Wednesday 30 April 2014

அட்டாக் - 5

அட்டாக் ஆறுமுகத்தின்......

அரிய தகவல்கள் - 5

பால்கோவா கோவாவில் விற்கும் பால் அல்ல...

மைசூர்பாக் மைசூரில் கிடைக்கும் பாக்கல்ல...

ரசகுல்லா என்பது தொப்பி போட்ட ரசம் அல்ல...

பாம்பே அல்வா பாண்டிச்சேரியிலும் கிடைக்கும்...

ஜாங்கிரி என்பது ஒரு மலையின் பெயர் அல்ல...

தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

கொண்டைக்கடலை என்பது தலையில் வைப்பதல்ல...

தட்டையாக இருக்கும் செடிகள் தட்டை பயிராகாது...

காலிஃப்ளவர் என்பது காலியான மலர் அல்ல...

பாசிப்பருப்பு என்பது நரிக்குறவர் விற்கும் பருப்பல்ல...

வேகாமல் இருந்தாலும் பேர் மாறாதது வெந்தயமே...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

பரிவட்டம் என்பது வட்டமான குதிரையல்ல...

தப்பாட்டம் என்பது தப்பாக ஆடும் ஆட்டமல்ல...

கள்ளாட்டம் என்பது கள் குடித்து ஆடுவதல்ல...

தம்பட்டம் என்பது தம்மடிக்கும் பட்டமல்ல...

செக்காட்டம் என்பது வங்கி செக்கை ஆட்டுவதல்ல...

தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

ஹெட் போன் என்பது தலை மீதுள்ள போன் அல்ல...

கிராமபோன் என்பது பட்டிக்காட்டு போன் அல்ல...

மொபைல் போன் என்பது தானாக நடமாடும் போன் அல்ல...

ஸ்மார்ட் போன் என்பது புத்திசாலியான போன் அல்ல...

ஐ போன் என்பது கண்ணில் தெரியும் போன் அல்ல...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

பால் பாயின்ட் பேனா பால் பூத்தில் கிடைக்காது...

லேப்-டாப் எந்த லேபிலும் விற்கப்படாது...

கோரல் டிரா என்பது பவழத்தை வரைவதல்ல...

போட்டோஷாப் என்பது போட்டோ விற்கும் கடையல்ல...

ஈ-மெயில் என்பது ஈ மொய்க்கும் ரயில் அல்ல...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

ஹாலிவுட் என்பது ஹாலிலுள்ள கட்டை அல்ல...

கோலிவுட் என்பது மரத்தால் செய்த கோலியல்ல...

பாலிவுட் என்பது பிளாஸ்டிக் கட்டை அல்ல...

டைகர்வுட் என்பது மரப்புலி அல்ல...

காலிங்வுட் என்பவர் கூப்பிடும் கட்டை அல்ல...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

ஒன்ஸ்மோர் என்றால் சிங்கிளான மோர் அல்ல...

நோமோர் என்றால் மோர் இல்லை என சொல்வதல்ல...

எனிமோர் என்றால் எந்த மோருமே என்பதல்ல...

சம்மோர் என்பது கொஞ்சம் மோர் கேட்பதல்ல...

மெனிமோர் என்றால் நிறைய மோர் என்ற அர்த்தமல்ல...

தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

பருப்பு என்பது பரு வந்த பூ அல்ல...

கொழுப்பு என்பது குண்டான பூவல்ல...

சலிப்பு என்பது ஜல்லடையிலுள்ள பூ அல்ல...

வலிப்பு என்பது அடிபட்ட பூ அல்ல...

களிப்பு என்பது களி தின்னும் பூவல்ல...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

எல்லா வைத்தியநாதன்களும் டாக்டர்கள் அல்ல...

எல்லா சாந்திகளும் அமைதியானவர்கள் அல்ல..

எல்லா வெள்ளைச்சாமிகளும் சிவப்பானவர்களல்ல...

எல்லா ராணிகளும் செல்வந்தர்கள் அல்ல...

எல்லா தர்மலிங்கமும் வள்ளல்கள் அல்ல...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5


கரப்பான் பூச்சிக்கு தாடி கிடையாது...

ஆட்டுக்கு மீசை கிடையாது...

புலிக்கு புருவம் கிடையாது...

சிங்கத்துக்கு வழுக்கை கிடையாது...

யானை தும்பிக்கையில் ரேகை கிடையாது...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

க்யூ பிராஞ்ச் என்பது வரிசையிலுள்ள கிளையல்ல...

சைபர் க்ரைம் என்பது முட்டையான குற்றம் அல்ல...

சி.ஐ.டி. என்பது ஐ.டி துறை சார்ந்த வேலையல்ல...

சூப்பிரண்டு என்பவர் சூப் செய்யும் நண்பர் அல்ல...

டி.எஸ்.பி. என்பவர் தேவிஶ்ரீ பிரசாத் மட்டுமல்ல...

தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

ஒருமாதிரியான எழுத்தாளர் டைப்ரைட்டர் அல்ல...

கூடாரம் போடுபவர் டெண்டிஸ்ட் அல்ல...

ஜாடி விற்பவர் சாடிஸ்ட் அல்ல...

தேர்ச்சி பெற்றவர்கள் பாஸிஸ்ட் அல்ல...

பேய்ப்பட இயக்குனர் டெரரிஸ்ட் அல்ல...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

தெய்வப் பெயர் கொண்ட காய் தக்"காளி"...

வெட்டும் பெயர் கொண்ட காய் "கத்திரி"...

அன்பு மிகுந்த காய் "கருணை"க்கிழங்கு...

அடிபட்டு புண்ணான காய் வெங்"காயம்"...

போதை தரும் காய் "பீர்"க்கங்காய்...

தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

கை விலங்கிற்கு உயிர் கிடையாது...

கொட்டாவி என்பது பேய் அல்ல...

வீட்டுக்கூரையில் காயப்போடுவது கூரைப்புடவை அல்ல...

பட்டாணி என்பது பட்டில் செய்த ஆணியல்ல...

மாநாடு என்பது ஒரு தேசமல்ல...


தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

கடல் குதிரைக்கு கடிவாளம் கிடையாது...

நட்சத்திர மீனை விண்மீன் என சொல்ல முடியாது...

விண்மீனுக்கு நீந்தத் தெரியாது...

ஆக்டோபஸ் என்பது ஒரு பேருந்தல்ல...

வெண்ணெய் மீனில் இருந்து வந்தது நெய்மீன் அல்ல...

தொடரும்....


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

கலை மான் என்பது ஒரு ஆர்டிஸ்ட் அல்ல...

வரிக்குதிரை என்பது வரி கட்டும் குதிரையல்ல...

ஒட்டகம் என்றால் ஒட்டும் பசையல்ல...

வான்கோழி என்பது தரையில் தான் இருக்கும்...

நெருப்புக் கோழி என்பது தந்தூரி சிக்கன் அல்ல...


தொடரும்....
அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

கொத்தாக இருக்கும் மல்லிகை கொத்தமல்லி அல்ல...

செங்குத்து என்பது சிவப்பான குத்து அல்ல...

பிளாட்பார்ம் என்பது ப்ளாட் வாங்கும் படிவம் அல்ல...

காலிங்பெல் என்றால் மணியை கூப்பிடுவதல்ல...

கைமுறுக்கு என்பது கையை திருகுவதல்ல...



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

டால்பின் என்றால் பொம்மை ஊசி அல்ல...

பென்குவின் என்றால் பேனா ராணி அல்ல...

கோப்ரா என்றால் பசுவின் உள்ளாடையல்ல...

கங்காரு என்பது ஆந்திர மாநிலத்து பெயரல்ல...

கொரில்லா என்பது கொரிய நாட்டு சட்டமல்ல...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

பஸ் ஸ்டாண்ட் என்பது பஸ்சுக்கு அடியில் இருக்காது...

பாலைவனத்தில் சுறாமீன்கள் வாழாது...

எல்லா மொழியிலும் ஒரே படம் எடுப்பது பாம்பு தான்...

டிபன் கேரியரில் சாப்பாடும் வைக்கலாம்...

மாவடு என்பது பெரிய தழும்பு அல்ல...


தொடரும்...



அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

கொலம்பஸ் என்பது ஒரு பஸ்ஸின் பெயர் அல்ல...

நிக்கான் என்பது திருநெல்வேலி காரர் வைத்த பேரல்ல...

சோனி என்பது நோஞ்சான் அல்ல...

க்ளோஸ் அப் என்றால் மேலே மூடுவதல்ல...

கோல்கேட் என்பது நுழைவாயில் அல்ல..


தொடரும்...


அட்டாக் ஆறுமுகத்தின்.....

அரிய தகவல்கள் - 5

கடலில் டையை போடுவது சீடை ஆகாது...

பாரில் திட்டுவது பார்வை ஆகாது...

மோர் இல்லை என்பது நோ மோர் ஆகாது...

தடியை வை என்பது வைக்கோல் ஆகாது...

பிளாட்டில் வசிப்பவர்களின் இனம் பிளாட்டினம் அல்ல...


தொடரும்...

தீனா - மே

தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

நாலு நல்ய விஸ்யம் உன் காதால கேக்குணும்ன்னா... காத நல்யா தொர்ந்து வச்சுக்கோ... அப்டி கேக்காம போனா.. உன் காது தான் ஒலகத்துல மெய்யாலுமே கேக்காத காது..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.. "நல்லத கேக்குற காது.. அதுக்கு ஈடு ஏது"

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

நெதமும் என் கனவுல வந்து குஜாலா பேசி என்னிய பேஜாராக்குற பாவி மன்சன்.. ஒரு நாளாவது நேர்ல வந்து இப்படி பேசினானா..! ஏன் இப்டி என்னை கொல்றான்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா... "கனவுல குஜாலு.. நனவுல பேஜாரு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

நனவினால் நல்காக் கொடியார் கனவினால்

என்எம்மைப் பீழிப் பது.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...!

மன்சனுக்கு ஆசயே இல்யாத மன்சு இர்ந்தா.... அது மேறி பெர்ய சொத்து ஒன்யுமே இல்ல அதுக்கு ஈடா ஒல்கத்துல எதுவுமே பெர்ய சொத்து இல்ல...! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.. "மன்சுல இருக்குற ஆசய ஒத்து... அதான் ஒல்கத்துல பெர்ய சொத்து"

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

யாண்டும் அஃதுஒப்பது இல்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

இந்தய நெர்ப்பு இர்க்குதே அத்து கூட தொட்டா காண்டித்தான் சுடும்.. ஆன்யா தொடாமயே  ஒண்யு சுடுதுன்னா...ஒர்த்தர ஒர்த்தர் பிரிஞ்சு இர்க்க சொல்லோ.. பலானது நியாபகம் வந்தா அந்த மூடு மேறி சுடுறது வேற எதுவுமில்ல..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...!

"தொட்டா சுடும் நெர்ப்பு.. தொடாம சுடும் காம தகிப்பு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

தொடிற்கடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...!

நெதமும் சோத்துக்கு லாட்டரி அட்ச்சி... பொழுது வந்தா கஸ்டம் பொழுது போனா கஸ்டம்ன்னு வாழ சொல்லோ உன் அறிவு நாசமாப்பூடும்..! அத்தே மேறி தான் நீ எத்தயாவது மர்ந்து போய்கினே இர்ந்தா பெர்சா சம்பார்ச்சி வச்ச உன் பேரும் ரிப்பேராய்டும்..!

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.. "வறும அறிவ கொல்லும்.. மறதி புகழ கொல்லும்"

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

பொச்சாப்புக் கொல்லும் புகழை; அறிவினை

நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

என் மன்சுல நென்ச்சுனு இர்க்குற மவராசனை பிர்ஞ்சு இர்க்க சொல்லோ.. மெலுசா இர்க்குற அனிச்ச பூவும் அன்னப்பறவ சிறகும் பொண்ணு என் பாதத்தில பட்டா பஞ்சு மேறி இல்யாம நெர்ஞ்சி முள்ளுகணக்கா குத்துதுய்யா..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"நீ எங்க இர்க்குற மாமா... பூவ முள்ளா ஆக்கலாமா"

குஜாலா சொல்லிக்கீரார்பா"தல"

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...!
 
உனுக்கு தோஸ்த்தா இர்ந்தாலும் செரி,உன் விரோதியா இர்ந்தாலும் செரி,இல்ல ரெண்டுமே இல்யாது வேத்து ஆளா இர்ந்தாலும் செரி,அல்லாத்துகிட்டேயும் ஒரே மேறி நாயமா நேர்மியா இர்ந்தா உனுக்கு வாழ்க்கயில அல்லாமே நல்லுது தான்.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...! "நியாயம் அல்லாத்துக்கும் ஒண்ணு.. அப்டி வாழ்ந்தா உன் வாழ்க்கயில வின்னு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தகுதி எனஒன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

மன்சுக்கு புட்ச்சவர பாக்க சொல்லோ குஷியாவுற அதே கண்ணுதான்... அவுர பாக்காத  போது அழுதுனு இர்க்கு.! இந்தய கண்ணை பத்தி நென்ச்சா மட்யும் எனுக்கு ஒரே சிரிப்பா வர்து! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.. பாத்தா குஷியாவுது..பாக்காட்டி அழுவுது" #கண்ணு

குஜாலா சொல்லிக்கீரார்பா"தல"

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்கது உடைத்து.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...!

உனுக்கு இன்னா தான் கஸ்டத்துக்கு மேல்ய கஸ்டம் வந்துகினே இர்ந்தாலும்.. அத்த நென்ச்சு கலங்காம தில்லா இர்ந்தேன்னு வய்யி..உனுக்கு வந்த கஸ்டத்துக்கே கஸ்டம் வந்து உன்ய வுட்டு ஓடிப் போய்டும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"கஸ்டத்துலயும் காட்டு தில்லு.. அது கஸ்டத்துக்கே கஸ்டம்ன்னு சொல்லு."

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கண் படும்.

தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...!

கய்யில எதுவுமே இல்யாத ஏழ பாழைங்க அல்லாத்துக்கும், கொட்த்து எல்ப் செய்றதுக்கு பேரு தான்பா தருமம்..! இருக்குறவனுக்கு செய்யுற எல்ப்பு அப்டி கெடியாத்து.. அது அள்ந்து கொடுத்து எல்ப் செஞ்சிட்டு"எப்ப நைனா திர்ப்பி தருவேன்னு" கேட்டு திரும்ப வாங்றா மேறி அது தருமமே இல்ல..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா... 

"இல்யாதவனுக்கு செய்றது தான் தருமம்.. இருப்பவனுக்கு செஞ்சா அது கருமம்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீரது உடைத்து.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்து இல்ல காதல்..!

டாவடிச்சுனுகீற பொண்ணாண்ட பேசினு இர்க்க சொல்லோ தும்முலு வந்து தும்மிட்டன்பா.! உட்னே அவ உனுக்கு ஆய்சு நூறுன்னு வாழ்த்திட்டு அட்த்த செகண்டே காண்டாயி எவ்ளோ ஒர்த்தி உன்னிய நென்ச்சி தான் இப்ப நீ தும்மினுக்குற.. சொல்லு எந்தய சிறுக்கி உன்னிய நென்ச்சான்னு அய்துகினே கேக்குறா..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"தும்மலு போட்டதா குத்தம்..காதலி உட்றா சத்தம்"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா..

இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

இந்தய கள்ளு இர்க்குதே அத்த குட்ச்சிட்டா அப்டியே மிதக்குற மேறி குஜாலா இர்க்கும்.. ஆன்யா அத்தவுட போத இன்னா தெரிமா.? ஒண்யா கூடின அந்த மேறி பலான நேரத்த நென்ச்சி பாக்க சொல்லோ..அந்த நெனப்பிலியே இன்னொரு தபா குஜாலா இர்ந்தா மேறி பீலாகும் பாரு அதான்பா மெய்யாலுமே கில்மா.. சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"கள்ளுல இல்யாத போதை... காமத்துல கண்டவன் மேதை"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

நம்ய வூர்ல இர்க்குற பெர்ய மன்சங்கோ.. பட்ச்சவங்கோ... "இத்தெல்லாம் செஞ்சா உனுக்கு நல்ய பேரும் ஜபர்தஸ்தும் கெடிக்கும்ன்னு"சொன்ன அல்லா நல்லதயும் அப்டியே செய்ணும்.. அத்த மட்டும் மதிக்காம போய்யா போனு இர்ந்தேன்னு வய்யி உனுக்கு ஏழு ஜென்மித்துலயும் நல்ல வாழ்க்கியே கெடியாத்து..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

"நல்லதயே செஞ்சு நீ வாழு.. இல்ல வீணாய்டும் உன் ஜென்மம் ஏழு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா..

இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

என் மன்சுக்கு புட்ச்சவர எப்ப பாக்குறதுன்னு பொம்னாட்டி நான் பேஜாரா இர்க்க சொல்லோ... அவ்ரு என் கனவுல வந்து எனுக்கு ஒரு சங்கதி சொன்னாரு..! அவர நென்ச்சு ஏங்கிகினு இர்ந்த நேர்த்துல அவுரு அயகு மொகத்த இட்டாந்து காட்டிச்சே கனவு அதுக்கு நான் இன்னா விர்ந்து தந்து கைமாறு செய்ய..??! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"அவுரு தான் என் உசுருக்கு மருந்து.. அவுர காட்டுன கனவுக்கு இன்னா விருந்து"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

கைல துட்டு இல்லாங்காட்டி இந்தய ஒல்கத்துல நீ வாழ்ற வாழ்க்கியே வேஸ்ட்டு..! அதே நேர்த்துல செத்தா சொர்க்கத்துக்கு போவுணும்ன்னு நீ நென்ச்சேன்னு வை அதுக்கு இன்னா தெரிமா செய்ணும்..? மத்த உசுரு மேல்ய அன்பா அன்சர்ணையா இர்க்கணுமாம்.. அப்டி இல்லின்னா உனுக்கு நர்கம் தான் கெடிக்கும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

"அன்பா வாழ்ந்தா சொர்க்கம்.. அப்டி வாழாட்டி நர்கம்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா..

இன்னிக்கு கர்த்தில்ல காதல்..

இந்தய மன்சு இர்க்குதே அது நென்ச்சா அட்த்த செகண்ட்டே ஒல்கத்துல எந்தய மூலைக்கி வோணா போவும்..? அத்தே மேறி காதலிச்சவனை நென்ச்சா அட்த்த செகுண்ட்டே அங்க போறா மேறி இர்ந்தா இன்னாத்துக்கு பொம்பளை நானும் கண்ணுல வெள்ளமா தண்ணி வர்றா மேறி அழ்துனு இர்க்க போறேன்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"மன்சு போகுது தூரமா... அது மேறி போகணும் வேகமா"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோஎன் கண்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

உன் மன்சுக்கு தெரியும் இத இத செஞ்சா நம்க்கு கஸ்டமா இர்க்கும்.. இது நம்க்கு ஆவாது.. அப்டின்னுட்டு..! இதெல்லாம் தெர்ஞ்ச நீ அத்தே கஸ்டத்தை அட்த்தவனுக்கு கொட்த்தா அது இன்னாபா நாயம்..அதுக்கு இன்னா காரணம்..? இல்ல கேக்குறேன் உனுக்கு கஸ்டம்ன்னா அது அவனுக்கும் கஸ்டம் இல்லியா..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"உனுக்கு கஸ்டமா இர்க்குறத..அட்த்தவனுக்கு இஸ்டமா செய்யாதே"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா..

இன்னிக்கு கர்த்தில்ல காதல்..

காதலி சொல்றா.."என் மன்சுல இர்க்குற ஆள எப்யுமே நெஞ்சுக்குள்ளாறயே வச்சிகினு இர்ப்பேன்.. அதுனாலயே தான் நான் எத்தயுமே சூடா துண்ண பயப்படுவேன்.. ஏன்னு கேக்குறியா..? நான் சூடா துண்ண சொல்லோ.. அவுரு மேல அந்த சூடு பட்டு அவுருக்கு பொறுக்காம போய் வர்த்தப் பட்டுட்டாருன்னா..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"அவரு இர்க்குறது என் நெஞ்சாங்கூடு...அதுனால நான் துண்றதே இல்ல சூடு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல" 

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.. இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

அல்லாத்துக்கும் ஒதவி செய்ற ரொம்ப பெர்ய மன்சு இர்க்குற ஆளுகிட்ட எக்கச்சக்கமா துட்டு இர்ந்தா அத்து எப்டியாப்பட்டது தெரிமா..? ஒரு ஊருக்கே குடிக்க நல்ல தண்ணி கொடுக்குற குளம்... எப்யுமே வத்தாம தண்ணி நெறஞ்சி இர்ந்தா எப்டி பிரியோஜன்மா இர்க்குமோ அத்தே மேறி இர்க்கும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..!

"வள்ளலு கைப் பணம்...வத்தாத தண்ணிக் குளம்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா..

இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

காதல் பண்ணினுக்கிற பொண்ணு மேல சின்னுதா கோவப் பட்டு... ஒரு தம்மாத்தூண்டு சண்டை போட்டுகினு அப்பால அத்த மர்ந்துட்டு..அட்த்த நிம்சமே கட்டில்ல ஒண்ணா சேர்ற சுகம் இர்க்குதே.! அடடாடா அத்தெல்லாம் சொன்னா பிரியாது... ஒர்த்தர் மேல ஒர்த்தருக்கு அன்பிர்ந்தா தான் பிரியும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"அன்பா படுற கோவம்.. கட்டில்ல உனுக்கு லாபம்"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

இந்தய ஒலகம் எப்படி நட்ந்துகினு இர்க்குதோ அத்தே மேறி தான் நாமளும் நட்ந்துக்கணும்.. அத்து போற போக்கிலியே போயி வாழ்றவன் தான் அறிவாளி...! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா... " ஒலகத்த புர்ஞ்சிக்கோ.. அறிவா நட்ந்துக்கோ"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா..

இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

நமக்கு புட்ச்ச பொண்ணோட அயகான மெலுசான தோள் மேல நம்ம தலய வச்சி சுகமா சாஞ்சிகினு அப்டியே பஞ்சு மெத்தயில பட்த்தா மேறி பட்த்து தூங்கறது இருக்கே...! என்னா சுகம்..! அந்தய பெர்மாளு இர்க்குற வைகுண்டத்துல கூட இப்படி சொகமா தூங்க முடியாது.. அப்டியாப்பட்ட சுகம்ப்பா அது..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"நீ சாஞ்சி தூங்கணும் காதலி தோளு.. அத்த பாத்து ஏங்கணும் பெர்மாளு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக்கண்ணான் உலகு.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

நல்ல விசயத்தை பட்ச்சி தெர்ஞ்சிக்க மிடியாட்டியும் தெர்ஞ்சவங்க பேசறத கேக்குறதாவது செய்ணும்..அதுவும் ஒரு ருசிதான்... ஆன்யா காதால நல்லத கேக்காம வாய் ருசிக்காக எப்யும் எத்தயாவது அரவ மிசின் கணக்கா துண்ணுகிட்டே இர்க்குற வாழ்க்க இர்ந்தா இன்னா.? செத்தா இன்னா.? சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா....

"காதுக்கும் இருக்கு பசி.. நீ நல்ல பேச்ச ரசி" 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா...

இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

ஒர்த்தருக்கு ஒர்த்தர் நல்யா புர்ஞ்சிகிட்டு மெய்யாலுமே காதல் வச்சிர்ந்தா அவுங்கோ ரெண்டு பேரு கண்ணுமே இன்னா பேசணுமோ அத்தெல்லாம் பேசிடுமாம்.. அவுங்கோ ரெண்டு பேரும் வாயத்தொர்ந்து பேசவே வோணாம்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"கண்ணாலியே புர்ஞ்சி போச்சு... எதுக்கு இனி வாய் பேச்சு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

ஒன்யே ஒண்ணு மட்டும் அல்லாத்துக்கும் பொதுவு... அதான்யா மன்ச பொறப்பு..! ஆனா மன்சங்க அல்லாரும் அவுங்கவுங்க செய்யிற தொழில வச்சி.. இந்த தொழிலு உசத்தி.. அந்த தொழிலு மட்டம்ன்னு வர் சொல்லோ தான் பிரச்சினியே.. செய்யுற தொழில வச்சி தான் அவன் அவுனுக்கு மருவாதி..! சுர்க்கமா..! பிரிறா மேறி சொன்னா..

"அல்லாத்துக்கும் ஒண்ணுதான் பொறப்பு..உன் தொழில வச்சிதான் சிறப்பு"

சோக்க்கா சொல்லிக்கீரார்பா "தல"

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

ஏழைங்கோ நல்லவங்க யார் கிட்டியாது கையேந்தி பிச்சை எடுக்க சொல்லோ அந்த நல்லவரு கிட்டயும் எதுவும் இல்லாம துட்டு இல்லபான்னு சொன்னாலே...அந்த நல்லவரு உசுரு போய்டுமாம்.. சரி அப்டின்னா அல்லா துட்டையும் வூட்ல ஒளிச்சு வச்சிகினு ஒன்யுமே இல்லன்னு சொல்றானே பிசினாரிப்பய அவன் உசுரு எப்படி போகும்..?

செர்ப்பால அட்ச்ச மேறி..சோக்கா கேட்டுகினாருப்பா "தல"

கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்.


தீனா "கொரலு"

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா 

இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

நீ கண்ணாலம் கட்டிக்க போற பொண்ணு... நீ பாக்காம இர்க்குற நேர்த்துல அப்டியே உன்னிய ஒரு லுக்கு உடுதுன்னு வை... அந்த லுக்கோட மீனிங்கு எப்டியாபட்டது தெரிமா..! நீ நாளிக்கு கண்ணாலம் ஆயி மொத ராத்திரில குஜாலா இர்க்குற சொகம் கூட்ய அதுல பாதி தானாம்... அந்த லுக்கு மேறி ஒரு பெர்ய குஜால் எத்யுமே இல்லியாம்..! 

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"பாக்காம பாக்குற பொண்ணோட கண்ணு.. சுகம் கொடுக்கறதுல நம்பர் ஒண்ணு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

கண்களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது.


தீனா "கொரலு" அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா 

இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

டைட்டா கட்டி புட்ச்சிகினு இர்க்க சொல்லோ எங்க இவுளுக்கு நோவுமேன்னு ஆம்பளை நெனிச்சுகினே கைய கொஞ்சம் லூசாக்குனா அந்தய சின்ன கேப்ப கூட தாங்காத பொம்பள நெனிப்பாளாம் இன்னாடா இது இந்த ஆளுக்கு நம்ம மேலே அன்பு குறஞ்சிட்ச்சா இல்ல நம்மள பிரிய போறானான்னு நெத்திய சுர்க்குவாளாம்..! குஜாலா பிரிறா மேறி சொன்னா...

"நீ கெட்டியா கட்டிப்புடிக்காத பொண்ணு.. அதுக்கு உடனே கலங்குமாம் கண்ணு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல்.


Monday 28 April 2014

குருஜி சொன்ன கதைகள்..!

ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

லதா பேரழகி..! காண்பவரை அசத்தும் அழகு மிகுந்தவள்.. அவ்வளவாக வசதி இல்லாத குடும்பம் அவளுக்கு தாய் இல்லை..தந்தை மட்டுமே வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் லதாவின் தந்தையும் மிகுந்த பாசத்துடன் அவளை வளர்த்தார்..!

ஒரு நல்ல இடத்தில் அவளை திருமணம் செய்து கொடுப்பது அவர் வாழ்வின் லட்சியம்.. அவர் தீவிரமாக மாப்பிள்ளை தேடும் வேளையில் தான் அந்த துயரச்சம்பவம் நடந்தது.! ஒரு சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார்..லதா மிகுந்த துயர் அடைந்தாள்...

இவ்வுலகில் அவள் இனி தனி மரம்.. தந்தையின் பிரிவு தாளாமல் அழுது புலம்பினாள் எல்லா காரியமும் முடிந்து 3 நாட்கள் ஆனா பின்பும் அவள் துக்கம் குறையவில்லை.. லதாவின் கல்லூரித் தோழி மட்டுமே துணைக்கு இருந்து அவளை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தாள்.

அப்போது துக்கம் விசாரிக்க லதாவின் தந்தை வேலை பார்க்கும் கம்பெனி முதலாளி வந்திருப்பதாக.. வந்தது முதலாளியின் இள வயது மகன்.. அழுது கொண்டிருந்த லதாவை அவன் பார்த்ததும் சற்று பிரமித்துப் போனான்.. அவள் அழகு அவனை திணற அடித்தது..!

சம்பிரதாயமாக அவளை விசாரித்து விட்டு.. உங்க அப்பாவுக்கு கம்பெனியில் இருந்து வரும் பணம் எல்லாம் முறைப்படி வந்துவிடும்..கவலை வேண்டாம் வேறு உதவி எதுன்னாலும் தயங்காமல் கேளுங்க" என்று சொல்லி கிளம்பப் போகும் போது தயக்கத்துடன் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லலாமா என்று கேட்டான்..! சொல்லுங்க என்றாள் லதா..

"எனக்கு இன்னும் திருமணம் ஆகலை.. உங்களுக்கு ஆட்சேபணை இல்லாட்டி நானே உங்களை திருமணம் செஞ்சுக்கிறேன்" இந்த துக்கத்துலயும் உங்க அழகு என்னை கவர்ந்திடுச்சு அதான் என் விருப்பத்தை சொல்லிட்டேன்", என்றான்..!

லதாவுக்கு கோபம் வந்தது "என்ன ஸார் பேசறிங்க துக்க வீட்டுல பேசுற பேச்சா இது".?என்றாள்... "சாரிங்க நான் இப்படி கேட்டது தப்பு தான்", என்று வேகமாக கிளம்பி போய் விட்டான்.. லதாவின் தோழி இப்போது லதாவிடம் வந்தாள்..

"ஏண்டி உனக்கு என்ன பைத்தியமா உன் துக்கத்துல பங்கெடுத்துகிட்டவர் வாழ்க்கையிலயும் பங்கெடுத்துகலாமான்னு எவ்வளவு கண்ணியமா கேட்டார்.. இப்படி கோபமா பேசிட்டியே... அவர் கேட்டதுல என்னடி தப்பு ", என்றாள்.

"இல்லடி இந்த துக்கத்துலேயும் நீங்க அழகா இருக்கேன்னு சொன்னாரே இதப் போயி அழகுன்னா... நான் அழாமல் இருக்கும் போது பாத்திருந்தா என்ன சொல்லியிருப்பாரு..? அந்த கோபம் தான்", என்றாள் லதா.

நீதி : அழகானவள் தான் அழகு என்பதை எந்த சமயத்திலும் மறக்கமாட்டாள்..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு மிகப்பெரும் செல்வந்தர் கையில் விலையுயர்ந்த வைரமோதிரம் அணிந்திருந்தார்.. அந்த மோதிரத்தில் உள்ள கற்கள் எல்லாம் உயர்ரக ஜாதிக்கற்கள்.! விருந்து ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது அந்த மோதிரத்திலிருந்து ஒரு கல் கழன்று விழுந்துவிட்டது.. அவரும்  அதை கவனிக்காமல் வீடு திரும்பிவிட்டார்.. கீழே விழுந்த கல்லை யாரும் கவனிக்கவில்லை.!

அந்த கல் பலரால் மிதிபட்டது அதன் மீது குப்பைகள் கொட்டப்பட்டது.. அதை வாரி ஒருவர் குப்பைத் தொட்டிக்குள் போட்டார் அங்கு உள்ள கழிவுகளுக்கு மத்தியில் வருத்தத்துடன் இருந்தது அந்த வைரக்கல்! நான் எவ்வளவு உயர்ந்தவன் என் ரகமென்ன, என் விலையென்ன, என் ஜாதி என்ன, என் அந்தஸ்து என்ன, இப்படி குப்பைக்குள் கிடக்கிறேனே",என்று..!

அப்போது குப்பையை கிளறி இரை தேட வந்தது ஒரு கோழி..! கோழியை பார்த்ததும் வைரக்கல்லுக்கு சந்தோஷம் இந்த கோழியின் கண்ணில் பட்டுவிட்டால் இந்த துர்நாற்றம் பிடித்த குப்பைத்தொட்டியிலிருந்து விடுதலை கிடைத்து விடும்.. இறைவா இந்த கோழியின் கண்ணில் என்னை பார்க்குமாறு செய் என வேண்டிக் கொண்டது..!

அது எதிர்பார்த்தது போலவே கோழி குப்பையை கிளற கிளற மேலிருக்கும் கழிவுகள் நீக்கப்பட்டு பளீரென மின்னியது வைரக்கல்.. திடீர் பிரகாசத்தை கண்டு கோழி பின் வாங்க வைரக்கல் கூறியது "கோழியே நான் விலையுயர்ந்த வைரம், மிகுந்த ராசியுடையவன், உயர் ஜாதி என்னை உன் சொந்தமாக்கிக் கொள்.. உனக்கு இது நல்ல சந்தர்ப்பம் என்றது"

கோழி அமைதியாகச் சொன்னது எனக்கு ஒரு சிறு புழுவோ, சிறு அரிசியோ, கிடைத்தால் பசியாறுவேன்.. உன்னை வைத்து என்ன செய்வது..? நீ மனிதர்கள் கண்ணில் பட்டால் பயனாவாய்... உன்னால் எனக்கு பயனில்லை.. எனக்கு பசிக்குது டோண்ட் டிஸ்டர்ப் என்றபடி குப்பையை கிளற தொடங்கியது..!

நீதி : தகுதியிள்ளவர் பயனில்லாத இடத்தில் இருப்பது எந்தப் பயனையும் தராது..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

காட்டில் ஒருநாள் யானையை வேட்டையாட வெட்டிவைத்த பள்ளத்தில் ஒரு ஓநாய் விழுந்து விட்டது..! எம்பி குதித்து பார்த்தும் தப்பிக்க வழியில்லாத ஓநாய் ஊளையிட்டுக் கொண்டே இருந்தது..அந்த குரல் கேட்டு சிறிய யானை ஒன்று வந்து பள்ளத்தில் எட்டிப் பார்த்தது..!

ஓநாய் நண்பனே.. பள்ளத்தில் உன்னை யாரும் தள்ளிவிட்டார்களா? அல்லது தவறி விழுந்து விட்டாயா.? எனக் கேட்டது யானை. சட்டென யோசித்த ஓநாய் யானையண்ணே.! என்னை யாரும் தள்ளியும் விடலை தவறியும் விழுகலை நானா தான் குதிச்சேன் என்றது..!

நீயாக குதித்தாயா..! ஏன் என்றது யானை', அதற்கு ஓநாய் "இது போல பள்ளத்தில் தானாக வந்து எந்த மிருகம் குதிக்கிறதோ அந்த மிருகத்துக்கு அபூர்வ சக்தி கிடைக்குமாம் இரு முனிவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன், உடனே குதித்து விட்டேன் என்றது.!

அப்படியா அபூர்வ சக்தி ஏதும் உனக்கு கிடைத்ததா.? யானை கேட்க.. இல்லை அதுக்கு இன்னும் ஒரு மணிநேரம் ஆகுமாம் உனக்கும் அது வேண்டுமானல் நீயும் குதியேன் என்றது ஓநாய்..எதுவும் யோசிக்காது மறுபேச்சின்றி யானையும் அக்குழிக்குள் குதித்தது..!

ஒரு மணிநேரம் ஆயிற்று...!  என்ன ஓநாயே ஒன்றும் நடக்க வில்லையே என யானை கேட்க அது தான் எனக்கும் தெரியவில்லை ஒன்று செய் நீ சற்று அமர்ந்து கொள் நான் உன் முதுகில் ஏறி வெளியே போய் அந்த முனிவர்களை கேட்டு வருகிறேன்" என்றது ஓநாய்..!

நீ வெளியேறிவிட்டால் நான் எப்படி மேலே வருவது என யானை கேட்க அதெல்லாம் நான் உதவுகிறேன் நீ இப்போது உதவு என்றது ஓநாய்.. அதன் பேச்சை நம்பி குனிந்த யானையின் முதுகில் தாவி அது நிமிர்ந்ததும் பள்ளத்தை விட்டு வெளியே குதித்தது ஓநாய்..!

ஓநாய்"சரிப்பா நான் கிளம்புறேன் என்று யானையிடம் சொல்ல.. நண்பா உதவிக்கு ஆள் அழைத்து வருவாயல்லவா என்று யானை கேட்க.. முட்டாள் யானையே உன்னை எப்படி காப்பாற்றுவது இதை நீ குதிப்பதற்கு முன் யோசித்திருக்கணும் என்று கூறி ஓடி மறைந்தது.!

நீதி : எதிலும் இறங்குவதற்கு முன் ஏறும் வழியை யோசிக்கவேண்டும்..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு நத்தை தினமும் இரை தேட செல்கையில் ஒரு கூட்டுப்புழுவை பார்க்கும்... அந்த புழுவின் வால் மட்டும் துடிக்கும் ஆனால் வேறெங்கும் நகராது.. நத்தை சொன்னது "ஏய் புழுவே நானே மிக மெதுவாக ஊர்பவன் ஆனால் நீ என்னிலும் சோம்பேறியாய் இருக்கியே"

என்னைப்பார் எவ்வளவு அழகான ஓடுகள்.! மெதுவாக போனாலும் தினமும் என் உணவை நானே தேடுகிறேன்.. ஆபத்து வந்தால் உடலை ஓடுக்குள் சுருக்கிக் கொள்கிறேன்..! மழைக் காலங்களில் மரத்தில் வசிக்கிறேன்.. நீ வாலை மட்டும் ஆட்டுகிறாய் இது ஒரு பிழைப்பா.?

கூட்டுப்புழு அமைதியாக இருந்தது... சில வாரங்களுக்கு பிறகு நத்தை அவ்வழியே செல்ல "ஹாய் நத்தை சார்" என்ற குரல் கேட்டது திரும்பினால் அழகிய வண்ணத்துப் பூச்சி..நத்தை யோசிக்க.."என்னைத் தெரியலையா நத்தை சார் நான் தான் கூட்டுப்புழு" என்றது..!

நத்தை ஆச்சரியப்பட வண்ணத்து பூச்சி தொடர்ந்து சொன்னது.. "நீங்க பாவம் நத்தை சார் மெதுவா ஊர்ந்து போறதும் இந்த ஓட்டுக்குள்ள இருந்து உடம்பை நீட்டுறதும் சுருக்குறதும் இதை தவிர உங்கள் வாழ்க்கையில பெருசா என்ன இருக்கு..! ஆனா என்னை பாருங்க...

சுதந்திரமா சுற்றி பறக்குறேன், அழகழகான பூக்களில் போய் உட்காருகிறேன், டெய்லி ஸ்வீட்டான தேன் சாப்பிடுறேன், மகரந்த சேர்க்கைன்னு ஒரு சேவையை இந்த பூமிக்கு செய்யுறேன்.. எல்லோரும் என்னை ரசிக்கும் படி அழகா இருக்கேன்..!

இப்ப சொல்லுங்க இப்ப யாருடைய பிழைப்பு உசத்தி..! என்று சொல்லி பறந்தது.. நத்தை தலை குனிந்தது..!

நீதி : யாரையும் குறைவாக எண்ணக் கூடாது..அவரவர் சிறப்பு பெரும் காலம் வரும்..!

ஜெ.வெ.

ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ரவியும் அவனது மனைவியும் ஆடம்பரமாக செலவு செய்வதில் வல்லவர்கள்.. சேமிப்பு என்பதே கிடையாது.. போதாத குறைக்கு ஊர் முழுவதும் கடன்..ரவிக்கு கடன் தந்து விட்டால் அவ்வளவு தான் திரும்ப வாங்குவது பூனைத் தும்பிக்கை..! (குதிரை கொம்பு பழசு)

அந்தக் கடனை வசூலிக்க வரும் யாருக்கும் இது வரை பணம் திரும்பக் கொடுத்ததில்லை.. அடிக்கடி வீடு மாறுவது மொபைல் மாற்றுவது இவற்றில் எல்லாம் ரவி கில்லாடி.. அவன் மனைவி எதில் ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் கணவனின் இந்த பிராடுக்கு பக்காத் துணை.

ஒரு நாள் ரவி வீட்டில் தன் புத்தம் புதிய பைக்கில் வந்து இறங்கினான்.. அது சமீபக் கடனில் வாங்கிய லேட்டஸ்ட் பைக்.. அந்த பைக்கை காம்பவுண்ட்டுக்குள் நிறுத்துகையில் தெரு முனையில் ரவிக்கு இந்த பைக் வாங்கக் கடன் கொடுத்தவர் நுழைவதை பார்த்தான்..!

அவருக்கு கடந்த மாதமே பணம் திருப்பித் தருவதாக வாக்களித்து இருந்தான்.. இந்தாளுக்கு எப்படி நம்ம வீடு தெரிஞ்சது?அவசர அவசரமாக வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக வீட்டிற்கு ஓடினான்,மனைவியிடம் விவரம் சொல்லிவிட்டு வீட்டிற்குள் மறைந்து கொண்டான்.!

கடன்காரர் வந்து கதவை தட்டினார்.. கூலாக கதவை திறந்த ரவியின் மனைவி யாரு நீங்க என்ன விஷயம் என்றாள்.. "ரவி சார் இல்லிங்களா மேடம்". அவரா வெளியே போயிருக்காரே" "இல்லிங்க மேடம் இந்த தெரு முனையில தான் என் பிரண்டு வீடு..! 

நான் வீட்டுக்குள்ள அவர்கிட்ட பேசிகிட்டு இருந்தேன் அப்ப ரவி ஸார் பைக்ல வந்ததை நான் பாத்தனே" என்றார்..வீட்டிற்குள் உள்ளே ஒளிந்து இருந்த ரவி இதைக் கேட்டு திடுக்கிட்டான் ஆகா வசமா மாட்டிக்கிட்டோமே நம்ம மனைவி இனி எப்படி சமாளிப்பா என்று பதறினான்..!

"அட இல்லிங்க ஸார் அவர் காலையில போனவர் நீங்க அவரை மாதிரியே வேற யாரையோ பார்த்து இருப்பிங்க"என்று சிக்ஸர் அடித்தாள்.? "அப்ப வாசல்ல நிக்குற பைக்கு "இது கடன் காரரின் பவுன்சர்..சற்று திடுக்கிட்டாள் ரவி மனைவி...

"அந்த டேபிளில்பாருங்க ஹெல்மெட்  இருக்கே"அடுத்த பவுன்சர்.. பொறுப்பில்லாது தான் மட்டும் ஒளிந்து கொண்டு ஹெல்மெட்டை ஒளிக்காத கணவனை நினைத்து எரிச்சலுற்றாள்.. சட்டென ஆமா சார் இந்த ஹெல்மெட் அவருது தான்..வாசலிலுள்ள பைக்கும் அவருதுதான்.

ஆனா அவரு என் ஸ்கூட்டிய எடுத்துகிட்டு இல்ல வெளியே போயிருக்கிறாரு..! என்று கடன் காரர் வீசிய 2 பவுன்சர்களிலும் 2 சிக்ஸர்கள் அடித்தாள்..ரவியே மிரண்டு போனான்.. சரிங்க நான் வந்ததா சார் கிட்ட சொல்லுங்க என்று கடன் காரர் கிளம்பினார்..!

அவர் சென்றதும் மறைந்திருந்த ரவி ஓடி வந்து மனைவியை கட்டிக் கொண்டான்.. சூப்பரா சமாளிச்சே.. இந்த ஹெல்மெட் மேட்டர்ல கொஞ்சம் பயந்துட்டேன்..என்றவனை பார்த்து "நான் புத்திச்சாலித்தனமா இல்லாம இருந்தா மாட்டி இருப்பிங்க"

"போயி வேற வீடு பாருங்க இந்தாளுக்கு வீடு தெரிஞ்சு போச்சு சீக்கிரம் மாறிடணும்" என்றாள்..! உன்னை மாதிரி புத்திசாலி பொண்டாட்டி இருக்குற வரைக்கும் எத்தனை பேர வேணா ஏமாத்தி எவ்வளவு கடன் வேணும்ன்னாலும் வாங்கலாம் என்றான் ரவி..!

மீண்டும் கதவு தட்டப்பட்டது.. சற்று திடுக்கிட்ட மனைவி சைகை காட்ட மீண்டும் ஒளிந்து கொண்டான் ரவி.. கதவை திறந்தால் நின்றது அந்த பிளாட் வாட்ச்மேன்.. என்னப்பா என்றாள்.. அம்மா யாரோ ஒருத்தர் ஐயாவோட பிரண்டாம்" இப்ப கூட வந்திருந்தாரே.!

ஆமாப்பா.. சார் பிரண்டு தான் ஏன் அவருக்கு என்னா..? அப்படா சார் பிரண்டு தானா இப்ப தான்மா நிம்மதி..! ஏன் உனக்கு என்னா நிம்மதி.? என்றவளிடம் "அம்மா ஐயா ஏதோ அவசரத்துல பைக் சாவிய வண்டியிலயே வச்சுட்டாரு போல..

அவரு பைக்கு கிட்ட வந்து அதை பார்த்தாரு சிரிச்சுகிட்டே வண்டிய ஓட்டிகிட்டு போய்ட்டாரு.. நான் திருடனோன்னு நினைச்சேன்.. நீங்க சார் பிரண்டுன்னு சொல்லி என் வயித்துல பாலை வாத்திங்க.. என்றபோது ரவி மனைவி முகத்தில் கொசுவாடவில்லை..!

நீதி : வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு..!

ஜெ.வெ.

ஜென் வெங்கி வழங்கும்..குருஜியின் நீதிக்கதைகள்..

ஆட்டோ... கைத்தட்டி அழைத்தான் ஹரி,போக வேண்டிய இடத்தை சொல்லிவிட்டு அமர்ந்தான். இன்னும் 10 நாளில் அவனது தங்கை திருமணம், பணப்பற்றாக்குறைக்கு தான் இப்போது ஒருவரை பார்த்து விட்டு வருகிறான்..! அவரும் கை விரித்து விட்டார்..!

ஆத்திரமாக வந்தது அவனுக்கு..பேசாம எங்கயாவது கொள்ளையடிச்சிடலாமா என்று கூட யோசித்தான்.. தற்செயலாக ஆட்டோ சீட்டின் பின் பகுதியில் கை வைக்க ஒரு சிறிய பேக் தட்டுப்பட்டது.. மெல்ல அதை எடுத்தான் கனமாக இருந்தது..! மெதுவாக அதை திறந்தான்..

உள்ளே புது 1000 ரூபாய் கட்டு 3 இருந்தது கிட்டத்தட்ட 3 இலட்சம்..ஹரியின் தேவையே 2 லட்சம் தான்... இப்போது கையில் 3 லட்சம்..! நம் மீது இரக்கம் கொண்டு கடவுளாக பார்த்து தான் நமக்கு இப்படி ஒரு உதவி செய்து இருக்கிறார்..! என்று நினைத்தான்.

மனசாட்சி சொன்னது இது யார் பணமோ போய் காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவோம்.. ஆனால் ஹரி தான் வென்றான்.. மெல்ல அந்த பையை எடுத்து மறைத்துக் கொண்டு ஆட்டோவை நிறுத்த சொன்னான்..பேரம் பேசாது பணம் தந்துவிட்டு இறங்கினான்..!

அங்கிருந்து ஒரு பஸ் பிடித்து வேறு ஒரு இடம் போய் மீண்டும் அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தான்..(முன் ஜாக்கிரதை) பணம் கிடைச்சதாங்க என்று கேட்ட மனைவியிடம் கிடைச்சது என்று மட்டும் சொல்லி பணத்தை அவளிடம் தந்தான்..!

பணத்தை வாங்கிய ஹரியின் மனைவி.. "என்னங்க 3 லட்சம் இருக்கு 2 லட்சம் தானே தேவை என்றாள்.."இங்க பாரு உன் கழுத்துல காதுல பேருக்கு கூட தங்கமில்ல உனக்கும் ஏதாவது வாங்கிக்க தங்கமா இருந்தா நாளைக்கு உதவும்"என்றான் ஹரி..!

நகை என்றதும் மனைவிக்கு மகிழ்ச்சி..அன்று மாலையே நகைக்கடைக்கு கிளம்பினார்கள் தேவையானதை ஆசை தீர தேர்ந்தெடுத்து வாங்கினார்கள்.. பிறகு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்ப... வீட்டு வாசலில் போலீஸ் வாகனம் நின்று கொண்டிருந்தது..!

ஹரிக்கு லேசாக உதறலெடுத்தது..நீங்க தானே மிஸ்டர் ஹரி.. என்றார் அந்த அதிகாரி ஆ..ஆ.ஆமா சார் என்ன ஸார் எ..எ.. எதுவும் பிரச்சனையா..? என்றவனை மேலும் கீழும் பார்த்த அதிகாரி வாங்க வீட்டுக்குள்ள போயி பேசுவோம் என்றார்..! 

வீட்டை திறந்ததும் உடன் வந்த போலீசார் வீட்டிற்குள் சோதன போட ஆரம்பித்தார்கள் என்ன சார் இது"என்றவனிடம் அதிகாரி சொன்னார் நகைக் கடையில நீங்க கொடுத்தது எல்லாம் கள்ளநோட்டு..அதான் உங்களை விசாரிக்க வந்து இருக்கோம்..!

நீதி : பிறர் பொருளை தனதாக்க நினைப்பது பெரும் துன்பத்தை தரும்...

ஜெ.வெ.


ஜென் வெங்கி வழங்கும்..குருஜியின் நீதிக்கதைகள்..

பேராசை பிடித்த குதிரை வியாபாரி ஒருவன் இருந்தான்.. அவன் ஒரு நாள் குதிரைச் சந்தைக்குப் போய் குதிரைகளை விற்று விட்டு வீடு திரும்பும் போது.. அவனை பின் தொடர்ந்தது எங்கிருந்தோ தப்பி ஓடி வந்த குதிரை ஒன்று.! குதிரை வியாபாரி.....

இந்தகுதிரை யாருடையதோ ஊர் எல்லையை தாண்டிய பின்னும் இக்குதிரை நம் பின் வந்தால் இதை எப்படியாவது நம் வீட்டுக்கு கொண்டு போய்விடலாம் என்று நினைத்தான்.! அதே போல குதிரையும் அவனை எல்லையை தாண்டியும் பின் தொடர்ந்தது..! 

சந்தோஷமடைந்த அவன் தன் யுக்திகளால் அதற்கு கடிவாளமிட்டு தன்னுடைய குதிரைகளை விற்ற பணம் உட்பட எல்லா பொருட்களையும் அதன் மீது ஏற்றினான்.. அப்போது அவ்வழியே வந்த வழிப்போக்கன் குதிரையை பார்த்து ஐயா, இந்த குதிரை விலை என்ன என்றான்..!

மனதிற்குள் குதூகலமடைந்த வியாபாரி..பேராசையுடன் பெரும் விலை சொன்னான்.. அதை கேட்ட வழிப்போக்கன்.. "ஐயா நான் அருகிலிருக்கும் ஊருக்கு தான் போகிறேன் என் மாமா அங்கு பெரும் செல்வந்தர்.. அவரிடம் நீ கேட்ட தொகையை வாங்கித் தருகிறேன் என்றான்.!

அந்த ஊர் தான் குதிரை வியாபாரி ஊர்.. "சரி அங்கு வந்து பணம் தா.. ஆனால் அங்கு வந்த பின் விலையில் ஒரு பைசா கூட குறைக்கமாட்டேன் சம்மதமா என்றான்" வியாபாரி. வழிப்போக்கனும் சரி எனச் சொல்ல.. வியாபாரிக்கு மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி..!

ஓசியில் கிடைத்த இந்த குதிரை யாருடையதோ ஆனால் நமக்கு பெரும் லாபம்.. என்று எண்ணினான்.. சிறிது நேரத்தில் சற்று ஓய்வுக்காக ஒரு ஆற்றங்கரையில் நின்றார்கள்.. குதிரையை கரையில் ஒரு கல்லில் கட்டிவிட்டு ஆற்றில் சுகமாக குளித்தான் வியாபாரி..!

குளித்து விட்டு வந்து பார்க்கும் போது நின்ற குதிரையின் நிழலில் அசந்து தூங்கிக் கொண்டு இருந்தான் வழிப்போக்கன்..! பேராசை பிடித்த வியாபாரிக்கு இப்போது ஒரு யோசனை உதித்தது.. மெல்ல குதிரையை அவிழ்த்துவிட்டு வழிப்போக்கனை எழுப்பினான்...!

எழுந்த வழிப்போக்கன்.. போகலாமா ஐயா என்றான்.. அதெல்லாம் போகலாம் அதற்கு முன் குதிரை விலையில் ஒரு மாற்றம் என்றான் வியாபாரி.! எதற்கு ஐயா இந்த திடீர் மாற்றம்.. நான் உனக்கு குதிரையின் விலை தான் சொன்னேன் குதிரையின் நிழலுக்கு அல்ல...! ஆகவே

அதை பயன்படுத்தியதற்காக அதற்கும் ஒரு விலை நீ தர வேண்டும் என்றான் வியாபாரி..! கோபமடைந்த வழிப்போக்கன் ஐயா.. இது அநியாயம் குதிரை நிழலுக்கு விலை என்பது இது வரை நான் கேள்விப்படாதது..நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்கள் என்று சத்தம் போட...

உன்னை போன்ற கயவனுக்கு என் குதிரை விற்பனைக்கு அல்ல.. மரியாதையாக குதிரை நிழலுக்கு பணம் தா என வியாபாரி கூச்சலிட அவர்களுக்குள் சண்டை நடந்தது... இந்த இடை வெளியில் அந்தக் குதிரை வியாபாரியின் பொருளுடன் காட்டுக்குள் ஓடி மறைந்தது..!

நீதி : பேராசை இருப்பதையும் பறித்துவிடும்..!

ஜென் வெங்கி


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ரவி புத்திசாலி மாணவன்.. மிக மிக நன்றாகப் படிப்பான்..ஹரி சுமாராக படிப்பான் ஆனால் கடும் உழைப்பாளி.. ரவிக்கு மருத்துவகல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும் என்பது லட்சியம்.. எனவே படிப்பு படிப்பு.. என கவனம் சிதறாது படித்தான்.. பலன்..! மாநிலத்தில் முதலிடம்..!

ஹரி ப்ளஸ்டூ பெயில்..! ரவி சொன்னான் "நண்பா கல்வி தான் உயர்ந்தது.. நீ இப்படி படிக்காமல் போனதற்கு பின்னாளில் வருந்துவாய்., படிப்பு இன்றி நீ வாழ்க்கையில் உயரவே முடியாது..நான் மருத்துவகல்லூரி சீட் கிடைத்ததும் டவுனுக்கு போய்விடுவேன்.. வரட்டுமா..

15 ஆண்டுகள்..ரவி MBBS முடித்து MS முடித்து லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பல மருத்துவ பட்டங்கள் பெற்று மிகச்சிறந்த மருத்துவனாக பேர் பெற்றான்.ஆனால் அவனது மருத்துவ கல்லூரி பேராசிரியர் கனவு தான் நிறைவேறவில்லை..!

இந்நிலையில் ரவிக்கு அந்த ஊரில் புதிதாக துவங்க உள்ள மருத்துவ கல்லூரியின் முதல்வராக முடியுமா எனக்கேட்டு ஒரு அழைப்பு வந்தது.. அழைத்தவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனத்தினர்.. அவர்களது குழுமத்தின் கல்லுரியே இது..!

எதையும் தரமாக செய்யும் நிறுவனம் அது.. ஆகவே அந்த பணியில் சேர சென்றான்.. அந்த கம்பெனியின் ஜெனரல் மேனேஜர் ரவியை வரவேற்று சேர்மனிடம் அழைத்து சென்றார்.. சேர்மனை பார்த்த ரவி வியப்பும் திகைப்பும் அடைந்தான்..அது ப்ளஸ்டூ பெயிலான நம் ஹரி.!

நீ,,,.ஹரி...நீங்க ஹரி.. சாரி.. அடடே என்ன ரவி.. நான் எப்பவுமே உன் ஹரி தான்... புரியுது என்னடா சேர்மன் சீட்டுல இவன்னுதானே யோசிக்கிற சொல்றேன்.. ப்ளஸ்டூ பெயிலானதும் அப்பாவோட ஹார்பர் வேலைக்கு போனேன்.. 6 மாசத்துல நெளிவு சுளிவு கத்துகிட்டேன்..!

அப்போ சில காண்டிராக்ட் கிடைச்சது ஆனா கையில பணம் இல்ல.. அப்பாவுக்கு ஹார்பர்ல ஒரு விபத்தாகி இறந்துட்டார்... அதுல நஷ்ட ஈடா பணம் வந்தது அத வச்சி காண்டிராக்ட் எடுத்தேன்.. அப்பா உயிர கொடுத்து கிடைச்ச காசில்லியா வெறியோட உழைச்சேன்..!

4 வருஷத்துல ஒரு கப்பல் வாங்கினேன்..அதுக்கு பிறகு முன்னேற்றம் தான் இன்னிக்கு 103 நாடுகளில் எங்க நிறுவனம் இருக்கு.. ஏராளமான தொழில்கள் செய்யறேன்... நான் அதிகம் படிக்கலை ஆத்ம திருப்திக்காக கல்விப்பணியில இறங்கி இருக்கேன்..

மெடிக்கல் காலேஜ்ன்ன உடனே நீ தான் ஞாபகத்துக்கு வந்தே.. ஸ்கூல் படிக்கும் போதே உன் திறமை எனக்கு தெரியும்... நான் தான் உன்னை இந்த பதவிக்கு பொருத்தமா இருப்பேன்னு சிபாரிசு செஞ்சேன்.. இங்க பொறுப்பு ஏத்துக்க உனக்கு சம்மதம் தானே ரவி..?

படிப்பு மட்டும் தான் வாழ்க்கையில உயர்ந்தது.. தோல்வி ரொம்பவும் தாழ்ந்ததுன்னு நினைச்சேன்... உழைப்பு அது எல்லாத்தையும் விட உயர்ந்ததுன்னு இப்ப தெரியுது.. எனக்கு கிடைச்ச வெற்றி ஒரே ஒரு டாக்டரை தான் உருவாக்கி இருக்கு...!

ஆனா உன் தோல்வி ஆயிரக்கணக்கான டாக்டர்களை உருவாக்கப் போகுது...! என்னை மாதிரி நூற்றுக்கணக்கான டாக்டர்களுக்கு வேலை தரப்போகுது...! என்ன மன்னிச்சுடு ஹரி" என்ற ரவியை நட்புடன் தழுவிக் கொண்டான் ஹரி..!

நீதி : உயர்வும் தாழ்வும் செயற்கையான வேறுபாடுகள் ... ஜென்வெங்கி..


ஜென் வெங்கி வழங்கும்..குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு ஊரில் நண்பர்கள் இருவர் இருந்தனர்.. ஒருவன் பெயர் ரவி.. இன்னொருவன் ஹரி.. இருவரும் ஒரு நாள் ஆற்றங்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.. அப்போது நீரில் கட்டை போல ஒன்று மிதந்து வந்ததை கண்டனர்..உடனே ஹரி ஆற்றில் இறங்கப்போனான்!

பதறிப்போன ரவி "நண்பா சற்று நில்.! அது மரக்கட்டையாக இல்லாமல் முதலையாக இருந்தால்" வேண்டாம் ஆபத்து என்று ஹரியைத் தடுத்தான்.. அதற்கு ஹரி "ரவி நன்றாகப் பார் அது அசைவற்று கிடக்கிறது அது கட்டைதான் முதலை இல்லை என்றான்"..!

"இல்லை ஹரி முதலைகளும் இப்படித்தான் அசைவற்று கிடக்கும் இதை நம்பி அருகில் சென்றால் ஆளை விழுங்கி விடும் அதன் இரை பிடிக்கும் யுக்தி அது என்றான் ரவி.. "ரவி இது மரம் தான் முதலை இல்லை நான் நம்பவே மாட்டேன் "என்றான் ஹரி..!

எப்படி அவ்வளவு உறுதியாக இது மரம் என்கிறாய் ஹரி..! "அது தான் அசைவற்று கிடக்கிறதே முதலையாக இருந்தால் அசையுமே ரவி" என்று முன்பு சொன்னதையே திரும்பச் சொன்னான்... சரி இரு நான் உனக்கு இது மரமா முதலையா என்று நிரூபிக்கிறேன்"...

என்று சொல்லிவிட்டு ரவி அருகில் தரையில் விழுந்து இருந்த நீண்ட மரக்கிளையை எடுத்து அந்த கட்டை மீது குத்த அது விருட் என்று தண்ணீருக்குள் நீந்தி மறைந்தது..! இப்போது ரவி ஹரியிடம்"நண்பா மரம் என்றாயே பார்த்தாயா அது முதலை ஒப்புக் கொள்கிறாயா"என்றான்!

அதிசயம் தான் என்றான் ஹரி..! எது அதிசயம் ஹரி முதலையா என்று ரவி கேட்க.. ஹரி நிதானமாக சொன்னான் "என் வாழ்வில் முதன் முறையாக ஒரு மரக்கட்டை நீந்திச் செல்வதை இப்போது தான் பார்க்கிறேன் என்றான்..!

நீதி : சிலர் வாழ்வில் பாடங்கள் கற்பதே இல்லை (அ) பட்டாலும் புத்தி வராது..!


ஜென் வெங்கி வழங்கும்..குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு மிகப் பெரிய தொழிலதிபர் இருந்தார் கோடிக்கணக்கான பணம், ஏராளமான தொழிற்சாலைகள் என உலகம் முழுவதும் சொத்து இருந்தது..! அவர் தன் சொந்த கிராமத்திற்கு சென்று வெகு காலம் ஆகிவிட்ட படியால் அங்கு போய் வர தயாரானார்..!

தனது புத்தம் புது BMW காரில் ஏறி புறப்பட்டார்..அங்கு சாலையோர வயலில் ஒரு விவசாயி மண் வெட்டிக் கொண்டிருந்தார். அவரது உடலில் வியர்வை ஆறாக ஓடியது,அருகிலிருக்கும் மரத்தில் அவரது மதிய உணவு ஒரு பித்தளை தூக்குவாளியில் தொங்கிக் கொண்டிருந்தது..!

தொழிலதிபருக்கு சட்டென ஒரு ஏக்கப் பெருமூச்சு.. அட..! இந்த விவசாயிக்கு தான் என்ன வாழ்க்கை... தினமும் உழைக்கிறான்.. கிடைக்கும் வருமானத்தில் கூழோ, கஞ்சியோ குடிக்கிறான்.. உடல் உழைப்பு இருப்பதால் ஆரோக்கியமாகவும் இருக்கிறான்..!

நம்மைப் போல இன்கம்டாக்ஸ், மார்க்கெட்டிங் போட்டி, பங்குசந்தை, அந்நியச் செலவாணி, அரசியல் களவாணி, இப்படி எந்த பிரச்சனையும் இல்லை.. இதெல்லாம் என்ன பிழைப்பு..? இவரைப் போல விவசாயி ஆவது நிம்மதி.. அது தான் நல்ல பிழைப்பு என எண்ணினார்..! 

இவரது கப்பல் போன்ற கார் தன் வயலுக்கு அருகே நின்றதால் அந்த விவசாயி யாராக இருக்கும் எனப் பார்க்க கார் அருகே வந்தார்..!கார் கதவை திறந்து இறங்கிய தொழிலதிபர் பரஸ்பரம் அறிமுகப் படுத்திக் கொண்டார்.. உடனே அந்த விவசாயி.. 

ஐயா.. நம்ம ஊர்காரரா போயிட்டிங்க பெரிய முதலாளி ஏகப்பட்ட தொழில்ன்னு சொல்றிங்க உங்க பேக்டரியில எனக்கு ஒரு வேலை கிடைக்குமா என்றார்.! ஏன் இப்ப நீங்க சந்தோஷமா தானே இருக்கிங்க என்று வியப்புடன் கேட்டார் அதிபர்..! 

எங்கங்கய்யா தினமும் மாடா உழைக்கிறேன், அரைவயிறு கூழோ கஞ்சியோ கிடைக்குது மழை பொய்ச்சுடுச்சு... ரத்தமெல்லாம் வியர்வையா போயி என்ன பிரயோசனம்..? அய்யா ஒரு வேலை தந்திங்கன்னா டவுனு பக்கம் போயி குடியேறிக்கலாம்..!

நெதமும் அரிசி சோறு சாப்பிட்டு பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கலாம் டவுன் வேலைன்னா வூட்டுல எல்லாரும் ரொம்ப சந்தோஷப் படுவாங்க..என்ன மாதிரி கஷ்ட ஜீவனக்காரன் வயக்காட்டுல உழைக்கிறது எல்லாம் ஒரு பொழைப்பா என்றார்..!

நீதி : இக்கரை அக்கரை இரண்டுமே பச்சையில்லை..!

ஜென் வெங்கி


குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு ஊரில் ரவி என்பவனும் ஹரி என்பவனும் வசித்தனர்.. இருவரும் நல்ல நண்பர்கள் இதில் ரவி எப்போதும் உண்மை தான் பேசுவான்.. ஹரி அப்படியே நேரெதிர் குணம்.! வாயைத் திறந்தால் பொய் தான்.. ஆனால் இந்த குணத்தால் அவர்களது நட்பில் பிரச்சினை இல்லை.!

ஒரு முறை இருவரும் ஒரு காட்டிற்கு சுற்றுலா சென்றார்கள்.. அந்தக்காட்டில் இருவரும் வழி மாறி சென்றபோது..அங்கே சில விந்தையான மனிதர்களை பார்த்தார்கள்.. அவர்கள் அனைவரும் மனித உடலில் தவளை தலையை பொருத்தியது போல இருந்தனர்..!

அவர்களது சருமமும் தவளைகளின் சருமம் போல் சொரசொரப்பாகவும் அருவெறுக்கும்படி இருந்தது.. ஆண்,பெண்,சிறு குழந்தைகள் எல்லோரும் தவளைகள் போல குதித்து குதித்து நடந்தனர்..அவர்களின் மேலிருந்து மெல்லிய துர்நாற்றமும் அடித்தது..!

இவர்களை சூழ்ந்து கொண்ட அந்த தவளை மனிதர்கள்..எங்கள் இடத்தில் அத்துமீறி நுழைந்தால் தண்டனை உண்டு..வாருங்கள் எங்கள் தலைவனை சந்திக்க என்று இருவரையும் இழுத்து போனார்கள்.. அவர்கள் தலைவன் இவர்கள் இருவரையும் பார்த்தான்..!

மனிதர்களே..உங்களுக்கு ஒரு வாய்ப்பு..! எங்கள் தவளை தேசத்தை பற்றியும், எங்கள் மக்களை பற்றியும் எங்கள் அழகைப் பற்றியும் உண்மையாக என்ன நினைக்கிறீர்கள் என்று சொன்னால் அந்த உண்மைக்கு பரிசாக உங்களை விடுவித்து விடுவேன் என்றான்..!

பொய்யன் ஹரி.. "தன்னிகரில்லா தவளை அரசரே..! உலகிலேயே சிறந்த நாடு இந்த தவளை நாடு..நீங்கள் அனைவரும் அழகாக இருக்கிறீர்கள்.. உங்கள் சீரிய ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்கின்றனர்.! உங்கள் மீது வீசும் நறுமணம் எந்த பூவிலும் இல்லை"என்றான்.!

தவளை அரசனுக்கு மிக்க மகிழ்வாக இருந்தது.. சபாஷ்..நீ கூறியது எல்லாம் எங்களை கவர்ந்து விட்டது..உனக்கு பொன்னும் பொருளும் பரிசாகத் தர உத்தரவிடுகிறேன்.. என்று கூறிவிட்டு ரவியிடம் திரும்பி... சரி நீ என்ன நினைக்கிறாய்..? என்று கேட்டான்..!

பொய் சொன்ன ஹரிக்கே இவ்வளவு பொன்னும் பொருளும் என்றால் நாம் பேசும் உண்மைக்கு..! என்று எண்ணியபடி.. அரசே நீங்கள் அனைவரும் சொறித் தவளை போலவே இருக்கிறீர்கள், அவலட்சணமான அழகும், துர்நாற்றமடிக்கும் உடலும் சகிக்கவில்லை..!

தவளைகளுக்கெல்லாம் தவளையாக நீங்கள் ஆட்சி நடத்துகிறீர்கள்..என்றான் ரவி..! கடுங்கோபம் அடைந்த தவளைஅரசன்.. யாரங்கே... நம் குலத்தை இழிவாக பேசிய இவனை நையப் புடைத்து கொன்று காட்டின் எல்லையில் புதைத்து விடுங்கள் என்று கத்தினான்..!

பிறகு ஹரி அந்த அரசனை சமாதானப் படுத்தி எனக்கு தர வேண்டிய பரிசுக்கு பதிலாக என் நண்பனை விட்டு விடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டு ஒரு வழியாக இருவரும் வீடு திரும்பினர்.!

நீதி : உண்மையை கேட்கும் தகுதியில்லாதவரிடம் உண்மை பேசக்கூடாது..!

ஜென் வெங்கி


குருஜியின் நீதிக்கதைகள்...

இரண்டு அடுத்தடுத்த வீடுகளின் இருபக்கமும் காலி இடம் இருந்தது.. இதில் வலது புற காலியிடம் அந்த ஊர் அரசியல்வாதிக்கு சொந்தமானது.. இடது புற காலியிடம் அதை ஒட்டி இருந்த வீட்டுக்காரருக்கு சொந்தமானது.. அந்த வீட்டுக்காரர் பரம சாது...பெயர் ராமு..

அந்த ராமுவின்அடுத்த வீட்டுக்காரர் பெயர் தாமு... அவர் தினமும் தன் வீட்டுக் குப்பைகளை அந்த காலியிடத்தில் கொட்டிவந்தார்.. அவரிடம் நம் ராமு எவ்வளவோ முறை பேசியும் கெஞ்சிப் பார்த்தும் அவர் அதை மதிக்கவுமில்லை, குப்பை கொட்டுவதை நிறுத்தவுமில்லை.!

ஒருநாள் தாமு வீட்டில் ஒரு விசேஷம்..! அந்த விசேஷத்தில் விருந்து சாப்பிட்டவர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை கொண்டு வந்து ராமுவின் காலியிடத்தில் கொட்டிவிட்டார்.! ராமு சாதுவாக இருப்பினும் இந்தச் செயல் அவருக்கு கடுங்கோபத்தை உண்டாக்கியது..!

நேராக தாமு வீட்டுக்கு சென்று சத்தம் போட்டார்.. என்னை என்ன கிள்ளுகீரையாக நினைத்தீரா? என் இடத்தில் குப்பையை கொட்டுகிறீரே..எங்கே தைரியமிருந்தால் உங்க வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் அரசியல்வாதி இடத்தில் கொட்ட வேண்டியது தானே என்றார்.!

தாமு அமைதியாக சொன்னார்.. ராமு சார் நானும் அப்படி நினைப்பதுண்டு ஆனால் அது அரசியல்வாதியின் இடம் அவர் நினைத்தால் என்னை இந்த வீட்டை விட்டே காலி செய்து விடுவார்.. அவரோடு மோதும் திராணி எனக்கில்லை..நீங்கள் சாது அதிக பட்சமாக இந்த மாதிரி வந்து கேள்விதான் கேப்பிங்க.. உங்களை சமாளிப்பது எனக்கு சுலபம் என்றார்..!

நீதி : செயலாகும் இடத்தில் தான் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்..!

ஜென் வெங்கி



குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு மலைக்கிராமத்தில் கோவில் ஒன்று கட்டினார்கள்..அந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய ஸ்வாமி சிலையை அடிவாரத்தில் உள்ள ஒரு சிற்பியிடம் தந்திருந்தார்கள்.. அவரும் குறித்த நேரத்தில் அதை பயபக்தியுடன் சிறப்பாக செய்து முடித்து விட்டார்...!

ஆனால் அதை எடுத்து செல்லும் நாளில் பேய்மழை மலை ஏறும் சாலையில் மண்சரிந்து மரங்கள் விழுந்து எந்த வாகனமும் போக முடியாது போனது.. இந்த வழியை சீர்படுத்த குறைந்தது ஒரு வாரம் ஆகலாம்.. ஆனால் ஒரிரு தினங்களில் கும்பாபிஷேகம்..! 

இப்போது அதை எப்படி மேலே எடுத்துப் போவது..? என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருந்த போது அந்த ஊர் சலவைக்காரர் அவ்வழியே வந்தார்.. இவரிடம் உள்ள கழுதையில் ஏற்றினால் விடிவதற்குள் மலைக்கு போய்விடலாமே என்றார் சிற்பி..!

அந்த யோசனை அனைவருக்கும் பிடித்திருந்தாலும் கடவுள் சிலையை கழுதை மேல் ஏற்றுவதா என யோசித்தார்கள்.. திருவுளச்சீட்டு போட்டு பார்க்கலாமே என்றார் ஒருவர்.. அனைவரும் அதை ஆமோதிக்க சீட்டு போட்டதில் கழுதை மீது ஏற சம்மதம் வந்தது..!

உடனே கழுதையை நீராட்டி மாலை அணிவித்து அதற்கு நல்ல உணவுகள் தந்து சிலையை அதன் மேல் ஏற்றினார்கள்.. அந்தக் கழுதையும் ஸ்வாமியை சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தது.. செல்லும் வழியெங்கும் மக்கள் கைகூப்பி வணங்கினார்கள்..!

கழுதைக்கு பெருமையாக இருந்தது இத்தனை மனிதர்கள் நம்மை வணங்குகிறார்களே.. நாம் மிகப்பெரியவன் என்று கர்வப்பட்டது.. இந்த சந்தோஷத்தில் வேகமாக நடந்து குறித்த நேரத்திற்கு முன்பாகவே அந்த கிராமத்திற்கு போய் சேர்ந்து விட்டது அக்கழுதை..!

அந்த ஊரிலும் ஸ்வாமியை கொண்டுவந்த கழுதை என்பதால் தடபுடலாக வரவேற்றார்கள்..
சிலர் கீழே விழுந்தெல்லாம் வணங்கினார்கள்.. கழுதைக்கு தங்க நல்ல வசதியான இடம் தந்து..சுவையான உணவும் தந்தார்கள்..! கழுதைக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி..!

மறுநாள் சலவைக்காரர் அதை கீழே அழைத்து போக வந்தார்.. அவரிடம் கழுதை சொன்னது இனி நான் பொதி சுமக்க மாட்டேன்.. நான் போற்றுதலுக்குரியவன், ஆகவே நீயும் என்னை வணங்கு என்றது..! வணங்கவா உன்னையா என்ன இது புதுப்பழக்கம் கழுதையே என்றார்..!

உனக்கு தெரியாது நான் மலை ஏறி வரும்போது மக்கள் என்னை வணங்கினார்கள்.. ஏன் காலில் கூட விழுந்தார்கள்.. எனக்கு எப்படி மரியாதை அளித்தார்கள் தெரியுமா..? நீ அதெல்லாம் பார்க்கவில்லையே என்றது கழுதை..! 

முட்டாள் கழுதையே..! அந்த மரியாதை உனக்கு அல்ல நீ சுமந்து வந்த கடவுளுக்கு தான்...என்றுகூறி கழுதையை அடித்து இழுத்துபோனார் அந்த சலவைக்க்காரர்..!

நீதி : நமக்கு சேராதவைகளுக்கு சொந்தம் கொண்டாடக்கூடாது...!

ஜென் வெங்கி



குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு ஊரில் உலகநாதன் என்பவர் வசித்து வந்தார்.. அவர் எப்போதும் பிறருக்கு ஏதாவது அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்..! அவரை அனைவரும்"உபதேசம் உலகநாதன்" என்று அழைப்பார்கள்.. ஒரு நாள் அவர் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார்..!

அப்போது ஒரு வீட்டில் திகு திகு வென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது உள்ளே ஒரு குடும்பம் மாட்டிக் கொண்டு உதவி உதவி என அலறிக் கொண்டிருந்தது.. அந்த வீட்டின் ஜன்னலுக்கு அருகே அந்த குடும்பத்தலைவன் கத்திக் கொண்டிருந்தார்..!

நம் உலகநாதன் அங்கு போய் "கவனக்குறைவாய் இருப்பதே தீ விபத்திற்கு காரணம்.. தீயை கவனமாகக் கையாளவேண்டும்" என்றெல்லாம் தன் உபதேசத்தை ஆரம்பித்தார்.. அப்போது விரைந்து வந்த தீயணைப்பு வண்டி வந்த வேகத்தில் அனைவரையும் காப்பாற்றியது..!

யாரோ ஒரு நல்லவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து இருப்பார் போல.. காப்பாற்றப்பட்ட குடும்பத்தலைவனிடம் மீண்டும் போய் நம் உலகநாதன் எப்படி என் அறிவுரை இனி அப்படி நடந்து கொள்வீரா? எனக்கேட்டார். அந்த வீட்டுத்தலைவர் எரிச்சலுடன்...

யோவ் நிறுத்துய்யா.! எப்ப பாத்தாலும் உபதேசம் பண்ணிகிட்டு.. முதலில் ஆபத்துல இருக்குறவனுக்கு உதவி செய்ய கத்துக்கோ.. ஏன்னா உன் உபதேசத்தை கேக்க நாங்க உசுரோட இருக்கணுமில்ல என்றார்.. வெட்கி தலை குனிந்தார் உலகநாதன்..!

நீதி : உதவமால் செய்கிற உபதேசத்திற்கு மரியாதை இல்லை...!

ஜென் வெங்கி


குருஜியின் நீதிக்கதைகள்...


அரசியல்வாதி ஒருவர் அதிக வருமானத்திற்கு என்ன செய்வது யோசித்து தன் உதவியாளரை அழைத்தார்.. "இதோ பார் நீ என்ன செய்வாயோ எனக்கு தெரியாது லஞ்சம் ஊழல் செய்து மாட்டிக்கொள்ளாமல் எனக்கு வருமானம் வர வேண்டும்" என்றார்..!

அதற்கு அந்த P.A அப்படி செய்தால் எனக்கு என்ன தருவீர்கள் தலைவரே..! எனக்கேட்டார்.. அரசியல்வாதியும் அப்படி வருமானம் வந்தால் அதில் கால் பங்கு உனக்கு என்றார்.. உதவியாளர் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார்..அந்த உதவியாளர் ஐடியா என்னவென்றால்..

ஏதாவது ஒரு நிவாரண நிதி என்று பெயரிட்டு மக்களிடையே பணம் வசூலித்தால் ஊழல் பிரச்சினைகள் வராது...பொதுப்பணம் என்பதால் வரி விலக்கும் கிடைக்கும் என 2 மாங்காய் அடிக்கும் யோசனையை செயல்படுத்தினார்..புயல்,வெள்ளம்,பூகம்ப நிவாரணம்...

என விதவிதமாக பெயர் வைத்து பொது மக்களிடையே வசூலிக்க ஆரம்பித்தார்.. அரசியல்வாதியின் P.A. என்பதால் யாரும் இல்லை எனச் சொல்லாது நிதியளித்தார்கள்.. அது 10 ஆயிரமாக இருந்தாலும் 10 ரூபாயாக இருந்தாலும் வாங்கிக் கொண்டார்..!

குவிந்த பணத்தை அரசியல்வாதியிடம் கொடுத்தார் P.A. ஆவலுடன் அதை எண்ணிப்பார்த்த அரசியல்வாதி எல்லாவற்றையும் தன் பீரோவில் வைத்து பூட்டினார்..பதறிப்போன P.A. தலைவரே என் கால் பங்கு எங்கே மறந்துட்டிங்களா..? என்றார்..!

அரசியல்வாதி அலுப்புடன் சொன்னார் "நான் என்னப்பா செய்ய உனக்கு கால் பங்கு கொடுக்கலாம்ன்னு தான் நினைச்சேன் ஆனா நீ கொண்டு வந்த வசூலை எண்ணிப் பார்த்ததில் மக்களே கால்பங்கு கழிச்சுதானே கொடுத்து இருக்காங்க.இந்தப் பணம் நான் எதிர்பார்த்ததுக்கு முக்கால் தான் என்றார்..!

நீதி : ஏமாற்றுபவன் நிறைய காரணங்கள் வைத்திருப்பான்...!


ஜென் வெங்கி



குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு காட்டில் சிறுத்தை ஒன்று வசித்து வந்தது.. காட்டில் சரியான இரை கிடைக்காத போது அருகில் உள்ள ஊருக்குள் புகுந்து வேட்டையாடும்..! அந்த ஊரில் நீளமான கொம்புகள் உடைய ஆட்டுக்கிடா ஒன்றும் வசித்து வந்தது.. பல சண்டைகளில் ஜெயித்த கடா அது..! 

அந்த சிறுத்தையின் பலவீனம் என்னவென்றால் சந்தன வாசம், மல்லிகை வாசம் போன்ற நல்ல நறுமணங்கள் அதற்கு அலர்ஜி... அன்று அந்த சிறுத்தை காட்டுக்குள் இரை கிடைக்காததால் ஊருக்குள் ஆட்டுக்கிடா இருக்கும் வீட்டில் வந்து பதுங்கி இருந்தது..!

மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆட்டுக்கிடாவும் தன் பட்டிக்குள் வந்து நிம்மதியாக தூங்கப் போனது.. பதுங்கி இருந்த சிறுத்தை பாயத் தயாராகும் போது ஆட்டுக்கிடாவின் முதலாளி வீட்டில் பூஜையறையில் சந்தன ஊதுபத்தி ஏற்றினார்..! சந்தன வாசம் காற்றில் பரவ...

பாய வந்த சிறுத்தை பம்மியது..! இரு முன்னங்கால்களாலும் மூக்கைப் பிடித்துக் கொண்டு  திரும்ப காட்டுக்கு ஓட எத்தனித்தது.. இப்போது சிறுத்தையை ஆட்டுக்கிடா பார்த்து விட்டது,  சண்டைக் காரனான நம்மிடம் மோத சிறுத்தை பயப்படுவதாக ஆட்டுக் கிடா நினைத்தது..!

தன்னைப் பார்த்து தான் அது பயந்து ஓடுகிறது என நினைத்து சிறுத்தையை விரட்ட ஆரம்பித்தது ஆட்டுக்கிடா..! சிறுத்தை தலை தெறிக்க ஓட ஆடு அதை விரட்ட காட்டின் எல்லை வந்து விட்டது.. இப்போது சந்தன வாசம் வராததால்  நிதானமாக நின்ற சிறுத்தை..

சட்டென்று திரும்பி ஆட்டுக்கிடாவை ஒரே அறையில் கொன்று காட்டுக்குள் இழுத்துச் சென்றது..!

நீதி : தைரியம் இருக்கலாம்.. அசட்டு தைரியம் கூடாது....!


ஜென் வெங்கி


குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு நாட்டில் பேரழகு மிக்க ராஜகுமாரி ஒருவள் இருந்தாள்... அவளது அழகில் மயங்காதவர்கள் யாருமில்லை... அவளை மணமுடிக்க பல அரசர்கள் எந்த நிபந்தனைக்கும் தயாராக இருந்தார்கள்..! அந்த அரண்மனையில் ஒரு நாய் ஒன்று இருந்தது.. அதுவும்....

ராஜகுமாரியை மணந்து கொள்ள ஆசைப்பட்டது..! மன்னர்களே அந்த ராஜகுமாரிக்கு அடித்துக் கொள்ளும் போது ஒரு நாயான நாம் அதற்கு ஆசைப்படலாமா" என்றெல்லாம் எண்ணாது தீவிரமாக ராஜகுமாரியை காதலித்தது அந்த அரண்மனை நாய்..!

இந்த நாயின் ஆசையை கேள்விப்பட்ட தேவதை ஒன்று நாய்க்கு உதவ தீர்மானித்து நாய் முன் தோன்றியது.."உன் ஆசை எனக்கு தெரியும் அதற்கு நான் எப்படி உதவட்டும்"எனக் கேட்டது தேவதை.. நாய்க்கும் தேவதை இப்படி கேட்டதில் மிக்க மகிழ்ச்சி..! சற்றும் அது தயங்காது...

அந்த பேரழகு ராஜகுமாரியே விரும்பும் அளவிற்கு என்னை அழகு மிகுந்த வாலிபனாக மாற்றிவிடு அது போதும் என்றது.. தேவதையும் "சரி மாற்றுகிறேன் ஆனால் ஒரு நிபந்தனை உன் பழைய குணம் வெளிப்பட்டால் மீண்டும் நீ நாயாகிவிடுவாய் டீலா நோ டீலா என்றது..!

நாய் டீல் என குரைத்த அடுத்த நிமிடம் அழகான வாலிபனாக மாறியது..! தேவதை ஆல் தி பெஸ்ட் சொல்லி கிளம்ப.. அந்த வாலிபன் ராஜகுமாரி இருக்கும் இடத்திற்குள் சென்றான்..! மறுநாள் தேவதை தற்செயலாக வர மீண்டும் அந்த நாய் ஓடி வந்தது... தேவதைக்கு குழப்பம்?

இது அந்த நாய் தானா அல்லது அதைப்போல் வேறா? நானே தான் என்று வள்ளியது நாய்.. ஓ என்ன நடந்தது என தேவதை கேட்க.. நாய் சொன்னது"நேற்று வாலிபனாக இருந்த என்னை ராஜகுமாரி பார்த்த அடுத்த நிமிடமே காதல் வயப்பட்டுவிட்டாள்" சில நிமிடங்கள் தான்...

முத்தம் கொடுக்கும் அளவிற்கு நெருங்கிவிட்டோம்" அடடே..! அப்புறம் எப்படி மறுபடி நாயானாய்..? நாய் சொன்னது "திடீரென எனக்கு "உச்சா" வந்துவிட்டது.. "அதனாலென்ன கழிப்பறைக்கு போக வேண்டியது தானே" என தேவதை கேட்க.. நாய் கூறியது..

"அந்த ராஜகுமாரியும் அது தான் சொன்னாள் நானும் கழிப்பறைக்கு போக திரும்பினேன் நாயாகி விட்டேன்"... கழிப்பறைக்கு போக திரும்பியதால் நாயாகினாயா.? புரியவில்லை என்றது தேவதை.. நாய் அமைதியாக சொன்னது கழிப்பறை வாசலில் ஒரு கம்பம் இருந்தது..!

நீதி : பிறவி குணம் மாறாது...!


ஜென் வெங்கி



குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு குட்டிமான் தான் காலையில் புல் மேயச்செல்லும் இடத்தில் ஒரு புலி படுத்து இருப்பதை பார்த்து விட்டது.."அங்கு சென்றால் நமக்கு சங்கு"என உயிருக்கு பயந்து வந்த வழியே திரும்பிச் சென்றது.. அப்போது எதிரில் கொழுத்த காட்டெருமை ஒன்று வந்தது..!

"ஹாய் எருமை சார்.. குட்மார்னிங்.! எப்படி இருக்கிங்க" என்றது மான்..அதற்கு எருமையும் "ஐயாம் ஃபைன் தேங்க்யூ"என்றது.. எங்க சார் கிளம்பிட்டிங்க என மான் கேட்க வழக்கம் போல மேய்ச்சலுக்கு தான் என்றது எருமை.. அப்படியா என்கூட வர்றீங்களா என்றது மான்..!

என்ன விசேஷம்.! என்பது போல எருமை பார்க்க.. மான் தொடர்ந்தது ஆமா எருமை சார் சற்று தூரத்தில் ஒரு புல்வெளி இருக்கிறது... பச்சைப்பசேல் என செழிப்பான புல் காலை பனித்துளி தூவி செம ஃப்ரெஷ்ஷா ஜில்லுன்னு இருக்கு வாங்க போய் சாப்பிடலாம் என்றது.!

ஏன் அதை நீ சாப்பிடலாமே என்றது எருமை.. சாப்பிடலாம் தான் ஆனால் இவ்வளவு சுவையான புல்லை சிறுவனான நான் மட்டும் சாப்பிடுவது சுயநலம் அல்லவா.! தங்களைப் போல பலருடன் பகிர்ந்து உண்டால் அது தானே பெருமை..அது தான் என்றது மான்..!

"அடடே உன்னை உன் பெற்றோர்கள் நல்லபடியாக வளர்த்து உள்ளார்களே..பரவாயில்லை நீ முன்னே செல் நான் வருகிறேன்"என்றது எருமை. உடனே மான்"எருமை சார் பெரியவர் நீங்கள் சிறுவன் என் பின்னால் வருவது நான் தங்களுக்கு செய்யும் அவமாரியாதை.!

ஆகவே உங்களை பின் தொடர்ந்து வருவது தான் உங்களுக்கு நான் அளிக்கும் மரியாதை" என மான் சொல்ல அந்த பாராட்டில் மயங்கி எருமையும் முன்னே நடக்கலாயிற்று..கொழுத்த காட்டெருமையின் வாசனையை மோப்பம் பிடித்த புலி பதுங்கி மறைந்து கொள்ள...

அது தெரியாது பசும் புல்வெளியை நெருங்குகையில் எருமையை புலி அடித்து கொன்றது கொழுத்த இரை என்பதால் அதை உண்ண மறைவான இடத்திற்கு இழுத்துச் செல்ல.. இதுவரை ஒளிந்திருந்த மான் கவலையின்றி தைரியமாக புல் மேய ஓடியது..!

நீதி : சில சமயங்களில் பாராட்டுகளுக்குள் துரோகம் ஒளிந்திருக்கும்..!


ஜென் வெங்கி



குருஜியின் நீதிக்கதைகள்...

புகழும் பணிவும் ஒரிடத்தில் சந்தித்து கொண்டன.. புகழ் சொன்னது "என்னப்பா பணிவு நீ இருக்குற இடமே தெரியலை..என்னை பாத்தியா எங்க பாத்தாலும் என் பேச்சு தான்" அதற்கு பணிவு சொன்னது எனக்கு தான் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் எதுவும் பிடிக்காதே என்றது.!

இப்படி பணிஞ்சு போயி என்னத்த கண்ட... நாலு பேரு பாராட்டுறா மாதிரி இருந்தா தானே ஊருக்கு உன்னை தெரியும் இப்படி பம்மி இருக்கறதால உன்னை யாருக்கும் தெரியலை எனக்கு இருக்குற பெருமை உனக்கு இருக்கா...எனக்கேட்டது புகழ்..!

"ஒரு பெருமை இருக்கு உன் மனம் புண்படாவிட்டால் சொல்லவா என்றது பணிவு.. புகழும் சரி என தலையசைக்க பணிவு சொன்னது"அதாவது ஒருவன் புகழால் கர்வமாக நடந்து கொண்டால் மக்கள் எல்லாம் புகழ் வந்த திமிரு"என்று உன்னைத்தான் திட்டுவார்கள்...

அதற்கு பிறகு தான் அம்மனிதனை திட்டுவார்கள்.... சட்டென்று புகழ்"சரி பணிவாக இருப்பவர்கள் கர்வமாக நடந்து கொண்டால் திட்டமாட்டார்களா" என்றது... பணிவு அமைதியாக சொன்னது ஆம் அப்போதும் திட்டுவார்கள்... ஆனால் என்ன சொல்லி..?

நல்லா பணிவான குணம் இருந்தவன் தான்... இப்ப அந்த பணிவு போயிடுச்சு அது தான் இந்த திமிரு.. அதாவது நீ வந்தாலும் நான் போனாலும் ஒரு மனிதன் இகழப்படுவான் .. இந்த ஒரு பெருமை எனக்கு போதும்" இது கேட்டதும் புகழ் தலை குனிந்தது.

நீதி : எப்போதும் பணிவாய் இருப்பது தான் நிரந்ததரப் புகழ்


ஜென் வெங்கி



குருஜியின் நீதிக்கதைகள்...

குரங்கு பிடிப்பது எப்படி தெரியுமா..? வலை வீசியோ, கண்ணி வைத்தோ, அல்லது வில்லால் அடித்தோ அல்ல... குரங்கு பிடிப்பவர்கள் குரங்கை பிடிக்க ஒரு உபாயம் வைத்துள்ளார்கள்.. சிறிய மரப்பொந்து ஒன்றை குடைவார்கள்..!

அந்த பொந்து மிகச்சரியாக ஒரு குரங்கின் வெறும் கை உள்ளே நுழைக்கும் அளவு இருக்கும்..அந்த பொந்தில் கடலை ,பொரி போன்ற குரங்குக்கு இஷ்டமான ஸ்னாக்சுகளை கை விட்டு அள்ளும் அளவிற்கு கொட்டி வைத்து விடுவார்கள்..!

கடலையின் வாசனையால் கவரப்பட்ட குரங்கு பொந்தின் அருகில் வரும் பொந்திற்குள் கை விடும் அங்கு குவிந்திருக்கும்  கடலையின் மீது கை பட்டதும் குரங்கு மகிழ்ச்சியில் எவ்வளவு அள்ள முடியுமோ அவ்வளவு அள்ளும்...!

கை நிறைய கடலையுடன் பொந்திற்குள் இருந்து கையை எடுக்க பார்க்கும்... அதனால் எடுக்க முடியாது கை பொந்தில் மாட்டிக் கொள்ளும்..ஏனெனில் வெறும் கை நுழையும் அளவே அந்த பொந்து இருக்கும்...!

கையில் அள்ளிய கடலையை கீழே போட்டுவிட்டால் எளிதாக கையை எடுத்து விடலாம்..! அல்லது தேவைக்கு ஒன்றோ இரண்டோ எடுத்து சாப்பிடலாம் ஆனால் குரங்கு அப்படிச் செய்யாது கடலையின் மீதுள்ள பேராசையால்...

அது குரங்குப்பிடியாக கடலையைப் பிடித்து மாட்டிக் கொள்ளும்..இப்போது குரங்கு பிடிப்பவர் எந்த சிரமமும் இன்றி எளிதாக அதை கயிற்றில் கட்டும் போது தான் உயிர் பயத்தில் கையில் உள்ளதை விடுமாம்.. இப்போது கை வெளியே வந்து விடும் குரங்கு சிக்கிக் கொள்ளும்..!


நீதி: அளவுக்கும் அதிகமான ஆசை நிரந்தர துன்பத்தை தரும்


ஜென் வெங்கி



குருஜியின் நீதிக்கதைகள்...

பனி பொழியும் ஆல்ப்ஸ் மலையில் குடியிருப்பவர் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு சென்றார்.! அவர் சுற்றுலா முடிந்து ஆல்ப்ஸ் மலைக்கு திரும்புகையில் விமான நிலையத்தில் பல பொருட்களை வாங்கினார்.. அங்கு ஷாப்பிங் திருவிழா நடந்து கொண்டிருந்தது..! 

100 டாலருக்கு பர்சேஸ் செய்யும் ஒவ்வொரு வருக்கும் பரிசு கூப்பன் ஒன்று வழங்கினார்கள் அதை பூர்த்தி செய்து பெட்டியில் போட்டால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ரோல்ஸ்ராய்ஸ் கார் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் ஷாப்பிங் செய்வோருக்கு கிடைக்கும்.!

நம் நண்பர் 700 டாலர்கள் செலவு செய்ததால் 7 கூப்பன்கள் தந்தார்கள் அவரும் அதை நிரப்பி பெட்டியில் போட்டுவிட்டு ஆல்ப்ஸ் மலைக்கு திரும்பினார்..! அந்தஆண்டு பனிப் பொழிவு கடுமையாக இருந்தது.. மூன்று முறை பனிப்புயல் வேறு வீசியது...! 

கடந்த 100 ஆண்டுகளில் இப்படி ஒரு குளிர் அடித்ததே இல்லை என்றது அவர்கள் நாட்டு வானிலை மையம்...அங்கு வெகு காலம் வசிப்பவர்களாலேயே அந்தக் குளிரைத் தாங்க முடியவில்லை.! அவ்வேளையில் அவருக்கு ஒரு கடிதம் வந்தது...! 

அதில் "அன்பரே.! விமான நிலையத்தில் நீங்கள் பர்சேஸ் செய்தீர்கள் அல்லவா? உங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறோம். இதோடு இணைத்துள்ள படிவத்தை நீங்கள் பதிவு செய்து திருப்பி அனுப்புங்கள்....

அதிலிருந்து 10 நாட்களுக்குள் பரிசு உங்கள் வீடு வந்தடையும்.. உங்கள் பரிசு என்னவென்று தெரிந்து கொள்ள இதனுடன் உள்ள ஸ்கிராட்ச் கார்டை உரசி தெரிந்து கொள்ளவும். வாழ்த்துகள்" ஆவலுடன் அதை உரசி என்ன பரிசு எனக் கண்டதும் மயங்கி விழுந்தார்..!

அதிலிருந்த அவரது பரிசு 2 டன் ஸ்பிலிட் ஏசி..!


நீதி : பயனில்லாத சொத்தால் எந்தப் பயனும் இல்லை...


ஜென் வெங்கி



குருஜியின் நீதிக்கதைகள்..

ஒருவன் பூனை வளர்ப்பதில் அதிகம் ஆர்வமுள்ளவன்.. நல்ல உயர் இனத்தில் பிறந்த பூனைக் குட்டிகளை வாங்கினான்..அவனைப் போல பூனைகளை திட்டமிட்டு கவனித்துக் கொள்வதில் யாருமில்லை என்று பெயர் வாங்கும் அளவுக்கு வளர்த்தான்.

பூனைகளிடம் மிகுந்த அன்பு செலுத்தினான் கோடை,குளிர்,மழை இப்படி எந்தக்காலம் வந்தால் எப்படி பாதுகாப்பது என்ன உணவு தருவது என நன்கு ஆராய்ந்து அவைகளை பராமரித்தான்..அவனது பாச அரவணைப்பில் வாழ்ந்த அந்த பூனைகளும் நல்ல நல்ல குட்டிகளை ஈன்றன....! 

இவ்வேளையில் அவன் ஒரு பெண்ணின் மீது காதலில் விழுந்தான் 8 மாதம் தான் அரக்கப் பரக்க திருமணம் முடிந்து விட்டது.. அவனுக்கும் பிள்ளைகள் பிறந்தன அவர்களெல்லாம் ரொம்ப மக்காக இருந்தார்கள்.. 

அவனுக்கு மிகுந்த கவலையாக இருந்தது.. மனைவி மக்கானவளாக இருப்பதால் தான் இப்படி என நினைத்தான் ஒரு நாள் ஒரு ஞானியிடம் சென்று "ஐயா என் பிள்ளைகள் மக்காக பிறந்து விட்டார்கள் நான் பூனை வளர்ப்பதை போல திட்டமிட்டு நல்ல மனைவியை தேர்ந்தெடுத்து இருந்தால் இப்படி நடந்திருக்காதோ என்று எண்ணுகிறேன்" என்றான்.. 

அதற்கு அந்த ஞானி சொன்னார் "தவறு தம்பி இப்படி நினைத்துப் பார் உன் குழந்தைகள் மக்காக பிறக்க உன் மனைவி மட்டுமே காரணம் இல்லாமல் நீயும் காரணமாக இருக்கலாம் அல்லவா".!

நீதி : நம் குறை நமக்கு தெரியாது..

ஜென் வெங்கி



குருஜியின் நீதிக்கதைகள்..

ஒரு வீட்டில் வானம்பாடி ஒன்றை கூண்டில் அடைத்து வளர்த்தார்கள் அந்த கூண்டு அவ்வீட்டின் வாசலுக்கு அருகே பாதுகாப்பான இடத்தில் மாட்டியிருந்தது.. அந்த வானம்பாடி அழகாக பாடக்கூடியது தினமும் இரவு முழுவதும் அது பாடிக்கொண்டே இருக்கும்..!

வானம்பாடி பாடலின் ரசிகராக மாறிப்போனது பக்கத்து வீட்டில் காவல் இருக்கும் நாய்..! ஒரு நாள் அந்த நாய் வானம்பாடியிடம் "நண்பா நீ அருமையாகப் பாடுகிறாய் ஆனால் உன்னைப் போன்ற வானம்பாடிகள் எல்லாம் பகலில் தானே பாடும்..?" என்றது.அதற்கு வானம்பாடி...

"ஆமா நாயண்ணா.. அந்த சோகக்கதைய ஏன் கேக்குறிங்க இப்படி பகலில் பாடிப்பாடி தான் நான் இருக்குற இடத்துக்கு வந்த வேடன் என்னைய வலை வீசி புடிச்சு வித்துட்டான்... அதனால தான் நான் இப்ப எல்லாம் பகலிலே பாடுறதே இல்லை" நான்செஞ்சது சரிதானே.?

நாய் சொன்னது.. "முட்டாள் பறவையே  இதை நீ மாட்டிக்கிறதுக்கு முன்னாடி இல்ல செஞ்சு இருக்கணும்..! இப்ப செஞ்சு என்னா பிரயோஜனம்..!

நீதி: வரும் முன் காப்பதே அறிவு..


ஜென் வெங்கி



குருஜியின் நீதிக்கதைகள்..

ஒரு முனிவர் ஒருவர் ஆற்றங்கரை வழியாக சென்று கொண்டிருந்தார்.. ஒரு மறைவில்கழுதை ஒன்று அலறும் குரல் கேட்டு அங்கு சென்று பார்த்தார்.. அங்கே ஒருவன் குண்டாந்தடியால் ஒரு கழுதையை அடி பின்னிக்கொண்டிருந்தான்.. 

அதைப் பார்த்து பதறிய முனிவர் அவனிடம் சென்று "ஏனப்பா ஒரு வாயில்லா ஜீவனை இப்படியா அடிப்பது..? அடி உதை எப்போதும் பிரச்சனையை தீர்க்காது"அது விரோதத்தை தான் தூண்டும்" அந்த கழுதையை விட்டுவிடு... 

வன்முறை வன்முறையைத்தான் வளர்க்கும்" என்றார். அதற்கு அவன் "அதைத்தான் சாமி என்ன உதைச்ச இந்த அறிவு கெட்ட கழுதைக்கு பாடமா சொல்லிகிட்டு இருக்கேன்" என்றான்...!

நீதி : சில விஷயங்களை அறிஞர்களை விட பாமரர்கள் எளிதில் சொல்லிவிடுவார்கள்..

ஜென் வெங்கி


குருஜியின் நீதிக்கதைகள்..

ஒரு கணவன் மனைவி இருவரும் ஒரு பூங்காவில் பேசிக் கொண்டிருந்தனர்..மனைவி மிகவும் முன் கோபக்காரர்...அவரிடம் அந்தக் கணவர் "நீ உன் கோபத்தை துறந்து விடுதல் நல்லது.. அப்போது தான் இல்லறம் சிறக்கும்"என்றார்.... அந்த அம்மாவும் பதிலுக்கு..

"எனக்கும் அது தாங்க ஆசை..ஆனா என்னால கோபம் வந்தா அடக்க முடியலையே" என்றார்.. உடனே கணவன் "நான் ஒரு புத்தகத்துல படிச்சேன் கோபம் வரும்போது ஒண்ணுல இருந்து நூறு வரைக்கும் எண்ணினா கோபம் போயிடுமாம்"எனச்சொல்ல...

மனைவி"அப்படியா நானும் இனி அதே மாதிரி நடந்துக்கிறேன்"என்றார்..மனைவியிடம் அதை சத்தியமாக வாங்கிக் கொண்டார்,இப்போது அவருக்கு அதை செயல் படுத்தி பார்க்க ஆசை "இப்ப நான் உன்னை கோபப்படுத்தப் போறேன் எங்க அதை அடக்கிக்காட்டு" என்றார்..

மனைவி "எதுக்குங்க அதான் இப்ப எனக்கு கோபம் வரலையே" என்று சொன்னதை காதில் வாங்காமல் ஓங்கி ஒரு அறை விட்டார்.. அந்தம்மாவும் கன்னத்தை பிடித்துக் கொண்டு கண்ணில் நீர் வர "ஒண்ண்ண்ணு,ர்ர்ரெண்டு,ம்ம்மூண்ணு என்று சொல்ல ஆரம்பித்தார்..

ஐம்பது வரும் வரை அந்த ஆவேசம் அடங்கவில்லை.. ஐம்பதுக்கு பிறகு அந்தம்மா உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து பர பரவென அங்குமிங்கும் உலாத்திக் கொண்டே அய்ய்ய்ய்ம்ம்பத்த்த்த்தி ஓண்ணுணுணு... என்று அதிக ஆவேசமாக ஆரம்பித்தார்..

அவரது கண்கள் நாலாபுறமும் சுழன்று கொண்டிருந்தது... அவரை பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் கணவர்.. அந்தம்மா இப்போது பல்லை நற நறன்னு கடித்துக் கொண்டே எழ்ழ்ழ்ழுவத்த்த்துஆஆஆறு... எழ்ழ்ழ்ழ்வத்த்த்துஏஏஏழ்ழ்ழ்ழ்ழ்ழு எனச் சொல்ல...

அந்த கணவர் சட்டென பின் வாங்கி வேகமாக பூங்கா வாசலுக்கு ஓடி வந்து சாலையில் கைதட்டி "ஆட்டோ"  என்றார்...!

நீதி : பிறவியிலேயே உள்ள குணத்தை மாற்ற முடியாது..!

ஜென் வெங்கி