Sunday 31 August 2014

தீனா - செப்டம்பர்

"தீனா கொரலு"

மன்சுக்குள்ளாற கோவம் வர்சொல்லோ எவன் காண்டாகாம கீறானோ அவன் தான் கில்லி.. தான் இன்னா நென்ச்சானோ அத்த உடனே அடஞ்சுடுவான்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : வெகுளாமை : குறள் எண் : 309 ]


"தீனா கொரலு"

தெளிவான அறிவும் தடுமாறாம உறுதியா இர்க்குற மன்சும் இர்க்குறவங்கோ அவுங்களுக்கு ஆராச்சும் கெட்டது செஞ்சா கூடொ அத்த தாங்கிகினு இர்ப்பாங்ளே தவுரொ கேவலமா நட்ந்துக்கவே மாட்டாங்கோ.! சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.

[ பொருட்பால் : அதிகாரம் : வினைத்தூய்மை : குறள் எண் : 654


தீனா "கொரலு"

ஒர்த்தர் கிட்ட பேசிகினு இர்க்க சொல்லோ குறையே இல்யாம கொஞ்சமா வார்த்த பேசி தெளிவா புர்ய வைக்கணும்.! அந்த திறமை இல்யாத ஆளுங்க தான் தேவயே இல்லாம திர்ம்ப திர்ம்ப நெறியா பேசிகினே இர்ப்பாங்கோ.! சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.


[ பொருட்பால் : அதிகாரம் : சொல்வன்மை : குறள் எண் : 649 ]



தீனா "கொரலு"

யாருக்காச்சும் நீ கெடுதல நென்ச்சியானா அந்த கெடுதி உனுக்கே வந்து சேரும்.! மன்சன் வாழ்க்கிய நிம்மதியா வாழணும் இன்னா பண்ணணும் தெரிமா? யாருக்கும் கெட்டது நெனிக்காம வாழ்ந்தாலே போதும்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.


[ அறத்துப்பால் : அதிகாரம் : இன்னா செய்யாமை : குறள் எண் : 320 ]



தீனா "கொரலு"

ஒரு விஸ்யத்தை கரீட்டா செஞ்சி முடிக்கணுமின்னா நல்லா அல்சி ஆராஞ்சி அத்த ஆரு கைல கொட்த்தா சொம்மா கில்லியா நின்னு கரீட்டா கச்சிதமா முடிப்பானோ அவங்கைல கொட்த்துருணும்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

[ பொருட்பால் : அதிகாரம் : தெரிந்து வினையாடல் : குறள் எண் : 517 ]


தீனா "கொரலு"

நல்லா பெர்ய பெர்ய படிப்பெல்லாம் பட்ச்சி முட்ச்சி மன்சார ஆரு மேலியும் காண்டாகாம அடக்கமா ஒர்த்தன் வாழ சொல்லோ அவுன எதிர்பார்த்து அவன் போற வழியில நீதி வந்து குந்திகினு இர்க்குமாம்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

[ அறத்துப்பால் : அதிகாரம் : அடக்கமுடைமை : குறள் எண் : 130 ]


தீனா "கொரலு"

காதலிக்கிறவங்கோ ரெண்ட்யு பேத்துக்குமே ரொம்பொ புட்ச்ச விஸ்யம் இன்னா தெரிமா.? கட்டிபுடிச்சினு இர்க்க சொல்லோ நடுவால காத்து கூட நொழயாத மேறி இர்க்கமா கட்டி புட்சிகினு இருக்குறது தான்.! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.


[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புணர்ச்சிமகிழ்தல் : குறள் எண் : 1108 ]


தீனா "கொரலு"

மன்சுக்குள்ள வெக்கமே இல்யாத மன்சனுங்கோ அல்லாம் மன்ச ஜென்மே இல்ல.. அவுங்க அல்லாம் இந்த கயிற கட்டி ஆட்டுற மரப்பொம்மை மேறி தான் சும்மா உதார் வுடறது கணக்கா ஊருக்குள்ள ஆடிகினு திரிவாங்கோ..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி அற்று.

[ பொருட்பால் : அதிகாரம் : நாணுடைமை : குறள் எண் : 1020 ]

No comments:

Post a Comment