Friday 16 October 2015

நைஜீரியப் பயணக்குறிப்புகள் 7

நைஸ்_நைஜீரியா

PART - 7

உப்புமா என்றதும் பறந்த என் ஆவி திரும்பியது... நாளைக்கு மட்டன் குழம்பு இட்லி என்ற சுமதி மேடம் வார்த்தைகளில்... அதனால் உப்புமா சாப்பிட அமர்ந்தேன் ஆனால் நான் நினைத்தபடி இல்லாது சட்னி மற்றும் தயிருடன் சூப்பராகவே இருந்தது உப்புமா.. அங்கிருந்து இரவு 1 மணிக்கு தான் கிளம்பினோம்.. இரவு 7 மணிக்குள் தங்குமிடம் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நாங்கள் நைஜீரிய இரவு வாழ்க்கையை பார்க்க ஆசைப்பட்டோம் அழைத்துச்சென்றார் கமல் சார்.

அன்றிரவு எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை நைஜீரிய ராத்திரி என்னும் தனிப்பதிவாக எழுத உள்ளேன். அதிகாலை 5 மணிக்கு அறைக்கு திரும்பினோம்.. வந்தவுடன் சுகமான ஒரு குளியல் தூங்கியது மட்டுமே தெரியும்.. எழுந்த போது 11 மணி அலறி அடித்து கிளம்பி 11:45 க்கு மீண்டும் சிவா சார் வீடு... காலை உணவான இட்லி மட்டன் குழம்பு.. பள்ளிப் பாளையம் ஸ்டைலில் தேங்காய் பத்தைகள் இட்டு சுமதி மேடம் செய்திருந்தார்கள்.. சில பல இட்லிகளை விழுங்கி ஏப்பம் விட்டோம். இப்போ அடுத்து லெய்க்கி மார்க்கெட்.

மதிய உணவுக்கு முகனூல் தோழி நிர்மலா மகேஷ் வீடு மாலை லலிதப்ரியா வீடு இரவு மீண்டும் தங்கையின் வீடு என எங்கள் உணவு டைரிக் குறிப்பு நிரம்பி வழிந்தது.நிர்மலா மகேஷ் வீடு விக்டோரியா ஐ லேண்டில்.. அதை தாண்டித் தான் லெய்க்கி மார்க்கெட்.. நிர்மலா வீடு கடக்கும் போதே மணி 2 எனவே போன் செய்து 3 மணிக்கு மேல் என முன்னெச்சரிக்கையாய் தகவல் தெரிவித்து விட்டோம்.

அது சரி லெய்க்கி மார்க்கெட் சிறப்பு என்ன..? நம்ம மதுரை ஞாயிற்றுக் கிழமை சந்தை போல ஒரு மார்க்கெட்.. முத்து பவழம் ஆபரணங்கள் கலைப் பொருட்கள் என இங்கு குவிந்திருக்கும் பொக்கிஷங்கள் ஏராளம்....  ஒரு நாள் சுற்ற வேண்டிய இவ்விடத்தை ஜஸ்ட் அரை மணி நேரம் பர்ச்சேஸ் செய்து முடித்தோம் ஒரு லட்ச ரூபாய்க்கு பர்ச்சேஸ் நம்ம ஊரு காசுக்கு 33 ஆயிரம் (இருவருக்கும்) முடித்து கிளம்பினோம். நேரே நிர்மலா மகேஷ் வீடு....  போனோம்.

அருமையான உபசரிப்பு மற்றும் சாப்பாடு... நிர்மலா மற்றும் மகேஷ் சார்.. வரவேற்றார்கள்... அதன் பின் பார்த்து பார்த்து வித விதமாக சமைத்திருந்தார் நிர்மலா... சிக்கன், மீன்  வெஜிடபிள் சாதம் என அருமையான சாப்பாடு.. நிறைய பேசினோம்... நிறைவாக அவர்கள் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்பினோம். மறக்க முடியாது இப்படி ஒரு சந்திப்பை.. ஆல் இஸ் வெல்...

நிர்மலாமகேஷ் வீட்டில் இருந்து கிளம்பும் போது மாலை 5 மணி., மீண்டும் புகழ் பெற்ற நைஜீரிய டிராபிக்கில்  மாட்டிக் கொண்டோம்.. தோழி லலிதப்ரியா வீட்டிற்கு போக முடியவில்லை.. ஃபோனில் தகவல் தெரிவித்து விட்டேன்... இருப்பினும் தோழிக்கு அது குறையாகவே இருந்தது.  அவளை சமாதானப் படுத்த  வேறு வழி தெரியாது குழம்பியே நின்றேன்... மீண்டும் தங்கை வீடு..

மீண்டும் உப்புமா..! ஆனால் இப்போது இட்லி தோசை என பல கூட்டாளிகள் இருந்ததால் நாசூக்காக உப்புமா தவிர்த்தேன்... ஆனாலும் விதி வலியது அல்லவா நீங்க உப்புமாவே சாப்பிடலை என்றார் ஒரு ஜேம்ஸ்பாண்ட் விருந்தினர்.. வேறுவழியின்றி உப்புமா ஒரு கரண்டி  போட்டு சாப்பிட்டேன்... நைஜீரியாவில் எல்லார் வீட்டு உப்புமாவும் வழக்கத்திற்கு மாறாக சுவையாகவே இருந்தது..

அன்றிரவு வெகு சீக்கிரமாக உறங்கப்போனோம் விடிந்தால் நிகழ்ச்சி அல்லவா காலை 8 மணிக்கு தயாராக இருக்கச் சொன்னார்கள் 7 மணிக்கே தயாராகிவிட்டோம்... இந்தியர்களின் மார்கெட் என்றழைக்கப்படும் பெல்லாஸ் கோர்ட் என்னும் இடத்தில் தான் எங்கள் நிகழ்ச்சி.. சரியாக 9 மணிக்கு கார் வந்தது நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு போனோம்... ஒரு வித்தியாசமான அனுபவம்... அது...

வரும்...

No comments:

Post a Comment