Thursday 20 February 2014

நான் முதல்வரானால்...!

நான் முதல்வரானால்... விஜயதரணி...!!!!

(ஒரு விபரீத கற்பனை)

முதல்வராக விஜயதரணி பத்திரிக்கையாளரை சந்திக்கிறார்... இனி பேட்டி...!

கேள்வி: நீங்கள் முதல்வராகிவிட்டீர்கள் இது பற்றி உங்கள் கருத்து?

வி.த : இப்படி ஒரு நாளை தமிழக மக்களின் கருப்பு தினமாக தான் பார்க்கிறேன்.. இப்படி ஒரு படுபயங்கரமான செயலை மக்கள் ஏன் செய்தார்கள்? இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை..!

கே: அட என்னங்க நீங்க பதவி ஏற்றதை பத்தி கேட்டா என்னன்னவோ சொல்றிங்க! இன்னிக்கு கருப்பு தினம்ன்னே எழுதிக்கவா?

வி.த : (சட்டென்று சுதாரித்து) அட அதில்லிங்க இப்ப முடி நரைச்சா வெள்ளையாகுது அதுக்கு கருப்பு அடிச்சா இளமையாகுது இல்லையா அத தான் அப்படி சொன்னேன்...

கே: பதவி ஏற்றவுடன் நீங்க செய்யப்போற முதல் வேலை என்ன?

வி.த: மேக்கப் போடுவது..!

கே: (அதிர்ச்சியாகி) மேக்கப்பா என்னங்க சொல்றிங்க?

வி.த: அட நீங்க வேற பொலிவிழந்து அசிங்கமான முகத்தோட இருக்குற நம்ம தமிழகத்த என்னை மாதிரியே பளபளப்பா ஜொலிக்க வைக்க போறேன்...

கே: அதுக்கு என்னா செய்விங்க?

வி.த: தமிழகத்துல இருக்குற அம்மா உணவகங்களை எல்லாம் மாத்திட்டு அங்க அன்னை பியூட்டி பார்லர் அமைக்கப் போறேன்...

கே: மக்களுக்கு குறைஞ்ச செலவுல சாப்பாடு போடறத விட இது முக்கியமா?

வி.த: கண்டிப்பா இன்னிக்கு ஒரு லிப்ஸ்டிக் 500ரூபா விக்குது...ஏழைங்க அத வாங்க முடியுமா? சாப்பாடு வேணும்ன்னா கூட கோயில்ல அன்னதானம் வாங்கி சாப்புடலாம் மேக்கப் அப்படியா? பெண்கள் அழகா இருக்க இப்படி ஒரு திட்டம் அவசியம்..

கே: இருந்தாலும் இது ஓவர் மேக்கப் மாதிரி இல்லை...

வி.த: என்னா என்னையவே கிண்டலா?

கே: அய்யய்யோ நீங்க இப்ப சி.எம் நாங்க எப்படி உங்களை கிண்டல் பண்ணுவோம்..

வி.த.: ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்.. சாப்பாட்டுக்கு இன்னொரு ஐடியா இருக்கு...

கே: என்னாங்க அது?

வி.த: "அன்னை ஃபாஸ்ட் ஃபுட் நிலையம்"மாநிலம் முழுக்க பீட்ஸா கடைத் திறக்கப் போறோம்..இளந்தலைவர் ராகுல் " கையால"அடுத்த மாதம் வீடியோ கான்பரசிங் மூலமா 5000 கடைகள் நாடு முழுக்க திறக்கப்போறோம் அதுல 500 கடை தமிழ்நாட்டுல எப்புடி!

கே: புல்லரிக்குதுங்க... ஏங்க மக்களுக்கு இப்ப பீட்ஸா கடை அவசியமா?

வி.த.: புரியாத ஆளா இருப்ப போல நாட்டுல சந்துக்கு சந்து ஆயிரம் டீக்கடை இருக்கும் போது நமோ டீக்கடை போட்டவங்கள கேக்காம இப்ப என்னைய வந்து கேக்குற...

கே: இல்லிங்க அதுக்கு காரணமே உங்க கட்சி ஆளு சொல்லப்போய் தானே அப்படி நடந்துச்சு ... சரி அதை விடுங்க....இந்த திட்டத்தால மக்களுக்கு என்னங்க பயன்?

வி.த.: அப்படி கேளுங்க..! நாடு முழுக்க பீட்ஸா கடை வரும் ... இந்தியா இத்தாலியாகும் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு தந்து அவர்கள் தாலியும் காக்கப்படும்..!

கே: வேற ஏதாவது (மனதிற்குள்..."நல்ல ") திட்டங்கள் இருக்கா?

வி.த: பணக்காரங்களுக்காக சரவணபவன் மாதிரி சத்யமூர்த்தி பவன் கிளைகள் தமிழகமெங்கும் திறக்கப் போறோம்..

கே: மறுபடியும் ஓட்டலா?

வி.த: இது ஓட்டல் அல்ல ஓட்டுகள்... காங்கின் சாதனையை சொல்ல தான் இந்த கிளைகள். சரி வேற கேள்வி இருக்கா பதவி ஏற்பு விழா போகணும்... அதுக்கு முன்னால  மேக்கப் போட போகணும் நிறைய வேலை இருக்கு.

கே: ஒரே ஒரு கேள்வி...ஏதோ 5 அம்ச திட்டம்ன்னு சொன்னாங்களே அது என்னாங்க

வி.த.: கரெக்ட் நானே சொல்ல நினைச்சேன்... கேட்டுக்கோங்க...
1.இனி சதாசிவம்ன்னு பேருவச்சவருக்கு சட்ட கல்லூரில இடம் கிடையாது.

 2. தமிழகத்துல உள்ள முருகன் கோயில் எல்லாம் தெலுங்கானா பக்கம் போகப்போகுது.! யாரும் முருகான்னு சொன்னா 3 மாசம் ஜெயிலு.

 3.நளினின்னு பேரு வச்சவங்க எல்லாம் வர்ற 30ஆம் தேதிக்குள்ள பேர கெசட்ல மாத்திக்கணும்.

 4. சாந்து பொட்டு எனக்கும் பிடிக்கும் இருந்தாலும் கட்சிக்காக தமிழகம் முழுக்க சாந்து தடை செய்யப்படுது. 

5.யாரும் அறிவா இருக்கவே கூடாது அப்படி இருந்தாலும் அவரை அறிவுன்னு சொல்லக்கூடாது... 

இதான் அந்த 5 அ(இ)ம்ச திட்டம் வரட்டுமா... (கை காட்டிவிட்டு கிளம்புகிறார்)

கே; நன்றிங்க மேடம் வணக்கம்.... (உள்மனதில்)

உண்மையிலேயே உங்க 5 வது திட்டம் தான் சூப்பரு அது உங்களுக்கே பொருந்தும்..

No comments:

Post a Comment