ட்வெண்ட்டி டாலர்ஸ் மேன் என்றான் மீண்டும்..இடி குரலில்.. அது அது.. பியர் 5 டாலர் தானே அது தானே அவள் கேட்டது என்றேன் பணிவாக.. ஆமாம் அது பியருக்கு நான் போட்ட பாடலுக்கு என் கடை முன்பு ஆட இடம் தந்ததற்கு அதுக்கு தான் இந்த 15 டாலர் என்றான்.. என்னுடன் ஆடிய அந்த பெண்ணை தேடினேன் இரண்டு கடை தள்ளி இன்னொருவரிடம் எனக்கு பியர் வாங்கித்தந்தால் ஆடலாம் என என்னிடம் வீசிய அதே தூண்டிலை...
வீசிக் கொண்டிருந்தாள்.. சரி நடப்பதை பார்ப்போம் என முடிவெடுத்து 20 டாலரை அழுது விட்டு கிளம்பி சற்று தூரம் போவது போல போய் திரும்ப வந்து மறைவில் நின்றுகொண்டோம்.. அந்த பெண்ணின் நடவடிக்கைகளை கண்காணித்தேன்.. என்னுடன் ஆடியது போல தான் பிறருடன் ஆடுகிறாள் அழைத்து போய் பீர் வாங்குகிறாள்.. அவன் ஆபாச கமெண்ட் அடிக்கிறான் பியருடன் போகிறாள் அடுத்த திருப்பத்தில் திரும்பி 1 நிமிடத்தில் வருகிறாள்.
1 நிமிடத்தில் ஒரு பாட்டில் பீரை உடைக்க முடியும் ஆனால் குடிக்க முடியாது
இப்போது இவளைப்போலவே பல பெண்கள் தெருவில் இறங்கி பீர் வாங்கித் தா ஆடலாம் என ஆடி அதே திருப்பத்தில் மறைந்து சட்டென வெளிப்பட அந்த திருப்பத்தில் என்ன நடக்கிறது எனப் பார்க்க ஆசைப்பட்டோம்.. இப்போது என்னுடன் ஆடிய பெண் அடுத்த கஸ்டமருடன் ஆட.. இன்னொரு பெண் ஆடி முடித்து பீரோடு நடக்க புதியவளை தொடர்ந்தோம்..
அந்த திருப்பத்தில் திரும்பிய போது அங்கே..கேஷ் கவுண்டர் மொட்டையின் ஜெராக்ஸ் போல் இன்னொரு மொட்டையிடம் இவள் பீரை கொடுக்க அவன் சிரித்துக் கொண்டே 5 டாலரை நீட்ட எல்லாம் புரிந்தது.. கடையின் முன்புறம் வாங்கிய பீர் பின் வழியாக கடைக்கு போகிறது 5 டாலர் பீருக்கும் 5 டாலர் இவர்கள் இழுக்கும் கஸ்டமருக்கான இன்செண்டிவ் என்றும் புரிந்தது. டான்ஸ் ஆடிய அவளுக்கும் மொட்டைக்கும் தலா 10 டாலர்கள்.
ஒரு மணி நேரத்தில் 5 பேர் என்றால் கூட 4 மணிநேரத்தில் 200 டாலர்கள் பொதுவாக மேர்டி கிராஸ் விழாவின் போது இப்படித்தான் நடக்குமாம் பிக் பாக்கெட் வழிப்பறி இதெல்லாம் சகஜம் என்றார்கள்.. சரி அதென்ன மேர்டி கிராஸ்.? அமெரிக்காவில் கர்னிவெல்கள் பல நடக்கும் அதில் பெஸ்ட் கர்னிவல் தான் மேர்டிகிராஸ்.. எல்லார் கையிலும் கலர் கலர் மாலைகள் இருக்க தூரத்தில் ஒரு பெண் செய்த செயல் எங்களை அதிரவைத்தது அது..
(வரும்..)
No comments:
Post a Comment