Tuesday 8 July 2014

மகாபாரதம் 2014

இந்த ஹை-டெக் யுகத்துல மகாபாரத கேரக்டர்கள் வாழ்ந்திருந்தால் ஒரு நகைச்சுவை கற்பனை.. ( சிரிக்க மட்டும் )

#மகாபாரதம்_2014

(செல்போன் ஒலிக்கிறது...)

ஹலோ நான் தர்மர் பேசறேன்.. அர்ஜுனா நீ எங்க இருக்க..?

ஹாய்! பிரதர் நான் பிரண்ட்ஸோட ஸ்னோ பவுலிங் சென்டரில் இருக்கேன்..

அப்படியா பாஞ்சாலி உன் கூடவா வந்து இருக்கா..?

இல்லண்ணா ப்யூட்டி பார்லர் போகணும்ன்னு சொன்னா எங்கிட்ட பணம் கேட்டா நான் என் க்ரெடிட் கார்டை கொடுத்து அனுப்பினேன் வேணும்ன்னா பார்லர்ல போயி பாருங்களேன்.!

அட நான் அங்கதாம்பா இருக்கேன்.. இங்க இல்லை சரி நீ கட் பண்ணு.!

( மீண்டும் போனில் நம்பர் டிரை செய்கிறார் )

ஹலோ.! பீமா எங்கப்பா இருக்கே..?

அண்ணா.. நான் ஜிம்முல இருக்கேண்ணே.. ஏதும் அர்ஜெண்ட் மேட்டரா.?

இல்லப்பா பாஞ்சாலியை காணோம் அதான் அங்க வந்துருக்காளான்னு கேட்டேன்

அடடா இங்க வர்லியே ஒருவேளை லேடீஸ் கிளப் மீட்டிங் ஏதும் போயிருக்கலாம் பாஞ்சாலி செல்லுக்கு டிரை பண்ணி பாருங்கண்ணே..!

அது ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருதுப்பா அதனால தான் கேக்குறேன்.. சரி இரு நகுலனுக்கு பேசறேன்..

( நகுலனுக்கு கால் செய்கிறார் )

ஹலோ நகுலனா...என்னப்பா ஒரே இரைச்சலா இருக்கு..

அண்ணே இருங்க தியேட்டர்ல படம் பாத்துட்டு இருக்கேன்.. ஒரு நிமிஷம் வெளியே வந்துடுறேன்.. (சில நிமிடங்களுக்குப்பின்)

சொல்லுங்கண்ணா.. 

தம்பி பாஞ்சாலி உன் கூடவா இருக்கு..?

இல்லண்ணே இரண்டு டிக்கெட் இருக்கு படத்துக்கு வர்றியான்னு கேட்டேன்.. அதுக்கு அவ ஏற்கனவே என் ப்ரெண்ட்ஸோட இந்த படத்தை பாத்துட்டேன்னு சொல்லிட்டா.. அதான் நானும் சகாதேவனும் வந்து இருக்கோம்..!

ஓ.. அப்ப அங்கேயும் இல்லியா.. நல்லவேளை சகாதேவன் உன்கூட இருக்கிறதா சொன்ன இல்லாட்டி அடுத்த கால் அவனுக்கு பண்ணலாம்ன்னு இருந்தேன்..

அண்ணே நான் வேணா கிளம்பி வரவா எதும் ஹெல்ப் வேணுமா..?

நீ கேட்டதே போதும்பா... மகாபாரதத்துல கூட உனக்கு இவ்வளவு டயலாக் கிடையாது நான் நம்ம பிளாட்டுக்கு போய் பாக்குறேன்.. நீங்க படத்தை பாருங்க..

(பிளாட்டுக்கு திரும்பி பிளாட் வாட்ச்மேனிடம்)

வாட்ச்மேன் எங்க வீட்டம்மா பாஞ்சாலியை பாத்திங்களா..?

சார் மத்தியானம் ஸ்கூட்டி எடுத்துட்டு போனாங்க சிவப்பு கலர் சல்வார்கமீஸ் போட்டு இருந்தாங்க..

யோவ்.. துச்சாதனன் புடவையை இழுத்த மாதிரி இனி ஆகிடக்கூடாதுன்னு இப்ப அவங்க அந்த மாதிரி சேஃபா தான் டிரெஸ் தான் போடறாங்க.. இது ஒரு தகவலா..? ஆளை பாத்தியான்னு கேட்டா டிரெஸ்ஸை பத்தி ஏன் பேசுற..!

(இப்போது தர்மர் செல் ஒலிக்கிறது)

ஹலோ யாரு..?

ஹாய் டார்லிங்.. நான் தான் பாஞ்சாலி பேசறேன்..

எங்கப்பா போன எவ்வளவு நேரம் தேடுறது..? ஆமா இது யார் நம்பரு புதுசா இருக்கு..?

சாரிங்க.. இது என் ஃபிரெண்ட் நம்பர்.. என் செல்லுல சுத்தமா சார்ஜ் இல்லை..

சரி இப்ப நீ எங்கப்பா இருக்கே..?

என் ஃப்ரெண்ட் US போறா அவளை சென்ட் ஆஃப் பண்ணிட்டு ஸ்கூட்டிய சர்வீஸ் விட்டுட்டு இப்பதான் கால் டாக்ஸி பிடிச்சு பார்லர் வந்தேன்..! வந்தா நீங்க தேடுனதா சொன்னாங்க அதான் கால் பண்ணேன்... சாரிங்க..

ஓ.. இப்ப நான் அங்க வரவா..?

வேணாங்க நான் அரோமா தெரபி பேஷியல் முடிச்சுட்டு வர ஒன் ஹவர் ஆகும்.. நான் முடிச்சிட்டு கூப்பிடுறேன்..அப்ப வந்தா போதும்..!

ஓகேம்மா.. அங்க சார்ஜர் இருந்தா மொபைல சார்ஜ் பண்ணிக்கோ.. ஓகே..

அது இல்லாமயா.. வந்த உடனே சார்ஜ் போட்டுட்டேன்.. நீங்க ஒண்ணு பண்ணுங்க என் மொபைல்ல நெட் கார்டு டாப் அப் பண்ணுங்க வீட்டுக்கு வந்ததும் ஃபேஸ்புக் பாக்கணும்..!

Sure மா bye.. Bye..!

No comments:

Post a Comment