Wednesday 9 July 2014

கோல்ல்ல்ல்ல்ல்ல்....

#உலகக்கோப்பைக்_கால்பந்து_ஸ்பெஷல்

நமக்கு சப்போர்ட்டா நிக்குறேன்னு சொன்னவங்க திடீர்னு பின் வாங்கறதும் சேம்சைடு கோல் போட்டா மாதிரி தான்..!


#உலகக்கோப்பைக்_கால்பந்து_ஸ்பெஷல்

நிறையா கோல் உதைத்தா கோல்டன் ஷு விருது.. நிறையா கேஷ் கொடுத்தா கோல்டு நகை வருது..!


#உலகக்கோப்பைக்_கால்பந்து_ஸ்பெஷல்

மாரடோனா கடவுளின் கையால் கோல் அடித்தார்.. மனைவி தன் கையாலேயே கணவனை அடிப்பாள்..


#உலகக்கோப்பைக்_கால்பந்து_ஸ்பெஷல்

கிக்குடன் வீடு திரும்பும் கணவனுக்கு மனைவியின் "கிக்"நிச்சயம்..!


#உலகக்கோப்பைக்_கால்பந்து_ஸ்பெஷல்

ஃபுட்பால் ரெஃப்ரியும் கணவனும் ஒண்ணு மாமியார் மருமகள் சண்டையில ரெண்டு பக்கமும் நிக்காம ஓடிக்கிட்டே இருக்கணும்..!


#உலகக்கோப்பைக்_கால்பந்து_ஸ்பெஷல்

அடிபட்டா மாதிரி நடிக்குறதுல ஃபுட்பால் ப்ளேயர்களுக்கு முன்னோடி ஆசிரியரிடம் அடிவாங்கும் மாணவர்களே..!


#உலகக்கோப்பைக்_கால்பந்து_ஸ்பெஷல்

ஃபுட் பாலில் யெல்லோவுக்கு அப்புறம் ரெட்டுங்கறதை டிராபிக் சிக்னல்ல இருந்து காப்பியடிச்சு இருப்பாங்களோ..!


#உலகக்கோப்பைக்_கால்பந்து_ஸ்பெஷல்

அத்துமீறல் என்பது ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடி ஆரம்பிக்கிறதும் ஃபுட்பாலில் ஆஃப் சைடு கோல் போடறதும் தான்


#உலகக்கோப்பைக்_கால்பந்து_ஸ்பெஷல்

சில சமயங்களில் நாம் எல்லோருமே கோல் கீப்பர் தான்.. நம்மளை நோக்கி வாய்ப்பு வரும் போது அதுக்கு எதிர் பக்கமா தாவிடுறோம்..!


#உலகக்கோப்பைக்_கால்பந்து_ஸ்பெஷல்

நல்ல pass / boss கிடைச்சா goalஐ அச்சீவ் செய்யலாம்..! 


#உலகக்கோப்பைக்_கால்பந்து_ஸ்பெஷல்

முரட்டு ஆட்டத்துக்கு சிவப்பு அட்டையும் முறைக்கிற கணவனுக்கு பூரிக்கட்டையும் தண்டனை..!


#உலகக்கோப்பைக்_கால்பந்து_ஸ்பெஷல்

வாழ்க்கை ஒரு கால்பந்து விளையாட்டு..முடிவு தெரியணும்ன்னா ஒழுங்கா ஆடணும் ஏன்னா இங்க எக்ஸ்டிரா டைம் கிடையாது.!


#உலகக்கோப்பைக்_கால்பந்து_ஸ்பெஷல்

மனைவிக்கு வாங்கித்தருவதாகச் சொன்னதை தராத போது உங்களுக்கு குத்தல் பேச்சில் நிறைய சேம் சைடு கோல் விழும்..!




No comments:

Post a Comment