Thursday 28 November 2013

கலைவாணர் N.S.கிருஷ்ணன்....

கலைவாணர் நினைவலைகள்......

"என் கடன் களிப்பூட்டல்".....1949ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்கள் வானொலியில் ஆற்றிய உரை....

மக்களுக்குச் சிரிப்பூட்டுவது இந்த காலத்திலே மிகக் கஷ்டமான காரியம் என்பதை நான் நன்றாக அனுபவபூர்வமாக அறிந்து கொண்டிருக்கிறேன். முதலிலே நான் திரைப்பட உலகில் பிரவேசித்த போது, இந்தக் காரியம் ரொம்பவும் லகுவாக நடைபெற்று வந்தது.

தட்சயக்ஞம்" என்ற படத்தில் ' நான் கூப்பிட்டுகிட்டே இருக்கேன் நீ பேசாமல் நின்னுகிட்டேயிருந்தால் என்ன அர்த்தம்?' என்று சொன்னேன்! இதற்கு ஒரு சிரிப்பு...

ஆரியமாலா"வில் 'அய்யோடா,சேட்டன் கிளியாயில்லே! பாருங்க', இதற்கு ஒரு கைதட்டல்...

அசோக்குமார்" படத்திலே,  ' இவரு சொன்னா சொன்னது தான்,எவரு? இவரு!' இவ்வளவு தான். ஒரே ஆமோதிப்பு...

சகுந்தலா" படத்தில், 'காலையில எந்திருச்சி கஞ்சித் தண்ணி இல்லாமக் கஷ்டப்படுகிறேன் கடவுளே! கொஞ்சம் கண்ணைத் திறந்து பாரு கடவுளே! என்னை இப்பிறப்பு பிறக்க வச்சே கடவுளே!' என்னும் பாட்டைக் கேட்டதும் ஒரே குதூகலம்....

கண்ணகி" படத்திலே, ' என்ன ஆச்சரியம்!' இவ்வளவு தான் ஏக ஆமோதிப்பு...

பவளக்கொடி" படத்திலே, ' பரமசிவன்க்கி பார்வதி கங்கா தோ பத்தினி ஹே! எனக்கு ஒண்ணும் நஹிஹே! க்யா கர்னா பகவான்! இதுக்கு ஒரே குதூகலம்,கை தட்டல், ஆமோதிப்பு, சிரிப்பு எல்லாம்....

இதெல்லாம் கடந்த கால ஹாஸ்யத் துணுக்குகள். இப்போ இவ்வளவு ஹாஸ்யங்களையும் வேறொரு வடிவில் ஒன்றாக இணைத்துக்கட்டி உங்கள் முன் வைத்தால் கூட சிரிக்க மாட்டீர்கள். காரணம், உங்கள் அறிவின் முதிர்ச்சியும் சிந்தனையின் பெருக்கமும் தான்.

இப்போது மக்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்து மகிழ வேண்டுமானால் அந்தப் பணியைச் செய்யும் கலைஞருக்கு பல துறைகளில் தேர்ச்சியும் தெளிந்த அறிவும் வேண்டும். 

'அரசியல் துறையிலே, சமூக விவகாரங்களிலே, அறநெறிகளிலே, இலக்கியத் துறையிலே, சரித்திர ஆராய்ச்சியோடு சயன்ஸும் கொஞ்சம் தெரிந்து இருக்க வேண்டும்.இப்படிப் பல்வேறு துறைகளிலும் முறையான ஞானமிருந்தால் மட்டுமே மக்களைச் சிரிப்பூட்ட வைக்கும் சிறந்த நகைச்சுவைக் கலைஞனாக சோபிக்க முடியும்.....


(குறிக்கீடுக்கு மன்னிக்க...எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் பாருங்களேன்)

எனக்கு மட்டும் அதிலிருந்து விதி விலக்கு உண்டு. ஏன்னா, அனுபவ பாத்தியதை தான் காரணம். அனுபவமும் கொஞ்ச நாளா?! இருபது வருஷமல்லவா! அதனால தான் ரேடியோ காரர்களும் என்னை கூப்பிட்டு பேசச் சொன்னாங்க. ஏன் தெரியுமா? நான் பேசுனா நீங்க எல்லாம் விழுந்து விழுந்து சிரிப்பிங்களாம், அப்படின்னு நினைப்பு. ஆனா நீங்க பேசாம உட்கார்ந்து இருந்தீங்கன்னு இவங்களுக்கு எப்படி தெரியும்? இவங்க இங்கே தானே இருக்காங்க? நல்லவேளை.... இங்க எல்லாம் சிரிக்கிறாங்க! இந்த கவுரவத்தோடு நான் பேச்சை நிறுத்திக்கிறேன்.'


அடேயப்பா என்ன நக்கல் நையாண்டி.. காலம் கடந்த பின்பு தன்னுடைய நகைச்சுவையே எடுபடாது என்று ஒப்புக் கொண்ட நேர்மை...ஒரு காமெடியன் பல் துறை வித்தகனாக இருக்க வேண்டும் என்ற தேடல்... மாறி வரும் காலத்திற்கு ஏற்ப மக்களின் அறிவு மேம்பட நகைச்சுவையும் மேம்பட வேண்டும் என்ற ஞானம்...சயன்ஸும் தெரியணும் எனறு அப்போதே விஞ்ஞான உலகை பற்றிய கணிப்பு... அடடா கலைவாணர் என்னும் மாமேதை வாழ்ந்த நாட்டில் வாழ்கிறோம் என்பதே நமக்கு கிடைத்த பெருமை அல்லவா... கலைவாணரை போற்றுவோம்.........

நன்றி......

முத்துராமன் அவர்கள் எழுதிய "சிரிப்பு டாக்டர்" புத்தகத்திலிருந்து....





Friday 22 November 2013

ராஜபக்ஷேவிடம் விசாரணை....

ஒரு கற்பனை.....

ராஜபக்ஷே மீது போர்க்குற்ற விசாரணை...

(ஐ.நா.விசாரணை அதிகாரிகள் அமர்ந்திருக்க அறைக்குள் நுழைகிறார் பக்ஷே...)

ஐ,நா.விசாரணை அதிகாரி : வாங்க ஏற்கனவே அவிய்ங்களுக்கும் உங்களுக்கும் (முள்ளி) வாய்க்கா தகராறு.. இப்ப பொண்ணு பிரச்சனை வேற...

ராஜபக்ஷே : (முழிக்கிறார்)

ஐ.நா : ஏப்பா எங்க பொண்ணை கைய புடிச்சு இழுத்தியா?

ரா.ப : என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

ஐ.நா: ப்ச்ச்.. எங்க பொண்ணை கைய புடிச்சு இழுத்தியா?

ரா.ப : என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

ஐ.நா : (மற்ற அதிகாரிகளை பார்த்து) நான் சரியா தான் பேசுறனா? (அவர்கள் ஆம் என தலையாட்ட) அந்த பொண்ணை கைய புடிச்சு இழுத்தியா?

ரா.ப : என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

ஐ.நா : (மற்ற அதிகாரிகளை பார்த்து) நான் கரெக்டா தான் பேசுறனா? (அவர்கள் ஆம் என தலையாட்ட) அந்த பொண்ணை கைய புடிச்சு இழுத்தியா?

ரா.ப : என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

ஐ.நா : (ஒவ்வொரு அதிகாரிகளாக பார்த்து) நான் கரெக்டா தான் பேசுறனா? (அவர்கள் ஆம் என தலையாட்ட ஒரு கிளாஸ் தண்ணி குடித்து விட்டு ) அந்த பொண்ணை கைய புடிச்சு இழுத்தியாடா?

ரா.ப : என்ன கைய பிடிச்சு இழுத்தியாடா?

ஐ.நா : (கோபத்துடன்) கைய புடிச்சு இழுத்தியாடா?

ரா.ப : என்ன கைய பிடிச்சு இழுத்தியாடா?

(ஐ.நா டென்ஷனாகி எந்திரிக்க மற்ற அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி) இருங்க நாம எல்லாம் கேப்போம்?

ஐ.நா 1 : இனப்படுகொலை...

ரா.ப : என்ன இனப்படுகொலை?

ஐ.நா 2 : அந்த வதை முகாம்கள்....

ரா.ப : என்ன வதை முகாம்கள்?

ஐ.நா 3 : தமிழர் உரிமை......
 
ரா.ப : என்ன தமிழர் உரிமை?

ஐ.நா 4 : மீனவர் படுகொலை...

ரா.ப : என்ன மீனவர் படுகொலை?

ஐ.நா 5 : சரணடைந்தவர்கள்....

ரா.ப : என்ன சரணடைந்தவர்கள்?

ஐ.நா அதிகாரிகள் அனைவரும் திரும்ப திரும்ப பேசற நீ  திரும்ப திரும்ப பேசற நீ கத்திக் கொண்டே ஓடுகிறார்கள்.... ( கள்ள சிரிப்புடன் பக்ஷே கிளம்புகிறார் )

நண்பர்களே இது காமெடி இல்லை இப்படி ஒரு விசாரணை கண் துடைப்பாக நடந்து விடாதிருக்க வேண்டுவோம்...

Thursday 21 November 2013

அட்டாக் பன்ச்..

ஜன"வரி" என்பது மக்கள் கட்டும் வரி அல்ல..

பிப்ர"வரி"என்பது ஒரு கோடு அல்ல...

ஐஸ் (eyes) இடம் இருப்பதாலேயே அது கூலிங்கிளாஸ்...

லத்தி சார்ஜ்ஜுக்கு கரண்ட் தேவையில்லை...

புத்த"கம் என்பது புத்தர் ஒட்டும் பசையல்ல...

பென் டார்ச் என்பது பெண்ணை டார்ச்சர் செய்வதல்ல...

பிராய்லர் கோழி என்பது உள்ளாடை அணிந்த கோழியல்ல...

குரோம்பேட்டை என்பது காக்கா வசிக்கும் பேட்டையல்ல....

அடையாறு என்பது 6 அடைகளை குறிக்காது...

பூந்தமல்லி என்பது எதற்குள்ளும் நுழையாது...

டேபிள் மேட் என்பது மேஜைப் பைத்தியமல்ல...

சீலிங்ஃபேன் என்பது சீல் வைக்கப்பட்ட ஃபேன் அல்ல...

சேத்துப்பட்டு என்பது சகதியில் உள்ள பட்டல்ல...

எலிபெண்ட் என்பது எலி போடும் பேண்ட் அல்ல...

பாமரேனியன் என்பது பாமரமான நாய் அல்ல...

மலை போல் விபூதி கொட்டியிருப்பது திருநீர்மலையல்ல...

தாண்டிக்குடி என்பது குடித்துவிடு தாண்டுவதில்லை...

முக்கொம்பு என்பது 3 கொம்பு உள்ள மிருகமல்ல...

பெரம்பலூர் என்பது பிரம்பு விளையும் ஊர் அல்ல...

டோர் டெலிவரி என்பது கதவின் பிரசவம் அல்ல...

கோக்கனட் என்றால் கோக்கை நட்டு வைப்பதல்ல...

வால்நட் என்பது சுவற்றில் நட்டு மாட்டுவது அல்ல...

கிரவுண்ட்நட் என்பது மைதானத்திலுள்ள நட்டு அல்ல...

சிக்னெட் என்பது நோய் வந்த நட்டு அல்ல...

கேஷ்யூநட் என்பது பணத்தை நட்டு வைப்பதல்ல...

சாக்கர் என்றால் சாக்கு விற்பவர் அல்ல...

கிக்கர் என்றால் போதைக்காரர் அல்ல...

லாக்கர் என்றால் பூட்டு விற்பவரில்லை...

வாக்கர் என்றால் ஓட்டு போடுபவரில்லை...

மார்க்கர் என்றால் மார்க் போடுபவரில்லை...

----------------------------------------

திருக்குறளை நாம் எழுதினால் யாரும் நம்மை திருவள்ளுவர் என சொல்ல மாட்டார்கள்......

எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும் நிழலுக்கு அடி படாது...

செல்போனில் எவ்வளவு ரூபாய் ரீசார்ஜ் செய்தாலும் சார்ஜ் இல்லாவிட்டால் பேச முடியாது....

ஒரு விரலால் வணக்கம் சொல்ல முடியாது....

சோபா மேல் அமர்வது போல் அதற்கு அடியில் உட்கார முடியாது....

போதை ஏற ஏணி தேவைப்படாது...

கிணற்றில் விழுந்த வழியாகத்தான் மேலேற முடியும்...

மின்சாரம் இல்லாவிட்டாலும் சுவிட்ச் போட முடியும்...

முகக் கண்ணாடிக்கு பின்னால் நின்றால் அது முகம் காட்டாது....

லிப்ஸ்டிக்கை எழுதவும் பயன் படுத்தலாம்...

கடுகு உளுத்தம்பருப்பை தாளித்து அல்வாவில் போடக் கூடாது...

எவரெஸ்ட் மலையில் எறும்புகளும் ஏறும்....

கப்பலே என்றாலும் ஓட்டை விழுந்தால் கடலில் மூழ்கிவிடும்..

கிராமத்தில் வாழும் ஆமை நாட்டாமை......

நடுக்கடலில் நரிகள் வாழாது....

புலிக்கு பைக் ஓட்டத் தெரியாது...

காட்டுக்குள் சிங்கம் சிங்கிளாக வந்தாலும் அதை யாரும் சிவாஜி என்று அழைப்பதில்லை ..

யானையை போல பெரிய மிருகம் இன்னொரு யானையே....

முள்ளம்பன்றி காலிலும் முள் குத்தாலம்....

பாம்பு தன் சட்டையை கழற்ற காரணம் அதுக்கு வேர்த்து கொட்டுவதால் கூட இருக்கலாம்...

கிளிக்கு பேச தெரிந்தாலும் அது இன்னொரு கிளியிடம் "க்கீ" என்றே பேசும்....

ஒற்றை பனைமரத்துக்கு பின்னால் ஒட்டகச்சிவிங்கியை ஒளித்து வைக்க முடியாது....

ஓட்டகத்தால் மல்லாக்க படுக்க முடியாது...

பவுடர் அடித்தாலும் பன்றி பன்றி போலவே இருக்கும்....

கரப்பான் பூச்சி மீசையை ட்ரிம் செய்யாது...

எத்தனை கலர் மாறினாலும் ஒரு கலர் பெயர்கூட பச்சோந்திக்கு தெரியாது....

Wednesday 20 November 2013

அட்டாக்2

ஆறுமுகம்

அட்டாக் ஆறுமுகம்

இவர் அரிய தகவல் போல அட்டு தகவல் தருவார் ....

செல்லியல் இணையத்தில் வதந்"தீ"

நவம்பர் 20 -இன்று உலகளவில் நடக்கும் நிகழ்வுகளையும், சம்பவங்களையும் இணைய ஊடகங்களும், சமூக வலைத் தளங்களும் எந்த அளவிற்கு உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனவோ அதே அளவிற்கு சில விஷமிகளால் வதந்திகளும் வேகமாகப் பரவுகின்றன. அதிலும் குறிப்பாக பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்கள் அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்து உலகையே ஒரு வலம் வந்து விடுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலான மக்கள் நன்கு படித்தவர்களாகவே இருக்கின்றனர். அப்படி இருந்தும் ஒரு தகவலை மற்றவர்களுக்குப் பகிர்வதற்கு முன்னர் அத்தகவல் உண்மையானதா என்பதை சோதித்துப் பார்க்கத் தவறுகின்றனர். இதில், உலகின் பிரபல சினிமா நட்சத்திரங்கள், முக்கியப் பிரமுகர்கள் தான் பலிகடாவாக்கப்படுகின்றனர்.நெல்சன் மண்டேலா தொடங்கி ஜாக்கிசான், தற்போது மிஸ்டர் பீன் வரை உலகின் முக்கியப் பிரமுகர்கள் பலர் இது போன்ற வதந்திகளால் சாகடிப்பட்டிருக்கின்றனர். இப்படியாக, வளர்ந்து வரும் தொழிநுட்பங்களை சிலர் தவறாகப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்புகின்றனர். இந்த வதந்திகள் குறித்து ‘அசத்தப்போவது யார்’ புகழ் நடிகர் வெங்கடேஷ் ஆறுமுகம் (படம்), தனது பேஸ்புக் வலைத்தளத்தில் இன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அதில், “அறிவியல் எவ்வளவு முன்னேறினாலும் நமது பழமையான சில விஷயங்களுக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்கிறோம். உதாரணம் கம்ப்யூட்டர் ஜோதிடம். நம் ஊரில் வதந்திகளை பரப்பி பீதிக்குள்ளாக்குவது வெகு நாளாக இருந்து வரும் பழக்கம்.தலையில்லா முண்டம், திருப்பதி கோவிலில் எருமை நுழைந்தது, அம்மன் தாலி அறுந்து விழுந்தது, சகோதரிகளுக்கு பச்சை சேலை போன்ற வதந்திகள் காட்டுத்தீயாக தமிழகத்தில் பரவியதை நீங்கள் அறிவீர்கள்.” “கடந்த மாதம் வட இந்தியாவில் கூட்ட நெரிசலில் ஏராளமான பேர் பலியாக பாலம் இடியப் போகிறது என்ற வதந்தியே காரணமாக இருந்தது.வதந்திகள் கிராமத்தில் மட்டுமல்ல தமிழகத்தின் சென்னை போன்ற பெரு நகரங்களையும் ஆட்டிப்படைக்கும் என்பதற்கு, கடந்த ஆண்டு மருதாணி வைத்தவர்கள் மயங்கி விழுகிறார்கள் என்ற வதந்தி ஒரு உதாரணம்.வெறும் வாய் வழியாகப் பரவிய அக்கால வதந்திகள், வானொலி, டிவி, பத்திரிக்கைகள் வந்த பிறகு அதிவேகமாகப் பரவின.அதுவரை நடந்து சென்ற வதந்திகள் ஊடக பைக்கில் (Motor) விரைந்தன. பிறகு செல்போன் வந்த பிறகு வதந்திகளுக்கு கார் கிடைத்தது போல ஆயிற்று. இப்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வதந்திகளுக்கு விமானத்தை கொண்டு வந்து நிறுத்தியுள்ளன.” “நெல்சன் மண்டேலா முதல் நடிகை கனகா, சல்மான் குர்ஷித் என்று செய்தியின் நம்பகத்தன்மையை சோதிக்காமல் நாமே அதை பரப்புகின்றோம் .இத்தனைக்கும், இன்று 24 மணி நேர செய்தி ஊடகங்கள், இணையத்தளங்கள் என்று அந்த செய்தியை சில நிமிடங்களில் உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருந்தும் அதை நாம் உறுதி படுத்துவதில்லை.” “விஞ்ஞான வளர்ச்சியை நாம் வதந்திகளைப் பரப்ப உபயோகித்துக் கொள்கிறோமோ என்ற அச்சத்தை விட இதை பயங்கரவாதிகள் உபயோகித்துவிடக் கூடாது என்ற அச்சமே முன் நிற்கிறது. ஏனெனில், ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தால் சில நூறு உயிர்களை பலி வாங்க முடியும் என்றால் வதந்தியால் பல கோடி உயிர்களை திட்டமிட்டு அழிக்கும் அபாயம் ஒளிந்து இருக்கிறது.” “ஒரு வதந்தி பரவ அதில் நம் பங்களிப்பும் இருக்கிறது.ஆகவே ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தி கொண்டு தான் பதிவிடுவோம் என்றும், நம்பகத்தன்மை இல்லாத செய்திகளை புறக்கணிப்போம் என்றும் உறுதிமொழி எடுப்போம்.மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று குறிப்பிட்டிருக்கின்றார். எனவே சமூக வலைத்தளங்களில் ஒரு தகவலை மற்றவர்களுக்கு பகிர்வதற்கு முன்னர் அந்தத் தகவல் உண்மையானதா என்பதை சோதித்த பின்னர் பகிர்வது நமது கடமையாகும். இதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாமே! சிந்தித்துப் பாருங்கள்! - பீனிக்ஸ்தாசன்

Monday 11 November 2013

மணிவண்ணனுக்கு......

தோழர் மணிவண்ணனுக்கு நினைவஞ்சலி..........

"அலைகள் ஓய்வதில்லை" எழுதிய கலையலையே.. 

  எங்களுக்குள் ஓயாது உன் நினைவலைகள் ...

 "100வது நாளும்,24மணி நேரமும்" தராத திகில்
  
  நீ மறைந்த போது எங்களுக்கு... 
  
 முன் நின்று யார் யாருக்கெல்லாம் போராடினாயோ 
 
 அவர்களுக்கு "இனி ஒரு சுதந்திரம்" கேள்வியாய்... 
 
 சுற்றும் வாழ்க்கை சக்கரத்தில் இப்போது நீ இல்லை 
 
 ஆனால் உன் நினைவுக்கு ஏது எல்லை ..
 
 எல்லா காலமும் "இளமை காலங்களாக" வாழ்ந்தவனே...
  
 "அமைதிப்படை அல்வாவை "நீ எமனுக்கு ஏன் தரவில்லை? 

  நல்ல கலைஞராக, நல்ல தோழராக, நல்ல போராளியாக,

  நல்ல மனிதராக உன்னை பற்றிய மதிப்பு பல நெஞ்சங்களில் 

  கோபுரமாய் உயர்ந்து நிற்கிறது ..

   அந்த "கோபுரங்கள் சாய்வதில்லை"....

          "கண்ணீர் அஞ்சலிகள்"........

வறட்சி......

ஒரு விவசாயியின் குமுறல்.......

 காத்தில்ல மழயில்ல கால் வவுத்து கஞ்சியில்ல
 வடக்கால அடிச்ச மழ தெக்கால அடிக்கவில்ல 
 வடக்கு நனஞ்சுடுச்சு தெக்கு காஞ்சிடிச்சு...

 ஆத்துல தண்ணியில்ல அள்ளி திங்க அங்க மண்ணுமில்ல 
 பசிச்ச வவுத்துக்கு பசி மறந்து போச்சு
 மழத்தண்ணி நெலம் பாத்து பல வருசம் ஆச்சு....

வெலவாசி அது ஏறி விண்ணுக்கு போச்சு
வெசம் வாங்க வழியில்ல வெசனமா போச்சு
குடிக்கிற தண்ணிக்கும் வெல வச்சாச்சு
வெவசாயி பொழப்புக்கு உல வெச்சாச்சு.....

 நாங்க ஊரு திங்க உழச்ச கூட்டம் இன்னக்கி 
 ஒரு வா சோத்துக்கு திண்டாட்டம் ....
 ஆட்சியில இருப்பவங்க யார நாங்க குத்தம் சொல்ல 
 ஆரு வந்து ஆண்டாலும் எங்க வாழ்க்கையில உச்சமில்ல... 

 சாமிய தேடி போன சனம் சாமிகிட்டயே போன மாதிரி ........
 ஆண்டவனே கும்பிடுறோம்........

அள்ளிகிட்டு போயிடய்யா....

வாலிக்கு.....

நீ ஸ்ரீரங்கத்து தேவதை...
உன் சிறப்புக்கு ஓர் கவிதை...

எதுகை உன் பதாகை....
மோனை உன் சேனை...

சீர் பிழிந்து தமிழ்ச் சாறும் எடுப்பாய்... 
சினிமாவிற்கு அதை ஊ(மா)ற்றிக் கொடுப்பாய்....

உனக்கு வயது ஏற ஏற வாலிபமும் ஏறியது....
உன் வார்த்தை வரிகளில் அது இளமையாய் மாறியது.

உன் பாடலில் துள்ளலும் இருக்கும்... சிறு இழையாய் 
எள்ளலும் இருக்கும்.... காமத்தின் விள்ளலும் இருக்கும்...

பல இசை ரதங்களுக்கு நீயே சாரதியானாய்... 
திரை இசைக்கென பிறந்த பாரதியானாய்..

உன் தத்துவப் பாட்டில் காதலும் வரும்...
 உன் காதல் பாட்டில் சில தத்துவமும் வரும்...

பாமரனுக்கும் பாட்டெழுதிய பாமரமே... 
தமிழ் உள்ளங்களில் வியாபித்து இருக்கும் பராபரமே...

நீ நேர் நேர் தேமா என்றால் தமிழரங்கம் குலுங்கும்...
பார் பார் பாமா என்றால் திரையரங்கம் அதிரும்..

பெரிய தத்துவங்களை வார்த்தையில் சுருக்கினாய்..
உன் கவிப் புலமையால் தமிழ் பெருக்கினாய்..

தமிழுக்கு எதிரே நின்று அதன் பலத்தை நீ பெற்றுக் கொண்டாய்... 
ஏனெனில் நீ வாலியல்லவா...

உன் வார்த்தைகளோடு நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..... 
நீ இன்றும் வாழ்வாய் , என்றும் வாழ்வாய்...

வாலி நீ வாழி....

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா....


கவிஞர் வாலிக்கு..! அவரது பாணியில் என் வாழ்த்து...

நீ ஸ்ரீரங்கத்து தேவதை...
உன் சிறப்புக்கு ஓர் கவிதை...

எதுகை உன் பதாகை....
மோனை உன் சேனை...

நீ சீர் பிழிந்து தமிழ்ச் சாறையும் எடுப்பாய்... 
சினிமாவிற்கு அதை ஊ(மா)ற்றியும் கொடுப்பாய்....

உனக்கு வயது ஏற ஏற வாலிபமும் ஏறியது....
உன் வார்த்தை வரிகளில் அது இளமையாய் மாறியது.

உன் பாடலில் துள்ளலும் இருக்கும்... சிறு இழையாய் 
எள்ளலும் இருக்கும்.... காமத்தின் விள்ளலும் இருக்கும்...

பல இசை ரதங்களுக்கு நீயே சாரதியானாய்... 
திரை இசைக்கென பிறந்த பாரதியானாய்..

உன் தத்துவப் பாட்டில் காதலும் வரும்...
உன் காதல் பாட்டில் சில தத்துவமும் வரும்...

பாமரனுக்கும் பாட்டெழுதிய பாமரமே... 
வெண்தாடியில் வீசினாய் சாமரமே....

தமிழ்ப் பூத்துக் குலுங்கும் பூமரமே...
ரசிக உள்ளங்களில் வியாபித்து இருக்கும் பராபரமே...

நீ நேர் நேர் தேமா என்றால் தமிழரங்கம் குலுங்கும்...
பார் பார் பாமா என்றால் திரையரங்கம் அதிரும்..

பெரிய தத்துவங்களை வார்த்தையில் சுருக்கினாய்..
உன் கவிப் புலமையால் தமிழ் பெருக்கினாய்..

தமிழுக்கு எதிரே நின்று அதன் பலத்தை நீ பெற்றுக் கொண்டாய்... 
ஏனெனில் நீ வாலியல்லவா...

உன் வார்த்தைகளோடு நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..... 
நீ இன்றும் வாழ்வாய் , என்றும் வாழ்வாய்...

வாலி நீ வாழி....


இளையராஜாவுக்கு....

இளையராஜாவுக்கு ஒரு வாழ்த்து .....

தமிழகத்தில் அமைச்சர்கள் அம்மா பாடல்கள் பாடுவதற்கு
 முன்பே அம்மா பாடல்கள் பாடியவன் நீ... 
அவர்கள் பாடலில் அரசியல் இருந்தது..ஆனால் 
உன் பாடலில் தான் அன்பு தெரிந்தது.....

 எங்களது ஊர் பயணங்களில் உனது பாடல்கள் இல்லாத 
பயணங்கள் இது வரை இல்லை.. அப்படி இருந்தால்
 அது பயணமே இல்லை....பாவலரின் அன்புத்தம்பியே.. 
பாக்கள் பாடி வரும் இசைத்து ம்பியே.. 

சரஸ்வதி அருளின் மொத்த குத்தகைகாரனே.. பண்ணைபுரமே
 கலைவாணி இல்லத்து கொல்லைபுறம் என்றால் அதில் மிகையேது...
 நான் படித்து இருக்கிறேன்..அன்று வைகை அணை கட்டும் போது
 அங்கு நீ ஒருதொழிலாளி...இன்று இசை ஆற்றுக்கே நீ முதலாளி....

.காதலித்த அனைவரையும் கேட்டுப்பார்த்தால் அந்த காதலுக்குள்
 உன் பாட்டு ஒன்றாவது இருக்கும்... இல்லையெனில்
 அந்த காதல் எப்படி பிழைக்கும்.?ஜனனி..ஜனனி என்று நீ பாடிய
 போது மூகாம்பிகை உனக்கு தாயானாள்...அதை கேட்ட நாங்கள்
 உனக்கு வாலாட்டும் நாயானோம்..

பாடல்கள் பல இசைத்தாய்...தமிழர்களுக்கு நீயே இசை தாய்...
 ஒரு ஆர்மோனியத்தின் விசையாகவோ,வீணையின் தந்தியாகவோ,
குழலின் துளையாகவோ பிறக்கவில்லையே என இப்போது வருந்துகிறேன்.. 
உனது விரல் படும் என்றால் மறு பிறவியில் இதில் ஒன்றாக பிறக்க விழைகிறேன்...
 இசைக்கு நீ செய்வதே தொண்டு... நீ வாழ வேண்டும் நூறாண்டு...


வாழ்த்து-2

இது இசைக்கு ஒரு நாள்...ராகத்தின் திரு நாள்.
. இசை பிறந்த தேதி இது...இதை மறந்தால் நீதி ஏது?
 ஸ்வரங்கள் புதைந்து இருக்கும் ஆர்மோனிய கட்டை..
அதை ஆட்சி செய்தது ஒரு வேட்டி சட்டை..
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்
...ஆனால் திரு வாசகமே உருகியது உன்னால்...
.சிம்பொனியையும் அடக்கியது உன் தொனி...
ஏனெனில் நீ சங்கீத கேணி...
உம் பிழை கூட சங்கீத மழை...
ஆண்டாள் சூடிய மாலை கிருஷ்ண தேவனுக்கு.. 
நீ சூடிய மாலை ராக தேவனுக்கு.
சூடி கொடுத்த சுடர் கொடி போல் நீபாடி கொடுத்த
 சுடர் கொடி...இசையே உனது ராஜாங்கம்..
இதை மறுப்பவர் பழைய பஞ்சாங்கம்...
இசை ஒரு மதம் என்றால் நீயே அதன் கடவுள் என்பேன்..
இதை மறுத்து எவரும் பதில் சொன்னால் அவருக்கு நான் எமன் என்பேன்...


கவிஞர் வாலி அவர்களது பாணியில் இசை ஞானி 

இளையராஜாவுக்கு என் வாழ்த்து...!


ஸ்வரங்கள் புதைந்து இருக்கும் ஆர்மோனிய கட்டை..

அதை ஆட்சி செய்தது ஒரு வேட்டி சட்டை..!

தலையில் நீ மயிர் வளர்த்ததில்லை ஆனால் - 

இசையென்னும் பயிர் வளர்த்தாய்.! ஏனெனில் 

இசை உனக்கு தாய்.! அதைத்தான் நீ இசைத்தாய்.!

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் 

ஆனால் திரு வாசகமே உருகியது உன்னால்.!

நீ பாட்டுக்கள் ஊற்றெடுக்கும் கேணி..! 

ஸ்வர வேள்விகள் பல கண்ட இசை ஞானி.! 

எனவேதான் சிம்பொனி கடலிலும் ஏறியது உன் தோணி.!

உம் பிழை கூட சங்கீத மழை..! 

ஆண்டாள் சூடிய மாலை கிருஷ்ண தேவனுக்கு.! 

நீ சூடித் தந்த மாலை தான் ராக தேவனுக்கு.!

சூடி கொடுத்த சுடர் கொடி போல் நீபாடி கொடுத்த சுடர் கொடி.! 

இசையே உனது ராஜாங்கம் இதை மறுப்பவர் பழைய பஞ்சாங்கம்.!

இசை ஒரு மதம் என்றால் நீயே அதன் கடவுள் என்பேன்..!

இதை மறுத்து எவரும் பதில் சொன்னால் அவருக்கு நான் எமன் என்பேன்...!!

வெங்கடேஷ் ஆறுமுகம்...


வெங்கியின் புலம்பல்கள்.....

1. எதெல்லாம் சொன்னால் வெட்கப்படுவாயோ 
   அதெல்லாம் சொல்ல ஆசை... 
   நீ வெட்கப்படும் அழகுக்காக ....

2. எனக்கான அரிசியிலும் உன் 
    பெயரே எழுதப்பட்டிருக்கும் ...

3. உன் நகப்பூச்சு கூட பெருமூச்சு 
    தந்து விடுகிறது எனக்கு..

4. சாபமிடுகிறவர்களை கெஞ்சி கேட்கிறேன்... 
   அவள் அறை கண்ணாடியாய் மாற 
    என்னை சபித்துவிடுங்கள்..

5. பெருமை என் முகத்தில் தெரிந்தால்
    உன் பெயர் உச்சரிக்கப்படுகிறது என அர்த்தம் ....

6. கோபித்து கொள்ளும் போது கோபமா?
    என்று கேட்பாய் கோபம் போன இடம் தெரியாது....

7. ஞானப்பழம் என்பது நீ கடித்து தருவதே...

8. உன்னிடம் தோற்று போவதற்காகவே 
    சீட்டு விளையாடுகிறேன்... சூதாட்டம் ....

9. நடைபிணம் என்பதற்கு அர்த்தம் நீ 
    விடுமுறைக்கு ஊர் சென்றபோது தெரிந்தது....

10. ஓடும் பேருந்தில் நெருக்கத்தில் நீ 
      இருந்தாய் கிறக்கத்தில் நான் இருந்தேன் ...

11. நீ நாவல் பழம் சாப்பிட்ட அழகு ஊரில் 
      எல்லோர் மனதிலும் படிந்தது....
      Bluetooth .....

12. நான் பார்க்காத போது நீ பார்த்ததை..
      நான் எப்போது பார்ப்பது......

13. உன் மோதிரத்தில் கல் இருந்தாலும் 
     கடிகாரத்தில் முள் இருந்தாலும் 
      உறுத்துகிறது எனக்கு ...

14. ஆற்றங்கரையில் நாகரிகங்கள் பிறந்தது.. 
      எனக்கென்னவோ உன் அருகில் தான்...

15. மாமரத்தை பார்த்துவிட்டு என்னை பார்த்தாய்....
     அத்தனை மாங்காயும் பறித்து தந்துவிட்டேன்...
      ஒரே கண்ணில் எத்தனை மாங்காய் !!!!

17. சில நேரங்களில் எனக்கான உத்தரவு 
      உன் பார்வையிலேயே கிடைத்துவிடுகிறது....

18. ப்ளீஸ்...... என நீ கெஞ்சுவதும் 
      கொஞ்சுவது போல் தான் இருக்கிறது ....

19. பிளேடினால் பென்சில் சீவுகிறாய்... 
      நான் திகில் படம் பார்த்து கொண்டிருக்கிறேகன்...

20. உன் எரிக்கும் பார்வையில் 
      அணைந்து விடுகிறது என் சிகரெட்.....

21. உன் விரல் கடிக்கும் குழந்தைகள் 
     இனிப்பை விரும்புவதில்லை...

22. உன் மயிர் கற்றையை இழுத்து விளையாடுகிறது 
      குழந்தை... ரசித்தேன் மழலையும்,குழலையும்

23. நீ சைக்கிள் ஓட்ட பழகினாய் 
     தெருவுக்குள் வசந்தம் வீசியது...

24. சந்திரன் பகலில் வருவதில்லை என்பதை 
       உனைக்காணும் வரை நம்பிக்கொண்டிருந்தேன்..

25. உன் தலையில் இருந்து உதிரும் பூக்களெல்லாம் 
      தற்கொலை செய்து கொள்கின்றன...

26. நீ ஊதுவதாக இருந்தால் ஒவ்வொரு 
      நொடியும் என் கண்ணில் தூசி விழவேண்டும்....

27. சதுரங்கம் ஆடும்போது நீ யோசிக்கும் அழகு 
      என் எல்லா காய்களையும் வீழ்த்தி விடுகிறது ...

28. இராமருக்கு ... குல்லா...
      பாபருக்கு......... நாமம்...
      அயோத்தி......

29. சந்தோஷப்படுத்திய முகம் சலிப்பாகிவிடுகிறது......
      திருமணத்தில்.....

30. என்ன,ஏன்,எப்படி,எதுக்கு, எங்கே,எப்போ.... 
      இத்தனையையும் கண்ணால் கேட்டிட 
      உன்னால் தான் முடியும்...

31. உன்னை கண்டுபிடித்தேன் 
      என்னை தொலைத்துவிட்டேன்...

32. பனித்துளி அமர்ந்த ரோஜா நினைவுக்கு வருகிறது.... 
       உன் மேலுதட்டின் மேல் வியர்வைத்துளி...

33. உன்னைப்பற்றி தோன்றிய தெல்லாம் எழுதி விட்டாலும் 
      புதிதாக தோன்றிக்ககொண்டே இருக்கிறது ....

34. அனேகமாக உன் தெருவில் குடியிருக்கும் 
      அனைவரையும் நீ கவிஞர்களாக மாற்றி விட்டாய்...

35. என் உயிர் வரை இனிக்க 
      உன் ஒரு முத்தம் போதும்..

36. செல்லச்சண்டையிலும் உன்னை வெல்ல 
      துணிச்சலில்லை.. கொல்ல நினைத்திடுவேன் 
      மெல்ல நீ அழுதால்...

37.நீ இளநீர் குடிப்பதை பார்த்தேன்.. இனி நீ 
     இளநீர் குடிப்பதை மட்டுமே பார்ப்பேன்...

38. கோவிலுக்குள் நீ வரும் போது இறைவன் 
      எனக்கு இரண்டாம் பட்சம் ஆகிறான்....

39. எனக்குள் குவிந்து கிடக்கிறது...
       நீ வீசி சென்ற பார்வைகள்....

40. உன் பார்வையில் பொருள் இருக்கிறதா தெரியவில்லை 
      ஆனால் எனக்கான அருள் இருக்கிறது ...

41. உன் பற்களுக்கிடையே அரைபடும் போது 
      மிக மிக மகிழ்ந்திருக்கும்.... கரும்பு

42. ரசனையான வாழ்க்கை வேண்டும்... 
     அதை ரசித்து வாழ நீ தான் வேண்டும் ..

43. கண்களை கட்டிக்கொண்டு நீ கண்ணாமூச்சி
      ஆடுகையில் பட்டாம்பூச்சி பறப்பதைப் போல் உள்ளது...

44. நீ முகம் துடைத்து கொள்ளும் கைக்குட்டை 
      மீது பொறாமை வருகிறது ..

45. நீ உதடு சுழிக்கையில் மச்சம் நகர்கிறது.. 
      என் உயிர் மலர்கிறது ....

46. எனக்கு நீ தாயாவாய் என்றால்..
      உனக்கு நான் நாயாவேன்...

47. கேள்விக்குறி போன்ற உன் காது மடல்களுக்கு 
        நான் என்ன பதில் சொல்வது...

48. நீ பூ பறிக்கையில் பறித்த மலர் உயிர் பெற்றது..
      மற்றவை செடியிலேயே மூர்ச்சையுற்றது...

49. உன்னை வரவேற்கும் அலங்கார வளைவு..... 
       நீ வந்த போது வானில் வானவில்...

50.என் ஆசை.. உன்னோடு நான்....
     பெரு மழையில்... ஒரு குடையில்....

51. நிலா பார்த்து வெகு நாட்கள் ஆகிறது... 
     எனக்கு தான் நீ இருக்கிறாயே...

52. மலர்கள் சிரிக்கும் என்பதை நீ 
      புன்னகைக்கும் போதுதான் நம்பினேன்....

53. அழகாய் நீ போட்ட கோலத்தை மழை வந்து 
     அழித்தபோது மழையை வெறுத்தேன்...
     அடுத்த நிமிடம் அதை மறந்து மழையில் நீ 
     நனைந்த போது மழையை ரசித்தேன் ...

54. அம்புலிமாமா கதைகளில் வருவது போல் 
      என் உயிர் உனக்குள் இருக்கிறது ...

55. கொள்ளை அழகோடு ஒரு குழந்தையை தூக்கி வந்தாய்.. 
       நான் எந்த குழந்தையை ரசிப்பது!!!

56. உன் படுக்கையறையில் நீ தூங்குவது உனது கட்டில்.. 
      என்னை பொறுத்தவரை அது தொட்டில்......

57. வாயருகே எதை கொண்டு சென்றாலும் வாய் திறக்கும் 
      குழந்தையைப்போல் உன்னைப் பற்றி எது சொன்னாலும் 
      என் உள்ளம் திறக்கிறது.....

58. உன் மெளனத்தின் சப்தங்களை 
     என் செவி மட்டுமே அறியும் ...

59. நீ இமைக்க மறந்தபோதெல்லாம் 
      என் இதயம் நின்று ஓடுகிறது ...

60. நீ ஊசியில் நூல் கோர்த்த போதே 
      என்னை தைத்து விட்டாய்....
.
61. வியக்க வைக்கிறாய்...  
      உன் புருவங்களால் பேசி...

62. உன் முகம் கண்டுதான் 
      என் பொழுது விடிகிறது..

63. நீ பாவாடை தாவணி உடுத்தியதும் அது 
      தேவதைகளுக்கான ஆடையானது...

64. எதெல்லாம் சொன்னால் வெட்கப்படுவாயோ 
     அதெல்லாம் சொல்ல ஆசை... 
      நீ வெட்கப்படும் அழகுக்காக ....

65.பெருமை என் முகத்தில் தெரிந்தால் உன் பெயர்  
      உச்சரிக்கப்படுகிறது என  அர்த்தம்.


உலகின் மிக சிறந்த இனிப்பினை முதலில் யார் 
ருசிப்பது இது தான் அந்த போட்டி..! விமானம் 
ஏறி பறந்தார் ஒருவர்..! ராக்கெட் ஏறி விரைந்தார் 
ஒருவர்..! அவரவர் வசதிக்கேற்ப வேகமான வாகனங்களில் 
விரைந்தனர் பலர்...! நான் மட்டும் உன் இதழை 
சுவைத்து தட்டி சென்றேன் பரிசினை...!



நீ வந்து பார்க்கும் போது பரிசாக தருவதற்கு கொட்டும் 
அருவியை மலை முகட்டில் நிறுத்தி வைத்து பூட்டி சாவி செய்தேன்.. 
மொட்டு மலராதிருக்க ஒரு சாவி, மழலை பேசாதிருக்க ஒரு சாவி, 
தென்றல் வீசாதிருக்க ஒரு சாவி, வான்மதி வளராதிருக்க ஒரு சாவி, 
வானவில் வளையாதிருக்க ஒரு சாவி... இயற்கை படைத்த அனைத்திற்கும்
சாவிகள் செய்து உன்னிடம் கொடுப்பதற்கு ஓடோடி வந்து காத்திருக்கிறேன்..
இதோ என்னிடம் வந்து நின்று எங்கே என் பரிசு என காதலுடன் 
கேட்கிறாய்.! உன்னை பார்க்கும் ஆவலில் விரைந்து வந்த நான் சாவிகளை 
எங்கோ தவற விட்டுவிட்டேன்..ஒரு கணம் தயங்கி பிறகு... 
உன் பேர் சொன்னேன்... எல்லாம் திறந்து கொண்டன....


நீ என்னவனான பின் பூட்டிய அறைக்குள் நம் அந்தரங்கங்கள்..
அரங்கேறியது..! பின்னிப் பிணைந்த சர்ப்பங்களாய் முகிழ்ந்த 
போதும் ஆரத்தழுவி ஆயிரம் முத்தங்கள் இட்ட போதும் எனக்கு 
திருப்தி இல்லை...! காதலிக்கும் போது தெருமுனை இருட்டில் 
அரைவினாடி தந்த முத்தத்தை போல்....


என் மார்பில் மெல்ல உன் தலையை சாய்த்து..
புரண்டு விழுகிற கூந்தலை புறந்தள்ளி 
விரல் நுனிகளால் உன் காது மடல் வருடி உன்
பேச்சுக்கு செவி சாய்த்து, உன் சோகங்களை..
பகிர்ந்து, உன் காயங்களுக்கு மயிலிறகு சொற்களால்
மருந்திடும் சுகம் ஆயிரம் கலவியிலும் காணாத இன்பம்...
 
இனிப்பு துணுக்குகள் வாயோரம் ஒட்டியிருக்க..
நான் சாப்பிடவே இல்லை என அடம் பிடிக்கும்..
குழந்தையை போல் நீ உன்னை...
வெளிபடுத்துகிறாய் சில் நேரங்களில் ...


இரு கரங்களால்   உன் தலையில் நீயே 
பூச்சூடிக் கொள்கையில் உன் இதழ்களில் 
கவ்வி பிடித்திருக்கும் கொண்டை ஊசியாய் 
நான் மாறிவிட ஆசை..



தீனா கொரலு

திடீர் குப்பம் தீனா...

இவரு குப்பத்து ராஜா...அநியாயத்துக்கு குரல் கொடுப்பார் (இதில் சிலேடை ஒளிந்து இருக்கிறது) மக்களுக்கு எதுனா செய்யணும்ன்னு ஆசை.... பஸ்ல எழுதியிருக்குறத பாத்தும்... காலைல டிவியில் பாப்யா பேசறதை ( சாலமன் பாப்பையா ) கேட்டும் திருக்குறள் மேல ஆசை வந்துருச்சு.... ரொம்ப நாளா இவரு அத எழுதினதே பாப்யா தான் நினைச்சுகிட்டு இருந்தாரு... திருவள்ளுவர்ன்னு தெரிஞ்சதும் இப்ப வெள்ளிக்கிழமை தோறும் வள்ளுவர் கோட்டம் போக ஆரம்பிச்சிட்டாரு...( அது கோயிலாம் ) படிக்காத பாமர ஜனத்துக்கு இவர் அப்ப அப்ப தினம் ஒரு திருக்குறள் சொல்ல முடிவெடுத்து இன்னைல இருந்து செயல் படுத்த ஆரம்பிச்சுட்டாரு.. சென்னைத் தமிழில் இவரின் குறள் சேவை ஆரம்பம்... தினமும் வரமாட்டாரு அப்ப அப்ப தான் வருவாரு இனி....

                                    தெனம் ஒரு "தீனா கொரலு"....

வண்க்கம்பா... இன்னைக்கு இன்னா கர்த்துன்னா.... ஒருத்தரு உனக்கு இன்னா டார்ச்சர் இஸ்துவுட்டாலும் சொம்மா பேஜார் பண்ணிக்கினே இர்ந்தாலும்... நம்க்கு ஒருதபா இஸ்சான்ஸ் கெட்ச்சா அல்லாத்தையும் மன்சுல வெச்சுக்காம ... வுடு வாத்யாரே நான் அல்லாத்தையும் மர்ந்துட்டேன்.....இப்ப உன்க்கு இன்னா எல்ப் வோணும் சொல்லு... நான் செய்றன்பான்னு சொல்லி அப்டியே தோள்ல கைப் போட்டேன்னு வையி.. அந்தாளு அப்டியே மெர்சலாயிடுவான்... சோக்கா சொல்லிருக்குபா நம்ம  "தல" ( திருவள்ளுவரை தான் "தல" என்பார் தீனா)


இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.


தீனா "கொரலு"....

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

துட்டு வச்சினிர்க்கறவங்கோ பொறத்தியார்க்கு ஒதவி செய்வாங்கோ.... இல்ல நான் கேக்கறன்....அவன் ஒண்டி தான்  இல்லாத்தவங்களுக்கு ஒத்வி செய்பானா? துட்டு ஏதும் இல்லாத உனுக்கும் அந்த பேரு வரும் எப்டின்னு கேக்றியா? 

நல்ல சிர்ச்ச மூஞ்சோட நல்ல மன்சோட கேக்குற மன்சன் குஷியாவுற மேறி நாலு நல்ல வார்த்த பேஸ்ற பாரு அப்ப நீ தான்பா பண்க்காரன்.... நீ அப்டி பேஸ்றது எப்டியாப்பட்டது தெர்யுமா ! மன்சு நெர்யா சந்தோஸ்த்தோட வள்ளலுங்கோ அள்ளிஅள்ளி கொடுப்பாங்க பாரு... 

அத்த விட நீ பேஸ்ற நாலு நல்ல வார்த்த தான் பெர்சாம்... சுர்க்கமா பிரியற மேறி சொன்னா.. 

நல்லா அள்ளி தர்றவன வுட நல்லதா 

சொல்லினு இர்க்கவன் தான் வள்ளலு... 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"....


அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து

இன்சொலன் ஆகப்பெறின்.

Sunday 10 November 2013

பலகார அரசியல்........

தலைவர்களின் தீபாவளி பலகாரங்கள்...

கேப்டன் : குலோப்ஜாமூன்... எப்போதும் "திரவத்தில்" மிதக்கும் என்பதால் இது இவருக்கு ரொம்பப் பிடிக்கும்...உருண்டை வடிவமானது வேறு இடங்களுக்கு உருண்டோடி விடமால் ஜாக்கிரதையாக சாப்பிட வேண்டும்....

ராகுல் : கை" முறுக்கு...  மொறு மொறுப்பாக இருக்கும் போதே சாப்பிடாமல் பெரிசுகளிடம் கொடுத்து விட்டு நமுத்து போனபின் சாப்பிடுவது இவருக்கு பிடிக்கும்...

மோடி : ஜாங்கிரி.... காவி கலர் இனிப்பு என்பதால் இவருக்கு இஷ்டம்..... நிறைய சுத்தல் உள்ள ஸ்வீட் என்பது இவர் இந்தியா முழுவதும் சுற்றுவதை குறிக்கும்... பெரியவர் ஒருவர் சாப்பிட வேண்டியதை தட்டிப்பறித்து சாப்பிடுவார்....

நாராயணசாமி : அல்வா.... இது இவர் மட்டும் சாப்பிட்டாமல் எல்லோருக்கும் கொடுப்பார்... வாயில் போட்டால் வழுக்கி செல்லாமல் ரப்பராக இழுக்கும் பதத்தில் இருப்பதே இவருக்கு பிடிக்கும்.... 15 கிராம் துண்டுகளாக இருப்பின் கொள்ளை இஷ்டம்......

லல்லு : பால் கோவா.... பாலில் செய்ததால் மிகப்பிடிக்கும்......மாட்டில் பாலாக கறக்காமல்  பால் கோவாவாக கறக்க ஆசைப்பட்டு உள்ளே இருக்கிறார்.. பால் கோவா பிடித்தாலும் இந்த தீபாவளிக்கு பால் களி தான்.....

சுப்பிரமணிய சாமி : சீடை...... கரகரப்பாக வாயிலும் கரையும் கடக் முடக் என பல்லையும் உடைக்கும்.... கணிக்க முடியாத பலகாரம்.....சில வேளைகளில் வெடிக்கவும் செய்யும்...

சோனியா : பீட்ஸா.... இந்திய உணவு ஒத்துக் கொள்ளாது.... பார்லிமெண்ட் வடிவில் வட்டமாக இருக்கும் பீட்ஸா தான் பிடிக்கும்... கட்சி காரர்கள் துண்டு போட்டு சாப்பிடுவார்கள்.... சில நேரம் இவரே துண்டாக்குவார்...

மம்தா : காராசேவு.....  தீதிக்கு பிடித்தது அதிகாரமும் அதிக காரமும்..... காரா சேவை காரச்சட்னியோடு சாப்பிடுவார்... மொறு மொறுப்பாக இருந்தால் தான் பிடிக்கும்... "மாவோ"டு இருந்தா அவ்வளவு தான் ருத்ர தாண்டவம் ஆடிடுவார்....

கலைஞர் : லட்டு..... ஆளுக்கு ஏற்றார் போல பிடித்து தருவார்... சிலதில் முந்திரி அதிகம் இருக்கும்.... சிலதில் இருக்காது... ஆனால் முந்திரி உள்ள லட்டு குடும்பத்தினருக்கே இது வரை கிடைத்துள்ளது.... இதில் எதுவும் பிரச்சனை வந்தால் லட்டை பூந்தியாக்கி அவரே சாப்பிட்டுவிடுவார்.....

ஜெயலலிதா : கொழுக்கட்டை..... உள்ளே என்ன வைத்திருக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.... இனிப்பு பூரணமும் இருக்கும்... கசப்பு அஜீரணமும் இருக்கும்...எந்த மாவிலும் அவர் பிடிப்பதே கொழுக்கட்டை....

வை.கோ. : ஜிலேபி...... "புளி"ப்பு சுவையுள்ளதால் மிக மிக பிடிக்கும்.... சுற்று உள்ள இனிப்பு என்பதாலும் சுற்றிவருபவரின் மனங்கவர்ந்த இனிப்பு... இதுவும் காவி நிறம் தானே என்றால் இல்லை அது நம் தேசிய கொடியின் நிறம் என்பார்....

ராமதாஸ் : மைசூர் பா..... மாம்பழ மஞ்சள் நிறத்தில் இருப்பத்தால் இது இவருக்கு பிடிக்கும்.... சாஃப்ட்டான பதத்தில் சாப்பிட நினைத்தாலும் கடினமான பதத்தில் தான் கிடைக்கிறது.... நல்ல ஜாதிக்கடலையை அரைத்து மாவாக்கினால் அது கிடைக்கும் என நம்புகிறார்...

தா.பாண்டியன் : அதிரசம்..... நல்ல சிவந்த நிறத்தில் இருப்பதால் மிகவும் பிடிக்கும்.... பக்குவமாக இடிக்காவிட்டால் உதிரும் பலகாரம் இது... ஆகவே யார் இடித்தாலும் பெண்களே அடித்தாலும் கலங்க மாட்டார்,,, அவருக்கு உதிராது ஒண்ணு கிடைச்சாலும் போதும்....

திருமா : சமோசா.... உள்ள இருக்குற கிழங்க வச்சு தான் இதுக்கு மதிப்பே... சில நேரம் கிழங்கு கெட்டாலும் இதுக்கும் கெட்டபேருதான்... இருந்தாலும் இவருக்கு இது பிடிச்சு போச்சு... எப்படி வேணா மடிக்கலாம் ஆனா பாக்கறதுக்கு வெறைப்பா நிக்குறா மாதிரியே தெரியும்....

ப.சிதம்பரம் : பாதாம் அல்வா...... ரொம்ப காஸ்ட்லி..... ஏழைங்க வாங்க முடியாது.... நாளுக்கு நாளு விலை ஏறிகிட்டே இருக்கும்... எல்லா கடையிலும் நிறைய இல்லாம கம்மியா பற்றாக்குறையிலதான் இருக்கும்... அதனால் தான் இவருக்கு இது பிடிக்கும்..

சரத்,பரிதி,&நாஞ்சில்: என்ன கொடுத்தாலும் பிடிக்கும்...ஆனா ஏதாவது கொடுக்கணும். கேசரின்னு சொல்லி காராபூந்தி கொடுத்தா கூட அது இனிக்குதுன்னு சத்தியம் பண்ணுவாங்க...இன்னோவால போகும் போது கொறிக்க ஏதாவது கொடுத்தாலே போதும்...

மன்மோகன் : மிக்சர்..... இதுக்கு பெருசா விளக்கம் வேணுமா என்ன!!!!!!

அரசியல் வெடி.....

தலைவர்களின் தீபாவளி வெடிகள்...... 

ப.சிதம்பரம் :  லக்ஷ்மி வெடி.... வெடிச்சா நிறைய காகிதம் பறக்கும்... எந்த காகிதத்துக்கும் மதிப்பு இருக்காது... வெடிச்சா வரி வரியா புகை வரும்.... இவரோட வெடி மக்களுக்கு இடி .... புஸ்சுன்னு போனாலும் படார்ன்னு வெடிச்சாலும் இவர் "உன்னிப்பாக" கவனித்து வருவார்......

வை.கோ : சங்கு சக்கரம்..... ஒரு இடத்துல நிக்காம சுத்திகிட்டே இருக்கும்.... பாக்க பம்பரம் மாதிரி இருக்கறதால இவருக்கு இது ரொம்ப பிடிக்கும்....ஆனா சுத்தி முடிச்சு எங்க போயி நிக்கும்ன்னு இப்பவே சொல்ல முடியாது.....

கலைஞர் : ஃபேமிலி பேக் வெடி..... எல்லா வெடியும் கலந்து இருக்கும்.....வீட்ல இருக்குறவங்களுக்கு வெடியை பிரிச்சு கொடுக்கும் போது வெடி வெடிக்காது...அதுக்கு பதிலா பிரச்சனை வெடிக்கும்... யாருக்கு எந்த வெடி கொடுக்குறதுன்னு தெரியாம கடைசியில் எல்லாமே அவரே வெடிப்பார்.......

நாராயணசாமி : ஏரோப்ளேன் வெடி..... பாக்க பாக்கு மாதிரி சிறுசா இருந்தாலும் சவுண்ட் ரொம்ப இருக்கும்.... விசிலடிக்கும் வெடி இது.... ஆனா எப்ப பத்த வச்சாலும் ஒரே மாதிரி விசில் தான் வரும்.... 15 நாளைக்கு முன்னால் வாங்கி வைக்கிறது நல்லது.....

ஜெயலலிதா : அணுகுண்டு..... இவங்க எப்ப பத்த வைப்பாங்கன்னு இவங்களுக்கு தான் தெரியும்... வெடியை எப்பவும் யார் நாற்காலிக்கு கிழே தான் வைப்பாங்க... நிறைய பேரு கிழே விழுகிறது இவங்களுக்காகன்னாலும் கிழே ஏதாவது வெடி வைச்சு இருக்கான்னு பாக்கதான்... ராகு காலம் இல்லாம நல்ல நேரம் பாத்துதான் வெடிப்பாங்க....

தா.பாண்டியன் : சர வெடி.... இவருக்காக வெடி போட்டதை விட மத்தவங்களை பாராட்டி போடவே சரியா இருக்கும்...படபடபடன்னு சத்தம் மத்தவங்க கவனத்தை திருப்பும்... சிவப்பு கலர் வெடிய சிவப்பு கம்பளம் போல விரிச்சு வெடிக்கிறது நாளைக்கு இவருக்கும் கம்பளம் கிடைக்குங்குற எதிர்பார்ப்புல தான்.....

ராமதாஸ் : கம்பி மத்தாப்பு..... கூட்டணி இல்லாம வெடிக்க முடிவு எடுத்தாச்சு... ஆனாலும் பெரிய வெடி எதுவும் வெடிக்கப் போறது இல்லை இப்போதைக்கு ஜாக்கிரதையா இருக்க இதை தான் வெடிக்கணும்... இல்லாட்டி கம்பிலதான் மத்தாப்பு....

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் : பொம்மை வெடி..... எல்லாம் ஒரே மாதிரி தான் வெடிக்கும்.... ஆனா ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.....பத்த வைச்சா எல்லாமே புஸ்சுன்னு தான் வெடிக்கும்... மேலிடத்துல வச்சா கொஞ்சம் அடங்கி இருக்கும்...

திருமா : புஸ்வாணம்...... நல்லா பெருசா எழுந்து வந்து அப்பிடியே அமுங்கி விடும் வெடி..... எழுவதும் விழுவதும் சூரியனோட வேலை.....கூட இருக்கறதால அதுவே இவருக்கும் பழகிடுச்சு...பெண் படம் போட்ட புஸ்வாண டப்பா இவங்களுது இல்லையாம்....

மன்மோகன் : பாம்பு மாத்திரை.... சத்தம் அதிகம் இல்லாத வெடி இது.... யாராவது நிதானமா பத்த வச்சாதான் பத்தவே ஆரம்பிக்கும்.... என்னமோ பெருசா வருதேன்னு பார்த்தா... கடைசியில "கரி" தான் மிச்சம் இருக்கும்...ஆனா அந்த "கரி"க்கும் இதுக்கும் சம்மந்தமில்லயாம்......

சோனியா : சாட்டை..... இவர் "கை"யில தான் இது இருக்கும்.... ஆனா வெடி அதுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி தொங்கும்...ரெண்டு பக்கமும் எரியும் வெடி இது...ஆனா இவர் பக்கம் எரியாது மறுபக்கம் தான் எப்பவும் எரியும்......

ராகுல் : ஓலை வெடி... இது குடிசைங்க பக்கம் கிடைக்குற வெடி.... அதனாலேயே இவருக்கு இது பிடிக்கும்... கூழை குடுச்சுட்டு வந்து வெடிச்சா நல்லா இருக்கும்... குடிசை பக்கம் வெடிக்கிறது பாதுகாப்பானது இல்லை தான் இருந்தாலும் பாதுகாப்பை மீறுறது இவருக்கு ரொம்ப பிடிக்கும்.....

மோடி : ராக்கெட்..... உயரப் போகிற வெடி இன்னும் உயர கொண்டு போக போகுதுன்னு இப்ப நினைக்க வச்சாச்சு... ஆனா இது சாய்ஞ்சா சைடுலயும் பாயும்...மேல போயி கலர் கலரா மாறினாலும் அது கொஞ்ச நேரம் தான் மறுபடி கீழ தான் விழுகணும்... இருந்தாலும் வாண வேடிக்கை கலர் கலரா காட்டுற இந்த வெடி கொஞ்சம் பேரை கவர தான் செய்யுது.

கேப்டன் : ரோல் கேப் & துப்பாக்கி..... என்னதான் ரோல் கேப்பை துப்பாக்கியில் மாட்டி பட படன்னு சுட்டாலும் கேப்புல சில கேப் எஸ்கேப் ஆகிடும்....வேணாம்னு தூக்கி போட்டா வேற ஆல் அதை எடுத்துக்குவாங்க... இந்த பிரச்சனைக்கு தான் கேப்டன் டெல்லி போயி புது துப்பாக்கி வாங்கப் போறாராம்.....

சுப்பிரமணிய சாமி : வெங்காய வெடி...எப்பவும் திரி கிள்ளி போடறதால திரியே இல்லாத வெடி தான் இவர் சாய்ஸ்... பத்த வைக்க நெருப்பும் தேவையில்லை எடுத்து அடிச்சாலே அதிரடி தான்..சில சமயம் பலர் கண்ணுல இருந்தும் தண்ணி வரவைக்கும் வெடி...இவர் வெடி அதிரடி... பேச்சு காமெடி.......

உழைப்பாளிகளின் ஸ்டேட்டஸ்....


இவங்க ஸ்டேட்டஸ் போட்டால் இப்பிடித் தான் இருக்கும்....

போலீஸ் கார்: தினமும் "மாமூலா" நடக்குற விஷயம் தான்.. இருந்தாலும் பயந்து பயந்து செய்ய வேண்டியிருக்கு... feeling scared...

டாக்டர்: எங்க கையெழுத்து புரிஞ்சா உங்க தலையெழுத்து புரிஞ்சிடும்.... அவ்வ்வ்வ்....

வக்கீல்: சமையலறையில "கேஸ்" தீர்ந்திடும் சட்ட அறையில "கேஸ்" தீராது... யாரு கிட்ட.....

இன்ஜினியர்: நாங்க கட்டின வீடும் சரியில்லை.. வீட்டுல எங்களுக்கு கட்டினதும் சரியில்லை ...மிடில....

ஆட்டோக்காரர்: துணி வாங்குறப்ப மீட்டர் எவ்வளவுன்னு கவலைப்பட மாட்டீங்க... ஆட்டோவுல மட்டும் மீட்டர் எவ்வளவுன்னு பார்க்குறிங்க என்னா நியாயம் சார் இது..
feeling sad.....

டெய்லர் : டாக்டர் வெட்டி தைச்சா அது ஆபரேஷன்.. நாங்க வெட்டி தைச்சா அது பேஷன்....... எப்பூடி......

டீ மாஸ்டர் : ஃபேஸ்புக் யூஸரும் டீக்கடை மாஸ்டரும் ஒண்ணு... ஏன்னா நாங்க இரண்டு பேரும் தான் கழுவி கழுவி ஊத்துவோம்... ஹி..ஹி.ஹி

சமையல்காரர் : சமையலில் மணம் இருந்தா "மல்லி" காரணம்... பொணம் விழுந்தா"பல்லி" காரணம்....
Be carefull.. நான் என்னை சொன்னேன்.....

ஆசிரியர் : யார் எழுதுனாலும் நான் தான் மார்க் போடுவேன் ஆனா ஃபேஸ்புக்கில் எல்லோரையும் மார்க் தான் போட்டு தள்ளுறான்..... தாங்கலைடா சாமி.....

மிருகங்களின் ஃபேஸ்புக்.......

விலங்குகள் போட்டோவுக்கு ஃபேஸ்புக்கில் கமெண்ட்ஸ் போடலாமா!

பச்சோந்தி படத்துக்கு...
உன் ப்ரொஃபைல் பிக்சர் மட்டும் எப்படி அதுவா மாறுது!,,

கரடி படத்துக்கு......
ஆப்பிரிக்கா காரங்க பயங்கர கருப்பா இருப்பாங்க நீ கருப்பா பயங்கரமா இருக்கே..

முதலை படத்துக்கு.....
உன் சம்சாரம் தானே குளிக்குறா? அதுக்கு ஏன் வாய பிளந்து பல்லை காட்டுற?

சிங்கம் படத்துக்கு.....
வெள்ளிக் கிழமை அதுவுமா ஏன் தலைய விரிச்சுப் போட்டுகிட்டு உக்காந்து இருக்கே...

வரிக்குதிரை படத்துக்கு...
நீங்க எல்லாருமே ரூல்டு தானா! அன்ரூல்டு கிடையாதா....

மயில் படத்துக்கு....(தோகை விரித்த படம்)
ஒத்துக்கிறோம் உன் Dress நல்லாத்தான் இருக்கு வெறுப்பேத்தாம மடிச்சு வைய்யி...

புள்ளிமான் படத்துக்கு....
காட்டுல நீ தான் பெரும் புள்ளியோ!

யானை படத்துக்கு....
அடிக்கடி எதுக்கு ஊருக்குள்ள வர்றீங்க? கும்கி படம் பாக்கவா?.......

புலி படத்துக்கு.....
என்னது நீங்க காட்டுக்கு அக்கவுண்ட்டண்ட் இல்லையா?. அப்ப கணக்குல புலின்னு சொல்றது சும்மாவா!!!!..

நீர்யானை படத்துக்கு....
உங்களை மாதிரியே எங்க ஊருக்குள்ளயும் பல பேரு எப்பவும் "தண்ணி"யிலேயே இருக்காய்ங்க தெரியுமா.?....

குரங்கு படத்துக்கு....
நீங்க மட்டும் எங்க அரசியலுக்கு வந்து தாவுனீங்க பெரிய ஆளாயிடலாம்....

நரி படத்துக்கு.....
சொல்லுங்க இந்த ஃபேக் ஐ.டி.. ஐடியாவை கொடுத்தது நீங்க தானே....

பாம்பு படத்துக்கு.....
நீங்க எப்பவும் ஒரே மாதிரி படம் எடுத்துகிட்டு இருக்கிங்களே... போரடிக்கலை?

தலைவர்களும்... திரைப்படங்களும்....




இவங்க பேருக்கு பொருத்தமா  "படம்" பேரு 


மம்தா பானர்ஜி : சந்திரமுகி...
 ப.சிதம்பரம் : மனக்கணக்கு... 
சோனியா : பீட்ஸா... 
கலைஞர் : குடும்பம் ஒரு கதம்பம்... 
ராமதாஸ் : ஜாதி மல்லி... 
திருமா : இதன் பெயரும் காதல்...
 தா.பாண்டியன் : பிரியமான தோழி...
 வை.கோ. : பயணம்... 
ஸ்டாலின் : அடுத்த வாரிசு...
 கனிமொழி : அன்புள்ள அப்பா... 
அழகிரி : நான் அவன் இல்லை... 
நாராயணசாமி : நய்யாண்டி.....
 சுப்ரமணிய சாமி : அட்டக்கத்தி...
.மன்மோகன்சிங் : மெளனகுரு..... 
பரிதி&நாஞ்சில் : அன்னை ஓர் ஆலயம்... 
ராகுல் : பேர் சொல்லும் பிள்ளை...
மோடி : உத்தம வில்லன்... 
அத்வானி : சூது கவ்வும்.....
லாலு : சிறைப்பறவை.... 

விடையில்லா கேள்வி.....

யாருக்கு தீபாவளி....

பெருநகரத்தின் ஆரவாரமாக பரந்து விரிந்து இருந்தது அந்த துணிக்கடை.. பளீரிடும் விளக்குகளும் உருவாக்கப்பட்ட குளிரும் கசிந்து கொண்டு இருந்தன.. ஆடை வேட்டையாடும் ஆவேசத்தில் பலர் உள்ளே வந்து கொண்டும் வேட்டையாடிய களைப்பில் பலர் வெளியேறிக்கொண்டும் இருந்தனர்..

 சமூகத்தின் எல்லா தட்டுகளும் சங்கமித்து சமரசத்தை உலா வரச் செய்து கொண்டிருந்தனர்... வாசலில் வந்தவர்களை வணங்கி வணங்கியே சுணங்கி போனார்கள் வரவேற்பாளர்கள்... வணக்கத்தை அலட்சியப் படுத்தி சிலர், புன்முறுவலித்து சிலர், பதில் வணக்கமிட்டு சிலர் என கலவையாய் மனிதர்கள் வந்து கொண்டே இருந்தனர்...

சிறு குழந்தைகளின் ஆரவாரம்,இளைஞர்களின் துள்ளல்,பெண்களின் ஆசை,கணவர்களின் பெருமூச்சு எல்லாம் அந்த காற்றில் கலந்து இருந்தன... ஆடை வாங்க வந்த இளம் பெண்கள் சிலர் அணிந்திருந்த ஆடைகள் ஆண்களின் ஆசையை மாற்றிக் கொண்டிருந்தன...எதிர்பாராது சந்தித்துக் கொண்ட நட்புகளும் உறவுகளும் கை குலுக்கி கொண்டனர். வாங்கிய, வாங்கப்போகும் ஆடைகள் பற்றி சிறு விவாதங்களும் நடந்தன... 

அவர்கள் விட்டுப் பெண்களிடம் இருப்பதே தான் மற்ற பெண்களுக்கும் என்பதை மறந்த சில கயமை கண்கள் குனிந்து ஆடைகளை தேடிக் கொண்டிருந்த பெண்களின் அங்கங்களை ரசித்துக் கொண்டிருந்தன... மின் தூக்கிகளில் நெரிசலாய் ஏறி கசகசப்பாய் மேல் தளங்களில் மனிதர்கள் கொட்டப்பட்டனர்... 

மின் தூக்கியின் நெரிசலில் பெண் ஸ்பரிசம் கண்டவர்கள் இன்ஸ்டண்ட் கனவில் ஸ்விஸ் சென்று டூயட் பாடிக்கொண்டு இருந்தனர்... 25 நடுத்தர குடும்பங்களின் தீபாவளி பட்ஜெட் தொகையில் தனக்கு ஒரே ஒரு பட்டுப்புடவை எடுப்பவருக்கு மத்தியில் குன்றுகளாக குவிக்கப்பட்டிருந்த புடவை மலைகளில் ஏறிக்கொண்டு இருந்தனர் மத்திய வகுப்பினர்.... 

பெரும்பாலும் அழகான ஆடைகள் அலமாரிக்குள்ளேயே இருக்க அடுத்தவர் கைகளில் இருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தன பெண்களின் கண்கள்....தொலைக்காட்சி விளம்பரத்தில் காட்டப்பட்ட சேலையையும் சேலையே கட்டாத நடிகையின் பெயரில் வந்த சேலையையும் கேட்டு கேட்டு வாங்கினர் பெண்கள்...

அத்தனை சேலையையும் வாங்கிடும் பேராவலும் அதிக சேலைகள் வாங்கியவர் மீது பொறாமையும் வெளிப்பட்டு கொண்டிருந்தன..சேலைகள் தேர்வும் அடுத்து மேட்சிங் தேர்வும் டெஸ்ட் மேட்சாய் நீண்டு கொண்டிருந்தன... குழந்தைகள் பிரிவில் அப்பாவின் வருமானம் தெரியாது குழந்தைகள் கேட்டுக் கொண்டிருக்க முடிந்த வரை வாங்கித்தந்தும் முடியாத போது அதட்டியும் சமாளித்து கொண்டிருந்தனர்... 

புரிந்து கொண்ட குழந்தைகளும் புரண்டு அழுத குழந்தைகளும் கலவையாய் இருந்தனர்...ஆனால் ஒருவர் கூட ஐந்தரை மீட்டர் பட்டுப்புடவயின் விலையில் எப்படி ஒன்றரை மீட்டர் குழந்தையின் ஆடை விலை எனறு கேட்கவில்லை... ஆண்களோ கட்டம், கோடு, பிரிண்ட் இம்மூன்றில் ஏதாவது ஒரு சட்டையும் வழக்கமான கால் சட்டை நிறங்களில் ஒன்றோடும் திருப்தி பட்டுக்கொண்டனர்... 

சிலர் எல்லோருக்கும் எடுத்தது போக மீதி இருந்த தொகைக்குள்ளும் மீதி இல்லாவிட்டால் பிறகு எடுக்கலாம் என தியாக மனப்பான்மையுடனும் புத்தன் ஆனார்கள்.. தலை தீபாவளி மாப்பிள்ளைகள் மாமனாரின் சொத்தை கிழித்துக் கொண்டு ஒரு புறமும்,, இவ்வளவு கிழிந்தால் தான் பேஷன் என இளைஞர்கள் ஒரு புறமும் தேர்வு செய்தனர்... 

பெற்ற அப்பா அம்மாக்களுக்கு ஐந்து நிமிடத்தில் வேட்டி சட்டையும் புடவைகளும்தெரிவு செய்யப்பட்டது.....எல்லாம் முடிந்து பணம் செலுத்துகையில் நினைத்த தொகையில் வாங்கியவர்கள் நிம்மதியாகவும் வாங்காதவர்கள் வருத்தத்தோடும் நின்றுகொண்டிருந்தனர்... கடன் அட்டைகள் தேய்க்கப்பட்ட இயந்திரம் நீ பட்டது இவ்வளவு கடன் என காகிதத்தில் துப்பியது... கல்லா பெட்டிக்குள் மூச்சு திணறிக்கொண்டிருந்தார் காந்திஜி.. 

அடுத்து வாங்கிய ஆடைகளை வாங்க க்யூவில் நிற்க வேண்டும்... வெளியேறி நல்ல ஓட்டலில் சாப்பிட வேண்டும்... வாங்கிய துணிகளுக்கு கூடுதலாக ஒரு பேக் கேட்க வேண்டும்..ஒரு வழியாக எல்லாம் பெற்றுக் கொண்டு கூட்டத்தில் நீந்தி வெளியேறி வாசலுக்கு வந்த போது மாங்காய் வண்டிகள் , பலூன் கடைகள், சுண்டல் வியாபாரிகள், பொம்மை விற்பவர்கள் இவர்களுக்கு நடுவே அழுக்கு ஆடையுடன் கைக்குழந்தை ஒன்றுடன் நின்று யாசகம் கேட்ட பெண்ணுக்கு ஐந்து ரூபாய் தரும் போது என் மகள் கேட்டாள் அப்பா இவங்களுக்கு புதுத்துணி யார் வாங்கித் தருவா?

என்னிடம் பதிலில்லை... உங்களிடம்...!!!!

Saturday 9 November 2013

பாட்டி சொல்லாத கதை...

பாட்டி.... ஒரு ஞாபகம் ...

என் அம்மாவின் அம்மா ருக்மணி என்கிற ருக்கு பாட்டி..

பிராமணர் சமூகத்தின் பிரஜை... கலப்பு மணம் புரிந்த என் தாய்க்கு முதல் மகன் அவளுக்கு நான் முதல் பேரன் என்ற வகையில் நான் அவளுக்கு ரொம்ப ஸ்பெஷல் ...13 வயதில் திருமணம் ..13 பிள்ளைகள்..

மூத்தவர் என் அம்மா...3 பிள்ளைகள் இறந்து விட்ட போதிலும் 10 பிள்ளைகளை வளர்த்தவர் ..அதிலும் 2 பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டு இறந்த போதிலும் கலங்காத மனம் கொண்டவள்..

நாராயணஐயர் என்கிற என் தாத்தாவின் சக தர்மிணி..எனக்கு 5வயது ஆகும் போதே இறந்து விட்டார் தாத்தா..அதற்கு பின் என் 25வது வயதில் தான் பாட்டியை இழந்தேன். இரண்டு சிறுநீரகமும் பழுதாகி இறந்தவள் பாட்டி...

அழகாக கதை சொல்லுவாள், இனிமையாக பாடுவாள், ஸ்லோகங்கள் சொல்லித் தருவாள் என் மிமிக்ரி திறமை பாட்டியின் ஜீனில் இருந்தே வந்தது என்பதை அவள் பி.எஸ். வீரப்பா குரலில் பேசிய போது தெரிந்து கொண்டேன்..

என்னேரமும் ஆசாரம் மடி என தொட்டு பார்த்ததில்லை என் பாட்டியை..ஆனால் கடங்காரா கால் அமுக்குடா என்று அவள் அனுமதித்த வேளை என் வாழ்வில் வசந்தம்..10 வயதில் தாயை இழந்தவன் நான் என் பாட்டியின் கால் தொடும் போதெல்லாம் என் அம்மாவை ஸ்பரிசித்தது போல் ஒருணர்வு...

ஆம் எனக்கு தாயாகவும் இருந்தவள் பாட்டி.... கல் சட்டியில் பழைய சாதமும் தயிரும் இட்டு 4வகை ஊறுகாயுடன் அவள் உருட்டி தந்த உணவு இந்த உலக உருண்டையில் எங்கும் கிடைக்காது...

கண்டிப்பு ஆசாரம் இவையே அவள் வகுத்து கொண்ட எல்லைகள்.. பாட்டி ரசம் வைத்தாள் என்றால் அதில் விசம் வைத்தாலும் சாப்பிட்டுவிடுவேன் அந்தளவிற்கு அதன் ரசிகன் நான்..ஒரு வத்தகுழம்பு சுட்ட அப்பளம் வைத்தாலும் அது ராஜ உணவாக இருக்கும் கை மணம் அவளின் தனி சிறப்பு..

வெறும் ஊறுகாய் தயாரித்தே 18 வருடங்கள் குடும்ப பொருளாதாரத்தை கட்டி காத்தவள்.. இசைப்பிரியை.. எந்நேரமும் ஏதாவது பாடலை முணுமுணுத்து கொண்டிருப்பாள்..எந்த ராகம் என்ன தாளம் என்று மிகச்சரியாக சொல்லிவிடுவாள்..

நீ பெரிய நடிகனாக வருவே என்று என்னை அடிக்கடி சொல்லுவாள்.. எப்படி பாட்டி என்பேன் இவ்வளவு பொய் சொல்றியேடா உனக்கு கற்பனை அதிகம் அதுனால தான் என்பாள்.. இன்றளவிற்கும் இது பெரிய சைக்காலஜி ..மிகச்சரியாக தன் பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் கணித்தவள்...

பாத்திரம் உருளும் சத்தத்திலேயே வெங்கடேசா என்ன பண்றே.. பாலு..கடங்காரா.. உமா வாடி இங்கே.. சுந்தர்ராஜு ஏண்டா கண்ணு..என யார் செய்திருப்பார்கள் என உள் அறையில் இருந்தே கண்டு பிடித்து சொல்வாள்..

ஸ்காட்லாண்ட்யார்டில் வேலை பார்க்கும் திறமைக்கு கொஞ்சமும் குறையாதது அவள் கணிப்பு.ருக்கு பாட்டி மக்கு பாட்டி...என்று நாங்கள் கத்திவிட்டு ஒடுவதையும் கடங்காரன் எப்படி கத்துறான் பாரு என்று ரசிப்பாள்..

வெகு நாட்கள் சந்தேகம் ஏன் இவள் கடன் காரா என்றே திட்டுகிறாள் வேறு வார்த்தையே சொன்னதில்லை என்று போன வருடம் என் மாமா சொன்னார் தாத்தா வாங்கிய கடனை பிள்ளைகள் மேல் போடாமல் ஒற்றை ஆளாய் நின்று அதை தீர்த்தார் என்று..

அதனால் தான் துன்பம் தரும் போதெல்லாம் எங்களை கடங்காரா என்று அழைத்தார் என அறிந்தபோது அழுது விட்டேன்..

ஆசாரமான குடும்பம் 48 வயதில் விதவை ... ஏராளமான கடன் .. 10 பிள்ளைகள் ... முதல் மகளின் கலப்பு திருமணம்..வறுமை ... தன்மானம்...சிறுனீரக பழுது... இவை அனைத்தையும் சர்வ சாதாரணமாக கடந்தவள் என் பாட்டி...

என் பேரை உங்க பிள்ளைகளுக்கு வைக்காதிங்கடா...என்று சத்தியம் வாங்காத குறையோடு சொல்லி இறந்து போனாள்..

அவள் பட்ட கஷ்டம் பிள்ளைகள் படக்கூடாதாம்...இரு கிட்னிகளும் பாதிக்கப்ப ட்டு டயாலிசிஸ் அவஸ்தியில் படுத்து இருக்கும் போது ஒரு நாள் அவளை பார்க்க போனேன் வெங்கடேசா.. சட்னி ஊசி போச்சுனா சாப்பிட முடியாது கிட்னி ஊசி போச்சுனா வாழ்ந்திட முடியாதுன்னு விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டே சொன்னார்... அதற்கு அடுத்த வாரம் இறந்து போனாள் இரும்பு மனுஷி என்ற பட்டத்துக்கு சொந்தமான என் பாட்டி..

எனக்கு நிறைவேறாத ஒரு ஆசை உயிருடன் நீ இருக்கும் போது சொல்ல மறந்ததை இப்போது சொல்கிறேன்.... ஐ... லவ்.. யூ... பாட்டி....

கண்ணீருடன்... வெங்கடேஷ்,பாலு, உமா&குமரன்......பேரன் பேத்திகள்..........

தலைவர்களுக்கு தந்தி

ராகுல் காந்திக்கு தந்தி.... செய்தி..... இனி நம்ம தந்தி சிலருக்கு (கற்பனை தாங்க)

 speak immediately ... to மன்மோகன்...

 Arrived safely....to பரிதி....

 party serious...to விஜயகாந்த் 

 Are you joking... to.. நாராயணசாமி... 

 stop immediately... to umasankar.IAS...

 Cong(ress)rats to win..to... கனிமொழி..... 

 where are you.... to.... அழகிரி.... 

 When you return from kodanadu ...to... அம்மா... 

 Stop walking....... To....... வை.கோ.

 


 stop this ...to ...எனக்கு நானே...ஹி..ஹி..ஹி..

விஜயகாந்த் - பாரதிராஜா

கப்ஸா செய்திகள்.....

பாரதிராஜா - விஜயகாந்த் சந்திப்பு

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தனிமை தேடிய கேப்டனுக்கு அன்னக்கொடி ஓடும் தியேட்டர்களில் அது கிடைப்பதாக தெரிந்து அங்கு வந்தார்.. எங்கு குறட்டை.. சாரி...கோட்டை விட்டோம் என்பதை பார்ப்பதற்காக பாரதியும் அங்கு வந்தார்...

இது வரை ஒருவர் கூட வராத படத்திற்கு இருவர் வந்தது தியேட்டர் முதலாளியை மகிழ்ச்சி கண்மாயில் ஆழ்த்தியது. நமக்கு நேரம் சரியில்லை என்று இருவரும் ஒரே நேரத்தில் நினைத்து கொண்டார்கள்....

எப்படி இருக்கீங்க என்று பாரதியிடம் கேப்டன் கேட்க ....யா.. ஐயாம் பைன் பட்.. சபரிங் த மூவி ரிசல்ட்ஸ்.. நானும் எலக்‌ஷன் ரிசல்ட்ல தவசிங் (சபரிங்ல சபரி வர்றதால கேப்டனும் வேற படம் சொல்றார் என பொருள்)

யா..ஐ நோ.. பட் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு டிபரண்ட் உங்க ஆளுங்க வெளியே போய் டேமேஜ் பண்ணாங்க.. எங்க ஆளுங்க கூட இருந்தே டேமேஜ் பண்ணிட்டாங்க.. யெஸ் திஸ் இஸ் பியூர் பாலிடிக்ஸ்...

விடுங்க.. உங்களுக்கு அன்னகொடி கிழிஞ்சது எனக்கு கட்சி கொடி கிழிஞ்சது... சரி தமிளர்களை விட்டுடுங்க விஜயகாந்த் அப்படின்னு ஏன் சொன்னீங்க?

ஆக்சுவலி நான் சொன்ன மீனிங்...

நிறுத்துங்க...... முதல்ல நீங்க தமிள்ள பேசுங்க பாரதி...

யா ஐ.. வில் ட்ரை பட் யு குட் நாட் அண்டர்ஸ்டாண்ட் மை பிராபளம்...

(கேப்.சிரித்து) வெக்கமில்லாம என்னை சொல்லிட்டு... தமிளெ வரல... நீங்க தான் தமிள காப்பாத்த போறீங்களா...

ok நவ் ஐ ஸ்பீக் டமில் ஆக்சுவலி

விடுங்க பாரதி உங்களால முடியாது....

யூ ஆர் அதாவது நீங்க பாலிடிக்ஸ்ல பியூப்புள்ஸ எண்டெர்டெயின் பண்றீங்க ..சோ.. தியேட்டர்ஸ்க்கு பியூப்புள்ஸ் எப்படி வருவாங்க..

ஓ... நீங்க ஒளுங்கா எடுக்கமாட்டீங்க பளிய எங்க மேல போடுறிங்க.. சரி அப்ப ஏன் தமிள்செல்வன் படத்தை என்னை வச்சு எடுத்தீங்க?

யா.. ஐ.. டிட்.. கிரேட் மிஸ்டேக் பேசிக்கலி...

இருங்க பாரதி.. இந்த பேசிக்கலி பெருச்சாளி இதெல்லாம் வேணாம் நான் சொல்றேன் அன்னைக்கு நான் மார்கெட் வேல்யூ ஹீரோ அதான் எடுத்தீங்க இப்ப தமிள் தமிளர்னு உளர்றீங்க...

பட் ஒன் திங்க் ஐயாம் வில்லேஜ். பெல்லோ....

வில்லேஜா அது உங்க படத்துலதான் இருக்கு பேச்சுல எங்க இருக்கு.....

என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்.. ஒகே திஸ் இஸ் இனப் பார் யூ.....

இந்த ரெக்கார்டு தான் 30 வருசமா ஓடுதே...இதை. தவிர நீங்க தமிள் பேசி ஒரு பய பார்த்ததில்ல...

ஓகே லீவ் இட் ஐயாம் சாரி அதாவது மன்னிச்சுடுங்க

கேப்டன்... ஏய்ய்ய்ய்ய்ய் மன்னிப்பா..... தமிள்ள எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை...

கொந்தளித்த கேப்டனை தியேட்டர் முதலாளி சாந்த படுத்த பாரதியை மற்றவர்கள் அழைத்து செல்ல....

நன்றி. வில் மீட் யூ அகெய்ன் ..

கப்ஸா செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
ஊத்தவராயன்.....

பிரதமர் அம்மா.....

அம்மாவை பிரதமர் ஆக்க புறப்பட்டு விட்டேன்.... பரிதி....

இனி இதுக்கு போட்டியா என்ன கூற(வ)லாம் நமது யோசனை அம்மாவின் விசுவாசிகளுக்கு....

அம்மா தான் பிரதமர் என்று எனக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும்... மதுரை ஆதீனம்.....!

இந்திராகாந்தி காலத்தில் அரசியலில் இருந்திருந்தால் நாட்டின் முதல் பெண் பிரதமர் அம்மா தான்.... ஓ.பி.எஸ்.

சிவப்பு சிந்தனை கொண்ட சிவந்த பெண் பிரதமர் (சிவப்பா இருந்தா பொய் சொல்லமாட்டாங்க ) அம்மா தான்.... தா.பாண்டியன்....

தான் எப்ப பிரதமர் ஆகணும்னு அம்மாவுக்கே தெரியும்... வளர்மதி....

பிரதமர் பதவி, ஜனாதிபதி பதவி இரண்டையும் ஒரே நேரத்தில் வகிக்கும் திறமை அம்மா ஒருவருக்கு தான்...(என்ன கொடுமை). நாஞ்சில் சம்பத்...

அம்மா பிரதமர் ஆகிவிடும் நாள் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர நாள்....சரத்குமார்...

ரியல் கேப்டன் பிரதமர் அம்மா தான்..... தே.மு.தி.க.அதிருப்தி எம்.எல்.ஏக்கள்...

பாராளுமன்றம் என்ற கோவிலில் குடியிருக்கும் தெய்வம்......புரட்சி தலைவி பிரதமர் அம்மாதான்.... மைத்ரேயன்.....