Wednesday 26 February 2014

நிஜமல்ல கனவே..!

ஒரு இந்தியனின் கனவு...!

அந்த அரங்கம் மிக மிக மிக ஆனந்தமாக இருந்தது..! 

திடீரென இந்தியப் பங்கு சந்தை மதிப்பு உயர்ந்து அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு 3 ரூபாய்க்கு வந்ததால் ப.சிதம்பரம் பல வரிகளை ரத்து செய்து,ஒரு லிட்டர் பெட்ரோல் இனி 10 ரூபாய் தான் என்று அறிவிக்க..! 

எங்களால் முடியாத சாதனை இது எனவே நான் வழி விட்டு விலகிக் கொண்டு அத்வானியை பிரதமராக்குவேன் என மோடி ஒப்புக் கொள்ள..! 

நாங்களும் ராஜ பக்ஷேவை ஐ.நா. வில் போர்க் குற்றவாளியாக்கும் தீர்மானத்தை ஆதரித்து தனி ஈழம் பெற்றுத் தருவோம் என சல்மான் கர்ஜிக்க.!

இனி எந்த குடிசை வீட்டுக்கும் போய் சாப்பிடமாட்டேன் என ராகுல் சத்தியம் செய்ய... அரசியலே வேண்டாம் என்று சோனியா சொல்ல..! 

தமிழக மீனவர்களின் மீது தாக்குதல் நடத்தினால் இலங்கை மீது போர் தொடுப்போம்... இதே நிலை தான் பாகிஸ்தான்& சீனா எல்லை நாடுகளுக்கும் என ஏ.கே.அந்தோணி எச்சரிக்க.!

நான் இனி அமெரிக்காவில் செட்டிலாக போகிறேன் என சுப்பிரமணிய சாமி கூற..! எனக்கு பிடிக்காத எண் 15 என நாராயணசாமி சூளுரைக்க.! 

தேர்தலில் இனி போட்டியிடவே மாட்டேன் என லாலு தேம்பி அழ.! திமுகவின் அடுத்த தலைவர் வை.கோ என கலைஞர் அறிவிக்க, அதை கட்டிபிடித்து கை குலுக்கியபடி அழகிரியும் ஸ்டாலினும் வழி மொழிய.! 

ஆனந்த கண்ணீருடன் கனிமொழி அதை ரசிக்க.! இனி அடுத்த 3 ஆண்டுகளுக்கு அமைச்சரவை மாற்றமே கிடையாது , மேலும் இன்று முதல் டாஸ்மாக் மூடப்படுகிறது என்று அம்மா அறிவிக்க.! 

அம்மா பிரதமராகவே முடியாது என நாஞ்சில் அடித்து சொல்ல அதை சரத்குமார் ஆமோதிக்க.. சுயமரியாதை உள்ள எவரும் அதிமுகவின் கூட்டணியில் இருக்கமாட்டார்கள் என தா.பா தன்மானத்துடன் முழங்க.! 

இனி எந்த கட்சி காலடியிலும் வீழ்ந்து கிடக்க மாட்டோம் என வீரமணியும் திருமாவும் இணைந்து சபதமேற்க.! இனி காதல் திருமணம் செய்வோருக்கு புகலிடமே நாங்கள் தான் என அய்யா முழங்க, குருவும் அன்பு மணியும் அதை கைத்தட்டி வரவேற்க.! 

இனி தெளிவான முடிவுகளை தான் எடுப்பேன் என கண் சிவக்க உணர்ச்சியோடு கேப்டன் கர்ஜிக்க, அவரது கட்சியில் இருந்து பிரிந்த 7 எம்.எல்.ஏக்களும் மீண்டும் கேப்டன் வசம் வந்து சேர.! 

கேப்டன் வெங்காயம் அல்ல பெருங்காயம் அவரது வாசனை தெரியாது போய்விட்டது அண்ணா விருது வேண்டாம் எங்கள் அன்ணாவே போதும் என பண்ட்ருட்டியார் சொல்ல... 

காங்கிரசில் இனி கோஷ்டிகளே இல்லை என ஞானதேசிகன் ஆரம்பிக்க.! அதை தங்கபாலு முன்மொழிய,வாசன் வழிமொழிய, கார்த்தி சிதம்பரம் உறுதியேற்க, ஜெயந்தி நடராஜன் செயல்படுத்த...

இந்த நல்ல நேரத்தில் அந்த 7பேரையும் விடுதலை செய்யாவிட்டால் நான் மனித வெடிகுண்டாக மாறுவேன் என ஈ.வி.கே.எஸ். கொக்கரிக்க.! 

 நடிகர் கார்த்திக் கட்சியும் டி.ராஜேந்தர் கட்சியும் காமெடிச் சானலாக மாறும் என்று அறிவிக்க.! 

இனி ஒரு பைசா கூட வாங்காமல் IPL கிரிக்கெட் ஆடுவோம் என தோனி தலைமையில் அனைவரும் சொல்ல.! நடிகர்கள் அனைவரும் ஒழுங்காக வரிசெலுத்த ஒப்புக் கொள்ள.!

அம்பானி தலைமையில் தொழிலதிபர்கள் இனி கறுப்பு பணம் பதுக்க மாட்டோம்...! அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க மாட்டோம் என உறுதியேற்க.!

இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து அரங்கம் அதிர நடந்து வந்து கலகலப்பாக பேசத் தொடங்கினார் மன்மோகன்...!!!

  மீண்டும் காங்கிரஸ் தான் ஆட்சியமைக்கும் என்ற முதல் ஜோக்கிற்கே கைத்தட்டல் சப்தம் காதைப் பிளந்தது.! அவன் கனவும்அத்தோடு கலைந்தது...!

No comments:

Post a Comment