Friday 16 October 2015

நைஜீரியப் பயணக்குறிப்புகள் 8

H#நைஸ்_நைஜீரியா

PART - 8

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் பெல்லாஸ் கோர்ட் என குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா அங்கு சரியாக11மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் நிகழ்ச்சியாக வந்தே மாதரம் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல் ஒலிக்க... இந்திய தேசியக் கொடியசைத்து ஆடிய அனைவரும் நைஜீரியர்கள்!

மிக அற்புதமான நெகிழ வைத்த தருணம் அது... எப்போதும் முதல் நிகழ்ச்சியை வைத்து தான் பிற நிகழ்ச்சிகள் களை கட்டும் அன்றும் அப்படியே நடந்தது.. அதன் பின் வாழ்நாள் சாதனையாளர் விருது நைஜீரியாவில் 45 ஆண்டுகள் வசிக்கும் கண்ணன் சாருக்கு வழங்கப்பட்டது. பிறகு கவிதைத் தொகுப்பு வெளியீடு..!

சிவா சார், என் தங்கை கணவர் ரவி, நைஜீரிய தமிழ்ச் சங்கத் தலைவர் ரகு,  லதா அருணாச்சலம் ஆகிய நால்வரும் எழுதிய கவிதைகள் தொகுப்பாக வந்தது.. நானும் கிறிஸ்டோபரும் அதில் தலா ஒரு கவிதையை வாசித்தோம்.. நூல் வெளியீட்டு விழா இனிதே நிறைவடைய அடுத்த 1மணி நேரம் எங்கள் நிகழ்ச்சி... அதன் பின் தமிழ்ச் சங்கத் தலைவர் ரகு தலைமையில் பட்டிமன்றம்.

கலகலப்பாக எல்லா நிகழ்ச்சியும் முடிவடைந்தது.. மதிய உணவிற்கு பின் லாகோஸ் சூப்பர் சிங்கர் துவங்கியது.. சீனியர் ஜுனியர் இரு வயதினரும் தங்கள் வசீகரமான இனிய குரல்களில் அரங்கத்தை கட்டிப் போட்டனர்.. நாக்க முக்க, அப்படி போடு போன்ற தமிழ் சினிமா குத்தாட்ட பாடல்களுக்கு நைஜீரிய நடனக் குழுவினர் ஆடியது ரசிக்கும்படி இருந்தது. இடையிடையே கிறிஸ்டோபர் தான் நடத்திய வேடிக்கை விளையாட்டுகளால் பார்வையாளர்களை குஷியாக்கி நிகழ்வை தொய்வடைய விடாமல் வைத்திருந்தார்.

மதியம் நல்ல மழை வேறு மாலை 6 மணி வரை நிகழ்ச்சி கட்டுக்கோப்பாக கலகலப்பாக நடந்தது. நிகழ்ச்சிக்கு நன்றியுரை கொஞ்சம் நெகிழ்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காக எனக்கு இருக்குற கொஞ்சம் மூளையை பிழிந்து உருக்கமாக ஒரு நன்றியுரை எழுதினேன்..

அதை பேச வந்தவர் மகேஷ் சார்.. அன்றிரவே அவருக்கு நன்றியுரை மகேஷ் என்னும் அடை மொழிக்கு சொந்தக்காரர் ஆகும் படி பேசினார்... அப்படி என்ன பேசினார்????

வரும்....

No comments:

Post a Comment