Friday, 19 August 2016

5💃🏻 👙🎉 18+ நகரம் 🍺 நியூ ஆர்லின்ஸ் 👙💋🎉 5

நெசசீத்தே கொமிதா என்றால் ஸ்பானிஷில் எனக்கு உணவு வேணும் என அர்த்தம்.. வல்லரசு நாட்டிலும் வறுமை மக்கள்.! அத்துமீறி குடியேறிய மெக்சிகர்கள் பலர் தான் இது போல வறுமையில் இருக்கின்றனர்.. அழகிய பெண்களுக்கு கவலை இல்லை இதுபோல நியாயமாக பிச்சை எடுத்தோ அல்லது அநியாயமாக பீர் வலை விரித்து ஆடியோ சம்பாதிக்கலாம்.. அல்லது இருக்கவே இருக்கு செக்ஸ் சர்வீஸ்.. அவர்களுக்கு கவலை இல்லை.



ஆண்கள் கெஞ்சியோ அல்லது மிரட்டியோ பணம் பறிக்கிறார்கள்.. திறமை மிகுந்தவர்கள் இசைக் கச்சேரி நடனம் என தெருவில் ஆடி தங்கள் திறமையை வெளிப்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்.. அந்த பெண்ணுக்கு 10 டாலர் தந்ததும் கை கூப்பி தொழுதுவிட்டாள்.. 10 டாலர் என்பது நிச்சயம் நல்ல ஓட்டலில் சாப்பிடும் அளவு தொகை.. அவள் கண்களில் தெரிந்த நன்றியை அன்பை எங்களால் எளிதில் படிக்க முடிந்தது.



சந்தடி சாக்கில் அண்ணன் சொல்லிக் கொடுத்த ஸ்பானிஷ் வார்த்தைகளில் எனக்கு மனப்பாடம் ஆன ஒரே வார்த்தையான "ஹெர்மோசா சிக்கா" என்றேன் அவளிடம்  ஓடி வந்து என் கையைப் பிடித்துக் கொண்டு "க்ராசியஸ் கரிஞ்ஞா" எனக் கூறிவிட்டு புறங்கையில் முத்தமிட்டு விடை பெற்றாள். நான் சொன்ன வார்த்தை அழகிய பெண்ணே  அவள் சொன்ன வார்த்தை நன்றி அன்பே என்பதை இங்கே அழுத்தந்திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன்.

சாலையில் கூட்டம் வர ஆரம்பித்து இருந்தது.. குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சந்தித்தோம்.. அவர்கள் பல கிளப்புகளுக்கு போய் வந்து இருந்தனர்.. எந்த கிளப் பெஸ்ட் என்பதை அவர்களிடம் விசாரித்து இந்திய சகோதரதுவத்தை நிலைநாட்டி அவர்கள் சொன்ன கிளப்புக்கு சென்றோம்.. கிளப் வாசலில் கூட்டம் அலை மோதியது.. க்ளப் ஃபுல் போர்டு தான் மாட்டவில்லை சரி வாருங்கள் ஒரு வாக் போகலாம் என்றார் அண்ணன்.


புகழ் பெற்ற இந்த போர்பார்ன் வீதி தான் நியூ ஆர்லின்சின் மிகச்சிறந்த பொழுதுபோக்குத் தலம்.. புகழ் பெற்ற மியூசிக் பேண்டுகளின் வாத்தியக் கலைஞர்களுக்கு சிலைகள் எழுப்பப்பட்டு இருந்தன.. இசைக் குழுவினர் பலர் குழுவாக அமர்ந்து இசைத்துக் கொண்டிருந்தனர்.. கறுப்பின வாலிபர் ஒருவர் ஏரோபிக்ஸ் நடனத்தில் தன் தலையை மட்டும் தரையில் வைத்து தலைகீழாக சுற்றிக் கொண்டிருந்தார்.. எங்கும் இசை வெள்ளம்.

எதிரே தள்ளாடி தள்ளாடி கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் சிரித்து கும்மாளமிட்டு வர அவ்வப்போது திறக்கும் கிளப் கதவுகளில் வழியாக கொட்டும் இசை... தெருவின்  சிவப்பு வயலட் மஞ்சம் நீல பச்சை வண்ண விளக்கொளிகள் பட்டு நாங்கள் ஹோலியில் குளித்த எஃபக்டில் இருந்தோம் அவ்வப்போது ப்ளாஷ் என மேலாடை உயர்த்தும் பெண்கள் அவர்கள் மேல் விட்டெறியும் கலர் மணிமாலைகள்.. முத்தங்கள், தழுவல்கள், நடனங்கள் 



அரை & முக்கால்  நிர்வாணம் என இது ஒரு உல்லாச உலகமாக இயங்கியது மெல்ல ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் அந்த க்ளப்பிற்கு திரும்பினோம் இப்போது உள்ளே அனுமதிக்க இடம் இருந்தது.. அண்ணன் சொன்னார் தம்பி நான் டிக்கெட் வாங்கி தந்துட்டு ரூமுக்கு போறேன்.. இருங்க என சொல்லிப் போக இம்முறை வாசலில் நிறைய பெண்கள் நிற்க அவர்கள் பின்னணியில் ஒரு போட்டோ எடுக்க எங்களை 5 பவுன்சர்கள் சூழ்ந்தனர்.

(வரும்..)

No comments:

Post a Comment