Thursday 10 April 2014

கேப்டன் கேபினட்..!

கேபினட்டில் கேப்டன்...

ஒரு கற்பனை கலந்துரையாடல்...


பாராளுமன்ற தேர்தலில் மோடி ஜெயித்து பெரும்பான்மைக்கு 14 சீட் தேவைப்பட தமிழகத்தில் 14 சீட்டும் தேமுதிக ஜெயிக்க..! கேப்டன் ஆட்டம் ஆரம்பம்..!

(பொன்னார்,ராஜ்நாத் சிங், இல.கணேசன்,சுதீஷ்,பிரேமலதா,& கேப்டன்)

ராஜ்: வாழ்த்துகள் கேப்டன் ஜி ...! (அனைவரும் வாழ்த்து சொல்ல பொன்னார் பொன்னாடை போர்த்துகிறார்)

இல. : பொன்னார்னு பொருத்தமா தான் பேர் வச்சு இருக்காங்க இவரு பொன்னாடை போத்தி தான் கூட்டணி ஆரம்பிச்சோம் "ஞாபகம் இருக்கா கேப்டன்..!

கேப்: (அலட்சியமாக) பொன்னாடை போர்த்துனதும் ஞாபகம் இருக்கு... பாமகாவுக்காக சேலத்தை விட்டுக்குடுங்கன்னு போட்டுப் பாத்ததும் ஞாபகமிருக்கு...

பொன்: (விஷயம் விபரீதமாக போவதை கண்டு) அட விடுங்க கணேசன்.! இப்ப எதுக்கு அதெல்லாம் கேப்டன் மோடிக்கு இப்ப உங்க ஆதரவு வேணும்..!

சுதீஷ்: அதுக்கு எங்களுக்கு கேபினட் வேணும்..

ராஜ்: குடுத்துட்டா போச்சு மோடி ஜி சொல்லிட்டாரு 2 கேபினட் 2 இணை கேபினட்டு உங்களுக்குன்னு...

கேப்: ஏய்ய்ய்... எங்களுக்கு 2 ஆ...ரெண்டு கணக்குல எனக்கு பிடிக்காத ஒரே நம்பர்...!

இல. : பின்ன எவ்வளவு எதிர்பார்க்குறிங்க?

பிரேம: நாங்க என்ன என் பையனுக்கு பொண்ணா கேட்டு வந்துருக்கோம்? என்னமோ சீர் கேட்டா மாதிரி கேக்குறிங்க..!

கேப்: கரெக்டா சொன்னம்மா...எங்களுக்கு கேபினட்டு 15 வேணும்..! 

ராஜ்,இல,பொன்: பதினைஞ்சா.!!!!!

சுதீஷ் : ( கேப்டன் காதில்) மாமா நாம ஜெயிச்சதே 14 தான்...15 கேட்டா எப்படி? 

கேப்: (சமாளிக்கிறார்) அட 15 கேபினெட்டுன்னா உங்க காதுல விழுந்துச்சு..! நான் சாப்பிட 15 கேஸ்யூனட்டுன்னு சொல்ல வந்தேன்...ஆங்..

பொன்: (மனதிற்குள் அடடா இவருக்கு கேஸ்யூனட்டு ஞாபகம் வந்துருச்சே வேற ஞாபகம் வர்றதுகுள்ள பேச்சை முடிக்கணுமே...) ராஜ்நாத் ஜி மேற்க் கொண்டு ஏதாவது கூட போட்டுக் குடுங்க ஜி..!

சுதீஷ் : ஏங்க என்னமோ காய்கறி வாங்கிட்டு கொசுறு கேட்டா மாதிரி கொடுக்க சொல்றிங்க..!

ராஜ்: சரி கேப்டன் ஜி 2 கேபினட் 3 இணைகேபினட் ஓகேவா?

கேப் : நல்லா கேட்டுக்கோங்க..! துளசி வாசம் மாறுனாலும் மாறும் இந்த தவசி வார்த்தை மாறாது..! 3 கேபினட்டு 4 இணை கேபினட்டு.. மொத்தம் ஏழு....நாலும் மூணும் ஏழு...

இல : அதென்ன கேப்டன் 7 கணக்கு?

கேப் : எங்க கட்சியில இருந்து வெளிய அந்தம்மா கிட்ட போய் சேந்தவங்க ஏழு அவங்களுக்கு சம்மட்டி அடி குடுக்க தான் இந்த 7..

பொன்; (முணுமுணுக்கிறார்) சம்மட்டி அடி அவங்களுக்கா எங்களுக்கா?

சுதீஷ் : என்ன முணுமுணுப்பு பொன்னார்?

பொன்: ஐயோ ஒண்ணுமில்லிங்க சுதீஸ்...ராஜ்நாத் ஜி... சீக்கிரம் பேசி முடிங்க...!

ராஜ்: ஓகே கேப்டன் 3 கேபினட் ஓகே.... ஆனா 4 இணை கேபினட் மோடிஜி கிட்ட கேட்டு முடிவு பண்ணிக்கலாம்.. என்ன சொல்றிங்க?

பிரேம: அப்ப 3 கேபினட்ல எங்க போர்ட்போலியோவ இப்பவே முடிவு பண்ணுங்க அதுக்கு அப்புறம் சொல்றோம்

கேப்: இரும்மா.. போலியோ வந்தவங்களை பத்தி நாம பேசி என்ன ஆகப் போகுது...! நமக்கு எந்தெந்த பொறுப்பு தருவாங்கன்னு கேளு..!

சுதீஷ்: ஐயோ மாமா அக்கா அதைத் தான் கேட்டாங்க?

கேப்: அப்படியா..! அப்ப நம்ம ஏற்கன்வே எடுத்த முடிவை நீயே சொல்லிடு மச்சான்...!

சுதீஷ்: கேபினட் நம்பர் 1 நிதி அமைச்சர் போஸ்டு..அது எனக்கு..

ராஜ்: நிதி அமைச்சகமா!!!

பிரேம: ஆமா தம்பி தானே கட்சி வரவு செலவு எல்லாம் பாக்குது..!பொருத்தமா இருப்பாரு 

பொன்: (முணுமுணுப்புடன்) இப்ப எங்களுக்கு வருத்தமா இருக்கு..!

கேப் : என்ன நீங்க பினாத்திகிட்டே இருக்கிங்க பொன்னார்?

பொன்: இல்ல கேப்டன் அடுத்த  என்னவா இருக்கும்ன்னு நினைச்சேன்..!

கேப்: அதெப்படி எங்க கேபினட்டை நீங்க நினைக்கலாம்... அப்படி ஒரு நெனப்பே இருக்க கூடாது புரியுதா...ம்ம்ம்ம் மச்சான் அடுத்து...!

சுதீஷ் : கேபினட் 2 தேசிய நெடுஞ்சாலை கேபினட்..

இல: இது உங்க கட்சியில யாருக்கு?

கேப்: மவுண்ட் ரோடுல பெரிய பாலம் கட்டி அறிவாலயம் அதுக்கு இடைஞ்சலா இருக்கு.. அதை இடிக்கணும்ன்னு யார் நல்ல பிளான் போட்டு தர்றாங்களோ அவங்களுக்கு..!

ராஜ் : மாஸ்டர் பிளானாயிருக்கே ஜி..

பிரேம: எங்க கட்சி எம்பிங்களுக்கெல்லாம் இப்ப அதான் அசைன்மெண்ட்டே..! பரபரப்பா பிளான் ரெடியாகிகிட்டு இருக்கு..!

பொன்: கடைசி கேபினட் எதுங்க?

பிரேம: என்னாது கடைசியா?

பொன் : அய்யய்யோ அந்த 3 வது எதுங்க?

சுதீஷ்: மாமா அதை நீங்களே சொல்லிடுங்க...! 

கேப்: இல்ல மச்சான் நீங்களே சொல்லுங்க...!

பிரேம: நான் சொல்லட்டுமா? 

ராஜ்: யாராவது ஒருத்தர் சொல்லுங்களேன்..!

கேப் : என் மனைவியே சொல்லட்டும்...சொல்லும்மா..

பிரேம: கேபினட் நம்பர் 3 ராணுவ அமைச்சர்...

(ராஜ்,பொன்,இல மூவரும் அதிர்ச்சியில் எழுந்து)

ராணுவ அமைச்சகமா.!!!!!!!!!!! இது யாருக்குங்க?

கேப்: என்னங்க கேள்வி இது கேப்டன்னு பேரு வச்சிகிட்டு ராணுவ அமைச்சரா வேற ஆள் வந்தா நல்லா இருக்குமா நான் தான் அது...!

ராஜ் : நீங்களா...! நீங்க தான் எம்பி இல்லியே...! 

கேப்: அதனால என்னங்க ராஜ்ய சபா தேர்தல் வந்தா நின்னு ஜெயிச்சுட்டு போறேன்..!

பொன்: அப்ப தமிழ்நாட்டுக்கு...?

கேப்: என் மகன் சம்முகபாண்டி தான் தமிழக தலைவரு... நான் தேசியம் அவரு திராவிடம் இது தான் எங்க முற்போக்கு... எப்பூடி... ஆங்க் ....

(பொன்,ராஜ்,இல மூவரும் மயங்கி விழுகிறார்கள்....)

No comments:

Post a Comment