Thursday 1 May 2014

ஓர் இந்தியனின் குமுறல்..!

ஓர் இந்தியனின் குமுறல்..


உழைத்து சிவந்த கரங்களுக்கான தினம் இன்றுரத்தம் சிதறிவிடிந்திருக்கிறது...

தண்டவாளம் ஏறிவந்த சதியொன்று பாதுகாப்புவண்டவாளத்தினை பறைசாற்றி

இருக்கிறது.. பிழை செங்கோட்டைமீதா.?செயிண்ட் ஜார்ஜ் கோட்டை மீதா.?

எனக் கேட்டால் பாதுகாப்பை கோட்டை விட்ட அனைவரின் மீதும் தான்....

இறந்தஉயிர் சம்பவத்திற்கு சற்று முன் முகத்தைக்கழுவிஇருக்கலாம்,பல் துலக்கி 

இருக்கலாம், ஏன் தன் கடைசிகோப்பை தேநீரைக்கூட அருந்தியிருக்கலாம் 

அப்போது தெரிந்து இருக்காது அவரைவரவேற்க எமன் காத்திருப்பான் என்று....

இறந்த உயிர்களின் சொந்தங்கள் கதறிக் கொண்டிருக்கஇங்கு வந்தும் ஆதாயம் 

தேடுகின்றன மதவாத பிணந்தின்னிகழுகுகள் சில.. மோடியா,லேடியா,டாடியா என

இதிலும் அரசியல் பூசுபவர்களே கேடிகள்..கோழைத்தனம் மிகுந்தபேடிகள்..எந்த 

பயங்கரவாதமும் மனித உயிர்களை கொல்லமுடியும் ஆனால் எந்த மனங்களையும் 

வெல்லமுடியாது..பலியான உயிர்களுக்கு அரசு வழங்கும்இழப்பீடு இன்னும் வேதனை

ரத்தமும் சதையுமான உயிருக்கு கரன்சி காகிதங்கள் ஈடாகுமாஅதனால் பலி வாங்கிய 

உயிர்களை திருப்பித் தரமுடியுமா.. இன்னும் எத்தனை முறை தான் இழப்பீடு வழங்கிக் 

கொண்டிருக்கும் நம் அரசாங்கம்.?விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.! 

சம்பவம்நடந்த பிறகு தான் பாடம் கற்றுக் கொள்வோம் என்ற நிலை நீடித்தால் இது

போல சதிகள் தேசத்திற்கு பாடம் புகட்டிக் கொண்டே இருக்கும்.. செவ்வாயில்

மனிதன்  உயிர் வாழலாமா என ஆராய்ச்சிக்கு செலவு செய்யும் தேசம் அதற்கு 

முன் பூமியில் மனிதன் உயிர் வாழ உத்திரவாதம் தரட்டும் மத்திய அரசா?மாநில

அரசா என்று மாறி மாறி பந்துகள் எறிபவர்களே தெரிந்து கொள்ளுங்கள்..வெறி

பிடித்த தீவிரவாதிகளின் சதிவேலைச்செயல்களால் அப்பாவிகள் உயிரிழப்பதை 

தடுக்காத எந்த அரசாங்கமும் குற்றவாளிகளே..நமக்கும் ஒரு கடமை இருக்கிறது

நண்பர்களே நாம் அனைவரும் மத இன உணர்வு கடந்து இந்தியனாய் தீவிரவாதத்திற்கு 

எதிராக கைக் கோர்க்க வேண்டிய தருணம் இது..எந்த வெடிகுண்டாலும் சிதைக்க 

முடியாதது ஒன்று இருக்கிறது அது தான் மனிதம்...! அந்த புனிதம் கண்டு அலறி

ஓடட்டும் பயங்கரவாதம்... ஜெய்ஹிந்த்..!



அந்த வீட்டுச்சுவற்றுக்குள்ளிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் 

செடியின் இலைகள் காற்றில் சலசலத்ததும் தூசு பறக்கிறது

வாகனங்கள் வெளியேற்றும் புகை அந்த தாவரத்தின் மூச்சை

அழுத்துகிறது வெடித்து கருகிப் போன தோல் போல நோய்

வந்த இலைகள் பெருநகரத்து மாசுக்களை தாங்கி அசைகிறது

என்றோ உயிருடன் இருந்த ஒரு சிட்டுக்குருவியின் எச்சத்தில்

முளைத்த செடி இன்று தன் வாழ்வின் மிச்சத்தில் அவதிப் படுகிறது

மின்சார ரயில் கடந்து போகும் தட தடக்கும் அதிர்வில் சுவர்

மேலும் பிளவுறுகிறது.. செடியின் உயிர் வேரோடு சரியுமா?

அல்லது மாசுக்களால் தான் நாசமாகுமா? விடை தெரியாது

விழிக்கிறது நகரத்தில் தனித்திருக்கும் வாழ்ந்து கெட்ட வீடு..!




No comments:

Post a Comment