Thursday 27 February 2014

அஜ்னபி..!

இன்று சுஜாதா நினைவு நாள்...

என்னைப் போன்ற அவரது தீவிர பக்தர்களில் ஒருவரான் அஜ்னபி எழுதிய வெண்பா மிக ரசிக்கவைத்தது.. அதிலும் அவர் காளமேகத்தை போல சிலேடையில் குறிப்பிட்டுள்ள விதம் அருமை. தமிழில் வஞ்சப்புகழ்ச்சியணி நமக்கு தெரியும் ஒருவரை பாராட்டுவது போல திட்டுவது, அந்த நயத்தை இதில் கையாண்டு இருக்கிறார்,அதாவது ஒரே வெண்பாவில் அவரை போற்றுவாரும் தூற்றுவாரும் பாடியது போல அர்த்தம் கொண்டு எழுதியிருப்பது ரசிக்க வைக்கிறது. "னெஞ்சினியர்" என்ற வார்த்தையில் உள்ள சிலேடை அற்புதம் இரு வேறு மொழிகளை உள்ளடக்கிய சிலேடை அர்த்தம் அது..! தளை தட்டாமல் எழுதிய இவ் வெண்பா என்னை கைத் தட்ட வைத்துவிட்டது.இதோ அந்தப் பாடலும் விளக்கமும்...

வெண்பா 

சாரங் கிசையன்ன செந்தமிழில் நாட்சிலவும்

பீரங் கியம்பாக பிற்பொழுதும் - வாரங்கள்

ஜல்லிய டிக்காதா னெஞ்சினியர் பேரையூர்

சொல்லும் சீ ரங்கராஜன்.


பொருள் 1:- ( பாராட்டு )
சாரங்கி இசை போல மென்மையாய் செந்தமிழில் சில தினங்களும் பீரங்கி அம்பாக பிற வேளைகளிலும் எழுதும் இவர், வாரங்களை இழுத்து 'ஜல்லியடி' பண்ணுவதில்லை. இந்த நெஞ்சுக்கினியவரது பெயர் அவரது ஊரை உணர்த்தும் அவர் ஸ்ரீ ரங்க ராஜன்  

பொருள் 2:- ( திட்டு )
சார் அங்கி (ஒட்டுண்ணி) இசையன்ன: சேரும் இடத்திற்கு தக்கவாறு தாளம் போட்டு தமிழில் சில முடிச்சு( knot )களை இட்டு எழுதுவார்; பீர் அங்கு இயம்புதல் போல் (சொல் விளம்பி என்றறிக) பின்னாட்களில் எழுதினார். வாரங்களை ஜல்லியடித்து நீட்டும் காது (குற்றம்) உடைய எஞ்சினியர் பெயரை ஊர் 'சீ, ரங்க ராஜன்' என பழித்துத் தூற்றும்.

இதில் "ஜல்லியடி" என்ற வார்த்தையை கேட்டதும் "மோகனமாக"சிலிர்த்தேன்.. எங்கள் ஆசான் அடிக்கடி பயன் படுத்தும் வார்த்தை அது.. அஜ்னபிக்காக சுஜாதா அவர்களுக்கு பிடித்த ஒரு தளை தட்டும் நேரிசை வெண்பா.! இதை எழுதியவர் சேஷாசலம்.!


சிறகு கொடு வண்ணமெல்லாம் வேணுமென்பதில்லை

சருகு கொடு,வேணாம் விறகு - பருகுவதற்கு

பானமெல்லாம் வேணாமே தண்ணீர் கொடு போதும்

நான் சமாளிக்க மாட்டேனா.

வாழ்த்துக்கள் Ajnabhii Al Srilanki தொடரட்டும் உங்கள் பணி.

No comments:

Post a Comment