Monday 22 August 2016

சார் போஸ்ட்

இந்திய அஞ்சல் துறை...

உலகின் அதிக பணியாளர்களை கொண்ட  மிகப்பெரிய அரசுத் துறை... இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அலுவலகம் கொண்ட துறை. இந்த அற்புதமான நெட்வொர்க் ரெயில்வேயில் கூட இல்லை.. ஆனால் இது நஷ்டத்தில் இயங்குகிறது ஆட் குறைப்பு கூடாது என ஊழியர்கள் போராடுகிறார்கள் ..ஏன் இந்த அவல நிலை ???

இன்று கூரியர் நிறுவனங்கள் வந்ததாலும் எல்லாம் கணினி மயமானதாலும் அஞ்சல் துறை நொடித்து விட்டதாக குறை கூறுகிறார்கள்... நஷ்டத்தை தீர்க்க வழி இல்லையா? 

இருக்கிறது!!! ஆனால் அக்கறை இல்லை... இந்தியா போன்ற பெரிய நிலப்பரப்பில் உள்ள நாட்டில் அதுவே வரப்பிரசாதம்...

நமது நாட்டின் அனைத்து மாநில சுற்றுலா துறைகளும் அஞ்சல் அலுவலகத்தின் மூலமாக சுற்றுலா ஏற்பாடு செய்யலாம்.. நெட்வொர்க் அருமையாக இருப்பதால் இவர்களால் சிறப்பாக செயல் பட முடியும்...

அஞ்சல் அலுவலகங்கள் மூலம்  இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் சுற்றுலாவினை நியாயமான கட்டணத்தில் ஏற்பாடு செய்யலாம்..

ரயில்,விமானம் & பஸ் டிக்கெட், அரசு விடுதிகள், உணவகங்கள், இவையெல்லாம் முன் பதிவு செய்து தருவதன் மூலம் அஞ்சல் துறை லாபமும் ஈட்டி பிற துறைகளுக்கும் லாபம் தர முடியும்...

அரசு ஏற்படுத்தும் சுற்றுலா என்பதால் மக்களுக்கும் பல சலுகைகள் கிடைக்கும்...

இன்ப சுற்றுலா மட்டுமின்றி கல்வி சுற்றுலா, தொழில் வணிக சுற்றுலா, அறிவியல் சுற்றுலா, மருத்துவ சுற்றுலா,ஆன்மீக சுற்றுலா போன்ற பல சுற்றுலாக்களை நடத்துவதன் மூலம் அஞ்சல் துறை அதிக லாபம் ஈட்டலாம்..

தபால்காரன் என்ற தேவதூதர் நம் தலை முறையோடு மறந்து போகாது அடுத்த தலை முறைக்கும் நிலைத்து நிற்க இந்த பயணங்களின் கண்காணிப்பாளராக அவர்களுக்கு பொறுப்பு தரலாம்...

அந்தந்த பகுதி தபால் காரர் என்பதால் சுற்றுலா செல்லும் பகுதியை நன்கு தெரிந்து வைத்திருப்பார்.. சுற்றுலாவும் சிறக்கும்..

மேலும் கல்வி சுற்றுலா மாணவர்களுக்கு பயன் தரும்.. தொழில் வணிக சுற்றுலா மூலம் அண்டை மாநில தொழில் வாய்ப்புகளை தெரிந்து நம் மாநிலத்திலும் அதை செயல்படுத்தி அதற்கேற்ப வளர்ச்சி காண உதவியாய் இருக்கும்..

ஆன்மீக சுற்றுலா.. இன்று காசி இராமேஸ்வரம் செல்லும் முதியவர்கள் ஏராளம் அந்த ஒரு சுற்றுலாவே அதிக லாபம் ஈட்டித் தரும்.. ஆனால் இதற்கான கட்டமைப்புகளும் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்...

மேலும் புகழ் வாய்ந்த அந்தந்த மாநில கைவினைப் பொருட்களை உதாரணமாக ஹைதராபாத் முத்து, ராஜஸ்தான் பாந்தினி ஆடைகள், சோலாப்பூர் காலணி போன்றவற்றை நாட்டின் பிற பகுதிகளில் இருந்து ஆர்டர் எடுத்து தருவித்து தரலாம்...

இதற்காக அஞ்சல் ஆன்லைன் ஒன்று துவங்கி ஆர்டர்கள் பெற்று டெலிவரி செய்யலாம்.. கைவினைத் தொழில்களும் புத்துயிர் பெற்று அதிக லாபம் தரும்.

மேலும் இது கணினி யுகம் அஞ்சல் அலுவலகத்தில் சிம்கார்டுகள், டேட்டா கார்டுகள், மெமரி கார்டுகள், பென் ட்ரைவ்கள், போன்றவைகள் விற்கலாம்..

கிராமப் புறங்களில் அஞ்சல் நிலையங்களில் கணிணி வைத்து மெயில் அனுப்ப பிரவுசிங் செய்ய கட்டணம் வசூலிக்கலாம்.. 

இவை எனக்கு தோன்றிய சிறு யோசனை இதில் சில குறைகள் இருந்தாலும் இருக்கலாம்.. 

ஊத வேண்டியதை ஊதிவிட்டேன் அரசு செவிடாக இருந்தால் என்ன செய்ய??

அஞ்சல் துறைக்கும் தந்தியின் நிலை வர வேண்டாம்...

No comments:

Post a Comment