Friday 11 April 2014

காலர் ட்யூன் கற்பனைகள்...

காலர் ட்யூன் கற்பனைகள்...

தமிழக அரசியல் மற்றும் சினிமா வி.ஐ.பி களை நாம் மொபைலில் அழைத்தால் அவர்களின் தற்போதைய காலர் ட்யூன் என்னவாக இருக்கும்.. ஒரு ஜாலி கற்பனை...

மோடி : உலகம் பிறந்தது எனக்காக.. ஓடும் நதிகளும் எனக்காக..

ராகுல் : சிலர் சிரிப்பார்..சிலர் அழுவார் நான்...

கலைஞர் : நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா...

ஜெயலலிதா : நான் ஆணையிட்டால்... நான் ஆணையிட்டால்.. ( திரும்பத் திரும்ப அதே வரி)

மு.க.ஸ்டாலின் : முதல்வனே வனே வன்னே வன்னே வன்னே..

வை.கோ. : புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது ...

ராமதாஸ் : ஆசை ஆசை இப்பொழுது..பேராசை எப்பொழுது..

திருமா : எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு..

கேப்டன் : ஏ..மச்சி... அவ துப்புனா எச்சி..

அழகிரி : பொதுவாக எம்மனசு தங்கம்.. ஒரு போட்டியினு வந்துபுட்டா சிங்கம்...

ஈவிகேஎஸ் : நடக்கும் என்பார் நடக்காது...

சுப்ரமணியம் சுவாமி : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்.. வெடிகுண்டு ஒண்ணு வச்சிருக்கேன்

நாஞ்சில் : நானாக நானில்லை தாயே.. நல்வாழ்வு தந்தாயே நீயே...

சீமான் : கனா கண்டேனடி... தோழி..கனாக் கண்டேண்டி....

டி. இராஜேந்தர் : நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தேனய்யா

 சரத் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது...

தா.பாண்டியன் : தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை...

சிம்பு : இந்த சந்தாதாரர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் தயவு செய்து காத்திருக்கவும் அல்லது பின்னர் தொடர்பு கொள்ளவும்.. (இவருக்கு சத்யமா இப்ப இதுவாத்தான் இருக்கும்)






தமிழக அரசியல் தலைவர்களுக்கு டயல் செய்தால் என்ன ரிங்டோன் இருக்கும்..

கலைஞர் : ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ...

ஜெயலலிதா : நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா...

மு.க.ஸ்டாலின் : பறந்தாலும் விடமாட்டேன் பிறர் கையில் தரமாட்டேன்...

வை.கோ. : புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது ...

ராமதாஸ் : ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்துவரை நினைக்கலியே...

திருமா : இரண்டு கைகள் நாம் தானா இருவருக்கே தான் எதிர்காலம்...

கேப்டன் : அடிக்கிற கை தான் அணைக்கும் அணைக்கிற கைதான் அடிக்கும்...

அழகிரி : பொதுவாக எம்மனசு தங்கம் ஒரு போட்டியினு வந்துபுட்டா சிங்கம்...

ஈவிகேஎஸ் : உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல...

ப.சிதம்பரம் : எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான்...

நாஞ்சில் : நானாக நானில்லை தாயே.. நல்வாழ்வு தந்தாயே நீயே...

தங்கபாலு : கனா கண்டேனடி...கனாக் கண்டேண்டி....

நாராயணசாமி : நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தேனய்யா...

 சரத் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது...

ஞானதேசிகன் : தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை...






No comments:

Post a Comment