Friday 16 October 2015

நைஜீரியப் பயணக்குறிப்புகள் 1

#நைஸ்_நைஜீரியா

ஆப்பிரிக்கா மேப்பை ஒரு குரங்காக 🐒 நினைத்துக்கொண்டால் அது தனது பக்கவாட்டு விலாவை 👇 சொறிவது போல வலது கையைத் 👋 தொங்கவிட்டு சொறியும் இடத்தில் இடத்தில் இருப்பது லாகோஸ் நைஜீரியாவின் துறைமுக தீபகற்பம். 🌊லாகோஸ், விக்டோரியா,லாகோஸ் பெனின்சுலா இம்மூன்று இடங்கள் சேர்ந்தது தான் லாகோஸ்.. லாகோஸ் தான் நிலப்பகுதி.🌄

பிரம்மாண்டமான தென் அட்லாண்டிக் கடலின் 🌊 ஓரத்தில் அமைந்திருப்பவை விக்டோரியா மற்றும் லாகோஸ் தீவுகள்.🏄 சென்னையிலிருந்து 4 மணிநேரம் பயணித்து கத்தார் சென்று அங்கிருந்து ஏழரை மணி நேரப் பயண தூரத்தில் இருக்கிறது லாகோஸ் கிட்டத்தட்ட வலமிருந்து இடமாக மொத்த ஆப்பிரிக்கா கண்டத்தையும் கடக்க வேண்டும்.. ✈ நீளமான பயணம் தான்.

✈ விமானத்தில் உள்ள டிவியில் 💻 நான் அனேகன்,உத்தமவில்லன்,பாபநாசம் ஆகிய மூன்று படங்களையும் பார்த்துவிட்டு ஒரு மணிநேரம் தூங்கி விழித்த பின்பு தான் லாகோஸ் வந்தது. 🎯 முதலில் லாகோஸ் செல்ல நான் ஆயத்தமானதே ஒரு அழகிய ப்ளாஷ்பேக் மஸ்கிடோ காயலை சுழற்றுவோம் 🔅

மகிழ்ச்சி டாட் காம் என்னும் அமைப்பிலிருந்து ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு முன் வந்த அழைப்பு அக்டோபர் 4 ஆம் தேதி கலை நிகழ்ச்சிக்கு நானும் கிறிஸ்டோபரும் மட்டுமே மற்றபடி அங்குள்ளவர்கள் கலந்து கொள்ளும் பல நிகழ்ச்சிகள் வசந்தவிழா என்னும் பெயரில் நடைபெறுவதாக ஏற்பாடு.

தேதி இடம் முடிவானதும் ஒருமுறை இமெயிலும் கான்ஃபார்ம் செய்தனர். பார்த்தவர்களிடம் எல்லாம் நான் நைஜீரியா போகிறேன் என்ற போது என்னை தூக்கு தண்டனை கைதியாகவே பார்த்தனர். பலர் ஐயோ பாவம் உங்களுக்கு இந்த நிலைமையா என்பது போல எல்லாம் விசாரித்தனர்.

இன்னும் சில ஆ.கோ.க்கள் (ஆர்வக் கோளாறு)தாங்கள் லோக்கல் நாளிதழ்களில் புத்தகங்களில் படித்ததை வைத்துக் கொண்டு மோசமான ஊரு பாஸ்.. பார்த்து பத்திரம்... வெளிய நடமாடவே முடியாது.. ரொம்ப ஜாக்கிரதை ஆளையே கொன்னுருவாய்ங்க.. மனுசக் கறி தின்னுற பசங்க என்றெல்லாம் என் வயிற்றில் புளியையும் கிறிஸ்டோபர் வயிற்றில் புளியமரத்தையும் கரைத்துக் கொண்டிருந்தனர்.

அதிலும் அடிக்கடி கிறிஸ்டோபர் எனக்கு போன் செய்து இப்படி அவர் சொல்லுகிறார்  அப்படி இவர் சொல்கிறார் என்ற போது இந்த ஊருக்கு ஏண்டா போகணும் என்ற எண்ணம் தலை தூக்கியது.. ஊர் செல்ல நாள் நெருங்கியது.. ஆப்பிரிக்கா செல்லும் முன் எல்லோ ஃபீவர் இஞ்சக்ஷன் போட வேண்டும்.

சென்னையில் கிண்டியில் கிங் இன்ஸ்டிட்யூட் என்னும் இடத்தில் வாராவாரம் வெள்ளிக்கிழமை அந்த ஊசி போடுவார்கள்..  அதிகாலையே போய் டோக்கன் வாங்க வேண்டும் கூட்டமாக இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள்.. கிளம்பினோம் அதற்கு முன் தினம் போலியோ தடுப்பும் எடுத்துக் கொள்ள சொன்னார்கள். வெள்ளி விடிந்தது அதிகாலை 6:30 க்கு அங்கு நுழைந்தோம்.

நாங்கள் தான் முதல் ஆள் என காம்பவுண்ட் நுழையும் போது நினைத்தோம்.. ஆனால் ஊசி போடும் இடத்திற்கு போன பின்பு தான் தெரிந்தது எங்களுக்கு முன் 28நபர்கள் அமர்ந்திருந்தனர் நாங்கள் 29வது டோக்கன்.. தான்சானியா, சூடான், கென்யா, எத்தியோப்பியா, கானா, ஜாம்பியா என பல தமிழர்கள் திரை கடலோடி திரவியம் தேட அங்கு காத்திருந்தனர்.. ஒரு வழியாக 10 மணிக்கு ஊசி போட

பத்து பத்து நபர்களாக அனுமதிக்கப்பட்டோம்..  மூன்றாவது பத்தில் நாங்கள்... நுழைந்தோம் ஊசி போடுபவர் டிவியில் எங்களை பார்த்திருப்பதாக சொன்னார். ஆப்பிரிக்காவில் எந்த ஊருக்கு சார் என்றார் ஊசியை குத்தியபடி... நைஜீரியா சார் என்றேன்.. பார்த்து ஜாக்கிரதை சார் என்றார்.. அது அவர் குத்திய ஊசியை விட வலித்தது. கிறிஸ்டோபரின் பார்வையில் 9999 அர்த்தங்கள் தெரிந்தது.

பிறகு போலியோ சொட்டு மருந்து எல்லாம் முடித்துவிட்டு அவர்கள் கொடுத்த எல்லோ கலர் கார்டினை எடுத்துக் கொண்டு வந்தோம்.. ஏனோ ஃபுட்பால் ரெஃப்ரீ காட்டும் மஞ்சள் அட்டை நினைவுக்கு வந்து போனது.. வீட்டுக்கு வந்த பின்பு மெயிலில் விமான டிக்கெட் வந்திருந்தது... வீட்டில் மாட்டியிருந்த சுவாமி படங்களில் எங்களை கவலைகளை எடுத்து மாட்டிவிட்டு கிளம்பினோம்.

பயணநாள்.. அதிகாலை 4:15 மணி என்னும் ரெண்டுங்கெட்டான் நேரத்தில் விமானம்...மூன்று மணி நேரம் முன்னதாக அதாவது அதியோ அதிகாலை 1:15 க்கு இருக்க வேண்டும்.. வீட்டிலிருந்து தூக்கக் கலக்கத்திலும் மனதில் துக்கக் கலக்கத்திலும் கிளம்பி விமானம் ஏறி விமானத்தில் தரப்பட்ட காண்டினெண்டல் உணவையும் மூன்று லார்ஜ் கோனியாக்கையும் அருந்திவிட்டு கண்ணயர்ந்தோம்.

கத்தார் ஏர்வேசின் துல்லிய வேகத்தில் சிறு அதிர்வும் இன்றி 4 மணி நேரம் தூங்கினோம்.. எங்கள் நிம்மதியான தூக்கத்திற்கு காரணம் பைலட்டா கோனியாக்கா என பட்டி மன்றமே வைக்கலாம்.. அடுத்த 1:30 மணிநேரத்தில் டிரான்சிட் விமானம்  கத்தாரில் இறங்கி  கேட் நம்பர் c26 தேடி அது ஏர்போர்ட் உள்ளேயே 3 கி.மீ இருந்தது.. வியர்க்க விறுவிறுக்க நடந்து அடைந்தோம்.

கேட்டில் இருந்து லாகோஸ் விமானத்திற்கு அழைத்துச் செல்லும் பஸ்ஸில் ஏறினோம்... பீதியானோம் ஆஜானுபாகுவாக அரக்கர்கள் ஜீன்ஸ் டி சர்ட் போட்டது போல மலை மலையான மனிதர்கள் அவர்களுக்கு இணையாக கருத்த பெருத்த உதடுகளில் பளிச் நிறங்களில் லிப்ஸ்டிக் மற்றும் இமயமலை சாமியார்கள் போல ஜடாமுடியோடு ஆப்ரிக்க பெண்கள் அமர்ந்திருந்தனர்.

பலர் அலட்சியமாக சுயிங்கத்தை அசை போட்டுக் கொண்டிருப்தனர். வித விதமான ஹேர்ஸ்டைல்கள் .. திடீரென என் பின்னால் ப்ளிஸ் கிவ் த வே என அண்ணே அண்ணே  சிப்பாய் அண்ணே பாடல் குரல் ஒலித்தது வழி விட சொன்னது ஒரு பெண் அவரது குரல் அவ்வளவு முரட்டுத்தனமாக இருந்தது. சிலரையெல்லாம் அண்ணாந்து தான் பார்க்க வேண்டியிருந்தது.

தமிழனாய் தலைநிமிர்ந்து நின்றோம்..ஒரு வழியாக இதிலும் ஏறி அதே கோனியாக் ஆனால் வேறுவிதமான உணவுடனும் நான் மூன்றாவது பாராவில் சொன்ன 3 படங்களையும் பார்த்து தூங்கி எழ ஒரு சின்ன குலுக்கலும் இன்றி கச்சிதமாக எங்கள் விமானம் லாகோசில் இறங்கியிருந்தது. எப்படி இது சாத்தியம் என நினைத்தோம்... ஆம் விமானம் இறங்கிய இடம் தரை அல்ல சேற்றில்...

வரும்....

No comments:

Post a Comment