Friday, 19 August 2016

2💃🏻 👙🎉 18+ நகரம் 🍺 நியூ ஆர்லின்ஸ் 👙💋🎉 2

பசுமையான பூங்கா ஆங்காங்கே இளைப்பாற க்ரானைட் பெஞ்சுகள்.. சுற்றிலும் பூந்தோட்டம் அழகான ரெஸ்ட் ரூம்கள் குழந்தைகள் விளையாட மினி பார்க் அதை கடந்தால் 5 ஸ்டார் ஓட்டல் போல ரிசப்ஷன்.. மலர்ந்த முகத்துடன் சீருடை அணிந்த அமெரிக்கர்கள் மேப், ஊரைப் பற்றிய விவரம் அடங்கிய கையேடு எல்லாம் இலவசமாக தந்தார்கள்.. நீங்கள் ஓட்டல் புக் செய்யாவிட்டால் இங்கிருந்தே செய்து தருகிறோம் என்றார்கள் கனிவுடன்.

பின்னால் ஒரு பணிப்பெண் வந்து ஹாட் ஆர் கூல் என்றாள்.. ப்ளாக் டீ, க்ரீன் டீ ,காபி, கோக், பியர் இப்படி எல்லாமே இலவசம். சுற்றுலா பயணிகளுக்கு அவ்வளவு மரியாதை.. ஓடி கலோன் மணக்க வெது வெதுப்பான சுருண்ட வெண்ணிற டர்கி டவல்களை இன்னொரு பெண் நீட்ட அதை வாங்கி முகம் துடைத்துவிட்டு ஆளுக்கு ஒரு டின் ஃபாண்டா கொய்யாப் பழ ஃப்ளேவரை எடுத்துக் கொண்டு கிளம்ப சியர்ஸ் கைஸ் என்ஜாய் என விடை தந்தனர்.

நம்ம ஊரில் எல்லாம் சுற்றுலாத் துறை இப்படி இருக்குமா.! ஒப்பிட்டு பார்த்து சிரித்துக் கொண்டேன். நியூஆர்லின்ஸ் நகரம் வந்தது மாலை மஞ்சள் வெயிலிலும் கட்டிடங்களில் ஒளிர ஆரம்பித்த நியான்களிலும் நகரம் ப்ரிஸ்மா எஃபெக்டில் மிளிர்ந்தது.. நகரின் கேளிக்கை தெருவான போர்பார்ன் தெருவுக்கு பக்கத்து தெருவிலேயே அறை எடுத்து இருந்தோம்.. அறைக்குச் சென்று குளித்து முடித்துவிட்டு தெருவில் இறங்கி கிளீரென அதிர்ந்தோம்.

எதிரே கூட்டம் கூட்டமாக பெண்கள் இடுப்பில் அரை டிராயர் மட்டும் அணிந்து டாப் லெஸ்சாக நடந்து கொண்டிருந்தனர்.. கழுத்தில் கலர் கலராக முத்து மாலை போல உத்திராட்ச கொட்டை சைசில் மணிகள் உள்ள மாலைகள் மட்டுமே அதைத் தவிர மேலே ஆடைகள் ஏதுமில்லை.. அண்ணன் 5 மணிநேரம் வண்டி ஓட்டி வந்த களைப்பில் ஓய்வு எடுத்துக் கொண்டார் அவர் சொன்ன இடங்களுக்கு மட்டும் போய் வரச் சொன்னார்.

இந்தத்தெருவை கடந்து மெயின் ரோடில் ஒரு வாக் போய் வாருங்கள்.. செல்போனில் போட்டோ எடுக்கும் போது ஜாக்கிரதை இங்கு ஒருவர் விருப்பம் இல்லாமல் எடுத்தால் அது குற்றம் என்று எச்சரித்தார்.. என்னடா இது free Wi - Fi கனெக்ஷன் கிடைச்சவன் கிட்ட பேஸ்புக் பாக்காதேன்னு சொன்ன மாதிரின்னு நினைச்சுகிட்டு கிளம்பினோம்..முதல் முறையாக பிச்சைக் காரர்களை நாங்கள் அமெரிக்காவில் பார்த்தது இங்கு தான்..

பிறகு போதை ஆசாமிகளை பின்பு அமெரிக்க டாஸ்மாக் அடிமைகளை.. இது அமெரிக்க நகர்ப் புறங்களில் எல்லா மாநிலத்திலும் உண்டு என்பதை பின்பு தெரிந்து கொண்டோம்.. கெட்ட கெட்ட ஆங்கில வார்த்தைகளை கத்திப் பேசும் அமெரிக்க ஆண் குருவம்மாக்களை அவ்வப்போது சந்தித்தோம். ப்ளடி.. ஃபக் என்ற வார்த்தைகள் லட்சார்ச்சனை மாதிரி அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது.போதை அமெரிக்கர்கள் எல்லாம்..

வாத்தியார் சுஜாதா சொல்வது போல பாம்பு விரலால் ஆகாயம் நோக்கி காற்றில் குத்தினார்கள்.. உற்சாகப் பெண்கள் சாலையிலேயே ஆடுவது பாடுவது முத்தமிட்டுக் கொள்வது என ஆனந்தமாக இருந்தார்கள் அவர்கள் எல்லாம் ஒரே கர்சீப்பில் ஒட்டு மொத்த குடும்பத்துக்கே துணி எடுத்து பகிர்ந்திருந்தார்கள். அதிலும் ஒருத்தி வந்து ஹனி கேன் யூ ஆஃபர் மீ ஒன் பியர் அண்ட் டான்ஸ் வித் மீ என்றாள் என்னிடம்.. ஹுர்ரேய்.. 

ஒரு பியர் வாங்கித் தந்தால் என்னுடன் நீ ஆடலாம் என்று அமெரிக்க ஆ(டி)ட ஆஃபரை தந்தாள் அந்தப் பெண்.. இட்லி நிறம், சதுர முகம், சாம்பல் விழிகள், தங்கக் கேசம் இரு காது மடல்களின் விளிம்பிலும் சானியா மிர்ஸா மூக்குத்தி போல 40 வளையங்கள் மாட்டியிருந்தாள்.. கீழ் உதடுகளுக்கு கீழே மோவாய் கட்டையிலும் 4 வளையங்கள் கோல்டு மெடல் போல தொங்கியது வாய்க்குள் நாக்கிலும் சில வளையங்கள் மாட்டியிருந்தாள்..

கழுத்தில் கலர் கலராக மணி மாலைகள் மட்டுமே.. வேறு ஆடைகளே இல்லை.. பிங்க் நிறத்தில் அரை டிராயர் அணிந்திருந்தாள்.. இன்னும் ஒரு இன்ச் உயரம் குறைந்தால் அது ஜட்டி என்றழைக்கப்படும் அப்படி அழைத்தால் அவள் கோபித்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.. ஆகவே தற்சமயம் அதை டிராயர் என்றே வைத்துக் கொள்வோம்.. தொடை வரை பிங்க் நிறத்தில் சல்லடை ஸ்டாக்இன்ஸ்.. பியர் விலையை பார்த்தேன்..

5 டாலர் என எழுதியிருந்தது.. இந்திய மதிப்பிற்கு 67 ரூபாயில் எவ்வளவு என கூட்டி கணக்கு போடும் மனநிலையில் அப்போது இல்லை.. இது வேறு கணக்கல்லவா.. எளிமையாக 70 ரூபாய் என்றால் கூட 350 ரூபாய் தானே வருகிறது போகட்டும் ஆடிப் பார்க்கலாம் என முடிவெடுத்தேன்.. பியர் கடை நோக்கி கை அசைத்தாள் கேஷ் கவுண்டரில் மல்யுத்த வீரர் போல ஒரு மொட்டை தன் கட்டை விரல் உயர்த்தி விட்டு இசையை ஒலிக்கவிட்டான்.

ஓ.. இவர் தான் DJ எனப் புரிந்தது.. இசை ஒலிக்க ஆடத் துவங்கினாள் அது பிரேசிலின் சம்பா மேளம் இரு கால்களையும் வேகமாக சைக்கிள் பெடல் மிதிப்பது போல குதித்தாள்.. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் டீமில் பேட்ரிக் பேட்டர்சன் என ஒரு முன்னாள் பவுலர் இருந்தார்.. அவர் பவுலிங் செய்ய ஓடிவரும் போது இப்படித்தான் இரு கால்களிலும் குதிப்பார்.. அட நம்ம கிராமத்துல ரெண்டு காலிலும் சாணி மிதிப்பாங்களே அது தாங்க சம்பா.!

ஒரு வழியாக அவள் சம்பா ஆட நான் சாணி மிதிக்க எங்கள் அமெரிக்க இந்திய கூட்டுறவு நடனம் 5நிமிடத்தில் நிறைய லேசாக என்னை அணைத்து கேஷ் கவுண்டருக்கு கூட்டிப்போனாள்.. அந்த மொட்டையிடம் போய் பியர் வாங்கிக் கொண்டு அவன் அசிங்கமாக அடித்த கமெண்ட்டை சட்டை செய்யாது பை ஹனி என என் காதோரம் சொல்லிவிட்டு போனாள்.. நான் அலட்சியமாக 5டாலரை மொட்டையிடம் நீட்ட எடுறா 20 டாலர் என்றான்..

(வரும்..)

No comments:

Post a Comment