Thursday 5 March 2015

சிங் இன் த ரைன்..

#செய்திகளுக்கு_வடிவேலு_பஞ்ச்

இக்கட்டான சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி - பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட் வீக்கு.

டெல்லி முதல்வரானார் கெஜ்ரிவால் - எட்டத்துல பாத்தாதாண்டா காமெடியா இருப்பேன் கிட்டத்துல பார்த்தா டெரரா இருப்பேண்டா டெரரா.

டால்மியா பிசிசிஐ தலைவராக மீண்டும் தேர்வு - நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா தாண்டா பண்ணணும்.

மோடியை போல வாழ கற்றுக்கொள்ளுங்கள்  - ஏய்ய்ய் என்னிய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே.

ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் தலைவர் சூசகம் - வருருருருரும் ஆனா வராது.

காங் ஆட்சியில் குஷ்பு  அமைச்சராவார் - நான் அப்பிடியே ஷாக் ஆய்ட்டேன்.

என்னை முதல்வராக பார்க்க தொண்டர்கள் ஆசை - எப்புடி கோத்துவிடுது பாரு பக்கி.

தெரசா மக்களை மதம் மாற்றவே சேவை புரிந்தார் - அம்புட்டும் வெசம் வெசம் வெசம்.

பிரதமரின் அணிந்த கோட்டுக்கு கோடிக்கணக்கில் ஏலம் - எதையுமே ப்ப்ப்ப்ளான் பண்ணித்தான் பண்ணணும் ஓக்க்க்கே.

டீசல் விலை உயர்வால் விலைவாசி உயராது - உஸ்ஸ்ஸ்ஸ்.. இப்பவே கண்ணைக் கட்டுதே.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு - நானும் எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.

அயர்லாந்திடம் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி - என்ன தலைவா உனக்கு புது அயிட்டமா எறிஞ்சுயிருக்காய்ங்க.

இனி நீங்க.. ரெடியா..









No comments:

Post a Comment