Thursday 24 April 2014

மின்சார கட்டளைகள்

மின்சாரம் ஓரு அலாரம்..!

சென்னைவாசிகளுக்கு ஒரு வகுப்பு..

வீட்டில் 4 &5 ட்யூப் லைட்டுகள் 4 மின்விசிறிகள் உள்ளதா அவற்றில் தேவையானதை மட்டும் பயன் படுத்தவும்.. உடனடியாக வீட்டில் CFL பல்புகள் பொருத்தவும் ட்யூப் லைட்டை குறைத்து பயன்படுத்தவும்..!

முடிந்த அளவு உங்கள் உள்ளாடைகளை கையால் நீங்களே துவைக்கவும் (மனைவியும் மகிழ்வார்) வாரத்தில் வாஷிங் மெஷின் பயன்பாடு இரு முறைக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளவும்..ஆண்கள் தங்கள் பேண்ட்டுகளை 2 நாட்கள் பயன்படுத்தவும்..!

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது அடிக்கடி மோட்டார் போடுவதில் இருந்து காப்பாற்றும்..! இண்டெக்ஷன் ஸ்டவ் இருந்தால் அழகாக பேக் செய்து மேலே பரணில் வைத்து விடவும்..!ரைஸ் குக்கரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தவும்..! 

காலை டிபனுக்கு தேங்கா சட்னி என்பது வாரத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கட்டும்.. உடல் நலத்திற்கும் நல்லது..!கிரைண்டர் மாதத்திற்கு இரு முறை பயன் படுத்தவும்..ரெடிமேடு மாவு போதும் எனில் கிரைண்டரையும் பரண் ஏற்றவும்.. அன்றைய தேவைக்கு மட்டும் சமைக்கவும்.! 

பிரிட்ஜில் ஸ்டாக் வைக்க வேண்டாம் காலையில் அதை அணைத்து வைப்பது நலம் அன்றைய காய்கறிகளை தினமும் போய் வாங்கவும் நடைபயிற்சியும் ஆயிற்று.. மண்பானை வாங்கி கீழே மணல் கொட்டி பானையை அதன் மீது வைக்கவும் பிரிட்ஜை விட அருமையான ஜில் குடிநீர்.. 

கை விசிறிகள் வாங்கி வைத்து கொள்ளவும்..! நிறைய வேர்க்கும்.. அதற்கு மெல்லிய  வெள்ளைத்துணிகள் கைக்குட்டை அளவில் விற்கிறது அதை வாங்கி வைத்து கொள்ளவும்..இரவு உறங்கப்போகும் போது மட்டும் ஏசி உபயோகிக்கவும் அதுவும் ஒரு 4 மணி நேரத்திற்கு பிறகு ஆட்டோ ஆஃப் மோடில் வைத்து உபயோகிப்பது நலம்..

டார்ச் லைட் & மெழுகுவர்த்திகள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் மைக்ரோவேவ் ஓவனில் மாதம் இரு முறை சமைக்கவும்..வீட்டில் கம்ப்யூட்டர் உபயோகிப்பவர் அந்த நேரத்தை பாதியாக குறைத்து கொள்ளவும் அவசரத்துக்கு மொபைல் உபயோகியுங்கள்..

மொபைல் UPS விற்கிறது வாங்கி வைத்துக் கொள்ளவும் மொபைலை தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்..டிவியில் பிடித்த நிகழ்ச்சிகள் மட்டும் பார்க்கவும்.. முடிந்தால் தேவைப்படும் முக்கிய சானல்கள் இருக்கும் சிறிய பேக்கேஜுக்கு மாறவும்..

இரவு டிவி பார்ப்பது 10 மணிக்கு மேல் வேண்டாம்.. பகலில் ஒரு 5 மணி நேரமாவது டிவிக்கு ஓய்வு தாருங்கள்.. உங்கள் பகுதியின் மின்தடை நேரத்தை நன்கு தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..வீட்டில் உள்ள இன்வெட்டரை அணைத்து சார்ஜ் ஏற்றவும்...

மின்சாரம் போனவுடன் நீங்கள் போய் ஸ்விட்ச் ஆன் செய்தால் தான் அது இயங்க வேண்டும்.. மின்சாரம் திரும்ப வரும் நேரத்திற்கு ஒரு 15 நிமிடத்திற்கு முன் அதை மீண்டும் அணைத்து விடுங்கள்..இன்வெட்டர் பேட்டரியை குறித்த காலத்தில் பராமரியுங்கள்..

வீட்டில் திரட்மில் போன்ற சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்... (முடிந்த அளவு) வெளியே வாக்கிங் செல்லவும்..மேக்கப் சம்பந்தமான ஹேர்டிரையர், ஹேர் ஸ்ட்ரைட்டர் போன்றவை தவிர்த்து விடவும்.. எலக்ட்ரிக் ஷேவரும் பயன்படுத்த தேவையில்லை..!

தேவையில்லாத ஸ்விட்சுகளை அணைத்து வைக்கவும்..கிரிக்கெட் பார்ப்பவர்கள் முக்கிய பைனல்களை மட்டும் முழுதாக பாருங்கள் மற்ற லீக்குகளை ஹைலைட்ஸ் மட்டும் பார்க்கவும்..சனி & ஞாயிறு மாலை வேளைகளில் கட்டாயம் பீச்,கோவில் ஏதாவது செல்லவும்
மாதம் இருமுறை சண்டே அவுட்டிங் போய்விடுதல் மிக்க நலம்..!

இதெல்லாம் ரொம்ப ஓவர் தேவை இல்லாத கற்பனை.! சென்னைவாசிகள் இப்படியெல்லாம் நடக்காது என்று ஏளனமாக சிரிக்கிறீர்களா? வழுக்கை விழுந்த பின்பு சீப்பு தேடியது போல ஒருவேளை சென்னையில் மின் தடை ஏற்பட்டால் தான் இதை நீங்கள் உணர்வீர்கள்...!

அப்படி உணர்ந்த பின்பு நீங்கள் மின் சிக்கனம் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம் இதை விட சிறப்பாக..! மதுரையில் தினமும் 12 மணி நேர மின் தடையில் வாழ்ந்து...பின் சென்னைக்கு குடி பெயர்ந்த ஒரு சராசரி மனிதனின் அனுபவங்களே இது..! 

மின்சிக்கனம் தேவை இக்கணம்..! நன்றி..!

No comments:

Post a Comment