Monday 2 March 2015

ராட்சசிகளுடன் நான்..

#பத்துப்பெண்களுடன்_ஒருநாள்

இது ஏதோ வில்லங்கமான பதிவு என்று நினைத்துக் கொண்டு படிப்பவர்கள் மேற்கொண்டு படிக்கவேண்டாம் என்று கடுப்புடன் தெரிவித்து ஆரம்பிக்கிறேன்.

ஆதித்யா வலைச்சிரிப்பு நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏதும் செய்யவில்லை. இம்முறை காதலர் தினத்திற்கும் மகளிர் தினத்திற்கும் சிறப்பு நிகழ்ச்சி செய்ய முடிவு எடுத்தோம். முதலில் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி எடுப்பதாக இருந்தோம்.!

அதற்கு ஏற்கனவே தம்பதியராக முகநூலில் இருப்பவர்கள்..முகநூலில் காதலித்து பின் மணம் புரிந்தவர்கள் என 6 ஜோடிகளும் தேர்வாகி விட்டனர். இதை பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக முதலில் முடிவெடுத்து பிறகு அதை காதலர் தினத்திற்காக தள்ளி வைத்தது தனிக்கதை.. ஷுட்டிங் தேதி பிப்ரவரி 6 என குறித்திருந்தோம்.

என்ன நடந்ததோ தெரியாது அந்நியோன்யமான தம்பதிகள் அவர்களுக்குள் ஒரே முடிவு எடுப்பதில் ஆச்சரியம் இல்லை இதில் தேர்வான 6 தம்பதிகளில் 5 தம்பதிகள் நிகழ்ச்சிக்கு வரமுடியாது என்ற அந்நியோன்யமான முடிவு எடுத்து எங்களை மெய் சிலிர்க்க வைத்தார்கள். மிச்சமிருந்தது ஈரோடு சுரேஷ் & சுதா சுரேஷ் மட்டுமே.!

இவர்கள் அனைவருமே சொல்லி வைத்தார் போல 4 ஆம் தேதி அன்று தான் தாங்கள் வராத தகவலைச் சொன்னார்கள்.. ஈரோடு சுரேசுக்கும் தகவல் சொல்லி வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டேன் ஏனெனில் அவகாசம் அதிகம் இல்லாததால் அந்நிகழ்ச்சி கைவிடப்பட்டது... சுதா சுரேஷால் எனக்கு சாபமும் விடப்பட்டது.!

அடுத்து மகளிர் தின ஸ்பெஷல்.. காதலர் தின நிகழ்ச்சியிலாவது கணவன் மனைவி பங்கு பெறலாம் என்பதால் அனுமதி கிடைப்பது சுலபம்.. ஆனால் அதற்கே ஆள் வரவில்லை. இது பெண்களை தனியாக வரவழைக்க வேண்டும். அவர்களுக்கும் வீட்டில் அனுமதி கிடைக்க வேண்டும். எல்லாரும் தவறாது வருவார்களா?

என்னும் மில்லியன் ரூபாய் கேள்வி எனக்குள் எழுந்தது இந்த நிகழ்ச்சியை கை விடாமல் நடத்தியே ஆக வேண்டிய கட்டாயம். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசிடம் தோற்ற பாகிஸ்தான் நிலையில் இப்போது நான்..! இந்த ஷுட்டிங் பிப்ரவரி13 இன்று (அன்று) பிப்ரவரி 4சரியாக எனக்கு 9 நாட்கள் நேரம் இருந்தது.!

பரபரவென செயலில் இறங்கினோம்.. எங்கள் ஆதித்யா டீம் பங்கேற்பாளர்களை தேர்ந்தெடுக்க..நிகழ்ச்சியின் வடிவமைப்பிற்காக ஜாலி வசந்த் சார், நான் மற்றும் சசி அனைவரும் கான்செப்ட் பிடிக்க..எங்கள் வலைச்சிரிப்பு நிகழ்ச்சியின் இயக்குநர்கள் மற்ற பணிகளையும் எங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்ய.. அப்பப்பா...!

மின்னல் வேகத்தில் 3 நாட்களுக்குள் எல்லாம் தயார்.! பத்து பெண்பதிவர்களை தேர்ந்தெடுத்து விட்டு மாற்றாக 4 பேரையும் தயார் செய்து வைத்தாகிவிட்டது.. யாரும் வர முடியாவிட்டால் 2 தினத்திற்கு முன்பே சொல்லவேண்டும் என்று கட்டாயச் சத்தியம் வேறு வாங்கிக் கொண்டோம்.. (முன் அனுபவம் அப்படி)

சரியாக 10 ஆம் தேதி காலை போன்..சாரிங்க நான் வரமுடியாது.. சொன்னது சப்ஸ்ட்டிட்யூட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. சரி விடு மெயின் ஆட்டக்காரர்கள் போன் செய்யவில்லையே என்று நினைத்தபோது க்ளிங் என்றது மெசஞ்சர்.. ஓபன் செய்ததும் ஹார்ட் ஓபன் ஆனது.. சாரி வெங்கி சார் என்னால் வரமுடியாது..!

மெயின் ஆட்டக்காரர்களில் ஒருவர்.! அதற்கு பதில் டைப் செய்வதற்குள் போன் ஒலித்தது.! பார்த்தால் இன்னொரு மெயின் ஆட்டக்காரர்.! டைப்பை  நிறுத்தி விட்டு ஹலோவினேன்...வெங்கி ஷூட் அன்னிக்கு மதியம் 2 மணிக்கு கிளம்ப முடியுமா.? நிச்சயம் முடியாதுங்க 7 மணி ஆகும்.. அப்படியா அப்ப நான் வரலை சாரி..டொக்..!

சற்றுநேரம் ஓரமாக நின்று கொஞ்சம் வெங்காயம் உரித்தேன்.! (அழுதேன்னு சொன்னா நல்லா இருக்காதில்ல) ஒரு சின்ன கணக்கு மனதில் ஓடியது..14இல் 3 போனால் 11.. இன்னும் 2 நாட்களில் இது எத்தனை போகுமோ... அனைவருடனும் பேசினேன் எல்லாரிடமும் நிலையை விளக்கி சொன்னேன்..!

அனைவரும் என் நிலையை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு தந்தனர்.. ஷுட்டிங் தினமும் வந்தது சரியாக 10 மணிக்கு வரவேண்டும் என்று 4856 முறை சொன்னது வீண்போகவில்லை.. எல்லாரும் 11:30க்குள் வந்து விட்டனர்.! உலகக்கோப்பை சிறப்பு நிகழ்ச்சிக்காக எங்கள் ஸ்டுடியோவை இன்னொரு டீம் ஆக்ரமித்தது.!

மதியம்4 மணிக்கு தான் ஷுட்டிங் தொடங்கியது..ஆனால் கிடைத்த நேரத்தில் அருமையாக கலந்தாலோசித்து, பயிற்சி செய்து தங்களை பட்டை தீட்டிக்கொண்ட அவர்கள் நிகழ்ச்சியில் பட்டையை கிளப்ப எல்லாம் ஒரு டேக்கில் ஓகே ஆக 7 மணிக்கு ஷுட்டிங் முடிவடைந்தது.. நிகழ்ச்சியும் நிறைவாக வந்திருந்தது.

அந்த நாளில் காலை 11 மணி முதல் 3 மணி வரை அவர்கள் அடித்த லூட்டி சன் டிவி வளாகத்தையே அதிர வைத்தது.. மதியம் லஞ்ச் டையத்தில் சன் டிவி ஊழியர்கள் 1000 பேரும் யாருய்யா இவங்கன்னு திரும்பி பார்க்க வைத்து.. லஞ்ச டைம் முடிவதற்குள் அதில் பாதிபேருடன் நட்பாகி விட்டார்கள் நம் பெண்கள்.!

வித்யாரவி தலைமையில் ரேகாVJ, சிந்துசோனி,இளமதி,கவிஞர்/எழுத்தாளர் யாமிதாஷா ஒரு அணியாகவும் டெய்சி எட்வின் தலைமையில் அம்மு டிரைபல், ரம்யா, சுபா, கவிஞர் சத்யப்ரியா, ஒரு அணியாகவும் கலந்து கொண்டு கலக்கி விட்டு..நிகழ்ச்சியின் நிறைவில் தங்கமயிலின் அழகான பரிசுடனும் இனிய நினைவுகளுடனும் அனைவரும் விடை பெற்றோம்...தேங்யூ கேர்ள்ஸ்..

(அன்னிக்கு எல்லாருக்கும் 16வயது என்பதால் அனைவரும் கேர்ள்ஸ்)


No comments:

Post a Comment