஏளனம் செய்த பெருமையற்ற கருமையான இருள் போல உள்ளங் கொண்ட காந்திமதி நாதனைப் பார் மிகவும் சின்னப்பயல்.. (பார் + அதி சின்னப்பயல் என்னும் அர்த்தத்தில்)

அவையினர் கரவொலிக்க காந்திமதிநாதன் அவமானத்தால் குறுகிப் போகிறார்.. இதை கவனித்த பாரதி அவரை மகிழ்வுற வைக்கவும்.. அடடா சிறியவன் நான் பெரியவரை அவமதித்து விட்டோமே என்ற ஒரு உணர்விலும் அந்தப் பாடலை சற்றே மாற்றிப்பாடுகிறார் இப்படி...

ஆண்டில் இளையவனென் றந்தோ அருமையினால்
ஈண்டு இன்றென்னை நீஏந்தினையால் மாண்புற்ற
காராதுபோ லுள்ளத்தான் காந்திமதிநாதற்குப்
பாரதி சின்னப் பயல்.

ஆண்டில் இளையவன் என்ற அருமையினால் ஈண்டு இன்று என்னை நீ ஏந்தினையால் மாண்புமிக்க கார் அது போல் உள்ளங்கொண்ட காந்திமதி நாதனுக்கு பாரதி சின்னப் பயல்.( கார் அது போல உள்ளத்தான் = மழை மேகம் போல கருணை மிகவுள்ளவன்) 

கருணை மிக்க காந்திமதிநாதனுக்கு முன் பாரதியான நான் சின்னப்பயல் என்றதும் காந்திமதி நாதனே ஓடி வந்து பாரதியை தழுவிக் கொண்டாராம்.
----
#பாரதியார்_எழுதிய_அல்லா_பாடல்.

அல்லா அல்லா அல்லா...

பல்லாயிரம் பல்லாயிரம் கோடிகோடியண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லையில்லா வெளிவானிலே
நில்லாது சுழன்றோட நியமஞ்செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனதாலுந் தொடரொணத பெருஞ்சோதி!
                                                    (அல்லா அல்லா அல்லா...)
கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவராயினும்
பொல்லாதவராயினும் தவமில்லாதவராயினும்
நல்லாருரை நீதியின்படி நில்லாதவராயினும்
எல்லாரும் வந்தேத்துமளவில் யமபயங் கெடச் செய்பவன்.
                                                     (அல்லா அல்லா அல்லா...)


வ.உ.சி.க்கு பாரதியின் வாழ்த்து..

வேளாளன் சிறைபுகுந்தான்  தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ
வருந்தலை என் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீ இறைக்கு தவங்கள் ஆற்றி
வாளாண்மை நின் துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதி நீ வாழ்தி! வாழ்தி!

பாரதியார்_எழுதிய_இயேசுகிறிஸ்து_பாடல்

1.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
நேச மாமரி யாமக்த லேநா
நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்
தேசத் தீர்! இதன் உட்பொருள் கேளீர்:
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமைநித்தங் காப்பார்.
நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால்.
-----
கரண்டு தினம் வேண்டும் பராசக்தி கரண்டு தினம் வேண்டும் ...
வீட்டில் துணிகள் துவைப்பதற்காய் - தேங்காய்கள் சட்னி அரைப்பதற்காய் - அந்த கரண்டு வளத்துடனே ஓர் மாளிகை கட்டித்தர வேண்டும். அங்கு கேணி இல்லாவிடினும் போர் போட்டு மோட்டாரொன்றும்  பத்து பனிரெண்டு மணி நேர பவர்கட்டு  ஏதுமின்றி நித்தமுமே வேண்டும் சுக நித்திரை தர வேண்டும்.....

புதிய பாரதி...

காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்
அந்தச் சென்னைக்கு அருகிலின்றி எங்காவது வாழ்ந்திட
நிலம் வேண்டும் பராசக்தி... மனிதர் வாழ்ந்திட நிலம் 
வேண்டும்..ஏரியைமேடாக்கி ஏரியா ஆக்கிடாத மனையடி 
தான் வேண்டும்...பராசக்தி..அங்கு கேணி இல்லாவிடினும்
போர் போட்டு மோட்டார் ஓட வேண்டும்.பத்து பனிரெண்டு 
மணிநேர பவர்கட்டு ஏதுமின்றி அங்கோர்மாளிகை கட்டித்
தரவேண்டும் பராசக்தி.. டெங்கு கொசுக்கடி ஏதுமின்றி சுக
நித்திரை நிதம் வேண்டும்.. ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்..
தடை செய்யப்படவேண்டும் அதில் நடித்த நடிகரெல்லாம்
சபித்து வேளச்சேரியில் விடவேண்டும்.. இல்லை பராசக்தி 
முடிச்சூரில் விடவேண்டும். சாக்கடை குழிகள் இன்றி 
சாலையில் தேங்கிடும் நீரும் இன்றி.. மழைநீர் சேகரித்து 
மண்ணில்மக்கள் பயனுறவே அறிவைத் தர வேண்டும் பராசக்தி
அதை நீ இன்றே தரவேண்டும். எங்களுக்கு இன்றே தரவேண்டும்.

#பாரதிக்கு_சமர்ப்பணம்

செந்தமிழ்நாடெனும் போதினிலே- மழை வெள்ளமும் பாயுது வீட்டினிலே- எங்கள் அமைச்சர்கள் யாவர்க்கும் பேச்சும் இல்லே- பெருமூச்சும் பிறக்குது மக்கள் மூக்கினிலே..

சோகம் நிறைந்த தமிழ்நாடு- வீண் விளம்பரம்  நிறைந்த தமிழ்நாடு- நிலவினில் கண்டிடும் குழிகளைப் போல் நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழ்நாடு..

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்க் கண்டதோர் வையை பொருனைநதி- மணல் வாரி எடுத்து பின் வெள்ளத்திலே நன்கு மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாடு..

முத்தமிழ் பின்தள்ளி நல் ஆங்கிலத்தில் கல்விச் சாலைகள் கொண்ட தமிழ்நாடு-செல்வம் எத்தனை யுண்டோ அத்தனையும் விற்று கல்வி வியாபாரமான தமிழ்நாடு...

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று மீனவர் வருவதை எதிர்பார்த்திருந்து அண்டை நாட்டிடம் அவர் மாட்டியதும் ஒரு கடிதம் எழுதுகின்ற தமிழ்நாடு...

வள்ளுவன் சிலப்பதி காரமென்று-மணியாரம் படைத்த தமிழ்நாடு
இதை புத்தகத்தில் மட்டும் படித்துவிட்டு வெட்டி ஜம்பம் அடிக்கும் தமிழ்நாடு...

சிங்கள நாட்டுக்கு கச்சத்தீவையுமே தாரையும் வார்த்த தமிழ்நாடு
புலிக்கொடி மீன்கொடி பறந்த இந்நாட்டினில் கட்சிக் கொடிகள் பறக்கவிட்ட திருநாடு..

ஏரிகள் எல்லாம் ஆக்ரமிப்பு அதை கேட்கவும் தைரியம் எழவும் இல்லை பிறர் வெள்ளத்து நிவாரணப் பொருட்களிலும் நன்கு ஸ்டிக்கர்கள் ஒட்டும் தமிழ்நாடு. 

<{புதிய பாரதி}>