Thursday 30 January 2014

குடும்பமும் கட்சியே...!

குடும்ப வாழ்க்கையும் ஓர் அரசியல் தான்....!

விற்கும் விலைவாசியில் குடும்பம் நடத்த போராடுவதால் :ஆம் ஆத்மி

மனைவி முடிவுக்கு தலையாட்டும் போது : காங்கிரஸ்

வீட்டுப் பெரியவர்கள் முடிவை ஒதுக்கித் தள்ளும் போது.. பா.ஜ.க

சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிக்கையில் : ராஷ்ட்ரிய ஜனதா

ஆடம்பர செலவு செய்துவிட்டு கையை பிசைகையில் : சமாஜ் வாடி

தடாலடியாக முடிவெடுத்து தடுமாறி நிற்கையில் : திரிணாமுல்

சொந்த வீடு கட்டப்போய் பாதியில் விழி பிதுங்கி நிற்கையில் : தேசியவாத காங்

கடன் கேட்டு கையேந்தி அலையும் போது : கம்யூனிஸ்ட்டுகள்

வீட்டில் மனைவி சொல்லே மந்திரம் என்பதால் : அதிமுக

சொந்த பந்தம் உறவுகளால் பிரச்சனை எனும் போது : திமுக

பிள்ளைகள் அட்மிஷனுக்கு நடையாய் நடக்கும் போது : மதிமுக

அடிக்கடி முடிவுகளை மாற்றி எடுக்கும் போது : பாமக

நம்முடன் இருப்பவர்கள் நம்மை விட்டு போகும் போது : தேமுதிக

வேறு வழியின்றி ஒரே இடத்தில் சகித்து கொண்டு வாழும் போது : வி.சி

சரிதானே...!

Wednesday 29 January 2014

இருக்கு ஆனா இல்ல....

அது தான் ஆனா அதில்ல...!

No parking board : கார்கள் நிறுத்தும் இடத்தில் வைக்கப்படுவது...

துப்பட்டா : முகத்தை மூடிக் கொள்ள...

பங்க்சுவாலிட்டி : தாமதமாக வருவதே...

லீவு : தேவைப்படும் போது கிடைக்காதது...

ஆட்டோ : சிக்னலை மதிக்காத வாகனம்...

கிரெடிட் கார்டு : தேவையில்லாத போது கடன் வாங்க வைப்பது

பர்ஸ்: பணம் இல்லாத இடம்...

லேடிஸ் பேக் : மினி டிரஸ்ஸிங் டேபிள்...

ரயில் : நாம் லேட்டா போற அன்னைக்கு கரெக்ட் டயத்துக்கு போவது...

ஹவுஸ் புல் போர்டு : நாம் டிக்கெட் வாங்கும் போது மாட்டுவது....

குப்பைத்தொட்டி : குப்பைக்கு பதிலா குழந்தையை போடுவோம்...

ரெட் சிக்னல் : கடைசி 5 செகண்ட் தேவைப்படாத லைட்டு...

செல் போன் : டவருக்கு கீழேயே டவர் எடுக்காதது...

ஹெல்மெட் : சைடு மிரர்ல மாட்டிக்கிறது...

பஸ் ஸ்டாப் : பஸ் நிற்காத ஒரே இடம்...

பிளாட்பாரம் : நடக்க முடியாதபடி கடை போட...

மிஸ்டு கால் : பேசாம கட் பண்ணதே பேசத்தான்...

டாஸ்மாக் : கவர்மெண்ட் ஸ்டெடியா நிக்க...

சீரியல் : நம்ம கஷ்டத்தை மறந்து அவங்க கஷ்டத்தை நினைக்க...

அரசியல் : எந்த தப்பையும் தைரியமா பண்ண...

ஃபேஸ்புக் : ஃபேஸ் காட்டாது ஃபேக் ஐடி வைக்க...


Saturday 25 January 2014

பல்லவன் காதலி....

நண்பர்களே...! சரித்திர கதை எழுத வேண்டும் என்பது நெடு நாள் ஆசை... அந்த தகுதி இருக்கான்னு செக் பண்ணவே இந்த சாம்பிள் நல்லா இருந்தா சொல்லுங்க வாரா வாரம் எழுத முயற்சிக்கிறேன்... சாண்டில்யன் பாணி இதுல இருக்கு ஒகேன்னா இதன் படியே போகலாம் இல்லாட்டி புதிய பாணியில் போகலாம்,நீங்க ரெடியா!வாங்க பல்லவ தேசத்துக்கு!


பல்லவன் காதலி...! 

சட்டென்று விழிப்பு தட்டியது மாறவர்மனுக்கு விழிக்க சிரமமாயிருந்தது சற்று பிரயாசைப்பட்டு தான் விழிக்க வேண்டியதாயிற்று... சுற்றிலும் இருள் சூழ்ந்து கும்மிருட்டாக இருந்தது சிறிது நேரம் மெல்ல விழிகளை சுழல விட்டான்..ஆயாசமாகவும் இருந்தது தோளில் தீப்பற்றி எரிந்தது போல் வலித்தது...என்ன நடந்தது?.. நினைவுகளை அசை போட்டான்..

பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நோக்கி சென்ற பிரயாணத்தில் காஞ்சியை நெருங்கும் வேளையில் இரவாகி விட்டபடியால்.. சிறுவூர் என்ற இடத்தில் புரவியை நிறுத்தி விட்டு அங்கிருந்த கோவில் மண்டபத்தில் இளைப்பாற சென்றதும்,அந்த மண்டபத்தில் நுழைந்த மறுகணம் எதிரிகளால் சூழப்பட்டதும் நினைவுக்கு வந்தன..

சரேலென வாளை உருவி சுழற்றிய அந்தக் கணமே அவனது கூர்ந்த புலன் எதிரிகளுக்கு அச்சத்தை தந்துவிடது... சக்கரவியூகமாய் சுற்றி வளைத்து தாக்கியவர்களை சிதறி ஓடச்செய்தது அவன் வாள் வீச்சு... உக்கிரமான அந்த சண்டை நிறைவுறும் தருவாயில் மண்டபத்தின் தூண் மறைவிலிருந்து பாய்ந்து வந்த குத்தீட்டி அவனது தோளில் செருகியது..

அவனைத் தவிர யாரேனும் அங்கு இருந்தால் அவர்களது சிரம் தனியாக நிலத்தில் வீழ்ந்திருக்கும் துல்லியமாக கழுத்துக்கு குறி வைத்து எறியப்பட்ட குத்தீட்டி அது.. மாறவர்மனின் அபார போர்பயிற்சி அவனது செவிகளில் குத்தீட்டி காற்றை கிழித்து வரும் ஓலி கேட்ட நொடியிலேயே விலக சொன்னது அவனது விலகல் புலி பாய்ச்சலை ஒத்து இருந்தது.

சற்று தாமதித்து இருந்தாலும் கழுத்து அல்லது இதயத்தில் பாய்ந்திருக்கும்... இப்படி குத்தீட்டிகளை வீசும் கலை சாளுக்கிய தேசத்தில் தான் பிரபல்யம்... அப்படி என்றால்!! சாளுக்கியர்கள் எப்படி பல்லவ தேசத்தில்.. ஏதோ மிகப்பெரிய சதி அரங்கேறுகிறது என்று மட்டும் புலனான வேளையில் மயக்கமும் தழுவிக் கொள்ள நிலத்தில் வீழ்ந்தான் மாறவர்மன்.

இப்போது இருள் கண்ணுக்கு பழகிவிட்டது... குத்தீட்டி பாய்ந்த இடது தோளையும் இடது கரத்தையும் அசைக்கவே முடியவில்லை மெல்ல நாசிக்குள் பச்சிலை மணம் நுழைந்தது..காயத்திற்கு யாரோ மருந்து இட்டு இருக்கிறார்கள் என்று புலனான போதே தான் காப்பாற்ற பட்டுள்ளோம் எனத் தெரிந்தது.. தூரத்தில் யாரோ நடந்து வரும் காலடியோசை...

மாறவர்மன் ஒரு உபாயம் செய்தான்! தன்னைக் காப்பாற்றியவர் யார் என அறிந்து கொள்ள மயக்கத்தில் ஆழ்ந்திருப்பது போல பாவித்து விழிகளை மூடிக்கொண்டான்.. காலடியோசை சமீபித்தது... ஒருவர் அல்ல இருவர் என்பது அவனது கூரிய புலனாலும் அவர்கள் மெல்ல ரகசியமாய் பேசிய ஒலி செவிகளில் விழுந்ததாலும் அறிந்தான்,அதில் ஒரு குரல் பெண்குரல்!

அந்த பெண்ணோடு வந்தவர் ஒருவர் முதியவர்... அவர்களது பேச்சில் அந்த முதியவர் ஒரு மருத்துவர் என அறிந்தான்... சஞ்சீவினி இலைகளால் பற்று போட்டுள்ளேன் இனி ஒன்றும் பயமில்லையம்மா வலி இரு தினங்களுக்கு இருக்கும் காயம் ஒரு மாதத்தில் பூரணமாக ஆறிவிடும் என்றார்...

இன்னும் இவர் மயக்கத்தில் ஆழ்ந்துள்ளாரே நான்கு நாழிகைகளில் விழிப்பார் என்றீர்களே? என்று கேட்டாள் அப்பெண்... அது தான் புரியவில்லையம்மா வயதானவர்கள் கூட அந்நேரத்தில் விழித்து விடுவார்கள் இந்த வாலிபன் ஏன் விழிக்கவில்லை? இரம்மா நான் போய் இன்னொரு சாறு எடுத்து வருகிறேன் என்று சொல்லி அங்கிருந்து அகன்றார்...

அவரது காலடியோசை தேய்ந்ததும் மெல்ல கண்விழிப்பது போல பாவனையை முயற்சிக்கலானான் மாறவர்மன்... அப்பெண்ணிடம் இப்போது பரபரப்பு தொற்றிக் கொண்டது.. மெல்ல.. மெல்ல என்றாள்.. பிரயாசையோடு விழிப்பது போல பாவித்த மாறவர்மன் அவளை கண்டதும் மூச்சற்று போனான்... அவன் விழி மூடும் போது இருந்த இருள் இப்போதில்லை!

அறையில் மெல்லிய வெளிச்சம் வியாபித்து இருந்தது.... அதற்கு காரணம் சுவற்றில் சாளரம் அருகே இருந்த திரைச்சீலை மெல்ல விலகியிருந்தது... அந்த சாளரத்தின் வழியே பூரண சந்திரனின் ஒளிக்கிரகணங்கள் அறைக்குள் புகுந்து இருந்தன அவ்வொளி நின்றிருந்த அந்த பெண்ணின் வதனத்திலும் பட்டு அவளை பிரகாசிக்க வைத்திருந்தது..

வட்ட வடிவத்தில் பூரண சந்திரன் போன்ற பேரெழில் மிகுந்த வதனம்.. காதோரத்தில் சுருண்டிருந்த அவளது குழல் மெல்லிய காற்றில் அசைந்தது ஓர் நாட்டியம் போல இருந்தது.. கடல் போல் விரிந்த விழிகளில் கரிய திராட்சை பழங்கள் தெரிந்தது.. அதில் சற்று மருளும் கலந்திருந்தது.. 

வில் போல் வளைந்த புருவங்கள் வினோதமாய் மேலேறியது கூட அவளுக்கு பேரழகு தந்தது.. செவ்விய பவள இதழ்களை நாவால் அவள் ஈரப்படுத்தியது தனிக்கிளர்ச்சியை தந்தது... குவளை மலர் போன்ற அவளது நாசி நுனியில் ஆழ்ந்த சிவப்பு விளைந்திருந்தது...அழகிய வினாக் குறிகளை போல செவிகள் அதில் ஆடிய காதணிகள் கவிதையாய் இருந்தன.. 

மூங்கில் போன்ற தோள்கள் தந்த நிறத்தில் மிளிர்ந்தது.. படபடப்பாக இருந்ததால் அவள் வெளியிட்ட பெருமூச்சு அவளது மார்புகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தது மதியை மயக்கியது.. ...!என்ன நான் கேட்டது உங்கள் செவிகளில் விழவில்லை? திடுக்கிட்டான் மாறவர்மன்... என்ன என்ன!! என விழித்தான்... இவ்வளவு கணம் அவள் அவனிடம் பேசிக் கொண்டிருந்ததும் அவள் அழகில் லயித்து தான் மெய் மறந்து இருந்ததும் புலனானது..

சொல்லுங்கள்.. என்றான்...சற்று வெட்கத்துடன்...  இப்பொழுது வலி உள்ளதா? என்றாள்..ஆம் என தலையசைத்தான்... நல்ல வேளை நேற்று அவ்வழியே வந்தேன் நீங்கள் மயங்கி சரிந்த போது அவ்வழியே பல்லக்கில் என் வீரர்களோடு கடந்து கொண்டிருந்தேன் நாங்கள் வரும் அரவம் கேட்டு சிலர் மண்டபத்திலிருந்து ஓடினார்கள்.. வந்து பார்த்தால் நீங்கள் வீழ்ந்து கிடந்தீர்கள் மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்...

நன்றி... என்று பதிலுரைத்த மாறவர்மனுக்கு சட்டென்று உறைத்தது... பல்லக்கில் என் வீரர்கள் என்றாளே இப்பெண் அப்படியென்றால்... அபடியென்றால்... நீங்கள் யார்? உங்கள் பெயரென்ன? என வினவினான்.. அவள் மெல்ல பதிலுரைத்தாள்..என் பெயர் காஞ்சன மாலா!

காஞ்சன மாலா!!!!! பல்லவ இளவரசியா!!!!!!!!!!! கூவியே விட்டான் மாறவர்மன்...

தொடரும்....

Friday 24 January 2014

பாரு ஸ்வாதிதாவின் இசை மேதை

இளையராஜாவுக்கு இசை தெரியுமா..!!!!!

( சிரிக்காமல் படிக்க வேண்டிய சிரீயஸ் கட்டுரை..)

இளையராஜாவுக்கு இசை தெரியுமா? இந்த கேள்விக்கு முன் உலகமே சிலாகித்த இசை மேதை "ஓடும்பே உடம்பா" பற்றி தெரியுமா? அவரை தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

ஆப்பிரிக்காவின் மொசாம்பியா நாட்டிற்கு வடமேற்கே தென்கிழக்கில் வடக்கு முகம் பார்த்து தெற்காக அமைந்திருக்கும் மேற்கு நாடு தான் உஜாம்பே.! இருண்ட கண்டம் ஆப்பிரிக்காவின் இசையை வெளிச்சம் போட்ட நாடு உஜாம்பே..!! மொத்தமே 6000 சதுர கிலோ மீட்டரில் அமைந்த நாடு இது!

அங்கு ஜிலு, கொலு, தலு, வலு,பலு,விலு,மலு,யலு ஆகிய எட்டு ஆப்பிரிக்க மொழிகள் பேசப்படுகிறது... முக்கிய மொழி ஜிலு& கொலு இதில் பெரும்பான்மை கொலு மொழி..! சிறுபான்மை மொழி தான் ஜிலு நமக்கு புரியும் படி சொன்னால் தமிழகத்தில் தமிழ் கொலு என்றால் சமஸ்கிருதம் ஜிலு!

அந்த ஜிலு பழங்குடியில் பிறந்தவர் தான் இசை மேதை "ஓடும்பே உடம்பா"... இவர் தன் பெற்றோருக்கு 31வது பிள்ளையாக பிறந்தவர்... அங்கு 15 வயதில் திருமணம் என்பது சர்வ சாதாரணம் என்பதை அறிக..! நான் இங்கு செல்லும் போது பிரசவ வேதனையில் துடித்த பெண்ணுக்கு வயது 7!

ஆடு மேய்ப்பவர்களின் ஷூக்களை பாலிஷ் போடுவது அவர்களது மெர்சிடீஸ் பென்ஸ் கார்களை துடைப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார் உடம்பா.. அவ்வப்போது அந்த கார்களில் வழியும் ஸ்டீரியோ இசைகளை கேட்பார்... அப்போது அவர் விரல்கள் கார் பானட்டின் மீது தாளமிடும்.!

பென்ஸ் காரில் தாளம் போடும் உடம்பாவின் விரல்களை பொறாமையுடன் பார்த்தது ஆடு மேய்க்கும் கொலு ஆதிக்க வர்க்கம்... அதற்கு தண்டனையாக சூடான ரேடியேட்டரில் கையை வைத்து அழுத்தி உடம்பாவுக்கு தண்டனை அளித்தன...பொறுத்து கொண்டார்..

அவரது 15ஆம் வயதில் நடந்தது ஓர் அதிசயம்! உஜாம்பேக்கு வந்த பிரிட்டிஷ் தூதுவர் மைக் ஆர்தர் டேவிட் கண்ணில் பட்டார்... கார் பானட் மீது விளையாடிய உடம்பாவின் விரல் வேகத்தை கண்டு அதிசயித்த மைக் ஆர்தர் டேவிட்அவருக்கு பறை அடிக்க சொல்லி தந்தார் இங்கு டேவிட் பற்றி இவர்...தமிழகத்தில் கலெக்டராக இருந்தவர் என்பதை அறிக....

அந்த பறை இசை உடம்பாவை வேறு உலகிற்கு அழைத்து சென்றது,இரவு பகல் பாராமல் வாசிக்க ஆரம்பித்தார், இடையில் ஆப்பிரிக்க மூங்கில் காடுகளில் கிடைத்த புளூட்டானோ என்ற மூங்கில்களில் துளையிட்டு வாசித்தார் உடம்பா! இருண்ட ஆப்பிரிக்காவின் மொத்த சோகத்தையும் சொன்ன இசை அது..

தனது 15வது வயதில் இசையை கற்றுக் கொண்ட உடம்பா 4 ஆண்டுகளில்அதில் விற்பன்னரானார்.. அடுத்த 5 ஆண்டுகள் உஜாம்பே முழுவதும் உடம்பாவின் இசை பரவியது இப்போது உடம்பாவின் வயது 24... ஒரு இளைஞனுக்குரிய உடல் வாகு திருமணம் செய்யக்கூடிய பருவம் ... அவரது மனைவியாக வந்தவர் தான் "சம்போ விகோடா"

சம்போ விகோடா உஜாம்பா அரசு இசைக் கல்லூரியில் கழிவறை சுத்தம் செய்பவராக இருந்தார்... ஆதலால் அவரது இசை அறிவு அபாரமாக இருந்தது...அவரிடம் இருந்தும் கற்றுக் கொண்டார் உடம்பா..!இவர்கள் இருவரும் சேர்ந்து இசைத்த இசை ஆப்பிரிக்காவையே உலுக்கியது... 

மெல்ல ஒலிக்க தொடங்கி அதிரடிக்கு மாறும் வூடோ காட்டெருமை தோல் மேளம், புளூட்டானோ மூங்கிலின் ராகம்,நெஞ்சை அறுக்கும் உடம்பாவின் குரல்,நம் சங்கை அறுக்கும் சம்போவின் இணைக் குரல் இவையனைத்தும் மொத்த ஆப்பிரிக்காவையும் மகுடி கேட்ட நாகமாய் மாற்றியிருந்தது.

எனக்கென்னவோ உடம்பாவின் இசையும் அரபிப் பாடகர் அல் கவுத் அல்ஸாரின் இசையும் ஒன்றே.! இது என்னைப் போல உள்ள உலக இசை விமரிசகர்களுக்கு (மட்டும்) புரியும்..! அல் கவுத் அல்ஸார்...! ஈரானுக்கு தென்மேற்கே வடகிழக்கில் பிறந்தவர் ,உடம்பாவிற்கு 300 ஆண்டுகள் மூத்தவர் அவரது அபார இசை ஞானம் அவரது சித்தப்பா மஜீத்தால் வந்தது.. மஜீத் மதுரையில் ஒரு நாடக கம்பெனியில் வேலை பார்த்தவர்.. 

வரலாற்று குறிப்பில் மெஜுரா என்றுள்ளது ஆனால் அது உஜாம்பே அருகில் உள்ள மஜாரோவாக இருக்கும் என்பது என் எண்ணம் ஏனெனில் அல்கவுத் & உடம்போ இருவரின் இசையும் ஒரே பாணி என்பதை அங்கு தான் கண்டு கொண்டேன்..ஒரு முறை மஜோரோ வீதியில் அந்த ஊர் சாராயமான "ப்ராஜ்" குடித்து கொண்டே அந்த இசையை கேட்டேன்...! 

அந்த இரவு முழுவதும் நான் உறங்கவில்லை.. என் கண்ணில் இருந்து கர கர வென்று கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது... (சரக்கினால் அல்ல) வார்த்தைகளில் வடிக்க முடியாத இசையனுபவம் அது..அப்படி ஒரு இசைக்கோர்வை தமிழ்ப்பாடல்களில் இல்லை என்று சர்வ நிச்சயமாக சத்தியம் செய்வேன்...

மெல்லிய சோகம்,சொடுக்கும் இசை, அறுக்கும் குரல் இவை தான் அல் கவுத்தையும் உடம்பாவையும் இணைத்த ஓர் புள்ளி.. இரவுகளில் நான் அவிழ்த்து போட்டு ஆடுகையில் உடம்பாவின் இசை கேட்டால் என் உடம்பு சிலிர்க்கும் அது இசை வேள்வி...!என்னை எவனும் கேட்கக்கூடாதுகேள்வி...! 

அரேபிய இசையும் அதை நகலெடுத்த உஜாம்பே இசையுமே உலகின் மிகச் சிறந்த இசை வடிவங்கள் இது 100 சதவீதம் உண்மை என்பதை 15 வது லார்ஜில் நீங்கள் உணர்வீர்கள்... அது ஒரு சுகானுபவம்...! அடக்கி வைத்திருந்த சிறுநீர் கழிப்பதைப் போல..

யாராவது இளையராஜா இசையை பற்றி சிலாகித்தால் எனக்கு வெறுப்பாகிறது.. அல் கவுத் அளவிற்கோ உடம்பா அளவிற்கோ இளைய ராஜா இன்னும் வரவில்லை அதற்கு ஒரு 100 ஆண்டுகள் கூட ஆகலாம்..போன வாரம் தேனியில் உள்ள நெல்லைக்கு போயிருந்தேன்..

அங்கு பனிமலையின் மீது அமைந்திருந்த ரிஸார்ட்டில் ரெமி மார்ட்டின் 13 வது லார்ஜ் அடிக்கும் போது ஊற்றிக் கொடுத்த வாட்ச்மேன் முனியப்பனிடம் கேட்டேன் உனக்கு ஒடும்பே உடம்பா தெரியுமா என்று.! உடும்புக்கறி கிடைக்காது என்றான்... அந்த கூமுட்டை.....(சென்சார்) வந்த ஆத்திரத்தை அடக்கி கொண்டு பிடிச்ச பாட்டு எது என்றேன் 

அன்னக்கிளியில் வரும் மச்சானை பாத்திங்களா என்றான்... எவ்வளவு படு மட்டமான ரசனை
தமிழன் இப்படி இருந்தால் என்னா கூ....(சென்ஸார்) விளங்கும் "உடம்பா" தெரியாத நீ எப்படி தமிழகத்தில் வசிக்கிறாய்? நீ எப்படி என் புத்தகங்களை வாசிப்பாய்...! போடாங்கங்கங்கங்க்ங்கங்கங்க... (சென்சார்) உனக்கு ஆங்கில எழுத்தில் m,n,o எழுத்துக்களை தவிர்த்து அதற்கு அடுத்த எழுத்தை கரைத்து உன் வாயில் ஊற்ற வேண்டும்....

இங்கு நான் தென் அமெரிக்காவின் சிலிக்கு வடதெற்கிலுள்ள பெருச்சாலியோ நாட்டு இசை மேதை "ரொசாரியோ டி குரூஸ்" பற்றிக் குறிப்பிடவே இல்லை..அவரது இசையை இங்குள்ள ஞான சூன்யங்கள் கேட்டால் தான் தெரியும்...இளைய ராஜாவின் இசை அதன் சுண்டுவிரலைக்கூட தொடவில்லை.... அதை ஒப்பிடுவதும் தவறு... ஏனெனில் அது உன்னதத்தின் உச்சம்...


என்னை விமர்சிப்பவர்கள் உடம்பா இசையை ஒரு முறை கேட்டால் சொல்வார்கள்...

"இளையராஜாவுக்கு இசை தெரியாது என்று"....


- பாரு ஸ்வாதிதா..

(இசை விற்பன்னர், எழுத்தாளர், கட்டுரையாளர், ஆராய்ச்சியாளர், ஆய்வாளர், ஏட்டு,)

கப்ஸா பேப்பர்

     கப்ஸா செய்திகள்...

(மாலையில் வரும் ஓசி பேப்பர்)


ஒபாமா - கேப்டன் சந்திப்பு... மலேசியாவில் கேப்டன் ஒபாமாவை சந்தித்த திடுக்கிடும் சேதி இப்போது வெளியாகி உள்ளது... அதி ரகசியமாக நடந்த இச் சந்திப்பில் மிச்சேல் ஓபாமாவும் பிரேமலதாவும் சந்தித்ததும் அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் எதிர்காலம் பற்றி 20 நிமிடம் கேப்டனிடம் ஆலோசித்து அறிவுரை பெற்றார் ஒபாமா என கேப்டன் டிவியிலேயே அறிவிக்கப்பட்டது. ரகசியமாக நேற்று நாடு திரும்பிய ஒபாமா வரும் தேர்தலில் மிச்சேல் அல்லது அவரது அண்ணனை தேர்தலில் நிறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது...அமெரிக்க மேயர் தேர்தலில் இவ்வாண்டு தேமுதிக போட்டியிடும் என்று வாஷிங்டன் வேஸ்ட் பத்திரிக்கை ஆருடம் தெரிவித்துள்ளது... மேலும் இனி அமெரிக்காவில் பன், ரொட்டி விற்க தடை வரும் எனவும் அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.


ஆம் ஆத்மியில் அண்ணன்.... இன்று நீக்கப்பட்ட அண்ணன் திடீரென ஆம் ஆத்மி முக்கிய நபர் ஒருவரை சந்தித்த செய்தி சற்று முன் வெளியானது.. டெல்லியில் குப்பை கொட்ட முடியாதவன் என்று அவரை ஏளனம் செய்தவர்களுக்கு விளக்குமாறு இருக்குமிடத்தில் குப்பை இருக்காது என சூசகமாக பதிலளித்தார் அண்ணன்... இந்திய உரத்துறையையே கட்டிக்காத்த எனக்கு உரமின்றி போகாது என்ற போது தமிழ் தெரியாத ஆம் ஆத்மி பிரமுகரே குலுங்கி அழுதுவிட்டார்...விரைவில் கெஜ்ரிவாலை சந்தித்த பின்பு தமிழகத்தின் ஆம் ஆத்மி தலைவராக அண்ணன் தேர்வு செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் கூறினார்கள்..இதற்கிடையே அண்ணனை ஆம் ஆத்மியில் சேர்க்க அன்னா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிற செய்தியை கேட்ட அவர்கள் இந்த வயதானவர்களால் தான் பிரச்சினையே என முணுமுணுக்க அவர்களை அப்படி பேசக் கூடாது என்று தடுத்தார் அண்ணன்... அண்ணனின் இந்த அமைதியான அணுகுமுறை அனைவரையும் வியப்பிலாழ்த்தியது...

விக்டோரியா மகாராணியை செருப்பால் அடிப்பேன்.... வட்ட செயலாளரின் ஒன்று விட்ட தம்பியின் தூரத்து உறவினர் ஆவேசம்.!
இது குறித்து அவர் நமது செய்தியாளரிடம் குறிப்பிடுகையில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை கொள்ளையடித்து விட்டார்கள்... கோவில் சொத்துகளை அபகரித்து விட்டார்கள் அந்நிய மதத்தை நம் நாட்டில் வேரூன்ற செய்தார்கள்.. ஆகவே இந்த முடிவு எனவும் விரைவில் மெளண்ட்பேட்டன்,ரிப்பன், காரன் வாலிஸ், கர்சன்,இர்வின்,வெல்லெஸ்லி பிரபு மற்றும் ராபர்ட் க்ளைவ் ஆகியோரை செருப்பால் அடிக்க போவதாகவும் ஆவேசமாக குறிப்பிட்டார்... இந்த கால் சேவைக்கு இந்தியா முழுவதும் தொண்டர்களிடம் இருந்து செருப்பு சேகரிக்கப்படும் என்றும் அதற்கு ஒரு இயக்கம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்..

ஊட்டி அதிகாரிகளுக்கு புலி வாழ்த்து... நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட பெண் புலியின் கணவனான ஆண் புலி...ஊட்டி அதிகாரிகளுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளது.. என் உயிரை எடுத்துக் கொண்டிருந்தவளை எப்படி அடக்குவது என தவித்த எனக்கு அவள் சுட்டுக் கொல்லப்பட்ட சேதி பெரு மகிழ்ச்சியை தந்தது எனவும்..மனிதர்களை கொன்ற அவள் மிருகமே அல்ல! வெறி பிடித்த மனிதன்!!  காட்டுக்கு அடங்காத இது போல அடங்கா பிடாரிகள் அழிக்கப்பட்டது தான் சரி....இதற்கு நன்றிக் கடனாய் இனி நான் புல்லை மட்டுமே சாப்பிடுவேன் எனவும் உங்கள் எல்லைக்கு வரவே மாட்டேன் எனவும் உறுதிமொழி அளிப்பதாக அச் செய்தியில் கூறி இருந்தது..விரைவில் அடக்க ஒடுக்கமான மான்களை மட்டுமே வேட்டையாடும் குடும்ப புலி ஒன்றை மறுமணம் செய்யும் தகவலையும் அது கூறி இருந்தது..


Saturday 18 January 2014

முகநூல் கண்காட்சி....

புத்தக கண்காட்சியை தொடர்ந்து ....

மாபெரும் முகப் புத்தக கண்காட்சி...!

நமது முகநூல் நண்பர்களின் ஸ்டால்கள்.... (கற்பனையில்)

டிமிட்ரி ஸ்டால்: கண்காட்சியின் நுழைவாயில் அருகே இருக்கும்... எந்த புத்தகமும் இருக்காது ஆனால் எந்தெந்த புத்தகம் வாங்கலாம் என்ற விவரங்கள் விளம்பர படுத்தப்படும். அவ்வப்போது இவர் போற்றுகிறாரா! தூற்றுகிறாரா! என்ற குழப்பம் இருப்பினும் அப்பனே விநாயகா, முருகா என்று வேண்டிக் கொண்டால் நமக்கும் புரியும்...! புரொமோஷன் ஸ்டால்.

செல்லி ஸ்டால்: ஸ்டால் பணியாளர்களே டெரராக இருப்பார்கள்,பில் போடுங்க என்றால் பில்லை கிழே போட்டு நீங்க தானே போட சொன்னிங்க என்பார்கள்.அவ்வப்போது புர்ர்ர் என்ற சப்தம் கேட்டால் அது உங்கள் சட்டை கிழியும் சத்தம் மட்டுமல்ல செல்லி சிரிக்கும் சத்தமும் தான்...சில நேரம் கிக்கிக்கிக்கி என்று அழைப்பு மணி சத்தத்திலும் சிரிப்பார்.... சிரிப்புக்கு கியாரண்டியான ஸ்டால்....

சித்தன் கோவை ஸ்டால்: நடையாய் நடந்து வந்து யாரும் புத்தகம் கேட்டால் பயங்கர கோபம் வரும். கோபால் என்பவர் எழுதிய சாட்டை இல்லாத பம்பரம் என்று ஒரு புத்தகம் அதை மொத்தமாக வாங்கி டார் டாராக கிழிப்பது இவருக்கு பிடிக்கும்.. பெற்ற தாயாக இருந்தாலும் இவர் கடையில் வந்து அம்மா என்றழைத்தால் சூரியப்பார்வையில் சுட்டெரித்து விடுவார்... இறுதியாக எல்லோரும் கடையை ஸ்டால் என்பார்கள் இவர் மட்டுமே ஸ்டாலின் என்பார்... அனல் பறக்கும் ஸ்டா(லின்)ல்...

ஹன்ஸா ஸ்டால் : சட்ட புத்தகங்கள் விற்கும் கடை.. மியூஸிக் சம்மந்தமான புத்தகங்களும் கிடைக்கும்... இலவசமாக சமையல் ஆலோசனைகளும் கிடைக்கும்... பக்கத்து கடையில் நல்ல புத்தகம் விற்றால் இவர் வியாபாரத்தை விட்டு ஓடிச் சென்று பாராட்டுவார்... அந்த நல்ல குணம் தெரிந்து கொண்ட பலர் இவரிடம் ஆலோசனை இலவசமாக பெற்றுக் கொண்டு புக் வாங்காமல் நடையை கட்டிவிட்டுவார்கள்.. ஆனால் அது பற்றி கவலைப்பட மாட்டார்.. வருத்தமில்லாத வக்கீல் ஸ்டால்....

தொடரும்.....

புத்தக கண்காட்சியை தொடர்ந்து ....

மாபெரும் முகப் புத்தக கண்காட்சி...! PART - 2

நமது முகநூல் நண்பர்களின் ஸ்டால்கள்.... (கற்பனையில்)


Viji connect ஸ்டால்: பாட்டு புத்தகங்கள் விற்கும் ஸ்டால்... ஏராளமான மியூசிக் டிவிடிக்கள் யூ ட்யூப் லிங்க்குகளும்  நிறைந்த ஸ்டால்... 21 வருடத்திற்கு முன் இளையராஜா குளிக்கும் போது ஹம் செய்த லிங்க்.... ஏ.ஆர். ரஹ்மான் ஸ்கூலில் 5வது படிக்கும் போது பாட்டு போட்டியில் பாடிய லிங்க் என எல்லாம்வைத்திருப்பார்.மறக்க இயலாத கானங்கள் என்ற தொகுப்பும் கிடைக்கும், பாடல்களை அலசி ஆராய்ந்து காயப்போட்டிருப்பார்.... செவிக்கினிய ஸ்டால்....

Lalitha murali ஸ்டால்: தேன் மிட்டாய், மாங்காய் பத்தை, புளிப்பு மிட்டாய் எல்லாம் கிடைக்கும், இது ஸ்டாலா கேண்டினா என்ற சந்தேகம் வரும். நாக்கை துருத்திய படி, கண்களை உருட்டியபடி, நிறைய சிரித்தபடி இவர் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருப்பதால் இங்கு வர சிறு குழந்தைகள் பயந்து அலறும். எனவே அவர்களை இங்கு கூட்டிச் செல்வதை தவிர்க்கவும்... ஆன்மீகத் தலங்கள் பற்றிய புத்தகங்கள் கிடைக்கும் இருப்பினும் இந்த ஸ்டால் அமானுட ஸ்டால்...

ராகவன் ஶ்ரீனிவாசன் ஸ்டால்: பாதிக் கதை இருக்கும் புத்தகங்கள் நிறைய இருக்கும்... ஆனால் முழுப்பணமும் கேட்பார்.. வெண்பா ஆசிரியப்பாவோடு ரம்பா பற்றியும் சொல்லுவார். ஹாங்காங்கில் நடந்தது என்ன என்ற புத்தகத்தை நீங்கள் புரட்டினால் அது இவர் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடும் என்பதால் டிரைலரோடு நிறுத்திக் கொள்வார். திடீர் திருப்பங்கள் மலைப்பாதையில் மட்டுமல்ல இவர் கதையிலும் இருக்கும்.. திருப்பு முனை ஸ்டால்....

தமிழ் அரசி ஸ்டால்: இங்கு என்ன புத்தகம் விற்கும் என்று கேட்டால் அவர்கள் ஃபேஸ்புக்கில் இருக்கவே லாயக்கில்லை... இவர் கடையில் புத்தகம் வாங்காத ஆண்கள் "அதி அரூபனாகவும்" பெண்கள் "கொரில்லா"க்களாகவும் தெரிவார்கள்.. வாங்கினால் அதிரூபனும் ஸிண்ட்ரெல்லா வாகவும் மாறுவார்கள்..தமிழ் கடையில் இருந்தால் வியாபாரம் அமோகமாக இருக்கும்..! ஏனெனில் வாய் திறந்து கவிதை சொல்லிவிடுவாரோ என்ற பயத்திலேயே அனைவரும் வாங்கிக் கொண்டு விரைந்திடுவர்... கவிதையான ஸ்டால்.

தொடரும்....


புத்தக கண்காட்சியை தொடர்ந்து ....

மாபெரும் முகப் புத்தக கண்காட்சி...! PART - 3

நமது முகநூல் நண்பர்களின் ஸ்டால்கள்.... (கற்பனையில்)

Nithya kandasamy ஸ்டால் : பெண்கள் கூட்டம் அலைமோதும் ஸ்டால்! ஆண்களை அடக்குவது எப்படி, ஆண்களை நம்பாதே, ஆணாதிக்கம் என்ற மாயயை போன்ற புத்தகங்கள் கிடைக்கும்... ராங்கு பண்ண அல்லாம் ராங்கா பூடும் என்று மெட்ராஸ் பாஷையில் இவர் எழுதின புத்தகம் இப்போது பரபரப்பான விற்பனையில்... கம கம வென்று மட்டன் பிரியாணி வாடை வந்தால் ஸ்டாலுக்குள் மதிய உணவு நித்யா சாப்பிடுகிறார் என அர்த்தம் வம்பிழுப்போர்க்கு டெரர் ஸ்டால்...

Erode Kathir ஸ்டால் : கலாச்சார புத்தகங்களும், வேளாண்மை புத்தகங்களும் கிடைக்கும் சேகுவாரா பனியனோடு போய் புத்தகம் வாங்கி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு நீட்டினால் அடுத்த நாள் நீயெல்லாம் புரட்சியாளனா என ட்விட்டர் பறக்கும்.. அரங்கில் அடிக்கடி ரத்த தானம் நடப்பதால் மது அருந்தி செல்ல வேண்டாம்.. மீறி சென்றால் என் முதல் பீரும் அக்கப்போரும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும்... மீடியா வெளிச்சம் உள்ள ஸ்டால்.

Kirthikatharan ஸ்டால்: குழந்தைகளுக்கு கதை சொல்லும் ஓஜுவும் நானும் புத்தகம் அம்மாக்களுக்கு பயன்படும்( நம் முதல்வர் அல்ல) அஞ்சலையின் சமையல் குறிப்புகளும் வீட்டுக்குறிப்புகளும் புத்தகதை பெண்கள் கட்டாயம் விரும்புவார்கள் ஏன்னா அவங்க மனசு இருக்கே அங்க நிக்குறா அஞ்சலை.. டவுட்டு டானியா புத்தகங்களோடு லேட்டஸ்ட் அப்பா ஸ்பெஷல் கதைகள் பரபரப்பாக விற்பனையாகும் ஜனரஞ்சகமான ஸ்டால்...

ரா புவன் ஸ்டால் : பிரியாணி செய்வது எப்படி!சுவை மிகுந்த 200 வகை பிரியாணிகள்!போன்ற பிரியாணி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எல்லாம் கிடைக்கும்... 1000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கினால் ஒரு பிரியாணி லெக் பீசுடன் free... வீட்டில் இருந்து பிரியாணி செய்து கொண்டு வந்து கொடுத்தாலும் பண்ட மாற்று முறையில் புத்தகம் தரப்படும் வேலை இல்லாதவனும் வெற்றி பெறுவான் என்ற லேட்டஸ்ட்  புக் விற்பனையில் ஜோர்...மசாலா மணம் வீசும் ஸ்டால்....

நிறைந்தது...





Tuesday 14 January 2014

தீனா கொரலு OLD


தீனா கொரலு...

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா.! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

நம்ம பேஸ்ற பேச்சி எப்டி இர்க்கணும்ன்னா... கேக்குற ஆளு சொம்மா அப்டியே மெல்ட்டு ஆயி நம்பளாண்ட சர்ண்டர் ஆவணும்.. உன் பேச்சி அல்லாரையும் இஸ்த்துகினு வர்ணும்...

அத்தே நேர்த்துல ஒன் பேச்சி கேக்யாதவங்க அடாடாடா நமக்கு இப்டியாப்பட்ட பேச்ச கேக்க மிடியாம போச்சேன்னு வர்த்தப்படணும்.அப்டி பேஸ்றது தான் நல்ல பேச்சி...

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... நல்ல பேச்சின்றது...

"கேக்குறவன் குஜால் ஆவணும்.. கேக்காதவன் பேஜார் ஆவணும்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம்ஞ் சொல்.




தீனா கொரலு...

அல்லாத்துக்கும் சலாம் உட்டுக்கிறேன்! இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

சொந்தகார்னா இர்க்கவன் எப்டி இர்க்கணும் தெரிமாப்பா? உன் கய்யில துட்டு இர்க்கும் போது எவ்ளோ நெர்க்கமா இர்ந்தானோ அத்தே மேறி துட்டு இல்யாத போதும் இர்க்கணும்..

பழச மர்க்காம எப்யும் ஒரே மேறி இர்க்கறவன் தான் மெய்யாலுமே சொந்தக்காரன்.!இத்த உனக்கு யார் செஞ்சாலும் நீ ஆருக்கும் செய்யாத்தே...சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

"பழச மர்க்காதே.....பண்த்தை மதிக்காதே".. 

சோக்கா சொல்லிக்கீராருபா "தல"

பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்

கற்றத்தார் கண்ணே உள.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

இப்ய இர்க்க கால்த்துக்கும் ஏத்தாமேறி அப்யே சொல்லிக்கீராரு நம்ம வள்ளுபரு அத்து இன்னான்னா...

தவமிர்க்குற சாமியாரு கண்க்கா வேசங்கட்டிக்கினு பின்யால அதுக்கு சம்பந்தமே அல்லாத வேலய பாத்துனுர்க்குற டுபாக்கூருங்கோ ரொம்ப்ய டேஞ்சிரு ஆனவங்கோ...

பொதர்ல மர்ஞ்சி நின்னுக்குனு பர்ந்து வர பறவிய வல வீசி புட்ச்சுடுவாங்களே வேடனுங்கோ அத்தெ மேறி ஊரு ஜன்த்த அல்லாம் ஏமாத்திருவானுங்கோ இந்த டுபாக்கூர் சாமிங்கோ.

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

"வேசம் கட்ன சாமியும் ஒன்யு..வேடன் விர்ச்ச வலையும் ஒன்யு"..

ரண்டாயிரம் வர்சத்துக்கு மின்னாடியே நம்ம தல சோக்கா சொல்லிக்கிற மேட்டருபா.!


தவம்மறைந்து அல்லது செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.




தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

நல்லவங்கோ,பெர்ய மன்சங்கோ எப்யுமே நம்ய கூடவே இர்க்குறது தான்பா நல்யது! அவுங்கோ சங்காத்தமே வோணான்னு எவுனாச்சும் சொன்யா அத்து எப்டிருக்கும் தெரிமா?

நீயா தேடினு போயி பல பேர விரோத்தியா ஏத்துகினா எப்டி இர்க்குமோ அத்தே மேறி பத்து மடங்கு கஸ்டம்... பெர்ய மன்சன் சங்காத்தம் வோணான்னு சொல்றது..! 

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா....

"நல்லவங்கோ சங்காத்தம்... வோணாமின்னா சங்கூதும்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

ஒல்கத்துல சொந்தக்கார்ன வுட தோஸ்த்து தான் அல்லாம்! ஆன்யா தோஸ்த்து நல்லவனா கெடிக்கிறது தான்பா கஸ்டம்.! எப்டியாப்பட்ட ஆளு உனுக்கு தோஸ்த்தா இர்க்கணும்?

பெர்ய மருவாதியான குட்ம்பத்துல பொர்ந்தவனா இர்ந்தாலும் "இத்த செஞ்சா பழி நம்ய மேல வுயுந்துடும்ன்னு"பழி பாவ்த்துக்கு பய்ந்து அப்பாலிக்கா ஒதுங்கி போரான் பாரு அவன் தான்பா நல்ய தோஸ்த்து..! அப்டியாபட்ட தோஸ்த்த நீ துட்டு கொட்த்தாவது தக்க வச்சிக்க..

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

"நாயமனவன் தோஸ்த்துன்னா... நாலு காசு பெர்சில்ல"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

எப்ய பாத்யாலும் வாய்க்கு ருசியா துண்ணுகிட்டே இர்க்குறவங்கள பாத்துர்க்கியா? அப்டி துண்றது மட்யும் இல்லாம நாலு நல்லத காதால கேட்யு அறிவ வள்த்துக்கணுமாம்..!

உனுக்கு காத கொட்த்துர்க்கிறதே கேக்கத்தான் அத்த செய்யாம வக்கிணியா துண்ணுகிட்டே இர்ந்தா நீ இர்க்கறதும் ஒன்யுதான் சாவர்றதும் ஒன்யு தான்..,

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா....

"காதுக்கு போடாத பூட்டு... ஒன் வாழ்க்க ஆய்டும் வேஸ்ட்டு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

நெரியா துட்டு சேத்து வச்சவங்கோ இல்யாதவங்களுக்கு ஒத்வி செய்ணும்.. அப்டி ஒத்வி செய்யாம வூடு நெர்யா துட்டை மர்ச்சி வச்சினு இர்க்குறது எப்டி இர்க்கும் தெரிமா?

ஒல்க அழகி கண்க்கா ஊரே ஜொள் வுட்ற மேறி இர்க்க கன்னி பொண்ணு தன்யாவே வாழ்ந்து கியவி ஆயி செத்தது கண்க்கா ஒத்வி செய்யாதவன் துட்டு வீணாப் போய்டுமாம்..! 

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... 

"தந்த்யு ஒதவாத பொன்னும்... தன்யா வாழ்ற பொண்ணும் வேஸ்ட்டாவே பூடும்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....


ஒரு மன்சனுக்கு பகயா இர்க்குறது இன்னா தெரிமா? பூ கணக்கா சிர்ச்ச மூஞ்சி, சந்தோஸ்மான மன்சு இப்டி இர்க்குவறங்கோ கோவத்துல காண்டானா இன்னாகும்?

சிர்ச்ச மூஞ்சி டோமராகும் மன்செல்லாம் வெறியாகும் அந்தய நிம்சம் நீ மன்சனாவே இர்க்க மாட்ட..
மன்சனுக்கு கோவத்த வுட பெர்ய எதிரி எத்யுமே இல்ல கரீட்டா.! சுர்க்கமா பிரியற மேறி சொன்னா

"சிர்ச்சு வாய்ந்தா லாபம்... உனுக்கு பெர்ய எதிரி கோவம்...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

பூமிய நாம கடப்பாரய எட்த்து தோண்ட சொல்லோ இன்னா செய்து? கம்முனு கிடக்குதா! அப்டி கம்முன்னு பொர்த்து இர்ந்தா தான் அத்து பூமா தேவி....! அத்தே மேறி....

உன்ய பத்தி தப்பா பேஸ்கூடாத வார்த்தய எவுனாவது பேஸ்னா அத்த பொர்த்துக்கினு கண்டுக்காம போனின்னா நீ பெர்ய நியாயஸ்தனாம்பா.! சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

"வெட்னாலும் பொர்க்குது பூமி... திட்னாலும் பொர்க்குறவன் சாமி"...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

ஒரு மன்சனுக்கு சாவ விட இன்னா பெர்ய தொயரம் இர்க்கும்? சாவு வந்த்யாலே சோகந்த்தான்பா... ஆன்யா அந்த சாவே எப்ய தெரிமா சந்தோஸ்மா மாறும்..!!

ரொம்ப கஸ்டத்துல இர்க்க ஒரு ஏய உன்னாண்ட வந்து ஒதவி கேக்க சொல்லோ அத செய்ய மிடியாத நெலயில வர்ற சாவு இர்க்கே அதான் நல்ல சந்தோஸ்மான சாவாம்..! 

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... 

" ஒதவி செஞ்சு வாழு..மிடியாட்டி சந்தோஸ்மா சாவு"....

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்

ஈதல் இயையாக் கடை.


தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

ஒரு கார்யத்த செய்ய சொல்லோ நாம நெரியா நேர்த்துல இன்னா பண்றோம்? அப்பால பாத்துக்கிலாம்ன்னு தள்யு வச்சிர்றோம்... ஆனா அத்த எப்படி செய்ணம் தெரிமா!?

எத்த உட்னே செய்ண்மோ அத்த தள்யி போடாம அப்யே செய்ணும்,அத்தே நேர்த்துல அப்பால செஞ்சுக்கிலாம்ன்னு இர்க்குற வேலய லேட்டா பாக்குறது தான் கரீட்டாம்..!

சுர்க்கம்மா பிரியற மேறி சொன்னா...

 "லேட்டா செய்றத லேட்டஸ்ட்டா செய்யி"...பாஸ்ட்டா செய்றத ஜுட்டா செய்யி"..

அட !!2ஆயிரம் வர்சத்துக்கு மின்னாடியே சோக்கா சொன்ன சூப்பர் ஸ்டாருப்பா நம்ம "தல"


தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

உனுக்கு இன்னா கஸ்டம் வந்த்யாலும், சோறு துண்றதுக்கே லாட்டரி அட்ச்சாலும் நீ இன்னா பண்யனும்ன்னா நாயமா உழ்ச்சிகினே இர்க்கணும்.! அப்டி உழ்ச்சி நீ  தெள்ஞ்ச தண்ணி மேறி கூழு காச்சி குட்ச்சாலும் அத்து வட பாய்சத்தோட விர்ந்து துண்ணத்துக்கு சமானம்..!

முயற்ச்சி எட்த்து வாய்றது தான் வாய்க்கை..! அப்ய தான் நீ வாயற வாய்க்கை மீனிங்கா இர்க்கும்.. சுர்க்கமா பிரியற மேறி சொன்னா..!

"உழ்ச்சு குடிக்கிற கூழு... உனுக்கு விர்ந்து சோறு...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள் தந்தது

உண்ணலினூங்கினியது இல்.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

என்ய மேறி படிக்காத்ய ஆளுங்கோ அல்லாம் இன்னாடா இப்டி படிக்காம பூட்டமேன்னு ஒரியாவர்த வுட பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்ச அறிவாளிங்களாண்ட போயி அவுங்க பட்ச்சத...
கேட்யு தெர்ஞ்சிக்கணும்... அப்டி கேட்யு தெர்ஞ்சிக்க சொல்லோ இன்னாகும்?

கய்யி காலு தளந்துயு போனவுனுக்கு கய்யில குச்சி இர்ந்தா எப்டி ஒதவியா இர்க்குமோ அத்தே மேறி நீ கேட்டு வாங்கிக்கின அறிவு உனுக்கு பிரியோஜன்மா இர்க்கும் சுர்க்கமா பிரியற மேறி சொன்னா..

நல்லத அறிவா கேளு... அது தான் ஊன்றுகோலு..

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கற்றலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாம் துணை.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

இந்தய கால்த்துல ஒன்யே ஒன்யமட்டும் மர்க்கவே கூடாத்து! ஒர்த்தரு உனக்கு மின்னால செஞ்ச ஒதவிய மர்க்காம இர்க்கறது நாயம் கடியாத்து. ஆனா ஒன்ய மட்டும் மர்ந்துட்ணும்!

அத்து இன்னான்னா நம்க்கு ஆராச்சும் கெட்டுது பண்யி இர்ந்தா அத்த அந்த செகுண்டே மர்ந்துட்ணும்..! அதான்பா நாயம்... சுர்க்கமா பிரியற மேறி சொன்னா..

"நல்லத மர்க்காதே... கெட்டத மர்ந்துடு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

பண்க்காரனா இர்க்கவனுக்கே பெர்ய சொத்து இன்னாவா இர்க்கும்? அத்த வுடு.. பொதுவா அல்லா மன்சாளுக்குமே பெர்ய சொத்து இன்னா தெரிமா?

பண்ஞ்சு போயி அட்க்க ஒட்க்கமா தன்மியா போற கொணம் இர்க்கே அதான் பெர்ய சொத்தாம்... நீ எம்மாம் துட்டு வச்சினு இர்ந்தாலும் பெர்ய சொத்து பணிவு தான்பா! சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

 "பணிவா இர்க்கவன் தான்பா பண்க்காரன்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்;அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

யாராவது கிட்ச்சத வச்சினு சந்தோஸ்படறமா? வோணும் வோணும்ன்னு ஆசப்பட்டுகினே இர்க்கோம்.. சரி மன்சனா பொர்ந்தயவன் ஆசப்பட்றத்து கரீட்டுதான்...ஆனா எதுக்யு ஆசப்பட்டாலும் ஒண்யே ஒன்யுக்கு மட்யும் நாம ஆசப்பட கூடாத்து.! அது இன்னான்னா....

மர்ந்து போய்கூட இன்னொர்த்தரு கய்யில இர்க்குற பொருளுக்கு ஆசப்பட கூடாத்து! அப்டி ஆசப்படாம வாயறது தான் பெர்ம! அப்ய தான் நீ கெலிச்சிகினே இர்ப்ப....மீறி நென்ச்சா உனுக்கு சன்யன் சட போட்துன்னு அர்த்தம்...சுர்க்கமா பிரியற மேறி சொன்னா..

"அட்த்தவனோட காசு....அதுக்கு ஆசப்பட்டா நீ குளோசு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு.




தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....


எப்யுமே எத்தாவ்து பிரிச்சினை வந்த்யா அல்றி அட்ச்சி ஓடி எப்டியாது அத்துல இருந்து தப்ச்சினு போக பாக்குறோம்.. ஆனா அந்தய மேறி பிரிச்சினை வர் சொல்லோ இன்னா பண்றதுன்னு அத்து வர்றதுக்கு மின்னாடியே யோஸ்ச்சமா? இல்யே.! அதான்பா சொல்றேன்

பிரிச்சினை வர்றத மின்னாடியே தெர்ஞ்சுகினு அப்டி வந்த்யா அத்தால ஒன்யும் ஆகாம சேதார்மில்லாம எஸ்கேப் ஆக பிளான் பண்றான் பாருஅவன் தான் மன்சன்.! அவுனுக்கு பிரிச்சினியே வர்றாது வந்த்யாலும் அத்த சொம்மா ஊதி தள்ளிர்வான்...!

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

"வர்றத மின்னாடியே யோசி... பிரிச்சின ஒனுக்கு தூசி".....

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்.


தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

ஒல்கத்துல அல்லாரும் எப்டி எப்டியோ வாய்ந்துனு இர்க்காங்கோ! ஆனா நாம வாயற அந்தய வாய்க்கய்க்கு அர்த்தம் இர்க்தா? இல்ல வாய்க்கய எப்டி வாயணும் தெரிமா?

ஒல்கத்துல இப்டி அல்லாம் தான் வாயணும்ன்னு நேர்மியான நல்ல வயி நெரியா இர்க்குது அந்தய வயில நாயமா ரிஸ்பிட்டா கண்ணும் கர்த்துமா வாயணும் அப்டி நீ வாய சொல்லோ...

உன்ய வான்த்துல இர்க்குற கடவுளா நென்ச்சி அல்லாரும் உன்ய மதிச்சு கய் எட்த்து கும்பிட்டுக்குவாங்கோ..... சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... 

"நல்ல மன்சன் தான்பா கடவுளு"...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.


தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா.....

நீ உயச்சு சேத்து வெச்ச துட்ட எப்டி பத்ரமா வெக்குறது? வூட்ல பொட்டி போட்யு மூடி! இல்ல உடிக்க முட்யாத லாக்கருல! அல்லாட்டி பேங்குல! இல்ல பினான்சு கம்பெனில! இல்ல சேர் மார்க்கிட்டு பாண்டு பத்திரம்! இங்ய அல்லாம் கெடியாத்து... பின்ன எங்ய?

துண்றதுக்கு சோறில்லாம உன் மூஞ்ச பாத்து கய்யேந்தி வர்றான் பாரு ஏய! அவுனுக்கு வவுறாற சோறு போட்டின்னா போதும்.! அந்தய புண்யம் தான் பின்னாடி கால்த்துக்கு நீ சேத்த சொத்து! அதான் எப்யுமே பத்ரமா இர்க்கும்! அத்த பெர்ய பிஸ்தா கூட்ய திர்ட முடியாது.!

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... 

"பசிக்கு போடு சோறு.. வாய்த்தும் உன்ன ஊரு.."

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.



தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா என் போட்டோவ இந்தய மூஞ்சி புக்குல போட்ட இன்னான்னு நம்ம ஆர்முகத்தாண்ட ஒர்யே சண்ட... கட்சில நம்ப போட்டாவ போட்ய ஒத்துகிட்டாரு.. மொத மொத என் மூஞ்சியும் இங்ய வர்து..! ஒரே குஜாலா இர்க்குப்பா... 

செரி.... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

நாம பேசிகினு இர்க்க பேச்ச எப்டி பேஸ்ணும் தெரிமா?அல்லாத்துக்கும் நல்லுது நட்க்குறா மேறி நால்யு நல்ய வார்த்த பேஸ்ணும்.!அத்துஅவுங்குளுக்கு பிரியோஜன்மா இர்க்கணும்..

அத்த வுட்டுட்டு தேவயே இல்யாம கெட்டுதயே பேசினு இர்ந்தா நாம பேஸ்றது ஆருக்குமே பிரியோஜனம் இல்யாம பூடும்... சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

நல்யதயே பேசு... நாற வாய மூடு... 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க

சொல்லின் பயனிலாச் சொல்.


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

நாம அல்லாரும் நமக்கு தெர்ஞ்சவங்களுக்கு ஏதாவது ஒன்யுன்னா ரைட்டோ ராங்கோ அவுங்குளுக்கு சப்போட் பண்ணினு இர்ப்போம் கரீட்டா!ஆனா இந்த ஒல்கத்துல பொர்ந்தவங்கோ அல்லாம் எப்டி இர்க்கணும்ன்னா....

நம்ம தோஸ்த்தா இர்ந்தாலும், விரோத்தியா இர்ந்தாலும் இல்ல மூஞ்சே தெர்யாத புது ஆளா இர்ந்தாலும் நாயம் எந்தய பக்கத்துல இர்க்குதோ அந்தய பக்கம் தான் இர்க்கணும்.. தெராசு தட்டுல நெடுவுல நிக்கிற முள்ளு கணக்கா நாயத்து பக்கம் தான் நிக்கிணும்... அதான் நல்து

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... "நாயமா நில்லு... அதான் தில்லு..."

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தகுதி என ஒன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.


தீனா "கொரலு"...

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

இந்தய கால்த்துல நான் தான் பெர்ய ஜாதி என் ஜாதி தான் பெர்மயானத்து அப்டின்னு ஜாதி பெர்ம பேஸ்ற அப்பாடக்கர நாம பாத்தினு வர்றோம்... கரீட்டா! 

ஆனா மெய்யாலுமே உசந்த பெர்ய ஜாதி இன்னா தெர்யுமா? தாழ்ந்த ஜாதில பொர்ந்தாலும் பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சவங்கோ தான் பெர்ய ஜாதி... 

ஒன்யுமே படிக்காம தற்குறியா இர்க்கவன் பெர்ய ஜாதில பொர்ந்திருந்தாலும் அவன் கீழ் ஜாதி தான்.. சுர்க்கமா பிரியற மேறி சொன்னா..

பட்ச்சவன் தான் மேல் ஜாதி...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் 
கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

பங்ளா கணக்கா வூடு, கட்டி கட்டியா தங்கம்,பொட்டி பொட்டியா துட்டு,கப்பலு மேறி காரு அல்லாம் இர்ந்தாலும் இத்தெல்லாம் எப்ய வோணா கய்ய வுட்டு போய்டும். ஆனா...

மன்சனா பொர்ந்தவனுக்கு எப்யுமே அயிஞ்சு போகாத்த சொத்து இன்னா தெர்யுமா? அவன் பட்ச்ச படிப்பு தான்! அது தான் ஒல்கத்துல நெல்யானத்து,எப்யுமே அயியாயது...

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... துட்டு செலவாய்டும்..அறிவு நெலயாய்டும்...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை.


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

கோவிலாண்ட இர்க்குற கொளத்த பாத்துர்க்கியா நீ! அத்துல மெதந்துனு இர்க்குமே பூவுங்கோ அந்த மேறி தான் மன்சனோட வாய்க்கயும்..!பிரியலையா? நல்யா கேட்டுக்க.! 

கொள்த்துல இர்க்குற தண்ணி எவ்ளோ உயர்மா இர்க்கோ அதே மட்யத்துல தான் பூவுங்கோ மெதக்கும்,,தண்ணி மேல்ய ஏறுனா பூவும் ஏறும் கீய இறங்குனா கூடவே இறங்கும்..

அத்தே மேறி ஒன் மன்சுல நெனய்க்குற நல்யத வுடாப்புடியா நென்ச்சுகினே இரு.! கஸ்டமோ சந்தோஸ்மோ எப்யுமே அந்தய நென்ப்பு கூட்யவே இர்ந்தா நீ வாய்க்கயில கெலிக்கலாம்.!

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...   "எண்ணம் போல வாய்க்கை"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


வெள்ளத்தனைய மலர் நீட்டம்; மாந்தர் தம்

உள்ளத்தனையது உயர்வு.


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

ஒல்கத்திலியே படா நல்லது இன்னா? மன்சு நெர்யா சந்தோஸ்த்தோட்ய கஸ்டப்பட்றோ ஜன்ங்குளுக்கு துட்ட அள்ளி கொடுக்குறது அதானே... ம்ஹூம்..அத்தில்லபா..!

காஸ்,பணம்,துட்டு,மணி இல்லின்னாலும் மூஞ்சிய குஜாலா வச்சிகினு சிர்ச்சிக்கினே நாலு நல்ய வார்த்த பேஸ்ற பாரு அதான் நல்து....நீ செய்ற தர்மத்த விட இத்துதான் பெர்சு...

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா 

"லட்டு மேறி பேஸ்றது துட்ட விட பெர்சு" ...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"


அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.



தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

கெட்டது, கேப்மாரித்தனம் பண்றவங்கோ நல்யா கேட்டுக்கோங்கோ.. நீங்ய செஞ்ச அல்லா  கேடும் எங்கியும் போவாத்து...அத்தெல்லாம் ஒன்யவே பாலோ பண்ணும்...எப்டி தெர்யுமா? 

நீ நட்ந்து போவ சொல்லோ கூடியே வர்து பாரு ஒன் நெயலு அத்தே மேறி உனுக்கு அடியிலியே பாலோ பண்ணினு கூடவே இர்க்குமாம்... சுர்க்கமா பிரியற மேறி சொன்னா..

கெட்டது செஞ்சிவனுக்கு கெட்டது தான் முடிவு.... 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடி உறைந்தற்று.



தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

ஒலகத்திலியே பெர்ய பண்க்காரன் ஆரு?பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சி அறிவாளியா இர்க்குறபரு தான்!அவராண்ட ஒன்யுமே இல்லின்னா கூட அவரு அறிவ்வு அல்லாத்தியும் குடுக்கும்...

இத்தே அறிவ்வே இல்லாத்ய ஒர்த்தரு எம்மா துட்டு வச்சினு இர்ந்தாலும் அல்லா வசதி இர்ந்தாலும் அவரு ஒன்யுமே இல்லாதவரு.! அறிவ்வு இல்லாம அல்லாம் இருந்தா ஏய தான். 

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... அறிவ்வா இர்கவன் தான் மன்சால பணக்காரன்..

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அறிவுடையார் எல்லாம் உடையார்;அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.



தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா இன்னிகு இன்னா கர்த்துன்னா....

நீ மர்ந்து போய் கூட செய்கூடாத்த மேட்டரு இன்னா தெர்யுமா? ஒர்த்தன் கெட்யு போவுணும்ன்னு நென்ச்சு அவுனுக்கு குயி பறிக்குற வேல தான்..அப்டி நீ செய்ய சொல்லோ..

ஒல்கத்துல நாயம்ன்னு ஒன்யு இர்க்குதே அத்து இன்னா நெனிக்கும்ன்னா... அவுனுக்கு நீ இன்னா நென்ச்சியோ அத்தே மேறி உனுக்கும் கெட்யுது வர்ணும்ன்னு நெனிக்குமாம்.. 

சுர்க்கமா பிரியற மேறி சொன்னா... "கெட்டுது நென்ச்சா... கெட்டயிஞ்சு போவ"... 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

மறந்தும் பிறன்கேடு சூழற்க சுழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.



தீனா "கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்ன்னா....

என்ய தான் நாம பத்ரமா வாய்ந்தாலும் எத்துவுமே நம்ம கய்ல இல்ல, ஒன்ய நீயே பத்ரமா பாத்துக்க நீ இன்னா செய்ணம் தெரிமா? கோவம் வர் சொல்லோ அத்த வராம அட்க்கிக்கோ அப்டி அட்க்க தெர்லின்னாலும் அட்க்க கத்துக்கோ.. இல்லாங்காட்டி இன்னா ஆகும்?

கோவம் வந்த்யா நாமஅல்லாரும் மன்சனாவே இர்க்கறதில்ல அத்த அட்க்கணும் அப்டி நீ அத்த அட்க்கலேன்னா அந்த்ய கோவமே ஒன்ய குளோஸ் பண்ணிரும் சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...  காண்ட அட்க்கிக்கோ...பல்லாண்டு வாய்ந்துக்கோ...

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க;காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்.


தீனா கொரலு....

வண்க்கம்ப்பா... இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

உனுக்கு எப்யுமே குட்ச்சல் கொட்த்துனுகிற பிரிச்சின நெரியா இர்க்கும், அத்துல பெர்சு எத்துன்னு உன்க்கு தெர்யுமா? ஆரு இன்னான்னு புர்யாம இன்னா செஞ்சுனுகிறான்னு தெர்யாம நல்லவுனா பொறம்போக்கா அப்டி எத்யுமே கண்டுக்காம ஒர்த்தன நம்புறதும்....

நல்லா தெர்ஞ்சவரு, நல்து கெட்து புர்ஞ்சவரு அப்டின்னு மின்னாலியே தெர்ஞ்ச நல்ய மன்சன் ஒர்த்தரு மேல டவுட்டாக்குறத்தும் பெர்ய தப்பு.. இத்து ரெண்டியுமே நீ செஞ்சா ஓன் வாய்க்கயில நீ பட்ற கஸ்டம் கொர்யவே கொர்யாது...சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

சொம்மா டவுட் ஆன வாய்க்க அவுட் ஆவும்....

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"...

தேரான் தெளிவும் தெளிந்தான் காண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.


தீனா " கொரலு" 

வண்க்கம்ப்பா இன்னிக்கு நம்ம தல பொர்ந்த நாளு... (திருவள்ளுவர் தினம்)ஒர் மாசோம் களிச்சி வந்தயாலும் நம்ம தல பொர்ந்த நாளிக்கு வந்தயேன் பாரு அத்து..இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

மன்சனா பொர்ந்தவன் இன்னா மேறி பாவம் செஞ்சாலும் செய்கூடாத பாவம் இன்னா தெர்யுமா பெர்ய பெர்ய அரிவாளிங்கோ.. பெர்ய மன்சங்கோ அல்லாத்தியும் மதிக்யாம இர்க்குறது தான்...! அத்த செய்வே கூடாத்தாம்... 

உன்னிய பெத்து போட்ட மவராசி பசியால துடிச்சினுகிறத கூட நீ பாக்லாம்...! ஆன்யா பெர்ய  மன்சங்கோ வாய்ல நீ வுயவே கூடாத்யாம்.. அவுங்களுக்கு புடிக்காத்ய கலீஜான எத்தயும் நீ செய்வே கூடாத்து... சுர்க்கமா பிரியற மேறி சொன்னா...

பெத்த தாயி பசிச்சு கெட்ந்தாலும்.... பெர்ய மன்சன்கிட்ட வம்பு பண்யாத... 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

Monday 13 January 2014

வங்கக் கடல் ....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 30 ஆம் நாள் பாடல்...

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்

கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை : 


வங்ய கடல கடஞ்ச்சு தேவுருக்கு அம்தம் வாங்யு கொட்த்த  மாதவரே! கேசின்ற கேடிய அயிச்சு எங்ய அல்லாத்தியும் காத்த கேஸ்வரே..! இப்டி அல்லா பெர்மயும் இர்க்குற பெர்மாளே! ரவுண்டா இர்க்குற முயு நெலா மேறி அயகான மூஞ்சும், அயகான  நெகயும்,

அல்லாம் போட்டுகின பொண்ணுங்க அல்லாரும் உன்னிய கும்பிட்டுகினு ஆயரு பாடியில பற வாங்கிக்கினாங்கோ! இந்தய கதிய ஶ்ரீவில்லிபுத்தூர்ல பொர்ந்தவளும் பஸ்மையான தாமிரப்பூவால மாலிய கட்டி மாட்டிக்கின பட்டரோட அர்மை மவளும் ஆன்ய கோதயே...!

அந்தய கோத சொல்லி வச்சா மேறி நாங்ய அல்லாரும் கூடி கும்பிட்டுகின மொற தான் இந்தய திருப்பாவை! இதுல உள்ள அல்லா முப்யது பாட்டும் நியாயமா நேரம் தவுறாம மொறப்படி பாடுனா, அவுங்களுக்கு நாலு பெர்ய மல மேறி தோளும் செவுப்பான கண்ணும், அயகான மூஞ்சும்...

அயியாத துட்டும் கெட்ச்சி.... திருப்பதி பெர்மாளு கண்க்கா உன் அருள எங்ய அல்லாத்துக்கும் கொட்த்து  அல்லா இட்த்துலயும் சந்தோஸ்மா இர்ந்து ஒயருணும். அக்காங்பா...

வர்ட்டாபா.... பொங்கலு வாய்த்து... அல்லாருக்கும்....

என் நூலகத்தில் புது வரவுகள்...

புத்தக கண்காட்சியில் இன்று நான் வாங்கிய புத்தகங்கள்....

பனுவல் புத்தக அரங்கில்....

6174 (க.சுதாகர்)சோளகர் தொட்டி (ச.பாலமுருகன்) 
ஆளாண்டப் பட்சி,ஏறுவெயில்,நிழல் முற்றம் (பெருமாள் முருகன்) 
வணக்கம் பஸ்தார் (ராகுல் பாண்டிடா) லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் (வா.மணிகண்டன்) ஸீரோ டிகிரி ( சாரு நிவேதிதா)

காலச்சுவடு புத்தக அரங்கில்....

 சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே, மீதி வெள்ளித் திரையில், (சு.தியோடர் பாஸ்கரன்) 
ஐந்நூறு கோப்பைத் தட்டுகள், எரியாத நினைவுகள்,இன்ஸ்பெக்டர் செண்பக ராமன் (அசோகமிற்றன்) அபிதா (லா.ச.ராமாமிருதம்) கு.ப.ரா.சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)

விகடன் புத்தக அரங்கில்.....

எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா ( எஸ்.ராமகிருஷ்ணன்) என்றென்றும் சுஜாதா ( அமுதவன்) சுஜாதாட்ஸ் (சுஜாதா) வாஸ்கோடகாமா (எம்.டி.யேட்ஸ்) ஹிட்லரின் மறுபக்கம் ( வேங்கடம் ) விகடன் சுஜாதா மலர், 

கிழக்கு பதிப்பக அரங்கில்....

மணிரத்னம் (பரத்வாஜ் ரங்கன்) மாலதி,கல்யாணி ( தேவன்)இடிஅமீன் (ச.ந.கண்ணன்) மதுரை சுல்தான்கள் (S.P.சொக்கலிங்கம்) கருட புராணம் ( ஶ்ரீகோவிந்தராஜன்) முசோலினி (ஜனனி ரமேஷ்) நம்பர் 1 மார்க்கெட்டிங் (நீல் மார்ட்டின்) லஜ்ஜா (தஸ்லிமா நஸ்ரின்)

முகநூல் நண்பர்களின் கவிதைத் தொகுப்பு.... (இன்றைய புதிய வெளியீடுகள்)
சிநேகத்தின் வாஸ்னை - சக்தி செல்வி, சாத்தான்களின் அந்தப்புரம் - நறுமுகை தேவி, 
நான் பச்சை விளக்குக்காரி! - வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்.

புத்தக வேட்டை தொடரும்....




புத்தக கண்காட்சியில் இன்று வாங்கியவை.....(வேட்டை இரண்டு)

காலச்சுவடு அரங்கில்...

குறத்தி முடுக்கு & நாளை மற்றுமொறு நாளே - ஜி.நாகராஜன், ஒற்றன் - அசோகமித்ரன்,புலி நகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன், வெக்கை -பூமணி, தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரன் பிள்ளை, பள்ளிகொண்டபுரம் - நீல.பத்மநாபன், மாதொருபாகன் - பெருமாள் முருகன், மதில்கள் - வைக்கம் முகம்மது பஷீர், பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு, வாடி வாசல் - சி.சு.வாடிவாசல், ஒரு கடலோர கிராமத்தின் கதை.

உயிர்மை அரங்கில்....

ரசிகமணி டி.கே.சி கடிதங்கள் - தீப.நடராஜன், இன்னும் சில சிந்தனைகள், திருக்குறள் புதிய உரை & சுஜாதாவின் நாடகங்கள் முழுத் தொகுப்பு - சுஜாதா, எனதருமை டால்டாய்ஸ், சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் & என்றும் சுஜாதா - எஸ். ராமகிருஷ்ணன், என்றார் முல்லா - சஃபி, தீராக்காதலி,தப்புத்தாளங்கள், கடவுளும் சைத்தானும், கடவுளும் நானும், வரம்பு மீறிய பிரதிகள் & சினிமா அலைந்து திரிபவனின் அழகியல் - சாருநிவேதிதா, தற்கொலை குறுங்கதைகள், அராஜகம் 1000 - அராத்து. 

கனவின் உப நடிகன் - ஆத்மார்த்தி ( ஆத்மார்த்தியின் அன்பளிப்பு )

விகடன் அரங்கில்...

வட்டியும் முதலும் - ராஜு முருகன்.

வேட்டை தொடரும்.....


புத்தக கண்காட்சியில் இறுதி சுற்றில் வாங்கியவை:


பட்டினத்தார் பாடல்கள், திருவாசகம் ,நாலடியார்,அந்தாதி இலக்கியங்கள்,காளமேகம் தனிப்பாடல்கள், கம்பன் தனிப்பாடல்கள்,ஒளவையார் தனிப்பாடல்கள்,கள்வனின் காதலி   பாரதியார் கட்டுரைகள்,தமிழர் உணவு,பைத்திய ருசி....

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி,கொட்டு மேளம்,தலைமுறைகள் ஒரு நவீன இதிகாசம்,சாமானியனின் முகம் தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி, லெமன் ட்ரீயும்..  இரண்டு ஷாட் டக்கீலாவும்,மீண்டும் ஒரு காதல் கதை, தெர்மக்கோல் தேவதைகள்,

அம்பை சிறுகதைகள்,சாயாவனம்,வாசனை, தமிழ் அன்றும் இன்றும்,நானோ டெக்னாலஜி,புறநானூறு ஓர் எளிய அறிமுகம், ரெண்டாம் ஆட்டம்,மழையா பெய்கிறது,சும்மா இருக்காதா பேனா?,புரொபசர் மித்ரா,வயசு17,இன்னொருத்தி,க்ரைம்,

23-ம் படி,ஹவுஸ் ஃபுல்,ராஜியின் பிள்ளை,அப்பளக்கச்சேரி,பார்வதியின் சங்கல்பம், பிகாசோவின் கோடுகள்,அயல் சினிமா,பறவைக் கோணம்,பாரதிதாசன் கவிதைகள், மாயவலை,மகாகவி தாகூரின் கதைகள்,ஆயிரத்து ஓர் இரவுகள்,இன்று ஒரு தகவல் பாகம் 1, இன்று ஒரு தகவல் பாகம் 2 .

இந்த புத்தக கண்காட்சியில் வாங்கியது 125 புத்தகங்கள்... 

Sunday 12 January 2014

சிற்றம் சிறுகாலே...

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 29 ஆம் நாள் பாடல்...


சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்

பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்

பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ

குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை : 

மார்களி மாஸ்சம் காலங்காத்தால உன்னிய வந்த்யு கண்டுக்கினு அப்டியே கும்புட்டு சலாம் உட்டுக்குறோம்: ஒன் பொன்னான கால்ல உயுந்து ஒன் பேர சொல்லினு இர்க்கமே அது இன்னாத்துக்காக? ஏன் இப்டி வேண்டிகினு இர்க்கிங்கோ? அப்டின்னு எங்களாண்ட கேளுப்பா..

நீ பெர்ய மன்சன் கடவுளு ஆன்யா அந்த பந்தா ஏத்யும் இல்லாம மாடுங்கள மேச்சி கட்டு சோறு சாப்பிடுற ஆயரு கொல்த்துல வந்து பொர்ந்தியே! உனுக்கு எதுனாச்சும் பண்ணாம இர்ந்தா அத்து எங்கயளுக்கு தான் அவுமானம்! அதுனால உனுக்கு எடுபிடி வேல செய்ய எங்கள தட்க்காதே...

ஒன்ய இப்ப திர்ம்ப திர்ம்ப கும்புட்றதும், உன் கால்லியே வுயுந்து கெடக்கறதும் அந்த பறய உன்னாண்ட இர்ந்து வாங்கிக்கதான் ,அத்தயும் நீ கொட்த்துட்ட இப்பொ இன்னொன்யயும் கேக்குறோம்.. எப்பா கோயிந்தா! இந்தய பொறவி மட்யுமில்லை...

இன்னும் ஏயேயு பொறவி எட்த்தாலும் உன் கூட்யவே சேந்து இர்க்கணும்! உன் அடிம மேறின்னா கூட செரி உனுக்கு தான் தொண்டு செய்வோம்.. இத்த மீறி எங்கய அல்லாத்துக்கும் வேறு ஆச எத்துவும் தோணிச்சுன்னா.. அப்டி தோணாம இர்க்க நீ தான் காத்து அருளணும்.

எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா...

 

Saturday 11 January 2014

கறவைகள் பின்....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 28 ஆம் நாள் பாடல்...


கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்

அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்

குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு

உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத

பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை

சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே

இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

நாங்ய கறவ மாடுங்கள ஓட்டிகினு காட்டாண்ட போவோம், அப்பால அங்ய அல்லாரும் ஒண்யா கூடி கட்டு சோற துண்ணுவோம் : பெர்ய பெர்ய அர்வாளிங்கோ ஆரும் இல்லாத இடியரு கொலத்துல நீ புள்ளயா வந்து பொர்ந்தது நாங்ய செஞ்ச புண்ணியோம்...

எந்தய கொறயும் இல்லாத கோயிந்தா! உன்யோட நாங்ய வச்சினு இர்க்குற ஒரவு ஆராலியும் ஒன்யும் அயிக்க முட்யாது : உன்ய மேறி நாங்கல்லாம் அர்வாளி கெடியாத்து அதானால்ய மின்னாடி உன்னிய அப்டி இப்டி பட்ட பேரு வச்சி கூப்டத  பெர்சு பண்யாதே....

எங்ய அல்லார் தப்பையும் மர்ந்து மன்னாப்பு கொட்த்துரு! எங்ய கொல தெய்வமே! நாங்ய உன்னாண்ட வேண்டி கேட்ட பற அல்லாத்தியும் கொட்த்து  அருள கொடு.

எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா...

Friday 10 January 2014

கூடாரை வெல்லும்....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 27 ஆம் நாள் பாடல்...


கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை : 

உன்னிய எதுத்த கம்சன்,எரண்யன்,ராவுணன் அல்லாத்தையும் கெலிச்ச பெர்மையான கோவிந்தரே! ஒன் பெர்மய வாயாற பாடி உன்னாண்ட இர்ந்து அந்த பறய வாங்கிக்கினோம்.. இன்மே இன்னா இன்னா பரிசுங்கோ எங்க அல்லாத்துக்கும் தரப்போற?

கய் வளைலு, தோள் வளைலு, தோடு, காதுல மாட்டிக்கிற தங்கபூவு, படாகொம் அல்லா நகியயும் போட்டுகினு அத்தோட நல்ல நல்ல துணிமணிங்க்கோ எட்த்து அலங்காரமா இந்தய ஒல்கமே மெச்சினு இர்க்கா மேறி நாங்ய  போட்டுக்றோம்..

அப்பால தட்டுல இர்க்குற பால் சோத்துல சோறே மூட்றா மேறி நெய்யி ஊத்துவோம்! அந்த பால் சோற கய்யால எடுத்து துண்ண சொல்லோ ஊத்திருக்குற நெய்யி அப்டியே பிரேக் புடிக்காத்ய ரிக்ஷா மேறி முயங்கைல சர்ன்னு ஓடி ஒயுகுறா மேறி..

அல்லாத்துக்கும் சோத்த குடு..! அந்த சோத்த ஒத்துமியா சேந்து துண்ற புத்திய கொடு!குளிந்து போன ஒன் மன்சோட எங்க அல்லாத்துக்கும்  இத கொட்த்துரு.

எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா....

 

Thursday 9 January 2014

மாலே மணிவண்ணா....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 25 ஆம் நாள் பாடல்...


மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

திர்மாலே! மணிவண்ணா! ஆலில மேல்யே தூங்கிகினு இர்ப்பவரே! இந்த மார்களி மாசம் நல்ல நாள்ல குள்ச்சிட சொல்லோ எங்கய பாட்டன் பூட்டன் செஞ்சதயும் அவுங்க கேட்டுகினதியும் கொட்த்து ஒன் அருள கொடு...

ஒல்கத்தியே அலற வெச்சிது ஒன் சங்கு! பால் மேறி அயகா வெள்ளயா இர்க்குற அந்த பாஞ்ச  சன்ய சங்குங்கோ வோணும் ! எம்மாந்தூரத்தில இர்ந்தாலும் அட்ச்சா கேக்குறா மேறி பறமோளம் வோணும்! பாட்ட பாடினு பல்வருசம் இர்க்குற பொலவருங்க வோணும்! 

அயகா எர்யுற வெளக்குங்கோ வோணும்! தில்லா பர்க்குற கொடி வோணும் ! அயகா இர்க்குற விதான்மும் வோணும் ! இதெல்லாத்தியும் எங்களுக்கு நல்லபடியா கொட்த்துரு.


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல நாளிக்கு பாக்கலாம்.... வர்ட்டா....

Wednesday 8 January 2014

ஒருத்தி மகனாய்,....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 25 ஆம் நாள் பாடல்...


ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை: 


உன்யெ கொஞ்சயம் கூட புடிக்காத்ய ஒரு மன்சன் அவன் பேரு கம்சன்!அவுனால ஜெயில்ல இர்ந்தா ஒர்த்தி... அந்தய தேவ்கி மவனா பொர்ந்தவரே! பொர்ந்த அதே நாள்ல தண்ணி வெள்ளமா வந்த்ய யமுன ஆத்த தாண்டி போயி ஆயருபாடில இர்க்குற இன்னொர்த்தி...அந்தய எசோதா அம்மா மவனா ஒள்ஞ்சு வளந்துவரே...

இத்தெல்லாம் தெர்ஞ்சிக்கினு பொறாம புட்ச்சு கெட்டதியே நென்ச்ச கம்சன பொடிப் பொட்யா ஆக்கி அவுனோட வவுத்துல பத்தி எர்யுற நெர்ப்பு கண்க்கா நின்னவரே! ஒசரமா ஒசந்து நிக்குற ஒட்ம்பு வச்சினுக்கிற திர்மாலே!  உன்ய அன்பா நென்ச்சுகினு வந்துகிறோம்!

நாங்ய இன்னாத்த கேக்குறமோ அத்த பற அட்ச்சு கேக்குறோம்! உன்யோட வீர்த்தயும் செல்வித்தயும் நாங்ய புகய்ந்து பாடுவோம்..நாங்கோ எத்தயும் வொரி பண்ணிக்யாம இர்ந்து ஜாலியா இர்ப்போம் கண்ணா..


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா....







நவரத்தினங்கள்....

நம்முடைய முகனூல் 
நவரத்தினங்கள்......

1. குட்மார்னிங் குமரேசன்கள்.... 
காலையில் நீங்கள் எப்படி நல்ல ஸ்டேட்டஸ் போட்டாலும் குட்மார்னிங் மட்டுமே போடும் ரத்தினம் நம்பர் - 1.

2. தத்துவ தண்டபாணிகள்...
ஹிட்லரின் பெரியப்பா முதல் எலிசபெத் ராணியின் ஒண்ணு விட்ட அத்தை வரை அவர்கள் சொன்னதாக தத்துவ முத்துக்களை அடித்துவிடும் ரத்தினம் நம்பர் -2.

3. பொன்மொழி பொன்னுசாமிகள்...
நகை செய்யும் ஆசாரி சொல்வது கூட பொன்மொழி தான் இவர்களுக்கு... டெய்லி ஷீட் காலண்டர்கள் இல்லாவிட்டால் முகனூலை விட்டே போய்விடும் ரத்தினம் நம்பர் -3.

4. தகவல் தங்கராசுக்கள்....
முந்தாநாள் முகனூலுக்கு வந்தவிட்டு அரதப்பழசான பதிவுகளை மறு ஒளிபரப்பு செய்வார்கள்.. கூகுள் வேலை செய்யாத நாட்களில் முகநூல் வர மாட்டார்கள்... ரத்தினம் நம்பர் -4.

5. கட்& பேஸ்ட் கன்னையன்கள்...
முன் ஜென்மத்தில் டெய்லர்களாக பிறந்தவர்கள்... பதிவரின் பெயரை மட்டும் எடுத்துவிட்டு இவர்கள் கடை லேபிளை ஒட்டிவிடுவார்கள்... ரத்தினம் நம்பர் - 5.

6. புலவர் புண்ணியகோடிகள்...
ஆச்சர்யக்குறி, கமா,கேள்விக்குறி, மேற்கோள் குறிகளை கீ போர்டில் இருந்து நீக்கி விட்டால் கவிதை வராது...இந்த கவிதைஅட் ராசிட்டிகள் .... ரத்தினம் நம்பர் -6.

7.வீடியோ விஜயகுமார்கள்....
யூட்யூப்பை யாராவது கண்டு பிடிக்காதிருந்தால் இவர்கள் கண்டுபிடித்து இருப்பார்கள்.. அநேகமாக முன்னாள் விடியோ கேசட் கடை நடத்தியவர்கள்... ரத்தினம் நம்பர் -7.

8. போட்டோ புகழேந்திகள்...
தான் குளிப்பதை தவிர எல்லாவற்றையும் போட்டோ எடுத்து போட்டு விடுவார்கள்  (என்னைப்போல ) வெளிநாடு ஏதாவது போய்ட்டு வந்தா நீங்க பாவம்...ரத்தினம் நம்பர் - 8.

9. ஃபேக் ஐடி சிவசக்திகள்...
மனித ஜீன்களின் உண்மயை கண்டறிந்த ஜெனிடிக் விஞ்ஞானிகளே இவர்கள் ஆணா? பெண்ணா? என்று கண்டுபிடிப்பதில் தோல்வியடைவார்கள்... முகநூலில் இவர்களால் பூவும்வீசும் புயலும் வீசும்... ரத்தினம் நம்பர் - 9.

இந்த நவரத்தினத்தில் நீங்க நான் எல்லோரும் இருக்கோம் சரி தானே....


Tuesday 7 January 2014

அன்று இவ்வுலகம்....


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 24 ஆம் நாள் பாடல்...


அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி

சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி

கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை : 

அன்னிக்கு ஒரு தபா ஒல்கத்தயே அள்ந்தவுரே! உன் காலத் தொட்டு கும்புட்டுக்றோம்: இலிங்கிக்கி போயி அங்ய ராபணன் கதய முட்ச்சவரே! உனுக்கு இர்க்குற தில்ல நென்ச்சு பெர்மப்படுறோம் : சனியன் சகடய எட்டி மிறிச்சவரே...உன்ய புகய்ந்து பாடுறோம்...

கன்னுக்குட்டி மேறி வேசங்கட்டிகினு வந்த வத்சாசுரன.. அப்டியே கபால்ன்னு கால புட்ச்சு தூக்கி பக்கத்துல மரொம் கண்க்கா வேசம்கட்டி நின்னுகினு இர்ந்த கபித்தாசுரன் மேல்ய விசிறி அட்ச்சி ஒர்யே கல்லுல ரெண்டு மாங்கா மேறி ரெண்டு பேரியுமே காலி பண்ணவரே! 

உன் பாதத்தில மாட்டினு இருக்குற வீரகழல தொட்டு கும்புட்டுக்றோம்: கோகுல்த்துல  குடபுட்ச்சது கண்க்கா அப்டியே அலேக்கா மலய தூக்கி மக்கள காப்பாத்ன கோவர்த்தனரே !உன் பாசமான கொண்த்த நென்ச்சு பெர்மப்படுறோம்!

உனுக்கு எதிரியா எப்டியாப்பட்டவன் வந்து நின்னாலும் கெலிக்குற உன் வேல்கம்ப புகயறோம் : இப்டி ஒன் அல்லா பெர்மயயும் வீர தீரத்தயும் பறயடிச்சு பாடினு இர்க்கதான் இங்ய வந்தோம்.. எங்க மேல்ய இர்க்கம் காட்டி ஒன் அருள கொட்த்துடு கண்ணு.


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா..



Monday 6 January 2014

மாரி மலை முழைஞ்சில்...

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 23 ஆம் நாள் பாடல்...


மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி

மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை : காயாம்பூ கலிர்ல்ல இர்க்க கண்ணா ! அட மய கால்த்துல மலிகொக உள்ளாற தூங்கிகினு இர்க்குற சிங்கொம் அப்டியே வீரமா எயுந்து கண்ணுல நெர்ப்பு கக்க ஒரு லுக் வுட்டு அது பொடறிய சிலித்துகினு நாலா பக்கமும் திர்ம்பி திர்ம்பி ஒட்ம்பை உதறி...

அப்டியெ நெட்டி முர்ச்சி நிமிந்து பந்தாவா கொரலுட்டு அந்த கொகய வுட்டு சோக்கா வெள்ய வர்ற மேறி, நீயும் உன் பங்களா கண்க்கா இர்க்குற வூட்ல இர்ந்து எயுந்துஇங்க வந்துரு! உனுக்காண்டி போட்டு வச்சிகிற இந்த அயகான சிம்மாசன்த்துல குந்திகினு...

நாங்கோ உன்னாண்ட கேக்குறத அல்சி ஆராஞ்சி அத்த எங்களுக்கு ஒன் அருளோட்ய கொட்த்து ஒதவிபண்ணு கண்ணு..


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா...

மார்கழி 23 ஆம் நாள்....

மார்கழி 23 ஆம் நாள் பாடல்.....

இப்பாடலில் சிங்கத்தின் பிடரியில் உள்ள வேரி மயிற்களுக்கு  மணம் உண்டு!அதை தலை உதறி சிலிர்த்து கொள்வது அதன் ஈரப்பதத்தை போக்கவே என்று பொருள் பட ... இப்பாடலில் வருகிறது..! 


சிங்கத்தின் ஊளை மயிர்கள் வியர்த்து தலையில் ஒட்டிக்கொள்ளுமாம் அந்த மயிரை சிலிர்க்க செய்யவே சிங்கம் தன் பிடரியை உதறி சிலிர்க்கிறது... மேலும் சிங்கத்தின் பிடரிமயிர் மணத்தை வைத்து தான் பிற சிங்கங்கள் தன் கூட்டத்தின் தலைவனை இனம் கண்டு கொள்கின்றன.. ( சிங்கத்தை பற்றிய ஆராய்ச்சியாளர்கள் எழுதியது ) 

இத்தகவலை ஆண்டாள் கற்பனையில் சொன்னாரா அல்லது அறிந்து சொன்னாரா ஆச்சர்யம்!.!.!மேலும் கண்ணனை சிங்கம் என குறிப்பிடக்காரணம் அவர் நரசிம்ம அவதாரத்தை நினைவு கூர்தலே!என்பதும் தெரிகிறது.. இனி பாடல்.....


அடாணா ராகம்........                 ஆதி தாளம்...........


மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி

மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


விளக்க உரை : 


காயாம்பூ நிறத்தானே! மழைக்காலத்தில் மலை குகைக்குள் தூங்கும் வீரமிக்க சிங்கமானது உறக்கம் தெளிந்து எழுந்து ,நெருப்பு உமிழ விழித்து பிடரி மயிர் சிலிர்க்க நாற்புறமும் திரும்பி திரும்பி உதறி,சோம்பல் முறித்து,நிமிர்ந்து கர்ஜித்து அந்த குகையிலிருந்து வெளி வருவதைப்போல...

நீயும் உன் திரு மாளிகையிலிருந்து இங்கு எழுந்தருள்வாயாக !வனப்புடைய சீரிய சிம்மாசனத்தில் வீற்றிருந்து  நாங்கள் வந்த காரியத்தை கேட்டு ஆராய்ந்து அருள் புரிவாயாக..


பதவுரை:

மாரி

மழைகாலத்தில்

மலை முழஞ்சில்

மலையிலுள்ள குஹைகளில்

மன்னி கிடந்து

(பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து

உறங்கும்

உறங்காநின்ற

சீரிய சிங்கம்

(வீர்யமாகிற) சீர்மையையுடைய சிங்கமானது

அறிவுற்று

உணர்ந்தெழுந்து

தீ விழித்து

நெருப்புப்பொறி பறக்கும்படி கண்களை விழித்து

வேரி மயிர்

(ஜாதிக்கு உரிய) பரிமள முள்ள உளைமயிர்களானவை

பொங்க

சிலும்பும்படி

எப்பாடும்

நாற்புறங்களிலும்

பேர்ந்து

புடைபெயர்ந்து (அசைந்து)

உதறி

(சரிரத்தை) உதறி

மூரி நிமிர்ந்து

சோம்பல் முறித்து

முழங்கி

கர்ஜனை பண்ணி

புறப்பட்டு போதரும் ஆ போலே


வெளிப்புறப்பட்டு வருவது போல,

பூவை பூ வண்ணா

காயம் பூப்போன்ற உறத்தை யுடைய பிரானே!

நீ


உன் கோயில் நின்று


உன்னுடைய திருக்கோயிலினின்றும்

இங்ஙனே போந்தருளி

இவ்விடத்தேற (ஆஸ்தாநத்தில்) எழுந்தருளி

உன் கோயில் நின்று

கோப்பு உடைய

அழகிய ஸந்நிவேசத்தை யுடைய

சீரிய

லோகோத்தரமான

சிங்காசனத்து

எழுந்தருளியிருந்து

யாம் வந்த காரியம்


நாங்கள் (மநோரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை

ஆராய்ந்து

விசாரித்து

அருள்

கிருபை செய்ய வேணும்’

ஏல் ஓர் எம் பாவாய்

கனவுக் கதைகள் - 1

கனவுக் கதைகள் - 1


அதிகாலையில் ஒரு கனவு... நான் விம்பிள்டன் பைனல் மாட்ச் பார்த்து கொண்டிருக்க மரியா ஷரபோவா வெற்றி பெறுகிறார்... 


வெற்றி பெற்றதும் காலரியில் இருக்கும் என்னை ஓடி வந்து கட்டிக் கொள்கிறார்... நான் அசத்தலாக சிக்ஸ் பேக் உடலுடன் இருக்கிறேன் (கனவென்பதால் இதை நீங்கள் நம்பலாம்...! பரிசீலிக்கவும்)நிருபர்களிடம் பேட்டி தருகையில் என் வெற்றிக்கு காரணம் வெங்கி.. என்கிறார்..


இந்த வெற்றியை எப்படி கொண்டாடப் போகிறீர்கள்? என்ற கேள்விக்கு பசிபிக் கடலில் வெங்கிக்காக ஒரு தீவு வாங்கியுள்ளேன் அங்கு ஒரு மாதம் நாங்கள் ஓய்வெடுக்கப் போகிறோம் என்றார்...இந்த பேட்டி அளிக்கும் போது நான் சோபா மீதும் மரியா என் மடி மீதும் அமர்ந்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது...


பிறகு நானும் மரியாவும் எங்களது ரோல்ஸ்ராய்ஸில் ஏறி விமான நிலையம் சென்று எங்களது சொந்த விமானத்தில் பசிபிக் செல்கிறோம்..விமானத்திலேயே ஆட்டம் பாட்டம் விருந்து என அமர்க்களப்பட்டது... எங்களது தீவில் வந்து இறங்கி எங்கள் மாளிகைக்குள் நுழைகிறோம்.. மரியா என்னிடம் வெங்கி இருங்க நான் ஸ்விம் சூட்டில் வர்றேன் என சொல்லி அறைக்குள் நுழைந்தார்... 


கதவுக்கு வெளியே ஆவலுடன் காத்திருந்தேன்... 




2 நிமிடத்தில் கதவு திறந்தது.. அங்கே......

.

.

.

கட்................கனவும் கலைந்தது!



ஏங்க! அதிகாலையில் கண்ட கனவு பலிக்குமாமே!!! உண்மயா!!


பின் குறிப்பு : இங்கு இடப்பட்டிருக்கும் மரியாவின் புகைப்படம் கனவில் வந்த மேட்ச் புகைப்படம் அல்ல! யாரும் வதந்திகளை நம்பாதீர்கள்...







Sunday 5 January 2014

அம்கண்மா ஞாலத்து....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 22 ஆம் நாள் பாடல்...


அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

இந்தய ஒல்கத்தயே எம்மாம் பெரிய கடலுங்கோ சுத்தி சூள்ந்துகினு தாலாட்டு பாட்றா மேறி அலயடிச்சுனு கீது அப்டியாப்பட்ட கட்லோட சேத்து இந்த பூமியவே ஆண்டுகினு இர்க்க பெர்ய பெர்ய மவராசனுங்கோ அத்தினி பேரும் அவுங்கோ மண்டயா இர்க்கற குண்த்த தூக்கி கடாசிட்டு...

உன்னாண்ட அட்ங்கி போயி... நீ தூங்கிகினு இர்க்க கட்லாண்ட வந்து கும்பலு கும்பலா தர்யில குந்திகினாங்கோ... அதே மேறி நாங்களும் உன்னாண்ட வந்து  செவுப்பா இர்க்குற ஒன் காலு பாதத்துக்கு கீய வந்து கும்புட்டுகினே நிக்கிறோம்... கிண்கிணியோட்ய அயகான வாய் மேறியும்....

மொள்ளமா மல்ருதே செந்தாமிர பூவு அது மேறியும்... செவுப்பாகீதே உன் கண்ணு அத்த மொள்ள மொள்ள தொர்ந்து எங்ய மேல ஒன் பார்வ படாதான்னு காத்துனு இர்க்கோம்! நெலாவும் சூர்யனும் கூட்டா சேந்து ஒண்ணா வந்தா எப்டி இர்க்குமோ அதே மேறி தான்...

உன் பார்வை எங்க மேல படணும்.. அப்டி நீ பாக்கொ சொல்லோ மின்னாடி நாங்க செஞ்ச பாவமெல்லாம் அயிஞ்சு போய்டணும்! அப்டி ஒரு தபா எங்க அல்லாத்தயும் கண்டுக்க கண்ணா.


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா....





ரஜினி வசனங்கள்....

ரஜினி ஸ்பெஷல் - 2.

ரஜினி பட வசனத்திற்கு பொருத்தமானவர்கள்......

ஓ.பி.எஸ் : ஆண்டவன் சொல்றான்... அருணாச்சலம் முடிக்கிறான்....

பண்ட்ருட்டி : சொத்து,சுகம்,பதவி,புகழ்,சொந்தம்,பந்தம் எதுவும் வேணாம் நான் இமயமலைக்கே போறேன்....

தமிழக அமைச்சர்கள் : (பதவிக்கு ஆப்பு )எப்ப வரும் எப்டி வரும் எதுல வரும்ன்னு யார்க்கும் தெரியாது வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துரும்.....

ராமதாஸ் : மக்கள் தடுக்கறத கொடுக்கவும் முடியாது.... மக்கள் கொடுக்கறத தடுக்கவும் முடியாது.... (ஆதரவு)

இலங்கை தமிழர்கள் : ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனா கை விட மாட்டான்....

ராஜ பக்ஷே : கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுறுவான்.....

ஜெ. : ஃபோக்ஸ்......ரொட்டேட் யுவர் ஹெட்ஸ்.... சசி....ம்மேஏஏஏஏஏ.....ம்மேஏஏஏஏஏஏஏ...

கலைஞர் : குடும்பம்ன்னு கேட்டாலே சும்மா அதிருதில்ல......

(2014 ஏப்ரல் & மேயில் தேர்தல் என்ற இந்த அறிவிப்பிற்கு பின்...)

காங்கிரஸ் : சாகுற நாள் தெரிஞ்சுடுச்சுன்னா... வாழுற நாள் நரகமாயிடும்....

மின்னல் வேகக் கதை.....



ஃபேஸ்புக்கில் கடந்த 3 மணி நேரமாக இருக்கிறான் தினேஷ் மானிட்டர் பார்த்து பார்த்து லேசான கண் எரிச்சல் கைகளை தேய்த்து கண்ணில் வைத்தான்... ஒடிக் கொண்டிருந்த ஏ.சியை அணைத்துவிட்டு மெலிதாக சோம்பல் முறிக்கையில் காலிங் பெல் அடிக்க கதவு திறந்தான் பள்ளி சென்ற குழந்தைகள் ஹோ.. வென கத்தியபடி வந்தது...

 டாடி சோட்டா பீம் பாக்கணும் டாடி என்றன... முதலில் போய் முகம் கழுவிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க அப்பத்தான்...மனைவி இன்று இரவு தான் வருவாள்... அவள் சொல்லிவிட்டு சென்றதெல்லாம் நினைவுக்கு வந்தன... குழந்தைங்க ஸ்கூலில் இருந்து வந்ததும் ஏதாவது சாப்பிட கொடுங்க துணிய வாஷிங் மெஷின்ல போடுங்க இந்த ரெண்டு வேலைய மட்டும் பாத்தா போதும்ன்னு....

ஃபிர்ட்ஜை திறந்து பாலை எடுத்தான்.... முகம் கழுவி உடை மாற்றி வந்த குழந்தைகள் டாடி பிரட் டோஸ்ட் டாடி என்றன பின்னாலிருந்து...சற்று உற்சாகமாக பிரட் பாக்கெட்டையும் முட்டையையும் எடுத்து கொண்டான்... டோஸ்டரில் பொன் நிறமாக பிரட்டை சூடாக்கி ஆம்லேட் போடும் போது நேற்று வீட்டில் செய்த பீட்ஸா நினைவுக்கு வர ஓவனை திறந்தால் அது இருந்தது.. 

ஓவனை  போட்டு அதையும் சூடாக்கி பீட்ஸா மற்றும் டோஸ்ட் ரெடி செய்தான்.. ஹாலில் டி.வி ஓடிக் கொண்டிருக்க குழந்தைகள் டோலக்பூருக்குள் வாழ்ந்து கொண்டிருந்தன... அவர்களுக்கு இதை கொடுத்து விட்டு குழந்தைகள் கழட்டிப்போட்ட துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு சுழல விட்டான்... தொலை பேசி ஒலிக்க எடுத்தான்...

மனைவி தான்... பிள்ளைங்க வந்தாச்சா?என்ன கொடுத்திங்க? குட் வெரிகுட்.... எல்லாம் கேட்டுட்டு சாரிங்க நான் 7 மணின்னு சொன்னேன் ஆனா இப்ப 8 ஆகிடும் போல இருக்கு... பரவால்லைம்மா சொல்லு ....ஒரே ஒரு ஹெல்ப் அதை மட்டும் செய்யுங்க நைட் வந்து நானே சமைச்சுடறேன்... சரி சொல்லு என்றான்...

என்ன கிச்சன்ல அடுப்புக்கு பக்கத்துல ஒரு பாத்திரத்துல இட்லிக்கு ஊறப்போட்டு இருக்கேன் அதை எடுத்து அரைச்சு வைச்சுட்டிங்கன்னா போதும்...சரி என்றான் ...போனை வைத்து விட்டு நேராக கிச்சனுக்குள் நுழைந்தான் மனைவி சொன்ன பாத்திரத்தை எடுத்து அதில் உள்ளதை கிரைண்டரில் போட்டு ஆன் செய்தான்...

என்று இந்த கதையை முடிக்க நினைத்தேன் ஆனால் என்ன செய்ய இந்த கதையில் வருவது போல் நடக்க தடையில்லா கரண்ட் வேண்டுமே...! மின் வெட்டு 10 மணி நேரம் இருக்கும் போது இதெல்லாம் நடக்குமா?

சரி இப்படி முடிக்கிறேன் இருட்டான அந்த வீட்டுக்குள் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்த போது தினேஷின் மனைவி வீடு திரும்பினாள்.

Saturday 4 January 2014

ஏற்ற கலங்கள்....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 21 ஆம் நாள் பாடல்...



ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை : 


பால் கர்க்க சொல்லோ கய்யில வச்சினு இருக்குற பாத்திரத்துக்கு உள்ய பட்டு அப்டியே எதித்துகினு பாத்திரம் வயிய வயிய பொங்கினு வர்தே பாலு.. அந்த மேறி நிர்த்தாம பால கொட்த்துனு இருக்க பசு மாடுங்கோ நெர்யா வச்சினு இர்க்க நந்த கோபருக்கு மகனா பொர்ந்த மகராசா! எயுந்துரு கண்ணா!

உல்கத்தை காத்துனு இர்க்குறதுல கில்லாடி நீ! அல்லாத்தையு வுட பெர்ய மன்சன் நீ! இந்த பூமியில அவுதாரம் எட்த்து வந்து நின்னு எங்க அல்லார் மன்சுலயும் குந்திகினப்பா நீ! தக தகன்னு வெள்ச்சமா ஜொலிக்கிற சொடர் கணக்கா உர்வம் எட்த்தவன் நீ! கண்ண மூடி தூங்கினது போதும் எய்ந்துருய்யா!

உன்ய  எதுத்தவங்க கூட உன்னாண்ட மோதுனா வேல்லிக்கு ஆகாத்துனு தெர்ஞ்சுகினு உன் வலு இன்னான்னு புர்ஞ்சிகினு அவுங்க உதார் எல்யாத்தயும் துக்கி கடாசிட்டு நீயே கதின்னு உன் வூட்டாண்ட வந்து உன் காலடியில உய்ந்துடுறாங்கோ..அதே மேறி நாங்களும் வந்து உன்ய பத்தி பெர்மயா பாடி புகய்ந்துகினு இர்க்கோம்.

எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்.... வர்ட்டா...




Friday 3 January 2014

முப்பத்து மூவர்....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 20 ஆம் நாள் பாடல்...


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்

செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

தான் ஒண்டியா போயி வான்த்துல இர்க்குற அல்லா தேவரியும் ஆரும் மெர்சலாகாதிங்கோ 

நான் இர்க்கேன் அப்டின்னு தில்லா சொல்லிக்கின வீரன் நீ! எயுந்துரு கண்ணு! சமாத்தான்மா 

போறவன் நீ! படா தில்லானவன் நீ! உன் கைல ஆராச்சும் ராங் காட்னா அவங்களுக்கு 

ஜொரம் வர் சொல்லோ பாக்குறவன் நீ! படுக்கெல இர்ந்து எய்ந்திரு ராஜா! 

செப்பு கல்க்காத சுத்த தங்கொம் கண்க்கா பஞ்சு மேறி மார் ரெண்டயும், வெத்தலி போட்டு 

செவந்தா மேறி செவ்ப்பா வாயும், சின்னதா இடுப்பும் அயகா வச்சினு இர்க்குற நப்பின்ன பொண்ணே!

எங்க வூட்டு மவாலச்சுமியே! எயுந்துரு கண்ணு ! விர்தம் இர்க்க சொல்லோ வச்சினு இர்க்க 

விசிறி கண்ணாடி அல்லாம் எட்தாந்து உன்ய கண்ணாலம் கட்டிக்க போற கண்ணனையும்

எங்களியும் இப்பியே குளிக்க உட்று....

 
 எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம் வர்ட்டா....






Thursday 2 January 2014

குத்து விளக்கெரிய.....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 19 ஆம் நாள் பாடல்...


குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்

மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

தூங்கிக்கினு இருக்குற அறயில குத்துவெள்க்கு எறிஞ்சுகினு வெள்ச்சத்த பர்ப்பிகினு இர்க்கோ.. ஆன தந்தத்தால செஞ்ச அயகான கட்டுலு மேல அன்னிப்பறவியோட றக்க இல்வொம் பஞ்சு, செவுப்பு பஞ்சு, வெள்ள பஞ்சு அல்லாம் போட்டு நெர்ப்புன மெத்தயில..

அயகு,குளிரு,மெல்லிசு, வாஸ்ன, வெள்ளை அல்லாத்தையும் பீல் பண்ணிகினு இந்த அஞ்சயும் அந்த மெத்தயில விர்ச்சினு இருக்குறாங்கோ.. அந்த தூங்குற மெத்தயில ஏறிக்கினு கொத்து கொத்தா பூவ சூடிக்கின கூந்தலு வச்சினு இருக்குற நப்பின்ன பொண்ணே...

உன் மார் மேல வச்சினுருக்குற பூவு கண்க்கா நம்ம கண்ணன் இர்க்காரு;  உன் வாய தொர்ந்து நல்ல வார்த்தய சொல்லு..அகலமான கண்ணுல மய்ய வச்சினு இருக்குற நப்பின்ன பொண்ணே உன் மன்சுல நென்ச்சுக்கினுகிற கண்ணனை எயுந்திருக்க வுடமாட்யா?

ஒரு சிகண்டு கூட அவுர வுட்டு நீ பிர்ஞ்சு இர்க்க மாட்ட இல்லியா! இது உன்க்கும் நீ இர்க்குற கொண்த்துக்கும் பொர்த்தமா இருக்கா மேறி இல்லியே கண்ணு.

எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்....வர்ட்டா....

 


Wednesday 1 January 2014

உந்து மதகளிகற்றன்...

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 18 ஆம் நாள் பாடல்...



உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்

கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்

செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.



ஆண்டாளு உரை : 


மதொம் புட்ச்ச யானிங்க்கோ கண்க்கா இர்க்குற கண்ணனை வச்சுனு இர்க்கவரு; ஆராலியும் கெலிக்க மிடியாத இஸ்ட் ராங்கானவரு; அப்டியாப்பட்ட நந்த கோபரோட்ய மருமக பொண்ணே ! நப்பின்ன கண்ணே! கமகமன்னு மண்க்குற அயகான தலமுடி உள்ள பொண்ணே ! கதவ தொற தங்கம்...

கோயிங்க வந்து அல்லா இட்த்திலும் கூவினு இர்க்கு; குர்கத்தி கொடிங்க பந்தலு கணக்கா படந்திருக்கோ அத்துக்குள்ள தங்கினு இர்க்குற குயுலுங்கோ அல்லாம் கூட்டமா கூவுதுங்கோ;கைல பந்து கச்சிதமா பொர்ந்துறா மேறி அயகான வெரலுங்க உள்ள பொண்ணே...

ஓன் மன்சுக்கு புட்ச்சவரு பேர நாங்க அல்லாம் புகய்ந்து பாடினு இருக்க, செந்தாமிரப்பூ கணக்கா இர்க்குற உன் அயகான கய்ல இர்க்குற வளயலுங்கோ குலுங்க சந்தோஸ்மா வந்து கதவொ தொற ராஜாத்தி...


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்...வர்ட்டா...